4751. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُلَيْمَانُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ أُمِّ رُومَانَ أُمِّ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لَمَّا رُمِيَتْ عَائِشَةُ خَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا.
பாடம் : 7 ‘‘உங்கள்மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக்கும்” எனும் (24:14ஆவது) இறைவசனம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலக்கவ்னஹு’ (அதை எடுத்துக்கொண்டி ருந்தீர்கள்) என்பதற்கு ‘‘உங்களில் சிலர் சிலருக்கு அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்” என்பது பொருள். (25:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஃபள்த்தும்’ எனும் சொல்லின் எதிர்கால வினைச்சொல்லும் 10:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘துஃபீளூன்’ என்பதன் பொருள் ‘நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்’ என்பதாகும்.
4751. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம்மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்.7

அத்தியாயம் : 65
4752. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ سَمِعْتُ عَائِشَةَ، تَقْرَأُ {إِذْ تَلِقُونَهُ بِأَلْسِنَتِكُمْ}
பாடம் : 8 இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்துகொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது (எனும் 24:15ஆவது இறை வசனம்)
4752. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(24:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஃத் தலக்கவ்னஹு’ (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இஃத் தலிகூனஹு’ (நீங்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை நான் செவியுற்றேன்.8

அத்தியாயம் : 65
4753. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ اسْتَأْذَنَ ابْنُ عَبَّاسٍ قَبْلَ مَوْتِهَا عَلَى عَائِشَةَ، وَهْىَ مَغْلُوبَةٌ قَالَتْ أَخْشَى أَنْ يُثْنِيَ عَلَىَّ. فَقِيلَ ابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمِنْ وُجُوهِ الْمُسْلِمِينَ. قَالَتِ ائْذَنُوا لَهُ. فَقَالَ كَيْفَ تَجِدِينَكِ قَالَتْ بِخَيْرٍ إِنِ اتَّقَيْتُ. قَالَ فَأَنْتِ بِخَيْرٍ ـ إِنْ شَاءَ اللَّهُ ـ زَوْجَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَنْكِحْ بِكْرًا غَيْرَكِ، وَنَزَلَ عُذْرُكِ مِنَ السَّمَاءِ. وَدَخَلَ ابْنُ الزُّبَيْرِ خِلاَفَهُ فَقَالَتْ دَخَلَ ابْنُ عَبَّاسٍ فَأَثْنَى عَلَىَّ وَوَدِدْتُ أَنِّي كُنْتُ نِسْيًا مَنْسِيًّا.
பாடம் : 9 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, ‘‘இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; (அல்லாஹ்வே!) நீ தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்)
4753. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் இறப்ப தற்குமுன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘என்னை அவர் புகழ்ந்து பேசிவிடுவாரோ என அஞ்சுகிறேன்” என்றார்கள். அப்போது ‘‘(வந்திருப்பவர்) நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும் முஸ்லிம் களில் முக்கியமானவரும் ஆவார்” என்று சொல்லப்பட்டது.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்” என்று சொன்னார்கள். (அன்னார் உள்ளே வந்ததும்,) ‘‘உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்” என்று பதிலளித் தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாவீர்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணம் புரியவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று” என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.

(அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 65
4754. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ اسْتَأْذَنَ عَلَى عَائِشَةَ نَحْوَهُ. وَلَمْ يَذْكُرْ نِسْيًا مَنْسِيًّا.
பாடம் : 9 நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, ‘‘இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; (அல்லாஹ்வே!) நீ தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (எனும் 24:16 ஆவது இறைவசனம்)
4754. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘மறக்கப்பட்டுவிட்டவளாக’ என்பதைக் கூறவில்லை.

அத்தியாயம் : 65
4755. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَ حَسَّانُ بْنُ ثَابِتٍ يَسْتَأْذِنُ عَلَيْهَا قُلْتُ أَتَأْذَنِينَ لِهَذَا قَالَتْ أَوَلَيْسَ قَدْ أَصَابَهُ عَذَابٌ عَظِيمٌ. قَالَ سُفْيَانُ تَعْنِي ذَهَابَ بَصَرِهِ. فَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ قَالَتْ لَكِنْ أَنْتَ. .. .
பாடம் : 10 ‘‘நீங்கள் இறைநம்பிக்கையாளர் களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான்” எனும் (24:17ஆவது) இறைவசனம்
4755. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக்கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?” என்று கூறினார்கள்.

‘‘ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (இறுதிக் காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்” என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்”

என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள்.

