4369. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا هَذَا الْحَىَّ مِنْ رَبِيعَةَ، وَقَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلاَّ فِي شَهْرٍ حَرَامٍ، فَمُرْنَا بِأَشْيَاءَ نَأْخُذُ بِهَا وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ـ وَعَقَدَ وَاحِدَةً ـ وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا لِلَّهِ خُمْسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ "".
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4369. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் “ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்க விடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே “முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்.

(கட்டளையிடும் நான்கு விஷயங் களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி “ஒன்று' என (தமது விரலால்) எண்ணினார்கள் - தொழுகையைக் கடைபிடிப்பது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவைதான் அவை.)

(மதுபானம் ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்.403


அத்தியாயம் : 64
4370. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو،. وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ كُرَيْبًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَرْسَلُوا إِلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيهَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا، قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ النَّاسَ عَنْهُمَا. قَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا، وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ. فَأَخْبَرْتُهُمْ، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُمَا، وَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ عَلَىَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَصَلاَّهُمَا، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْخَادِمَ فَقُلْتُ قُومِي إِلَى جَنْبِهِ فَقُولِي تَقُولُ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ أَلَمْ أَسْمَعْكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فَأَرَاكَ تُصَلِّيهِمَا. فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِي. فَفَعَلَتِ الْجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، إِنَّهُ أَتَانِي أُنَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالإِسْلاَمِ مِنْ قَوْمِهِمْ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ، فَهُمَا هَاتَانِ "".
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4370. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். “நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே' எனக் கேளுங்கள்” என்று (அம்மூவரும்) கூறினர்.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தாமும் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப்பின்) தொழுபவர் களைத் தடுப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீங்கள் உம்மு சலமாவிடம் சென்று கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு சலமா (ரó) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள்.

(அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்டபோது) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை நான் கேட்டிருக்கிறேன். பிறகு (ஒருமுறை) அஸ்ர் தொழுதுவிட்டு அவர்கள் எனது அறைக்கு வந்து, அந்த இரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் “பனூ ஹராம்' குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, “நீ அவர்களுக்கு அருகில் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்டிருக்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கின்றேனே?' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தமது கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு” எனக் கூறினேன்.

அப்பெண்ணும் சொன்னபடி செய்தார். நபி (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்தபோது அப்பெண் திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், “அபூஉமய்யாவின் மகளே! (உம்மு சலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்களை என்னால் தொழ முடிய வில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத் களாகும்' என்றார்கள்.404

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4371. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ ـ هُوَ ابْنُ طَهْمَانَ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ أَوَّلُ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ جُمِّعَتْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ عَبْدِ الْقَيْسِ بِجُوَاثَى. يَعْنِي قَرْيَةً مِنَ الْبَحْرَيْنِ.
பாடம் : 70 அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆ தொழுகை, “ஜுவாஸா' எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில்-அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும்.405

அத்தியாயம் : 64
4372. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". فَقَالَ عِنْدِي خَيْرٌ يَا مُحَمَّدُ، إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ، وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ، وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ مِنْهُ مَا شِئْتَ. حَتَّى كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". قَالَ مَا قُلْتُ لَكَ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ. فَتَرَكَهُ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ، فَقَالَ "" مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ "". فَقَالَ عِنْدِي مَا قُلْتُ لَكَ. فَقَالَ "" أَطْلِقُوا ثُمَامَةَ ""، فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَا مُحَمَّدُ وَاللَّهِ مَا كَانَ عَلَى الأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَىَّ مِنْ وَجْهِكَ، فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ إِلَىَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَىَّ مِنْ دِينِكَ، فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ إِلَىَّ، وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضُ إِلَىَّ مِنْ بَلَدِكَ، فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلاَدِ إِلَىَّ، وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ، فَمَاذَا تَرَى فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ، فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ صَبَوْتَ. قَالَ لاَ، وَلَكِنْ أَسْلَمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلاَ وَاللَّهِ لاَ يَأْتِيكُمْ مِنَ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4372. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரை (கைது செய்து) கொண்டுவந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீர் என்ன கருதுகிறீர், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள்.

அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் பழிக்குப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்; நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே, அவர் (அப்படியே) விடப்பட்டார். மறுநாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறீர்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்” என்றார். அவரை நபியவர்கள் (அன்றும் அப்படியே) விட்டுவிட்டார்கள்.

நாளை மறுநாள் வந்தபோது, “நீர் என்ன கருதுகிறீர்? ஸுமாமாவே!” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். மேலும், முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதிமொழி கூறுகிறேன்” என மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களையும்விட எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. நான் (மக்காவுக்குச் சென்று) உம்ரா செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டனர். இப்போது தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீர் மதம் மாறிவிட்டீரா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிóருந்து ஒரு கோதுமை தானியம்கூட (மக்காவாசி களான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்கள்.407


அத்தியாயம் : 64
4373. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حُسَيْنٍ، حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَقُولُ إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ. وَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ، فَأَقْبَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِطْعَةُ جَرِيدٍ حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ، فَقَالَ "" لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ، وَإِنِّي لأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ مَا رَأَيْتُ، وَهَذَا ثَابِتٌ يُجِيبُكَ عَنِّي "". ثُمَّ انْصَرَفَ عَنْهُ.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4373. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்ட) “முசைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், “முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்” என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலருடன் மதீனா வந்திருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முசைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்றுகொண்டு, “இந்தத் துண்டை நீ கேட்டால்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் கண்டிப்பாக அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்.

மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர் தான் ஸாபித். இவர் என் சார்பாக உனக்குப் பதிலளிப்பார்” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.


அத்தியாயம் : 64
4374. قَالَ ابْنُ عَبَّاسٍ فَسَأَلْتُ عَنْ قَوْلِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكَ أُرَى الَّذِي أُرِيتُ فِيهِ مَا أُرِيتُ ". فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ فِي يَدَىَّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ، فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَىَّ فِي الْمَنَامِ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي، أَحَدُهُمَا الْعَنْسِيُّ، وَالآخَرُ مُسَيْلِمَةُ ".
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4374. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன்” என்று (முசைலிமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. ஆகவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே அவ்விரண்டும் பறந்துவிட்டன.

எனவே, நான் அவ்விரண்டுக்கும் “எனக்குப் பின்னர் வெளிப்படவிருக்கின்ற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்சீ; மற்றொருவன் முசைலிமா” என்று சொன்னார்கள்.408


அத்தியாயம் : 64
4375. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِخَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَ فِي كَفِّي سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَكَبُرَا عَلَىَّ فَأُوحِيَ إِلَىَّ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَذَهَبَا فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ، وَصَاحِبَ الْيَمَامَةِ "".
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4375. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன.

“அவ்விரண்டும், எந்த இரு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கின் றேனோ அவர்களைக் குறிக்கும்' என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்சீ என்ற) “ஸன்ஆ'வாசி யும் (முசைலிமா என்ற) “யமாமா'வாசியும் ஆவர்.409

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4376. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ مَهْدِيَّ بْنَ مَيْمُونٍ، قَالَ سَمِعْتُ أَبَا رَجَاءٍ الْعُطَارِدِيَّ، يَقُولُ كُنَّا نَعْبُدُ الْحَجَرَ، فَإِذَا وَجَدْنَا حَجَرًا هُوَ أَخْيَرُ مِنْهُ أَلْقَيْنَاهُ وَأَخَذْنَا الآخَرَ، فَإِذَا لَمْ نَجِدْ حَجَرًا جَمَعْنَا جُثْوَةً مِنْ تُرَابٍ، ثُمَّ جِئْنَا بِالشَّاةِ فَحَلَبْنَاهُ عَلَيْهِ، ثُمَّ طُفْنَا بِهِ، فَإِذَا دَخَلَ شَهْرُ رَجَبٍ قُلْنَا مُنَصِّلُ الأَسِنَّةِ. فَلاَ نَدَعُ رُمْحًا فِيهِ حَدِيدَةٌ وَلاَ سَهْمًا فِيهِ حَدِيدَةٌ إِلاَّ نَزَعْنَاهُ وَأَلْقَيْنَاهُ شَهْرَ رَجَبٍ.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4376. அபூரஜாஉ அல்உத்தாரிதீ (ரஹ்)410 அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (அறியாமைக் காலத்தில்) கல்லை வழிபட்டுக்கொண்டிருந்தோம். (நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்த) ஒரு கல்லைவிடச் சிறந்த மற்றொரு கல்லை நாங்கள் கண்டால் அதை எடுத்துக்கொண்டு பழையதை எறிந்துவிடுவோம். கல் ஏதும் எங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் மண்கட்டியைச் சேகரி(த்துக் குவி)ப்போம்.

