4763. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ اخْتَلَفَ أَهْلُ الْكُوفَةِ فِي قَتْلِ الْمُؤْمِنِ، فَرَحَلْتُ فِيهِ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ نَزَلَتْ فِي آخِرِ مَا نَزَلَ وَلَمْ يَنْسَخْهَا شَىْءٌ.
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4763. சயீத் பின் ஜுபைர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக் குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆகவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். அவர்கள், ‘‘இது (4:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை” என்று பதிலளித்தார்கள்.4


அத்தியாயம் : 65
4764. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ قَوْلِهِ تَعَالَى {فَجَزَاؤُهُ جَهَنَّمُ} قَالَ لاَ تَوْبَةَ لَهُ. وَعَنْ قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ {لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} قَالَ كَانَتْ هَذِهِ فِي الْجَاهِلِيَّةِ.
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4764. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான், ‘‘அவனுக்குரிய தண்டனை நரகம்தான்” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். புகழோங்கிய இறைவனின் ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை” எனும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்டதற்கு, ‘‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5

அத்தியாயம் : 65
4765. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ أَبْزَى سَلِ ابْنَ عَبَّاسٍ عَنْ قَوْلِهِ تَعَالَى {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} وَقَوْلِهِ {لاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ} حَتَّى بَلَغَ {إِلاَّ مَنْ تَابَ} فَسَأَلْتُهُ فَقَالَ لَمَّا نَزَلَتْ قَالَ أَهْلُ مَكَّةَ فَقَدْ عَدَلْنَا بِاللَّهِ وَقَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَتَيْنَا الْفَوَاحِشَ، فَأَنْزَلَ اللَّهُ {إِلاَّ مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحًا} إِلَى قَوْلِهِ {غَفُورًا رَحِيمًا}
பாடம்: 3 ‘‘மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்” எனும் (25:69ஆவது) இறைவசனம்
4765. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றியும், ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்” என்று தொடங்கி ‘‘பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர் தவிர” என்று முடியும் (25:68-70) வசனங் கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நான்தான் அன்னாரிடம் கேட்டேன்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இந்த வசனங்கள் (25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடை விதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீய செயல்கள் புரிந்தோம். (ஆகவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)” என்று கூறிக்கொண்டனர்.

ஆகவே அல்லாஹ், ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும் கருணையுடையோனும் ஆவான்” எனும் (25:70ஆவது) வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4766. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ، عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ، {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا}، فَسَأَلْتُهُ فَقَالَ لَمْ يَنْسَخْهَا شَىْءٌ. وَعَنْ {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} قَالَ نَزَلَتْ فِي أَهْلِ الشِّرْكِ.
பாடம்: 4 ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்” (எனும் 25:70ஆவது இறை வசனம்)
4766. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” என்று தொடங்கும் (4:93ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.

(அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்த (4:93ஆவது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை” என்று சொன்னார்கள். ‘‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை” என்று தொடங்கும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.6

அத்தியாயம் : 65
4767. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ خَمْسٌ قَدْ مَضَيْنَ الدُّخَانُ وَالْقَمَرُ وَالرُّومُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ {فَسَوْفَ يَكُونُ لِزَامًا}
பாடம்: 5 அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும்! (எனும் 25:77ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஸாம்’ எனும் சொல்லுக்கு ‘அழிவு’ என்பது பொருள்.
4767. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இந்த 25:77ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, கிழக்கு ரோமானியர் (தோல்வியடைந்து பின்னர் அவர்கள் வெற்றி காண்பது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனையான பிடியும் அவனுடைய வேதனையும்” என்று சொன்னார்கள்.7

