7338. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، خَطَبَنَا عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7338. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) உரையாற்றிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன்.


அத்தியாயம் : 96
7339. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، أَنَّ هِشَامَ بْنَ عُرْوَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ يُوضَعُ لِي وَلِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا الْمِرْكَنُ فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7339. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு பாத்திரத்தைக் காட்டி), “இந்தப் பாத்திரம் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் குளிப்பதற்காக வைக்கப்பட்டுவந்தது. நாங்கள் இருவரும் ஒருசேர இதில் குளிக்கத் தொடங்குவோம்” என்று கூறினார்கள்.67


அத்தியாயம் : 96
7340. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ أَنَسٍ، قَالَ حَالَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الأَنْصَارِ وَقُرَيْشٍ فِي دَارِي الَّتِي بِالْمَدِينَةِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7340. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக் கும் குறைஷியருக்கும் இடையே மதீனா வில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.68


அத்தியாயம் : 96
7341. وَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7341. மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (நிராயுதபாணிகளான நபித்தோழர்களை வஞ்சகம் செய்து கொலை செய்த) பனூ சுலைம் குலத்தாரின் சில குடும்பங்களுக்கெதிராகப் பிரார்த்தித் தார்கள்.69


அத்தியாயம் : 96
7342. حَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَلَقِيَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ فَقَالَ لِي انْطَلِقْ إِلَى الْمَنْزِلِ فَأَسْقِيَكَ فِي قَدَحٍ شَرِبَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَتُصَلِّي فِي مَسْجِدٍ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. فَانْطَلَقْتُ مَعَهُ، فَسَقَانِي سَوِيقًا، وَأَطْعَمَنِي تَمْرًا، وَصَلَّيْتُ فِي مَسْجِدِهِ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7342. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், “வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி (ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்” என்று சொன்னார்கள்.

ஆகவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள்; பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களது பள்ளிவாசலில் தொழுதேன்.70


அத்தியாயம் : 96
7343. حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي وَهْوَ بِالْعَقِيقِ أَنْ صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ عُمْرَةٌ وَحَجَّةٌ "". وَقَالَ هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَلِيٌّ عُمْرَةٌ فِي حَجَّةٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7343. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“என் இறைவனிடமிருந்து வரக்கூடிய (வான)வர் இன்றிரவு என்னிடம் வந்து, இந்த வளமிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக; ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்து விட்டதாக (ஹஜ்ஜுல் கிரான் செய்வதாக)ச்சொல்வீராக என்று கூறினார்” என நபி (ஸல்) அவர்கள் அகீக் பள்ளத்தாக்கில் இருந்தபோது என்னிடம் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “ஹஜ்ஜில் உம்ராவைச் சேர்ப்பதாக...” என்று இடம் பெற்றுள்ளது.71


அத்தியாயம் : 96
7344. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَقَّتَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَرْنًا لأَهْلِ نَجْدٍ، وَالْجُحْفَةَ لأَهْلِ الشَّأْمِ، وَذَا الْحُلَيْفَةِ لأَهْلِ الْمَدِينَةِ. قَالَ سَمِعْتُ هَذَا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبَلَغَنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ "". وَذُكِرَ الْعِرَاقُ فَقَالَ لَمْ يَكُنْ عِرَاقٌ يَوْمَئِذٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7344. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனுமிடத்தையும், ஷாம்வாசி களுக்கு ‘—ýஹ்ஃபா’வையும், மதீனாவாசி களுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித் தார்கள்.

இதை நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன். மேலும், “நபி (ஸல்) அவர்கள், ‘யலம்லம்’ எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற் குரிய) இடமாகும்” என்று கூறியதாக எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில்) இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்நாளில் இராக்(வாசிகளிடையே முஸ்óம்கள்) இருக்கவில்லை” என்று கூறினார்கள்.72


அத்தியாயம் : 96
7345. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الْفُضَيْلُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ أُرِيَ وَهْوَ فِي مُعَرَّسِهِ بِذِي الْحُلَيْفَةِ فَقِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ.
பாடம்: 16 அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7345. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பத்னுல்வாதி யிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (இரவின் கடைசி நேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்த போது அவர்களுக்குக் கனவு காட்டப் பட்டது. அப்போது (கனவில்) “வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்” என்று நபியவர்களிடம் கூறப்பட்டது.73

