4931. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا. وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَهُ. وَتَابَعَهُ أَسْوَدُ بْنُ عَامِرٍ عَنْ إِسْرَائِيلَ،. وَقَالَ حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ،. قَالَ يَحْيَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَارٍ إِذْ نَزَلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلاَتِ فَتَلَقَّيْنَاهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ خَرَجَتْ حَيَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَيْكُمُ اقْتُلُوهَا "". قَالَ فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا ـ قَالَ ـ فَقَالَ "" وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا "".
பாடம்: 76. ‘அத்தஹ்ர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (76:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹல் அத்தா அலல் இன்சான்’ எனும் சொற்றொடருக்கு ‘மனிதன் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாதிருந்த ஒரு காலம் நிச்சயம் அவன்மீது சென்றுவிட்டது’ என்று பொருள். இதிலுள்ள ‘ஹல்’ எனும் (வினா) இடைச்சொல் சிலவேளை ஒன்றை மறுக்கும் தொனியில் வினவுவதற்காக வரும். இன்னும் சில சமயம் (நடப்பைக் குறிக்கும்) செய்தியாகவும் வரும். இங்கே செய்தியாகவே வந்துள்ளது. அதாவது (ஆரம்பத்தில்) மனிதன் ஒரு பொருளாக இருந்தான். ஆனால், இன்ன பொருள் என்று குறிப்பட்டுச் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை. இந்த வசனம் (முதல்) மனிதரைக் களிமண்ணினால் படைத்து, அவருக்குள் உயிர் ஊதப்படும் வரையிலுள்ள கால வரம்பைக் குறிக்கின்றது. (76:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அம்ஷாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கலக்கப்பட்ட’ என்பது பொருள். அதாவது, ஆணின் நீர் (விந்து உயிரணு) மற்றும் பெண்ணின் நீர் (கருமுட்டை) மூலம் (கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம்). பிறகு, அது (படிப்படியாக) இரத்தக் கட்டியாக, சதைப் பிண்டமாக மாறியது. ஒரு பொருள் இன்னொரு பொருளோடு கலக்கும்போது, கலக்கப்பட்ட பொருள் (‘மஷீஜ்’) என்று சொல்லப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘அம்ஷாஜ்’ எனும் சொல், ‘மஷீஜ்’ எனும் சொல்லின் பன்மையாகும்). இதற்கு ‘மம்ஷூஜ்’ (கலக்கப்பட்டது) என்று பொருள். (76:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சலாசில வ அஃக்லால்’ (சங்கிலிகளையும் விலங்குகளையும்) எனும் சொல்லை ‘சலாசிலன் வ அஃக்லாலன்’ என்று சிலர் ஓதினர். ஆனால், மற்றவர்கள் இதை அனுமதிக்கவில்லை. (‘சலாசில வ அஃக்லால்’ என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்). (76:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்த்ததீர்’ எனும் சொல்லுக்கு ‘துன்பங்கள் நீண்ட’ என்பது பொருள். (76:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கம்தரீர்’ எனும் சொல்லுக்கு ‘கடுமையானது’ என்று பொருள். ‘யவ்முன் கம்தரீர், யவ்முன் குமாதிர்’ ஆகிய சொற்களைக் கடும் துன்ப நாளைக் குறிக்க (அரபியர்) பயன்படுத்துகின்றனர். ‘அல்அபூஸ்’, ‘அல்கம்தரீர்’, ‘அல்குமாதிர்’, ‘அல்அஸீப்’ ஆகிய சொற்கள் கடுமையான துன்ப நாளைக் குறிக்கும். அபூஉபைதா மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (76:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷதத்னா அஸ்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர்களை வலுவாகப் படைத்தோம்’ என்பது பொருள். (‘அசிர’ எனும் இறந்தகால வினைச்சொல்லுக்கு ‘இறுக்கமாகக் கட்டினான்’ என்பது பொருள். இந்த வகையில்,) எதையெல்லாம் மனிதன் இறுக்கமாகக் கட்டுவானோ அதற்கு ‘மஅஸூர்’ (இறுக்கமாகக் கட்டப்பட்டது) என்று கூறப்படும். உதாரணமாக, ஒட்டகத்தின் சிவிகையைக் கூறலாம். (அதை ஒட்டகத்தின் மீது இறுக்கமாகவே கட்டிவைக்கப்படுகிறது). பாடம்: 77. ‘அல்முர்சலாத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஜிமாலாத்’ எனும் சொல் ‘ஜுமாலாத்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. இந்த) ‘ஜுமாலாத்’ எனும் சொல்லுக்கு, ‘கப்பலின் கயிறுகள்’ என்று பொருள். (77:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்கஊ’ (குனிந்து ருகூஉ செய்து வழிபடுங்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்கஊன்’ (அவர்கள் குனிந்து ருகூஉ செய்து வழிபடுவதில்லை) எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் தொழுவதில்லை’ என்பது பொருள். (77:35ஆவது வசனத்தில்) ‘‘இந்த மறுமை நாளில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்” என்றும், (6:23ஆவது வசனத்தில்) ‘‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக,! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை (என்று பொய் சொல்வார்கள்)” என்றும், (36:65ஆவது வசனத்தில்) ‘‘(மறுமை நாள்) அன்று அவர்களுடைய வாய்களுக்கு முத்திரை வைத்துவிடுவோம். (அவர்களது வாய் பேசாது)” என்றும் (முரண்பாடு இருப்பதுபோல்) காணப்படுகிறதே என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘(இணைவைப்பாளர்களுக்கு மறுமை நாளில்) பல்வேறு கட்டங்கள் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசுவார்கள்; இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் பேச முடியாதவாறு அவர்களது வாய்க்கு முத்திரை வைக்கப்படும்” என்று பதிலளித்தார்கள்.2 பாடம்: 1
4931. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!)” எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக்கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தனது புற்றிó ருந்து) வெளிப்பட்டது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் புகுந்து)விட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4932. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ قَالَ كُنَّا نَرْفَعُ الْخَشَبَ بِقَصَرٍ ثَلاَثَةَ أَذْرُعٍ أَوْ أَقَلَّ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ الْقَصَرَ.
பாடம்: 2 ‘‘அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனம்
4932. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

