4329. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى بْنِ أُمَيَّةَ، أَخْبَرَ أَنَّ يَعْلَى كَانَ يَقُولُ لَيْتَنِي أَرَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يُنْزَلُ عَلَيْهِ. قَالَ فَبَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ، مَعَهُ فِيهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، إِذْ جَاءَهُ أَعْرَابِيٌّ عَلَيْهِ جُبَّةٌ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ فِي جُبَّةٍ بَعْدَ مَا تَضَمَّخَ بِالطِّيبِ فَأَشَارَ عُمَرُ إِلَى يَعْلَى بِيَدِهِ أَنْ تَعَالَ. فَجَاءَ يَعْلَى فَأَدْخَلَ رَأْسَهُ، فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْمَرُّ الْوَجْهِ، يَغِطُّ كَذَلِكَ سَاعَةً، ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ "" أَيْنَ الَّذِي يَسْأَلُنِي عَنِ الْعُمْرَةِ آنَفًا "". فَالْتُمِسَ الرَّجُلُ فَأُتِيَ بِهِ فَقَالَ "" أَمَّا الطِّيبُ الَّذِي بِكَ فَاغْسِلْهُ ثَلاَثَ مَرَّاتٍ، وَأَمَّا الْجُبَّةُ فَانْزِعْهَا، ثُمَّ اصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكَ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4329. ஸஃப்வான் பின் யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாதா என்று நான் ஆசைப்பட்டுவந்தேன்” என்று கூறுவது வழக்கம். ஒருமுறை, நபி (ஸல்) அவர்கள் (தாயிஃபிலிருந்து திரும்பும் சமயம்) ஜிஅரானாவில் இருக்கும்போது அவர்களுக்குத் துணியால் (கூடாரம் அமைத்து) நிழல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் துணிக் (கூடாரத்திற்)குள் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர்.

அப்போது வாசனைத் திரவியத்தில் தோய்ந்த, மேலங்கியொன்றை அணிந் திருந்த கிராமவாசியொருவர் வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டபின் மேலங்கியொன்றை அணிந்துகொண்டு உம்ராவுக்காக வந்த ஒரு மனிதரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

உடனே உமர் (ரலி) அவர்கள் யஅலா (ரலி) அவர்களை, “(அருகில்) வாருங்கள்” என்று கைகளால் சைகை செய்து அழைத்தார்கள். யஅலா (ரலி) அவர்கள் தமது தலையை (கூடாரத்திற்கு) உள்ளே நுழைத்தார்கள். அப்போது (வேத அறிவிப்பு அருளப்பெற்றுக்கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்து, அவர்கள் அப்படியே சிறிது நேரம் குறட்டைவிட்டபடி இருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை அவர்களைவிட்டு அகன்றது. பிறகு அவர்கள், “சற்று நேரத்திற்கு முன்பு என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள்.

உடனே அந்த மனிதர், தேடி அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், “உம்மீதுள்ள வாசனைத் திரவியத்தை மூன்று முறை கழுவுக! (தைக்கப்பட்டு அணிந்துள்ள) மேலங்கியைக் கழற்றிவிடுக! பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க!” என்று பதிலளித்தார்கள்.363


அத்தியாயம் : 64
4330. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، قَالَ لَمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَسَمَ فِي النَّاسِ فِي الْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ، وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا، فَكَأَنَّهُمْ وَجَدُوا إِذْ لَمْ يُصِبْهُمْ مَا أَصَابَ النَّاسَ فَخَطَبَهُمْ فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ أَلَمْ أَجِدْكُمْ ضُلاَّلاً فَهَدَاكُمُ اللَّهُ بِي، وَكُنْتُمْ مُتَفَرِّقِينَ فَأَلَّفَكُمُ اللَّهُ بِي وَعَالَةً، فَأَغْنَاكُمُ اللَّهُ بِي "". كُلَّمَا قَالَ شَيْئًا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ. قَالَ "" مَا يَمْنَعُكُمْ أَنْ تُجِيبُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم "". قَالَ كُلَّمَا قَالَ شَيْئًا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ. قَالَ "" لَوْ شِئْتُمْ قُلْتُمْ جِئْتَنَا كَذَا وَكَذَا. أَتَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ، وَتَذْهَبُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى رِحَالِكُمْ، لَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَشِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا، الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ، إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4330. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங் கள் தேற்றப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களிடையே (அவற்றைப்)பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்ததுபோல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.

ஆகவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), “அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா? அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நல்வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும்போதெல்லாம், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிகமாக உபகாரம் புரிந்தவர்கள்” என்று அன்சாரிகள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்காமலிருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும்போதெல்லாம் அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பேருபகாரிகள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடு களையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்)கொண்டு போக, நீங்கள் உங்கள் இல்லங் களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா?

ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்கா விட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாரும் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) ஆவர். மற்றவர்கள் மேலாடை போன்றவர் கள்.364

நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்)உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) “ஹவ்ள் (அல்கவ்ஸர்' எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை (நிலைகுலையாமல்) பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.365


அத்தியாயம் : 64
4331. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ نَاسٌ مِنَ الأَنْصَارِ حِينَ أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مَا أَفَاءَ مِنْ أَمْوَالِ هَوَازِنَ، فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْطِي رِجَالاً الْمِائَةَ مِنَ الإِبِلِ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. قَالَ أَنَسٌ فَحُدِّثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَقَالَتِهِمْ، فَأَرْسَلَ إِلَى الأَنْصَارِ فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ وَلَمْ يَدْعُ مَعَهُمْ غَيْرَهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ "". فَقَالَ فُقَهَاءُ الأَنْصَارِ أَمَّا رُؤَسَاؤُنَا يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يَقُولُوا شَيْئًا، وَأَمَّا نَاسٌ مِنَّا حَدِيثَةٌ أَسْنَانُهُمْ فَقَالُوا يَغْفِرُ اللَّهُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُعْطِي قُرَيْشًا وَيَتْرُكُنَا، وَسُيُوفُنَا تَقْطُرُ مِنْ دِمَائِهِمْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَإِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ، أَتَأَلَّفُهُمْ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَذْهَبُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى رِحَالِكُمْ، فَوَاللَّهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ بِهِ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ رَضِينَا. فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَتَجِدُونَ أُثْرَةً شَدِيدَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوُا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم فَإِنِّي عَلَى الْحَوْضِ "". قَالَ أَنَسٌ فَلَمْ يَصْبِرُوا.
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்தபோது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே (அன்சாரிகளில்) சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷியரின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகிறார் களே!” என்று (கவலையுடன்) சொன்னார் கள். அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரி களுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்க அன்சாரிகளில் விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!' என்று பேசிக்கொண்டனர்” என்று கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “இறைமறுப்பைவிட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக்கொள்கிறேன். மக்கள் (பிற உலகச்) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்றுசொன்னார்கள்.

அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்” என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள்.

ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல்கவ்ஸர்' எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்க வில்லை.366


அத்தியாயம் : 64
4332. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمَ فَتْحِ مَكَّةَ قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَنَائِمَ بَيْنَ قُرَيْشٍ. فَغَضِبَتِ الأَنْصَارُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم "". قَالُوا بَلَى. قَالَ "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَهُمْ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4332. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்கா வெற்றியின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். ஆகவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக்கொண்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அன்சாரிகள், “ஆம், (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ பள்ளத்தாக்கிலோதான் செல்வேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4333. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ، عَنِ ابْنِ عَوْنٍ، أَنْبَأَنَا هِشَامُ بْنُ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ حُنَيْنٍ الْتَقَى هَوَازِنُ وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشَرَةُ آلاَفٍ وَالطُّلَقَاءُ فَأَدْبَرُوا قَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، لَبَّيْكَ نَحْنُ بَيْنَ يَدَيْكَ، فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ "". فَانْهَزَمَ الْمُشْرِكُونَ، فَأَعْطَى الطُّلَقَاءَ وَالْمُهَاجِرِينَ وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا فَقَالُوا، فَدَعَاهُمْ فَأَدْخَلَهُمْ فِي قُبَّةٍ فَقَالَ "" أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ""، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ""لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لاَخْتَرْتُ شِعْبَ الأَنْصَارِ ""
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4333. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி (ஸல்) அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (அறப்போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின்போது) பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.367

அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்ற னர். நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அழைப்புக்குப் பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கின்றோம்” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன்” என்று சொன்னார்கள். (பிறகு அந்தப் போரில்) இணைவைப்பாளர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, “இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்றும் சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4334. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاسًا مِنَ الأَنْصَارِ، فَقَالَ "" إِنَّ قُرَيْشًا حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَمُصِيبَةٍ، وَإِنِّي أَرَدْتُ أَنْ أَجْبُرَهُمْ وَأَتَأَلَّفَهُمْ أَمَا تَرْضَوْنَ أَنْ يَرْجِعَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى بُيُوتِكُمْ "". قَالُوا بَلَى. قَالَ "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ أَوْ شِعْبَ الأَنْصَارِ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4334. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்றுகூட்டி, “(இந்தக்) குறைஷி யர், அறியாமைக் கொள்கையை இப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனால் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் நான் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள்.