பிறகு ஆட்டைக் கொண்டுவருவோம்; அதன் பாலை (குவிந்து கிடக்கும்) அந்த மண்கட்டியின் மீது கறப்போம்; பிறகு அதைச் சுற்றிவருவோம். ரஜப் மாதம் வந்துவிட்டால் (போர் நிறுத்தம் செய்வதைக் குறிக்கும் வகையில்) “ஆயுத முனையை அகற்றக்கூடியது' என அந்த மாதத்தை அழைப்போம். ரஜப் மாதத்தில் எந்த ஈட்டி முனையையும், அம்பு முனையையும் கழற்றி எறியாமல் விடமாட்டோம்.


அத்தியாயம் : 64
4377. وَسَمِعْتُ أَبَا رَجَاءٍ، يَقُولُ كُنْتُ يَوْمَ بُعِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا أَرْعَى الإِبِلَ عَلَى أَهْلِي، فَلَمَّا سَمِعْنَا بِخُرُوجِهِ فَرَرْنَا إِلَى النَّارِ إِلَى مُسَيْلِمَةَ الْكَذَّابِ.
பாடம் : 71 பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழுவும் ஸுமாமா பின் உஸால் தொடர்பான தகவலும்406
4377. அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறைத்தூதராக) நியமிக்கப்பெற்ற நாளில் நான், என் வீட்டாருக்காக ஒட்டகத்தை மேய்க்கும் சிறுவனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருகை தந்திருப்பதை நாங்கள் கேள்விப்பட்டவுடன் நரக நெருப்பை நோக்கி, (அதாவது) மகா பொய்யன் முசைலிமாவை நோக்கி நாங்கள் ஓடினோம்.411

அத்தியாயம் : 64
4378. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ عُبَيْدَةَ بْنِ نَشِيطٍ ـ وَكَانَ فِي مَوْضِعٍ آخَرَ اسْمُهُ عَبْدُ اللَّهِ ـ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ بَلَغَنَا أَنَّ مُسَيْلِمَةَ الْكَذَّابَ قَدِمَ الْمَدِينَةَ، فَنَزَلَ فِي دَارِ بِنْتِ الْحَارِثِ، وَكَانَ تَحْتَهُ بِنْتُ الْحَارِثِ بْنِ كُرَيْزٍ، وَهْىَ أُمُّ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، وَهْوَ الَّذِي يُقَالُ لَهُ خَطِيبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَضِيبٌ، فَوَقَفَ عَلَيْهِ فَكَلَّمَهُ فَقَالَ لَهُ مُسَيْلِمَةُ إِنْ شِئْتَ خَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَ الأَمْرِ، ثُمَّ جَعَلْتَهُ لَنَا بَعْدَكَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ سَأَلْتَنِي هَذَا الْقَضِيبَ مَا أَعْطَيْتُكَهُ وَإِنِّي لأَرَاكَ الَّذِي أُرِيتُ فِيهِ مَا أُرِيتُ، وَهَذَا ثَابِتُ بْنُ قَيْسٍ وَسَيُجِيبُكَ عَنِّي ". فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 72 அஸ்வத் அல்அன்சீயின் நிகழ்ச்சி412
4378. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

மகா பொய்யன் முசைலிமா மதீனா விற்கு வந்திருக்கின்றான் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அவன் ஹாரிஸின் மகள் (கய்யிஸா என்பாள்) வீட்டில் தங்கினான். அந்த ஹாரிஸ் பின் குரைஸின் மகள் அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவள், அப்துல்லாஹ் பின் ஆமிருடைய (மக்களின்) தாய் ஆவாள்.