நாங்கள் குளிர் காலத்தில் குளிர்காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்துவந்தோம்.4

அத்தியாயம் : 65
4933. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَابِسٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {تَرْمِي بِشَرَرٍ} كُنَّا نَعْمِدُ إِلَى الْخَشَبَةِ ثَلاَثَةَ أَذْرُعٍ وَفَوْقَ ذَلِكَ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ الْقَصَرَ. {كَأَنَّهُ جِمَالاَتٌ صُفْرٌ} حِبَالُ السُّفْنِ تُجْمَعُ حَتَّى تَكُونَ كَأَوْسَاطِ الرِّجَالِ.
பாடம்: 3 ‘‘அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப்போல் இருக்கும்” எனும் (77:33ஆவது) இறைவசனம்
4933. அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்” எனும் (77:32ஆவது) இறைவசனத் திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்:

நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர் காலத்திற்காக நாங்கள் எடுத்துவைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்துவந்தோம்.

(77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜிமாலத்துன் ஸுஃப்ர்’ எனும் சொற்றொடர், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவுக்குத் திரிக்கப்படும்.

அத்தியாயம் : 65
4934. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَارٍ إِذْ نَزَلَتْ عَلَيْهِ وَالْمُرْسَلاَتِ، فَإِنَّهُ لَيَتْلُوهَا وَإِنِّي لأَتَلَقَّاهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اقْتُلُوهَا ". فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وُقِيَتْ شَرَّكُمْ، كَمَا وُقِيتُمْ شَرَّهَا ". قَالَ عُمَرُ حَفِظْتُهُ مِنْ أَبِي فِي غَارٍ بِمِنًى.
பாடம்: 4 இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35ஆவது இறைவசனம்)
4934. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘‘வல்முர்சலாத்தி” (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவைமீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக்கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தனது புற்றுக்குள் ஓடிப்)போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளரான உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘‘இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது” என்று என் தந்தையிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.

அத்தியாயம் : 65
4935. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ ". قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ. قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ. قَالَ " ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً. فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنَ الإِنْسَانِ شَىْءٌ إِلاَّ يَبْلَى إِلاَّ عَظْمًا وَاحِدًا وَهْوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ ".
பாடம்: 78. ‘அந்நபஉ’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (78:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்ஜƒன ஹிசாபா’ (அவர்கள் விசாரணையை நம்பக்கூடியவர்களாக இருக்கவில்லை) என்பதன் கருத்தாவது: அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை. (78:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யம்லிகூன மின்ஹு கிதாபா’ (அவனிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் கிடையாது) என்பதன் கருத்தாவது: இறைவன் அனுமதித்தாலன்றி அவனிடம் அவர்கள் பேச முடியாது. (78:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவாப்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தைப் பேசி அதன் வழி நடத்தல்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (78:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஹ்ஹாஜ்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிர்கின்ற’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (78:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகஸ்ஸாக்’ எனும் சொல்லுக்கு, ‘வழிகின்ற (சீழ்)’ என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) ‘ஃகஸகத் அய்னுஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனது கண்ணிலிருந்து (பீளை) வழிந்தது’ என்பது பொருள். ‘யஃக்ஸிகுல் ஜுர்ஹு’ என்பதற்கு ‘காயத்திலிருந்து (சீழ்) வழிகின்றது’ என்பது பொருள். (78:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தாஅன் ஹிசாபா’ எனும் சொல்லுக்கு ‘போதிய வெகுமதி’ என்று பொருள். ‘அஃதானீ மா அஹ்சபனீ’ எனும் வாக்கியத்திற்கு (வழக்கில்) ‘போதிய அளவுக்கு எனக்கு வழங்கினான்’ என்று பொருள். பாடம்: 1 ‘ஸூர்’ எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் 78:18ஆவது இறைவசனம்) இதன் மூலத்திலுள்ள ‘அஃப்வாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கூட்டங்கள்’ என்பது பொருள்.
4935. அபூசாலிஹ் ஃதக்வான் அஸ் ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரை யும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.

பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர!

அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.2

அத்தியாயம் : 65
4936. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بِإِصْبَعَيْهِ هَكَذَا بِالْوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ " بُعِثْتُ وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ".
பாடம்: 79. ‘அந்நாஸிஆத்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (79:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஆயத்துல் குப்ரா’ (பெரும் சான்று) எனும் சொல், மூசா (அலை) அவர்களது கைத்தடியையும் (அற்புதமாகப் பிரகாசித்த) அன்னாரது கரத்தையும் குறிக்கும். (79:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நகிரா’ (இற்றுப்போன) எனும் சொல்லும் ‘நாகிரா’ எனும் சொல்லும் (பொருளில்) சமமானதே. ‘தாமிஉ’, ‘தமிஉ’ இரண்டும் (‘ஆசைமிக்கவன்’ எனும் ஒரே பொருள் கொண்டிருப்பதுபோல; ‘அல்பாகில்’, ‘அல்பகீல்’ இரண்டும் (‘கருமி’ எனும்) ஒரே பொருள் கொண்டிருப்பதுபோல. வேறுசிலர், (‘நகிரா’விற்கும், ‘நாகிரா’விற்கும் வித்தியாசம் உண்டு:) ‘நகிரா’ என்பதற்கு ‘இற்றுப்போனது’ என்று பொருள். ‘நாகிரா’ என்பதற்கு ‘துளையுள்ள எலும்பு’ என்று பொருள்; அதனுள் காற்று ஊடுருவிச் சென்று இரையும் (அத்தகைய எலும்பே ‘நாகிரா’)” என்று கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (79:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹாஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘பழைய வாழ்க்கை நிலை’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (79:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அய்யான முர்சாஹா’ எனும் வாக்கியத்திற்கு ‘அந்த இறுதி நேரம் எப்போது வரும்’ என்று பொருள். இறுதியாக எந்த இடத்தில் போய் கப்பல் நிற்குமோ, அந்த இடத்திற்கு ‘முர்சஸ் ஸஃபீனா’ என்பர். பாடம் : 1
4936. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமது நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரு விரல்கள்போல் (நெருக்கமாகவே) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறக் கேட்டேன்.

