4503. حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلَ عَلَيْهِ الأَشْعَثُ وَهْوَ يَطْعَمُ فَقَالَ الْيَوْمُ عَاشُورَاءُ. فَقَالَ كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ، فَادْنُ فَكُلْ.
பாடம் : 24
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4503. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்தபோது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே!” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், “ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன்.
அத்தியாயம் : 65

4504. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ الْفَرِيضَةَ، وَتُرِكَ عَاشُورَاءُ، فَكَانَ مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ.
பாடம் : 24
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4504. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள்.
பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வழிபாடானது; ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்று (கூடுதல் வழிபாடாக) ஆகிவிட்டது.40

4505. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ {وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ }. قَالَ ابْنُ عَبَّاسٍ لَيْسَتْ بِمَنْسُوخَةٍ، هُوَ الشَّيْخُ الْكَبِيرُ وَالْمَرْأَةُ الْكَبِيرَةُ لاَ يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا، فَلْيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا.
பாடம் : 25
“(நோன்பு நோற்க வேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில்தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ள வேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகிறவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப் பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்” எனும் (2:184 ஆவது) இறைவசனம்
“அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப்பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் கைவிடலாம்” என்று “அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)' அவர்கள் கூறுகிறார்கள்.41
ஹசன் அல்பஸ்ரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42
(குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கர்ப்பிணிப் பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பைக் கைவிட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம்.
தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பைக் கைவிட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்.
அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்துவிட்ட பின்னால், “ஓராண்டு' அல்லது “ஈராண்டுகள்' ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக்கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.
(இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள “சிரமப்படுகிறவர்கள்' எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் “யுதீகூனஹு' என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை (குர்ஆன் ஓதல்முறை அறிஞர்களின் நிலை)யாகும்.43
4505. அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன்” (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பைக் கைவிட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, “இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்” என்று சொன்னார்கள்.

4506. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَرَأَ {فِدْيَةٌ طَعَامُ مَسَاكِينَ} قَالَ هِيَ مَنْسُوخَةٌ.
பாடம் : 26
உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத்தொடர்)
4506. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில், “அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” என்பதன் மூலத்தை) “ஃபித்யத்து தஆமி மஸாகீன' என்று (“ஏழைகள்' எனப் பன்மையாக) ஓதிக்காட்டி “இது, சட்டம் காலாவதியாகிவிட்ட வசனமாகும்” என்று கூறினார்கள்.

4507. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ سَلَمَةَ، قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا. مَاتَ بُكَيْرٌ قَبْلَ يَزِيدَ.
பாடம் : 26
உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத்தொடர்)
4507. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பெற்றபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (“உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின் அபீஉபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45

4508. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ. لَمَّا نَزَلَ صَوْمُ رَمَضَانَ كَانُوا لاَ يَقْرَبُونَ النِّسَاءَ رَمَضَانَ كُلَّهُ، وَكَانَ رِجَالٌ يَخُونُونَ أَنْفُسَهُمْ، فَأَنْزَلَ اللَّهُ {عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ}.
பாடம் : 27
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக் கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்க ளுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும்விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) உறவுகொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக்கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத்தொடர்)
4508. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஆகவே, அல்லாஹ், “(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்” எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4509. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيٍّ، قَالَ أَخَذَ عَدِيٌّ عِقَالاً أَبْيَضَ وَعِقَالاً أَسْوَدَ حَتَّى كَانَ بَعْضُ اللَّيْلِ نَظَرَ فَلَمْ يَسْتَبِينَا، فَلَمَّا أَصْبَحَ قَالَ يَا رَسُولَ اللَّهِ، جَعَلْتُ تَحْتَ وِسَادَتِي. قَالَ " إِنَّ وِسَادَكَ إِذًا لَعَرِيضٌ أَنْ كَانَ الْخَيْطُ الأَبْيَضُ وَالأَسْوَدُ تَحْتَ وِسَادَتِكَ ".
பாடம் : 28
“இன்னும் இருள் ரேகையிலிருந்து விடியலின் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர்இரவு (தொடங்கும்)வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர் களுடன் உறவு கொண்டுவிடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்பு களாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்குகிறான்” எனும் (2:187ஆவது) வசனத்தொடர்
“இஃதிகாஃப் இருப்பவர்' என்றால் “தங்கியிருப்பவர்' என்பது பொருள்.
4509. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இந்த 2:187ஆவது வசனம் அருளப் பெற்றதும்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக்கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப்பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்துகொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று,) “அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!)” என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், “வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.47

