4951. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا الْبَجَلِيَّ، قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ مَا أُرَى صَاحِبَكَ إِلاَّ أَبْطَأَكَ. فَنَزَلَتْ {مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
பாடம்: 2 (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறை வசனம் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள சொல்லை) ‘மா வத்தஅக்க’ என அழுத்தக் குறியுடனும், ‘மா வதஅக்க’ என அழுத்தக் குறியின்றியும் ஓதப்படுகிறது. பொருள் ஒன்றே! ‘‘உம்மைக் கைவிடவில்லை”. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: (இந்த வசனத்தின் பொருளாவது:) உம்மை உம்முடைய இறைவன் கைவிடவுமில்லை; உம்மீது கோபங்கொள்ளவுமில்லை.
4951. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.4

அப்போதுதான், ‘‘(நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:3ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4952. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيٌّ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي الْعِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ. {تَقْوِيمٍ} الْخَلْقِ.
பாடம்: 94. ‘அலம் நஷ்ரஹ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (94:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘விஸ்ரக்க’ (உமது சுமை) எனும் சொல், அறியாமைக் காலத்து (பாவ)ச் சுமைகளைக் குறிக்கும். (94:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்கள’ எனும் சொல்லுக்கு ‘அழுத்திக் கொண்டிருந்தது’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (94:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஅல் உஸ்ரி யுஸ்ரா’ எனும் சொற்றொடருக்கு ‘அந்தச் சிரமத்துடன் இன்னோர் இலகுவும் இருக்கிறது’ என்று பொருள். இந்த வசனம், ‘‘எங்கள் விஷயத்தில் இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” எனும் (9:52ஆவது) இறைவசனத்தின் கருத்தில் அமைந்துள்ளது.2 ஒரு துன்பம், இரு இன்பங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (94:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபன்ஸப்’ எனும் சொல்லுக்கு ‘உம் தேவைகளுக்காக உம்முடைய இறைவனிடத்தில் (கோரி) முயல்வீராக’ என்று பொருள். ‘(நபியே!) நாம் உமது இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?’ எனும் (94:1ஆவது) வசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இஸ்லாத்துக்காக அவர்களின் இதயத்தை இறைவன் விரிவாக்கினான்” என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. பாடம்: 95. ‘அத்தீன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அந்த (95:1ஆவது) வசனம், மக்கள் உட்கொள்ளும் அத்திப்பழத்தையும் ஆலிவ் மரத்தையுமே குறிக்கிறது. (95:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபமா யுகஃத்திபுக்க’ (உம்மை யாரால் பொய்யாக்க முடியும்) எனும் சொற்றொடருக்கு ‘மக்கள் (மறுமை நாளில்) தங்கள் (நல்ல, கெட்ட) செயல்களுக்கேற்ப பிரதிபலன் வழங்கப்படுவார்கள் எனும் உங்களது கூற்றை எவரால் பொய்யாக்க முடியும்?’ என்று பொருள். இது ‘நற்பலன், அல்லது தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மைப் பொய்யர் என்று கூற எவருக்குத் துணிவுண்டு?’ என்று கூறுவதைப் போன்றுள்ளது. பாடம்: 1
4952. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷா தொழுகை யின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95ஆவது அத்தியாயமான) ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.2

