4743. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ يُقْسِمُ فِيهَا إِنَّ هَذِهِ الآيَةَ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} نَزَلَتْ فِي حَمْزَةَ وَصَاحِبَيْهِ، وَعُتْبَةَ وَصَاحِبَيْهِ يَوْمَ بَرَزُوا فِي يَوْمِ بَدْرٍ رَوَاهُ سُفْيَانُ عَنْ أَبِي هَاشِمٍ. وَقَالَ عُثْمَانُ عَنْ جَرِيرٍ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ أَبِي مِجْلَزٍ قَوْلَهُ.
பாடம் : 3
‘‘இவர்கள் தங்களுடைய இறை வனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவி னர் ஆவர்” எனும் (22:19ஆவது) வசனத்தொடர்
4743. கைஸ் பின் உபாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19 ஆவது) வசனம், பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களுடைய இரு நண்பர்கள் (அலீ, உபைதா) தொடர்பாகவும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவருடைய இரு நண்பர்கள் (ஷைபா, வலீத்) தொடர்பாகவுமே அருளப்பெற்றது” எனச் சத்தியமிட்டுக் கூறிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3
அத்தியாயம் : 65

4744. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنَا أَوَّلُ، مَنْ يَجْثُو بَيْنَ يَدَىِ الرَّحْمَنِ لِلْخُصُومَةِ يَوْمَ الْقِيَامَةِ. قَالَ قَيْسٌ وَفِيهِمْ نَزَلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} قَالَ هُمُ الَّذِينَ بَارَزُوا يَوْمَ بَدْرٍ عَلِيٌّ وَحَمْزَةُ وَعُبَيْدَةُ وَشَيْبَةُ بْنُ رَبِيعَةَ وَعُتْبَةُ بْنُ رَبِيعَةَ وَالْوَلِيدُ بْنُ عُتْبَةَ.
பாடம் : 3
‘‘இவர்கள் தங்களுடைய இறை வனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவி னர் ஆவர்” எனும் (22:19ஆவது) வசனத்தொடர்
4744. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.
அறிவிப்பாளர் கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவர்களைக் குறித்தே, ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ர் போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா (ரலி) ஆகியோரும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோரும் ஆவர்.4

4745. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ عُوَيْمِرًا، أَتَى عَاصِمَ بْنَ عَدِيٍّ وَكَانَ سَيِّدَ بَنِي عَجْلاَنَ فَقَالَ كَيْفَ تَقُولُونَ فِي رَجُلٍ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَصْنَعُ سَلْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَتَى عَاصِمٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ، فَسَأَلَهُ عُوَيْمِرٌ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَرِهَ الْمَسَائِلَ وَعَابَهَا، قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَجَاءَ عُوَيْمِرٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَصْنَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ أَنْزَلَ اللَّهُ الْقُرْآنَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ ". فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمُلاَعَنَةِ بِمَا سَمَّى اللَّهُ فِي كِتَابِهِ، فَلاَعَنَهَا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ حَبَسْتُهَا فَقَدْ ظَلَمْتُهَا، فَطَلَّقَهَا، فَكَانَتْ سُنَّةً لِمَنْ كَانَ بَعْدَهُمَا فِي الْمُتَلاَعِنَيْنِ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْظُرُوا فَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَدْعَجَ الْعَيْنَيْنِ عَظِيمَ الأَلْيَتَيْنِ خَدَلَّجَ السَّاقَيْنِ فَلاَ أَحْسِبُ عُوَيْمِرًا إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أُحَيْمِرَ كَأَنَّهُ وَحَرَةٌ فَلاَ أَحْسِبُ عُوَيْمِرًا، إِلاَّ قَدْ كَذَبَ عَلَيْهَا ". فَجَاءَتْ بِهِ عَلَى النَّعْتِ الَّذِي نَعَتَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ تَصْدِيقِ عُوَيْمِرٍ، فَكَانَ بَعْدُ يُنْسَبُ إِلَى أُمِّهِ.
பாடம்:
23. ‘அல்முஃமினூன்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(23:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சப்அ தராயிக்’ (ஏழு அடுக்குகள்) என்பதற்கு ‘ஏழு வானங்கள்’ என்பது பொருள்.
(23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிகூன்’ (ஒருவரையொருவர் முந்திக்கொள்பவர்கள்) என்பதற்கு ‘‘(அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்பேறு முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்)” என்று பொருள்.
(23:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஜிலத் குலூபுஹும்’ எனும் சொற்றொடருக்கு ‘அஞ்சுபவர்கள்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(23:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த’ எனும் சொற்றொடருக்கு ‘வெகுதூரம், வெகுதூரம்’ (அசாத்தியம்) என்று பொருள்.
(23:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஆத்தீன்’ (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கின்றது.
(23:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல நாக்கிபூன்’ எனும் சொல்லுக்கு ‘புறக்கணித்தவர்கள்’ என்பது பொருள்.
(23:104ஆவது வசனத்திலுள்ள) ‘முகம் விகாரமானவர்கள்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘காலிஹூன்’ எனும் சொல்லுக்குரியதாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(23:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுலாலத்’ (‘சத்து’) என்பதில் (மனிதனிóருந்து பிரியும்) விந்தும், (அதிலிருந்து உருவாகும்) குழந்தையும் அடங்கும்.2
(23:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜின்னத்’ எனும் சொல்லும், ‘அல்ஜுனூன்’ எனும் சொல்லும் (‘பைத்தியம்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(23:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகுஸாஉ’ எனும் சொல்லுக்கு ‘வெள்ளத்தின் மேலே செல்லும் நுரை மற்றும் பயனற்ற குப்பைக்கூளங்கள்’ என்று பொருள்.
(23:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஜ்அரூன்’ எனும் சொல்லுக்கு ‘மாடு போலக் கத்துவார்கள்’ என்பது பொருள்.
(23:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலா அஉகாபிக்கும்’ எனும் சொல்லுக்கு ‘புறங்காட்டி (வந்த வழியே) சென்றான்’ என்பது பொருள்.
(23:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிர்’ (நிலவொளியில் இராக்கதை பேசுபவர்) எனும் சொல் ‘சமர்’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிரிந்ததாகும். பன்மை: சும்மார். சாமிர் எனும் இச்சொல் இந்த வசனத்தில் பன்மையின் இடத்தில் ஆளப்பட்டுள்ளது.
(23:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸ்ஹரூன்’ எனும் சொல்லுக்கு ‘அறிவை இழந்துவிட்டிருக்கிறீர்கள்’ என்பது பொருள். இச்சொல் ‘சிஹ்ர்’ (சூனியம்) எனும் மூலச்சொல்லிலிருந்து தோன்றியதாகும்.
பாடம்:
24. ‘அந்நூர்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
(24:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் கிலாலிஹி’ (அதற்கிடையிóருந்து) என்பதற்கு ‘அடுக்கடுக்கான மேகங்களுக்கிடையேயிருந்து’ என்பது கருத்து.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சனா பர்கிஹி’ எனும் சொல்லுக்கு ‘(மின்) ஒளி’ என்பது பொருள்.
(24:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்இனீன்’ எனும் சொல்லுக்கு ‘பணிந்தவர்களாக’ என்பது பொருள்.
(24:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்த்தாத்’ எனும் சொல்லும் ‘ஷத்தா’, ‘ஷதாத்’, ‘ஷத்து’ எனும் சொற்களும் (‘தனித்தனியானவை’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சூரத்துன் அன்ஸல்னாஹா’ எனும் சொற்றொடருக்கு ‘நாமே இதனை (இறக்கி)த் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
பல அத்தியாயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டிருப்பதால்தான் குர்ஆனுக்கு ‘குர்ஆன்’ (ஒன்றுசேர்க்கப்பட்டது) என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயத்திற்கு ‘சூரா’ (பிரிக்கப்பட்டது) என்று பெயரிடப்படக் காரணம், ஓர் அத்தியாயத்திலிருந்து மற்றோர் அத்தியாயம் தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதேயாகும். (தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட அத்தியாயங்களில்) ஒன்றை ஒன்றோடு சேர்த்தபோது குர்ஆனுக்கு ‘அல்குர்ஆன்’ (ஒன்றுசேர்க்கப்பட்டது) என்று பெயர் வழங்கப்பட்டது.
சஅத் பின் இயாள் அஸ்ஸுமாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2
(24:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிஷ்காத்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘மாடம்’ என்பது பொருள்.
(75:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ குர்ஆனஹு’ எனும் சொல்லுக்கு ‘அதில் ஒன்றை மற்றொன்றுடன் சேர்ப்பது’ என்று பொருள். (75:18ஆவது வசனத் தின் மூலத்திலுள்ள) ‘ஃப இதா கரஃனாஹு’ எனும் சொற்றொடருக்கு, ‘அதனை நாம் ஒருங்கிணைத்து ஒன்றுசேர்த்தால்’ என்று பொருள். ‘ஃபத்தபிஉ குர்ஆனஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதன்படி செயலாற்று; (அதாவது) அல்லாஹ் உனக்கிட்டுள்ள கட்டளைப்படி செயலாற்று; அவன் தடை செய்தவையிலிலிருந்து விலகியிரு!” என்று பொருள்.
‘‘அவனது கவிதையில் ‘குர்ஆன்’ இல்லை” என்றால், ‘ஒருங்கிணைப்பு’ இல்லை என்று பொருள். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பாகுபடுத்திக்காட்டுவதால்தான் (குர்ஆனுக்கு) ஃபுர்கான் (பாகுபடுத்தக்கூடியது) என்று பெயர் வந்தது.
‘‘ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்றுசேர்க்கவில்லை” என்பதைக் குறிக்க ‘மா கரஅத்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
(24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபரள்னாஹா’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘ஃபர்ரள்னாஹா’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘ஃபர்ரள்னாஹா’ எனும் சொல்லுக்கு ‘இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம்’ என்பது பொருள். (அதே சொல்லை) ‘ஃபரள்னாஹா’ என்று ஓதியவர்கள், ‘உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம்’ என்று (பொருள்) கூறுகிறார்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(24:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவித் திஃப்லில்லஃதீன லம் யழ்ஹரூ அலா அவ்ராத்திந் நிசா’ எனும் சொற்றொடர், வயது சிறியதாயிருப்பதனால் பெண்களின் மறைவான உறுப்புகள் குறித்து அறிந்திராத சிறுவர்களைக் குறிக்கிறது.
‘அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகைரி உலில் இர்பத்’ எனும் சொல், பெண் தேவையற்ற (வயோதிகர்கள், பாலுணர்வற்றவர்கள் போன்ற) ஆண்களைக் குறிக்கிறது.
முஜாஹித் (ரஹ்) அவர்கள், ‘‘தம் வயிற்றைக் குறித்த எண்ணத்தைத் தவிர (உணவைத் தவிர) வேறு எண்ணம் வராத (இவனால் பெண்களுக்குப் பாலியல் தொல்லை ஏதும் நேருமோ என்று) பெண்கள் விஷயத்தில் அஞ்சப்படாத ஆணைக் குறிக்கும்” எனக் கூறுகிறார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பெண் வேட்கையற்ற வெகுளியே ‘ஃகைரு உலில் இர்பத்’ ஆவான்.
பாடம் : 1
‘‘யார் தம்முடைய மனைவியர்மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தமது குற்றச் சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும்” எனும் (24:6ஆவது) இறைவசனம்
4745. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘பனூ அஜ்லான்’ குலத்தாரின் தûலைவராயிருந்த ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) ‘உவைமிர்’ என்பவர்3 வந்து ‘‘தன் மனைவியுடன் வேறொரு அந்நிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அந்நிய ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்” என்று சொன்னார்.
ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே!” என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்).
நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார் கள் என்று ஆஸிம் (ரலி) அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் கேட்க, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அநாகரிகமாகக் கருதுகிறார்கள்” என்று பதில் சொன்னார்கள்.
உடனே உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்” என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.4
அவ்வாறே, தம் மனைவிமீது (குற்றம் சாட்டி) உவைமிர் (ரலி) அவர்கள் ‘லிஆன்’ செய்தார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அவளை மணவிலக்குச் செய்துவிட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப்பின் ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியருக்கு முன்மாதிரியாகி விட்டது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கருவிழியும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே நான் கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்” என்று சொன்னார்கள்.
பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே (‘இன்னவளின் மகன்’ என்று) அழைக்கப்படலாயிற்று.