அத்தியாயம் : 96
7346. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ "" اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الأَخِيرَةِ "". ثُمَّ قَالَ "" اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا "". فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ}.
பாடம்: 17 “(அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) இறைவசனம்
7346. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் கடைசி ரக்அத்தில் தமது தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா வ லக்கல் ஹம்து” (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அநீதியாளர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உமக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3: 128ஆவது) வசனத்தை அருளினான்.74

அத்தியாயம் : 96
7347. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَرَقَهُ وَفَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُمْ "" أَلاَ تُصَلُّونَ "". فَقَالَ عَلِيٌّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهُ ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَيْهِ شَيْئًا، ثُمَّ سَمِعَهُ وَهْوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ وَهْوَ يَقُولُ {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً}. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ مَا أَتَاكَ لَيْلاً فَهْوَ طَارِقٌ. وَيُقَالُ الطَّارِقُ النَّجْمُ، وَالثَّاقِبُ الْمُضِيءُ، يُقَالُ أَثْقِبْ نَارَكَ لِلْمُوقِدِ.
பாடம்: 18 “மனிதன் அதிகம் தர்க்கம் செய்ப வனாக இருக்கின்றான்” எனும் (18:54ஆவது) இறைவசனம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களிடம் மிக அழகான முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (29:46)75
7347. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் ஒரு(நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், “நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில்தானே இருக்கின் றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பி விடுவான்” என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே “மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்” என்று சொல்óக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்.76

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்:

(இங்கு ‘இரவில் வந்தார்கள்’ என்பதைக் குறிக்க ‘தர(க்)க’ எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு ‘தாரிக்’ என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் ‘தாரிக்’ என்று சொல்வதுண்டு. ‘ஸாகிப்’ என்பது ‘பிரகாசிக்கக்கூடியது’ என்று பொருள்படும். ‘உஸ்குப்லி’ (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.


அத்தியாயம் : 96
7348. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" انْطَلِقُوا إِلَى يَهُودَ "". فَخَرَجْنَا مَعَهُ حَتَّى جِئْنَا بَيْتَ الْمِدْرَاسِ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَادَاهُمْ فَقَالَ "" يَا مَعْشَرَ يَهُودَ أَسْلِمُوا تَسْلَمُوا "". فَقَالُوا بَلَّغْتَ يَا أَبَا الْقَاسِمِ. قَالَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ذَلِكَ أُرِيدُ أَسْلِمُوا تَسْلَمُوا "". فَقَالُوا قَدْ بَلَّغْتَ يَا أَبَا الْقَاسِمِ. فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ذَلِكَ أُرِيدُ "". ثُمَّ قَالَهَا الثَّالِثَةَ فَقَالَ "" اعْلَمُوا أَنَّمَا الأَرْضُ لِلَّهِ وَرَسُولِهِ وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ وَجَدَ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلاَّ فَاعْلَمُوا أَنَّمَا الأَرْضُ لِلَّهِ وَرَسُولِهِ "".
பாடம்: 18 “மனிதன் அதிகம் தர்க்கம் செய்ப வனாக இருக்கின்றான்” எனும் (18:54ஆவது) இறைவசனம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர்களிடம் மிக அழகான முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (29:46)75
7348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) ‘பைத்துல் மித்ராஸ்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, “யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; (ஈருலகிலும்) சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்கள்.

அதற்கு யூதர்கள், “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்” என்று சொன்னார்கள். அப்போதும் யூதர்கள் “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல் காசிமே!” என்று சொன்னார்கள்.

