4483. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ اللَّهَ فِي ثَلاَثٍ ـ أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلاَثٍ ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ قَالَ وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بَعْضَ نِسَائِهِ، فَدَخَلْتُ عَلَيْهِنَّ قُلْتُ إِنِ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم خَيْرًا مِنْكُنَّ. حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ، قَالَتْ يَا عُمَرُ، أَمَا فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا يَعِظُ نِسَاءَهُ حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ فَأَنْزَلَ اللَّهُ {عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ} الآيَةَ.
وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعْتُ أَنَسًا عَنْ عُمَرَ.
பாடம் : 9
இந்த (கஅபா எனும்) ஆலயத்தை ஒன்றுகூடும் இடமாகவும் அபய பூமியாகவும் மக்களுக்கு நாம் ஆக்கியதை எண்ணிப்பாருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்” எனும் (2:125ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்தில் “ஒன்று கூடும் இடம்' எனும் பொருளைக் குறிக்கும்) “மஸாபத்தன்' எனும் சொல்லுக்கு “மீளுமிடம்' என்பது பொருள். (அதன் எதிர்கால வினைச்சொல்லான) “யஸூபூன' எனும் சொல்லுக்கு “மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள்' என்று பொருள்.21
4483. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது “என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்'. நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)
மேலும் நான், (அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றனர். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன். அவ்வாறே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர்மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, “நீங்கள் (நபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர் களை (உங்களுக்கு)ப் பதிலாகத் தருவான்” என்று சொன்னேன்.
இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, “உமரே! தம்முடைய துணைவியருக்கு அறிவுரை கூற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், “இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்குப் பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்க லாம்” எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65

4484. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ بَنَوُا الْكَعْبَةَ وَاقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ قَالَ " لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ ". فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ، إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ.
பாடம் : 10
“மேலும், (நபியே! நீர் நினைவுகூருவீராக!) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக்கொண்டிருந்த பொழுது, “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவாய்' (எனப் பிரார்த்தித்தார்கள்)” எனும் (2:127ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்கவாஇத்' (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: “காஇதா' ஆகும். (மாதவிடாய் நின்றுபோன முதிய) பெண்களைக் குறிக்கின்ற “அல்கவாஇத்' எனும் சொல்லின் ஒருமை, “காஇத்' என்பதாகும்.
4484. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்)கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?” எனக் கேட்டேன். “உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23

4485. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لأَهْلِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلاَ تُكَذِّبُوهُمْ، وَقُولُوا {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} الآيَةَ".
பாடம் : 11
(இறைநம்பிக்கை கொண்டோரே!) “அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ்வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்)மீது அருளப்பெற்றதையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டவற்றையும், (இதர) அனைத்து இறைத்தூதர்களுக்கும் அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர்களாக இருக்கின்றோம்” என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்)
4485. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ (எபிரேயு) மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்துவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.
(மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து அருளப்பெற்றவற்றையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்” (2:136) என்று கூறினார்கள்.24

4486. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، سَمِعَ زُهَيْرًا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى إِلَى بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَإِنَّهُ صَلَّى ـ أَوْ صَلاَّهَا ـ صَلاَةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ كَانَ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ الْمَسْجِدِ وَهُمْ رَاكِعُونَ قَالَ أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَ الَّذِي مَاتَ عَلَى الْقِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ قِبَلَ الْبَيْتِ رِجَالٌ قُتِلُوا لَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ }
பாடம் : 12
மனிதர்களில் சில மதியீனர்கள், “ஏற்கனவே (முஸ்லிம்கள் முன் னோக்கித் தொழுதுகொண்டு) இருந்த அவர்களது “கிப்லா'விó ருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?” என்று வினவு வார்கள். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுபவரை அவன் நல்வழியில் செலுத்துவான்” என்று (நபியே!) கூறுக! (எனும் 2:142ஆவது இறைவசனம்)
4486. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு மாதங்கள்' அல்லது “பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறை யில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும்படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளி னான்.) உடனே அவர்கள் அஸ்ர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர்.
பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் “ருகூஉ' செய்துகொண்டிருந்தனர். அவர், “அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்” என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.
(புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவதென்பது எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது, “அல்லாஹ், உங்கள் இறைநம்பிக்கையைப் பாழ்படுத்து பவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் பரிவு மிகுந்தோனும் கருணையுடையோனுமாவான்” எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