(95:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தக்வீம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்புகளை செம்மைப்படுத்தல்’ என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4953. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنَا أَبُو صَالِحٍ، سَلْمَوَيْهِ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلاَّ جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلاَءُ فَكَانَ يَلْحَقُ بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ ـ قَالَ وَالتَّحَنُّثُ التَّعَبُّدُ ـ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى أَهْلِهِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ بِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الْحَقُّ وَهْوَ فِي غَارِ حِرَاءٍ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَنَا بِقَارِئٍ ". قَالَ " فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ اقْرَأْ. قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيِةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ، ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ اقْرَأْ. قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجُهْدُ ثُمَّ أَرْسَلَنِي. فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ} ". الآيَاتِ إِلَى قَوْلِهِ {عَلَّمَ الإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ} فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَرْجُفُ بَوَادِرُهُ حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ قَالَ لِخَدِيجَةَ " أَىْ خَدِيجَةُ مَا لِي، لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَأَخْبَرَهَا الْخَبَرَ. قَالَتْ خَدِيجَةُ كَلاَّ أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، فَوَاللَّهِ إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الْحَدِيثَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ. فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلٍ وَهْوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخِي أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الْكِتَابَ الْعَرَبِيَّ وَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالْعَرَبِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ فَقَالَتْ خَدِيجَةُ يَا ابْنَ عَمِّ اسْمَعْ مِنِ ابْنِ أَخِيكَ. قَالَ وَرَقَةُ يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى فَأَخْبَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم خَبَرَ مَا رَأَى. فَقَالَ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، لَيْتَنِي فِيهَا جَذَعًا، لَيْتَنِي أَكُونُ حَيًّا. ذَكَرَ حَرْفًا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَوَمُخْرِجِيَّ هُمْ ". قَالَ وَرَقَةُ نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ بِمَا جِئْتَ بِهِ إِلاَّ أُوذِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ حَيًّا أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الْوَحْىُ، فَتْرَةً حَتَّى حَزِنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 96. ‘அல்அலக்’ அத்தியாயம்1 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்திற்கு முன்பாக), ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமை” எழுதுங்கள். பிறகு, ஒவ்வோர் இரு அத்தியாயங்களுக்கிடையேயும் (பிரித்துக் காட்டும் அடையாளமாக) ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள்.2 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நாதியஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனுடைய உற்றார் உறவினர்’ என்று பொருள். (96:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸபானியா’ (நரகத்தின் காவலர்களை) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. அபூஉபைதா மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஆ’ எனும் சொல்லுக்கு ‘மீட்சி’ என்பது பொருள். (96:15ஆவது வசனத்திலுள்ள) ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல்லுக்கு ‘நிச்சயமாக நாம் பிடித்து இழுப்போம்’ என்று பொருள். ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல் ‘சஃபஉத்து பி யதிஹி’ எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ‘நான் அவனை எனது கையால் பிடித்தேன்’ என்பது பொருள். பாடம்: 1
4953. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. ஆகவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்குமுன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள்.

அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டுசெல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது.

ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘‘ஓதுவீராக!” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று சொன்னார். அப்போதும், ‘‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!” என்று கூறினேன்.

உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவுக்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு, அந்த வசனங்களுடன், தம் கழுத்துச் சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு), ‘‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், ‘‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை (யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவு களைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படு வோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்குச் சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வராக்கா பின் நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். - ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவச் சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!” என்றார்கள்.

அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட ‘வரக்கா’, ‘‘(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, ‘‘(மகனே! உம்மை உம் சமூகத்தார் உமது நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!” என்று சொல்லி வேறுசில வார்த்தைகளையும் சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, ‘வரக்கா’, ‘‘ஆம். நீங்கள் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று சொன்னார்.

அதன் பின்னர் ‘வரக்கா’ நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்றுபோயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4954. قَالَ مُحَمَّدُ بْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ قَالَ فِي حَدِيثِهِ " بَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ بَصَرِي، فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ فَفَرِقْتُ مِنْهُ فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي زَمِّلُونِي ". فَدَثَّرُوهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ * وَرَبَّكَ فَكَبِّرْ * وَثِيَابَكَ فَطَهِّرْ * وَالرِّجْزَ فَاهْجُرْ}. قَالَ أَبُو سَلَمَةَ وَهْىَ الأَوْثَانُ الَّتِي كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَعْبُدُونَ. قَالَ ثُمَّ تَتَابَعَ الْوَحْىُ.
பாடம்: 96. ‘அல்அலக்’ அத்தியாயம்1 ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்திற்கு முன்பாக), ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமை” எழுதுங்கள். பிறகு, ஒவ்வோர் இரு அத்தியாயங்களுக்கிடையேயும் (பிரித்துக் காட்டும் அடையாளமாக) ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள்.2 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நாதியஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனுடைய உற்றார் உறவினர்’ என்று பொருள். (96:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸபானியா’ (நரகத்தின் காவலர்களை) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. அபூஉபைதா மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஆ’ எனும் சொல்லுக்கு ‘மீட்சி’ என்பது பொருள். (96:15ஆவது வசனத்திலுள்ள) ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல்லுக்கு ‘நிச்சயமாக நாம் பிடித்து இழுப்போம்’ என்று பொருள். ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல் ‘சஃபஉத்து பி யதிஹி’ எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ‘நான் அவனை எனது கையால் பிடித்தேன்’ என்பது பொருள். பாடம்: 1
4954. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேத அறிவிப்பு (வஹீ) நின்று போயிருந்த இடைக் காலம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு எனது பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ், ‘‘போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்தி ருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகி யிருப்பீராக!” எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட 74:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஸ்’ (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.-

இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடரலாயிற்று.4

அத்தியாயம் : 65
4955. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّالِحَةُ فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ}
பாடம்: 2 ‘‘அவனே மனிதனைக் கருக்கட்டி யிலிருந்து படைத்தான்” எனும் (96:2ஆவது) இறைவசனம்
4955. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.5

அத்தியாயம் : 65
4956. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ مُحَمَّدُ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها. أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرُّؤْيَا الصَّادِقَةُ جَاءَهُ الْمَلَكُ فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ}
பாடம்: 3 ‘‘(நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடை யாளி” எனும் (96:3ஆவது) இறை வசனம்
4956. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த (வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனைக் கருக்கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” எனும் (96:1-5) இறைவசனங்களை ஓதினார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4957. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ فَرَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى خَدِيجَةَ فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَذَكَرَ الْحَدِيثَ
பாடம்: 4 அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்)
4957. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹிரா குகையிலிருந்து), கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்டபடி முழுவதுமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம் : 65
4958. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ أَبُو جَهْلٍ لَئِنْ رَأَيْتُ مُحَمَّدًا يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ لأَطَأَنَّ عَلَى عُنُقِهِ. فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لَوْ فَعَلَهُ لأَخَذَتْهُ الْمَلاَئِكَةُ ". تَابَعَهُ عَمْرُو بْنُ خَالِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ الْكَرِيمِ.
பாடம்: 5 ‘‘அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், நிச்சய மாக, அவனது நெற்றி முடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறி ழைத்த- பொய்யுரைத்த அந்த நெற்றியை!” எனும் (96:15,16 ஆகிய) இறைவசனங்கள்
4958. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘கஅபா’ அருகில் முஹம்மத் தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரது கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூஜஹ்ல் சொன்னான். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, ‘‘அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4959. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ. " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ ". فَبَكَى.
பாடம்: 97. ‘அல்கத்ர்’ அத்தியாயம்1 (97:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்லஉ’ எனும் சொல்லுக்கு ‘உதயமாதல்’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள இதே சொல்லான) ‘மத்லிஉ’ என்பதற்கு ‘உதயமாகுமிடம்’ என்று பொருள். (97:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ஸல்னாஹு’ என்பதிலுள்ள ‘ஹு’ எனும் பிரதிப்பெயர்ச் சொல், குர்ஆனையே சுட்டுகிறது. (குர்ஆனை) அருளியவன் அல்லாஹ் ஒருவனாயிருக்க (நான் இதை இறக்கி வைத்தேன் என்பதற்குப் பதிலாக) நாம் இ(ந்)த (குர்ஆ)னை இறக்கிவைத்தோம்’ என்று பன்மையாகக் குறிப்பிட்டதற்குக் காரணம், (பொதுவாக) அரபியர் ஒருமை வினையை வலியுறுத்த பன்மையைப் பயன்படுத்துவர். இதன் மூலம் அந்தச் சொல் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக ஆகும். பாடம்: 98. ‘அல்பய்யினா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (98:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முன்ஃபக்கீன’ எனும் சொல்லுக்கு ‘விலகிக்கொள்வோர்’ என்பது பொருள். (98:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கய்யிமா’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (98:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தீனுல் கய்யிமா’ (நிலையான மார்க்கம்) என்பதில், ‘தீன்’ எனும் (ஆண்பால்) சொல்லை ‘அல்கய்யிமா’ எனும் பெண்பால் சொல்லுடன் இறைவன் இணைத்துள்ளான். (‘தீன்’ எனும் ஆண்பால் சொல்லை ‘அல்மில்லத்’ (மார்க்கம்) எனும் பெண்பால் சொல்லாலும் அழைப்பதே காரணம்.) பாடம்: 1
4959. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்” என்று சொன்னார்கள்.

உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.2

அத்தியாயம் : 65
4960. حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ". قَالَ أُبَىٌّ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " اللَّهُ سَمَّاكَ لِي ". فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي. قَالَ قَتَادَةُ فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ}
பாடம்: 2
4960. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது” என்றார்கள்.