அன்சாரிகள், “ஆம் (அதைத்தான் விரும்புகிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் “அன்சாரிகளின் கணவாயில்தான்' அல்லது “அன்சாரிகளின் பள்ளத்தாக்கில்தான்' செல்வேன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4335. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قِسْمَةَ حُنَيْنٍ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مَا أَرَادَ بِهَا وَجْهَ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَتَغَيَّرَ وَجْهُهُ ثُمَّ قَالَ "" رَحْمَةُ اللَّهِ عَلَى مُوسَى، لَقَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்டபோது அன்சாரிகளில் ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை” என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், “(இறைத்தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்; ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.368


அத்தியாயம் : 64
4336. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاسًا، أَعْطَى الأَقْرَعَ مِائَةً مِنَ الإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى نَاسًا، فَقَالَ رَجُلٌ مَا أُرِيدَ بِهَذِهِ الْقِسْمَةِ وَجْهُ اللَّهِ. فَقُلْتُ لأُخْبِرَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" رَحِمَ اللَّهُ مُوسَى. قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4336. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது, நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ (பின் ஹாபிஸ்-ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ -ரலி) அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், “இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை” என்று சொன்னார்.369

உடனே நான், “இதை நிச்சயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்” என்று சொன்னேன். (அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் சென்று நான் சொல்ல) அவர்கள், “(இறைத்தூதர்) “மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதைவிட அதிகமாக அவர்கள் மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்கள்.370


அத்தியாயம் : 64
4337. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ أَقْبَلَتْ هَوَازِنُ وَغَطَفَانُ وَغَيْرُهُمْ بِنَعَمِهِمْ وَذَرَارِيِّهِمْ، وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشَرَةُ آلاَفٍ وَمِنَ الطُّلَقَاءِ، فَأَدْبَرُوا عَنْهُ حَتَّى بَقِيَ وَحْدَهُ، فَنَادَى يَوْمَئِذٍ نِدَاءَيْنِ لَمْ يَخْلِطْ بَيْنَهُمَا، الْتَفَتَ عَنْ يَمِينِهِ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ. ثُمَّ الْتَفَتَ عَنْ يَسَارِهِ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ "". قَالُوا لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ. وَهْوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ، فَنَزَلَ فَقَالَ "" أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ""، فَانْهَزَمَ الْمُشْرِكُونَ، فَأَصَابَ يَوْمَئِذٍ غَنَائِمَ كَثِيرَةً، فَقَسَمَ فِي الْمُهَاجِرِينَ وَالطُّلَقَاءِ وَلَمْ يُعْطِ الأَنْصَارَ شَيْئًا، فَقَالَتِ الأَنْصَارُ إِذَا كَانَتْ شَدِيدَةٌ فَنَحْنُ نُدْعَى، وَيُعْطَى الْغَنِيمَةَ غَيْرُنَا. فَبَلَغَهُ ذَلِكَ، فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ، فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ "". فَسَكَتُوا فَقَالَ "" يَا مَعْشَرَ الأَنْصَارِ أَلاَ تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا، وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَحُوزُونَهُ إِلَى بُيُوتِكُمْ "". قَالُوا بَلَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا، وَسَلَكَتِ الأَنْصَارُ شِعْبًا لأَخَذْتُ شِعْبَ الأَنْصَارِ "". فَقَالَ هِشَامٌ يَا أَبَا حَمْزَةَ، وَأَنْتَ شَاهِدٌ ذَاكَ قَالَ وَأَيْنَ أَغِيبُ عَنْهُ
பாடம் : 57 ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடந்த “தாயிஃப்' போர்353 இது குறித்து மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4337. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தாரும் ஃகதஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர்.அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியாக) விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள்.

அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்துவிடாமல் (இடைவெளி இருக்குமாறு) பார்த்துக்கொண்டார்கள்.

தம் வலப் பக்கம் திரும்பி, “அன்சாரி களே!” என்று அழைக்க அவர்கள், “இதோ, வந்துவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் இடப் பக்கம் திரும்பி, “அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்), “இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், அல்லாஹ்வின் தூதரே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது “பைளா' எனும் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்று சொன்னார்கள். பிறகு, இணைவைப்பாளர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியில்) பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.

