4971. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} وَرَهْطَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ، خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى صَعِدَ الصَّفَا فَهَتَفَ " يَا صَبَاحَاهْ ". فَقَالُوا مَنْ هَذَا، فَاجْتَمَعُوا إِلَيْهِ. فَقَالَ " أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ". قَالُوا مَا جَرَّبْنَا عَلَيْكَ كَذِبًا. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". قَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ مَا جَمَعْتَنَا إِلاَّ لِهَذَا ثُمَّ قَامَ فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} وَقَدْ تَبَّ هَكَذَا قَرَأَهَا الأَعْمَشُ يَوْمَئِذٍ.
பாடம் : 1
4971. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீ ராக!” (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)” என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘‘யார் இவர்?” என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்றுகூடினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என்று உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூலஹப், ‘‘உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?” என்று கேட்டான். பின்னர் நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது, ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் ‘கத்’ எனும் இடைச்சொல்லை இணைத்து) ‘வ கத் தப்ப’ (அவன் அழிந்தும்விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.2

அத்தியாயம் : 65
4972. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الْبَطْحَاءِ فَصَعِدَ إِلَى الْجَبَلِ فَنَادَى " يَا صَبَاحَاهْ ". فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ فَقَالَ " أَرَأَيْتُمْ إِنْ حَدَّثْتُكُمْ أَنَّ الْعَدُوَّ مُصَبِّحُكُمْ أَوْ مُمَسِّيكُمْ، أَكُنْتُمْ تُصَدِّقُونِي ". قَالُوا نَعَمْ. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ أَلِهَذَا جَمَعْتَنَا تَبًّا لَكَ. فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} إِلَى آخِرِهَا.
பாடம்: 2 அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித் தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்)
4972. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலைமீதேறி, ‘‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே அவர்களிடம் குறைஷியர் குழுமினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!” என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘‘ஆம் (நம்பவே செய்வோம்)” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கி யுள்ளது என உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூலஹப், ‘‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்றுதிரட்டினாயா?” என்று கேட்டான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயத்தை அருளினான்.

அத்தியாயம் : 65
4973. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ}.
பாடம்: 3 ‘‘அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்” எனும் (111:3ஆவது) இறைவசனம்
4973. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்றுகூட்டினாய்!” என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூலஹப் கேட்டான். அப்போது, ‘‘அழியட்டும், அபூலஹபின் இரு கரங்கள்...” எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4974. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ فَقَوْلُهُ لَنْ يُعِيدَنِي كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الْخَلْقِ بِأَهْوَنَ عَلَىَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ فَقَوْلُهُ اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الأَحَدُ الصَّمَدُ لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفْأً أَحَدٌ ".
பாடம்: 4 அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹம்மாலத்தல் ஹதப்’ எனும் சொல்லுக்கு ‘புறம் பேசித் திரிகின்றவள்’ (முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள். (111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மசத்’ எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கிலியைக் குறிக்கும். பாடம்: 112. ‘அல்இக்லாஸ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (112:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹத்’ எனும் சொல்லை (‘அஹதுன்’ என்று ‘தன்வீன்’) ‘னகர ஒலி இணை’யுடன் வாசிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. பொருள்: ஒருவன். பாடம் : 1
4974. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.

(உண்மையில், மனிதன் இறந்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமன்று.)

‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4975. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَالَ اللَّهُ كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، أَمَّا تَكْذِيبُهُ إِيَّاىَ أَنْ يَقُولَ إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَّا شَتْمُهُ إِيَّاىَ أَنْ يَقُولَ اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ وَلَمْ يَكُنْ لِي كُفُؤًا أَحَدٌ ". {لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ لَهُ كُفُؤًا أَحَدٌ} كُفُؤًا وَكَفِيئًا وَكِفَاءً وَاحِدٌ.
பாடம்: 2 ‘‘அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில்லாதவன்” எனும் (112:2ஆவது) இறைவசனம். அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை ‘அஸ்ஸமத்’ என்று அழைக்கின்றனர். அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே ‘அஸ்ஸமத்’ எனப்படுவார்.
4975. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகின்றான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும்.

ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.

(அல்லாஹ் கூறுகின்றான்:) ‘‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (ஆகவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை). தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை” (112:3,4)

(112:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4976. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، وَعَبْدَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ سَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ عَنِ الْمُعَوِّذَتَيْنِ، فَقَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ قِيلَ لِي فَقُلْتُ فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 113. ‘அல்ஃபலக்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (113:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஃபலக்’ எனும் சொல்லுக்கு ‘வைகறை’ என்பது பொருள். (113:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகாஸிக்’ (இருள் கப்பியது) எனும் சொல் இரவைக் குறிக்கிறது. (இதே வசனத்திலுள்ள) ‘வகப’ (அது படர்ந்தது) எனும் சொல், சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கிறது. (பொதுவாக அரபியரின் வழக்கில்) ‘அப்யனு மின் ஃபரக்கி வ ஃபலக்கிஸ் ஸுப்ஹி’ (அது வைகறையைவிடத் தெளிவானது) என்று (‘ஃபரக்’ எனும் சொல்லையும் ‘ஃபலக்’ எனும் சொல்லையும் ஒரே பொருளில் ஆண்டு) வழங்குகின்றனர். ‘ஒரு பொருள் மற்றொரு பொருளுக்குள் முழுவதுமாக நுழைந்து, இருள் கப்பிக்கொள்ளும்போது, ‘வகப’ என்பர்.
4976. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களி டம் ‘முஅவ்விதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114ஆவது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா என்பது) பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

ஆகவே, நாங்களும் (நானும் உபை பின் கஅபும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.2

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4977. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، وَحَدَّثَنَا عَاصِمٌ، عَنْ زِرٍّ، قَالَ سَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ قُلْتُ يَا أَبَا الْمُنْذِرِ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ كَذَا وَكَذَا. فَقَالَ أُبَىٌّ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لِي قِيلَ لِي. فَقُلْتُ، قَالَ فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 114. ‘அந்நாஸ்’ அத்தியாயம்1 (114:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வஸ்வாஸ்’ எனும் சொல்லி(ன் (விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குழந்தை பிறந்தால் அக்குழந்தையை ஷைத்தான் தீண்டுகிறான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்(வின் பெயர்) கூறப்பட்டால், அவன் போய்விடுகிறான்; அல்லாஹ்(வின் பெயர்) கூறப்படவில்லையாயின், அக்குழந்தையின் இதயத்தின் மீதே அவன் நிலைகொண்டுவிடுகிறான்.
4977. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், ‘‘அபூமுன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொல்கிறாரே?” என்று கேட்டேன்.2

அதற்கு உபை (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும், ‘நபியே! கூறுக: நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)

ஆகவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65

4978. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ، وَابْنُ، عَبَّاسٍ رضى الله عنهم قَالاَ لَبِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ.
பாடம்: 1 வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப்பெற்றது? என்பதும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹைமின்’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாக்கக்கூடியது’ என்பது பொருள்; தனக்குமுன் வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக்கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன் ஆகும்.
4978. ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.2


அத்தியாயம் : 66
4980. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ أُنْبِئْتُ أَنَّ جِبْرِيلَ، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ فَجَعَلَ يَتَحَدَّثُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُمِّ سَلَمَةَ "" مَنْ هَذَا "". أَوْ كَمَا قَالَ قَالَتْ هَذَا دِحْيَةُ. فَلَمَّا قَامَ قَالَتْ وَاللَّهِ مَا حَسِبْتُهُ إِلاَّ إِيَّاهُ حَتَّى سَمِعْتُ خُطْبَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم يُخْبِرُ خَبَرَ جِبْرِيلَ أَوْ كَمَا قَالَ، قَالَ أَبِي قُلْتُ لأَبِي عُثْمَانَ مِمَّنْ سَمِعْتَ هَذَا. قَالَ مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ.
பாடம்: 1 வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப்பெற்றது? என்பதும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹைமின்’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாக்கக்கூடியது’ என்பது பொருள்; தனக்குமுன் வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக்கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன் ஆகும்.
4980. அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், ‘‘இவர் யார் (தெரியுமா)?” என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றபின், உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும்வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த (வானவர்) ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)” என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அத் தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், ‘‘இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.3