4510. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ أَهُمَا الْخَيْطَانِ قَالَ " إِنَّكَ لَعَرِيضُ الْقَفَا إِنْ أَبْصَرْتَ الْخَيْطَيْنِ ". ثُمَّ قَالَ " لاَ بَلْ هُوَ سَوَادُ اللَّيْلِ وَبَيَاضُ النَّهَارِ ".
பாடம் : 28
“இன்னும் இருள் ரேகையிலிருந்து விடியலின் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர்இரவு (தொடங்கும்)வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர் களுடன் உறவு கொண்டுவிடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்பு களாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்குகிறான்” எனும் (2:187ஆவது) வசனத்தொடர்
“இஃதிகாஃப் இருப்பவர்' என்றால் “தங்கியிருப்பவர்' என்பது பொருள்.
4510. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! கறுப் புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும்வரை” என்ற (2:187ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தானா?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானவர் (அறிவு குறைந்தவர்)தான் என்று கூறிவிட்டுப் பிறகு, “(அதன் பொருள்) அதுவன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்” என்று கூறினார்கள்.

4511. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ وَأُنْزِلَتْ {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ} وَلَمْ يُنْزَلْ {مِنَ الْفَجْرِ} وَكَانَ رِجَالٌ إِذَا أَرَادُوا الصَّوْمَ رَبَطَ أَحَدُهُمْ فِي رِجْلَيْهِ الْخَيْطَ الأَبْيَضَ وَالْخَيْطَ الأَسْوَدَ، وَلاَ يَزَالُ يَأْكُلُ حَتَّى يَتَبَيَّنَ لَهُ رُؤْيَتُهُمَا، فَأَنْزَلَ اللَّهُ بَعْدَهُ {مِنَ الْفَجْرِ} فَعَلِمُوا أَنَّمَا يَعْنِي اللَّيْلَ مِنَ النَّهَارِ.
பாடம் : 28
“இன்னும் இருள் ரேகையிலிருந்து விடியலின் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர்இரவு (தொடங்கும்)வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும்போது (உங்கள் மனைவியரான) அவர் களுடன் உறவு கொண்டுவிடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்பு களாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்குகிறான்” எனும் (2:187ஆவது) வசனத்தொடர்
“இஃதிகாஃப் இருப்பவர்' என்றால் “தங்கியிருப்பவர்' என்பது பொருள்.
4511. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆரம்பத்தில்) “வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” எனும் (2:187ஆவது வசனத்தின்) தொடர் “விடியóன்' (“மினல் ஃபஜ்ர்') எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் நோன்பு நோற்க நாடினால், தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை உண்டுகொண்டிருப்பார்கள்.
ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், “மினல் ஃபஜ்ர்' (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.48

4512. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانُوا إِذَا أَحْرَمُوا فِي الْجَاهِلِيَّةِ أَتَوُا الْبَيْتَ مِنْ ظَهْرِهِ، فَأَنْزَلَ اللَّهُ {وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا}
பாடம் : 29
நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின்வாயில் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தான் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன்வாயில்கள் வழியே நுழையுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றியாளர்கள் ஆகலாம் (எனும் 2:189ஆவது வசனத்தொடர்)
4512. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாயில் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாயில் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அல்லாஹ், “நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின்வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தான் புண்ணிய வான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன்வாயில்கள் வழியே நுழையுங்கள்” எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49

4513. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَتَاهُ رَجُلاَنِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالاَ إِنَّ النَّاسَ قَدْ ضُيِّعُوا، وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ فَقَالَ يَمْنَعُنِي أَنَّ اللَّهَ حَرَّمَ دَمَ أَخِي. فَقَالاَ أَلَمْ يَقُلِ اللَّهُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ } فَقَالَ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ، وَكَانَ الدِّينُ لِلَّهِ، وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ، وَيَكُونَ الدِّينُ لِغَيْرِ اللَّهِ.
பாடம் : 30
கலகம் ஒழிந்து, அல்லாஹ்வின் மார்க்கம் மட்டுமே நிலைபெறும்வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக்கொண்டால் அநீதி யிழைப்போருடன் தவிர (மற்றவர்களுடன்) போர் புரிதல் கூடாது (எனும் 2:193ஆவது இறைவசனம்)
4513. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இரு மனிதர்கள் வந்து, “மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக் கப்படுகிறார்கள். தாங்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வரும் நபி (ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?” என்று கேட்டனர்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்பட விடாமல்) என்னைத் தடுக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும், “கலகம் ஒழிந்து, அல்லாஹ்வின் மார்க்கம் மட்டுமே நிலைபெறும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்' என்று (2:193ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “(ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில்) குழப்பம் நீங்கும்வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்” என்றார்கள்.50

