7358. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أُمَّ حُفَيْدٍ بِنْتَ الْحَارِثِ بْنِ حَزْنٍ، أَهْدَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا، فَدَعَا بِهِنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُكِلْنَ عَلَى مَائِدَتِهِ، فَتَرَكَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم كَالْمُتَقَذِّرِ لَهُ، وَلَوْ كُنَّ حَرَامًا مَا أُكِلْنَ عَلَى مَائِدَتِهِ، وَلاَ أَمَرَ بِأَكْلِهِنَّ.
பாடம்: 24 ஆதாரங்களின் உள்ளடக்கத்தால் அறியப்படும் சட்டங்கள் ‘ஆதாரங்களின் உள்ளடக்கம்’ என்றால் என்ன? அதன் விளக்கம் யாது?88 நபி (ஸல்) அவர்கள் குதிரை போன்ற பிராணிகளின் நிலையை எடுத்துரைத்தார்கள். பின்னர் கழுதைகள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.89 நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சியை உண்ணலாமா? என்பது) பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “நான் அதை உண்ணவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள். (அது மட்டுமன்றி,) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்பு இறைச்சி (பரிமாறப்பட்டு, மற்றவர்களால்) உண்ணப்பட்டது. இதிலிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதல்ல என்பதற்கு ஆதாரம் கண்டார்கள்.90
7358. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சிறிது நெய், பாலாடைக் கட்டி, சில உடும்புகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (உணவு வேளையில்) உடும்புகளைக் கொண்டுவருமாறு நபி (ஸல்) அவர்கள் கூற, (அவை கொண்டுவரப்பட்டு) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டன.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதை அருவருப்பவர்களைப் போன்று அவற்றை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். (நெய் மற்றும் பாலாடைக் கட்டியை மட்டும் உண்டார்கள்.) உடும்புகள் தடை செய்யப்பட்டவையாய் இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் அவை பரிமாறப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி நபியவர்கள் சொல்லியிருக்கவுமாட்டார்கள்.93

அத்தியாயம் : 96
7359. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً، فَلْيَعْتَزِلْنَا أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا، وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ "". وَإِنَّهُ أُتِيَ بِبَدْرٍ ـ قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي طَبَقًا ـ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ عَنْهَا ـ أُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ ـ فَقَالَ قَرِّبُوهَا فَقَرَّبُوهَا إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ "" كُلْ، فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي "". وَقَالَ ابْنُ عُفَيْرٍ عَنِ ابْنِ وَهْبٍ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ. وَلَمْ يَذْكُرِ اللَّيْثُ وَأَبُو صَفْوَانَ عَنْ يُونُسَ قِصَّةَ الْقِدْرِ، فَلاَ أَدْرِي هُوَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ أَوْ فِي الْحَدِيثِ.
பாடம்: 24 ஆதாரங்களின் உள்ளடக்கத்தால் அறியப்படும் சட்டங்கள் ‘ஆதாரங்களின் உள்ளடக்கம்’ என்றால் என்ன? அதன் விளக்கம் யாது?88 நபி (ஸல்) அவர்கள் குதிரை போன்ற பிராணிகளின் நிலையை எடுத்துரைத்தார்கள். பின்னர் கழுதைகள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.89 நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சியை உண்ணலாமா? என்பது) பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “நான் அதை உண்ணவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள். (அது மட்டுமன்றி,) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்பு இறைச்சி (பரிமாறப்பட்டு, மற்றவர்களால்) உண்ணப்பட்டது. இதிலிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதல்ல என்பதற்கு ஆதாரம் கண்டார்கள்.90
7359. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பச்சை) வெள்ளைப் பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் ‘நம்மிட மிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நமது பள்ளிவாசலிலிருந்து விலகியிருக் கட்டும்’. அவர் தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் காணப்படுவதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் உள்ள ஒரு தட்டு கொண்டுவரப்பட்டது. அவற்றில் (துர்) வாடை அடிப்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி விசாரித்தார்கள். அவற்றிலுள்ள கீரைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தம்முடன் இருந்த தோழர்கள் சிலருக்கு அவற்றைக் கொடுக்கும்படி கூறினார்கள். அவ்வாறே கொடுத்தார்கள்.