அத்தியாயம் : 65
4768. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ ـ رَأَى أَبَاهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ الْغَبَرَةُ وَالْقَتَرَةُ ". الْغَبَرَةُ هِيَ الْقَتَرَةُ.
பாடம்: 26. ‘அஷ்ஷுஅரா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (26:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஅபஸூன்’ எனும் சொல்லுக்கு ‘(தேவையில்லாமல் உயர உயரமான) கட்டடங்களை எழுப்புகிறீர்கள்’ என்பது பொருள். (26:148ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹளீம்’ எனும் சொல்லுக்கு ‘தொட்டால் பிய்ந்துவிடும் அளவுக்குக் கனிந்தது’ என்பது பொருள். (26:153ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸஹ்ஹரீன்’ எனும் சொல்லுக்கு ‘மஸ்ஹூரீன்’ (சூனியம் செய்யப்பட்டவர்கள்) என்பது பொருள். (26:176ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) ‘லைக்கத்’ எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படி வந்துள்ள) ‘ஐகத்’ எனும் சொல்லும் ‘ஐக்கா’ எனும் சொல்லின் பன்மையாகும். இதற்கு ‘மரத் தொகுப்பு (தோப்பு)’ என்பது பொருள். (26:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முழ் ழுல்லத்தி’ (நிழலுடைய நாள்) எனும் சொல், அவர்களுக்கு வேதனை நிழலிட்டதைக் குறிக்கிறது. (15:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ஸூன்’ எனும் சொல்லுக்கு ‘அறியப்பட்டது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ஒழுங்கான முறை, மிகப் பொருத்தமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவு எனும் பொருள்களும் கொள்ளப்படுவதுண்டு.)2 (26:63ஆவது வசனத்திலுள்ள) ‘மலையைப் போல’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘கத்தவ்த்’ எனும் சொல்லுக்குரியதாகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (26:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷிர்ஃதிமத்’ எனும் சொல்லுக்கு ‘சிறிய குழு’ என்று பொருள். (26:219ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸாஜிதீன்’ (சிரம்பணியக் கூடியவர்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழக்கூடியவர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் தக்லுதூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (அழியாது) என்றென்றும் இருக்கப்போகின்றவர்களைப் போல்’ என்று பொருள். (26:128ஆவது வசனத்திலுள்ள) ‘உயரமான இடம்’ எனும் பொருள் (மூலத்திலுள்ள) ‘ரீஉ’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ரீஅத்’ என்பது இதன் பன்மையாகும். ‘அர்யாஉ’ என்பது ‘ரீஅத்’ என்பதன் ஒருமையாகும். (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸானிஉ’ (எனும் சொல் ‘மஸ்னஅத்’ எனும் சொல்லின் பன்மையாகும்.) ஒவ்வொரு கட்டடத்திற்கும் ‘மஸ்னஅத்’எனப்படும். (26:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘கர்வமுடையவர்கள்’ என்று பொருள். (‘பேரானந்தமுடையவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) ‘ஃபரீஹீன்’ என்பதற்கும் இதே பொருள்தான். ‘ஃபாரிஹீன்’ என்பதற்கு ‘கைதேர்ந்தவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. (26:183ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)’ தஅஸவ்’ எனும் சொல் ‘மிகக் கொடிய விஷமத்தைக்’ குறிக்கும். ஆஸ, யஈஸு, ஐஸன் என இதன் வாய்பாடு அமையும். (2:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜிபில்லா’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினங்கள்’ என்று பொருள் (அதன் வினைச்சொல்லான) ‘ஜுபில’ எனும் சொல்லுக்கு ‘குலிக்க’ (படைக்கப்பட்டது) என்று பொருள். ‘ஜுபுல்’, ‘ஜிபில்’, ஜுப்ல் ஆகிய சொற்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. அதாவது, படைப்பினங்கள் எனும் பொருள் கொண்டவையே. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாடம்: 1 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப் படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்)
4768. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஃகபரா’, ‘அல்கத்தரா’ ஆகிய சொற்களுக்கு (‘புழுதி’ எனும்) ஒரே பொருள் ஆகும்.


