4643. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ} قَالَ مَا أَنْزَلَ اللَّهُ إِلاَّ فِي أَخْلاَقِ النَّاسِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4643. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!” எனும் (7:199ஆவது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.
அத்தியாயம் : 65

4644. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ الْعَفْوَ مِنْ أَخْلاَقِ النَّاسِ. أَوْ كَمَا قَالَ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4644. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில்- 7:199) அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான்.8

4645. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ سُورَةُ الأَنْفَالِ قَالَ نَزَلَتْ فِي بَدْرٍ. الشَّوْكَةُ الْحَدُّ {مُرْدَفِينَ} فَوْجًا بَعْدَ فَوْجٍ، رَدِفَنِي وَأَرْدَفَنِي جَاءَ بَعْدِي {ذُوقُوا} بَاشِرُوا وَجَرِّبُوا وَلَيْسَ هَذَا مِنْ ذَوْقِ الْفَمِ {فَيَرْكُمَهُ} يَجْمَعُهُ. {شَرِّدْ} فَرِّقْ {وَإِنْ جَنَحُوا} طَلَبُوا {يُثْخِنَ} يَغْلِبَ. وَقَالَ مُجَاهِدٌ {مُكَاءً} إِدْخَالُ أَصَابِعِهِمْ فِي أَفْوَاهِهِمْ وَ{تَصْدِيَةً} الصَّفِيرُ {لِيُثْبِتُوكَ} لِيَحْبِسُوكَ.
பாடம்:
8. “அல்அன்ஃபால்' அத்தியாயம்1
பாடம் :
“(நபியே!) போரில் கிடைத்த பொருட்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள். கூறுவீராக: போரில் கிடைத்த பொருட்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும், உங்களுக்கிடையே (உள்ள உறவுகளைச்) சீராக்கிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்” எனும் (8:1ஆவது) இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “அன்ஃபால்' எனும் சொல்லுக்கு “போரில் கிடைத்த பொருள்கள் (ஃகனீமத்கள்)' என்பது பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஹுக்கும்' எனும் சொல்லுக்கு “உங்கள் போர் (வலிமை)' என்பது பொருள்.
நன்கொடைக்கும் “நாஃபிலா' என்று சொல்லப்படும்.
4645. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்அன்ஃபால்' அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், “அது பத்ர் போர் தொடர்பாக அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.
(மேலும், இந்த அத்தியாயத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட சொற்களுக்குப் பின்வருமாறு விளக்க மளிக்கப்பட்டுள்ளது:)
(8:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷவ்கத்' எனும் சொல்லுக்கு “(ஆயுத) முனை' என்பது பொருள்.
(8:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்திஃபீன்' எனும் சொல்லுக்கு “படை படையாக' என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) “ரதிஃபனீ' மற்றும் “அர்தஃபனீ' என்பதற்கு “என்னைத் தொடர்ந்துவந்தான்' என்று பொருள்.
(8:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃதூகூ' (சுவைத்துப் பாருங்கள்) எனும் சொல்லுக்கு “அனுபவித்துப் பாருங்கள்' என்பது பொருள். வாயால் சுவைப்பதை இது குறிக்காது.
(8:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயர்குமஹு' எனும் சொல்லுக்கு “தீயோரை அவன் ஒன்றுசேர்ப்பான்' என்று பொருள்.
(8:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷர்ரித்' எனும் சொல்லுக்கு “சிதறி(யோ)டச்செய்யுங்கள்' என்பது பொருள்.
(8:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இன் ஜனஹூ' எனும் சொற்றொடருக்கு “அவர்கள் (சமாதானத்தைக்) கோரினால்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸில்ம்' எனும் சொல்லும் “அஸ்ஸல்ம், அஸ்ஸலாம் ஆகிய சொற்களும் (“சமாதானம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(8:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யுஸ்கின' எனும் சொல்லுக்கு “முறியடிப்பார்' என்று பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(8:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முகாஃ' எனும் சொல் “அவர்கள் தங்கள் விரல் (நுனி)களைத் தங்கள் வாய் களுக்குள் நுழைத்துக்கொள்வதைக்' குறிக்கும். “தஸ்தியா' எனும் சொல்லுக்கு “சீட்டியடித்தல்' என்று பொருள்.
(8:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லி யுஸ்பித்தூக்க' எனும் சொல்லுக்கு “உங்களை அடைத்துவைக்க' என்பது பொருள்.