அவர்கள் அதை உண்ண விரும்பாமó ருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “சாப்பிடுங்கள்; ஏனெனில், நீங்கள் உரையாடாதவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது” என்று சொன்னார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “காய்கறிகள் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது” என்று இடம்பெற்றுள்ளது. வேறுசில அறிவிப்புகளில் பாத்திரம் பற்றிக் கூறப்படவில்லை.94

அத்தியாயம் : 96
7360. حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي وَعَمِّي، قَالاَ حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرٍ، أَنَّ أَبَاهُ، جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمَتْهُ فِي شَىْءٍ، فَأَمَرَهَا بِأَمْرٍ فَقَالَتْ أَرَأَيْتَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ أَجِدْكَ قَالَ "" إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ "". زَادَ الْحُمَيْدِيُّ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ كَأَنَّهَا تَعْنِي الْمَوْتَ.
பாடம்: 24 ஆதாரங்களின் உள்ளடக்கத்தால் அறியப்படும் சட்டங்கள் ‘ஆதாரங்களின் உள்ளடக்கம்’ என்றால் என்ன? அதன் விளக்கம் யாது?88 நபி (ஸல்) அவர்கள் குதிரை போன்ற பிராணிகளின் நிலையை எடுத்துரைத்தார்கள். பின்னர் கழுதைகள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்கள்.89 நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சியை உண்ணலாமா? என்பது) பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “நான் அதை உண்ணவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்” என்று கூறினார்கள். (அது மட்டுமன்றி,) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் உடும்பு இறைச்சி (பரிமாறப்பட்டு, மற்றவர்களால்) உண்ணப்பட்டது. இதிலிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதல்ல என்பதற்கு ஆதாரம் கண்டார்கள்.90
7360. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரி பெண்மணி ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் தேவைகளில்) ஒன்றைக் குறித்துப் பேசினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு (பிறகு வருமாறு) உத்தரவிட்டார்கள். அவர், “நான் (திரும்பவும் வரும்போது) தங்களைக் காணாவிட்டால் என்ன செய்வது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னைக் காணாவிட்டால் அபூபக்ரிடம் செல்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘நான் திரும்பிவரும்போது தாங்கள் இறந்துவிட்டிருந்தால்’ என்பதையே ‘தங்களைக் காணாவிட்டால்’ என்று அப்பெண்மணி குறிப்பிட்டார் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.95

அத்தியாயம் : 96
7361. وَقَالَ أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ مُعَاوِيَةَ، يُحَدِّثُ رَهْطًا مِنْ قُرَيْشٍ بِالْمَدِينَةِ، وَذَكَرَ كَعْبَ الأَحْبَارِ فَقَالَ إِنْ كَانَ مِنْ أَصْدَقِ هَؤُلاَءِ الْمُحَدِّثِينَ الَّذِينَ يُحَدِّثُونَ عَنْ أَهْلِ الْكِتَابِ، وَإِنْ كُنَّا مَعَ ذَلِكَ لَنَبْلُو عَلَيْهِ الْكَذِبَ.
பாடம்: 25 “வேதக்காரர்களிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது96
7361. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின்போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை நான் கேட்டேன். முஆவியா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, “வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப் (ரலி) அவர்கள்தான். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா எனச் சோதித்துப் பார்த்து வந்தோம்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 96
7362. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ، وَلاَ تُكَذِّبُوهُمْ وَقُولُوا {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ} "". الآيَةَ.
பாடம்: 25 “வேதக்காரர்களிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது96
7362. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேயு) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். மாறாக, (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் உங்களுக்கு அருளப்பெற்றதையும் நம்புகிறோம்” என்று கூறினார்கள்.97

அத்தியாயம் : 96
7363. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ شَىْءٍ، وَكِتَابُكُمُ الَّذِي أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحْدَثُ، تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ وَقَدْ حَدَّثَكُمْ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا كِتَابَ اللَّهِ وَغَيَّرُوهُ وَكَتَبُوا بِأَيْدِيهِمُ الْكِتَابَ وَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ. لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلاً، أَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ الْعِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ، لاَ وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلاً يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ.
பாடம்: 25 “வேதக்காரர்களிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது96
7363. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக்கொண்டு, அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக ‘இது இறைவனிடமிருந்து வந்ததே’ என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான்.

உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணை யாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே!98

இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 96
7364. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سَلاَّمِ بْنِ أَبِي مُطِيعٍ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ "". قَالَ أَبُو عَبْد اللَّهِ سَمِعَ عَبْدُ الرَّحْمَنِ سَلَّامًا.
பாடம்: 26 கருத்துமாறுபாடு விரும்பத் தக்கதன்று.
7364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள்! (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள்.

இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.99

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின்றேன்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் சல்லாம் பின் முத்தீஉ (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள்.

அத்தியாயம் : 96
7365. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ "". وَقَالَ يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ هَارُونَ الأَعْوَرِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، عَنْ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 26 கருத்துமாறுபாடு விரும்பத் தக்கதன்று.
7365. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களி டையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.

இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7366. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا حُضِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ قَالَ وَفِي الْبَيْتِ رِجَالٌ فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ قَالَ "" هَلُمَّ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ "". قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَكُمُ الْقُرْآنُ، فَحَسْبُنَا كِتَابُ اللَّهِ. وَاخْتَلَفَ أَهْلُ الْبَيْتِ وَاخْتَصَمُوا، فَمِنْهُمْ مَنْ يَقُولُ قَرِّبُوا يَكْتُبْ لَكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ. وَمِنْهُمْ مَنْ يَقُولُ مَا قَالَ عُمَرُ، فَلَمَّا أَكْثَرُوا اللَّغَطَ وَالاِخْتِلاَفَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قُومُوا عَنِّي "". قَالَ عُبَيْدُ اللَّهِ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ أَنْ يَكْتُبَ لَهُمْ ذَلِكَ الْكِتَابَ مِنِ اخْتِلاَفِهِمْ وَلَغَطِهِمْ.
பாடம்: 26 கருத்துமாறுபாடு விரும்பத் தக்கதன்று.
7366. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “வாருங் கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித்தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்” என்று சொன்னார்கள்.

வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக்கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி (ஸல்) அவர்கள், “என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சóட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறுவார்கள்.101

அத்தியாயம் : 96
7367. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فِي أُنَاسٍ مَعَهُ قَالَ أَهْلَلْنَا أَصْحَابَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحَجِّ خَالِصًا لَيْسَ مَعَهُ عُمْرَةٌ ـ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ ـ فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم صُبْحَ رَابِعَةٍ مَضَتْ مِنْ ذِي الْحِجَّةِ فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَحِلَّ وَقَالَ "" أَحِلُّوا وَأَصِيبُوا مِنَ النِّسَاءِ "". قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ وَلَمْ يَعْزِمْ عَلَيْهِمْ وَلَكِنْ أَحَلَّهُنَّ لَهُمْ فَبَلَغَهُ أَنَّا نَقُولُ لَمَّا لَمْ يَكُنْ بَيْنَنَا وَبَيْنَ عَرَفَةَ إِلاَّ خَمْسٌ أَمَرَنَا أَنْ نَحِلَّ إِلَى نِسَائِنَا فَنَأْتِي عَرَفَةَ تَقْطُرُ مَذَاكِيرُنَا الْمَذْىَ قَالَ وَيَقُولُ جَابِرٌ بِيَدِهِ هَكَذَا وَحَرَّكَهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" قَدْ عَلِمْتُمْ أَنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وَأَصْدَقُكُمْ وَأَبَرُّكُمْ وَلَوْلاَ هَدْيِي لَحَلَلْتُ كَمَا تَحِلُّونَ فَحِلُّوا فَلَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ "". فَحَلَلْنَا وَسَمِعْنَا وَأَطَعْنَا.
பாடம்: 27 (ஒன்றைச் செய்ய வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பது, (மார்க்கத்தில் அது) ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்; (வேறு சான்றுகள் மூலம்) அது அனுமதிக்கப்பட்டது என அறியப்பட்டால் தவிர. அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களது கட்டளையும் (அது கட்டாயமல்ல என்பதற்கு சான்று இருந்தால் தவிர, அதை மீறுவது ஹராம் ஆகும்). இதற்கு எடுத்துக்காட்டு: (‘விடைபெறும்’ ஹஜ்ஜில் நபித்தோழர்கள்) இஹ்ராமிóருந்து விடுபட்டபோது, “நீங்கள் உங்களுடைய துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது கட்டாய உத்தரவல்ல என்றும், மாறாக (இஹ்ராமின்போது இருந்த) தடையை (அதன்பின்) நீக்கினார்கள் (அவ்வளவுதான்) என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (மற்றோர் எடுத்துக்காட்டு:) ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமென (பெண்களாகிய) எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அது கட்டாயத் தடை அல்ல என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.102
7367. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே கூறியதாவது:

(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்துசேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை.

மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். “நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவு கொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?” என்று நாங்கள் பேசிக்கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.

-’நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர் (ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள்.-

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனது குர்பானி பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். ஆகவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானி பிராணியை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்” என்று சொன்னார்கள்.

ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.103

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7368. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلُّوا قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ ـ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ "". كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً.
பாடம்: 27 (ஒன்றைச் செய்ய வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பது, (மார்க்கத்தில் அது) ஹராம் என்பதற்கு ஆதாரமாகும்; (வேறு சான்றுகள் மூலம்) அது அனுமதிக்கப்பட்டது என அறியப்பட்டால் தவிர. அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களது கட்டளையும் (அது கட்டாயமல்ல என்பதற்கு சான்று இருந்தால் தவிர, அதை மீறுவது ஹராம் ஆகும்). இதற்கு எடுத்துக்காட்டு: (‘விடைபெறும்’ ஹஜ்ஜில் நபித்தோழர்கள்) இஹ்ராமிóருந்து விடுபட்டபோது, “நீங்கள் உங்களுடைய துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது கட்டாய உத்தரவல்ல என்றும், மாறாக (இஹ்ராமின்போது இருந்த) தடையை (அதன்பின்) நீக்கினார்கள் (அவ்வளவுதான்) என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (மற்றோர் எடுத்துக்காட்டு:) ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமென (பெண்களாகிய) எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அது கட்டாயத் தடை அல்ல என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.102
7368. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மஃக்ரிப் தொழுகைக்கு முன்பாக (இரு ரக்அத்கள்) தொழுங்கள்” என்று சொன்னார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள் வார்கள் என்று அஞ்சி, “இது விரும்பு வோருக்குத்தான்” என்று சொன் னார்கள்.104