4514. وَزَادَ عُثْمَانُ بْنُ صَالِحٍ عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي فُلاَنٌ، وَحَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو الْمَعَافِرِيِّ، أَنَّ بُكَيْرَ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ عَنْ نَافِعٍ، أَنَّ رَجُلاً، أَتَى ابْنَ عُمَرَ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ مَا حَمَلَكَ عَلَى أَنْ تَحُجَّ عَامًا وَتَعْتَمِرَ عَامًا، وَتَتْرُكَ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَقَدْ عَلِمْتَ مَا رَغَّبَ اللَّهُ فِيهِ قَالَ يَا ابْنَ أَخِي بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ إِيمَانٍ بِاللَّهِ وَرَسُولِهِ، وَالصَّلاَةِ الْخَمْسِ، وَصِيَامِ رَمَضَانَ، وَأَدَاءِ الزَّكَاةِ، وَحَجِّ الْبَيْتِ. قَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا} {إِلَى أَمْرِ اللَّهِ} {قَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} قَالَ فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ الإِسْلاَمُ قَلِيلاً، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ إِمَّا قَتَلُوهُ، وَإِمَّا يُعَذِّبُوهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ فَلَمْ تَكُنْ فِتْنَةٌ.
பாடம் : 30
கலகம் ஒழிந்து, அல்லாஹ்வின் மார்க்கம் மட்டுமே நிலைபெறும்வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக்கொண்டால் அநீதி யிழைப்போருடன் தவிர (மற்றவர்களுடன்) போர் புரிதல் கூடாது (எனும் 2:193ஆவது இறைவசனம்)
4514. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம், (காரிஜிய்யா பிரிவைச் சேர்ந்த) ஒருவர் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு “ஹஜ்' செய்கிறீர்கள்; மறு ஆண்டு உம்ரா செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கைவிட்டுவிடுகிறீர்களே, ஏன்? அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்!” என்று கேட்டார்.
(அதற்கு) இப்னு உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்கள்மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது. 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு.4. (பொருளாதார வசதியுள்ளோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான கஅபாவில் ஹஜ் செய்தல்” என்றார்கள்.
அந்த மனிதர், “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தனது வேதத்தில் “இறைநம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் வரும்வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள்' என்றும் (49:9), “கலகம் ஒழியும்வரை அவர்களுடன் போரிடுங்கள்' என்றும் (2:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், “(நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின்படி) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் (எண்ணிக்கையில்) குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட)தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட) ஒருவர் தமது மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்துவர். முடிவில், இஸ்லாம் (எண்ணிக்கையில்) அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆனபோது குழப்பம் ஏதும் இருக்கவில்லை” என்றார்கள்.

4515. قَالَ فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ قَالَ أَمَّا عُثْمَانُ فَكَأَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا أَنْتُمْ فَكَرِهْتُمْ أَنْ تَعْفُوا عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَخَتَنُهُ. وَأَشَارَ بِيَدِهِ فَقَالَ هَذَا بَيْتُهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 30
கலகம் ஒழிந்து, அல்லாஹ்வின் மார்க்கம் மட்டுமே நிலைபெறும்வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக்கொண்டால் அநீதி யிழைப்போருடன் தவிர (மற்றவர்களுடன்) போர் புரிதல் கூடாது (எனும் 2:193ஆவது இறைவசனம்)
4515. அந்த மனிதர், “அலீ (ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான் (ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள், “உஸ்மான் (ரலி) அவர்களை (அன்னார் உஹுத் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அவரை அல்லாஹ் மன்னிப்பதை நீங்கள்தான் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி (ஸல்) அவர்களின் மருமகனுமாவார்” என்று கூறியவாறே, “(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கின்றீர்களே இதுதான் அலீ (ரலி) அவர்களின் வீடாகும்” என்று தமது கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

4516. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، {وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ} قَالَ نَزَلَتْ فِي النَّفَقَةِ.
பாடம் : 31
“மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர்களை நேசிக்கின்றான்” எனும் (2:195ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தஹ்லுகா' (அழிவு) எனும் சொல்லும் “ஹலாக்' எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் “அழிவு' எனும் பொருள் கொண்ட வேர்ச்சொற்களேயாகும்.)
4516. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51

4517. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ، قَالَ قَعَدْتُ إِلَى كَعْبِ بْنِ عُجْرَةَ فِي هَذَا الْمَسْجِدِ ـ يَعْنِي مَسْجِدَ الْكُوفَةِ ـ فَسَأَلْتُهُ عَنْ فِدْيَةٌ مِنْ صِيَامٍ فَقَالَ حُمِلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ " مَا كُنْتُ أُرَى أَنَّ الْجَهْدَ قَدْ بَلَغَ بِكَ هَذَا، أَمَا تَجِدُ شَاةً ". قُلْتُ لاَ. قَالَ " صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، لِكُلِّ مِسْكِينٍ نِصْفُ صَاعٍ مِنْ طَعَامٍ، وَاحْلِقْ رَأْسَكَ ". فَنَزَلَتْ فِيَّ خَاصَّةً وَهْىَ لَكُمْ عَامَّةً.
பாடம் : 32
ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலைமுடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலி கொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத்தொடர்)
4517. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இந்தப் பள்ளிவாசலில் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக்கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், “உமக்கு இந்த அளவுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “உம்மிடம் ஆடு ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்கள்.
நான், “இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை “ஸாஉ' உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று சொன்னார்கள்.52