(79:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள்.

அத்தியாயம் : 65
4937. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ يَتَعَاهَدُهُ وَهْوَ عَلَيْهِ شَدِيدٌ، فَلَهُ أَجْرَانِ ".
பாடம்: 80. ‘அபச’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (80:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபச வத்தவல்லா’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர் கடுகடுத்தார்; மேலும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்’ என்பது பொருள். (80:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முதஹ்ஹரா’ (பரிசுத்தமான ஏடுகள்) என்பதன் கருத்தாவது: தூய்மையானவர்களாகிய வானவர்களைத் தவிர வேறு எவராலும் தொட முடியாத (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) ஏடுகள். இந்த வசனம்,”முந்திச் செல்பவர்(களான வானவர்)கள்மீது சத்தியமாக” எனும் (79:5ஆவது) வசனத்தைப் போல அமைந்துள்ளது. (உண்மையில், ‘முந்திச் செல்லல்’ என்பது வானவர்களைச் சுமந்து செல்லும் குதிரைகளின் தன்மையாகும்; ஆனால், வானவர்களின் தன்மைபோல் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.) வானவர்களையும் அந்த ஏடுகளையும் பரிசுத்தமானவை என்று இறைவன் கூறுகின்றான். ஏனெனில், பரிசுத்தம் என்பது (வேத) ஏடுகளால் கிடைக்கிறது. ஆகவே, அந்த ஏடுகளைச் சுமப்பவர்க(ளான வானவர்க)ளுக்கும் பரிசுத்தம் கிடைக்கும். (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சஃபரா’ (சமாதானத் தூதர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. ‘சஃபரா’ என்பதன் ஒருமை ‘சாஃபிர்’ என்பதாகும். ‘சஃபர்த்து’ எனும் (தன்மை வினைச்)சொல்லுக்கு ‘அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தேன்’ என்பது பொருள். இறைவனின் ‘வஹீ’யைப் பெற்றுக்கொண்டு, அதை இறைத்தூதர்களிடம் சேர்ப்பதற்காக இறங்கிவரும் வானவர்கள் மக்களிடையே சமாதானம் செய்துவைக்கும் தூதர்களைப்போல் உள்ளனர். (80:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸத்தா’ எனும் சொல்லுக்கு ‘அலட்சியம் செய்தார்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (80:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மா யக்ளீ’ எனும் சொற்றொடருக்கு ‘தமக்கு இறைவனால் ஏவப்பட்டதை ஒருவரும் நிறைவேற்றுவதில்லை’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தர்ஹகுஹா’ எனும் சொல்லுக்கு ‘அதில் கடுமையாகக் கப்பியிருக்கும்’ என்று பொருளாகும். (80:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்ஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘இலங்கிக்கொண்டிக்கும்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி அய்தீ சஃபரா’ எனும் சொற்றொடருக்கு ‘எழுதுபவர்களின் கைகளால்’ என்று பொருள். ‘அஸ்ஃபார்’ எனும் (பன்மைச்) சொல்லுக்கு ‘ஏடுகள்’ என்பது பொருள். இதன் ஒருமை ‘சிஃப்ர்’ என்று கூறப்படுகிறது. (80:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலஹ்ஹா’ எனும் சொல்லுக்கு ‘பாராமுகமாக இருந்துவிடுகிறீர்கள்’ என்று பொருள்.
4937. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரம மின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பவரைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதிவருகின்றவர் இரு மடங்கு நன்மைகளுக்குரியவரைப் போன்றவராவார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4938. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ} حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ ".
பாடம்: 81. ‘அத்தக்வீர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (81:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இன்கதரத்’ எனும் சொல்லுக்கு ‘உதிர்ந்துவிடும்’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (81:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுஜ்ஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘ஒரு துளி கூட எஞ்சாமல் (கடல்) வற்றிவிடும்போது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஸ்ஜூர்’ எனும் சொல்லுக்கு ‘நிரப்பப்பட்டது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: ‘சுஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘பல கடல்கள் ஒன்றோடொன்று சங்கமமாக்கப்பட்டு ஒரே கடலாய் மாறிவிடும்’ என்று பொருள். (81:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்குன்னஸ்’ எனும் சொல்லுக்கு ‘தன் பாதையில் பின்னோக்கி வரக்கூடியது’ என்று பொருள். ‘தக்னிஸு’ என்பதற்கு ‘மான்கள் (புதர்களுக்குள்) மறைவதுபோல மறைகிறது’ என்று பொருள். (81:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்குன்னஸ்’ என்பதன் வினைச்சொல்லே ‘தக்னிஸு’ ஆகும்.) (81:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தநஃப்பச’ எனும் சொல்லுக்கு ‘பகல் புலரும்’ என்று பொருள். (81:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளனீன்’ எனும் சொல்லுக்கு ‘கருமி’ என்பது பொருள். (வேறோர் ஓதல் முறையில் அமைந்த) ‘ழனீன்’ எனும் சொல்லுக்கு ‘சந்தேகத்திற்கிடமானவர்’ என்று பொருள். (81:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அந்நுஃபூசு ஸுவ்விஜத்’ (உயிர்கள் ஒன்றிணைக்கப்படும்போது) எனும் வசனத்தில் உமர் (ரலி) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளான ஆண்களுக்கு அவர்களுக்கு இணையான சொர்க்கவாசிப் பெண்களையும், நரகவாசிகளான ஆண்களுக்கு அவர்களுக்கு நிகரான நரகவாசிப்பெண்களையும் (மறுமையில்) இணைகளாக வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகின்றான்”என்று சொல்லிவிட்டு, ‘‘அக்கிரமம் இழைத்துக்கொண்டிருந்தவர்களையும், அவர்களுடைய இணைகளையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டுவாருங்கள்” எனும் (37:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (81:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்அஸ’ எனும் சொல்லுக்கு (‘விடைபெற்றுத்) திரும்பிச் செல்லக்கூடியது’ என்று பொருள். பாடம்: 82. ‘அல்இன்ஃபித்தார்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (82:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுஜ்ஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘பொங்கி வழியும்’ என்பது பொருள். (82:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள பதத்தை) ‘ஃப அதலக்’ என்று அஃமஷ் (ரஹ்) அவர்களும், ஆஸிம் (ரஹ்) அவர்களும் ஓதினார்கள். ஆனால், ஹிஜாஸ்வாசிகள் அந்தப் பதத்தை அழுத்தல் குறியுடன் ‘ஃபஅத்தலக்’ என்று ஓதினர். இதன்படி, ‘(மனிதனே!) உன்னை உருவக் குறைகள் ஏதுமின்றி இறைவன் செம்மைப்படுத்தினான்’ என்று பொருளமையும். (அழுத்தல் குறியில்லாமல்) ஓதியவர்களின் வாய்பாட்டின்படி, ‘தான் நாடிய கோலத்தில் சிலரை அழகுடனும் சிலரை அழகில்லாமலும் சிலரை உயரமாகவும் சிலரைக் குட்டையாகவும் இறைவன் படைத்தான்’ என்று பொருள் வரும். பாடம்: 83. ‘அத்தத்ஃபீஃப்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (83:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பல் ரான’ எனும் சொல்லுக்கு, ‘அவர்களின் உள்ளங்களில் தீமைகள் ஆழமாகப் பதிந்துவிட்டன’ என்பது பொருள். (83:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுவ்விப’ எனும் சொல்லுக்கு ‘பிரதிபலன் கொடுக்கப்பட்டது’ என்பது பொருள். (83:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஹீக்’ எனும் சொல்லுக்கு ‘(தரமான) மது பானம்’ என்பது பொருள். (83:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகிதாமுஹு மிஸ்க்’ எனும் தொடருக்கு ‘அந்தச் சொர்க்கத்தின் மண் கஸ்தூரியாகும்’ என்பது பொருள். (83:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸ்னீம்’ எனும் சொல்லுக்கு ‘சொர்க்கவாசிகளின் பானங்களில் மேலானது’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (83:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்தஃப்பிஃப்’ எனும் சொல்லுக்கு ‘பிறருக்கு அளவையை நிறைவு செய்யாதோர்’ என்று பொருள். பாடம்: 1 (அது) அகிலத்தாரின் அதிபதிமுன் மக்களெல்லாரும் நிற்கும் நாள் (எனும் 83:6 ஆவது இறை வசனம்)
4938. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘(அது) அகிலத் தாரின் அதிபதிமுன் மக்களெல்லாரும் நிற்கும் நாள்” எனும் (83:6ஆவது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘‘அன்று தம் இரு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்” என்று கூறினார்கள்.2