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஆனால், நீங்கள் (அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தான் நீங்கள்)” என்று கூறி னார்கள்.9

அத்தியாயம் : 65
4756. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلَ حَسَّانُ بْنُ ثَابِتٍ عَلَى عَائِشَةَ فَشَبَّبَ وَقَالَ حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ قَالَتْ لَسْتَ كَذَاكَ. قُلْتُ تَدَعِينَ مِثْلَ هَذَا يَدْخُلُ عَلَيْكِ وَقَدْ أَنْزَلَ اللَّهُ {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ} فَقَالَتْ وَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى وَقَالَتْ وَقَدْ كَانَ يَرُدُّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 11 (இவ்வாறு) அல்லாஹ் தன் வசனங் களை உங்களுக்கு விவரித்துக் கூறுகின்றான். அல்லாஹ் நன் கறிந்தவனும் ஞானமிக்கவனும் ஆவான் (எனும் 24:18ஆவது இறைவசனம்)
4756. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது) வந்து,

‘‘நீங்கள்பத்தினி;அறிவாளி;சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்.(அவதூறு மூலம்)பேதைப் பெண்களின்மாமிசத்தைப் புசித்துவிடாமல்பட்டினியோடு காலையில் எழுபவர்”

என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!” என்று சொன்னார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகின்றீர்களா? அல்லாஹ்வோ ‘இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர் களுக்குப் பெரும் வேதனை உண்டு’ என்று (24:11ஆவது வசனத்தில்) கூறுகின்றானே!” என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘குருடாவதைவிடப் பெரிய தண்டனை வேறேது?” என்று கேட்டுவிட்டு, ‘‘அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சார்பாக (அவர்கள்மீது வசைக்கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்” என்று சொன்னார்கள்.10