உடனே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத்தான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போலவே) சொன்னார்கள். பின்னர், “பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்பு கிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலை யைப்) பெறுகிறாரோ அவர் அந்தச் சொத்தை விற்றுவிடட்டும். இல்லையென் றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.77

அத்தியாயம் : 96
7349. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُجَاءُ بِنُوحٍ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ لَهُ هَلْ بَلَّغْتَ فَيَقُولُ نَعَمْ يَا رَبِّ. فَتُسْأَلُ أُمَّتُهُ هَلْ بَلَّغَكُمْ فَيَقُولُونَ مَا جَاءَنَا مِنْ نَذِيرٍ. فَيَقُولُ مَنْ شُهُودُكَ فَيَقُولُ مُحَمَّدٌ وَأُمَّتُهُ. فَيُجَاءُ بِكُمْ فَتَشْهَدُونَ "". ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا} قَالَ عَدْلاً {لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} وَعَنْ جَعْفَرِ بْنِ عَوْنٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம்: 19 அவ்வாறே உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினோம் (எனும் 2:143 ஆவது இறைவசனம்) “சமுதாயக் கூட்டமைப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது. அந்தக் கூட்டமைப்பு என்பது அறிஞர்களைக் குறிக்கும்.78
7349. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மறுமை நாளில் நூஹ் (அலை) அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் (இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம்; (எடுத்துரைத்துவிட்டேன்); என் இறைவா!” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “இவர் உங்களுக்கு (இறைச் செய்தியை) எடுத் துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களை எச்சரிப்பவர் எவருமே வரவில்லையே?” என்று (பொய்) சொல்வார்கள். அப்போது (நூஹ் (அலை) அவர்களிடம்) அல்லாஹ், “உங்கள் சாட்சிகள் யார்?” என்று கேட்பான். ‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும்தான் (என் சாட்சிகள்)” என்று நூஹ் (அலை) அவர்கள் கூறுவார்கள்.

அப்போது நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்; (நூஹ் (அலை) அவர்கள் இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள் என்று) நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்கு பவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியிருக்கின்றோம்” எனும் (2:143ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அதிலுள்ள ‘வசத்தன்’ எனும் சொல்லுக்கு ‘நீதி செலுத்தும் சமுதாயம்’ (அத்லன்) என்று விளக்கம் அளித்தார்கள்.79

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7350. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يُحَدِّثُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، وَأَبَا، هُرَيْرَةَ حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَخَا بَنِي عَدِيٍّ الأَنْصَارِيَّ وَاسْتَعْمَلَهُ عَلَى خَيْبَرَ، فَقَدِمَ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا ". قَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَشْتَرِي الصَّاعَ بِالصَّاعَيْنِ مِنَ الْجَمْعِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَفْعَلُوا، وَلَكِنْ مِثْلاً بِمِثْلٍ، أَوْ بِيعُوا هَذَا وَاشْتَرُوا بِثَمَنِهِ مِنْ هَذَا وَكَذَلِكَ الْمِيزَانُ ".
பாடம்: 20 அதிகாரியோ ஆட்சியாளரோ சட்ட முடிவெடுக்கும்போது அறியாமையால் தவறிழைத்து விட்டால், அவரது தீர்ப்பு ரத்துச் செய்யப்படும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நமது (மார்க்கத்தின்) முடிவுப்படி அமையாத ஒரு செயலை ஒருவர் செய்தால் அது நிராகரிக்கப்படும்.80
7350. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்” என்று சொன்னார்கள்.81