4646. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لاَ يَعْقِلُونَ} قَالَ هُمْ نَفَرٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ.
பாடம் : 1
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் (எனும் 8:22ஆவது இறைவசனம்)
4646. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உயிரினங்களிலேயே அல்லாஹ்விடம் மோசமானவர்கள், (உண்மையை) விளங்கிக்கொள்ளாத செவிடரும் ஊமையரும்தான் எனும் (8:22ஆவது) இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “பனூ அப்தித் தார் குலத்தைச் சேர்ந்த சிலர்தான் அவர்கள்” என்று சொன்னார்கள்.2

4647. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ أُصَلِّي فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ "" مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَ أَلَمْ يَقُلِ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} ثُمَّ قَالَ لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ "". فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيَخْرُجَ فَذَكَرْتُ لَهُ.
وَقَالَ مُعَاذٌ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبٍ، سَمِعَ حَفْصًا، سَمِعَ أَبَا سَعِيدٍ، رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا، وَقَالَ هِيَ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} السَّبْعُ الْمَثَانِي.
பாடம் : 2
இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், உங்களுக்குப் புத்துயிரளிக்கும் (உண்மை) வழிக்கு உங்களை அழைக்கும்போது இத்தூதருக்கும் பதிலளியுங்கள். மனிதனுக்கும் அவனது மனத்துக்கும் இடையே அல்லாஹ் குறுக்கிடுகின்றான் என்பதையும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங் கள் (எனும் 8:24ஆவது இறை வசனம்)
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஸ்த்தஜீபூ' எனும் சொல்லுக்கு “பதிலளியுங்கள்' என்று பொருள். “லிமா யுஹ்யீக்கும்' (உங்களுக்குப் புத்துயிரளிக்கும்) என்பதற்கு “உங்களைச் சீராக்குகின்ற' என்பது பொருள்.
4647. அபூசயீத் பின் அல்முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (“மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், “நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், “இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அவனுடைய தூதருக்கும் பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள்.
பிறகு, “நான் (பள்ளிவாசலிலிருந்து) புறப்படுவதற்கு முன்பாக குர்ஆனில் மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உமக்குக் கற்பிக்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் நபி அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப்போனார்கள். அப்போது நான் அவர்களுக்கு (அவர்கள் வாக்களித்ததை) நினைவூட்டினேன். நபி (ஸல்) அவர்கள், “அது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' எனும் (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்தான்” என்று சொன்னார்கள்.3
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4648. حَدَّثَنِي أَحْمَدُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ ـ هُوَ ابْنُ كُرْدِيدٍ صَاحِبُ الزِّيَادِيِّ ـ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبُو جَهْلٍ {اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ} فَنَزَلَتْ {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ * وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ} الآيَةَ.
பாடம் : 3
மேலும், அவர்கள் இவ்வாறு கூறிய தையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக: “இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்துகல்மாரி பொழிந்துவிடு; அல்லது வதைக்கும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” எனும் (8:32ஆவது) இறைவசனம்
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
குர்ஆனில் அல்லாஹ் “மத்(த)ர்' எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) “வேதனை(க்காகப் பெய்த மழை)'யையே குறிக்கும். (பொதுவான மழையைக் குறிக்காது.) பொதுவான மழையைக் குறிக்க அரபியர் “அல்ஃகைஸ்' எனும் சொல்லையே பயன்படுத்துவர். “அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கின்றான்” எனும் (42:28ஆவது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க “அல்ஃகைஸ்' எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.
4648. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம்தான் என்றிருப்பின் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையைஎங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையைஇறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டி ருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.