4487. حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، وَأَبُو أُسَامَةَ ـ وَاللَّفْظُ لِجَرِيرٍ ـ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَقَالَ أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُدْعَى نُوحٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَبِّ. فَيَقُولُ هَلْ بَلَّغْتَ فَيَقُولُ نَعَمْ. فَيُقَالُ لأُمَّتِهِ هَلْ بَلَّغَكُمْ فَيَقُولُونَ مَا أَتَانَا مِنْ نَذِيرٍ. فَيَقُولُ مَنْ يَشْهَدُ لَكَ فَيَقُولُ مُحَمَّدٌ وَأُمَّتُهُ. فَتَشْهَدُونَ أَنَّهُ قَدْ بَلَّغَ ". {وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} فَذَلِكَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} وَالْوَسَطُ الْعَدْلُ.
பாடம் : 13
இவ்வாறே, உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கி னோம். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவராக வும் திகழ வேண்டும் என்பதே இதற்குக் காரணம் (எனும் 2:143ஆவது வசனத்தொடர்)
4487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், “இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “(நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று இறைவன் கேட்பான். அவர்கள், “ஆம் (எடுத்துரைத்துவிட்டேன்)” என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை” என்று சொல்வார்கள்.
அப்போது அல்லாஹ், “உங்களுக்குச் சாட்சியம் சொல்கின்றவர் யார்?” என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், “முஹம்மதும் அவருடைய சமுதாயத்தாரும்” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், “நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்” என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பார்.
இதையே, “இவ்வாறே, உங்களை நாம் நடுநிலைச் சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று பகர்பவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது.
“நடுநிலையான' (வசத்) என்பதற்கு “நீதியான' என்பது பொருள்.26
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4488. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بَيْنَا النَّاسُ يُصَلُّونَ الصُّبْحَ فِي مَسْجِدِ قُبَاءٍ إِذْ جَاءَ جَاءٍ فَقَالَ أَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قُرْآنًا أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا. فَتَوَجَّهُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 14
இறைத்தூதரைப் பின்பற்றுகின்ற வர் யார்; தம் குதிகால் புறமாக (வந்த வழியே) திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி (பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நல்வழியில் செலுத்தியவர்களுக் கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்களது இறை நம்பிக்கையைப் பாழ்படுத்துபவன் அல்லன். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் பரிவு மிகுந்தோனும் கருணையுடையோனும் ஆவான் (எனும் 2:143ஆவது வசனத்தொடர்)
4488. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் “சுப்ஹ்' தொழுகையை “மஸ்ஜிது குபா'வில் தொழுதுகொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒரு வசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்” என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.27

4489. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَبْقَ مِمَّنْ صَلَّى الْقِبْلَتَيْنِ غَيْرِي.
பாடம் : 15
(நபியே!) உமது முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீர் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உம்மை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புவீராக! மேலும், நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பெற்றவர்கள் அது தங்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். அவர்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை (எனும் 2:144ஆவது இறைவசனம்)
4489. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

4490. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بَيْنَمَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ أَلاَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا بِوُجُوهِهِمْ إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 16
(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீர் எத்தனைச் சான்றுகளைக் கொண்டுவந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவரல்லர். அவர்களில் ஒரு பிரிவினர் மற்றப் பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோராயும் இல்லை. எனவே, உமக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் மனவிருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயம் நீரும் அநீதியாளர்களில் ஒருவராகி விடுவீர் (எனும் 2:145ஆவது இறைவசனம்)
4490. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில் இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.
அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.29

4491. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 17
எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கிறோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை (இனம் கண்டு) அறிந்துகொள்வதைப் போல் அதை/ அவரை (கஅபாவை அல்லது நபி முஹம்மதை) நன்கு அறிவார்கள். எனினும், அவர் களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனிடமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்)
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் சுப்ஹ் தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்” என்று சொன்னார்.
அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமடித்து கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.

4492. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ ـ أَوْ سَبْعَةَ عَشَرَ ـ شَهْرًا، ثُمَّ صَرَفَهُ نَحْوَ الْقِبْلَةِ.
பாடம் : 18
ஒவ்வொரு (மதத்த)வருக்கும் அவரவர் முன்னோக்கக்கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டிக் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்)30
4492. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு' அல்லது “பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

4493. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَيْنَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ أُنْزِلَ اللَّيْلَةَ قُرْآنٌ، فَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَاسْتَدَارُوا كَهَيْئَتِهِمْ، فَتَوَجَّهُوا إِلَى الْكَعْبَةِ وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ.
பாடம் : 19
மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை (யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்)
இந்த வசனத்தில் (“நோக்கி' எனும் பொருளைத் தரும்) “ஷத்ர்' எனும் சொல் “திசையில்' எனும் பொருளைச் சுட்டும்.
4493. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் “குபா'வில் “சுப்ஹ்' தொழுகை யிலிருந்தபோது, ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு (நபி (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமடித்து கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (அதற்குமுன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

4494. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْقِبْلَةِ.
பாடம் : 20
மேலும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் பக்கமே திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத்தொடர்)33
4494. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றுள்ளது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.
அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