அத்தியாயம் : 96
7352. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ "". قَالَ فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ أَبَا بَكْرِ بْنَ عَمْرِو بْنِ حَزْمٍ فَقَالَ هَكَذَا حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ. وَقَالَ عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُطَّلِبِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ.
பாடம்: 21 நீதிபதி ஆய்வு செய்து சட்ட முடிவெடுக்கும்போது அது சரியாக அமைந்தாலும் தவறாகிப் போனாலும் (அவர் செய்த ஆய்வுக்காக) அவருக்குப் பிரதி பலன் கிடைக்கும்.82
7352. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்தியாயம் : 96
7353. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ اسْتَأْذَنَ أَبُو مُوسَى عَلَى عُمَرَ فَكَأَنَّهُ وَجَدَهُ مَشْغُولاً فَرَجَعَ، فَقَالَ عُمَرُ أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، ائْذَنُوا لَهُ. فَدُعِيَ لَهُ فَقَالَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ فَقَالَ إِنَّا كُنَّا نُؤْمَرُ بِهَذَا. قَالَ فَأْتِنِي عَلَى هَذَا بِبَيِّنَةٍ أَوْ لأَفْعَلَنَّ بِكَ. فَانْطَلَقَ إِلَى مَجْلِسٍ مِنَ الأَنْصَارِ فَقَالُوا لاَ يَشْهَدُ إِلاَّ أَصَاغِرُنَا. فَقَامَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ فَقَالَ قَدْ كُنَّا نُؤْمَرُ بِهَذَا. فَقَالَ عُمَرُ خَفِيَ عَلَىَّ هَذَا مِنْ أَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ.
பாடம்: 22 “நபி (ஸல்) அவர்களுடைய சட்டங்கள் (நபித்தோழர்கள்) அனைவருக்கும் தெரிந்திருந்தன” என்று கருதுவோருக்கு எதிரான ஆதாரமும், நபித்தோழர்களில் சிலர் நபியவர்களின் அவைக்கு வராம லும் இஸ்லாமிய விஷயங்களை அறியாமலும் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரமும்83
7353. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூமூசா திரும்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள், “நான் அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா-ரலி) அவர்களது குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு (வராமலிருந்ததற்கு)க் காரணம் என்ன?” என்று (அவர்களிடம்) கேட்க, அபூமூசா (ரலி) அவர்கள், “(மூன்று முறை முகமன் (சலாம்) கூறியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படிதான் நமக்குக் கட்டளை யிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டுவாருங்கள்; இல்லையேல், உங்கள்மீது நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள்.

அங்கிருந்தவர்கள், “எங்களில் (வயதில்) சிறியவர்தான் இதற்குச் சாட்சியமளிப்பார்” என்றனர். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் எழுந்துவந்து, “(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுள்ளது” என்று சொன்னார்கள்.84


அத்தியாயம் : 96
7354. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، أَنَّهُ سَمِعَهُ مِنَ الأَعْرَجِ، يَقُولُ أَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ إِنَّكُمْ تَزْعُمُونَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، يُكْثِرُ الْحَدِيثَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهُ الْمَوْعِدُ، إِنِّي كُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مِلْءِ بَطْنِي، وَكَانَ الْمُهَاجِرُونَ يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وَكَانَتِ الأَنْصَارُ يَشْغَلُهُمُ الْقِيَامُ عَلَى أَمْوَالِهِمْ، فَشَهِدْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ وَقَالَ "" مَنْ يَبْسُطْ رِدَاءَهُ حَتَّى أَقْضِيَ مَقَالَتِي ثُمَّ يَقْبِضْهُ، فَلَنْ يَنْسَى شَيْئًا سَمِعَهُ مِنِّي "". فَبَسَطْتُ بُرْدَةً كَانَتْ عَلَىَّ، فَوَالَّذِي بَعَثَهُ بِالْحَقِّ مَا نَسِيتُ شَيْئًا سَمِعْتُهُ مِنْهُ.
பாடம்: 22 “நபி (ஸல்) அவர்களுடைய சட்டங்கள் (நபித்தோழர்கள்) அனைவருக்கும் தெரிந்திருந்தன” என்று கருதுவோருக்கு எதிரான ஆதாரமும், நபித்தோழர்களில் சிலர் நபியவர்களின் அவைக்கு வராம லும் இஸ்லாமிய விஷயங்களை அறியாமலும் இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரமும்83
7354. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அபூஹுரைரா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றாரே’ என்று நீங்கள் (குறையாகக்) கூறுகிறீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா; தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை யார் தமது மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க்கொள்கிறாரோ அவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்” என்று சொன்னார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.85

அத்தியாயம் : 96
7355. حَدَّثَنَا حَمَّادُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَحْلِفُ بِاللَّهِ أَنَّ ابْنَ الصَّائِدِ الدَّجَّالُ، قُلْتُ تَحْلِفُ بِاللَّهِ. قَالَ إِنِّي سَمِعْتُ عُمَرَ يَحْلِفُ عَلَى ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُنْكِرْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 23 நபி (ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டதுதான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.86
7355. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‘இப்னுஸ் ஸய்யாத்’தான் ‘தஜ்ஜால்’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை நான் பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.87