4746. حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلاً رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَأَنْزَلَ اللَّهُ فِيهِمَا مَا ذُكِرَ فِي الْقُرْآنِ مِنَ التَّلاَعُنِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ قُضِيَ فِيكَ وَفِي امْرَأَتِكَ ". قَالَ فَتَلاَعَنَا، وَأَنَا شَاهِدٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَفَارَقَهَا فَكَانَتْ سُنَّةً أَنْ يُفَرَّقَ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ وَكَانَتْ حَامِلاً، فَأَنْكَرَ حَمْلَهَا وَكَانَ ابْنُهَا يُدْعَى إِلَيْهَا، ثُمَّ جَرَتِ السُّنَّةُ فِي الْمِيرَاثِ أَنْ يَرِثَهَا، وَتَرِثَ مِنْهُ مَا فَرَضَ اللَّهُ لَهَا.
பாடம் : 2
மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும் (எனும் 24:7ஆவது இறைவசனம்)
4746. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், அந்தக் கணவன் மனைவி தொடர்பாக குர்ஆனில் தான் கூறியுள்ள ‘லிஆன்’ எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்துவைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது.
அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (‘தனக்குரியது’ என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டுவந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

4747. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْبَيِّنَةَ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلاً يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ. فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " الْبَيِّنَةَ وَإِلاَّ حَدٌّ فِي ظَهْرِكَ " فَقَالَ هِلاَلٌ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنِّي لَصَادِقٌ، فَلَيُنْزِلَنَّ اللَّهُ مَا يُبَرِّئُ ظَهْرِي مِنَ الْحَدِّ، فَنَزَلَ جِبْرِيلُ، وَأَنْزَلَ عَلَيْهِ {وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ} فَقَرَأَ حَتَّى بَلَغَ {إِنْ كَانَ مِنَ الصَّادِقِينَ} فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَرْسَلَ إِلَيْهَا فَجَاءَ هِلاَلٌ، فَشَهِدَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ فَهَلْ مِنْكُمَا تَائِبٌ ". ثُمَّ قَامَتْ فَشَهِدَتْ فَلَمَّا كَانَتْ عِنْدَ الْخَامِسَةِ وَقَّفُوهَا، وَقَالُوا إِنَّهَا مُوجِبَةٌ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَتَلَكَّأَتْ وَنَكَصَتْ حَتَّى ظَنَنَّا أَنَّهَا تَرْجِعُ ثُمَّ قَالَتْ لاَ أَفْضَحُ قَوْمِي سَائِرَ الْيَوْمِ، فَمَضَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبْصِرُوهَا فَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ الْعَيْنَيْنِ سَابِغَ الأَلْيَتَيْنِ خَدَلَّجَ السَّاقَيْنِ، فَهْوَ لِشَرِيكِ بْنِ سَحْمَاءَ ". فَجَاءَتْ بِهِ كَذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْلاَ مَا مَضَى مِنْ كِتَابِ اللَّهِ لَكَانَ لِي وَلَهَا شَأْنٌ ".
பாடம் : 3
(தன்மீது தன்னுடைய கணவன் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) அவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்குமுறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்ட னையை அவளைவிட்டும் அகற்றிவிடும் (எனும் 24:8ஆவது இறைவசனம்)
4747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ‘ஷரீக் பின் சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன்) ஆதாரத்தைக் கொண்டுவா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும்” என்று சொன்னார்கள்.
அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அந்நிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக்கொண்டு செல்லவேண்டும்?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘(உன்) ஆதாரத்தைக் கொண்டுவா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்” என்று சொன்னார்கள்.
அதற்கு ஹிலால் (ரலி) அவர்கள், ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். எனது முதுகைக் கசையடியிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்” என்று சொன்னார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி (ஸல்) அவர்களுக்கு ‘‘யார் தம் மனைவியர்மீது அவதூறு கூறி” என்று தொடங்கும் (24:6-9) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.5
நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால் (ரலி) அவர்களுடைய மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால் (ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக் கோரி (தவறு தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி, ‘‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)” என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திóருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம்.
ஆனால், பிறகு அவர், ‘‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை” என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்து முடித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘இவளைக் கவனித்துவாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் பின் சஹ்மா’வுக்கே உரியதாகும்”என்று சொன்னார்கள்.
அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பற்றிய இறைச்சட்டம் (‘லிஆன்’ விதி) மட்டும் வந்திருக்காவிட்டால், நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.