4495. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ قُلْتُ لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} فَمَا أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. فَقَالَتْ عَائِشَةُ كَلاَّ لَوْ كَانَتْ كَمَا تَقُولُ كَانَتْ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا، إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ، كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا}
பாடம் 21
நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் “ஹஜ்' அல்லது “உம்ரா' (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர்மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக நன்கறிந்தவனுமாவான்” எனும் (2:158ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “ஷஆயிர்' (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு “அடையாளங்கள்' என்று பொருள். அதன் ஒருமை “ஷஈரா' ஆகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“ஸஃப்வான்' எனும் சொல்லுக்கு “கற்கள்' என்பது பொருள்.
எதையும் விளைவிக்காத வழுக்குப் பாறைகளும் “ஸஃப்வான்' எனப்படுவதுண்டு. இதன் ஒருமை “ஸஃப்வானா' என்பதாகும். இதுவும் “ஸஃபா'வும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) “ஸஃபா' என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
4495. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவது குற்றமில்லை” என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன்.
அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் “அவ்விரண்டையும் சுற்றிவராம லிருப்பது குற்றமில்லை' என்றிருந்தால்தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் தாங்கள் வழிபட்டுவந்த “முஷல்லல்' எனும் குன்றில் உள்ள) “மனாத்' எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) “குதைத்' எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள்.
எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், “நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை” என்ற (2:158) இந்த வசனத்தை அருளி னான்.34

4496. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ الصَّفَا، وَالْمَرْوَةِ،. فَقَالَ كُنَّا نَرَى أَنَّهُمَا مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ أَمْسَكْنَا عَنْهُمَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ } إِلَى قَوْلِهِ {أَنْ يَطَّوَّفَ بِهِمَا}.
பாடம் 21
நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் “ஹஜ்' அல்லது “உம்ரா' (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர்மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக நன்கறிந்தவனுமாவான்” எனும் (2:158ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “ஷஆயிர்' (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு “அடையாளங்கள்' என்று பொருள். அதன் ஒருமை “ஷஈரா' ஆகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“ஸஃப்வான்' எனும் சொல்லுக்கு “கற்கள்' என்பது பொருள்.
எதையும் விளைவிக்காத வழுக்குப் பாறைகளும் “ஸஃப்வான்' எனப்படுவதுண்டு. இதன் ஒருமை “ஸஃப்வானா' என்பதாகும். இதுவும் “ஸஃபா'வும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) “ஸஃபா' என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
4496. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையில் ஓடுவதை நிறுத்திவிட்டோம்.
அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமேதுமில்லை' எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான்” என்று பதிலளித்தார்கள்.35

4497. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَةً وَقُلْتُ أُخْرَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ ". وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ وَهْوَ لاَ يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الْجَنَّةَ.
பாடம் : 22
“அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர்” எனும் (2:165ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அன்தாத்' (இணைகள்) எனும் சொல்லுக்கு “நேர் எதிரானவை' (அள்தாத்) என்பது பொருள். இதன் ஒருமை “நித்து' ஆகும்.
4497. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்” என்று கூறினார்கள். “(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று நான் சொன்னேன்.36

4498. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ الْقِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ {كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنْثَى بِالأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ} فَالْعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي الْعَمْدِ {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ، {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ} وَرَحْمَةٌ مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ. {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ.
பாடம் : 23
இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4498. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஸ்ரவேலர்களிடையே பழிக்குப் பழிவாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடைமுறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்தாருக்கு, “கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. சுதந்திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவும் (பழிவாங்கப் படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) செலுத்த வேண்டும்” என்று கூறுகிறான்.
“மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது திட்டமிட்டுச் செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதனைக் கொலையாளி செலுத்த வேண்டும்.
“இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையும் ஆகும்.” அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள்மீது கடமையாக்கப்பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் எல்லை மீறுகின்றானோ அவனுக்கு-அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு- வதைக்கும் வேதனையே உண்டு. (2:178)
இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4499. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ".
பாடம் : 23
இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4499. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.37

4500. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ السَّهْمِيَّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ الرُّبَيِّعَ، عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا الْعَفْوَ فَأَبَوْا، فَعَرَضُوا الأَرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَوْا إِلاَّ الْقِصَاصَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ يَا رَسُولَ اللَّهِ، أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ". فَرَضِيَ الْقَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ".
பாடம் : 23
இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4500. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரி (அத்தை) “ருபய்யிஉ' (பின்த் அந்நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட்டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம்மன்னித்துவிடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன்வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச்சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர்.
அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) “ருபய்யிஉ'வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அவரது முன்பல் உடைக்கப்படக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்” என்று சொன்னார்கள்.
அதற்குள் அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகின்றான்” என்று கூறினார்கள்.38

4501. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ عَاشُورَاءُ يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ " مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ ".
பாடம் : 24
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4501. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், “(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம்” என்று சொன்னார்கள்.

4502. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَ عَاشُورَاءُ يُصَامُ قَبْلَ رَمَضَانَ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ " مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ ".
பாடம் : 24
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4502. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு “ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39