4649. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ أَبُو جَهْلٍ {اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ} فَنَزَلَتْ {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ * وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ} الآيَةَ.
பாடம் : 4
“(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அவர்கள்மீது அல்லாஹ் வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை” எனும் (8:33ஆவது) இறைவசனம்
4649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல், “இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!” என்று சொன்னான்.
அப்போது “(நபியே!) நீர் அவர் களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனைக்குள்ளாக்காமல் ஏன் இருக்க வேண்டும்? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆக முடியும்! எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்” எனும் வசனங்கள் (8:33,34) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 65
4650. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، جَاءَهُ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا} إِلَى آخِرِ الآيَةِ، فَمَا يَمْنَعُكَ أَنْ لاَ تُقَاتِلَ كَمَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ. فَقَالَ يَا ابْنَ أَخِي أَغْتَرُّ بِهَذِهِ الآيَةِ وَلاَ أُقَاتِلُ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَغْتَرَّ بِهَذِهِ الآيَةِ الَّتِي يَقُولُ اللَّهُ تَعَالَى {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} إِلَى آخِرِهَا. قَالَ فَإِنَّ اللَّهَ يَقُولُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ}. قَالَ ابْنُ عُمَرَ قَدْ فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ كَانَ الإِسْلاَمُ قَلِيلاً، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ، إِمَّا يَقْتُلُوهُ وَإِمَّا يُوثِقُوهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ، فَلَمْ تَكُنْ فِتْنَةٌ، فَلَمَّا رَأَى أَنَّهُ لاَ يُوَافِقُهُ فِيمَا يُرِيدُ قَالَ فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ. قَالَ ابْنُ عُمَرَ مَا قَوْلِي فِي عَلِيٍّ وَعُثْمَانَ أَمَّا عُثْمَانُ فَكَانَ اللَّهُ قَدْ عَفَا عَنْهُ، فَكَرِهْتُمْ أَنْ يَعْفُوَ عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَخَتَنُهُ. وَأَشَارَ بِيَدِهِ وَهَذِهِ ابْنَتُهُ أَوْ بِنْتُهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 5
(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ் வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் அறப்போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத்தொடர்)
4650. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் என்னிடம் வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின்வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்.
“இறைநம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்குமிடையே சமாதானப்படுத்திவிடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (எல்லை மீறி) அநீதியிழைத்தால், அநீதியிழைத்தோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்” (49:9).
“இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?” என்றும் கேட்டார்.
நான், “என் சகோதரர் மகனே! இந்த (49:9ஆவது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, “ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்துவிட்டால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன்மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்” என்ற (4:93ஆவது) வசனத்திற்குச் சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பாதாயிருக்கும்” என்று கூறினேன்.4
அந்த மனிதர் “ “(பூமியிóருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும் வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்' (8:39) என்று அல்லாஹ் கூறுகின்றானே!” என்று கேட்டார்.
நான், “(இதை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்திவிட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) ஒரு மனிதர் தமது மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். அல்லது அவரைக் கட்டிவைத்துவிடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை” என்று பதிலளித்தேன்.
தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், “அலீ (பின் அபீதாலிப்) மற்றும் உஸ்மான் (பின் அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான் (ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால் அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனும் ஆவார்கள்” என்று கூறினேன்.5
(இதன்அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதோ நீங்கள் காண்கின்ற இந்த இடத்தில் உள்ளதுதான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்” என்று -தம் கரத்தால் சைகை செய்தவாறு- கூறினார்கள்.

4651. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا بَيَانٌ، أَنَّ وَبَرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ خَرَجَ عَلَيْنَا أَوْ إِلَيْنَا ابْنُ عُمَرَ، فَقَالَ رَجُلٌ كَيْفَ تَرَى فِي قِتَالِ الْفِتْنَةِ. فَقَالَ وَهَلْ تَدْرِي مَا الْفِتْنَةُ كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يُقَاتِلُ الْمُشْرِكِينَ، وَكَانَ الدُّخُولُ عَلَيْهِمْ فِتْنَةً، وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى الْمُلْكِ.
பாடம் : 5
(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ் வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் அறப்போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத்தொடர்)
4651. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்பது உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போரிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்” என்று பதிலளித்துவிட்டு, “அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை” என்றும் கூறினார்கள்.

