7318. فَخَرَجْتُ فَوَجَدْتُ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ فَجِئْتُ بِهِ، فَشَهِدَ مَعِي أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " فِيهِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ ". تَابَعَهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ عُرْوَةَ عَنِ الْمُغِيرَةِ.
பாடம்: 13
அல்லாஹ் அருளியுள்ள சட்டங் களுக்கேற்ப நீதிபதிகள் முடி வெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலீஃபாக்கள் ஆலோசனை செய்தது மற்றும் அறிஞர்களிடம் கேள்வி கேட்டது தொடர்பாகவும் வந்துள்ளவை
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் அருளியுள்ள (வேதத்தின்)படி தீர்ப்பளிக்காதவர்கள்தான் அநீதியாளர் கள். (5:45).
கல்வி ஞானம் உடைய ஒருவர் தமது ஞானத்திற்கேற்ப தீர்ப்பளித்து, அதை (மக்களுக்கு)க் கற்பித்து, சுயமான கருத்தை வலிந்து திணிக்காதபோது நபி (ஸல்) அவர்களின் பாராட்டுக்குரியவராகிறார்.
7318. உடனே நான் (சாட்சி கொண்டுவர) வெளியே சென்றேன். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களைக் கண்டு அவர்களை அழைத்துக்கொண்டு வந்தேன். அவர்கள் என்னுடன் சேர்ந்து, “இதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாமும் கேட்டதாகச் சாட்சியம் அளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.49
அத்தியாயம் : 96

7319. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ "". فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ كَفَارِسَ وَالرُّومِ. فَقَالَ "" وَمَنِ النَّاسُ إِلاَّ أُولَئِكَ "".
பாடம்: 14
“உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7319. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத் தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றி நடக்காத வரை மறுமை நாள் வராது” என்று கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர் களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்று வர்)?” என வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

7320. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا أَبُو عُمَرَ الصَّنْعَانِيُّ ـ مِنَ الْيَمَنِ ـ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَتَتْبَعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا شِبْرًا وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ تَبِعْتُمُوهُمْ "". قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ "" فَمَنْ "".
பாடம்: 14
“உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
7320. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறு யாரை?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.50

7321. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنْ نَفْسٍ تُقْتَلُ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ مِنْ دَمِهَا ـ لأَنَّهُ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ أَوَّلاً "".
பாடம்: 15
தவறான வழிக்கு இட்டுச் செல்வது, அல்லது தவறான (புதிய) நடைமுறையை உருவாக்குவது குற்றம்.51
ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக,) மறுமை நாளில் தங்கள் பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையால் இவர்கள் யார் யாரையெல்லாம் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள் (16:25).
7321. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநியாயமாகக் கொல்லப்படும் எந்த (மனித) உயிராயினும் அ(தைக் கொலை செய்த பாவத்)தில் ஆதம் (அலை) அவர்களுடைய முதல் மகனுக்கும் நிச்சயமாக ஒரு பங்கு இருந்தே தீரும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘அதன் கொலையி(ன் பாவத்தி)லிருந்து’ என்று சிலவேளை கூறுவார்கள். ஏனெனில், அவர் (ஆதமின் முதல் மகனான காபீல்)தான் மனித சமுதாயத்திலேயே முதன்முதலாகக் கொலை செய்து முன்மாதிரியை ஏற்படுத்தியவர்.52

7322. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ السَّلَمِيِّ، أَنَّ أَعْرَابِيًّا، بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَ الأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَجَاءَ الأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى ثُمَّ جَاءَهُ فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي. فَأَبَى فَخَرَجَ الأَعْرَابِيُّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا "".
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7322. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்பதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள்.
பிறகு மீண்டும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்” என்று சொன்னார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் (ஏற்க) மறுத்துவிட்டார்கள். ஆகவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) கிளம்பிச் சென்றுவிட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதீனா கொல்லனின் உலை போன்றது; தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களை அது தூய்மைப்படுத்துகிறது” என்று சொன்னார்கள்.54