அத்தியாயம் : 65
4961. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي دَاوُدَ أَبُو جَعْفَرٍ الْمُنَادِي، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىِّ بْنِ كَعْبٍ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ الْقُرْآنَ ". قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ " نَعَمْ ". قَالَ وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ الْعَالَمِينَ قَالَ " نَعَمْ ". فَذَرَفَتْ عَيْنَاهُ.
பாடம் : 3
4961. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். உபை (ரலி) அவர்கள், ‘‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?” என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உபை (ரலி) அவர்கள், ‘‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?” என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். இதைக் கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

அத்தியாயம் : 65
4962. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْخَيْلُ لِثَلاَثَةٍ، لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي الْمَرْجِ وَالرَّوْضَةِ، كَانَ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ بِهِ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ فَهْىَ لِذَلِكَ الرَّجُلِ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا فَهْىَ لَهُ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً فَهْىَ عَلَى ذَلِكَ وِزْرٌ. فَسُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ. قَالَ " مَا أَنْزَلَ اللَّهُ عَلَىَّ فِيهَا إِلاَّ هَذِهِ الآيَةَ الْفَاذَّةَ الْجَامِعَةَ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}
பாடம்: 99. ‘அஸ்ஸில்ஸால்’ அத்தியாயம்1 பாடம்: 1 ‘‘ஆகவே, யார் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (மறுமையில்) அதனையும் கண்டு கொள்வார்” எனும் (99:7ஆவது) இறைவசனம் (99:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஹா லஹா’ (வஹீ மூலம் அதற்கு அறிவித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், ‘அவ்ஹா இலைஹா’ எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச்சொற்களான) ‘வஹா லஹா’, ‘வஹா இலைஹா’ ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.
4962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்). ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

குதிரையை இறைவழியில் பயன்படுத்து வதற்காகப் பசுமையான ஒரு ‘வெட்ட வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு ‘அந்தப் பசும் புல்வெளியில்’ அல்லது ‘அந்தத் தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அது தன் கயிற்றைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதனுடைய பிடரியின் (அதாவது அதை விற்ற தொகையின் ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு, (அவரது) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவர் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். அதன் காரணத்தால், அது அவருக்குப் பாவச்சுமையாக மாறிவிடுகின்றது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர” என்று சொன்னார்கள்.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 65
4963. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْحُمُرِ فَقَالَ " لَمْ يُنْزَلْ عَلَىَّ فِيهَا شَىْءٌ إِلاَّ هَذِهِ الآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ}".
பாடம்: 2 யார் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அவர் அதையும் கண்டுகொள்வார் (எனும் 99:8ஆவது இறைவசனம்)
4963. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை” என்று கூறிவிட்டு, ‘யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் (99:7,8) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 65
4964. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى السَّمَاءِ قَالَ " أَتَيْتُ عَلَى نَهَرٍ حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا فَقُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ ".
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4964. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘‘ஜிப்ரீலே, இது என்ன?” என்று கேட்டேன்.