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முசைலிமாவிடம் சென்றார்கள். இந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அவர்கள்தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (அதிகாரபூர்வ) பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டுவந்தவர் ஆவார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் (பேரீச்ச மட்டையாலான) குச்சியொன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முசைலிமாவின் அருகே நின்று அவனிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் முசைலிமா, “நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் (உங்கள் நபித்துவ) பதவிக்கும் இடையே குறுக்கிடாமல் நாம் விலகிக்கொள்கிறோம். (ஆனால்,) உங்களுக்குப் பின்னர் நீங்கள் அந்தப் பதவியை எமக்கு அளித்திட வேண்டும்” என்று சொன்னான்.

நபி (ஸல்) அவர்கள், “நீ என்னிடம் இந்தக் குச்சியைக் கேட்டாலும்கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். எனக்கு (கனவில்) காட்டப்பட்ட அதே ஆள்தான் நீ என்று உன்னை நான் கருதுகிறேன். இதோ, இந்த ஸாபித் பின் கைஸ் உனக்கு என் சார்பாக பதிலளிப்பார்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.


அத்தியாயம் : 64
4379. قَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ عَنْ رُؤْيَا، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي ذَكَرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ ذُكِرَ لِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَا أَنَا نَائِمٌ أُرِيتُ أَنَّهُ وُضِعَ فِي يَدَىَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَفُظِعْتُهُمَا وَكَرِهْتُهُمَا، فَأُذِنَ لِي فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ ". فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزُ بِالْيَمَنِ، وَالآخَرُ مُسَيْلِمَةُ الْكَذَّابُ.
பாடம் : 72 அஸ்வத் அல்அன்சீயின் நிகழ்ச்சி412
4379. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களது கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது என் இரு கைகளிலும் தங்கத்தாலான காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. நான் அவற்றை அருவருப்பாகக் கருதி வெறுத்தேன். உடனே (அவற்றை ஊதிவிடுமாறு) எனக்குக் கட்டளையிடப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் இனி வரவிருக்கும் இரு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக நான் விளக்கம் கண்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் (ரலி) அவர்களால் கொல்லப்பட்ட (அஸ்வத்) அல்அன்சீ ஆவான்; மற்றொருவன் மகா பொய்யன் முசைலிமா ஆவான்.

அத்தியாயம் : 64
4380. حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الْحُسَيْنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ جَاءَ الْعَاقِبُ وَالسَّيِّدُ صَاحِبَا نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُرِيدَانِ أَنْ يُلاَعِنَاهُ، قَالَ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ لاَ تَفْعَلْ، فَوَاللَّهِ لَئِنْ كَانَ نَبِيًّا فَلاَعَنَّا، لاَ نُفْلِحُ نَحْنُ وَلاَ عَقِبُنَا مِنْ بَعْدِنَا. قَالاَ إِنَّا نُعْطِيكَ مَا سَأَلْتَنَا، وَابْعَثْ مَعَنَا رَجُلاً أَمِينًا، وَلاَ تَبْعَثْ مَعَنَا إِلاَّ أَمِينًا. فَقَالَ "" لأَبْعَثَنَّ مَعَكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ "". فَاسْتَشْرَفَ لَهُ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" قُمْ يَا أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ "". فَلَمَّا قَامَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَذَا أَمِينُ هَذِهِ الأُمَّةِ "".
பாடம் : 73 நஜ்ரான்வாசிகளின் சம்பவம்413
4380. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆகிப், சய்யித் எனும் நஜ்ரான் வாசிகள் இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “சாபஅழைப்புப் பிரார்த்தனை' (முபாஹலா) செய்வதற்காக வந்தனர்.414 அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், “நீர் அவ்வாறு செய்யாதீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து, நாம் சாபஅழைப்புப் பிரார்த் தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்படமாட்டோம்; நமக்குப்பின் வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்பட மாட்டார்கள்” என்று சொன்னார்.