7323. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أُقْرِئُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، فَلَمَّا كَانَ آخِرَ حَجَّةٍ حَجَّهَا عُمَرُ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بِمِنًى، لَوْ شَهِدْتَ أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتَاهُ رَجُلٌ قَالَ إِنَّ فُلاَنًا يَقُولُ لَوْ مَاتَ أَمِيرُ الْمُؤْمِنِينَ لَبَايَعْنَا فُلاَنًا. فَقَالَ عُمَرُ لأَقُومَنَّ الْعَشِيَّةَ فَأُحَذِّرَ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَغْصِبُوهُمْ. قُلْتُ لاَ تَفْعَلْ فَإِنَّ الْمَوْسِمَ يَجْمَعُ رَعَاعَ النَّاسِ يَغْلِبُونَ عَلَى مَجْلِسِكَ، فَأَخَافُ أَنْ لاَ يُنْزِلُوهَا عَلَى وَجْهِهَا فَيُطِيرُ بِهَا كُلُّ مُطِيرٍ، فَأَمْهِلْ حَتَّى تَقْدَمَ الْمَدِينَةَ دَارَ الْهِجْرَةِ وَدَارَ السُّنَّةِ، فَتَخْلُصُ بِأَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فَيَحْفَظُوا مَقَالَتَكَ، وَيُنَزِّلُوهَا عَلَى وَجْهِهَا. فَقَالَ وَاللَّهِ لأَقُومَنَّ بِهِ فِي أَوَّلِ مَقَامٍ أَقُومُهُ بِالْمَدِينَةِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَدِمْنَا الْمَدِينَةَ فَقَالَ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ فِيمَا أُنْزِلَ آيَةُ الرَّجْمِ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7323. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். உமர் (ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (என்னிடம்), “நீங்கள் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்-ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “இறைநம்பிக்கையாளர் களின் தலைவரே! இன்னான், ‘இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறினான்” என்றார்.
இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “இன்று மாலையே நான் (மக்கள்முன்) நின்று, தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்” என்று சொன்னார்கள். நான், “அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள்தான் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன்.
ஆகவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக்கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்துகொள்வார்கள்” என்று சொன்னேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்றபின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப்போகிறேன்” என்று சொன்னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். “நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது” என உமர் (ரலி) அவர்கள் பேசத் தொடங்கி னார்கள்.55

7324. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ فَتَمَخَّطَ فَقَالَ بَخْ بَخْ أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكَتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى حُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَىَّ، فَيَجِيءُ الْجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عُنُقِي، وَيُرَى أَنِّي مَجْنُونٌ، وَمَا بِي مِنْ جُنُونٍ، مَا بِي إِلاَّ الْجُوعُ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7324. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந் திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அடடா! அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன்.
அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேóட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.

7325. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، قَالَ سُئِلَ ابْنُ عَبَّاسٍ أَشَهِدْتَ الْعِيدَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ وَلَوْلاَ مَنْزِلَتِي مِنْهُ مَا شَهِدْتُهُ مِنَ الصِّغَرِ، فَأَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ فَصَلَّى ثُمَّ خَطَبَ، وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلاَ إِقَامَةً، ثُمَّ أَمَرَ بِالصَّدَقَةِ فَجَعَلَ النِّسَاءُ يُشِرْنَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ، فَأَمَرَ بِلاَلاً فَأَتَاهُنَّ، ثُمَّ رَجَعَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7325. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம் (கலந்துகொண்டிருக்கிறேன்). நபி (ஸல்) அவர்களுடன் (சொந்தம் காரணமாக) எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் நபியவர்களுடன் (பெருநாள் தொழுகையில்) கலந்துகொண்டிருக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் (பெருநாளன்று வீட்டில் இருந்து புறப்பட்டு) கஸீர் பின் அஸ்ஸல்த் உடைய வீட்டருகே உள்ள அடையாளமிடப்பட்ட இடத்திற்கு வந்து தொழுவித்தார்கள். பிறகு உரையாற்றினார்கள். பாங்கு சொல்லவுமில்லை; இகாமத் சொல்லவுமில்லை. பிறகு (உரையில்) தர்மம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தம் காதுகள் மற்றும் கழுத்துகளின் பக்கம் தம் கைகளைக் கொண்டுசென்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் அப்பெண்களிடம் சென்று (அவர்களின் காதணிகளையும் கழுத்தணி களையும் சேகரித்துக்கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்தார்கள்.56

7326. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِي قُبَاءً مَاشِيًا وَرَاكِبًا.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7326. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளி வாசலுக்கு நடந்தும் (வாகனத்தில்) பயணம் செய்தும் செல்வது வழக்கம்.57

7327. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ادْفِنِّي مَعَ صَوَاحِبِي وَلاَ تَدْفِنِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْبَيْتِ، فَإِنِّي أَكْرَهُ أَنْ أُزَكَّى.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7327. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களி டம், “என்னை (நான் இறந்தபின்) என் தோழிகளுடன் (நபியவர்களின் இதர துணைவியருடன்) அடக்கம் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்களுடன் (என்) வீட்டில் அடக்கம் செய்யாதீர்கள். ஏனெனில், நான் (மற்றவர்களால் என் தோழியரைவிட) உயர்வாகக் கருதப்படுவதை விரும்பவில்லை” என்று சொன்னார்கள்.57ஆ

7328. وَعَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ، أَرْسَلَ إِلَى عَائِشَةَ ائْذَنِي لِي أَنْ أُدْفَنَ مَعَ صَاحِبَىَّ فَقَالَتْ إِي وَاللَّهِ. قَالَ وَكَانَ الرَّجُلُ إِذَا أَرْسَلَ إِلَيْهَا مِنَ الصَّحَابَةِ قَالَتْ لاَ وَاللَّهِ لاَ أُوثِرُهُمْ بِأَحَدٍ أَبَدًا.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7328. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “என் தோழர்கள் (முஹம்மத் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவருடனும் நான் அடக்கம் செய்யப்பட எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்டு ஆளனுப்பி னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “சரி, அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் உமரை நபியவர்களின் அருகே அடக்க அனுமதிக்கிறேன்)” என்று சொன்னார்கள்.
ஆனால், (மற்றத் தோழர்களில்) எவராவது அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்டு ஆளனுப்பினால், “முடியாது; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுடன் வேறெவரையும் அடக்கம் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறிவிடுவார்கள்.