அத்தியாயம் : 96
7369. حَدَّثَنَا الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، وَابْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ قَالَتْ وَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأُسَامَةَ بْنَ زَيْدٍ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ يَسْأَلُهُمَا، وَهْوَ يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَأَشَارَ بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَأَمَّا عَلِيٌّ فَقَالَ لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ، وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ. فَقَالَ "" هَلْ رَأَيْتِ مِنْ شَىْءٍ يَرِيبُكِ "". قَالَتْ مَا رَأَيْتُ أَمْرًا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ. فَقَامَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلاَّ خَيْرًا "". فَذَكَرَ بَرَاءَةَ عَائِشَةَ. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ.
பாடம்: 28 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தாலோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159) (ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தாலோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159). ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டபின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக்கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105 உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்)கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்டபோது, தோழர்கள் “ஊரிலேயே தங்கிவிடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதிகொண்டுவிட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்பட தயாராகி) தமது கவச ஆடையை அணிந்துகொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும்வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டம் குறித்து அலீ (ரலி) அவர்களிடமும் உசாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அதைப் பற்றி குர்ஆன் வசனம் அருளப்படும்வரை அவர்களிடம் கருத்துக் கேட்டார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அவதூறு கற்பித்தவர்களுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கினார்கள். ஆலோசனை வழங்கியவர்களின் வாக்குவாதங்களை நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டதை வைத்தே தீர்ப்பளித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சித் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் எளிதான முடிவு எடுப்பதற்காக நம்பிக்கைக்குரிய அறிஞர்களிடம் ஆலோசனை கலந்துவந்தார்கள். (ஒரு விஷயம் தொடர்பாக) இறைவேதத்திலோ நபி வழியிலோ தெளிவு கிடைத்தபிறகு, அதைத் தாண்டி வேறு எந்த முடிவுக்கும் செல்லமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘ஸகாத்’ வழங்க மறுத்தவர்களுடன் போரிட வேண்டும் என்று கருதினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்கின்ற வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது; அவர்கள், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (மனதார ஏற்றுச்) சொல்லிவிட்டால், தகுந்த காரணம் இருந்தால் தவிர, என்னிடமிருந்து தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள்; அவர்களது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி அவர்களுடன் போரிடுவீர்கள்?” என்று கேட்டார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாகக் கருதிய (தொழுகை மற்றும் ஸகாத்)தை எவர் தனித்தனியாக (பிரித்து வெவ்வேறானவை என)க் கருதுகின்றார்களோ அவர்களுடன் நான் போரிட்டே தீருவேன்” என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களது கருத்துடன் ஒத்துப்போய்விட்டார்கள். இந்த விஷயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவருடைய ஆலோசனையையும் கோரவில்லை. ஏனெனில், தொழுகையையும் ஸகாத்தையும் தனித்தனியாகப் பிரித்து மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மாற்ற விரும்புவோர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் “யார் தமது மார்க்கத்தை மாற்றுகிறாரோ அவருடன் போரிடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களுடைய ஆலோசகர் களாக மார்க்க அறிஞர்களே இருந்தனர். அவர்கள் முதியவர்களாயினும் சரி; இளைஞர்களாயினும் சரி. மேலும், உமர் (ரலி) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் வேதத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
7369. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை யும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை யும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்றுபோயிருந்தது. தம் குடும்பத் தாரை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப்பெண்ணிடம் (பரீராவிடம்) கேளுங்கள். அவர் உங்களிடம் உண்மை சொல்வார்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (பரீராவிடம்) “நீ சந்தேகப்படும்படி எதையேனும் கண்டாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு பரீரா, “குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கிவிடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, “முஸ்லிம் களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று சொன்னார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.106