அத்தியாயம் : 65
4939. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي يُونُسَ، حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ". قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، أَلَيْسَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ * فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا}. قَالَ " ذَاكَ الْعَرْضُ يُعْرَضُونَ، وَمَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ ".
பாடம்: 84. ‘அல்இன்ஷிகாக்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (84:10ஆவது வசனத்தின் கருத்துக்கு ஒத்த 69:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்தாபஹு பி ஷிமாலிஹி’ (தமது இடக் கரத்தில் வினைப் பதிவேடு கொடுக்கப்படுவார்) என்பதற்கு ‘தமது வினைப்பதிவேட்டை முதுகிற்குப் பின்னாலிருந்து (இடக் கையால்) வாங்குவார்’ என்பது பொருள். (84:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வசக’ எனும் சொல்லுக்கு ‘அது ஒன்றுதிரட்டி வைத்துக்கொண்டிருக்கும் உயிரினங்கள்மீது சத்தியமாக’ என்பது பொருள். (84:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ழன்ன அன் லய் யஹூர்’ எனும் வாக்கியத்திற்கு ‘(இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்’ என்று பொருள். பாடம்: 1 எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவர் எளிதான முறையில் விசா ரணைக்குள்ளாக்கப்படுவார் (எனும் 84:8ஆவது இறைவசனம்)
4939. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!