4748. حَدَّثَنَا مُقَدَّمُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، حَدَّثَنَا عَمِّي الْقَاسِمُ بْنُ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، وَقَدْ سَمِعَ مِنْهُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، رَمَى امْرَأَتَهُ فَانْتَفَى مِنْ وَلَدِهَا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَلاَعَنَا كَمَا قَالَ اللَّهُ، ثُمَّ قَضَى بِالْوَلَدِ لِلْمَرْأَةِ وَفَرَّقَ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ.
பாடம் : 4
‘‘ஐந்தாவது தடவை, ‘அவன் (தனது குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக’ என்று அவள் சாட்சியம் அளிக்க வேண்டும்” எனும் (24:9ஆவது) இறைவசனம்
4748. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் ‘‘குழந்தை அப்பெண்ணிற்குரியது” என்று தீர்ப்பளித்து, ‘லிஆன்’ செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள்.

4749. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها – {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ} قَالَتْ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ.
பாடம் : 5
‘‘அவதூறு கற்பித்தவர்கள் உங்க ளில் ஒரு குழுவினர்தான். அதை உங்களுக்குத் தீங்காகக் கருதாதீர்கள். அது உங்களுக்கு நன்மையானதே! (அவதூறு கற்பித்த) அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவர் தேடிக்கொண்ட பாவம் உண்டு. அதில் அதிகப் பங்குபெற்ற (அவர் களின் தலை)வனுக்கு மிகப் பெரும் வேதனையுண்டு” எனும் (24:11ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘இஃப்க்’ எனும் சொல்லின் மிகைச் சொல்லான) ‘அஃப்பாக்’ எனும் சொல்லுக்கு ‘மகா பொய்யன்’ (பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்) என்பது பொருள்.
4749. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப் பெரும் வேதனையுண்டு” எனும் (24:11ஆவது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்’ என்பானைக் குறிக்கிறது.