4652. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} فَكُتِبَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ ـ فَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ أَنْ لاَ يَفِرَّ عِشْرُونَ مِنْ مِائَتَيْنِ ـ ثُمَّ نَزَلَتِ {الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمُ} الآيَةَ، فَكَتَبَ أَنْ لاَ يَفِرَّ مِائَةٌ مِنْ مِائَتَيْنِ ـ زَادَ سُفْيَانُ مَرَّةً ـ نَزَلَتْ {حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ}. قَالَ سُفْيَانُ وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَأُرَى الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْىَ عَنِ الْمُنْكَرِ مِثْلَ هَذَا.
பாடம் : 6
நபியே! இறைநம்பிக்கையாளர் களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில்(நிலைகுலையாத) பொறுமையாளர் கள் இருபது பேர் இருந்தால் (எதிரி களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இத்தகையோர்) உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர் களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கிறார்கள் (எனும் 8:65 ஆவது இறைவசனம்)
4652. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது.
இதையே, “இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு, தற்சமயம் (அதை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேரை வெற்றி கொண்டு விடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேரை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
(அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.
ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஉமான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், “நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும்கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார்” என்றும் கூடுதலாக அறிவித்தார்கள்.

4653. حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي الزُّبَيْرُ بْنُ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حِينَ فُرِضَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ، فَجَاءَ التَّخْفِيفُ فَقَالَ رالآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضُعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ}. قَالَ فَلَمَّا خَفَّفَ اللَّهُ عَنْهُمْ مِنَ الْعِدَّةِ نَقَصَ مِنَ الصَّبْرِ بِقَدْرِ مَا خُفِّفَ عَنْهُمْ.
பாடம் : 7
“எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான்” எனும் (8:66ஆவது) இறைவசனம்
4653. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது.
அதில் அல்லாஹ், “எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள்” எனும் வசனம்(8:66) அருளப்பெற்றது.
(எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்டபோதே அதே அளவுக்குச் சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.

