6033. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ وَهْوَ يَقُولُ "" لَنْ تُرَاعُوا، لَنْ تُرَاعُوا "". وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ فَقَالَ "" لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا "". أَوْ "" إِنَّهُ لَبَحْرٌ "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர் களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
(ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந் தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர்கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்றுவிட்டிருந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், “பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, “ ‘(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்’ அல்லது ‘இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல்’ என்று கூறினார்கள்.50
அத்தியாயம் : 78

6034. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ قَطُّ فَقَالَ لاَ.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6034. முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்.

6035. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ كُنَّا جُلُوسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يُحَدِّثُنَا إِذْ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَإِنَّهُ كَانَ يَقُولُ "" إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6035. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்க வில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறுவார்கள்” என்று சொன்னார்கள்.51

6036. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِبُرْدَةٍ. فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ فَقَالَ الْقَوْمُ هِيَ شَمْلَةٌ. فَقَالَ سَهْلٌ هِيَ شَمْلَةٌ مَنْسُوجَةٌ فِيهَا حَاشِيَتُهَا ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَكْسُوكَ هَذِهِ. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، فَلَبِسَهَا، فَرَآهَا عَلَيْهِ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَحْسَنَ هَذِهِ فَاكْسُنِيهَا. فَقَالَ "" نَعَمْ "". فَلَمَّا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَمَهُ أَصْحَابُهُ قَالُوا مَا أَحْسَنْتَ حِينَ رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَذَهَا مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يُسْأَلُ شَيْئًا فَيَمْنَعَهُ. فَقَالَ رَجَوْتُ بَرَكَتَهَا حِينَ لَبِسَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم لَعَلِّي أُكَفَّنُ فِيهَا.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6036. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டுவந்தார்” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என மக்களிடம் கேட்டார் கள். அப்போது மக்கள், “அது சால்வை” என்றனர். அப்போது சஹ்ல் (ரலி) அவர்கள், “அது கரைவைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்” என்று கூறினார்கள்.
(தொடர்ந்து கூறினார்கள்:) அப்போது அந்தப் பெண்மணி, “இதை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்(துகொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை அணிந்துகொள்ள எனக்கு கொடுங்களேன்” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சரி” என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்று விட்டபோது, அந்தத் தோழரிடம் அவருடைய நண்பர்கள், “நீர் செய்தது அழகல்ல; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால்தான் அதைப் பெற்றுக்கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டு விட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே” என்று கூறி அவரைக் கண்டித்தனர்.
அதற்கு அவர், “நபி (ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட வளத்தை (பரக்கத்தை) நான் அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும்போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை நான் கேட்டேன்)” என்று சொன்னார்.52

6037. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعَمَلُ، وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ "". قَالُوا وَمَا الْهَرْجُ قَالَ "" الْقَتْلُ، الْقَتْلُ "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறுகிவிடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று சொன்னார்கள்.
மக்கள், “ஹர்ஜ் என்றால் என்ன?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “கொலை, கொலை” என்று (இருமுறை) கூறினார்கள்.

6038. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، سَمِعَ سَلاَّمَ بْنَ مِسْكِينٍ، قَالَ سَمِعْتُ ثَابِتًا، يَقُولُ حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ. وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6038. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை “ச்சீ ‘‘ என்றோ, “(இதை) ஏன் செய்தாய்” என்றோ, “நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் சொன்ன தில்லை.

6039. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي أَهْلِهِ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ.
பாடம்: 40
ஒருவர் தம் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
6039. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.53

6040. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا، فَأَحِبَّهُ. فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا، فَأَحِبُّوهُ. فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي أَهْلِ الأَرْضِ "".
பாடம்: 41
அன்பு அல்லாஹ்விடமிருந்தே ஆரம்பமாகிறது.
6040. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும்பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். ஆகவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று ஜிப்ரீல் அறிவிப்பார்.
உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

6041. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ، لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ، بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا "".
பாடம்: 42
அல்லாஹ்வுக்காக அன்பு கொள்வது
6041. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:)
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியபின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும்விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55

6042. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَضْحَكَ الرَّجُلُ مِمَّا يَخْرُجُ مِنَ الأَنْفُسِ وَقَالَ "" بِمَ يَضْرِبُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ضَرْبَ الْفَحْلِ، ثُمَّ لَعَلَّهُ يُعَانِقُهَا "". وَقَالَ الثَّوْرِيُّ وَوُهَيْبٌ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ "" جَلْدَ الْعَبْدِ "".
பாடம்: 43
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத் தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலா னவர்களாக இருக்கலாம்” என்று தொடங்கும் (49:11ஆவது) இறைவசனம்
6042. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், (பெண்கள் தொடர்பாக) “நீங்கள் உங்கள் மனைவியை ஏன் காளையை அடிப்பதுபோல் அடிக்கிறீர்கள்? பிறகு நீங்களே அவளை (இரவில்) அணைத்துக்கொள்ள வேண்டிவருமே!” என்றும் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அடிமையை அடிப்பது போல் (ஏன் அடிக்கிறீர்கள்?)” என்று காணப்படுகிறது.56