‘‘எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள்.2

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4940. حَدَّثَنَا سَعِيدُ بْنُ النَّضْرِ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، جَعْفَرُ بْنُ إِيَاسٍ عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ {لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ} حَالاً بَعْدَ حَالٍ، قَالَ هَذَا نَبِيُّكُمْ صلى الله عليه وسلم.
பாடம்: 2 நிச்சயமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள் (எனும் 84:19ஆவது இறை வசனம்)
4940. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(84:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபக்கன் அன் தபக்கின்’ எனும் சொற்றொடருக்கு ‘நிச்சயமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது’ என்பது பொருள்” என்று கூறிவிட்டு, ‘‘இந்த வசனம் உங்களுடைய நபி (ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 65
4941. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ فَجَعَلاَ يُقْرِئَانِنَا الْقُرْآنَ، ثُمَّ جَاءَ عَمَّارٌ وَبِلاَلٌ وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي عِشْرِينَ ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِينَةِ فَرِحُوا بِشَىْءٍ فَرَحَهُمْ بِهِ، حَتَّى رَأَيْتُ الْوَلاَئِدَ وَالصِّبْيَانَ يَقُولُونَ هَذَا رَسُولُ اللَّهِ قَدْ جَاءَ. فَمَا جَاءَ حَتَّى قَرَأْتُ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} فِي سُوَرٍ مِثْلِهَا.
பாடம்: 85. ‘அல்புரூஜ்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (85:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உக்தூத்’ எனும் சொல்லுக்கு ‘பூமியிலுள்ள அகழ், அல்லது குண்டம்’ என்பது பொருள். (85:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபத்தனூ’ எனும் சொல்லுக்கு ‘வேதனை செய்தார்கள்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு ‘அன்பு செலுத்துபவன்’ என்பது பொருள். (85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மேன்மை மிக்கவன்’ என்பது பொருள். பாடம்: 86. ‘அத்தாரிக்’ அத்தியாயம்1 (86:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாரிக்’ எனும் சொல், இரவில் தோன்றும் விண்மீன்களைக் குறிக்கும். இரவில் (திடீரென) வரும் ஒவ்வொன்றுக்கும் ‘தாரிக்’ என்பர். (86:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அந்நஜ்முஸ் ஸாகிப்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிரும் நட்சத்திரம்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (86:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாத்திர் ரஜ்இ’ எனும் சொல்லுக்கு ‘மழையைத் திரும்பத் தரும் மேகம்’ என்று பொருள். (86:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாத்திஸ் ஸத்இ’ எனும் சொல்லுக்கு ‘தாவரங்கள் முளைக்கின்றபோது பிளந்துவிடுகின்ற பூமி’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (86:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல கவ்லுன் ஃபஸ்லுன்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியமான சொல்’ என்று பொருள். (86:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மா அலைஹா ஹாஃபிழ்’ எனும் சொற்றொடருக்கு ‘பாதுகாப்பவன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை’ என்பது பொருள். (மூலத்திலுள்ள ‘லம்மா’ எனும் இடைச்சொல்லுக்கு ‘இல்லா’ எனும் இடைச் சொல்லின் பொருளாகும்.) பாடம்: 87. ‘அல்அஃலா’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (87:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கத்தர’ (அவனே விதியை நிர்ணயித்தான்) எனும் சொல்லுக்கு ‘மனிதனின் நற்பேறு மற்றும் துர்பேற்றை நிர்ணயித்தான்’ என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ஹதா’ (வழிகாட்டினான்) எனும் சொல்லுக்கு ‘கால்நடைகளுக்கு, அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல வழிகாட்டினான்’ என்று பொருள்.
4941. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்களில் (புலம்பெயர்ந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் பின் உமைர்’ (ரலி) அவர்களும் ‘இப்னு உம்மி மக்த்தூம்’ (ரலி) அவர்களும்தான்.

அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தரலானார் கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள்.

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ôல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவுக்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறி (மகிழலாயி)னர்.