(பிறகு) இருவரும் சேர்ந்து (நபி (ஸல்) அவர்களிடம்), “நீங்கள் எங்களிடம் கேட்கின்றவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்ப வேண்டாம்” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (ஒவ்வொரு வரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள், “அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்” என்று சொன்னார்கள். அவர் எழுந்து நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்” என்று சொன்னார் கள்.415


அத்தியாயம் : 64
4381. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا ابْعَثْ لَنَا رَجُلاً أَمِينًا. فَقَالَ "" لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ "". فَاسْتَشْرَفَ لَهُ النَّاسُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ.
பாடம் : 73 நஜ்ரான்வாசிகளின் சம்பவம்413
4381. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்ரான்வாசிகள் நபி (ஸல்) அவர்களி டம் வந்து, “நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுக்காக அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரைத்தான் நான் உங்களிடம் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். மக்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பினார்கள்.


அத்தியாயம் : 64
4382. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ "".
பாடம் : 73 நஜ்ரான்வாசிகளின் சம்பவம்413
4382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்களாவார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.416

அத்தியாயம் : 64
4383. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، سَمِعَ ابْنُ الْمُنْكَدِرِ، جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ لَقَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا ثَلاَثًا "". فَلَمْ يَقْدَمْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا قَدِمَ عَلَى أَبِي بَكْرٍ أَمَرَ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم دَيْنٌ أَوْ عِدَةٌ فَلْيَأْتِنِي. قَالَ جَابِرٌ فَجِئْتُ أَبَا بَكْرٍ، فَأَخْبَرْتُهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا ثَلاَثًا "". قَالَ فَأَعْطَانِي. قَالَ جَابِرٌ فَلَقِيتُ أَبَا بَكْرٍ بَعْدَ ذَلِكَ فَسَأَلْتُهُ، فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ فَلَمْ يُعْطِنِي، ثُمَّ أَتَيْتُهُ الثَّالِثَةَ فَلَمْ يُعْطِنِي، فَقُلْتُ لَهُ قَدْ أَتَيْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ أَتَيْتُكَ فَلَمْ تُعْطِنِي، ثُمَّ أَتَيْتُكَ فَلَمْ تُعْطِنِي، فَإِمَّا أَنْ تُعْطِيَنِي، وَإِمَّا أَنْ تَبْخَلَ عَنِّي. فَقَالَ أَقُلْتَ تَبْخَلُ عَنِّي وَأَىُّ دَاءٍ أَدْوَأُ مِنَ الْبُخْلِ ـ قَالَهَا ثَلاَثًا ـ مَا مَنَعْتُكَ مِنْ مَرَّةٍ إِلاَّ وَأَنَا أُرِيدُ أَنْ أُعْطِيَكَ. وَعَنْ عَمْرٍو عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ جِئْتُهُ، فَقَالَ لِي أَبُو بَكْرٍ عُدَّهَا. فَعَدَدْتُهَا فَوَجَدْتُهَا خَمْسَمِائَةٍ، فَقَالَ خُذْ مِثْلَهَا مَرَّتَيْنِ.
பாடம் : 74 உமான் மற்றும் பஹ்ரைனின் செய்தி417
4383. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), “பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்” என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், பஹ்ரைன் நிதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) அந்த நிதி வந்தபோது அவர்கள் பொது அறிவிப்புகள் செய்பவர் ஒருவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது கடன் தர வேண்டியிருந்தாலோ அல்லது அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்துவிட்டிருந்)தாலோ அவர் என்னிடம் வரட்டும்” என்று அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள்.

ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நபி (ஸல்) அவர்கள், “பஹ்ரைன் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்' என்று சொன்னார்கள்” எனத் தெரிவித்தேன். அப்போது எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (சிறிது) கொடுத்தார்கள். அதற்குப்பின் அவர்களை நான் சந்தித்து மீண்டும் கேட்டேன். அப்போது அவர்கள் (எதுவும்) எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் நான் சென்றேன். அப்போதும் அவர்கள் ஏதும் தரவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் மூன்றாவது முறையாகச் சென்றேன். அப்போதும் எனக்குத் தரவில்லை.