6043. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى "" أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ بَلَدٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" بَلَدٌ حَرَامٌ، أَتَدْرُونَ أَىُّ شَهْرٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" شَهْرٌ حَرَامٌ "". قَالَ "" فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا "".
பாடம்: 43
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத் தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலா னவர்களாக இருக்கலாம்” என்று தொடங்கும் (49:11ஆவது) இறைவசனம்
6043. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில் (தங்கி யிருந்தபோது ‘துல்ஹிஜ்ஜா’ பத்தாம் நாள் உரையாற்றுகையில்) “மக்களே! இது என்ன நாள் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “இது புனித நாள்” என்று கூறினார்கள்.
(பிறகு) “இது எந்த நகரம் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “இது புனித நகரம்” என்று கூறினார்கள். (பிறகு) “இது என்ன மாதம் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர்.
நபி (ஸல்) அவர்கள், “இது புனித மாதம்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறினார்கள்.57

6044. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ "". تَابَعَهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ.
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6044. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.58

6045. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் மற்றவரை ‘பாவி’ (ஃபாஸிக்) என்றோ ‘இறைமறுப்பாளன்’ (காஃபிர்) என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளராக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகின்றது.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6046. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسٍ، قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ لَعَّانًا وَلاَ سَبَّابًا، كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ "" مَا لَهُ، تَرِبَ جَبِينُهُ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6046. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போதுகூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள்.59

6047. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ، وَكَانَ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ عَلَى مِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ فَهْوَ كَمَا قَالَ، وَلَيْسَ عَلَى ابْنِ آدَمَ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَىْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَعَنَ مُؤْمِنًا فَهْوَ كَقَتْلِهِ، وَمَنْ قَذَفَ مُؤْمِنًا بِكُفْرٍ فَهْوَ كَقَتْلِهِ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6047. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார்.60
தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது.61
எதன் மூலம் ஒருவர் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன் மூலம் அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். யார் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.
இதை அந்த மரத்தின்கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6048. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ، رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَغَضِبَ أَحَدُهُمَا، فَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى انْتَفَخَ وَجْهُهُ وَتَغَيَّرَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ الَّذِي يَجِدُ "". فَانْطَلَقَ إِلَيْهِ الرَّجُلُ فَأَخْبَرَهُ بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالَ تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ. فَقَالَ أَتُرَى بِي بَأْسٌ أَمَجْنُونٌ أَنَا اذْهَبْ.
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6048. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டுபேர் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டனர். அவர்களில் ஒருவருக்கு மிகக் கடுமையான கோபம் ஏற்பட்டு அவரது முகம் புடைத்து, நிறம் மாறிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோபமான)து போய்விடும்” என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில்) ஒருவர் (கோபத்திலிருந்த) அந்த மனிதரை நோக்கி நடந்து, நபி (ஸல்) அவர்கள் கூறியதை எடுத்துக்கூறி, “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு” என்றார். அதற்கு அம்மனிதர் “(கவலைப்படும்படி) பிணி ஏதேனும் எனக்கு ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறீரா? நான் என்ன பைத்தியக் காரனா? (உமது வேலையைக் கவனிக் கச்) செல்!” என்றார்.62

6049. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ حُمَيْدٍ، قَالَ قَالَ أَنَسٌ حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَ النَّاسَ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" خَرَجْتُ لأُخْبِرَكُمْ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ وَإِنَّهَا رُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6049. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளானில் வரும்) ‘லைலத்துல் கத்ர்’ (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்குத் தெரிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) புறப்பட்டார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள்.
(இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள், “லைலத்துல் கத்ர் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக நான் (வீட்டிலிருந்து) புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் தமக்குள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். ஆகவே, அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாகவே இருக்கலாம். எனவே, (ரமளான் மாதத்தின் இருபத்து) ஒன்பதாவது, (இருபத்து) ஏழாவது, (இருபத்து) ஐந்தாவது இரவுகளில் அதைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.63