நான், ‘‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வரவில்லை.2

அத்தியாயம் : 65
4942. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ عَبْدُ اللَّهِ بْنُ زَمْعَةَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ وَذَكَرَ النَّاقَةَ وَالَّذِي عَقَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " {إِذِ انْبَعَثَ أَشْقَاهَا} انْبَعَثَ لَهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ، مَنِيعٌ فِي رَهْطِهِ، مِثْلُ أَبِي زَمْعَةَ ". وَذَكَرَ النِّسَاءَ فَقَالَ " يَعْمِدُ أَحَدُكُمْ يَجْلِدُ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ، فَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ ". ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ وَقَالَ " لِمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ ". وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مِثْلُ أَبِي زَمْعَةَ عَمِّ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ".
பாடம்: 88. ‘அல்ஃகாஷியா’ அத்தியாயம்1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (88:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமிலத்துந் நாஸிபா’ (அந்நாளில் சில முகங்கள் கடுமையான சிரமத்தை மேற்கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்) எனும் சொற்றொடர், கிறித்தவர்களையே குறிக்கின்றது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (88:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அய்னின் ஆனியா’ (கொதிக்கும் நீரூற்று) எனும் சொல், அதன் கொதிநிலை உச்சகட்டத்தை அடைந்து, அதைக் குடிக்கும் தருணம் நெருங்கிவிட்ட நிலையிலுள்ள நீரைக் குறிக்கும். (இதைப் போன்றே,) 55:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹமீமின் ஆன்’ எனும் சொல்லுக்கும் ‘கொதிநிலையின் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்ட நீர்’ என்றே பொருள். (88:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாஃகியா’ (வீண் வார்த்தை ) எனும் சொல்லுக்கு ‘ஏச்சு’ என்பது பொருள். (88:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ளரீஉ’ எனும் சொல்லுக்கு ‘அஷ்ஷிப்ரிக்’ எனப்படும் ஒரு செடி என்று பொருள். இதை ஹிஜாஸ்வாசிகள் ‘அள்ளரீஉ’ என்று பெயரிட்டழைக்கின்றனர்; காய்ந்துவிட்டால் இதுவே நஞ்சாகும். (88:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி முசைத்திர்’ எனும் சொல்லுக்கு ‘நிர்ப்பந்திப்பவர்’ என்பது பொருள். (இது ‘ஸாத்’ உடனும் ‘சீன்’ உடனும்) ‘முஸைத்திர்’ என்றும் ‘முசைத்திர்’ என்றும் (இரு விதமாக) ஓதப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (88:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இயாபஹும்’ எனும் சொல்லுக்கு ‘(மரணத்துக்குப்பின்) அவர்கள் திரும்புவது’ என்று பொருள். பாடம்: 89. ‘அல்ஃபஜ்ர்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வித்ர்’ (ஒற்றை) எனும் சொல், அல்லாஹ்வைக் குறிக்கிறது. (89:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இரம ஃதாத்தில் இமாத்’ எனும் சொல், பண்டைய கால மக்களான ‘ஆத்’ கூட்டத்தாரைக் குறிக்கிறது. ‘அல்இமாத்’ எனும் சொல், (எந்த ஊரிலும் நிலையாகத் தங்காத) கூடாரவாசி(களான நாடோடி)களைக் குறிக்கும். (‘உயரமான தூண்களை உடையவர்கள்’ என்றும் இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், (ஆத் கூட்டத்தாரான) அவர்கள் எதன் மூலம் தண்டிக்கப்பட்டனரோ அந்தச் சோதனையைக் குறிக்கும். (89:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்லல் லம்மா’ எனும் சொல்லுக்கு ‘சுருட்டி விழுங்குகின்றீர்கள்’ என்பது பொருள். (89:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜம்மா’ எனும் சொல்லுக்கு ‘அளவு கடந்து’ என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், (89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஷ்ஷஃப்இ வல்வத்ர்’ என்பதன் விளக்கவுரையில், ‘‘இறைவன் படைத்த எல்லாப் பொருள்களும் இரட்டையாகும். (பூமியுடன்) வானமும் இரட்டைதான்; உயர்வான அல்லாஹ் ஒருவனே ஒற்றை” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், எல்லா விதமான வேதனைகளைக் குறிப்பதற்காகவும் அரபியர் பயன்படுத்தும் சொல்லாகும். இதில் சாட்டையும் அடங்கும். (89:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லபில் மிர்ஸாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவனிடம்தான் (அனைவரது) மீட்சியும் உள்ளது’ என்பது பொருள். (89:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தஹாள்ளூன்’ எனும் சொல்லுக்கு, ‘ஏழைக(ளின் உரிமைக)ளைப் பேணுவதில்லை’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ‘லா தஹுள்ளூன்’ எனும் சொல்லுக்கு ‘(ஏழைகளுக்கு) உணவளிக்குமாறு தூண்டுவதில்லை’ என்று பொருள். (89:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முத்மயின்னா’ எனும் சொல்லுக்கு ‘(அல்லாஹ் வழங்கும்) பிரதிபலனை நம்பக்கூடியது’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘யா அய்யத்துஹந் நஃப்சுல் முத்மயின்னா’ (அமைதியடைந்த ஆத்மாவே) எனும் இவ்வசனத்தின் கருத்தாவது: (இறைவன்) இந்த ஆத்மாவைக் கைப்பற்றும்போது அது இறைவனைக் குறித்து நிம்மதி கொள்கிறது. இறைவனும் அதைக் குறித்து நிம்மதி கொள்கிறான். அது இறைவனைக் குறித்து திருப்தியடைகிறது. இறைவனும் அதைக் குறித்து திருப்தி அடைகிறான். ஆகவே, அந்த ஆத்மாவைக் கைப்பற்ற உத்தரவிட்டு, அதைச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறான். மேலும், அதைத் தன்னுடைய (நல்ல) அடியார்களுடன் சேர்க்கவும் செய்கிறான். ஹசன் அல்பளி (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாபூ’ எனும் சொல்லுக்கு ‘குடைந்(து வசித்துக்கொண்டிருந்)தனர்’ என்பது பொருள். இச்சொல் ‘ஜீபல் கமீஸு’ (தைப்பதற்காகச் சட்டை வெட்டப்பட்டது) எனும் சொல்லிலிருந்து பிறந்தது. (இதன் எதிர்கால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) ‘யஜூபுல் ஃபலாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவன் காடுகளை வெட்டுவான்’ என்று பொருள். (89:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மு’ (சுருட்டி விழுங்குதல்) எனும் சொல்(லின் இறந்த கால வினைச்சொல்) இடம்பெற்றுள்ள ‘லமம்த்துஹு அஜ்மஅ’ எனும் வாக்கியத்திற்கு, ‘அதன் இறுதிவரை வந்துவிட்டேன் (ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காலியாக்கிவிட்டேன்)’ என்பது பொருள். பாடம்: 90. ‘அல்பலத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹாஃதல் பலத்’ (இந்த நகரம்) எனும் சொல், மக்காவையே குறிக்கின்றது. (90:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘வ அன்த்த ஹில்லுன்- நீர் அனுமதிக்கப்பட்டுள்ளீர்’ என்பதற்கு) ‘(இறைவனின் ஆணைப்படி இந்நகரில் போர் புரிவதில்) மற்ற மக்களின் மீதுள்ள குற்றம் உமக்கில்லை’ என்று பொருள். (90:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ வாலித்’ (பெற்றோர்மீதும்) எனும் சொல், (மனித குலத்தின் தந்தையான) ஆதம் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. (90:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுபத்’ எனும் சொல்லுக்கு ‘ஏராளமானது’ என்பது பொருள். (90:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வந்நஜ்தைனி’ (இரு வழிகள்) எனும் சொல், நன்மை மற்றும் தீமையைக் குறிக்கின்றது. (90:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்ஃகபா’ எனும் சொல்லுக்கு ‘பசி’ என்பது பொருள். (90:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்ரபா’ எனும் சொல்லுக்கு ‘மண்ணில் விழுந்து கிடப்பவன்’ என்பது பொருள். (90:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்த்தஹமல் அகபத்த’ எனும் வாக்கியத்திற்கு ‘இந்த உலகில் அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை’ என்பது பொருள். பிறகு ‘அகபா’ என்றால் என்னவென்று இறைவன் விவரிக்கின்றான்: ‘‘ ‘அகபா’ என்ன என்று நீர் அறிவீரா? அதுதான், ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது உறவினர்களில் பசித்த ஓர் அநாதைக்கோ, அல்லது மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கோ பசித்திருக்கும் ஒரு நாளில் ஆகாரமளிப்பதாகும்” (90:12-16). (90:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கபத்’ எனும் சொல்லுக்கு ‘கஷ்டம்’ என்பது பொருள். பாடம்: 91. ‘அஷ்ஷம்சு’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (91:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளுஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் ஒளி’ என்பது பொருள். (91:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா தலாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதைத் தொடர்ந்து வரும்போது’ என்று பொருள். (91:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வமா தஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதை விரித்தவன்மீதும் சத்தியமாக!’ என்று பொருள். (91:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸ்ஸாஹா’ (புதைத்துவிட்டான்) எனும் சொல்லுக்கு ‘பாவத்தில் செலுத்தினான்’ என்பது பொருள். (91:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப அல்ஹமஹா’ (அதற்கு உணர்த்தினான்)எனும் சொல்லுக்கு ‘பாவம் புண்ணியத்தை அதற்கு அறிவித்தான்’ என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (91:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி தஃக்வாஹா’ எனும் சொல்லுக்கு ‘தங்களுடைய பாவங்களின் காரணத்தால்’ என்று பொருள். (91:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வலா யகாஃபு உக்பாஹா’ எனும் வாக்கியத்திற்கு ‘யாரும் (தன்னைப்) பழிவாங்கிவிடுவார்களென்று இறைவன் பயப்படவில்லை’ என்று பொருள்.
4942. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத் துவத்திற்குச் சான்றாகப் பாறையிóருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்ற வனையும் நினைவுகூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களிலுள்ள நற்பேறற்ற ஒருவன் முன்வந்தபோது...” எனும் (91:12ஆவது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘‘அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்திற்காக (அதாவது அதைக் கொல்வதற்காக) முன்வந்தான்” என்று சொன்னார்கள்.2