‘‘இது அல்கவ்ஸர்” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4965. حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ الْكَاهِلِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَ سَأَلْتُهَا عَنْ قَوْلِهِ تَعَالَى {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ} قَالَتْ نَهَرٌ أُعْطِيَهُ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم شَاطِئَاهُ عَلَيْهِ دُرٌّ مُجَوَّفٌ آنِيَتُهُ كَعَدَدِ النُّجُومِ. رَوَاهُ زَكَرِيَّاءُ وَأَبُو الأَحْوَصِ وَمُطَرِّفٌ عَنْ أَبِي إِسْحَاقَ.
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4965. அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘(நபியே!) நாம் உங்களுக்கு ‘அல்கவ்ஸரை’ அருளினோம்” எனும் (108:1ஆவது) இறைவசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4966. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ فِي الْكَوْثَرِ هُوَ الْخَيْرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ. قَالَ أَبُو بِشْرٍ قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ فَإِنَّ النَّاسَ يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الْجَنَّةِ. فَقَالَ سَعِيدٌ النَّهَرُ الَّذِي فِي الْجَنَّةِ مِنَ الْخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ.
பாடம்: 100. ‘அல்ஆதியாத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (100:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கநூத்’ எனும் சொல்லுக்கு ‘நன்றி கெட்டவன்’ என்பது பொருள். (100:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸர்ன பிஹி நக்ஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீது சத்தியமாக’ என்று பொருள் எனக் கூறப்படுகிறது. (100:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஹுப்பில் கைரி ல ஷதீத்’ என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பதன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு ‘ஷதீத்’ எனச் சொல்லப்படுவதுண்டு. (100:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹுஸ்ஸில’ எனும் சொல்லுக்கு ‘பகுத்து ஆயப்படும்’ என்று பொருள். பாடம்: 101. ‘அல்காரிஆ’ அத்தியாயம்1ஆ (101:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்ஃபராஷில் மப்ஸƒஸ்’ எனும் தொடருக்கு ‘‘ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்துபோகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்” என்று பொருள். (101:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்இஹ்ன்’ எனும் சொல்லுக்கு ‘பல்வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள்போல’ என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (‘கல்இஹ்ன்’ எனுமிடத்தில்) ‘கஸ்ஸூஃப்’ (கம்பளியைப் போல) என்று ஓதியுள்ளார்கள். பாடம்: 102. ‘அத்தகாஸுர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (102:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தகாஸுர்’ எனும் சொல்லுக்கு ‘வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெற வேண்டுமென்ற ஆசை’ என்று பொருள். பாடம்: 103. ‘அல்அஸ்ர்’ அத்தியாயம்1 யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (103:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வல்அஸ்ரி’ எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான். பாடம்: 104. ‘அல்ஹுமஸா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (104:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுத்தமா’ என்பது, ‘சகர்’, ‘லழா’ ஆகியன போன்று நரகத்தின் பெயராகும். பாடம்: 105. ‘அல்ஃபீல்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (105:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலம் தர’ எனும் சொற்றொடருக்கு, ‘நீர் அறியவில்லையா?’ என்பது பொருள். (105:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபாபீல்’ எனும் சொல்லுக்கு ‘சாரை சாரையாக கூட்டங்கூட்டமாக’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (105:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சிஜ்ஜீல்’ எனும் சொல், ‘சன்கி கில்’ எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.) பாடம்: 106. ‘குறைஷ்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். ஆகவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை. (106:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமனஹும்’ (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு புனித (ஹரம்) எல்லையில் எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (106:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி ஈலாஃபி குறைஷ்’ எனும் சொற்றொடருக்கு ‘குறைஷியருக்கு நான் அருள் புரிந்ததற்காக’ என்று பொருள். பாடம்: 107. ‘அல்மாஊன்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (107:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யதுஃஉ’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் உரிமையைத் தருவதில்லை’ என்று பொருள். இச்சொல் ‘தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். (52:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுதஃஊன எனும் சொல்லுக்கு ‘விரட்டியடிக்கப்படுவர்’ என்று பொருள். (107:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாஹூன்’ எனும் சொல்லுக்கு ‘(அலட்சியத்தால்) பாழாக்குபவர்கள்’ என்று பொருள். (107:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மாஊன்’ எனும் சொல், நல்ல காரியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரபியரில் சிலர் ‘மாஊன்’ என்பதற்கு ‘தண்ணீர்’ என்று பொருள் எனக் கூறுகின்றனர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட ‘ஸகாத்’ ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது இரவல் (வழங்கப்படும் ஊசி போன்ற சிறு) பொருட்கள் ஆகும். பாடம்: 108. ‘அல்கவ்ஸர்’ அத்தியாயம்1ஆ பாடம்: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஷானிஅக்க’ எனும் சொல்லுக்கு ‘உம்முடைய பகைவன்’ என்பது பொருள்.
4966. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(108:1ஆவது வசனத்தில் இடம்பெற் றுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்” எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4967. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةً بَعْدَ أَنْ نَزَلَتْ عَلَيْهِ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} إِلاَّ يَقُولُ فِيهَا " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ".
பாடம்: 109. ‘அல்காஃபிரூன்’ அத்தியாயம்1 (109:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லக்கும் தீனுக்கும்’ (உங்களுடைய மதம் உங்களுக்கு) என்பதன் கருத்தாவது: இறைமறுப்பு உங்களுக்கு. ‘வலிய தீன்’ (எனது மார்க்கம் எனக்கு) என்பதன் கருத்தாவது: இஸ்லாம் எனக்கு. இதில், ‘எனது மார்க்கம்’ என்று குறிப்பிட, ‘தீனீ’ என்று (தன்னிலைப் பிரதிப் பெயர்ச்சொல்லுடன் இணைத்து) அல்லாஹ் கூறவில்லை. காரணம், இந்த (அத்தியாயத்திலுள்ள) எல்லா வசனங்களும் ‘னகர’ ஒலியுடன் (நூனில்) முற்றுப்பெற்றுள்ளன. எனவேதான் (‘தீனீ’ என்பதிலுள்ள) யகரம் நீக்கப்பட்டது. அல்லாஹ், (‘யஹ்தீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஹ்தீன்’ என்றும் (‘யஷ்ஃபீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஷ்ஃபீன்’ என்றும் கூறியிருப்பதைப் போல. (காண்க: குர்ஆன் மூலம்: 26:78,80) மற்றவர்கள் கூறுகிறார்கள்: (109:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா அஉபுது மா தஉபுதூன்’ என்பதற்கு ‘நீங்கள் வழிபட்டுக்கொண்டிருப்பவற்றை தற்போதும் நான் வழிபடமாட்டேன்; என் ஆயுளில் எஞ்சிய நாட்களிலும் அதற்கு இணங்கமாட்டேன்’ என்பது பொருள். ‘நான் வழிபடுபவனை நீங்களும் வழிபடுபவர்கள் அல்லர்’ எனும் (109:5ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்போர் தொடர்பாகவே இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்: உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (இவ்வேதமான)துஅவர்களில் பெரும்பாலோருக்கு அட்டூழியத்தையும் இறைமறுப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்திவருகிறது. ஆகவே, இறைமறுப்பாளர்களான இம்மக்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். (5:68) பாடம்: 110. ‘அந்நஸ்ர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) பாடம் : 1
4967. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றி யும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.

