973. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்கவோ, பூண்டின் (துர்)வாடையால் நமக்குத் தொல்லை தரவோ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5

974. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடைசெய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், "துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன" என்று கூறினார்கள்.

975. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் "நம்மிடமிருந்து" அல்லது "நமது பள்ளிவாசலிலிருந்து" விலகியிருக்கட்டும்; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். (அவற்றைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தம் தோழர்களில் ஒருவருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாமலிருந்ததைக் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாட வேண்டியதுள்ளது"என்று கூறினார்கள்.

976. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றோர் தடவை "வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்"- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்" என்று கூறினார்கள்.

977. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலில் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.

978. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டு (அதன் கோட்டையைக்கூட) நாங்கள் கடந்திருக்க வில்லை. (அதற்குள் வழியிலுள்ள) அந்த வெள்ளைப் பூண்டு பயிரி(டப்பட்டிருந்த வயலி)ல் நபித்தோழர்களான நாங்கள் புகுந்தோம். அப்போது மக்கள் பசியுடன் இருந்தனர்.
எனவே, நாங்கள் வெள்ளைப் பூண்டை நன்கு சாப்பிட்டோம். பிறகு நாங்கள் தொழும் இடத்துக்குச் சென்றபோது (எங்களிடமிருந்து வெள்ளைப் பூண்டின்) நெடி வீசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது, "இந்த துர்வாடை வீசும் செடியிலிருந்து எதையேனும் சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நம்மருகே நெருங்க வேண்டாம்" என்று கூறினார்கள். மக்கள் "வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது" என்று கூறினர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "மக்களே! அல்லாஹ் எனக்கு அனுமதித்த ஒன்றைத் தடை செய்யும் உரிமை எனக்கு இல்லை. இருப்பினும், அந்தச் செடியின் துர்வாடையை நான் வெறுக்கிறேன்" என்று கூறினார்கள்.

979. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்துசென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயங்களை (பறித்து)ச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிட வில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.

980. மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
)கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். மேலும், அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் (இன்று) ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப் போன்று (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் நான் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, தன் (அடியார்களின்) ஆட்சித் தலைமையையோ, நபி (ஸல்) அவர்களை எதனுடன் அனுப்பிவைத்தானோ அதையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அத்தகைய இந்த ஆறுபேர் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.
சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை இஸ்லாத்திற்காக எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன். அவர்கள் இவ்வாறு செய்(வதை மார்க்க அங்கீகாரமுடைய ஒரு செயலாக நினைத்)தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர்.
நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள்.
நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்.
பின்னர் (தொடர்ந்து) கூறினார்கள்:
"இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த ("ஃபய்உ" எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர்களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்(.
மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமே (அவை இரண்டுமாகும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை "அல்பகீஉ" பொது மையவாடிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக்கொள்ளட்டும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 19 காணாமற்போன பொருட்களைப் பள்ளிவாசலுக்குள் தேடுவதற்கு வந்துள்ள தடையும் அவ்வாறு தேடிக்கொண்டிருப்பவரின் குரலைக் கேட்பவர் கூற வேண்டியதும்.
981. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!" என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

982. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
காணாமற்போன (தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒரு
மனிதர், "(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற்போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று கூறினார்கள்.

983. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து "(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று சொன்னார்கள்.
- புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுத பின் ஒரு கிராமவாசி வந்து பள்ளி வாசலின் கதவு வழியே தமது தலையை நீட்டினார்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

பாடம் : 20 தொழுகையில் மறதி ஏற்படுவதும் அதற்கு(ப் பரிகாரமாக) சஜ்தாச் செய்வதும்.
984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

985. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட்டால் அதன் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி "இதை இதையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுகிறான்; அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.

986. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன் "மேலும், அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ள மனிதருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான். அவர் இதுவரை நினைத்துப்பார்த்திராத பல அலுவல்களை அவருக்கு அவன் நினைவுபடுத்துகிறான்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

987. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத்கள் கொண்ட) ஒரு தொழுகையில் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து முடித்த பின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த அமர்விலேயே சலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள்.

988. பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அசதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து விட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவின்போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு சஜ்தாக்கள் செய்தனர். (முதல்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து விட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவின்போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு சஜ்தாக்கள் செய்தனர். (முதல்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
989. அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்த பின் அமருவதை விரும்புவார்கள். ஆனால், (ஒரு நாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதற்கு முன் (முதல் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.

990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்றே இடம் பெற்றுள்ளது.

991. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். மக்கள் "நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி, "ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நான் எதையேனும் மறந்து விட்டால் எனக்கு (அதை) நினைவுபடுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவு செய்து,அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

992. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்" என்றும், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யோசித்து முடிவு செய்யட்டும்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
மன்ஸூர் (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் "அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்"என்று இடம்பெற்றுள்ளது.

அதில் மன்ஸூர் (ரஹ்) அவர்கள், "அவர் யோசித்து முடிவு செய்யட்டும்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வரும் மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில் சரியானதற்கு மிக நெருக்கமானதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம் பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பில் "இதுதான் சரி எனக்கருதப்படுவதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம்பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பில் "சரியானதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம் பெற்றுள்ளது.