7329. حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ فَيَأْتِي الْعَوَالِيَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ. وَزَادَ اللَّيْثُ عَنْ يُونُسَ، وَبُعْدُ الْعَوَالِي أَرْبَعَةُ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةٌ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7329. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மதீனாவின் (புறநகர்ப் பகுதிகளிலுள்ள) மேட்டுக் கிராமங்களுக்குச் செல்வார்கள். அப்போது சூரியன் (மேற்கே) உயர்ந்தே இருக்கும்.
மற்றோர் அறிவிப்பில், “அந்த மேட்டுக் கிராமங்களின் தூரம் (மதீனாவிலிருந்து) நான்கு அல்லது மூன்று மைல்களாகும்” என்று கூறப்பட்டுள்ளது.58

7330. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ، عَنِ الْجُعَيْدِ، سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ كَانَ الصَّاعُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُدًّا وَثُلُثًا بِمُدِّكُمُ الْيَوْمَ، وَقَدْ زِيدَ فِيهِ.
سَمِعَ الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْجُعَيْدَ
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7330. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களது ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் (உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் காலத்தில்தான்) அதன் அளவு அதிகமாக்கப்பட்டது.59

7331. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ "" يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மதீனாவாசிகளுக்கு அவர் களது முகத்தலளவையில் வளத்தை அருள்வாயாக! அவர்களின் ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’(து) ஆகிய அளவைகளிலும் அவர்களுக்கு வளத்தை அருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.60

7332. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ حَيْثُ تُوضَعُ الْجَنَائِزُ عِنْدَ الْمَسْجِدِ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7332. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விபசாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் (தீர்ப்புக்காக) அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட அவ்வாறே அவ்விருவருக்கும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் சடலங்கள் (—னாஸாக்கள்) வைக்கப்படும் இடத்திற்கு அருகே கல்லெறி தண்டனை நிறைவேற்றப் பட்டது.61

7333. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ "" هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ، وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا "". تَابَعَهُ سَهْلٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي أُحُدٍ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7333. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டது. உடனே, “இந்த மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் (மதீனா நகர) பூமியைப் புனிதமானதென அறிவிக்கிறேன்” என்று சொன்னார்கள்.62
“இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக் கின்றது; நாமும் இதை நேசிக்கின்றோம்” என்ற இதே நபிமொழியை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களும் அறிவித்துள் ளார்கள்.

7334. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، أَنَّهُ كَانَ بَيْنَ جِدَارِ الْمَسْجِدِ مِمَّا يَلِي الْقِبْلَةَ وَبَيْنَ الْمِنْبَرِ مَمَرُّ الشَّاةِ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7334. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் கிப்லா திசையிலுள்ள சுவருக்கும் சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்கும் இடையே ஆடு ஒன்று புகுந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது.63

7335. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.64

7336. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سَابَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الْخَيْلِ، فَأُرْسِلَتِ الَّتِي ضُمِّرَتْ مِنْهَا وَأَمَدُهَا إِلَى الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَالَّتِي لَمْ تُضَمَّرْ أَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ كَانَ فِيمَنْ سَابَقَ. حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7336. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘ஸனிய்யத்துல் வதாஉ’ மலைக்குன்றுவரையாக இருந்தது.மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு ‘ஸனிய்யத்துல் வதா’ மலைக் குன்றிலிருந்து ‘பனூ ஸுரைக்’ குலத்தாரின் பள்ளிவாசல்வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒருவனாயிருந்தேன்.65

7337. حَدَّثَنَا قُتَيْبَةُ عَنْ لَيْثٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ح. وَحَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عِيسَى، وَابْنُ، إِدْرِيسَ وَابْنُ أَبِي غَنِيَّةَ عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ عُمَرَ، عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 16
அறிஞர்களின் கருத்தொற்று மையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறியது
மேலும், மக்கா, மதீனா ஆகிய இரு புனித நகரங்களின் அறிஞர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ள விஷயங்களும், அந்நகரங்களிலுள்ள நபி (ஸல்) அவர்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள் ஆகியோர் வாழ்ந்த இடங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மற்றும் அடக்கத்தலம் ஆகியவை குறித்த செய்திகளும்.53
7337. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.66
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.