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 96
7370. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ الْغَسَّانِيُّ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ "" مَا تُشِيرُونَ عَلَىَّ فِي قَوْمٍ يَسُبُّونَ أَهْلِي مَا عَلِمْتُ عَلَيْهِمْ مِنْ سُوءٍ قَطُّ "". وَعَنْ عُرْوَةَ قَالَ لَمَّا أُخْبِرَتْ عَائِشَةُ بِالأَمْرِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتَأْذَنُ لِي أَنْ أَنْطَلِقَ إِلَى أَهْلِي. فَأَذِنَ لَهَا وَأَرْسَلَ مَعَهَا الْغُلاَمَ. وَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ سُبْحَانَكَ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا، سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
பாடம்: 28 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தாலோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159) (ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தாலோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159). ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்டபின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக்கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105 உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்)கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா?” என்று ஆலோசனை கேட்க அவர்கள், “(ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்டபோது, தோழர்கள் “ஊரிலேயே தங்கிவிடுங்கள்” என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதிகொண்டுவிட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், “(போருக்குப் புறப்பட தயாராகி) தமது கவச ஆடையை அணிந்துகொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும்வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள்மீது அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அபாண்டம் குறித்து அலீ (ரலி) அவர்களிடமும் உசாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை கலந்தார்கள். அதைப் பற்றி குர்ஆன் வசனம் அருளப்படும்வரை அவர்களிடம் கருத்துக் கேட்டார்கள். குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அவதூறு கற்பித்தவர்களுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கினார்கள். ஆலோசனை வழங்கியவர்களின் வாக்குவாதங்களை நபியவர்கள் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் தமக்கு கட்டளையிட்டதை வைத்தே தீர்ப்பளித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வந்த ஆட்சித் தலைவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் எளிதான முடிவு எடுப்பதற்காக நம்பிக்கைக்குரிய அறிஞர்களிடம் ஆலோசனை கலந்துவந்தார்கள். (ஒரு விஷயம் தொடர்பாக) இறைவேதத்திலோ நபி வழியிலோ தெளிவு கிடைத்தபிறகு, அதைத் தாண்டி வேறு எந்த முடிவுக்கும் செல்லமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியே இவ்வாறு செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘ஸகாத்’ வழங்க மறுத்தவர்களுடன் போரிட வேண்டும் என்று கருதினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்கின்ற வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது; அவர்கள், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று (மனதார ஏற்றுச்) சொல்லிவிட்டால், தகுந்த காரணம் இருந்தால் தவிர, என்னிடமிருந்து தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் அவர்கள் பாதுகாத்துக்கொள்வார்கள்; அவர்களது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி அவர்களுடன் போரிடுவீர்கள்?” என்று கேட்டார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றாகக் கருதிய (தொழுகை மற்றும் ஸகாத்)தை எவர் தனித்தனியாக (பிரித்து வெவ்வேறானவை என)க் கருதுகின்றார்களோ அவர்களுடன் நான் போரிட்டே தீருவேன்” என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களது கருத்துடன் ஒத்துப்போய்விட்டார்கள். இந்த விஷயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவருடைய ஆலோசனையையும் கோரவில்லை. ஏனெனில், தொழுகையையும் ஸகாத்தையும் தனித்தனியாகப் பிரித்து மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் மாற்ற விரும்புவோர் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் “யார் தமது மார்க்கத்தை மாற்றுகிறாரோ அவருடன் போரிடுங்கள்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களுடைய ஆலோசகர் களாக மார்க்க அறிஞர்களே இருந்தனர். அவர்கள் முதியவர்களாயினும் சரி; இளைஞர்களாயினும் சரி. மேலும், உமர் (ரலி) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் வேதத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
7370. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்துவிட்டு, “என் வீட்டாரை இகழ்ந்து பேசுகின்ற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்ததில்லை” என்று சொன்னார்கள்.

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பிவைத்தார்கள்.

அன்சாரிகளில் ஒருவர், “இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 96

7371. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ.
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.2

அத்தியாயம் : 97
7372. وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ، أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ لَمَّا بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعَاذًا نَحْوَ الْيَمَنِ قَالَ لَهُ "" إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلُّوا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ "".
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஓரிறைக்) கொள் கையை ஏற்கும்படி அழைப்புக்கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐவேளைத் தொழுகைகளை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களி டம் தெரிவியுங்கள்.

அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால், அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகின்ற ஸகாத்தை அவர்களுடைய செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிட மிருந்து (ஸகாத்தை) வசூலித்துக்கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 97
7373. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَصِينٍ، وَالأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، سَمِعَا الأَسْوَدَ بْنَ هِلاَلٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ لاَ يُعَذِّبَهُمْ "".
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7373. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்கள்மீது அல்லாஹ்வுக் குள்ள உரிமை என்ன என்று உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அவனையே வழிபடுவதும் அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பதுதான்” என்று பதிலளித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7374. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "". زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي، قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7374. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசிய விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது” என்று சொன்னார்கள்.5

இதே ஹதீஸ் கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.6

அத்தியாயம் : 97
7375. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي هِلاَلٍ، أَنَّ أَبَا الرِّجَالِ، مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أُمِّهِ، عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ فِي حَجْرِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لأَصْحَابِهِ فِي صَلاَتِهِ فَيَخْتِمُ بِ ـ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ "". فَسَأَلُوهُ فَقَالَ لأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ "".
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7375. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தமது தொழுகை யில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும் போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர்.

அவர், “ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஓரிறைப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்” என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 97
7376. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي، ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ "".
பாடம்: 2 “(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள்மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7377. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي الْمَوْتِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْجِعْ فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَعَادَتِ الرَّسُولَ أَنَّهَا أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ، فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம்: 2 “(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7377. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால், அவர்களுடைய புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சஅத் பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன. அப்போது சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர்களே!)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங் களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்” என்று சொன்னார்கள்.8

அத்தியாயம் : 97