ஆகவே, நான் அவர்களிடம், “(முதலில்) நான் உங்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (இரண்டாம் முறையாக) வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (மூன்றாம் முறை நான்) உங்களிடம் வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், என்னிடம் நீங்கள் கருமித்தனம் காட்டுவதாகவே நான் கருதுவேன்” என்று சொன்னேன்.

அப்போது அவர்கள், “நான் கருமித்தனம் காட்டுவதாகவா நீ சொன்னாய். கருமித்தனத்தைவிடக் கொடிய நோய் ஏது?” என்று மூன்று முறை கேட்டார்கள். “ஒவ்வொரு முறை உனக்குத் தர மறுத்தபோதும் உனக்குக் கொடுக்க வேண்டுமென்றே கருதினேன்” என்றும் கூறினார்கள்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “இதை எண்ணிக்கொள்' என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு (தீனார்/திர்ஹம்) இருந்தது. அப்போது அவர்கள், “இதே போன்று இன்னும் இரண்டு மடங்கை நீ எடுத்துக் கொள்' என்று சொன்னார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.418

அத்தியாயம் : 64
4384. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، وَإِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ الْيَمَنِ، فَمَكَثْنَا حِينًا مَا نُرَى ابْنَ مَسْعُودٍ وَأُمَّهُ إِلاَّ مِنْ أَهْلِ الْبَيْتِ، مِنْ كَثْرَةِ دُخُولِهِمْ وَلُزُومِهِمْ لَهُ.
பாடம் : 75 அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன்வாசிகளின் வருகை419 “அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.420
4384. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் தங்கியிருந்தோம். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களுடைய தாயாரும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர் களுடைய வீட்டினுள்) அதிகமாகச் சென்று வருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் (இருவரும்) நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.421

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4385. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ زَهْدَمٍ، قَالَ لَمَّا قَدِمَ أَبُو مُوسَى أَكْرَمَ هَذَا الْحَىَّ مِنْ جَرْمٍ، وَإِنَّا لَجُلُوسٌ عِنْدَهُ وَهْوَ يَتَغَدَّى دَجَاجًا، وَفِي الْقَوْمِ رَجُلٌ جَالِسٌ، فَدَعَاهُ إِلَى الْغَدَاءِ، فَقَالَ إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ. فَقَالَ هَلُمَّ، فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْكُلُهُ. فَقَالَ إِنِّي حَلَفْتُ لاَ آكُلُهُ. فَقَالَ هَلُمَّ أُخْبِرْكَ عَنْ يَمِينِكَ، إِنَّا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم نَفَرٌ مِنَ الأَشْعَرِيِّينَ، فَاسْتَحْمَلْنَاهُ فَأَبَى أَنْ يَحْمِلَنَا فَاسْتَحْمَلْنَاهُ، فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا، ثُمَّ لَمْ يَلْبَثِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أُتِيَ بِنَهْبِ إِبِلٍ، فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ، فَلَمَّا قَبَضْنَاهَا قُلْنَا تَغَفَّلْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَمِينَهُ، لاَ نُفْلِحُ بَعْدَهَا أَبَدًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ حَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا وَقَدْ حَمَلْتَنَا. قَالَ "" أَجَلْ، وَلَكِنْ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ مِنْهَا "".
பாடம் : 75 அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன்வாசிகளின் வருகை419 “அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.420
4385. ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூஃபா நகரின் ஆட்சியாளராக) வருகை தந்தபோது, இந்த “ஜர்ம்' குடும்பத்தாரைச் (சந்தித்து அவர்களை)க் கண்ணியப்படுத்தினார்கள்.422

(ஒருமுறை) நாங்கள் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கோழியைப் பகல் உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அபூமூசா (ரலி) அவர்கள் அவரை உணவு உண்ண அழைத்தார்கள். அம்மனிதர், “இது, (அசுத்தம்) எதையோ தின்றுகொண்டி ருப்பதை நான் பார்த்தேன். ஆகவே, நான் இதை அருவருக்கிறேன்” என்றார்.