அத்தியாயம் : 96
7356. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ الْمَرْجِ وَالرَّوْضَةِ كَانَ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ بِهِ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، وَهِيَ لِذَلِكَ الرَّجُلِ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا، فَهْىَ لَهُ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ "". وَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ قَالَ "" مَا أَنْزَلَ اللَّهُ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةَ الْفَاذَّةَ الْجَامِعَةَ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}""
பாடம்: 24 ஆதாரங்களின் உள்ளடக்கத்தால் அறியப்படும் சட்டங்கள் ‘ஆதாரங்களின் உள்ளடக்கம்’ என்றால் என்ன? அதன் விளக்கம் யாது?88 நபி (ஸல்) அவர்கள் குதிரை போன்ற பிராணிகளின் நிலையை எடுத்துரைத்தார்கள். பின்னர் கழுதைகள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.89 நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சியை உண்ணலாமா? என்பது) பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “நான் அதை உண்ணவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள். (அது மட்டுமன்றி,) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்பு இறைச்சி (பரிமாறப்பட்டு, மற்றவர்களால்) உண்ணப்பட்டது. இதிலிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதல்ல என்பதற்கு ஆதாரம் கண்டார்கள்.90
7356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது), மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்): ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்:

அதை இறைவழியில் (நற்காரியங்களுக்குப்) பயன்படுத்துவதற்காக, பசுமையான ‘ஒரு வெட்ட வெளியில்’ அல்லது ‘ஒரு தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் அதைக் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்கு ‘பசும் புல்வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் பாதச் சுவடுகளும் கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மையாக மாறும்.

அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (அதன் உரிமையாளரான) அவருக்கு இல்லாமல் இருந்தாலும் அதுவும் அவருக்குரிய நன்மையாகவே ஆகும். ஆக, அது அந்த மனிதருக்கு (இவ்விதம்) நற்பலனைத் தேடித்தருகிறது.

இன்னொருவர், தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (விற்பனையின் ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும், (அதனால் தாங்க முடிந்த சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அது (வறுமையிóருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன், பெருமைக்காவும் பகட்டுக்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணமாக அது அவனுக்குப் பாவச்சுமையாக ஆகிவிடுகின்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘எவர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வான்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7, 8) வசனங்களைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91


அத்தியாயம் : 96
7357. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ عُقْبَةَ ـ حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ النُّمَيْرِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنُ شَيْبَةَ حَدَّثَتْنِي أُمِّي عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْحَيْضِ كَيْفَ تَغْتَسِلُ مِنْهُ قَالَ "" تَأْخُذِينَ فِرْصَةً مُمَسَّكَةً فَتَوَضَّئِينَ بِهَا "". قَالَتْ كَيْفَ أَتَوَضَّأُ بِهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَوَضَّئِي "". قَالَتْ كَيْفَ أَتَوَضَّأُ بِهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَوَضَّئِينَ بِهَا "". قَالَتْ عَائِشَةُ فَعَرَفْتُ الَّذِي يُرِيدُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَذَبْتُهَا إِلَىَّ فَعَلَّمْتُهَا.
பாடம்: 24 ஆதாரங்களின் உள்ளடக்கத்தால் அறியப்படும் சட்டங்கள் ‘ஆதாரங்களின் உள்ளடக்கம்’ என்றால் என்ன? அதன் விளக்கம் யாது?88 நபி (ஸல்) அவர்கள் குதிரை போன்ற பிராணிகளின் நிலையை எடுத்துரைத்தார்கள். பின்னர் கழுதைகள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.89 நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சியை உண்ணலாமா? என்பது) பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “நான் அதை உண்ணவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள். (அது மட்டுமன்றி,) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்பு இறைச்சி (பரிமாறப்பட்டு, மற்றவர்களால்) உண்ணப்பட்டது. இதிலிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதல்ல என்பதற்கு ஆதாரம் கண்டார்கள்.90
7357. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து, “அதிóருந்து (தூய்மையாகிக்கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித் தார்கள்.

அந்தப் பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! இதனால் நான் எப்படித் தூய்மைப் படுத்திக்கொள்வேன்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தூய்மைப்படுத்திக் கொள்” என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) “அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக்கொள்வேன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.92

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 96