4750. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةُ بْنُ وَقَّاصٍ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ، وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا، وَإِنْ كَانَ بَعْضُهُمْ أَوْعَى لَهُ مِنْ بَعْضٍ الَّذِي حَدَّثَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَهُ، قَالَتْ عَائِشَةُ فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا، فَخَرَجَ سَهْمِي، فَخَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ، فَأَنَا أُحْمَلُ فِي هَوْدَجِي وَأُنْزَلُ فِيهِ فَسِرْنَا حَتَّى إِذَا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَتِهِ تِلْكَ وَقَفَلَ، وَدَنَوْنَا مِنَ الْمَدِينَةِ قَافِلِينَ آذَنَ لَيْلَةً بِالرَّحِيلِ، فَقُمْتُ حِينَ آذَنُوا بِالرَّحِيلِ، فَمَشَيْتُ حَتَّى جَاوَزْتُ الْجَيْشَ، فَلَمَّا قَضَيْتُ شَأْنِي أَقْبَلْتُ إِلَى رَحْلِي، فَإِذَا عِقْدٌ لِي مِنْ جَزْعِ ظَفَارِ قَدِ انْقَطَعَ فَالْتَمَسْتُ عِقْدِي وَحَبَسَنِي ابْتِغَاؤُهُ وَأَقْبَلَ الرَّهْطُ الَّذِينَ كَانُوا يَرْحَلُونَ لِي، فَاحْتَمَلُوا هَوْدَجِي، فَرَحَلُوهُ عَلَى بَعِيرِي الَّذِي كُنْتُ رَكِبْتُ، وَهُمْ يَحْسِبُونَ أَنِّي فِيهِ، وَكَانَ النِّسَاءُ إِذْ ذَاكَ خِفَافًا لَمْ يُثْقِلْهُنَّ اللَّحْمُ، إِنَّمَا تَأْكُلُ الْعُلْقَةَ مِنَ الطَّعَامِ فَلَمْ يَسْتَنْكِرِ الْقَوْمُ خِفَّةَ الْهَوْدَجِ حِينَ رَفَعُوهُ، وَكُنْتُ جَارِيَةً حَدِيثَةَ السِّنِّ، فَبَعَثُوا الْجَمَلَ وَسَارُوا، فَوَجَدْتُ عِقْدِي بَعْدَ مَا اسْتَمَرَّ الْجَيْشُ، فَجِئْتُ مَنَازِلَهُمْ، وَلَيْسَ بِهَا دَاعٍ وَلاَ مُجِيبٌ، فَأَمَمْتُ مَنْزِلِي الَّذِي كُنْتُ بِهِ وَظَنَنْتُ أَنَّهُمْ سَيَفْقِدُونِي فَيَرْجِعُونَ إِلَىَّ فَبَيْنَا أَنَا جَالِسَةٌ فِي مَنْزِلِي غَلَبَتْنِي عَيْنِي فَنِمْتُ، وَكَانَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ السُّلَمِيُّ ثُمَّ الذَّكْوَانِيُّ مِنْ وَرَاءِ الْجَيْشِ، فَأَدْلَجَ فَأَصْبَحَ عِنْدَ مَنْزِلِي، فَرَأَى سَوَادَ إِنْسَانٍ نَائِمٍ، فَأَتَانِي فَعَرَفَنِي حِينَ رَآنِي، وَكَانَ يَرَانِي قَبْلَ الْحِجَابِ، فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ عَرَفَنِي فَخَمَّرْتُ وَجْهِي بِجِلْبَابِي، وَاللَّهِ مَا كَلَّمَنِي كَلِمَةً وَلاَ سَمِعْتُ مِنْهُ كَلِمَةً غَيْرَ اسْتِرْجَاعِهِ، حَتَّى أَنَاخَ رَاحِلَتَهُ فَوَطِئَ عَلَى يَدَيْهَا فَرَكِبْتُهَا فَانْطَلَقَ يَقُودُ بِي الرَّاحِلَةَ حَتَّى أَتَيْنَا الْجَيْشَ، بَعْدَ مَا نَزَلُوا مُوغِرِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ، فَهَلَكَ مَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي تَوَلَّى الإِفْكَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ فَقَدِمْنَا الْمَدِينَةَ، فَاشْتَكَيْتُ حِينَ قَدِمْتُ شَهْرًا، وَالنَّاسُ يُفِيضُونَ فِي قَوْلِ أَصْحَابِ الإِفْكِ، لاَ أَشْعُرُ بِشَىْءٍ مِنْ ذَلِكَ، وَهْوَ يَرِيبُنِي فِي وَجَعِي أَنِّي لاَ أَعْرِفُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اللَّطَفَ الَّذِي كُنْتُ أَرَى مِنْهُ حِينَ أَشْتَكِي، إِنَّمَا يَدْخُلُ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَيُسَلِّمُ ثُمَّ يَقُولُ " كَيْفَ تِيكُمْ ". ثُمَّ يَنْصَرِفُ، فَذَاكَ الَّذِي يَرِيبُنِي، وَلاَ أَشْعُرُ حَتَّى خَرَجْتُ بَعْدَ مَا نَقَهْتُ، فَخَرَجَتْ مَعِي أُمُّ مِسْطَحٍ قِبَلَ الْمَنَاصِعِ، وَهْوَ مُتَبَرَّزُنَا، وَكُنَّا لاَ نَخْرُجُ إِلاَّ لَيْلاً إِلَى لَيْلٍ، وَذَلِكَ قَبْلَ أَنْ نَتَّخِذَ الْكُنُفَ قَرِيبًا مِنْ بُيُوتِنَا، وَأَمْرُنَا أَمْرُ الْعَرَبِ الأُوَلِ فِي التَّبَرُّزِ قِبَلَ الْغَائِطِ، فَكُنَّا نَتَأَذَّى بِالْكُنُفِ أَنْ نَتَّخِذَهَا عِنْدَ بُيُوتِنَا فَانْطَلَقْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ، وَهْىَ ابْنَةُ أَبِي رُهْمِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَأُمُّهَا بِنْتُ صَخْرِ بْنِ عَامِرٍ خَالَةُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَابْنُهَا مِسْطَحُ بْنُ أُثَاثَةَ، فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ قِبَلَ بَيْتِي، قَدْ فَرَغْنَا مِنْ شَأْنِنَا، فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ لَهَا بِئْسَ مَا قُلْتِ أَتَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا قَالَتْ أَىْ هَنْتَاهُ، أَوَلَمْ تَسْمَعِي مَا قَالَ قَالَتْ قُلْتُ وَمَا قَالَ فَأَخْبَرَتْنِي بِقَوْلِ أَهْلِ الإِفْكِ فَازْدَدْتُ مَرَضًا عَلَى مَرَضِي، فَلَمَّا رَجَعْتُ إِلَى بَيْتِي وَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَعْنِي سَلَّمَ ثُمَّ قَالَ " كَيْفَ تِيكُمْ ". فَقُلْتُ أَتَأْذَنُ لِي أَنْ آتِيَ أَبَوَىَّ قَالَتْ وَأَنَا حِينَئِذٍ أُرِيدُ أَنْ أَسْتَيْقِنَ الْخَبَرَ مِنْ قِبَلِهِمَا، قَالَتْ فَأَذِنَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجِئْتُ أَبَوَىَّ فَقُلْتُ لأُمِّي يَا أُمَّتَاهْ، مَا يَتَحَدَّثُ النَّاسُ قَالَتْ يَا بُنَيَّةُ، هَوِّنِي عَلَيْكَ فَوَاللَّهِ، لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ قَطُّ وَضِيئَةً عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا وَلَهَا ضَرَائِرُ إِلاَّ كَثَّرْنَ عَلَيْهَا. قَالَتْ فَقُلْتُ سُبْحَانَ اللَّهِ وَلَقَدْ تَحَدَّثَ النَّاسُ بِهَذَا قَالَتْ فَبَكَيْتُ تِلْكَ اللَّيْلَةَ حَتَّى أَصْبَحْتُ لاَ يَرْقَأُ لِي دَمْعٌ، وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ حَتَّى أَصْبَحْتُ أَبْكِي فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَأُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ، يَسْتَأْمِرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، قَالَتْ فَأَمَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ فَأَشَارَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَبِالَّذِي يَعْلَمُ لَهُمْ فِي نَفْسِهِ مِنَ الْوُدِّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَهْلَكَ، وَمَا نَعْلَمُ إِلاَّ خَيْرًا، وَأَمَّا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَإِنْ تَسْأَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ، قَالَتْ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَرِيرَةَ فَقَالَ " أَىْ بَرِيرَةُ، هَلْ رَأَيْتِ عَلَيْهَا مِنْ شَىْءٍ يَرِيبُكِ ". قَالَتْ بَرِيرَةُ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا أَغْمِصُهُ عَلَيْهَا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَعْذَرَ يَوْمَئِذٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ ابْنِ سَلُولَ، قَالَتْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ " يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ، قَدْ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِ بَيْتِي، فَوَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلاَّ خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلاً، مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا، وَمَا كَانَ يَدْخُلُ عَلَى أَهْلِي إِلاَّ مَعِي ". فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ الأَنْصَارِيُّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَعْذِرُكَ مِنْهُ، إِنْ كَانَ مِنَ الأَوْسِ، ضَرَبْتُ عُنُقَهُ، وَإِنْ كَانَ مِنْ إِخْوَانِنَا مِنَ الْخَزْرَجِ، أَمَرْتَنَا، فَفَعَلْنَا أَمْرَكَ، قَالَتْ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ وَهْوَ سَيِّدُ الْخَزْرَجِ، وَكَانَ قَبْلَ ذَلِكَ رَجُلاً صَالِحًا، وَلَكِنِ احْتَمَلَتْهُ الْحَمِيَّةُ فَقَالَ لِسَعْدٍ كَذَبْتَ، لَعَمْرُ اللَّهِ لاَ تَقْتُلُهُ، وَلاَ تَقْدِرُ عَلَى قَتْلِهِ، فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَهْوَ ابْنُ عَمِّ سَعْدٍ، فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ كَذَبْتَ، لَعَمْرُ اللَّهِ لَنَقْتُلَنَّهُ، فَإِنَّكَ مُنَافِقٌ تُجَادِلُ عَنِ الْمُنَافِقِينَ، فَتَثَاوَرَ الْحَيَّانِ الأَوْسُ وَالْخَزْرَجُ حَتَّى هَمُّوا أَنْ يَقْتَتِلُوا، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ عَلَى الْمِنْبَرِ، فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُخَفِّضُهُمْ حَتَّى سَكَتُوا وَسَكَتَ، قَالَتْ فَمَكُثْتُ يَوْمِي ذَلِكَ لاَ يَرْقَأُ لِي دَمْعٌ وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ، قَالَتْ فَأَصْبَحَ أَبَوَاىَ عِنْدِي ـ وَقَدْ بَكَيْتُ لَيْلَتَيْنِ وَيَوْمًا لاَ أَكْتَحِلُ بِنَوْمٍ وَلاَ يَرْقَأُ لِي دَمْعٌ ـ يَظُنَّانِ أَنَّ الْبُكَاءَ فَالِقٌ كَبِدِي، قَالَتْ فَبَيْنَمَا هُمَا جَالِسَانِ عِنْدِي وَأَنَا أَبْكِي، فَاسْتَأْذَنَتْ عَلَىَّ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، فَأَذِنْتُ لَهَا، فَجَلَسَتْ تَبْكِي مَعِي، قَالَتْ فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمَ ثُمَّ جَلَسَ قَالَتْ وَلَمْ يَجْلِسْ عِنْدِي مُنْذُ قِيلَ مَا قِيلَ قَبْلَهَا، وَقَدْ لَبِثَ شَهْرًا، لاَ يُوحَى إِلَيْهِ فِي شَأْنِي، قَالَتْ فَتَشَهَّدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ جَلَسَ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ، فَإِنَّهُ قَدْ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبِهِ ثُمَّ تَابَ إِلَى اللَّهِ تَابَ اللَّهُ عَلَيْهِ ". قَالَتْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقَالَتَهُ، قَلَصَ دَمْعِي حَتَّى مَا أُحِسُّ مِنْهُ قَطْرَةً، فَقُلْتُ لأَبِي أَجِبْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا قَالَ. قَالَ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لأُمِّي أَجِيبِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتْ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ فَقُلْتُ وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ لاَ أَقْرَأُ كَثِيرًا مِنَ الْقُرْآنِ، إِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَقَدْ سَمِعْتُمْ هَذَا الْحَدِيثَ حَتَّى اسْتَقَرَّ فِي أَنْفُسِكُمْ، وَصَدَّقْتُمْ بِهِ فَلَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي بَرِيئَةٌ وَاللَّهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ لاَ تُصَدِّقُونِي بِذَلِكَ، وَلَئِنِ اعْتَرَفْتُ لَكُمْ بِأَمْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي مِنْهُ بَرِيئَةٌ لَتُصَدِّقُنِّي، وَاللَّهِ مَا أَجِدُ لَكُمْ مَثَلاً إِلاَّ قَوْلَ أَبِي يُوسُفَ قَالَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} قَالَتْ ثُمَّ تَحَوَّلْتُ فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي، قَالَتْ وَأَنَا حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ، وَأَنَّ اللَّهَ مُبَرِّئِي بِبَرَاءَتِي، وَلَكِنْ وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ مُنْزِلٌ فِي شَأْنِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَلَكِنْ كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ بِهَا، قَالَتْ فَوَاللَّهِ مَا رَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ خَرَجَ أَحَدٌ مِنْ أَهْلِ الْبَيْتِ حَتَّى أُنْزِلَ عَلَيْهِ، فَأَخَذَهُ مَا كَانَ يَأْخُذُهُ مِنَ الْبُرَحَاءِ حَتَّى إِنَّهُ لَيَتَحَدَّرُ مِنْهُ مِثْلُ الْجُمَانِ مِنَ الْعَرَقِ، وَهْوَ فِي يَوْمٍ شَاتٍ مِنْ ثِقَلِ الْقَوْلِ الَّذِي يُنْزَلُ عَلَيْهِ، قَالَتْ فَلَمَّا سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سُرِّيَ عَنْهُ وَهْوَ يَضْحَكُ، فَكَانَتْ أَوَّلُ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا " يَا عَائِشَةُ، أَمَّا اللَّهُ عَزَّ وَجَلَّ فَقَدْ بَرَّأَكِ ". فَقَالَتْ أُمِّي قُومِي إِلَيْهِ. قَالَتْ فَقُلْتُ وَاللَّهِ، لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُ إِلاَّ اللَّهَ عَزَّ وَجَلَّ. وَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ لاَ تَحْسِبُوهُ} الْعَشْرَ الآيَاتِ كُلَّهَا، فَلَمَّا أَنْزَلَ اللَّهُ هَذَا فِي بَرَاءَتِي قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ رضى الله عنه ـ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحِ بْنِ أُثَاثَةَ لِقَرَابَتِهِ مِنْهُ، وَفَقْرِهِ وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ مَا قَالَ، فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} قَالَ أَبُو بَكْرٍ بَلَى، وَاللَّهِ إِنِّي أُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ، وَقَالَ وَاللَّهِ لاَ أَنْزِعُهَا مِنْهُ أَبَدًا. قَالَتْ عَائِشَةُ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُ زَيْنَبَ ابْنَةَ جَحْشٍ عَنْ أَمْرِي، فَقَالَ " يَا زَيْنَبُ مَاذَا عَلِمْتِ أَوْ رَأَيْتِ ". فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَحْمِي سَمْعِي وَبَصَرِي، مَا عَلِمْتُ إِلاَّ خَيْرًا. قَالَتْ وَهْىَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْ أَزْوَاجِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَصَمَهَا اللَّهُ بِالْوَرَعِ، وَطَفِقَتْ أُخْتُهَا حَمْنَةُ تُحَارِبُ لَهَا فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ مِنْ أَصْحَابِ الإِفْكِ.
பாடம் : 6
‘‘நீங்கள் இதைச் செவியுற்றபோதே இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டு, இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று கூறியிருக்க வேண்டாமா? அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவந்திருக்க வேண்டாமா? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர் களே பொய்யர்கள் ஆவர்” (எனும் 24:12,13 ஆகிய வசனங்கள்)
4750. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று இறைவன் (தனது வேதத்தில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர்.
அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதி யினை எனக்கு அறிவித்தனர். அவர்களில் சிலர் சிலரைவிட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மற்றவரின் அறிவிப்பு அமைந்திருந்தது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்ததாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.
இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கப்படுவேன்.
நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக்கொண்டி ருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிóருந்து) எழுந்து (இயற்கைக்கடனை நிறை வேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கிச் சென்றேன்.
அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டது. ஆகவே நான் (திரும்பிச் சென்று) எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்றபிறகு (காணாமற்போன) எனது மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை.
நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.
படை சென்றதற்குப் பின்னால் (படை ‘னர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.
அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.
அவர் என்னை அறிந்துகொண்டு ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் ‘இன்னா óல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’ என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தமது காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.
இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக் காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என்மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.
பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்றுவிட்டேன்.
மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.
நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல்போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு ‘எப்படி இருக்கிறாய்’ என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்குமுன்) எனக்குத் தெரியாது.
நோயிலிருந்து குணமடைந்தபின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ’ (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்றுகொண்டிருந்தோம்.
கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முந்தைய அரபியரின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப் பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.
நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூருஹ்ம் (பின் முத்தலிப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா (பின் அப்பாத் பின் முத்தலிப்) ஆவார்.
(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார்.
நான், ‘‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?” என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார். ‘‘என்ன சொன்னார்?” என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது நோய் இன்னும் அதிகரித்துவிட்டது.
நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, ‘‘எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அப்போது நான் ‘‘என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?” என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என்மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக்கொள்ள அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.
என் தாயாரிடம், ‘‘அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்.
உடனே நான், ‘‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!” என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலைவரை நான் அழுதேன். என் கண்ணீரும் ஓயவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.
(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உசாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வேதஅறிவிப்பு (தாற்காó கமாக) நின்றுபோயிருந்தது.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர் களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார்மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியாரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை” என்று அப்போது உசாமா சொன்னார்கள்.
அலீ அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘‘பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, ‘‘தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விவரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.
அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு, ‘‘முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்ல தையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போதுதான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். (தனியாக வந்ததில்லை)” என்று கூறினார்கள்.
உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான ‘கஸ்ரஜ்’ குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்” என்று கூறினார்கள்.
உடனே சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவராவார். இவர் அதற்குமுன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, ‘‘அல்லாஹ்வின் மீதணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்ல மாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது” என்று கூறினார்.
உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் சஅத் பின் உபாதா அவர்களிடம் ‘‘நீர்தான் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்கர்களின் சார்பாக வாதிடுகின்றீர்!” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக்கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.
அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுதுவிட்டிருந்தேன். என் ஈரல் பிளந்துவிடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தனர்.
நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள்.
நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விட மிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்துவந்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘‘ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.
அப்போது நான் என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்) இடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் கூறுங்கள்!” என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வதென்பதே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்!” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘‘நானோ வயது குறைந்த இளம் பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப்போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் -அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும் (12:18) என்று கூறினேன்.
பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக்கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வேத அறிவிப்பை (வஹீயை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திóருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரமநிலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கிவிட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத் தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது.
அந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை ‘‘ஆயிஷா! வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விட்டான்” என்பதாகவே இருந்தது.
உடனே என் தாயார், ‘‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்!” என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்” என்று சொன்னேன்.
(அப்போது) அல்லாஹ், ‘‘அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்.
அப்போது அல்லாஹ் ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர் களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்க ளுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் சொன்னார்கள்.
(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம்முடைய இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். ‘‘ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன ‘அறிந்திருக்கிறாய்?’ அல்லது ‘பார்த்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று கூறினார்கள்.
ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்ச முடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக்கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.6

