6053. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ "".
பாடம்: 47
அன்சாரிகளின் கிளைக்குடும் பங்களில் சிறந்தது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது
6053. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:
அன்சாரிகளின் கிளைக் குடும்பங் களில் சிறந்தது ‘பனூ நஜ்ஜார்’ குடும்ப மாகும்.
இதை அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.70
அத்தியாயம் : 78

6054. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، سَمِعْتُ ابْنَ الْمُنْكَدِرِ، سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ قَالَتِ، اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" ائْذَنُوا لَهُ بِئْسَ، أَخُو الْعَشِيرَةِ أَوِ ابْنُ الْعَشِيرَةِ "". فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْكَلاَمَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الْكَلاَمَ قَالَ "" أَىْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ ـ أَوْ وَدَعَهُ النَّاسُ ـ اتِّقَاءَ فُحْشِهِ "".
பாடம்: 48
குழப்பவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் குறித்து (மற்றவர்களை எச்சரிக்க) குறைகூறுவது அனுமதிக்கப்பட்டதே!
6054. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று (அவரைப் பற்றிச்) சொன்னார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவதுபோல்) அவரி ட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரைவிட்டு ஒதுங்குகிறார் களோ அவரே மக்களில் தீயவர் ஆவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)” என்றார்கள்.71

6055. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ بَعْضِ حِيطَانِ الْمَدِينَةِ، فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا فَقَالَ "" يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرَةٍ، وَإِنَّهُ لَكَبِيرٌ، كَانَ أَحَدُهُمَا لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَكَانَ الآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ "". ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا بِكِسْرَتَيْنِ أَوْ ثِنْتَيْنِ، فَجَعَلَ كِسْرَةً فِي قَبْرِ هَذَا، وَكِسْرَةً فِي قَبْرِ هَذَا، فَقَالَ "" لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا "".
பாடம்: 49
கோள் சொல்வது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.72
6055. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களின் (கூக்)குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு (வகையில்) பெரிய (பாவச்) செயல்தான்.
இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது (தமது உடலை) மறைக்கமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை ‘இரு துண்டாக’ அல்லது ‘இரண்டாக’ப் பிளந்து ஒரு துண்டை இவரது மண்ணறையிலும் மற்றொரு துண்டை இவரது மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது “இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.73

6056. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، قَالَ كُنَّا مَعَ حُذَيْفَةَ فَقِيلَ لَهُ إِنَّ رَجُلاً يَرْفَعُ الْحَدِيثَ إِلَى عُثْمَانَ. فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ "".
பாடம்: 50
கோள் சொல்வது வெறுக்கப்பட்டதாகும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) குறைகூறித் திரிகின்ற, கோள் சொல்லி அலைகின்ற (எவருக்கும் நீர் இணங்கிவிடாதீர்). (68:11)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
குறை சொல்லிக்கொண்டும் புறம் பேசிக்கொண்டும் திரிகின்ற எவருக்கும் கேடுதான். (104:1)
(இதன் மூலத்தில் உள்ள ஹுமஸத், லுமஸத் ஆகியவற்றின் வினைச் சொற்களான) யஹ்மிஸு, யல்மிஸு ஆகிய சொற்களுக்கும் ‘யஈபு’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. (குறைகூறுதல்.)
6056. ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம், “(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்” என்று கூறப்பட்டது.
அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று சொன்னார்கள்.

6057. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ "". قَالَ أَحْمَدُ أَفْهَمَنِي رَجُلٌ إِسْنَادَهُ.
பாடம்: 51
“பொய் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” எனும் (22:30ஆவது) இறைவசனம்
6057. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பொய்யான பேச்சு, பொய்யான நடவடிக்கை, அறியாமை (உள்ளவர்களின் செயல்) ஆகியவற்றைக் கைவிடவில்லையோ அவர் (நோன்பின்போது) தமது உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.74
அறிவிப்பாளர் அஹ்மத் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஃப் (ரஹ்) அவர்கள்) இதன் அறிவிப்பாளர்தொடரை (விளக்கவில்லை. அவையில் இருந்த) ஒருவர் (அதை) எனக்கு விளக்கினார்.