அத்தியாயம் : 65
4769. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ فَيَقُولُ يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لاَ تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ فَيَقُولُ اللَّهُ إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ".
பாடம்: 26. ‘அஷ்ஷுஅரா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (26:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஅபஸூன்’ எனும் சொல்லுக்கு ‘(தேவையில்லாமல் உயர உயரமான) கட்டடங்களை எழுப்புகிறீர்கள்’ என்பது பொருள். (26:148ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹளீம்’ எனும் சொல்லுக்கு ‘தொட்டால் பிய்ந்துவிடும் அளவுக்குக் கனிந்தது’ என்பது பொருள். (26:153ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸஹ்ஹரீன்’ எனும் சொல்லுக்கு ‘மஸ்ஹூரீன்’ (சூனியம் செய்யப்பட்டவர்கள்) என்பது பொருள். (26:176ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) ‘லைக்கத்’ எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படி வந்துள்ள) ‘ஐகத்’ எனும் சொல்லும் ‘ஐக்கா’ எனும் சொல்லின் பன்மையாகும். இதற்கு ‘மரத் தொகுப்பு (தோப்பு)’ என்பது பொருள். (26:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முழ் ழுல்லத்தி’ (நிழலுடைய நாள்) எனும் சொல், அவர்களுக்கு வேதனை நிழலிட்டதைக் குறிக்கிறது. (15:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ஸூன்’ எனும் சொல்லுக்கு ‘அறியப்பட்டது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ஒழுங்கான முறை, மிகப் பொருத்தமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவு எனும் பொருள்களும் கொள்ளப்படுவதுண்டு.)2 (26:63ஆவது வசனத்திலுள்ள) ‘மலையைப் போல’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘கத்தவ்த்’ எனும் சொல்லுக்குரியதாகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (26:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷிர்ஃதிமத்’ எனும் சொல்லுக்கு ‘சிறிய குழு’ என்று பொருள். (26:219ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸாஜிதீன்’ (சிரம்பணியக் கூடியவர்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழக்கூடியவர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் தக்லுதூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (அழியாது) என்றென்றும் இருக்கப்போகின்றவர்களைப் போல்’ என்று பொருள். (26:128ஆவது வசனத்திலுள்ள) ‘உயரமான இடம்’ எனும் பொருள் (மூலத்திலுள்ள) ‘ரீஉ’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ரீஅத்’ என்பது இதன் பன்மையாகும். ‘அர்யாஉ’ என்பது ‘ரீஅத்’ என்பதன் ஒருமையாகும். (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸானிஉ’ (எனும் சொல் ‘மஸ்னஅத்’ எனும் சொல்லின் பன்மையாகும்.) ஒவ்வொரு கட்டடத்திற்கும் ‘மஸ்னஅத்’எனப்படும். (26:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘கர்வமுடையவர்கள்’ என்று பொருள். (‘பேரானந்தமுடையவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) ‘ஃபரீஹீன்’ என்பதற்கும் இதே பொருள்தான். ‘ஃபாரிஹீன்’ என்பதற்கு ‘கைதேர்ந்தவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. (26:183ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)’ தஅஸவ்’ எனும் சொல் ‘மிகக் கொடிய விஷமத்தைக்’ குறிக்கும். ஆஸ, யஈஸு, ஐஸன் என இதன் வாய்பாடு அமையும். (2:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜிபில்லா’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினங்கள்’ என்று பொருள் (அதன் வினைச்சொல்லான) ‘ஜுபில’ எனும் சொல்லுக்கு ‘குலிக்க’ (படைக்கப்பட்டது) என்று பொருள். ‘ஜுபுல்’, ‘ஜிபில்’, ஜுப்ல் ஆகிய சொற்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. அதாவது, படைப்பினங்கள் எனும் பொருள் கொண்டவையே. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாடம்: 1 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப் படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்)
4769. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘இறை மறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்துவிட்டேன்” என்று பதிலளிப்பான்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4770. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الصَّفَا فَجَعَلَ يُنَادِي " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ حَتَّى اجْتَمَعُوا، فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولاً لِيَنْظُرَ مَا هُوَ، فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٌ فَقَالَ " أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ، أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ". قَالُوا نَعَمْ، مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلاَّ صِدْقًا. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ، أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ}
பாடம்: 2 (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக! (எனும் 26:214ஆவது இறை வசனம்) மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வக்ஃபிள் ஜனாஹக்க’ எனும் வாசகத்திற்கு, ‘‘உம்மைப் பின்பற்றும் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்வீராக!” என்று பொருள்.
4770. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின்மீது ஏறிக்கொண்டு, ‘‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குடும்பங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் ‘‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் ‘‘அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.5