அத்தியாயம் : 65
4757. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ذُكِرَ مِنْ شَأْنِي الَّذِي ذُكِرَ وَمَا عَلِمْتُ بِهِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيَّ خَطِيبًا، فَتَشَهَّدَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ أَشِيرُوا عَلَىَّ فِي أُنَاسٍ أَبَنُوا أَهْلِي، وَايْمُ اللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي مِنْ سُوءٍ، وَأَبَنُوهُمْ بِمَنْ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهِ مِنْ سُوءٍ قَطُّ، وَلاَ يَدْخُلُ بَيْتِي قَطُّ إِلاَّ وَأَنَا حَاضِرٌ، وَلاَ غِبْتُ فِي سَفَرٍ إِلاَّ غَابَ مَعِي ". فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ نَضْرِبَ أَعْنَاقَهُمْ، وَقَامَ رَجُلٌ مِنْ بَنِي الْخَزْرَجِ، وَكَانَتْ أُمُّ حَسَّانَ بْنِ ثَابِتٍ مِنْ رَهْطِ ذَلِكَ الرَّجُلِ، فَقَالَ كَذَبْتَ، أَمَا وَاللَّهِ، أَنْ لَوْ كَانُوا مِنَ الأَوْسِ مَا أَحْبَبْتَ أَنْ تُضْرَبَ أَعْنَاقُهُمْ. حَتَّى كَادَ أَنْ يَكُونَ بَيْنَ الأَوْسِ وَالْخَزْرَجِ شَرٌّ فِي الْمَسْجِدِ، وَمَا عَلِمْتُ فَلَمَّا كَانَ مَسَاءُ ذَلِكَ الْيَوْمِ خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي وَمَعِي أُمُّ مِسْطَحٍ. فَعَثَرَتْ وَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ أَىْ أُمِّ تَسُبِّينَ ابْنَكِ وَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّانِيَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا تَسُبِّينَ ابْنَكِ ثُمَّ عَثَرَتِ الثَّالِثَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَانْتَهَرْتُهَا، فَقَالَتْ وَاللَّهِ مَا أَسُبُّهُ إِلاَّ فِيكِ. فَقُلْتُ فِي أَىِّ شَأْنِي قَالَتْ فَبَقَرَتْ لِي الْحَدِيثَ فَقُلْتُ وَقَدْ كَانَ هَذَا قَالَتْ نَعَمْ وَاللَّهِ، فَرَجَعْتُ إِلَى بَيْتِي كَأَنَّ الَّذِي خَرَجْتُ لَهُ لاَ أَجِدُ مِنْهُ قَلِيلاً وَلاَ كَثِيرًا، وَوُعِكْتُ فَقُلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسِلْنِي إِلَى بَيْتِ أَبِي. فَأَرْسَلَ مَعِي الْغُلاَمَ، فَدَخَلْتُ الدَّارَ فَوَجَدْتُ أُمَّ رُومَانَ فِي السُّفْلِ وَأَبَا بَكْرٍ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ. فَقَالَتْ أُمِّي مَا جَاءَ بِكِ يَا بُنَيَّةُ فَأَخْبَرْتُهَا وَذَكَرْتُ لَهَا الْحَدِيثَ، وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مِثْلَ مَا بَلَغَ مِنِّي، فَقَالَتْ يَا بُنَيَّةُ خَفِّضِي عَلَيْكِ الشَّأْنَ، فَإِنَّهُ وَاللَّهِ، لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ حَسْنَاءُ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا، لَهَا ضَرَائِرُ، إِلاَّ حَسَدْنَهَا وَقِيلَ فِيهَا. وَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي، قُلْتُ وَقَدْ عَلِمَ بِهِ أَبِي قَالَتْ نَعَمْ. قُلْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ نَعَمْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاسْتَعْبَرْتُ وَبَكَيْتُ، فَسَمِعَ أَبُو بَكْرٍ صَوْتِي وَهْوَ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ، فَنَزَلَ فَقَالَ لأُمِّي مَا شَأْنُهَا قَالَتْ بَلَغَهَا الَّذِي ذُكِرَ مِنْ شَأْنِهَا. فَفَاضَتْ عَيْنَاهُ، قَالَ أَقْسَمْتُ عَلَيْكِ أَىْ بُنَيَّةُ إِلاَّ رَجَعْتِ إِلَى بَيْتِكِ، فَرَجَعْتُ وَلَقَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتِي، فَسَأَلَ عَنِّي خَادِمَتِي فَقَالَتْ لاَ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا عَيْبًا إِلاَّ أَنَّهَا كَانَتْ تَرْقُدُ حَتَّى تَدْخُلَ الشَّاةُ فَتَأْكُلَ خَمِيرَهَا أَوْ عَجِينَهَا. وَانْتَهَرَهَا بَعْضُ أَصْحَابِهِ فَقَالَ اصْدُقِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَسْقَطُوا لَهَا بِهِ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ مَا يَعْلَمُ الصَّائِغُ عَلَى تِبْرِ الذَّهَبِ الأَحْمَرِ. وَبَلَغَ الأَمْرُ إِلَى ذَلِكَ الرَّجُلِ الَّذِي قِيلَ لَهُ، فَقَالَ سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا كَشَفْتُ كَنَفَ أُنْثَى قَطُّ. قَالَتْ عَائِشَةُ فَقُتِلَ شَهِيدًا فِي سَبِيلِ اللَّهِ. قَالَتْ وَأَصْبَحَ أَبَوَاىَ عِنْدِي، فَلَمْ يَزَالاَ حَتَّى دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ وَقَدِ اكْتَنَفَنِي أَبَوَاىَ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ، إِنْ كُنْتِ قَارَفْتِ سُوءًا أَوْ ظَلَمْتِ، فَتُوبِي إِلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ يَقْبَلُ التَّوْبَةَ مِنْ عِبَادِهِ ". قَالَتْ وَقَدْ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَهْىَ جَالِسَةٌ بِالْبَابِ فَقُلْتُ أَلاَ تَسْتَحِي مِنْ هَذِهِ الْمَرْأَةِ أَنْ تَذْكُرَ شَيْئًا. فَوَعَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَالْتَفَتُّ إِلَى أَبِي فَقُلْتُ أَجِبْهُ. قَالَ فَمَاذَا أَقُولُ فَالْتَفَتُّ إِلَى أُمِّي فَقُلْتُ أَجِيبِيهِ. فَقَالَتْ أَقُولُ مَاذَا فَلَمَّا لَمْ يُجِيبَاهُ تَشَهَّدْتُ فَحَمِدْتُ اللَّهَ وَأَثْنَيْتُ عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قُلْتُ أَمَّا بَعْدُ فَوَاللَّهِ لَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي لَمْ أَفْعَلْ. وَاللَّهُ عَزَّ وَجَلَّ يَشْهَدُ إِنِّي لَصَادِقَةٌ، مَا ذَاكَ بِنَافِعِي عِنْدَكُمْ، لَقَدْ تَكَلَّمْتُمْ بِهِ وَأُشْرِبَتْهُ قُلُوبُكُمْ، وَإِنْ قُلْتُ إِنِّي فَعَلْتُ. وَاللَّهُ يَعْلَمُ أَنِّي لَمْ أَفْعَلْ، لَتَقُولُنَّ قَدْ بَاءَتْ بِهِ عَلَى نَفْسِهَا، وَإِنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلاً ـ وَالْتَمَسْتُ اسْمَ يَعْقُوبَ فَلَمْ أَقْدِرْ عَلَيْهِ ـ إِلاَّ أَبَا يُوسُفَ حِينَ قَالَ {فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} وَأُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ سَاعَتِهِ فَسَكَتْنَا، فَرُفِعَ عَنْهُ وَإِنِّي لأَتَبَيَّنُ السُّرُورَ فِي وَجْهِهِ وَهْوَ يَمْسَحُ جَبِينَهُ وَيَقُولُ " أَبْشِرِي يَا عَائِشَةُ، فَقَدْ أَنْزَلَ اللَّهُ بَرَاءَتَكِ ". قَالَتْ وَكُنْتُ أَشَدَّ مَا كُنْتُ غَضَبًا فَقَالَ لِي أَبَوَاىَ قُومِي إِلَيْهِ. فَقُلْتُ وَاللَّهِ لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُهُ وَلاَ أَحْمَدُكُمَا، وَلَكِنْ أَحْمَدُ اللَّهَ الَّذِي أَنْزَلَ بَرَاءَتِي، لَقَدْ سَمِعْتُمُوهُ، فَمَا أَنْكَرْتُمُوهُ وَلاَ غَيَّرْتُمُوهُ، وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ أَمَّا زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ فَعَصَمَهَا اللَّهُ بِدِينِهَا، فَلَمْ تَقُلْ إِلاَّ خَيْرًا، وَأَمَّا أُخْتُهَا حَمْنَةُ فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي يَتَكَلَّمُ فِيهِ مِسْطَحٌ وَحَسَّانُ بْنُ ثَابِتٍ وَالْمُنَافِقُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ، وَهْوَ الَّذِي كَانَ يَسْتَوْشِيهِ وَيَجْمَعُهُ، وَهْوَ الَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ هُوَ وَحَمْنَةُ قَالَتْ فَحَلَفَ أَبُو بَكْرٍ أَنْ لاَ يَنْفَعَ مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ} إِلَى آخِرِ الآيَةِ يَعْنِي أَبَا بَكْرٍ vوَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ} ـ يَعْنِي مِسْطَحًا ـ إِلَى قَوْلِهِ {أَلاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ} حَتَّى قَالَ أَبُو بَكْرٍ بَلَى وَاللَّهِ يَا رَبَّنَا إِنَّا لَنُحِبُّ أَنْ تَغْفِرَ لَنَا، وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَعُ.
பாடம் : 12 ‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகின்றான்; நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் உங்கள்மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாய் இல்லாமலுமிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்” (எனும் 24:19, 20 ஆகிய இறைவசனங்கள்) (24:19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘தஷீஅ’ எனும் சொல்லுக்கு ‘வெளிப்படுவது’ என்று பொருள். ‘‘உங்களில் செல்வமும் தயாள குணமும் உள்ளவர்கள் (தங்களுடைய) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு வருத்தம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனும் ஆவான்” (எனும் 24:22ஆவது இறைவசனம்).
4757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தொடர்பாக அவதூறு பேசப் பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள்.

ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிவிட்டு, ‘‘என் மனைவியின் மீது அபாண்டப்பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்” என்று சொன்னார்கள்.

உடனே சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். ‘கஸ்ரஜ்’ குலத்தாரிடையேயிருந்து ஒரு மனிதர் எழுந்து, ‘‘பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) ‘அவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்” என்று சொன்னார். -ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களு டைய தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.- (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) ‘அவ்ஸ்’ குலத்தாருக்கும் ‘கஸ்ரஜ்’ குலத்தாருக்கும் இடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும் கைகலப்பும் மூண்டுவிடப் பார்த்தது. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரது கால் (அவரது கம்பளி அங்கியால்) இடறியது. அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘‘உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?” என்று கேட்டேன்.

பின்னர், மூன்றாம் முறையாக அவரது கால் இடறியது. அப்போதும் அவர், ‘‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான் அவரை அதட்டினேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்” என்று சொன்னார். நான், ‘‘எனது எந்த விஷயத்திற்காக?” என்று கேட்டேன்.

அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், ‘‘இப்படியா நடந்தது?” என்று கேட்டேன். அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)” என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பதுகூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில் விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், ‘‘என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவுக்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை!

அப்போது அவர்கள் ‘‘என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன்மீது (பெரிதாக்கிக்கொள்ளாமல்) இலேசாக்கிக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பலபேர் இருக்க, அவர்கள் அவள்மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறைகூறுவதும் இயல்புதான்” என்று சென்னார்கள்.

எனக்கு ஏற்பட்ட அளவுக்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் ‘‘என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?” என்று கேட்டேன். தாயார் ‘ஆம்’ என்று சொன்னார். ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு...?” என்று கேட்டேன். ‘ஆம்’ அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டின் மேல் தளத்தில் ஓதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள்.

என் தாயாரிடம் ‘‘இவள் விஷயம் என்ன?” என்று கேட்டார்கள். என் தாயார், ‘‘அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது” என்று சொன்னார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்கே திரும்பிச் செல்ல வேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்” என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் ‘‘இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து ‘அவர்கள் பிசைந்து வைத்த மாவை’ அல்லது ‘அவர்கள் குழைத்து வைத்த மாவை’த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடம்) அறியவில்லை” என்று சொல்லியிருந்தாள்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!” என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமறுவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்” என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் ‘‘அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அந்நியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!” என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்தார்.11

என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப் பக்கமும், (மற்றவர்) என் இடப் பக்கமும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘‘ஆயிஷா! நீ ‘தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்’ அல்லது ‘அநீதியிழைத்திருந்தால்’, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறான்” என்று சொன்னார்கள். அப்போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘‘இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?” என்று கேட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள்.

நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் ‘‘நான் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, ‘‘இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள்!” என்றேன். அவர்கள், ‘‘நான் என்ன சொல்வேன்?” என்று கேட்டார்கள்.

அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனது தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான்- அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் -நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான்- ‘‘தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்” என்று நீங்கள் சொல்வீர்கள்!

அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய தந்தையையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக நான் காண்கிறேன்” -அப்போது (யூசுஃப் அவர்களுடைய தந்தை) யஅகூப் (அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால் நினைவுக்கு வரவில்லை- ‘‘(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே நான் பாதுகாப்புக்கோருகிறேன்” என யஅகூப் (அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12

அந்த நேரத்தில் அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள்மீது, (குர்ஆன் வசனங் கள்) அருளப்பெற்றன. ஆகவே, நாங்கள் மௌனமாக இருந்தோம். ‘வஹீ’ (‘வேத அறிவிப்பு’ அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக்கொண்டிருந்தார்கள். மேலும் ‘‘ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்” என்று சொன்னார்கள்.

நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் ‘‘நீ எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் செல்!” என்று கூறினர். அதற்கு, ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என்மீதான) அவதூற்றைக் கேட்டுக்கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்குபெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே சொன்னார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறு பேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்துபோனார்.

(முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் பின் ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும்கூட.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘மிஸ்தஹுக்கு பயன்தரும் எந்த உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள்.

அப்போது அல்லாஹ், ‘‘உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் புலம் பெயர்ந்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணை யுடையோனுமாய் இருக்கின்றான்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.

(இந்த வசனத்தில்) ‘உலுல் ஃபள்ல்’ (செல்வம் படைத்தோர்) என்று அபூபக்ர் (ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். ‘மஸாக்கீன்’ (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக, எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறி, தாம் முன்பு செய்துவந்ததைப் போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்துவரத் தொடங்கினார்கள்.

அத்தியாயம் : 65
4758. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ الأُوَلَ، لَمَّا أَنْزَلَ اللَّهُ {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِها.
பாடம் : 13 (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31ஆவது வசனத்தொடர்)
4758. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க்கொள்ளட்டும்!” எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.13


அத்தியாயம் : 65
4759. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ} أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا.
பாடம் : 13 (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31ஆவது வசனத்தொடர்)
4759. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள்மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்” எனும் (24:31ஆவது) வசனம்இறங்கியபோது, பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க்கொண்டார்கள்.

அத்தியாயம் : 65
4760. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ. أَنَّ رَجُلاً، قَالَ يَا نَبِيَّ اللَّهِ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ " أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ ". قَالَ قَتَادَةُ بَلَى وَعِزَّةِ رَبِّنَا.
பாடம்: 25. ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (25:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹபாஅம் மன்ஸூரா’ எனும் சொல் ‘காற்று வாரியிறைக்கக்கூடிய (புழுதி போன்ற)வற்றை’க் குறிக்கும். (25:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்தழ் ழில்ல’ (நிழலை நீட்டுகின்றான்)என்பது, ‘ஃபஜ்ர்’ முதல் சூர்யோதயம் வரையிலான நிழலைக் குறிக்கிறது. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாகின்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். ‘அலைஹி தலீல்’ (நிழலுக்கு ஆதாரமாக) என்பதற்கு ‘சூர்யோதயம் நிழலுக்கு ஆதாரமாகும்’ என்று பொருள். (25:62ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கில்ஃபத்’ (பிரதி) எனும் சொல்லின் கருத்தாவது: இரவில் விடுபட்ட செயலைப் பகலிலும், பகலில் விடுபட்ட செயலை இரவிலும் ஒருவர் நிறைவேற்றிக்கொள்ள முடியும். (‘கில்ஃபத் எனும் இச்சொல்லுக்கு ‘அடுத்தடுத்து வரக்கூடியது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (25:74ஆவது வசனத்திலுள்ள) ‘கண் குளிர்ச்சி’ என்பதன் கருத்தாவது: இறைவா! (என் மனைவி, மக்கள்) உனக்குக் கீழ்ப்படிவதன் மூலம் (என் கண்களைக் குளிர்ச்சி ஆக்குவாயாக!). தன் அன்பிற்குரியோர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைக் காண்பதைவிட வேறெதுவும் ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணைக் குளிர்ச்சியடையச் செய்துவிடுவதில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (25:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுபூர்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (25:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸஈர்’ (கொழுந்துவிட்டெரியும் நெருப்பு) எனும் சொல் ஆண்பாலாகும். (அதன் வேர்ச்சொல்லான) ‘தஸஃஉர்’ எனும் சொல்லுக்கும் ‘அல்இள்திராம்’ எனும் சொல்லுக்கும் ‘கொழுந்துவிட்டெரிதல்’ என்று பொருள். (25:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தும்லா அலைஹி’ எனும் சொற்றொடருக்கு ‘இவருக்கு ஓதிக்காட்டப்படுகின்றன’ என்பது பொருள். இச்சொல் ‘அம்லைத்து’, ‘அம்லல்து’ (ஓதிக்காட்டினேன்) ஆகிய (வினைச்) சொற்களிலிருந்து பிரிந்ததாகும். (25:38ஆவது வசனத்தின் மூலத்தில் ‘அஸ்ஹாபுர் ரஸ்ஸி’ என்பதிலுள்ள) ‘அர்ரஸ்ஸு’ எனும் சொல்லுக்கு ‘சுரங்கம்’ என்பது பொருள். ‘ரிஸாஸ்’ (சுரங்கங்கள்) என்பது இதன் பன்மையாகும். (இச்சொல்லுக்கு ‘கிணறு’ என்றும் பொருள் கொள்வோர் உள்ளனர்.) (25:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா யஅபஉ’ எனும் சொல்லுக்கு ‘பொருட்படுத்தியிருக்கமாட்டான்’ என்பது பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம்பெற்ற) ‘மா அபஉத்து பிஹி ஷைஆ’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை’ என்று பொருள். (25:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராம்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘சதா தொல்லை தரக்கூடியது’ என்றும் ‘நிரந்தரமானது’ என்றும் பொருள் கூறப்படுவதுண்டு.) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (25:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அத்தவ்’ எனும் சொல்லுக்கு ‘எல்லை கடந்து அட்டூழியம் புரிந்தனர்’ என்று பொருள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (25:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தவ்’ எனும் சொல்லின் வினையாலணையும் பெயரும், 69:6ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘ஆத்தியா’ எனும் சொல்லுக்கு ‘காற்றின் காவலர்களான வானவர்களின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது போன்ற கடுமையான சூறாவளிக் காற்று’ என்று பொருள். பாடம்: 1 ‘‘நரகத்தை நோக்கி எவர் தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருக்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும்” எனும் (25:34 ஆவது) இறை வசனம்
4760. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்த உலகில் அவனை இரு கால்களால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனை, அவனது முகத்தால் நடக்கச்செய்திட முடியாதா?” என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘‘ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக! ‘‘என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4761. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ،. قَالَ وَحَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ ـ أَوْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ـ أَىُّ الذَّنْبِ عِنْدَ اللَّهِ أَكْبَرُ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ". قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ " أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ ". قَالَ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ تَصْدِيقًا لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلَا يَزْنُونَ}
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4761. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் கேட்டேன்.’ அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘கேட்கப்பட்டது’. அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பதுதான் (பெரும் பாவம்)” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான் ‘‘பிறகு எது?” என்று கேட்க, அவர்கள் ‘‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல் களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் இந்த (25:68ஆவது) இறைவசனம் இறங்கிற்று.2