4518. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُنْزِلَتْ آيَةُ الْمُتْعَةِ فِي كِتَابِ اللَّهِ فَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَمْ يُنْزَلْ قُرْآنٌ يُحَرِّمُهُ، وَلَمْ يَنْهَ عَنْهَا حَتَّى مَاتَ قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ.
பாடம் : 33
எவரேனும் “உம்ரா'(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப் பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமையான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத்தொடர்)53
4518. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“தமத்துஉ' (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பெறவில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும்வரை அதைத் தடை செய்யவில்லை.
(ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.
முஹம்மத் (பின் இஸ்மாயீல் அல்புகாரீ) கூறுகிறேன்: “அவர் உமர் (ரலி) அவர்கள்தான்” என்று சொல்லப்படு கின்றது.54

4519. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَتْ عُكَاظٌ وَمَجَنَّةُ وَذُو الْمَجَازِ أَسْوَاقًا فِي الْجَاهِلِيَّةِ فَتَأَثَّمُوا أَنْ يَتَّجِرُوا فِي الْمَوَاسِمِ فَنَزَلَتْ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ} فِي مَوَاسِمِ الْحَجِّ.
பாடம் : 34
(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறை வனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக்கொள்வது உங்கள்மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத்தொடர்)
4519. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல் மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச்செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், “உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமாகாது” எனும் (2:198 ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55

4520. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ، وَكَانُوا يُسَمَّوْنَ الْحُمْسَ، وَكَانَ سَائِرُ الْعَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ، ثُمَّ يَقِفَ بِهَا ثُمَّ يُفِيضَ مِنْهَا، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ}
பாடம் : 35
பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (“அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத்தொடர்)
4520. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் “கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்' எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபியர் அனைவருமே அரஃபாத் தில் தங்கிவந்தார்கள்.
இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான், “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்” எனும் (2:199ஆவது) இறைவசனமாகும்.56

4521. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ يَطَوَّفُ الرَّجُلُ بِالْبَيْتِ مَا كَانَ حَلاَلاً حَتَّى يُهِلَّ بِالْحَجِّ، فَإِذَا رَكِبَ إِلَى عَرَفَةَ فَمَنْ تَيَسَّرَ لَهُ هَدِيَّةٌ مِنَ الإِبِلِ أَوِ الْبَقَرِ أَوِ الْغَنَمِ، مَا تَيَسَّرَ لَهُ مِنْ ذَلِكَ أَىَّ ذَلِكَ شَاءَ، غَيْرَ إِنْ لَمْ يَتَيَسَّرْ لَهُ فَعَلَيْهِ ثَلاَثَةُ أَيَّامٍ فِي الْحَجِّ، وَذَلِكَ قَبْلَ يَوْمِ عَرَفَةَ، فَإِنْ كَانَ آخِرُ يَوْمٍ مِنَ الأَيَّامِ الثَّلاَثَةِ يَوْمَ عَرَفَةَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ، ثُمَّ لِيَنْطَلِقْ حَتَّى يَقِفَ بِعَرَفَاتٍ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى أَنْ يَكُونَ الظَّلاَمُ، ثُمَّ لِيَدْفَعُوا مِنْ عَرَفَاتٍ إِذَا أَفَاضُوا مِنْهَا حَتَّى يَبْلُغُوا جَمْعًا الَّذِي يُتَبَرَّرُ فِيهِ، ثُمَّ لِيَذْكُرُوا اللَّهَ كَثِيرًا، أَوْ أَكْثِرُوا التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ قَبْلَ أَنْ تُصْبِحُوا ثُمَّ أَفِيضُوا، فَإِنَّ النَّاسَ كَانُوا يُفِيضُونَ، وَقَالَ اللَّهُ تَعَالَى {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} حَتَّى تَرْمُوا الْجَمْرَةَ.
பாடம் : 35
பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (“அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத்தொடர்)
4521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது “தமத்துஉ' ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுதலாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்க வேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானி பிராணி கிடைக்கவில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்துவிட்டாலும் பரவாயில்லை.
பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ர் தொழுகையிலிருந்து இரவின் இருள் படரும்வரை தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல்லாரும் புறப்பட்டு திரும்பிச் செல்லும்போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்தóஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும்வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லா இலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்.
பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்துதான் திரும்பிக்கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (2:199)
(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறிந்தபிறகு (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.)

4522. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ".
பாடம் : 36
(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவுகூரும் மக்கள் உள்ள னர்.) அவர்களில் சிலர், “எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள் வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்)
4522. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?” எனப் பிரார்த்தித்துவந்தார்கள்.