4751. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُلَيْمَانُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ أُمِّ رُومَانَ أُمِّ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لَمَّا رُمِيَتْ عَائِشَةُ خَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا.
பாடம் : 7
‘‘உங்கள்மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக்கும்” எனும் (24:14ஆவது) இறைவசனம்
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:
(24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலக்கவ்னஹு’ (அதை எடுத்துக்கொண்டி ருந்தீர்கள்) என்பதற்கு ‘‘உங்களில் சிலர் சிலருக்கு அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்” என்பது பொருள்.
(25:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஃபள்த்தும்’ எனும் சொல்லின் எதிர்கால வினைச்சொல்லும் 10:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘துஃபீளூன்’ என்பதன் பொருள் ‘நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்’ என்பதாகும்.
4751. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம்மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்.7

4752. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ سَمِعْتُ عَائِشَةَ، تَقْرَأُ {إِذْ تَلِقُونَهُ بِأَلْسِنَتِكُمْ}
பாடம் : 8
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்துகொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது (எனும் 24:15ஆவது இறை வசனம்)
4752. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஃத் தலக்கவ்னஹு’ (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இஃத் தலிகூனஹு’ (நீங்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.8

4753. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ اسْتَأْذَنَ ابْنُ عَبَّاسٍ قَبْلَ مَوْتِهَا عَلَى عَائِشَةَ، وَهْىَ مَغْلُوبَةٌ قَالَتْ أَخْشَى أَنْ يُثْنِيَ عَلَىَّ. فَقِيلَ ابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمِنْ وُجُوهِ الْمُسْلِمِينَ. قَالَتِ ائْذَنُوا لَهُ. فَقَالَ كَيْفَ تَجِدِينَكِ قَالَتْ بِخَيْرٍ إِنِ اتَّقَيْتُ. قَالَ فَأَنْتِ بِخَيْرٍ ـ إِنْ شَاءَ اللَّهُ ـ زَوْجَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَنْكِحْ بِكْرًا غَيْرَكِ، وَنَزَلَ عُذْرُكِ مِنَ السَّمَاءِ. وَدَخَلَ ابْنُ الزُّبَيْرِ خِلاَفَهُ فَقَالَتْ دَخَلَ ابْنُ عَبَّاسٍ فَأَثْنَى عَلَىَّ وَوَدِدْتُ أَنِّي كُنْتُ نِسْيًا مَنْسِيًّا.
பாடம் : 9
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, ‘‘இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; (அல்லாஹ்வே!) நீ தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்)
4753. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்ப தற்குமுன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘என்னை அவர் புகழ்ந்து பேசிவிடுவாரோ என அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது ‘‘(வந்திருப்பவர்) நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும் முஸ்லிம் களில் முக்கியமானவரும் ஆவார்” என்று சொல்லப்பட்டது.
உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்” என்று சொன்னார்கள். (அன்னார் உள்ளே வந்ததும்,) ‘‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்” என்று பதிலளித் தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாவீர்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணம் புரியவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று” என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.
(அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்” என்று சொன்னார்கள்.

4754. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ اسْتَأْذَنَ عَلَى عَائِشَةَ نَحْوَهُ. وَلَمْ يَذْكُرْ نِسْيًا مَنْسِيًّا.
பாடம் : 9
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, ‘‘இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; (அல்லாஹ்வே!) நீ தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்)
4754. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘மறக்கப்பட்டுவிட்டவளாக’ என்பதைக் கூறவில்லை.

4755. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَ حَسَّانُ بْنُ ثَابِتٍ يَسْتَأْذِنُ عَلَيْهَا قُلْتُ أَتَأْذَنِينَ لِهَذَا قَالَتْ أَوَلَيْسَ قَدْ أَصَابَهُ عَذَابٌ عَظِيمٌ. قَالَ سُفْيَانُ تَعْنِي ذَهَابَ بَصَرِهِ. فَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ قَالَتْ لَكِنْ أَنْتَ. .. .
பாடம் : 10
‘‘நீங்கள் இறைநம்பிக்கையாளர் களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான்” எனும் (24:17ஆவது) இறைவசனம்
4755. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக்கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?” என்று கூறினார்கள்.
‘‘ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (இறுதிக் காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்” என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்”
என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள்.
அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நீங்கள் (அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தான் நீங்கள்)” என்று கூறி னார்கள்.9

4756. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلَ حَسَّانُ بْنُ ثَابِتٍ عَلَى عَائِشَةَ فَشَبَّبَ وَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ قَالَتْ لَسْتَ كَذَاكَ. قُلْتُ تَدَعِينَ مِثْلَ هَذَا يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ أَنْزَلَ اللَّهُ {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ} فَقَالَتْ وَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى وَقَالَتْ وَقَدْ كَانَ يَرُدُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 11
(இவ்வாறு) அல்லாஹ் தன் வசனங் களை உங்களுக்கு விவரித்துக் கூறுகின்றான். அல்லாஹ் நன் கறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான் (எனும் 24:18ஆவது இறைவசனம்)
4756. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) வந்து,
‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்”
என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!” என்று சொன்னார்கள்.
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகின்றீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர் களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (24:11ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறேது?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பாக (அவர்கள்மீது வசைக்கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்” என்று சொன்னார்கள்.10