4654. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ آخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ} وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةٌ.
பாடம்:
9. “பராஅத்' (“அத்தவ்பா') அத்தியாயம்1
(9:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மர்ஸத்' எனும் சொல்லுக்கு “பாதை' என்பது பொருள்.
(9:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இல்லன்' எனும் சொல்லுக்குப் பந்தம், பொறுப்பு, உடன்படிக்கை ஆகிய பொருள்கள் உண்டு.
(9:16ஆவது வசனத்திலுள்ள “அந்தரங்க நண்பர்கள்' என்பது மூலத்திலுள்ள “வலீஜத்' எனும் சொல்லின் பொருளாகும். பொதுவாக) மற்றொன்றினுள் நீ நுழைவித்த எல்லாப் பொருள்களையும் “வலீஜத்' எனும் சொல் குறிக்கும்.
(9:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷுக்கா' எனும் சொல்லுக்கு “பயணம்' என்று பொருள்.
(9:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கபால்' எனும் சொல்லுக்குச் சீர்குலைவு, மரணம் (அல்மவ்த்) ஆகிய பொருள்கள் உண்டு. (“அல்மூத்தா' என்பதன்படி “மனநோய்' எனும் பொருளும் உண்டு.)
(9:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வலா தஃப்தின்னீ' எனும் சொற்றொட ருக்கு “என்னை நீர் கண்டிக்காதீர்' என்று பொருள்.
(9:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கர்ஹ்' எனும் சொல்லும் (அதே வகைச் சொல்லான) “குர்ஹ்' எனும் சொல்லும் (“வெறுப்பு' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(9:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தகலன்' எனும் சொல்லுக்கு “மக்களின் நுழைவிடம்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “யஜ்மஹூன்' எனும் சொல்லுக்கு “விரைந்தோடுவார்கள்' என்பது பொருள்.
(9:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஉதஃபிக்காத்' எனும் சொல்லுக்கு “தலைகீழாகக் கவிழ்ந்த ஊர்கள்' என்று பொருள். “வல்முஃதஃபிக்கத்த அஹ்வா' எனும் (53:53ஆவது) வசனத்திற்கு, “(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்து போன நகரங்களை அதலபாதாளத்தில் தூக்கிப்போட்டவனும் அவன்தான்” என்பது பொருள்.
(9:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்ன்' எனும் சொல்லுக்கு, “நிலையானது' என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) “அதன்த்து பி அர்ளின்' எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு பகுதியில் நிலையாகத் தங்கினேன்' என்று பொருள்.
இதிலிருந்து “மஅதின்' (சுரங்கம்) என்ற சொல் பிறந்தது. மேலும் “மஅதினி சித்க்' என்றால் “சத்தியத்தின் பிறப்பிடம்' என்று பொருள்.
(9:87ஆவது வசனத்திலுள்ள “கவாலிஃப்' (பின்தங்கிவிட்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமையான) “அல்காலிஃப்' எனும் சொல், என் பின்னால் வராமல் நான் சென்றபின் (தன் வீட்டிலேயே) அமர்ந்துகொண்டவனைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து “யக்லுஃபுஹு ஃபில் ஃகாபிரீன்' (அவருக்குப் பின்னால் அவருக்குப் பதிலாக அமையக்கூடிய ஒருவர்) எனும் சொல்வழக்கு பிறந்தது.
“கவாலிஃப்' என்பது “காலிஃபா' எனும் பெண்பால் ஒருமையின் பன்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், இந்த அமைப்பில் ஆண்பால் பன்மை ஃபாரிஸ்-ஃபவாரிஸ் (குதிரை வீரர்), ஹாலிக்-ஹவாலிக் (அழிந்துபோனவர்) ஆகிய இரு சொற்களில் மட்டுமே உண்டு.
(9:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கைராத்' எனும் சொல்லின் ஒருமை “அல்கைரத்' என்பதாகும். இதற்கு “சிறந்தவை' என்பது பொருள்.
(9:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்ஜவ்ன' எனும் சொல்லுக்கு “காத்திருப்பில் வைக்கப்பட்டவர்கள்' என்பது பொருள்.
(9:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா' எனும் சொல்லுக்கு “விளிம்பு' என்பது பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஜுருஃப்' எனும் சொல்லுக்கு “சரிந்து விழக்கூடிய வெள்ளம் மற்றும் ஓடைகள்' என்பது பொருள். “ஹாரின்' எனும் சொல்லுக்கு “இடிந்து விழக்கூடியது' என்பது பொருள். “தஹவ்வரத்தில் பிஃரு' என்றால், “கிணறு இடிந்துவிட்டது' என்பது பொருள்.
(9:114ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு “பரிவோடும் பயத்தோடும் அடிபணிகின்றவர்' என்பது பொருள்.
ஒரு கவிஞர் சொன்னார்: நான் இரவில் அந்த ஒட்டகத்தில் சிவிகை பூட்ட எழுந்தால், மன சஞ்சலம் உள்ள மனிதன் அடங்கி ஒடுங்குவதைப் போன்று அந்த ஒட்டகமும் அடங்கி அடிபணியும்.
பாடம் : 1
“(இறைநம்பிக்கையாளர்களே!) இணை கற்பிப்போரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் வந் துள்ள விலகல் பிரகடனம் (இது)” எனும் (9:1ஆவது) இறைவசனம்
(9:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(9:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உதுனு (யுஃமினு)' எனும் சொற்றொடருக்கு “(அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி' என்பது பொருள்.
(9:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தூய்மைப்படுத்துகின்ற' எனும் ஒரே பொருள் கொண்ட) “துதஹ்ஹிருஹும்' மற்றும் “துஸக்கீஹிம்' போன்ற இரு சொற்களைப் பயன்படுத்துவது (அரபியர் வழக்கில்) மிகுதியாக உண்டு.
(“துஸக்கீஹிம்' என்பதன் வேர்ச்சொல்லான) “ஸகாத்' எனும் சொல்லுக்கு “கீழ்ப்படிதல்; “மனத் தூய்மை' ஆகிய பொருள்கள் உண்டு.
(இதே “ஸகாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ள 41:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா யுஉத்தூனஸ் ஸகாத்த' (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறாதவர்கள்.
(9:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “யுளாஹிஊன' எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) “யுளாஹƒன' எனும் சொல்லுக்கு “ஒத்திருக்கிறார்கள்' என்று பொருள்.
4654. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.
(9ஆவது அத்தியாயமான) “பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2

4655. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، وَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ يَوْمَ النَّحْرِ فِي أَهْلِ مِنًى بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 2
“ஆகவே, (இணைவைப்பாளர் களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) நடமாடலாம். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்” எனும் (9:2ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “சீஹூ' எனும் சொல்லுக்கு “நடமாடுங்கள்' என்பது பொருள்.
4655. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க் கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:
எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே, “(இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.3