அத்தியாயம் : 65
4968. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ". يَتَأَوَّلُ الْقُرْآنَ.
பாடம்: 2
4968. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.2

அத்தியாயம் : 65
4969. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ ـ رضى الله عنه ـ سَأَلَهُمْ عَنْ قَوْلِهِ تَعَالَى {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} قَالُوا فَتْحُ الْمَدَائِنِ وَالْقُصُورِ قَالَ مَا تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ قَالَ أَجَلٌ أَوْ مَثَلٌ ضُرِبَ لِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نُعِيَتْ لَهُ نَفْسُهُ.
பாடம்: 3 மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது (எனும் 110:2ஆவது இறை வசனம்)
4969. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.:

உமர் (ரலி) அவர்கள், ‘‘(நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...” எனும் (110ஆவது) அத்தியாயம் குறித்து (பத்ர் போரில் கலந்துகொண்ட) நண்பர் களிடம் கேட்டார்கள். நண்பர்கள், ‘‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றி கொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது)” என்று கூறினர். ‘‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள்.

‘‘(இது,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களது இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது” என்று (விளக்கம்) கூறினேன்.3

அத்தியாயம் : 65
4970. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَكَأَنَّ بَعْضَهُمْ وَجَدَ فِي نَفْسِهِ فَقَالَ لِمَ تُدْخِلُ هَذَا مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ عُمَرُ إِنَّهُ مِنْ حَيْثُ عَلِمْتُمْ. فَدَعَا ذَاتَ يَوْمٍ ـ فَأَدْخَلَهُ مَعَهُمْ ـ فَمَا رُئِيتُ أَنَّهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ. قَالَ مَا تَقُولُونَ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا نَحْمَدُ اللَّهَ وَنَسْتَغْفِرُهُ، إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا. وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا فَقَالَ لِي أَكَذَاكَ تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ لاَ. قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ لَهُ، قَالَ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} وَذَلِكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا}. فَقَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَقُولُ.
பாடம்: 4 ‘‘உம்முடைய இறைவனைப் புகழ்ந்துகொண்டு அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப் பைப் பெரிதும் ஏற்பவனாக இருக் கின்றான்” எனும் (110:3ஆவது) இறைவசனம் (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தவ்வாப்’ எனும் சொல்லுக்கு, ‘அடியார் களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்’ என்பது பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவருக்கும் ‘தவ்வாப்’ என்று கூறப்படுவது உண்டு.
4970. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயதில்) பிள்ளைகள் இருக்க, இவரை எங்களுடன் ஏன் அமரச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால்தான்” என்றார்கள்.

பின்னர் ஒருநாள் (எங்களை) உமர் (ரலி) அவர்கள் (தமது அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன்.

(எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...” எனும் (110:1ஆவது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்” என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்)அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்...’ அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)” என்று பதிலளித்தேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் கூறுகின்ற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.4

111. ‘அல்லஹப்’ அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(111:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தப்ப’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லும், 40:37ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘தபாப்’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள்.

(11:101ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்பீப்’ எனும் சொல்லுக்கு ‘சீரழிவு’ என்று பொருள்.

அத்தியாயம் : 65