4757. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ذُكِرَ مِنْ شَأْنِي الَّذِي ذُكِرَ وَمَا عَلِمْتُ بِهِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيَّ خَطِيبًا، فَتَشَهَّدَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ أَشِيرُوا عَلَىَّ فِي أُنَاسٍ أَبَنُوا أَهْلِي، وَايْمُ اللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي مِنْ سُوءٍ، وَأَبَنُوهُمْ بِمَنْ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهِ مِنْ سُوءٍ قَطُّ، وَلاَ يَدْخُلُ بَيْتِي قَطُّ إِلاَّ وَأَنَا حَاضِرٌ، وَلاَ غِبْتُ فِي سَفَرٍ إِلاَّ غَابَ مَعِي ". فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ نَضْرِبَ أَعْنَاقَهُمْ، وَقَامَ رَجُلٌ مِنْ بَنِي الْخَزْرَجِ، وَكَانَتْ أُمُّ حَسَّانَ بْنِ ثَابِتٍ مِنْ رَهْطِ ذَلِكَ الرَّجُلِ، فَقَالَ كَذَبْتَ، أَمَا وَاللَّهِ، أَنْ لَوْ كَانُوا مِنَ الأَوْسِ مَا أَحْبَبْتَ أَنْ تُضْرَبَ أَعْنَاقُهُمْ. حَتَّى كَادَ أَنْ يَكُونَ بَيْنَ الأَوْسِ وَالْخَزْرَجِ شَرٌّ فِي الْمَسْجِدِ، وَمَا عَلِمْتُ فَلَمَّا كَانَ مَسَاءُ ذَلِكَ الْيَوْمِ خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي وَمَعِي أُمُّ مِسْطَحٍ. فَعَثَرَتْ وَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ أَىْ أُمِّ تَسُبِّينَ ابْنَكِ وَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّانِيَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا تَسُبِّينَ ابْنَكِ ثُمَّ عَثَرَتِ الثَّالِثَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَانْتَهَرْتُهَا، فَقَالَتْ وَاللَّهِ مَا أَسُبُّهُ إِلاَّ فِيكِ. فَقُلْتُ فِي أَىِّ شَأْنِي قَالَتْ فَبَقَرَتْ لِي الْحَدِيثَ فَقُلْتُ وَقَدْ كَانَ هَذَا قَالَتْ نَعَمْ وَاللَّهِ، فَرَجَعْتُ إِلَى بَيْتِي كَأَنَّ الَّذِي خَرَجْتُ لَهُ لاَ أَجِدُ مِنْهُ قَلِيلاً وَلاَ كَثِيرًا، وَوُعِكْتُ فَقُلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسِلْنِي إِلَى بَيْتِ أَبِي. فَأَرْسَلَ مَعِي الْغُلاَمَ، فَدَخَلْتُ الدَّارَ فَوَجَدْتُ أُمَّ رُومَانَ فِي السُّفْلِ وَأَبَا بَكْرٍ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ. فَقَالَتْ أُمِّي مَا جَاءَ بِكِ يَا بُنَيَّةُ فَأَخْبَرْتُهَا وَذَكَرْتُ لَهَا الْحَدِيثَ، وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مِثْلَ مَا بَلَغَ مِنِّي، فَقَالَتْ يَا بُنَيَّةُ خَفِّضِي عَلَيْكِ الشَّأْنَ، فَإِنَّهُ وَاللَّهِ، لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ حَسْنَاءُ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا، لَهَا ضَرَائِرُ، إِلاَّ حَسَدْنَهَا وَقِيلَ فِيهَا. وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي، قُلْتُ وَقَدْ عَلِمَ بِهِ أَبِي قَالَتْ نَعَمْ. قُلْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ نَعَمْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاسْتَعْبَرْتُ وَبَكَيْتُ، فَسَمِعَ أَبُو بَكْرٍ صَوْتِي وَهْوَ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ، فَنَزَلَ فَقَالَ لأُمِّي مَا شَأْنُهَا قَالَتْ بَلَغَهَا الَّذِي ذُكِرَ مِنْ شَأْنِهَا. فَفَاضَتْ عَيْنَاهُ، قَالَ أَقْسَمْتُ عَلَيْكِ أَىْ بُنَيَّةُ إِلاَّ رَجَعْتِ إِلَى بَيْتِكِ، فَرَجَعْتُ وَلَقَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتِي، فَسَأَلَ عَنِّي خَادِمَتِي فَقَالَتْ لاَ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا عَيْبًا إِلاَّ أَنَّهَا كَانَتْ تَرْقُدُ حَتَّى تَدْخُلَ الشَّاةُ فَتَأْكُلَ خَمِيرَهَا أَوْ عَجِينَهَا. وَانْتَهَرَهَا بَعْضُ أَصْحَابِهِ فَقَالَ اصْدُقِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَسْقَطُوا لَهَا بِهِ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ مَا يَعْلَمُ الصَّائِغُ عَلَى تِبْرِ الذَّهَبِ الأَحْمَرِ. وَبَلَغَ الأَمْرُ إِلَى ذَلِكَ الرَّجُلِ الَّذِي قِيلَ لَهُ، فَقَالَ سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا كَشَفْتُ كَنَفَ أُنْثَى قَطُّ. قَالَتْ عَائِشَةُ فَقُتِلَ شَهِيدًا فِي سَبِيلِ اللَّهِ. قَالَتْ وَأَصْبَحَ أَبَوَاىَ عِنْدِي، فَلَمْ يَزَالاَ حَتَّى دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ وَقَدِ اكْتَنَفَنِي أَبَوَاىَ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ، إِنْ كُنْتِ قَارَفْتِ سُوءًا أَوْ ظَلَمْتِ، فَتُوبِي إِلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ يَقْبَلُ التَّوْبَةَ مِنْ عِبَادِهِ ". قَالَتْ وَقَدْ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَهْىَ جَالِسَةٌ بِالْبَابِ فَقُلْتُ أَلاَ تَسْتَحِي مِنْ هَذِهِ الْمَرْأَةِ أَنْ تَذْكُرَ شَيْئًا. فَوَعَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَالْتَفَتُّ إِلَى أَبِي فَقُلْتُ أَجِبْهُ. قَالَ فَمَاذَا أَقُولُ فَالْتَفَتُّ إِلَى أُمِّي فَقُلْتُ أَجِيبِيهِ. فَقَالَتْ أَقُولُ مَاذَا فَلَمَّا لَمْ يُجِيبَاهُ تَشَهَّدْتُ فَحَمِدْتُ اللَّهَ وَأَثْنَيْتُ عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قُلْتُ أَمَّا بَعْدُ فَوَاللَّهِ لَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي لَمْ أَفْعَلْ. وَاللَّهُ عَزَّ وَجَلَّ يَشْهَدُ إِنِّي لَصَادِقَةٌ، مَا ذَاكَ بِنَافِعِي عِنْدَكُمْ، لَقَدْ تَكَلَّمْتُمْ بِهِ وَأُشْرِبَتْهُ قُلُوبُكُمْ، وَإِنْ قُلْتُ إِنِّي فَعَلْتُ. وَاللَّهُ يَعْلَمُ أَنِّي لَمْ أَفْعَلْ، لَتَقُولُنَّ قَدْ بَاءَتْ بِهِ عَلَى نَفْسِهَا، وَإِنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلاً ـ وَالْتَمَسْتُ اسْمَ يَعْقُوبَ فَلَمْ أَقْدِرْ عَلَيْهِ ـ إِلاَّ أَبَا يُوسُفَ حِينَ قَالَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} وَأُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ سَاعَتِهِ فَسَكَتْنَا، فَرُفِعَ عَنْهُ وَإِنِّي لأَتَبَيَّنُ السُّرُورَ فِي وَجْهِهِ وَهْوَ يَمْسَحُ جَبِينَهُ وَيَقُولُ " أَبْشِرِي يَا عَائِشَةُ، فَقَدْ أَنْزَلَ اللَّهُ بَرَاءَتَكِ ". قَالَتْ وَكُنْتُ أَشَدَّ مَا كُنْتُ غَضَبًا فَقَالَ لِي أَبَوَاىَ قُومِي إِلَيْهِ. فَقُلْتُ وَاللَّهِ لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُهُ وَلاَ أَحْمَدُكُمَا، وَلَكِنْ أَحْمَدُ اللَّهَ الَّذِي أَنْزَلَ بَرَاءَتِي، لَقَدْ سَمِعْتُمُوهُ، فَمَا أَنْكَرْتُمُوهُ وَلاَ غَيَّرْتُمُوهُ، وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ أَمَّا زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَعَصَمَهَا اللَّهُ بِدِينِهَا، فَلَمْ تَقُلْ إِلاَّ خَيْرًا، وَأَمَّا أُخْتُهَا حَمْنَةُ فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي يَتَكَلَّمُ فِيهِ مِسْطَحٌ وَحَسَّانُ بْنُ ثَابِتٍ وَالْمُنَافِقُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، وَهْوَ الَّذِي كَانَ يَسْتَوْشِيهِ وَيَجْمَعُهُ، وَهْوَ الَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ هُوَ وَحَمْنَةُ قَالَتْ فَحَلَفَ أَبُو بَكْرٍ أَنْ لاَ يَنْفَعَ مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ} إِلَى آخِرِ الآيَةِ يَعْنِي أَبَا بَكْرٍ vوَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ} ـ يَعْنِي مِسْطَحًا ـ إِلَى قَوْلِهِ {أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} حَتَّى قَالَ أَبُو بَكْرٍ بَلَى وَاللَّهِ يَا رَبَّنَا إِنَّا لَنُحِبُّ أَنْ تَغْفِرَ لَنَا، وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَعُ.
பாடம் : 12
‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகின்றான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் உங்கள்மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாய் இல்லாமலுமிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்” (எனும் 24:19, 20 ஆகிய இறைவசனங்கள்)
(24:19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘தஷீஅ’ எனும் சொல்லுக்கு ‘வெளிப்படுவது’ என்று பொருள்.
‘‘உங்களில் செல்வமும் தயாள குணமும் உள்ளவர்கள் (தங்களுடைய) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு வருத்தம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனும் ஆவான்” (எனும் 24:22ஆவது இறைவசனம்).
4757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தொடர்பாக அவதூறு பேசப் பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள்.
ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிவிட்டு, ‘‘என் மனைவியின் மீது அபாண்டப்பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்” என்று சொன்னார்கள்.
உடனே சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒரு மனிதர் எழுந்து, ‘‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று சொன்னார். -ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களு டைய தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.- (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்கும் இடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும் கைகலப்பும் மூண்டுவிடப் பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.
அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரது கால் (அவரது கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன்.
பின்னர், மூன்றாம் முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்” என்று சொன்னார். நான், ‘‘எனது எந்த விஷயத்திற்காக?” என்று கேட்டேன்.
அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘‘இப்படியா நடந்தது?” என்று கேட்டேன். அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)” என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பதுகூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவுக்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை!
அப்போது அவர்கள் ‘‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன்மீது (பெரிதாக்கிக்கொள்ளாமல்) இலேசாக்கிக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பலபேர் இருக்க, அவர்கள் அவள்மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறைகூறுவதும் இயல்புதான்” என்று சென்னார்கள்.
எனக்கு ஏற்பட்ட அளவுக்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று சொன்னார். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு...?” என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் ஓதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள்.
என் தாயாரிடம் ‘‘இவள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். என் தாயார், ‘‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது” என்று சொன்னார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடம்) அறியவில்லை” என்று சொல்லியிருந்தாள்.
அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!” என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமறுவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்” என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அந்நியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!” என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்தார்.11
என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப் பக்கமும், (மற்றவர்) என் இடப் பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘‘இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள்.
நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் ‘‘நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், ‘‘நான் என்ன சொல்வேன்?” என்று கேட்டார்கள்.
அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்- அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- ‘‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்” என்று நீங்கள் சொல்வீர்கள்!
அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன்” -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- ‘‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன்” என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12
அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள்மீது, (குர்ஆன் வசனங் கள்) அருளப்பெற்றன. ஆகவே, நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘வஹீ’ (‘வேத அறிவிப்பு’ அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் ‘‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்” என்று சொன்னார்கள்.
நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘‘நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!” என்று கூறினர். அதற்கு, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என்மீதான) அவதூற்றைக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை” என்று சொன்னேன்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார்.
(முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும்கூட.
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘மிஸ்தஹுக்கு பயன்தரும் எந்த உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள்.
அப்போது அல்லாஹ், ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.
(இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி, தாம் முன்பு செய்துவந்ததைப் போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்துவரத் தொடங்கினார்கள்.