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4762. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ أَبِي بَزَّةَ، أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ هَلْ لِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ فَقَرَأْتُ عَلَيْهِ {وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ}. فَقَالَ سَعِيدٌ قَرَأْتُهَا عَلَى ابْنِ عَبَّاسٍ كَمَا قَرَأْتَهَا عَلَىَّ. فَقَالَ هَذِهِ مَكِّيَّةٌ نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ، الَّتِي فِي سُورَةِ النِّسَاءِ.
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4762. காசிம் பின் அபீபஸ்ஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘‘இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?” என்று கேட்டுவிட்டு, ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை...” எனும் (25:68ஆவது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன்.

அதைக் கேட்ட சயீத் (ரஹ்) அவர்கள், ‘‘இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘இது (25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற ‘அந்நிசா’ அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (4:93) மாற்றிவிட்டது” என்று பதிலளித்தார்கள்.3


அத்தியாயம் : 65
4763. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ اخْتَلَفَ أَهْلُ الْكُوفَةِ فِي قَتْلِ الْمُؤْمِنِ، فَرَحَلْتُ فِيهِ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقَالَ نَزَلَتْ فِي آخِرِ مَا نَزَلَ وَلَمْ يَنْسَخْهَا شَىْءٌ.
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4763. சயீத் பின் ஜுபைர் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக் குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆகவே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். அவர்கள், ‘‘இது (4:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை” என்று பதிலளித்தார்கள்.4


அத்தியாயம் : 65
4764. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ قَوْلِهِ تَعَالَى {فَجَزَاؤُهُ جَهَنَّمُ} قَالَ لاَ تَوْبَةَ لَهُ. وَعَنْ قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ {لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} قَالَ كَانَتْ هَذِهِ فِي الْجَاهِلِيَّةِ.
பாடம்: 2 ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும் விபசாரமும் செய்வதில்லை.யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற் கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) இறைவசனம்
4764. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான், ‘‘அவனுக்குரிய தண்டனை நரகம்தான்” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் ‘‘அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். புகழோங்கிய இறைவனின் ‘‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை” எனும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்டதற்கு, ‘‘இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5

அத்தியாயம் : 65
4765. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قَالَ ابْنُ أَبْزَى سَلِ ابْنَ عَبَّاسٍ عَنْ قَوْلِهِ تَعَالَى {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ} وَقَوْلِهِ {لاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ} حَتَّى بَلَغَ {إِلاَّ مَنْ تَابَ} فَسَأَلْتُهُ فَقَالَ لَمَّا نَزَلَتْ قَالَ أَهْلُ مَكَّةَ فَقَدْ عَدَلْنَا بِاللَّهِ وَقَتَلْنَا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَتَيْنَا الْفَوَاحِشَ، فَأَنْزَلَ اللَّهُ {إِلاَّ مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلاً صَالِحًا} إِلَى قَوْلِهِ {غَفُورًا رَحِيمًا}
பாடம்: 3 ‘‘மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்” எனும் (25:69ஆவது) இறைவசனம்
4765. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” எனும் (4:93ஆவது) இறைவசனத்தைப் பற்றியும், ‘‘மேலும், (கொலை செய்யக் கூடாது என) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்” என்று தொடங்கி ‘‘பாவமன்னிப்புக் கோரி இறை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர் தவிர” என்று முடியும் (25:68-70) வசனங் கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நான்தான் அன்னாரிடம் கேட்டேன்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இந்த வசனங்கள் (25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடை விதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீய செயல்கள் புரிந்தோம். (ஆகவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)” என்று கூறிக்கொண்டனர்.

ஆகவே அல்லாஹ், ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும் கருணையுடையோனும் ஆவான்” எனும் (25:70ஆவது) வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 65
4766. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَمَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ، عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ، {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا}، فَسَأَلْتُهُ فَقَالَ لَمْ يَنْسَخْهَا شَىْءٌ. وَعَنْ {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ} قَالَ نَزَلَتْ فِي أَهْلِ الشِّرْكِ.
பாடம்: 4 ‘‘அவர்களில் எவர் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்” (எனும் 25:70ஆவது இறை வசனம்)
4766. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் ‘‘ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்...” என்று தொடங்கும் (4:93ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள்.

(அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்த (4:93ஆவது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை” என்று சொன்னார்கள். ‘‘அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை” என்று தொடங்கும் (25:68ஆவது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இது இணைவைப்போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று பதிலளித்தார்கள்.6

அத்தியாயம் : 65
4767. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ خَمْسٌ قَدْ مَضَيْنَ الدُّخَانُ وَالْقَمَرُ وَالرُّومُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ {فَسَوْفَ يَكُونُ لِزَامًا}
பாடம்: 5 அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும்! (எனும் 25:77ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஸாம்’ எனும் சொல்லுக்கு ‘அழிவு’ என்பது பொருள்.
4767. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இந்த 25:77ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ‘‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, கிழக்கு ரோமானியர் (தோல்வியடைந்து பின்னர் அவர்கள் வெற்றி காண்பது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனையான பிடியும் அவனுடைய வேதனையும்” என்று சொன்னார்கள்.7

அத்தியாயம் : 65
4768. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ ـ رَأَى أَبَاهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ الْغَبَرَةُ وَالْقَتَرَةُ ". الْغَبَرَةُ هِيَ الْقَتَرَةُ.
பாடம்: 26. ‘அஷ்ஷுஅரா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (26:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஅபஸூன்’ எனும் சொல்லுக்கு ‘(தேவையில்லாமல் உயர உயரமான) கட்டடங்களை எழுப்புகிறீர்கள்’ என்பது பொருள். (26:148ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹளீம்’ எனும் சொல்லுக்கு ‘தொட்டால் பிய்ந்துவிடும் அளவுக்குக் கனிந்தது’ என்பது பொருள். (26:153ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸஹ்ஹரீன்’ எனும் சொல்லுக்கு ‘மஸ்ஹூரீன்’ (சூனியம் செய்யப்பட்டவர்கள்) என்பது பொருள். (26:176ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) ‘லைக்கத்’ எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படி வந்துள்ள) ‘ஐகத்’ எனும் சொல்லும் ‘ஐக்கா’ எனும் சொல்லின் பன்மையாகும். இதற்கு ‘மரத் தொகுப்பு (தோப்பு)’ என்பது பொருள். (26:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முழ் ழுல்லத்தி’ (நிழலுடைய நாள்) எனும் சொல், அவர்களுக்கு வேதனை நிழலிட்டதைக் குறிக்கிறது. (15:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ஸூன்’ எனும் சொல்லுக்கு ‘அறியப்பட்டது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ஒழுங்கான முறை, மிகப் பொருத்தமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவு எனும் பொருள்களும் கொள்ளப்படுவதுண்டு.)2 (26:63ஆவது வசனத்திலுள்ள) ‘மலையைப் போல’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘கத்தவ்த்’ எனும் சொல்லுக்குரியதாகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (26:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷிர்ஃதிமத்’ எனும் சொல்லுக்கு ‘சிறிய குழு’ என்று பொருள். (26:219ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸாஜிதீன்’ (சிரம்பணியக் கூடியவர்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழக்கூடியவர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் தக்லுதூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (அழியாது) என்றென்றும் இருக்கப்போகின்றவர்களைப் போல்’ என்று பொருள். (26:128ஆவது வசனத்திலுள்ள) ‘உயரமான இடம்’ எனும் பொருள் (மூலத்திலுள்ள) ‘ரீஉ’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ரீஅத்’ என்பது இதன் பன்மையாகும். ‘அர்யாஉ’ என்பது ‘ரீஅத்’ என்பதன் ஒருமையாகும். (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸானிஉ’ (எனும் சொல் ‘மஸ்னஅத்’ எனும் சொல்லின் பன்மையாகும்.) ஒவ்வொரு கட்டடத்திற்கும் ‘மஸ்னஅத்’எனப்படும். (26:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘கர்வமுடையவர்கள்’ என்று பொருள். (‘பேரானந்தமுடையவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) ‘ஃபரீஹீன்’ என்பதற்கும் இதே பொருள்தான். ‘ஃபாரிஹீன்’ என்பதற்கு ‘கைதேர்ந்தவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. (26:183ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)’ தஅஸவ்’ எனும் சொல் ‘மிகக் கொடிய விஷமத்தைக்’ குறிக்கும். ஆஸ, யஈஸு, ஐஸன் என இதன் வாய்பாடு அமையும். (2:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜிபில்லா’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினங்கள்’ என்று பொருள் (அதன் வினைச்சொல்லான) ‘ஜுபில’ எனும் சொல்லுக்கு ‘குலிக்க’ (படைக்கப்பட்டது) என்று பொருள். ‘ஜுபுல்’, ‘ஜிபில்’, ஜுப்ல் ஆகிய சொற்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. அதாவது, படைப்பினங்கள் எனும் பொருள் கொண்டவையே. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாடம்: 1 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப் படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்)
4768. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஃகபரா’, ‘அல்கத்தரா’ ஆகிய சொற்களுக்கு (‘புழுதி’ எனும்) ஒரே பொருள் ஆகும்.