அத்தியாயம் : 66
4981. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلاَّ أُعْطِيَ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَىَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம்: 1 வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப்பெற்றது? என்பதும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹைமின்’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாக்கக்கூடியது’ என்பது பொருள்; தனக்குமுன் வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக்கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன் ஆகும்.
4981. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 66
4982. حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ اللَّهَ، تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْىُ، ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ.
பாடம்: 1 வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப்பெற்றது? என்பதும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹைமின்’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாக்கக்கூடியது’ என்பது பொருள்; தனக்குமுன் வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக்கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன் ஆகும்.
4982. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேதஅறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேதஅறிவிப்பு (மற்றக் காலங்களில் அருளப்பெற்றதைவிட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.4


அத்தியாயம் : 66
4983. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ اشْتَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمْ يَقُمْ لَيْلَةً أَوْ لَيْلَتَيْنِ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ يَا مُحَمَّدُ مَا أُرَى شَيْطَانَكَ إِلاَّ قَدْ تَرَكَكَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
பாடம்: 1 வேதஅறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப்பெற்றது? என்பதும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பதும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹைமின்’ எனும் சொல்லுக்கு ‘பாதுகாக்கக்கூடியது’ என்பது பொருள்; தனக்குமுன் வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக்கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன் ஆகும்.
4983. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘ஓர் இரவு’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். (அதனால்தான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்க வில்லை)” என்று கூறினாள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3 ஆகிய) வசனங் களை அருளினான்.5

அத்தியாயம் : 66
4984. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، وَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ فَأَمَرَ عُثْمَانُ زَيْدَ بْنَ ثَابِتٍ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَنْ يَنْسَخُوهَا، فِي الْمَصَاحِفِ وَقَالَ لَهُمْ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي عَرَبِيَّةٍ مِنْ عَرَبِيَّةِ الْقُرْآنِ فَاكْتُبُوهَا بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّ الْقُرْآنَ أُنْزِلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا.
பாடம்: 2 குர்ஆன், அரபியர் மொழியில் குறைஷியரின் நடையில் அருளப் பெற்றது. (அல்லாஹ் கூறுகின்றான்:) நாம் இதை அரபி மொழி குர்ஆனாக அமைத்துள்ளோம். (43:3) தெளிவான அரபி மொழியில் (இது அருளப்பட்டுள்ளது). (26:195)
4984. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் பின் ஸாபித், சயீத் பின் அல்ஆஸ், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.

மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்சாரியான ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அல்லாத குறைஷியரான மற்ற மூவரிடமும்), ‘‘நீங்கள் மூவரும் ஸைத் பின் ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபிமொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால், குறைஷியரின் மொழி வழக்கிலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது” என்று சொன்னார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர்.6