உடனே அபூமூசா (ரலி) அவர்கள், “இங்கே வா! நபி (ஸல்) அவர்கள் இதை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். அம்மனிதர், “நான் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன்” என்று சொன்னார். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், “இங்கே வா! உன் சத்தியத்தைப் பற்றி நான் உனக்குத் தெரிவிக்கிறேன். நாங்கள், அஷ்அரீ குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்.

நாங்கள் (பயணம் செய்ய) வாகனம் அளித்து உதவும்படி அவர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாகனம் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே, மீண்டும் அவர்களிடம் (பயணம் செய்ய) வாகனம் கேட்டோம். அவர்கள், “நீங்கள் பயணம் செய்வதற்காக உங்களுக்கு வாகனம் தரமாட்டேன்” என்று சத்தியம் செய்துவிட்டார்கள்.

பிறகு சிறிது நேரம்தான் தங்கியிருந்திருப்பார்கள். அதற்குள் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. எங்களுக்கு (பத்துக்குட்பட்ட ஒட்டகங்கள் கொண்ட மந்தைகளில்) ஐந்து மந்தைகள் வழங்கும்படி கட்டளையிட்டார்கள். நாங்கள் அதை எங்கள் கைவசம் பெற்றுக்கொண்டபோது, “நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கடித்துவிட்டோம். எனவே, நாம் ஒருபோதும் முன்னேற முடியாது” என்று சொல்லிக்கொண்டோம்.

உடனே நான் அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயணம் செய்ய வாகனம் தரமாட்டேன் என்று தாங்கள் சத்தியம் செய்துவிட்டு இப்போது நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வாகனம் தந்துவிட்டீர்களே” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “ஆம்! ஆயினும், நான் ஒரு விஷயத்திற்காகச் சத்தியம் செய்து அதன் பின் அதுவல்லாத வேறொன்றை, அதைவிடச் சிறந்ததாகக் கண்டால் அந்தச் சிறந்ததையே செய்வேன் (சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்)” என்று சொன்னார்கள்.423


அத்தியாயம் : 64
4386. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو صَخْرَةَ، جَامِعُ بْنُ شَدَّادٍ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ مُحْرِزٍ الْمَازِنِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، قَالَ جَاءَتْ بَنُو تَمِيمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَبْشِرُوا يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا أَمَّا إِذْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَجَاءَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 75 அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன்வாசிகளின் வருகை419 “அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.420
4386. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டீர்கள்தானே! (இனி ஏதேனும்) எங்களுக்கு வழங்கிடுங்கள்” என்று கேட்டார்கள்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. அப்போது யமன்வாசிகளில் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். அந்த யமனியர், “ஏற்றுக் கொண்டுவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர்.424


அத்தியாயம் : 64
4387. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" الإِيمَانُ هَا هُنَا "". وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْيَمَنِ "" وَالْجَفَاءُ وَغِلَظُ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ، عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம் : 75 அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன்வாசிகளின் வருகை419 “அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.420
4387. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை (ஈமான்) இங்கேயுள்ளது” என்று தமது கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், “கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.425


அத்தியாயம் : 64
4388. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَتَاكُمْ أَهْلُ الْيَمَنِ، هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَأَلْيَنُ قُلُوبًا، الإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ، وَالْفَخْرُ وَالْخُيَلاَءُ فِي أَصْحَابِ الإِبِلِ، وَالسَّكِينَةُ وَالْوَقَارُ فِي أَهْلِ الْغَنَمِ "". وَقَالَ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 75 அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன்வாசிகளின் வருகை419 “அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.420
4388. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக் கிறார்கள். அவர்கள் இளகிய மனமுடையவர்கள்; மென்மையான இதய முடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். தற் பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி) களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.426

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64