6058. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَجِدُ مِنْ شَرِّ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ اللَّهِ ذَا الْوَجْهَيْنِ، الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ "".
பாடம்: 52
இரட்டை முகத்தான் பற்றிக் கூறப்பட்டவை
6058. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமான வனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.75
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6059. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قِسْمَةً، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ وَاللَّهِ مَا أَرَادَ مُحَمَّدٌ بِهَذَا وَجْهَ اللَّهِ. فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَتَمَعَّرَ وَجْهُهُ وَقَالَ "" رَحِمَ اللَّهُ مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம்: 53
தம் நண்பரைப் பற்றிப் பேசப்படும் தகவலை அவருக்குத் தெரிவித்(து அவரை விழிப்படையச் செய்)தல்
6059. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒரு மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் (அம்மனிதர் கூறியதைச்) சொன்னேன்.
(அதைக் கேட்ட) உடனே அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட் டது. (தொடர்ந்து) அவர்கள், “(இறைத் தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் சகித்துக்கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.76

6060. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يُثْنِي عَلَى رَجُلٍ وَيُطْرِيهِ فِي الْمِدْحَةِ فَقَالَ "" أَهْلَكْتُمْ ـ أَوْ قَطَعْتُمْ ـ ظَهْرَ الرَّجُلِ "".
பாடம்: 54
(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்பட்ட செயலாகும்.
6060. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், “அந்த மனிதரின் முதுகை ‘அழித்துவிட்டீர்கள்’ அல்லது ‘ஒடித்துவிட்டீர்கள்’ ‘‘ என்று (கடிந்து) கூறினார்கள்.77

6061. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ ـ يَقُولُهُ مِرَارًا ـ إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لاَ مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ كَذَا وَكَذَا. إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ، وَحَسِيبُهُ اللَّهُ، وَلاَ يُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا "". قَالَ وُهَيْبٌ عَنْ خَالِدٍ "" وَيْلَكَ "".
பாடம்: 54
(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்பட்ட செயலாகும்.
6061. அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். உம்முடைய தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீரே!” என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு, “உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “(நபி (ஸல்) அவர்கள் தம்முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உமக்கு அழிவுதான்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.78

6062. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ ذَكَرَ فِي الإِزَارِ مَا ذَكَرَ، قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّ إِزَارِي يَسْقُطُ مِنْ أَحَدِ شِقَّيْهِ. قَالَ "" إِنَّكَ لَسْتَ مِنْهُمْ "".
பாடம்: 55
ஒருவர் தம் சகோதரர் குறித்து தாம் அறிந்தவற்றைக் கூறிப் பாராட்டுவது
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(யூத அறிஞராயிருந்து முஸ்லிமான) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைத் தவிர பூமியின் மீது நடக்கின்ற வேறெவரைக் குறித்தும் ‘இவர் சொர்க்கவாசி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டதில்லை.79
6062. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கீழங்கி குறித்து (யார் தமது ஆடையைப் பெருமையுடன் தரையில் படும்படி இழுத்துச் செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று) குறிப்பிட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று (இடுப்பில் நிற்காமல் கீழே) விழுந்துவிடுகிறதே!” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (தற்பெருமையுடன் கீழங்கியைத் தொங்கவிடும்) அவர்களில் உள்ளவர் அல்லர்” என்று சொன்னார்கள்.80

6063. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَذَا وَكَذَا يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَأْتِي أَهْلَهُ وَلاَ يَأْتِي، قَالَتْ عَائِشَةُ فَقَالَ لِي ذَاتَ يَوْمٍ "" يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ أَفْتَانِي فِي أَمْرٍ اسْتَفْتَيْتُهُ فِيهِ، أَتَانِي رَجُلاَنِ، فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رِجْلَىَّ وَالآخَرُ عِنْدَ رَأْسِي، فَقَالَ الَّذِي عِنْدَ رِجْلَىَّ لِلَّذِي عِنْدَ رَأْسِي مَا بَالُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. يَعْنِي مَسْحُورًا. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ. قَالَ وَفِيمَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ، تَحْتَ رَعُوفَةٍ فِي بِئْرِ ذَرْوَانَ "". فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" هَذِهِ الْبِئْرُ الَّتِي أُرِيتُهَا كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ، وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ "". فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُخْرِجَ. قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَهَلاَّ ـ تَعْنِي ـ تَنَشَّرْتَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي، وَأَمَّا أَنَا فَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا "". قَالَتْ وَلَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ.
பாடம்: 56
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர் களுக்குக் கொடுத்து உதவுமாறும் (உங்களை) ஏவுகின்றான். அன்றியும், மானக்கேடான செயல்கள், பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைச் செய்வதற்குத் தடை விதிக்கின்றான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான் (16:90)
“மனிதர்களே! உங்களது எல்லைமீறல் உங்களுக்கே கேடாக அமையும்.” (10:23)
அதன்பின் அவனுக்குக் கொடுமை இழைக்கப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான் (22:60)
மேலும், முஸ்லிமுக்கெதிராகவோ இறைமறுப்பாளருக்கெதிராகவோ வன்மத்தைத் தூண்டுவதைக் கைவிட வேண்டும்.
6063. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்ன வாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப் பட்டார்கள். அவர்கள் ஒருநாள் என்னிடம், “ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டுபேர் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), “இந்த மனிதரின் நிலை என்ன?” என்று கேட்க, மற்றவர், “இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். முதலாமவர், “இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, மற்றவர், ‘லபீத் பின் அஃஸம்’ என்று பதிலளித்தார்.
முதலாமவர், “எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், “ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு ‘தர்வான்’ (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), “இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், “அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராக வன்மத்தைத் தூண்டிவிடுவதை அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.
(நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் பின் அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.81