அத்தியாயம் : 66
4985. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ،. وَقَالَ مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، أَنَّ يَعْلَى، كَانَ يَقُولُ لَيْتَنِي أَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يُنْزَلُ عَلَيْهِ الْوَحْىُ، فَلَمَّا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ ثَوْبٌ قَدْ أَظَلَّ عَلَيْهِ وَمَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ إِذْ جَاءَهُ رَجُلٌ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ فِي جُبَّةٍ بَعْدَ مَا تَضَمَّخَ بِطِيبٍ فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاعَةً فَجَاءَهُ الْوَحْىُ فَأَشَارَ عُمَرُ إِلَى يَعْلَى أَنْ تَعَالَ، فَجَاءَ يَعْلَى فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا هُوَ مُحْمَرُّ الْوَجْهِ يَغِطُّ كَذَلِكَ سَاعَةً ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" أَيْنَ الَّذِي يَسْأَلُنِي عَنِ الْعُمْرَةِ آنِفًا "". فَالْتُمِسَ الرَّجُلُ فَجِيءَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلاَثَ مَرَّاتٍ، وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكَ "".
பாடம்: 2 குர்ஆன், அரபியர் மொழியில் குறைஷியரின் நடையில் அருளப் பெற்றது. (அல்லாஹ் கூறுகின்றான்:) நாம் இதை அரபி மொழி குர்ஆனாக அமைத்துள்ளோம். (43:3) தெளிவான அரபி மொழியில் (இது அருளப்பட்டுள்ளது). (26:195)
4985. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) யஅலா பின் உமைய்யா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என்று ஆசையாக உள்ளது)” என்று கூறுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘ஜிஅரானா’ எனும் இடத்தில் தமக்கு மேலே துணியொன்று நிழலிட்டுக்கொண்டிருக்கத் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது நறுமணம் பூசிய ஒரு மனிதர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசப்பட்ட அங்கியால் (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (மௌனத்துடன்) காத்திருந்தார்கள்.

அப்போது அவர்களுக்கு ‘வஹீ’ (வேத அறிவிப்பு) வந்தது. உமர் (ரலி) அவர்கள் யஅலா அவர்களை, ‘‘இங்கு வாருங்கள்” என்று சைகையால் அழைத்தார்கள்.

(என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

நான் சென்றேன். (நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காகக் கட்டப்பட்டிருந்த துணிக்குள்) நான் எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் (வஹீயின் கனத்தால்) முனகியவர்களாக சிறிது நேரம் காணப்பட்டார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்தச் சிரம நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்றுமுன் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்றார்கள்.

அந்த மனிதரைத் தேடி அவரை நபி (ஸல்) அவர்களிடம் (அழைத்துக்) கொண்டுவரப்பட்டது. அவரிடம், ‘‘உம்மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க! (தைக்கப்பட்ட) அங்கியைக் களைந்துகொள்க! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று சொன்னார்கள்.7

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 66
4986. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ عِنْدَهُ قَالَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقُرَّاءِ الْقُرْآنِ وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ بِالْمَوَاطِنِ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ. قُلْتُ لِعُمَرَ كَيْفَ تَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عُمَرُ هَذَا وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِذَلِكَ، وَرَأَيْتُ فِي ذَلِكَ الَّذِي رَأَى عُمَرُ. قَالَ زَيْدٌ قَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ لاَ نَتَّهِمُكَ، وَقَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِي نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَىَّ مِمَّا أَمَرَنِي مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ أَبُو بَكْرٍ يُرَاجِعُنِي حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَ أَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنَ الْعُسُبِ وَاللِّخَافِ وَصُدُورِ الرِّجَالِ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرَهُ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ} حَتَّى خَاتِمَةِ بَرَاءَةَ، فَكَانَتِ الصُّحُفُ عِنْدَ أَبِي بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ عِنْدَ عُمَرَ حَيَاتَهُ ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ ـ رضى الله عنه ـ.
பாடம்: 3 குர்ஆன் திரட்டப்படுதல்
4986. (வேதஅறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

யமாமா போர் நடைபெற்றபின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப் பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்றுசேர்க்க உத்தரவிட வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?” என உமர் அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு உமர் அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இந்த விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர் (ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)

(பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), ‘‘(ஸைதே!) நீங்கள் புத்திசாóயான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக ‘வஹீ’ (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்றுதிரட்டுங்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன்வந்தேன்.)

ஆகவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் அவற்றை நான் பெறவில்லை.