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காகப்) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு (உடலிலிருந்து பிரியும் துர்)வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) ‘உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?” என்று கேட்டபடி அறிவுரை கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘‘(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அல்அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூஸம்ஆவைப் போல (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4943. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ دَخَلْتُ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ عَبْدِ اللَّهِ الشَّأْمَ فَسَمِعَ بِنَا أَبُو الدَّرْدَاءِ فَأَتَانَا فَقَالَ أَفِيكُمْ مَنْ يَقْرَأُ فَقُلْنَا نَعَمْ. قَالَ فَأَيُّكُمْ أَقْرَأُ فَأَشَارُوا إِلَىَّ فَقَالَ اقْرَأْ. فَقَرَأْتُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ أَنْتَ سَمِعْتَهَا مِنْ فِي صَاحِبِكَ قُلْتُ نَعَمْ. قَالَ وَأَنَا سَمِعْتُهَا مِنْ فِي النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَؤُلاَءِ يَأْبَوْنَ عَلَيْنَا.
பாடம்: 92. ‘அல்லைல்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (92:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பில்ஹுஸ்னா’ (நல்லறம்) எனும் சொல்லுக்கு ‘(நல்வழியில் செலவிட்ட தனது செல்வத்திற்கு) ‘அழகிய பிரதி’(பலனை இறைவன் வழங்குவான் என்று உறுதியாக அவன் நம்புவதில்லை)’ என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (92:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தரத்தா’ (வீழ்ந்தான்) எனும் சொல்லுக்கு ‘இறந்தான்’ என்பது பொருள். (இப்பொருளின்படி இவ்வசனத்திற்கு ‘அவன் இறக்கும் போது அவனது பொருள் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது’ என்று பொருள் வரும். இதற்கு ‘நரகத்தில் வீழும்போது’ என்றும் சிலர் பொருள் கொண்டுள்ளனர்.) (92:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலழ்ழா’ எனும் சொல்லுக்கு ‘கொழுந்து விட்டெரிந்தது’ என்று பொருள். (இதே சொல்லை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் ‘தத்தலழ்ழா’ (கொழுந்து விட்டெரியும்) என்று ஓதினார்கள். பாடம்: 1 ஒளிரும் பகலின் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறை வசனம்)
4943. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது, ‘‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?” என்று கேட்டார் கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள்.

உடனே நான், ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல்உன்ஸா” என்று (92ஆவது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன்.அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலி) அவர்களுடைய வாயிலிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன்.

‘‘(இப்படித்தான்) நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதல் முறையிலுள்ள, ‘‘வமா கலக்கஃத் தகர வல்உன்ஸா” என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றார்கள்)” என்று சொன்னார்கள்.2

அத்தியாயம் : 65
4944. حَدَّثَنَا عُمَرُ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَدِمَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ عَلَى أَبِي الدَّرْدَاءِ فَطَلَبَهُمْ فَوَجَدَهُمْ فَقَالَ أَيُّكُمْ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ قَالَ كُلُّنَا. قَالَ فَأَيُّكُمْ يَحْفَظُ وَأَشَارُوا إِلَى عَلْقَمَةَ. قَالَ كَيْفَ سَمِعْتَهُ يَقْرَأُ {وَاللَّيْلِ إِذَا يَغْشَى}. قَالَ عَلْقَمَةُ {وَالذَّكَرِ وَالأُنْثَى}. قَالَ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ هَكَذَا، وَهَؤُلاَءِ يُرِيدُونِي عَلَى أَنْ أَقْرَأَ {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثَى} وَاللَّهِ لاَ أُتَابِعُهُمْ.
பாடம்: 2 ஆணையும் பெண்ணையும் படைத்தவன்மீது சத்தியமாக! (எனும் 92:3ஆவது இறைவசனம்)
4944. இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்த) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா (ரலி) அவர்கள் தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘நாங்கள் அனைவரும்தான்” என்று பதிலளித்தோம். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘(இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல்முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள்.

தோழர்கள், அல்கமா (ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘‘வல்லைலி இஃதா யஃக்ஷா” எனும் வசனத்தில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள்.