4758. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِها.
பாடம் : 13
(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31ஆவது வசனத்தொடர்)
4758. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க்கொள்ளட்டும்!” எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.13

4759. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا.
பாடம் : 13
(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31ஆவது வசனத்தொடர்)
4759. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (24:31ஆவது) வசனம்இறங்கியபோது, பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க்கொண்டார்கள்.

4760. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ. أَنَّ رَجُلاً، قَالَ يَا نَبِيَّ اللَّهِ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ " أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ ". قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا.
பாடம்:
25. ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(25:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹபாஅம் மன்ஸூரா’ எனும் சொல் ‘காற்று வாரியிறைக்கக்கூடிய (புழுதி போன்ற)வற்றை’க் குறிக்கும்.
(25:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்தழ் ழில்ல’ (நிழலை நீட்டுகின்றான்)என்பது, ‘ஃபஜ்ர்’ முதல் சூர்யோதயம் வரையிலான நிழலைக் குறிக்கிறது.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாகின்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். ‘அலைஹி தலீல்’ (நிழலுக்கு ஆதாரமாக) என்பதற்கு ‘சூர்யோதயம் நிழலுக்கு ஆதாரமாகும்’ என்று பொருள்.
(25:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கில்ஃபத்’ (பிரதி) எனும் சொல்லின் கருத்தாவது:
இரவில் விடுபட்ட செயலைப் பகலிலும், பகலில் விடுபட்ட செயலை இரவிலும் ஒருவர் நிறைவேற்றிக்கொள்ள முடியும். (‘கில்ஃபத் எனும் இச்சொல்லுக்கு ‘அடுத்தடுத்து வரக்கூடியது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(25:74ஆவது வசனத்திலுள்ள) ‘கண் குளிர்ச்சி’ என்பதன் கருத்தாவது:
இறைவா! (என் மனைவி, மக்கள்) உனக்குக் கீழ்ப்படிவதன் மூலம் (என் கண்களைக் குளிர்ச்சி ஆக்குவாயாக!). தன் அன்பிற்குரியோர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைக் காண்பதைவிட வேறெதுவும் ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணைக் குளிர்ச்சியடையச் செய்துவிடுவதில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(25:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுபூர்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(25:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸஈர்’ (கொழுந்துவிட்டெரியும் நெருப்பு) எனும் சொல் ஆண்பாலாகும். (அதன் வேர்ச்சொல்லான) ‘தஸஃஉர்’ எனும் சொல்லுக்கும் ‘அல்இள்திராம்’ எனும் சொல்லுக்கும் ‘கொழுந்துவிட்டெரிதல்’ என்று பொருள்.
(25:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தும்லா அலைஹி’ எனும் சொற்றொடருக்கு ‘இவருக்கு ஓதிக்காட்டப்படுகின்றன’ என்பது பொருள். இச்சொல் ‘அம்லைத்து’, ‘அம்லல்து’ (ஓதிக்காட்டினேன்) ஆகிய (வினைச்) சொற்களிலிருந்து பிரிந்ததாகும்.
(25:38ஆவது வசனத்தின் மூலத்தில் ‘அஸ்ஹாபுர் ரஸ்ஸி’ என்பதிலுள்ள) ‘அர்ரஸ்ஸு’ எனும் சொல்லுக்கு ‘சுரங்கம்’ என்பது பொருள். ‘ரிஸாஸ்’ (சுரங்கங்கள்) என்பது இதன் பன்மையாகும். (இச்சொல்லுக்கு ‘கிணறு’ என்றும் பொருள் கொள்வோர் உள்ளனர்.)
(25:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா யஅபஉ’ எனும் சொல்லுக்கு ‘பொருட்படுத்தியிருக்கமாட்டான்’ என்பது பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம்பெற்ற) ‘மா அபஉத்து பிஹி ஷைஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை’ என்று பொருள்.
(25:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராம்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘சதா தொல்லை தரக்கூடியது’ என்றும் ‘நிரந்தரமானது’ என்றும் பொருள் கூறப்படுவதுண்டு.)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(25:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அத்தவ்’ எனும் சொல்லுக்கு ‘எல்லை கடந்து அட்டூழியம் புரிந்தனர்’ என்று பொருள்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(25:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தவ்’ எனும் சொல்லின் வினையாலணையும் பெயரும், 69:6ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘ஆத்தியா’ எனும் சொல்லுக்கு ‘காற்றின் காவலர்களான வானவர்களின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது போன்ற கடுமையான சூறாவளிக் காற்று’ என்று பொருள்.
பாடம்: 1
‘‘நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருக்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும்” எனும் (25:34 ஆவது) இறை வசனம்
4760. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்த உலகில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனை, அவனது முகத்தால் நடக்கச்செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.
(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக! ‘‘என்று சொன்னார்கள்.

4761. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،. قَالَ وَحَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ ـ أَوْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَىُّ الذَّنْبِ عِنْدَ اللَّهِ أَكْبَرُ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ ". قَالَ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ تَصْدِيقًا لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلَا يَزْنُونَ}
பாடம்: 2
‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4761. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் கேட்டேன்.’ அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘கேட்கப்பட்டது’. அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பதுதான் (பெரும் பாவம்)” என்று பதிலளித்தார்கள்.
நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான் ‘‘பிறகு எது?” என்று கேட்க, அவர்கள் ‘‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல் களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் இந்த (25:68ஆவது) இறைவசனம் இறங்கிற்று.2
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4762. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ، أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ هَلْ لِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ فَقَرَأْتُ عَلَيْهِ {وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ}. فَقَالَ سَعِيدٌ قَرَأْتُهَا عَلَى ابْنِ عَبَّاسٍ كَمَا قَرَأْتَهَا عَلَىَّ. فَقَالَ هَذِهِ مَكِّيَّةٌ نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ، الَّتِي فِي سُورَةِ النِّسَاءِ.
பாடம்: 2
‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4762. காசிம் பின் அபீபஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை...” எனும் (25:68ஆவது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன்.
அதைக் கேட்ட சயீத் (ரஹ்) அவர்கள், ‘‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘இது (25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிசா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (4:93) மாற்றிவிட்டது” என்று பதிலளித்தார்கள்.3