2458. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், முஸ்தலிஃபாவில் "அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15

பாடம் : 46 அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறல்.
2459. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2460. அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நாங்கள் "அரஃபா" தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் "தல்பியா"சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அபீசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகிறேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?" என்று கேட்டேன்.

2461. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது, நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய தினத்தில் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அன்று எங்களில் சிலர் "தல்பியா" கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட வில்லை. வேறுசிலர் "தக்பீர்" கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை" என்று விடையளித்தார்கள்.

2462. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "அரஃபா" நாளன்று காலையில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இன்றைய தினத்தில் தல்பியா கூறுவதைப் பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களுடனும் நபித்தோழர்களுடனும் இவ்வாறு சென்றிருக்கிறேன். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" கூறிக்கொண்டிருப்பர். வேறுசிலர் "தல்பியா" கூறிக்கொண்டிருப்பர். எங்களில் யாரும் மற்றவரை குறை கூறமாட்டார்கள்" என்று விடையளித்தார்கள்.

பாடம் : 47 அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்குத் திரும்புவதும், அந்த இரவில் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய இருதொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதும்.
2463. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ் தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் (மும்முறை உறுப்புகளைக் கழுவி) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், "(மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு, "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்று அவர்கள் கூறி, வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

2464. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். (அவர்கள் திரும்பிவந்ததும் அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக) அவர்களுக்கு நான் நீர் ஊற்றினேன். அப்போது "நீங்கள் (மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுமிடம் உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான் உள்ளது" என்றார்கள்.

2465. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி சிறுநீர் கழித்தார்கள். ("சிறுநீர் கழித்தார்கள்" என்று வெளிப்படையாகவே உசாமா கூறினார்கள்; "நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாகக் கூறவில்லை.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறையே கழுவினார்கள்.) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2466. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது "அரஃபா" நாள் மாலையில் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்க ளை)ப் படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாக உசாமா கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (ஒவ்வோர் உறுப்பையும் தலா ஒரு முறையே கழுவினார்கள்.)
நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்" என்று உசாமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். நான், "மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள். நானோ (மினாவிற்கு) முந்திச் சென்ற குறைஷியருடன் நடந்தேசென்றேன்" என்றார்கள்.

2467. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தலைவர்கள் (தமது பயணத்தில்) இறங்கி இயற்கைக் கடன்களை நிறைவேற்றும் பள்ளத்தாக்கு வந்தபோது, (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்"என்று உசாமா சூசகமாகக் கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லிச் சுருக்கமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள்.

2468. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்கவைத்து விட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பிய போது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுதார்கள்.

2469. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (மிதமான வேகத்தில்) தொடர்ந்து பயணம் மேற்கொண்டு முஸ்தலிஃபா போய்ச்சேர்ந்தார்கள்.

2470. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பும் போது தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமரவைத்திருந்த உசாமா (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) கேட்கப்பட்டது. அப்போது அவர்களுடன் நான் இருந்தேன். அல்லது உசாமா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது எவ்வாறு பயணித்தார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், "நபியவர்கள் மிதமான வேகத்தில் பயணித்தார்கள். (கூட்ட நெரிசல் காணப்படாத) விசாலமான இடத்தை அடைந்தால் அவர்கள் விரைவாகச் சென்றார்கள்" என்று விடையளித்தார்கள்.

2471. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "அந்நஸ்" (விரைவு) என்பது "அல் அனக்" (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.

2472. அபூஅய்யூப் காலித் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் யஸீத் அல் கத்மீ (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராக இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

2473. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2474. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவற்றுக்கிடையே (கூடுதலான தொழுகைகள்) வேறெதுவும் தொழவில்லை.
(மஃக்ரிப்) மூன்று ரக்அத்கள் தொழுது விட்டு, (தொடர்ந்து) இஷாவை இரண்டு ரக்அத்தாக (சுருக்கி)த் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் சென்றடையும் வரை இவ்வாறு முஸ்தலிஃபாவில் சேர்த்தே தொழுதுவந்தார்கள்.

2475. சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்" என்றும், "அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர் கள் கூறினார்கள்" என்றும் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்" என்றும், "அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர் கள் கூறினார்கள்" என்றும் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2476. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (சேர்த்துத்) தொழுதார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
அதில் "மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (சேர்த்துத்) தொழுதார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2477. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் தொழுதார்கள்.