அல்கமா (ரஹ்) அவர்கள், ‘வஃத்தகரி வல்உன்ஸா’ என்றே ஓதினார்கள் என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘‘நான் சாட்சியம் கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே நான் கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்), ‘வமா கலக்கஃத் தக்கர வல்உன்ஸா’ என்றே நான் ஓத வேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களை நான் பின்பற்றமாட்டேன்” என்று கூறினார்கள்.3

அத்தியாயம் : 65
4945. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَقِيعِ الْغَرْقَدِ فِي جَنَازَةٍ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ ". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ فَقَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} إِلَى قَوْلِهِ {لِلْعُسْرَى}
பாடம்: 3 ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்குவோம் ‘‘ எனும் (92:5-7) இறைவசனங்கள்
4945. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கத் (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.

உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத் தின்) வழியை நாம் எளிதாக்குவோம். எவர் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ் வையும்) பொருட்படுத்தாது, (இம் மார்க்கத்திலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கிவிடுகின்றாரோ, அவருக் குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்” எனும் (92:5-10) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.4

அத்தியாயம் : 65
4946. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ فَأَخَذَ عُودًا يَنْكُتُ فِي الأَرْضِ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الْجَنَّةِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ. قَالَ شُعْبَةُ وَحَدَّثَنِي بِهِ مَنْصُورٌ فَلَمْ أُنْكِرْهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ".
பாடம்: 4 ‘‘மேலும், யார் நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:6,7) இறைவசனங்கள் ...அபூஅப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்” என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள். பாடம்: 5 அவருக்கு நன்மைக்குரிய (சொர்க்கத்தின்) வழியை நாம் எளிதாக்கு வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்)
4946. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ அவருக்கு, எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4947. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ وَمَقْعَدُهُ مِنَ النَّارِ ". فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ قَالَ " لاَ، اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى} إِلَى قَوْلِهِ {فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى}
பாடம்: 6 ‘‘எவர் கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்துகொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகின்றாரோ அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம்” எனும் (92:8-10) வசனங்கள்
4947. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’ ஒன்றுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘‘சொர்க்கத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தமது இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.

உடனே நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டோம். (அதற்கு,) நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவருக்கு எளிய வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்” எனும் (92:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 65
4948. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ، فَأَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ، فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ وَمَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلاَّ كُتِبَ مَكَانُهَا مِنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَإِلاَّ قَدْ كُتِبَتْ شَقِيَّةً أَوْ سَعِيدَةً ". قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى أَهْلِ السَّعَادَةِ، وَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاءِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ. قَالَ " أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاءِ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ.
பாடம்: 7 ‘‘நல்லறங்களைப் பொய்யாக்கி விடுகிறாரோ” எனும் (92:9ஆவது) இறைவசனம்
4948. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள் மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல் ஃகர்கதி’ல் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள்.

பிறகு ‘‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறுள்ளதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள்.

ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பேறு பெற்றவரோ அவர் நற்பேறுள்ளவராக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) நற்பேறற்றவரோ அவர் நற்பேறற்றவர் களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதினார்கள்.

அத்தியாயம் : 65
4949. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي جَنَازَةٍ فَأَخَذَ شَيْئًا فَجَعَلَ يَنْكُتُ بِهِ الأَرْضَ فَقَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ وَمَقْعَدُهُ مِنَ الْجَنَّةِ ". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ قَالَ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ السَّعَادَةِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا مَنْ كَانَ مِنْ أَهْلِ الشَّقَاءِ فَيُيَسَّرُ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ ". ثُمَّ قَرَأَ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى} الآيَةَ.
பாடம்: 8 அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம் (எனும் 92:10ஆவது இறைவசனம்)
4949. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (‘பகீஉல் ஃகர்கத்’ மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், ‘‘தமது இருப்பிடம் நரகத்திலா அல்லது சொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொரு வருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகைசெய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழிகாணப்படும்” என்று கூறிவிட்டு, ‘‘எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ” எனும் (92:5-10) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5

அத்தியாயம் : 65
4950. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، قَالَ سَمِعْتُ جُنْدُبَ بْنَ سُفْيَانَ ـ رضى الله عنه ـ قَالَ اشْتَكَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَقُمْ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا، فَجَاءَتِ امْرَأَةٌ فَقَالَتْ يَا مُحَمَّدُ إِنِّي لأَرْجُو أَنْ يَكُونَ شَيْطَانُكَ قَدْ تَرَكَكَ، لَمْ أَرَهُ قَرِبَكَ مُنْذُ لَيْلَتَيْنِ أَوْ ثَلاَثًا. فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَالضُّحَى * وَاللَّيْلِ إِذَا سَجَى * مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى}
பாடம்: 93. ‘அள்ளுஹா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (93:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா சஜா’ எனும் சொல்லுக்கு ‘அது (பகலுக்குச்) சமமாகும்போது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (இச்சொல்லுக்கு) இருட்டிவிடும்போது, (உறக்கம் வந்து) அமைதியடையும்போது என்று பொருள். (93:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆயில்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தை குட்டிகள் உடையவர்’ (குடும்பஸ்தர்) என்பது பொருள். பாடம்: 1 (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை (எனும் 93:3ஆவது இறை வசனம்)
4950. ஜுன்துப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘இரண்டு இரவுகள்’ அல்லது ‘மூன்று இரவுகள்’ (இரவுத் தொழுகைக்காகக்கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, ‘‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) ‘இரண்டு இரவுகளாக’ அல்லது ‘மூன்று இரவுகளாக’ உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை” என்று கூறினாள்.2

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின்மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை” எனும் (93:1-3) வசனங்களை அருளினான்.3

அத்தியாயம் : 65