6064. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا "".
பாடம்: 57
பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று நபியே கூறுக). (113:5)
6064. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6064. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 78
6065. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ "".
பாடம்: 57
பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கிலிருந்து (நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று நபியே கூறுக). (113:5)
6065. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6066. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا "".
பாடம்: 58
இறைநம்பிக்கை கொண்டவர்களே! பெரும்பாலான சந்தேகங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெ னில், சந்தேகங்களில் சில பாவ மாகும். மேலும், (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் (எனும் 49:12 ஆவது இறைவசனம்)82
6066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப் பது குறித்து உங்களை நான் எச்சரிக்கி றேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்புகாட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

6067. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ مِنْ دِينِنَا شَيْئًا "". قَالَ اللَّيْثُ كَانَا رَجُلَيْنِ مِنَ الْمُنَافِقِينَ.
பாடம்: 59
அனுமதிக்கப்பட்ட சந்தேகம்
6067. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இன்னாரும் இன்னாரும் நமது மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை” என்று (இருவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) லைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் இருவரும் நயவஞ்சகர்களாய் இருந்தனர்.

6068. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، بِهَذَا وَقَالَتْ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا وَقَالَ "" يَا عَائِشَةُ مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ دِينَنَا الَّذِي نَحْنُ عَلَيْهِ "".
பாடம்: 59
அனுமதிக்கப்பட்ட சந்தேகம்
6068. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “ஆயிஷா! இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதை அறிந்திருப்பவர் களாக நான் கருதவில்லை” என்று கூறினார்கள்.83

6069. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ أَخِي ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّ أُمَّتِي مُعَافًى إِلاَّ الْمُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ الْمَجَانَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ، فَيَقُولَ يَا فُلاَنُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ "".
பாடம்: 60
இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங் கப்படுத்தாமல்) மறைப்பது84
6069. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப் படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையில் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, “இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கிவிடுகிறான்

6070. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، أَنَّ رَجُلاً، سَأَلَ ابْنَ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي النَّجْوَى قَالَ "" يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيْهِ فَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا. فَيَقُولُ نَعَمْ. وَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا. فَيَقُولُ نَعَمْ. فَيُقَرِّرُهُ ثُمَّ يَقُولُ إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا، فَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ "".
பாடம்: 60
இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங் கப்படுத்தாமல்) மறைப்பது84
6070. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ் வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் தம்முடைய இறைவனை நெருங்குவார். எந்த அளவுக் கென்றால் இறைவன் தன் திரையை அவர்மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன், ‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்பார். இறைவன் (மீண்டும்) ‘இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அப்போதும் அவர், ‘ஆம்’ என்று கூறி (தமது பாவச்)செயல்களை ஒப்புக்கொள்வார்.
பிறகு அவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்(திருந்)தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.85

6071. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ، كُلُّ ضَعِيفٍ مُتَضَاعِفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ، أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ "".
பாடம்: 61
அகங்காரம்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(22:9ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஸானிய இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அகங்காரம் கொண்ட வனாக’ என்பது பொருள். ‘இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அவனுடைய பிடரியில்’ என்பது சொற்பொருள்.
6071. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “சொர்க்கவாசிகள் யார் என்று உங்க ளுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்” என்று கூறினார்கள்.86

6072. وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَتِ الأَمَةُ مِنْ إِمَاءِ أَهْلِ الْمَدِينَةِ لَتَأْخُذُ بِيَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءَتْ.
பாடம்: 61
அகங்காரம்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(22:9ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஸானிய இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அகங்காரம் கொண்ட வனாக’ என்பது பொருள். ‘இத்ஃபிஹி’ எனும் சொற்றொடருக்கு ‘அவனுடைய பிடரியில்’ என்பது சொற்பொருள்.
6072. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்திகூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றியவண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவுக்கு மிக எளிமையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)