ஆகவே அன்சாரிகள் (சிலர்), “ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஆனால், (பிரச்சினை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக் குறையுடன்) பேசிக்கொண்டார்கள். இவர் கள் இப்படிப் பேசிக்கொள்ளும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இந்தச் செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மைதான் என்பது போல்) மௌனமாயிருந்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சொந்தமாக்கிக்கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம் (நாங்கள் அதைத்தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களெல்லாரும் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வேறொரு பள்ளத்தாக்கில் செல்வார்களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்,) “அபூஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 64
4338. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً قِبَلَ نَجْدٍ، فَكُنْتُ فِيهَا، فَبَلَغَتْ سِهَامُنَا اثْنَىْ عَشَرَ بَعِيرًا، وَنُفِّلْنَا بَعِيرًا بَعِيرًا، فَرَجَعْنَا بِثَلاَثَةَ عَشَرَ بَعِيرًا.
பாடம் : 58 “நஜ்த்' நோக்கி அனுப்பப்பட்ட படைப்பிரிவு371
4338. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். நான் அதில் இடம் பெற்றிருந்தேன்.

(அந்தப் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில்) எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் பன்னிரண்டு ஒட்டகங்களாக இருந்தன.

எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுக்குரிய பங்குக்கும் மேல் அதிகமாக ஒவ்வோர் ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஆக, நாங்கள் (ஒவ்வொருவரும்) பதிமூன்று ஒட்டகங்களைப் பெற்றுத் திரும்பினோம்.372

அத்தியாயம் : 64
4339. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَحَدَّثَنِي نُعَيْمٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ، فَدَعَاهُمْ إِلَى الإِسْلاَمِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا. فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا، صَبَأْنَا. فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ، وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ، حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لاَ أَقْتُلُ أَسِيرِي، وَلاَ يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ، حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرْنَاهُ، فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ "" اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ "". مَرَّتَيْنِ.
பாடம் : 59 நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பி யது373
4339. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா' (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்) என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி) “ஸபஃனா, ஸபஃனா' (நாங்கள் மதம் மாறிவிட்டோம், மதம் மாறிவிட்டோம்) என்று சொல்லலானார்கள்.

உடனே அவர்களில் சிலரை காலித் (ரலி) அவர்கள் கொல்லவும் சிலரைச் சிறைபிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒருநாள் காலித் (ரலி) அவர்கள், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்லமாட்டேன்; மேலும், என் சகாக்களில் எவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்கள்” என்று சொன்னேன்.

இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என இருமுறை சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அத்தியாயம் : 64
4340. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلاً مِنَ الأَنْصَارِ، وَأَمَرَهُمْ أَنْ يُطِيعُوهُ، فَغَضِبَ فَقَالَ أَلَيْسَ أَمَرَكُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُطِيعُونِي. قَالُوا بَلَى. قَالَ فَاجْمَعُوا لِي حَطَبًا. فَجَمَعُوا، فَقَالَ أَوْقِدُوا نَارًا. فَأَوْقَدُوهَا، فَقَالَ ادْخُلُوهَا. فَهَمُّوا، وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا، وَيَقُولُونَ فَرَرْنَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنَ النَّارِ. فَمَا زَالُوا حَتَّى خَمَدَتِ النَّارُ، فَسَكَنَ غَضَبُهُ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ، الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ "".
பாடம் : 60 அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) மற்றும் அல்கமா பின் முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ (ரலி) ஆகியோரின் படைப்பிரிவு இது “அன்சாரிகளின் படைப்பிரிவு' என்று அழைக்கப்படுகிறது.374
4340. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.(அவர்கள் ஏதோ தவறிழைத்துவிட) அவர்கள்மீது அவர் கோபமுற்று, “நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லையா?” என்று கேட்டார். அவர்கள், “ஆம் (கட்டளை யிட்டார்கள்)” என்று பதிலளித்தனர்.