அத்தியாயம் : 65
4771. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَنْزَلَ اللَّهُ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ " يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ". تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம்: 2 (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக! (எனும் 26:214ஆவது இறை வசனம்) மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வக்ஃபிள் ஜனாஹக்க’ எனும் வாசகத்திற்கு, ‘‘உம்மைப் பின்பற்றும் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்வீராக!” என்று பொருள்.
4771. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) வசனத்தை அருளியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக்’ கூறியழைத்து, ‘‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க்கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தóபின் புதல்வரான (என் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது” என்று சொன்னார்கள்.6

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4772. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهِ أَبَا جَهْلٍ وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، فَقَالَ " أَىْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ، وَيُعِيدَانِهِ بِتِلْكَ الْمَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ ". فَأَنْزَلَ اللَّهُ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ} وَأَنْزَلَ اللَّهُ فِي أَبِي طَالِبٍ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ}. قَالَ ابْنُ عَبَّاسٍ {أُولِي الْقُوَّةِ} لاَ يَرْفَعُهَا الْعُصْبَةُ مِنَ الرِّجَالِ. {لَتَنُوءُ} لَتُثْقِلُ. {فَارِغًا} إِلاَّ مِنْ ذِكْرِ مُوسَى. {الْفَرِحِينَ} الْمَرِحِينَ. {قُصِّيهِ} اتَّبِعِي أَثَرَهُ، وَقَدْ يَكُونُ أَنْ يَقُصَّ الْكَلاَمَ {نَحْنُ نَقُصُّ عَلَيْكَ}. {عَنْ جُنُبٍ} عَنْ بُعْدٍ عَنْ جَنَابَةٍ وَاحِدٌ، وَعَنِ اجْتِنَابٍ أَيْضًا، يَبْطِشُ وَيَبْطُشُ. {يَأْتَمِرُونَ} يَتَشَاوَرُونَ. الْعُدْوَانُ وَالْعَدَاءُ وَالتَّعَدِّي وَاحِدٌ. {آنَسَ} أَبْصَرَ. الْجِذْوَةُ قِطْعَةٌ غَلِيظَةٌ مِنَ الْخَشَبِ، لَيْسَ فِيهَا لَهَبٌ، وَالشِّهَابُ فِيهِ لَهَبٌ. وَالْحَيَّاتُ أَجْنَاسٌ الْجَانُّ وَالأَفَاعِي وَالأَسَاوِدُ. {رِدْءًا} مُعِينًا. قَالَ ابْنُ عَبَّاسٍ {يُصَدِّقُنِي} وَقَالَ غَيْرُهُ {سَنَشُدُّ} سَنُعِينُكَ كُلَّمَا عَزَّزْتَ شَيْئًا فَقَدْ جَعَلْتَ لَهُ عَضُدًا. مَقْبُوحِينَ مُهْلَكِينَ. {وَصَّلْنَا} بَيَّنَّاهُ وَأَتْمَمْنَاهُ. {يُجْبَى} يُجْلَبُ .{بَطِرَتْ} أَشِرَتْ. {فِي أُمِّهَا رَسُولاً} أُمُّ الْقُرَى مَكَّةُ وَمَا حَوْلَهَا. {تُكِنُّ} تُخْفِي. أَكْنَنْتُ الشَّىْءَ أَخْفَيْتُهُ، وَكَنَنْتُهُ أَخْفَيْتُهُ وَأَظْهَرْتُهُ. {وَيْكَأَنَّ اللَّهَ} مِثْلُ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ {يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ} يُوَسِّعُ عَلَيْهِ وَيُضَيِّقُ عَلَيْهِ.
பாடம்: 27. ‘அந்நம்ல்’ அத்தியாயம்1 (27:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கப்உ’ எனும் சொல்லுக்கு’மறைக்கப்பட்டிருப்பவை’ என்பது பொருள். (27:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா கிபல’ எனும் சொற்றொடருக்கு ‘(எதிர்க்க) வலிமை இல்லை’ என்பது பொருள். (27:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸர்ஹ்’ எனும் சொல்லுக்கு ‘மாளிகை’ என்பது பொருள். இதன் பன்மை ‘ஸுரூஹ்’ என்பதாகும். கண்ணாடிச் சாந்துக்கும் ‘ஸர்ஹ்’ என்பர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (27:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ஷுன் அழீம்’ (மகத்தான அரியணை) என்பது, அழகான வேலைப்பாடுமிக்க விலை உயர்ந்த தரமான அரியணையைக் குறிக்கும். (27:38ஆவது வசனத்திலுள்ள) ‘கட்டுப்பட்டவர்கள்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘முஸ்லிமீன்’ எனும் சொல்லுக்குரியதாகும். (27:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரதிஃப’ எனும் சொல்லுக்கு ‘நெருங்கிவிட்டது’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பின்தொடர்ந்தது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (27:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாமிதா’ எனும் சொல்லுக்கு ‘நிலை கொண்டிருக்கக்கூடியது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘வெகு உறுதியானது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (27:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸிஅனீ’ எனும் சொல்லுக்கு ‘என்னை ஆக்குவாயாக’ என்பது பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (27:41ஆவது வசனத்திலுள்ள) ‘மாற்றி அமைத்துவிடுங்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘நக்கிரூ’ எனும் சொல்லுக்குரியதாகும். (27:42ஆவது வசனத்திலுள்ள) ‘நாங்கள் முன்பே அறிந்திருந்தோம்’ எனும் வாசகம், சுலைமான் (அலை) அவர்களது கூற்றாகும். (27:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸர்ஹ்’ எனும் சொல், சுலைமான் (அலை) அவர்கள் கண்ணாடியிட்டு மூடிவைத்திருந்த நீர்நிலையைக் குறிக்கிறது. பாடம்: 28. ‘அல்கஸஸ்’ அத்தியாயம்1 (28:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா வஜ்ஹஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனது ஆட்சியதிகாரத்தைத் தவிர’ என்பது பொருள். ‘இறைவனின் திருமுகத்திற்காகச் செய்யப்பட்ட (நற்செயல் முதலிய)வற்றைத் தவிர’ என்றும் பொருள் கூறப்படுகிறது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (28:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அன்பாஉ’ எனும் சொல்லுக்கு ‘ஆதாரங்கள்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘சகல விஷயங்கள்’ என்றும் அர்த்தங்கொள்ளப்படுவது உண்டு.) பாடம்: 1 ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல் லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகின்றான்” எனும் (28:56 ஆவது) வசனத்தொடர்
4772. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என் தந்தையின் சகோதரரே! ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் ‘‘அபூதாóபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்ன தையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள்.

இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள்.

அப்போதுதான், ‘‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால்கூட சுமக்க முடியாது. ‘ல தனூஉ’ எனும் சொல்லுக்கு ‘சிரமமாக மாறும்’ என்பது பொருள்.

(28:10ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள்.

(28:76ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(28:11ஆவது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்பது பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே.

(28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்தி” (தாக்க) எனும் சொல் ‘யப்து” என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.

(28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று பொருள்.

(28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல்அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘எல்லை மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(28:29ஆவது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும்.

(28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜத்வா’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்பது பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷிஹாப்’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்பது பொருள்.

(28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.

(28:34ஆவது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (வேறுசிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:

(28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு ‘உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)

(28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்பூஹீன்’ எனும் சொல்லுக்கு ‘நாசமடைந்தவர்கள்’ என்பது பொருள்.

(28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல’ எனும் வாக்கியத்திற்கு ‘(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.

(28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஜ்பா’ எனும் சொல்லுக்கு ‘கொண்டுவரப்படுகிறது’ என்பது பொருள்.

(28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள்.

(28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்மிஹா’ (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும்.

(28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துகின்னு’ எனும் சொல்லுக்கு ‘(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) ‘அக்னன்த்து’ என்பதற்கு ‘மறைத்தேன்’ என்று பொருள். (இதையே) ‘கனன்த்து’ என்று சொன்னால் ‘மறைத்தேன்’ என்றும், ‘வெளிப்படுத்தினேன்’ என்றும் (எதிரிடைப்) பொருள் வரும்.

(28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வை கஅன்ன’ எனும் சொல், ‘அலம் தர’ (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு ‘என்ன நேர்ந்தது’ என்றும், ‘ஆச்சரியம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்சுத்து’ எனும் சொல்லுக்குத் ‘தாராளமாக வழங்குகிறான்’ என்றும், ‘யக்திரு’ எனும் சொல்லுக்கு ‘சுருக்கிவிடுகின்றான்’ என்றும் பொருள்.

அத்தியாயம் : 65
4773. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا يَعْلَى، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {لَرَادُّكَ إِلَى مَعَادٍ} قَالَ إِلَى مَكَّةَ.
பாடம்: 2 (நபியே!) இந்தக் குர்ஆனை உமக்குச் சட்டமாக்கியவன், நீர் திரும்ப வேண்டிய இடத்திற்கு உம்மை மீண்டும் கொண்டுபோய்ச் சேர்க்கவிருக்கிறான் (எனும் 28:85 ஆவது வசனத்தொடர்)
4773. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்ப வேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4774. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ بَيْنَمَا رَجُلٌ يُحَدِّثُ فِي كِنْدَةَ فَقَالَ يَجِيءُ دُخَانٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَأْخُذُ بِأَسْمَاعِ الْمُنَافِقِينَ وَأَبْصَارِهِمْ، يَأْخُذُ الْمُؤْمِنَ كَهَيْئَةِ الزُّكَامِ. فَفَزِعْنَا، فَأَتَيْتُ ابْنَ مَسْعُودٍ، وَكَانَ مُتَّكِئًا، فَغَضِبَ فَجَلَسَ فَقَالَ مَنْ عَلِمَ فَلْيَقُلْ، وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلِ اللَّهُ أَعْلَمُ. فَإِنَّ مِنَ الْعِلْمِ أَنْ يَقُولَ لِمَا لاَ يَعْلَمُ لاَ أَعْلَمُ. فَإِنَّ اللَّهَ قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ} وَإِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ فَدَعَا عَلَيْهِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ، فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا، وَأَكَلُوا الْمَيْتَةَ وَالْعِظَامَ وَيَرَى الرَّجُلُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ كَهَيْئَةِ الدُّخَانِ "، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ جِئْتَ تَأْمُرُنَا بِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا فَادْعُ اللَّهَ، فَقَرَأَ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} إِلَى قَوْلِهِ {عَائِدُونَ} أَفَيُكْشَفُ عَنْهُمْ عَذَابُ الآخِرَةِ إِذَا جَاءَ ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى} يَوْمَ بَدْرٍ وَلِزَامًا يَوْمَ بَدْرٍ {الم * غُلِبَتِ الرُّومُ} إِلَى {سَيَغْلِبُونَ} وَالرُّومُ قَدْ مَضَى.
பாடம்: 29. ‘அல்அன்கபூத்’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (29:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தப்ஸிரீன்’ எனும் சொல்லுக்கு ‘வழி தவறியவர்கள் (தங்களைத் தெளிவானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தார்கள்)’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (29:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹயவான்’ எனும் சொல்லும், ‘அல்ஹய்யு’ எனும் சொல்லும் (‘நிலையானது’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும். (29:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ல யஅலமன்னல்லாஹு’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ் அதை அறிந்தே உள்ளான்’ என்பது பொருள். இது, ‘அல்லாஹ் பகுத்துக்காட்டுவான்’ என்று கூறுவதற்கு ஒத்ததாகும். ‘‘நல்லவர்களிலிருந்து கெட்டவர்களை அல்லாஹ் பகுத்துக்காட்டுவதற்காக” எனும் (8:37ஆவது) வசனத்தைப் போல. (29:13ஆவது வசனத்திலுள்ள) ‘தங்களின் சுமைகளுடன் மற்ற சுமைகளையும்’ என்பதன் கருத்தாவது: தங்களின் பாவங்களுடன் மற்ற(வர்களை வழிகெடுத்த) பாவங்களையும் அவர்கள் சுமந்தே தீருவார்கள். பாடம்: 30. ‘அர்ரூம்’ அத்தியாயம்1 30:39ஆவது வசனத்தின் கருத்தாவது: தாம் வழங்கியதைவிடச் சிறந்தது தமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒருவர் வழங்கினால், அதற்கு (அல்லாஹ்விடம்) நற்பலன் கிடைப்பதில்லை. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (30:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹ்பரூன்’ எனும் சொல்லுக்கு ‘புதுப்புது இன்பங்களில் ஆழ்த்தப்படுவார்கள்’ என்பது பொருள். (30:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யம்ஹதூன்’ எனும் சொல்லுக்கு ‘தங்களுக்காகப் படுக்கையை விரித்து வைக்கின்றனர்’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘தயார்படுத்துகின்றனர்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.) (30:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வத்க்’ எனும் சொல்லுக்கு ‘மழை’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘உங்கள் வலக்கரம் உடைமையாக்கிக்கொண்டவர்(களான அடிமை)களில் எவரையும், நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (செல்வம் முதலான)வற்றில் பங்காளிகளாக்கி அவற்றில் அவர்களுடன் நீங்கள் சமமாக இருப்பீர்களா?” எனும் (30:28ஆவது) இறைவசனம் பொய்த் தெய்வங்கள் தொடர்பாகக் கூறப்பட்ட உதாரணம் ஆகும். அதாவது உங்க(ள் உறவினர்க)ளில் ஒருவர் மற்றவருக்கு வாரிசாவது போல அந்த அடிமைகள் உங்களுக்கு வாரிசாகிவிடுவார்களோ என நீங்கள் அஞ்சுகிறீர்கள்.2 (30:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்ஸத்தஊன’ எனும் சொல்லுக்கு ‘பிரிந்துவிடுவார்கள்’ என்பது பொருள். (இதிலிருந்து வந்ததே ஏவல் வினையான) ‘ஃபஸ்தஉ’ எனும் (15:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சொல்லும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்: (30:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளுஅஃப்’ எனும் சொல்லும், ‘ளஅஃப்’ எனும் சொல்லும் (‘பலவீனம்’ என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (30:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸூஆ’ எனும் சொல்லுக்கு ‘தீங்கு’ என்பது பொருள். தீயோருக்குக் கிடைக்கும் தண்டனை தீங்காகவே இருக்கும்.
4774. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘கிந்தா’3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘‘சொல்வீராக: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்” என்று (38:86) கூறியுள்ளான்.

மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!” என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்துபோனார்கள். மேலும் பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.

இந்நிலையில் அபூசுஃப்யான் வந்து, ‘‘முஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தாரோ அழிந்துகொண்டி ருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானத்திóருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும்; அது வதைக்கும் வேதனையாகும்” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே, (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். எனினும், நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள்” என்பது வரையிலான (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும்,) மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவாபோகிறது? (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்புக்கே திரும்பிவிட்டனர்.

இதைத்தான் அல்லாஹ், ‘‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் அவர்களிடம் பழிவாங்கியே தீருவோம்” என்று (44:16ஆவது வசனத்தில்) பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும், வ லிஸாமன் (தண்டனை உங்களைப் பிடித்தே தீரும்) என்று (25:77ஆவது வசனத்தில்) அதே பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகின்றான்.

மேலும், ‘‘அலிஃப். லாம். மீம். (நபியே!) (கிழக்கு) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்” என்றும் அல்லாஹ் கூறுகின்றான். (30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4775. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ " ثُمَّ يَقُولُ {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ}
பாடம்: 1 ‘‘அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது வசனத் தொடர்) (இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்கில்லாஹ்’ (‘அல்லாஹ் வின் படைப்பு’) என்பதற்கு, ‘அல்லாஹ்வின் நெறி’ என்பது கருத்து. ‘ஃபித்ரத்’ (இயற்கை) என்பதற்கு ‘இஸ்லாம்’ என்பது பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓதலின்படி 26:137 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்குல் அவ்வலீன்’ என்பதற்கு ‘முந்தையவர்களின் வழி’ என்பது பொருள்.
4775. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி,) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, ‘‘எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோஅதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது) வசனத்தைஓதிக்காட்டினார்கள்.5