4656. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فِي تِلْكَ الْحَجَّةِ فِي الْمُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدٌ ثُمَّ أَرْدَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 3
“மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகிவிட்டார்கள். ஆகவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீறலிலிருந்தும்) நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்குத்தான் நல்லது. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்துகொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் “நற்செய்தி'யை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக” எனும் (9:3ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “அதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள்.
4656. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.
ஆகவே, எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.4

4657. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ أَنْ لاَ يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. فَكَانَ حُمَيْدٌ يَقُولُ يَوْمُ النَّحْرِ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ. مِنْ أَجْلِ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ.
பாடம் : 4
...ஆயினும், இணைவைப்பாளர் களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபாடும் வைக்காமலும் உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு (எனும் 9:4ஆவது இறைவசனம்)
4657. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது' என்றும், “நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பிவைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில், “(துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்” என்று சொல்லிவந்தார்கள்.

4658. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، قَالَ كُنَّا عِنْدَ حُذَيْفَةَ فَقَالَ مَا بَقِيَ مِنْ أَصْحَابِ هَذِهِ الآيَةِ إِلاَّ ثَلاَثَةٌ، وَلاَ مِنَ الْمُنَافِقِينَ إِلاَّ أَرْبَعَةٌ. فَقَالَ أَعْرَابِيٌّ إِنَّكُمْ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم تُخْبِرُونَا فَلاَ نَدْرِي فَمَا بَالُ هَؤُلاَءِ الَّذِينَ يَبْقُرُونَ بُيُوتَنَا وَيَسْرِقُونَ أَعْلاَقَنَا. قَالَ أُولَئِكَ الْفُسَّاقُ، أَجَلْ لَمْ يَبْقَ مِنْهُمْ إِلاَّ أَرْبَعَةٌ. أَحَدُهُمْ شَيْخٌ كَبِيرٌ لَوْ شَرِبَ الْمَاءَ الْبَارِدَ لَمَا وَجَدَ بَرْدَهُ.
பாடம் : 5
(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்துவிட்டு உங்களது மார்க்கத் தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) ஒதுங்கியிருக்கக்கூடும் (எனும் 9:12ஆவது இறைவசனம்)
4658. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறினார்கள்.5
அப்போது கிராமவாசி ஒருவர், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர்தரமான பொருள்களைத் திருடிச் செல்கின்ற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர்கள் பாவிகளே! (இறை மறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவுக்கு முதியவரென்றால்,) குளிர்ந்த நீரைப் பருகினால்கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

4659. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ ".
பாடம் : 6
“எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது கருவூலம் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

4660. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ مَرَرْتُ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ فَقُلْتُ مَا أَنْزَلَكَ بِهَذِهِ الأَرْضِ قَالَ كُنَّا بِالشَّأْمِ فَقَرَأْتُ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ} قَالَ مُعَاوِيَةُ مَا هَذِهِ فِينَا، مَا هَذِهِ إِلاَّ فِي أَهْلِ الْكِتَابِ. قَالَ قُلْتُ إِنَّهَا لَفِينَا وَفِيهِمْ.
பாடம் : 6
“எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4660. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “ரபதா' எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், “இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தோம். அப்போது நான், “எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) இறைவசனத்தை ஓதினேன்.
அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா (ரலி) அவர்கள், “இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்கள் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது” என்று சொன்னார்கள். நான், “இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்” எனப் பதிலளித்தார்கள்.7

4661. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ، الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ.
பாடம் : 7
“(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இவைதான் நீங்கள் உங்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)” எனும் (9:35ஆவது) இறைவசனம்
4661. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள் (9:35ஆவது இறைவசனத்தைப் பற்றி), “இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப் பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப் படுத்தக்கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.8

4662. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا، أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ، ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ ".
பாடம் : 8
“உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இதுதான் சரியான நெறிமுறையாகும்” எனும் (9:36ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கய்யிம்' எனும் சொல்லுக்கு “நிலையானது' என்பது பொருள்.
4662. (“விடைபெறும் ஹஜ்'ஜில் உரை யாற்றியபோது) நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்ற வையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்' மாதம் ஆகும்.9
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.