6050. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ رَأَيْتُ عَلَيْهِ بُرْدًا وَعَلَى غُلاَمِهِ بُرْدًا فَقُلْتُ لَوْ أَخَذْتَ هَذَا فَلَبِسْتَهُ كَانَتْ حُلَّةً، وَأَعْطَيْتَهُ ثَوْبًا آخَرَ. فَقَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ كَلاَمٌ، وَكَانَتْ أُمُّهُ أَعْجَمِيَّةً، فَنِلْتُ مِنْهَا فَذَكَرَنِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِي "" أَسَابَبْتَ فُلاَنًا "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَفَنِلْتَ مِنْ أُمِّهِ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ "". قُلْتُ عَلَى حِينِ سَاعَتِي هَذِهِ مِنْ كِبَرِ السِّنِّ قَالَ "" نَعَمْ، هُمْ إِخْوَانُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ جَعَلَ اللَّهُ أَخَاهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ يُكَلِّفُهُ مِنَ الْعَمَلِ مَا يَغْلِبُهُ، فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6050. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் அல்கிஃபாரீ (ரலி) (அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது) அவர்கள்மீது ஒரு மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது (அதே மாதிரியான) ஒரு மேலங்கியும் இருக்கக் கண்டேன். நான் (அவர்களிடம்), “(அடிமை அணிந்திருக்கும்) இதை நீங்கள் வாங்கி (கீழங்கியாக) அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி ஆடையாக இருக்குமே! இவருக்கு வேறோர் ஆடையைக் கொடுத்துவிடலாமே” என்று சொன்னேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும் ஒரு மனிதருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபியரல்லாதவர் ஆவார். ஆகவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் என்னைப் பற்றி முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இன்னாரை ஏசினீரா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று சொன்னேன். “அவருடைய தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசினீரா?” என்று கேட்டார்கள். நான் (அதற்கும்) “ஆம்” என்று பதிலளித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்” என்று சொன்னார்கள். நான், “வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலுமா? (அறியாமைக் கால குணம் கொண்டவனாய் உள்ளேன்?)” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத்தரட்டும். அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்” என்று கூறினார்கள்.64

6051. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، وَوَضَعَ يَدَهُ عَلَيْهَا، وَفِي الْقَوْمِ يَوْمَئِذٍ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ فَقَالُوا قَصُرَتِ الصَّلاَةُ. وَفِي الْقَوْمِ رَجُلٌ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُوهُ ذَا الْيَدَيْنِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ أَنَسِيتَ أَمْ قَصُرَتْ. فَقَالَ "" لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرْ "". قَالُوا بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" صَدَقَ ذُو الْيَدَيْنِ "". فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ وَضَعَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ.
பாடம்: 45
நெட்டையானவர், குட்டை யானவர் என்றெல்லாம் (ஒருவ ரைப் புனைபெயரில்) மக்கள் அறிமுகப்படுத்துவது செல்லும்.
“ ‘இரு கைக்காரர்’ என்ன சொல்கி றார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.65
ஒரு மனிதரைக் கொச்சைப்படுத்தும் நோக்கமில்லாமல் கூறப்படும் எந்தப் (புனை)பெயரும் அனுமதிக்கப்பட்டதே.
6051. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத் தொழுகையான) லுஹ்ர் தொழுகையை (மறந்து) இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்துவிட்டார்கள்.
பிறகு எழுந்து பள்ளிவாசலின் தாழ்வாரத்திலிருந்த (பேரீச்சங்)கட்டையினை நோக்கிச் சென்று அதன் மீது தமது கையை வைத்து (நின்று)கொண்டார்கள். அன்று (பள்ளிவாசலில் இருந்த) மக்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் இருந்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேச அஞ்சினர். மக்களில் சிலர் வேகமாக வெளியேறிச் செல்லலாயினர். அப்போது அவர்கள் “தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?” என்று பேசிக் கொண்டனர்.
மக்களில் (‘கிர்பாக்’ எனும் இயற்பெயருடைய) ஒருவரும் இருந்தார். அவரை நபி (ஸல்) அவர்கள் ‘இரு கைக்காரர்’ (துல் யதைன்) என்று அழைப்பது வழக்கம். அவர், “அல்லாஹ்வின் நபியே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(என் எண்ணப்படி) நான் மறக்கவுமில்லை. தொழுகை குறைந்துவிடவுமில்லை” என்று சொன்னார்கள். அவர், “இல்லை; தாங்கள் மறந்துவிட்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்.
“இரு கைக்காரர் (துல் யதைன்) சொல்வது உண்மையா?” என (மக்களிடம்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (மக்களும் உண்மையே என்று தெரிவித்தனர்.) பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ‘சலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (‘அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன்’ எனக்) கூறி ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதைவிடவும் நீண்ட’ (மறதிக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள்.
பின்னர் (சிரவணக்கத்திலிருந்து) எழுந்து ‘தக்பீர்’ சொன்னார்கள். பின்னர் மீண்டும் ‘முன்பு செய்ததைப் போன்று’ அல்லது ‘அதைவிட நீளமாக’ சிரவணக்கம் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ‘தக்பீர்’ சொன்னார்கள்.66

6052. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، يُحَدِّثُ عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ "" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا هَذَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ "". ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ، فَشَقَّهُ بِاثْنَيْنِ، فَغَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ "" لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا، مَا لَمْ يَيْبَسَا "".
பாடம்: 46
புறம் பேசுதல்67
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(இறைநம்பிக்கையாளர்களே!) உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் யாராவது ஒருவர் தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர் கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன்; மிக்க கருணையாளன். (49:12)68
6052. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது “(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால், மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி (புறம் பேசி)த் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள்.
பிறகு பச்சைப் பேரீச்சமட்டையொன் றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை)மீது ஒன்றையும் நட்டார்கள். பிறகு, “இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்பட லாம்” என்று சொன்னார்கள்.69