அத்தியாயம் : 65
4769. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ فَيَقُولُ يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لاَ تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ فَيَقُولُ اللَّهُ إِنِّي حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِينَ ".
பாடம்: 26. ‘அஷ்ஷுஅரா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (26:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஅபஸூன்’ எனும் சொல்லுக்கு ‘(தேவையில்லாமல் உயர உயரமான) கட்டடங்களை எழுப்புகிறீர்கள்’ என்பது பொருள். (26:148ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹளீம்’ எனும் சொல்லுக்கு ‘தொட்டால் பிய்ந்துவிடும் அளவுக்குக் கனிந்தது’ என்பது பொருள். (26:153ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸஹ்ஹரீன்’ எனும் சொல்லுக்கு ‘மஸ்ஹூரீன்’ (சூனியம் செய்யப்பட்டவர்கள்) என்பது பொருள். (26:176ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) ‘லைக்கத்’ எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படி வந்துள்ள) ‘ஐகத்’ எனும் சொல்லும் ‘ஐக்கா’ எனும் சொல்லின் பன்மையாகும். இதற்கு ‘மரத் தொகுப்பு (தோப்பு)’ என்பது பொருள். (26:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முழ் ழுல்லத்தி’ (நிழலுடைய நாள்) எனும் சொல், அவர்களுக்கு வேதனை நிழலிட்டதைக் குறிக்கிறது. (15:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ஸூன்’ எனும் சொல்லுக்கு ‘அறியப்பட்டது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ஒழுங்கான முறை, மிகப் பொருத்தமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவு எனும் பொருள்களும் கொள்ளப்படுவதுண்டு.)2 (26:63ஆவது வசனத்திலுள்ள) ‘மலையைப் போல’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘கத்தவ்த்’ எனும் சொல்லுக்குரியதாகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: (26:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷிர்ஃதிமத்’ எனும் சொல்லுக்கு ‘சிறிய குழு’ என்று பொருள். (26:219ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸாஜிதீன்’ (சிரம்பணியக் கூடியவர்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழக்கூடியவர்கள்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் தக்லுதூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (அழியாது) என்றென்றும் இருக்கப்போகின்றவர்களைப் போல்’ என்று பொருள். (26:128ஆவது வசனத்திலுள்ள) ‘உயரமான இடம்’ எனும் பொருள் (மூலத்திலுள்ள) ‘ரீஉ’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ரீஅத்’ என்பது இதன் பன்மையாகும். ‘அர்யாஉ’ என்பது ‘ரீஅத்’ என்பதன் ஒருமையாகும். (26:129ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸானிஉ’ (எனும் சொல் ‘மஸ்னஅத்’ எனும் சொல்லின் பன்மையாகும்.) ஒவ்வொரு கட்டடத்திற்கும் ‘மஸ்னஅத்’எனப்படும். (26:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘கர்வமுடையவர்கள்’ என்று பொருள். (‘பேரானந்தமுடையவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) ‘ஃபரீஹீன்’ என்பதற்கும் இதே பொருள்தான். ‘ஃபாரிஹீன்’ என்பதற்கு ‘கைதேர்ந்தவர்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. (26:183ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)’ தஅஸவ்’ எனும் சொல் ‘மிகக் கொடிய விஷமத்தைக்’ குறிக்கும். ஆஸ, யஈஸு, ஐஸன் என இதன் வாய்பாடு அமையும். (2:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜிபில்லா’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினங்கள்’ என்று பொருள் (அதன் வினைச்சொல்லான) ‘ஜுபில’ எனும் சொல்லுக்கு ‘குலிக்க’ (படைக்கப்பட்டது) என்று பொருள். ‘ஜுபுல்’, ‘ஜிபில்’, ஜுப்ல் ஆகிய சொற்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. அதாவது, படைப்பினங்கள் எனும் பொருள் கொண்டவையே. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். பாடம்: 1 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப் படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார் எனும் 26:87 ஆவது இறைவசனம்)
4769. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘‘இறைவா! ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘‘இறை மறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்துவிட்டேன்” என்று பதிலளிப்பான்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4770. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} صَعِدَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الصَّفَا فَجَعَلَ يُنَادِي " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ حَتَّى اجْتَمَعُوا، فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولاً لِيَنْظُرَ مَا هُوَ، فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٌ فَقَالَ " أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ، أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ". قَالُوا نَعَمْ، مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلاَّ صِدْقًا. قَالَ " فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ ". فَقَالَ أَبُو لَهَبٍ تَبًّا لَكَ سَائِرَ الْيَوْمِ، أَلِهَذَا جَمَعْتَنَا فَنَزَلَتْ {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ}
பாடம்: 2 (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக! (எனும் 26:214ஆவது இறை வசனம்) மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வக்ஃபிள் ஜனாஹக்க’ எனும் வாசகத்திற்கு, ‘‘உம்மைப் பின்பற்றும் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்வீராக!” என்று பொருள்.
4770. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின்மீது ஏறிக்கொண்டு, ‘‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குடும்பங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் ‘‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், ‘‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் ‘‘அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.5


அத்தியாயம் : 65