பாடம் : 21 அரஃபா பெருவெளியில் தங்குவதும், "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனத் தொடரும்.
2338. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள் ("ஹரம்" புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்). அவர்கள் "கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்" (ஹும்ஸ்) எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற எல்லா அரபியரும் "அரஃபா"பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், (குறைஷிக் குலத்தவரான) தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) "அரஃபாத்" சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான். அக்கட்டளையே "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனமாகும்.
அத்தியாயம் : 15

2339. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபுகள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள். "ஹும்ஸ்" (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! "ஹும்ஸ்" என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். அரபுகள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஹும்ஸ்கள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர! ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவதுண்டு. கடினமான சமயப்பற்றுடைய ஹும்ஸ்கள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்கு தங்கு)வார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ்களைப் பற்றியே வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" என்று கூறுகின்றான். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸ்கள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், "நாங்கள் "ஹரம்" (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்" என்று கூறுவார்கள். பின்னர் இந்த வசனம் (2:199) அருளப் பெற்றதும் அரஃபாத்திலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.

2340. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) "ஹும்ஸ்"களில் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?" என்று சொல்லிக் கொண்டேன். குறைஷியர் கடினமான சமயப் பற்றுடையவர் (ஹும்ஸ்)களாகவே கருதப்பட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 22 (மற்றொருவரின் இஹ்ராமுடன்) சம்பந்தப்படுத்தி இஹ்ராம் கட்டுவது செல்லும்.
2341. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், "ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து), ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள்.
அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி விட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி தல்பியாச் சொன்னேன். இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கிவந்தேன். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒரு மனிதர், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" உங்களது ஒரு தீர்ப்பை நிறுத்திவையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் கிரியைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். அதன் பின்னர் நான், "மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்திவிடாமல்) அவர் எதிர்பார்த்திருக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2342. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் வந்தேன். அவர்கள் என்னிடம், "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்"கட்டியுள்ளார்களோ அதற்காகவே "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்வீராக"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.
நான் இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சி யி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது என்னிடம் ஒரு மனிதர் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் கிரியைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று சொன்னார். உடனே நான் "மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்திவிடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களிடம் நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் கிரியைகளில் நீங்கள் ஏற்படுத்திய இந்த நடைமுறை என்ன?" என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்" (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளைப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.

2343. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் சரியாக வந்து சேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூமூசா! நீர் "இஹ்ராம்" கட்டியபோது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நான் "இஹ்ராம்" கட்டுகிறேன்" என்று கூறினேன் என்றேன். அதற்கு அவர்கள், "நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

2344. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(ஹஜ் பருவத்தில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி, அதை நிறைவேற்றிவிட்டுப் பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிப் பயனடையும் முறையான) "தமத்துஉ" செல்லும்" என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒரு மனிதர் (வந்து), "நீங்கள் உங்களது தீர்ப்பொன்றை நிறுத்திவையுங்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகள் விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். நான் பின்னால் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும்,ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) "அராக்" பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)" என்றார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 23 "தமத்துஉ" முறை ஹஜ் செல்லும்.
2345. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் (தாமே!)" என்றார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "ஆம்; ஆயினும் அப்போது நாம் அஞ்சியவர்களாகத்தாமே இருந்தோம்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2345. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் (தாமே!)" என்றார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "ஆம்; ஆயினும் அப்போது நாம் அஞ்சியவர்களாகத்தாமே இருந்தோம்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2346. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்கா செல்லும் வழியில்) "உஸ்ஃபான்" எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "(இந்த முடிவில்) நீங்கள் எம்மை விட்டுவிடுங்கள்!" என்று கூற, அதற்கு அலீ (ரலி) அவர்கள் "என்னால் உங்களை விட்டுவிட முடியாது" என்று சொன்னார்கள். தமது நிலையில் உஸ்மான் (ரலி) அவர்கள் (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள் ஹஜ்,உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) சேர்த்து (இஹ்ராம் கட்டி) தல்பியாச் சொன்னார்கள்.

2347. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

2348. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அது -அதாவது ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
அத்தியாயம் : 15
அது -அதாவது ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
அத்தியாயம் : 15
2349. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது ஆகிய இரு "முத்ஆ"க்களும் (நபித்தோழர்களாகிய) எங்களைத் தவிர வேறெவருக்கும் பொருந்தாது.

2350. அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, "நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்ய (தமத்துஉ) முடிவு செய்துள்ளேன்" என்றேன்.
அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவர்கள் இவ்வாறு (தமத்துஉ செய்ய) முடிவு செய்பவராக இருக்கவில்லை" என்றார்கள்.
இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அர்ரபதா" எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதை (தமத்துஉ) பற்றி வினவியபோது அபூதர் (ரலி) அவர்கள், "தமத்துஉ செய்வது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது. அது உங்களுக்கு உரியதன்று"என விடையளித்தார்கள்.

2351. ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் "தமத்துஉ" முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். இதோ இவர் (முஆவியா) அன்றைய நாளில் "உருஷில்" அதாவது மக்காவில் இறைமறுப்பாளராக இருந்தார்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி) அவர்கள்" என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)" என்று இடம்பெற்றுள்ளது.

2352. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன்;அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்ட அனுமதித்தார்கள். இந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்தும்விட்டார்கள். பின்னர் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்" என்றார்கள்.

2353. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் ஒரு மனிதர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அத்தியாயம் : 15
2354. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக்கூடும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து, (தமத்துஉ) செய்யச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவில்லை. அதைத் தடை செய்யும் எந்த இறைவசனமும் அருளப்பெறவுமில்லை. நான் (எனக்கு ஏற்பட்ட மூலநோய்க்காகச்) சூடிட்டுக்கொள்ளும்வரை எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. நான் சூடிட்டுக்கொண்டபோது, எனக்கு சலாம் சொல்வது கைவிடப் பட்டது. பின்னர் சூடிட்டுக்கொள்வதை நான் கைவிட்டேன்; (சலாம்) தொடர்ந்தது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.

2355. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது என்னிடம் ஆளனுப்பி (என்னை அழைத்தார்கள். நான் சென்றபோது பின்வருமாறு) கூறினார்கள்:
நான் உமக்குச் சில ஹதீஸ்களை அறிவிக்கப்போகிறேன். எனக்குப் பின்னர் அவற்றின் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடும். நான் உயிரோடு வாழ்ந்தால் அவற்றை யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நான் இறந்துவிட்டால் நீர் விரும்பினால் அவற்றை (மக்களிடம்) அறிவியுங்கள்.
எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. அறிக: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் (ஹஜ் காலத்தில்) சேர்த்துள்ளார்கள். பின்னர் அந்நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் அவ்(வாறு தமத்துஉ செய்யும்) விஷயத்தில் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2356. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்தார்கள். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப் பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.

2357. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப்பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.