(அவை:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான். (9:128, 129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களது இறப்பிற்குப்) பிறகு உமர் (ரலி) அவர்களுடைய புதல்வி ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.8


அத்தியாயம் : 66
4987. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ.
பாடம்: 3 குர்ஆன் திரட்டப்படுதல்
4987. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். அப்போது (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் ஆதர்பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கு ஷாம்வாசிகளை ஆயத்தப்படுத்தியிருந்தார்கள்.9

(இப்போரில் கலந்துகொண்டிருந்த) ஹ’தைஃபா (ரலி) அவர்களை, குர்ஆன் ஓதும் முறைகளில் மக்களிடையே எழுந்த கருத்து வேறுபாடு அதிர்ச்சிக் குள்ளாக்கியது.10

ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘‘யூதர்களும் கிறித்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடு கொண்டதுபோல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!” என்று கூறினார்கள்.

ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி, ‘‘தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங் கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்துவிடுகிறோம்” என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி), சயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

மேலும், உஸ்மான் (ரலி) அவர்கள் (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, ‘‘நீங்களும் (அன்சாரியான) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் (வட்டார) மொழி வழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்குப்படியே அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்த) அந்த குர்ஆன் பதிவைப் பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்துவிடும்படி உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.


அத்தியாயம் : 66
4988. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، سَمِعَ زَيْدَ بْنَ ثَابِتٍ، قَالَ فَقَدْتُ آيَةً مِنَ الأَحْزَابِ حِينَ نَسَخْنَا الْمُصْحَفَ قَدْ كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فَالْتَمَسْنَاهَا فَوَجَدْنَاهَا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} فَأَلْحَقْنَاهَا فِي سُورَتِهَا فِي الْمُصْحَفِ.
பாடம்: 3 குர்ஆன் திரட்டப்படுதல்
4988. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம்.

(அந்த வசனம் இதுதான்:) அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர் களில் சிலர் (இறைவழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தமது இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.(33:23)

உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம்.11

அத்தியாயம் : 66
4989. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ ابْنَ السَّبَّاقِ، قَالَ إِنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ إِنَّكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاتَّبِعِ الْقُرْآنَ. فَتَتَبَّعْتُ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرَهُ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ} إِلَى آخِرِهِ.
பாடம்: 4 நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தர்12
4989. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற ‘வஹீ’ (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!” என்று சொன்னார்கள். ஆகவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன்.

இறுதியாக ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை அபூகுஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை.

(அவ்விரு வசனங்களாவன:) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள்மீது அதிகப் பரிவும் கருணையும் உடையோராகவும் அவர் இருக்கின்றார்.

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியணையின் அதிபதியாயிருக்கின்றான்.(9:128,129)13


அத்தியாயம் : 66
4990. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ لَمَّا نَزَلَتْ {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ادْعُ لِي زَيْدًا وَلْيَجِئْ بِاللَّوْحِ وَالدَّوَاةِ وَالْكَتِفِ ـ أَوِ الْكَتِفِ وَالدَّوَاةِ ـ ثُمَّ قَالَ "" اكْتُبْ لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ "" وَخَلْفَ ظَهْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَمْرُو بْنُ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنِي فَإِنِّي رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ فَنَزَلَتْ مَكَانَهَا {لاَ يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} فِي سَبِيلِ اللَّهِ {غَيْرُ أُولِي الضَّرَرِ}""
பாடம்: 4 நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தர்12
4990. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள்” எனும் (4:95ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘‘ஸைதை அழைத்துவாருங்கள். அவர் தம்முடன் ‘பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு’ அல்லது ‘அகலமான எலும்பு, மைக்கூடு’ ஆகியவற்றை எடுத்துவரட்டும்” என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் வந்தபோது,) ‘‘இந்த (4:95ஆவது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களது முதுகுக்குப் பின்னால், கண்பார்வையற்றவரான அம்ர் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகின்றீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!” என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில், ‘தக்க காரணமின்றி’ எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) அருளப்பெற்றது.14

அத்தியாயம் : 66