அத்தியாயம் : 65
4776. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَيْسَ بِذَاكَ، أَلاَ تَسْمَعُ إِلَى قَوْلِ لُقْمَانَ لاِبْنِهِ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}"
பாடம்: 31. ‘லுக்மான்’ அத்தியாயம்1 பாடம்: 1 ‘‘என் அன்பு மகனே! அல்லாஹ் வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார் எனும் 31:13ஆவது வசனத்தொடர்)
4776. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள், ‘‘எங்களில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கை மிக்கவராய்) இருக்கிறார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அது அப்படியல்ல; (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் ‘‘இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?”என்று சொன்னார்கள்.2

அத்தியாயம் : 65
4777. حَدَّثَنِي إِسْحَاقُ، عَنْ جَرِيرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ إِذْ أَتَاهُ رَجُلٌ يَمْشِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِيمَانُ قَالَ " الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ قَالَ " الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، مَا الإِحْسَانُ قَالَ " الإِحْسَانُ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ " مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الْمَرْأَةُ رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا، وَإِذَا كَانَ الْحُفَاةُ الْعُرَاةُ رُءُوسَ النَّاسِ فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا فِي خَمْسٍ لا يَعْلَمُهُنَّ إِلاَّ اللَّهُ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ} ". ثُمَّ انْصَرَفَ الرَّجُلُ فَقَالَ " رُدُّوا عَلَىَّ ". فَأَخَذُوا لِيَرُدُّوا فَلَمْ يَرَوْا شَيْئًا. فَقَالَ " هَذَا جِبْرِيلُ جَاءَ لِيُعَلِّمَ النَّاسَ دِينَهُمْ ".
பாடம்: 2 ‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்
4777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.

‘‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கருப்பைகளில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்” (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை.

பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4


அத்தியாயம் : 65
4778. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ " ثُمَّ قَرَأَ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ}.
பாடம்: 2 ‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்
4778. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5

அத்தியாயம் : 65
4779. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ". قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ}. وَحَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ اللَّهُ مِثْلَهُ. قِيلَ لِسُفْيَانَ رِوَايَةً. قَالَ فَأَىُّ شَىْءٍ قَالَ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ قَرَأَ أَبُو هُرَيْرَةَ قُرَّاتِ أَعْيُنٍ.
பாடம்: 32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது. (32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது. (32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள். பாடம்: 1 ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறுகின்றான்.

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.2

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ‘‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)” என வினவப்பட, அன்னார் ‘‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?” என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.


அத்தியாயம் : 65
4780. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ‏"‏‏.‏ ثُمَّ قَرَأَ ‏{‏فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ‏}‏
பாடம்: 32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது. (32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது. (32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள். பாடம்: 1 ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4780. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘உயர்ந்தோன் அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.

பிறகு, ‘‘அவர்கள் செய்துகொண்டி ருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.

அத்தியாயம் : 65
4781. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُؤْمِنٍ إِلاَّ وَأَنَا أَوْلَى النَّاسِ بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ {النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ} فَأَيُّمَا مُؤْمِنٍ تَرَكَ مَالاً فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، فَإِنْ تَرَكَ دَيْنًا أَوْ ضِيَاعًا فَلْيَأْتِنِي وَأَنَا مَوْلاَهُ ".
பாடம்: 33. ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயம்1 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (33:26ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்களின் கோட்டைகள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஸயாஸீஹிம்’ எனும் சொல்லுக்குரியதாகும். பாடம்: 1 நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவ ராவார் (எனும் 33:6ஆவது வசனத்தொடர்)
4781. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘‘நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்” எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்!

எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

அத்தியாயம் : 65
4782. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ}.
பாடம்: 2 வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத்தொடர்)
4782. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்துவந்தோம்.3

அத்தியாயம் : 65