அவர், “அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், “நெருப்பு மூட்டுங்கள்” என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், “இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்” என்று கூற, அவர்கள் அதில் நுழையப்போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், “(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித்தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்” என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும்வரை இவ்வாறே கூறிக்கொண்டிருந்தனர். பிறகு, படைத் தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, “அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள்வரையிலும்கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள்.375 கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில்தான்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 64
4341. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا مُوسَى وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ، قَالَ وَبَعَثَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى مِخْلاَفٍ قَالَ وَالْيَمَنُ مِخْلاَفَانِ ثُمَّ قَالَ " يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا ". فَانْطَلَقَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِلَى عَمَلِهِ، وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِذَا سَارَ فِي أَرْضِهِ كَانَ قَرِيبًا مِنْ صَاحِبِهِ أَحْدَثَ بِهِ عَهْدًا، فَسَلَّمَ عَلَيْهِ، فَسَارَ مُعَاذٌ فِي أَرْضِهِ قَرِيبًا مِنْ صَاحِبِهِ أَبِي مُوسَى، فَجَاءَ يَسِيرُ عَلَى بَغْلَتِهِ حَتَّى انْتَهَى إِلَيْهِ، وَإِذَا هُوَ جَالِسٌ، وَقَدِ اجْتَمَعَ إِلَيْهِ النَّاسُ، وَإِذَا رَجُلٌ عِنْدَهُ قَدْ جُمِعَتْ يَدَاهُ إِلَى عُنُقِهِ فَقَالَ لَهُ مُعَاذٌ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَيَّمَ هَذَا قَالَ هَذَا رَجُلٌ كَفَرَ بَعْدَ إِسْلاَمِهِ. قَالَ لاَ أَنْزِلُ حَتَّى يُقْتَلَ. قَالَ إِنَّمَا جِيءَ بِهِ لِذَلِكَ فَانْزِلْ. قَالَ مَا أَنْزِلُ حَتَّى يُقْتَلَ فَأَمَرَ بِهِ فَقُتِلَ ثُمَّ نَزَلَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ، كَيْفَ تَقْرَأُ الْقُرْآنَ قَالَ أَتَفَوَّقُهُ تَفَوُّقًا. قَالَ فَكَيْفَ تَقْرَأُ أَنْتَ يَا مُعَاذُ قَالَ أَنَامُ أَوَّلَ اللَّيْلِ فَأَقُومُ وَقَدْ قَضَيْتُ جُزْئِي مِنَ النَّوْمِ، فَأَقْرَأُ مَا كَتَبَ اللَّهُ لِي، فَأَحْتَسِبُ نَوْمَتِي كَمَا أَحْتَسِبُ قَوْمَتِي.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4341. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி னார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்குப் பொறுப்பாளராக அனுப்பினார்கள். யமன் இரு மாகாணங்களாகும்.377

பிறகு, “(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர் கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.

அவர்கள் இருவரும் தத்தம் பணி (இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தமது சந்திப்பைப் புதுப்பித்துக்கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தம் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தமது கோவேறு கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்றுசேர்ந்தார்.

அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்றுகூடியிருக்க (தமது அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இரு கைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபின் அதை நிராகரித்துவிட்டவன்” என்று பதிலளித்தார்கள்.378

முஆத் (ரலி) அவர்கள், “இவன் கொல்லப்படும்வரை நான் (என் வாகனத்தி லிருந்து) இறங்கமாட்டேன்” என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத்தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆத், (ரலி) அவர்கள் “இவன் கொல்லப்படும்வரை நான் (வாகனத்திóருந்து) இறங்கமாட்டேன்” என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும்படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, “அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், “(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு அபூமூசா (ரலி) அவர்கள், “முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்?” என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், “இரவின் முற்பகுதியில் நான் உறங்கிவிடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வழிபடு)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 64
4343.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4343. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்குப் பொறுப்பாளராக அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள், “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல்பித்உ, அல்மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம், “ அல்பித்உ என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்பித்உ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், அல்மிஸ்ர் என்பது தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் :
4344. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَدَّهُ أَبَا مُوسَى، وَمُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ " يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا ". فَقَالَ أَبُو مُوسَى يَا نَبِيَّ اللَّهِ، إِنَّ أَرْضَنَا بِهَا شَرَابٌ مِنَ الشَّعِيرِ الْمِزْرُ، وَشَرَابٌ مِنَ الْعَسَلِ الْبِتْعُ. فَقَالَ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ ". فَانْطَلَقَا فَقَالَ مُعَاذٌ لأَبِي مُوسَى كَيْفَ تَقْرَأُ الْقُرْآنَ قَالَ قَائِمًا وَقَاعِدًا وَعَلَى رَاحِلَتِهِ وَأَتَفَوَّقُهُ تَفَوُّقًا. قَالَ أَمَّا أَنَا فَأَنَامُ وَأَقُومُ، فَأَحْتَسِبُ نَوْمَتِي كَمَا أَحْتَسِبُ قَوْمَتِي، وَضَرَبَ فُسْطَاطًا، فَجَعَلاَ يَتَزَاوَرَانِ، فَزَارَ مُعَاذٌ أَبَا مُوسَى، فَإِذَا رَجُلٌ مُوثَقٌ، فَقَالَ مَا هَذَا فَقَالَ أَبُو مُوسَى يَهُودِيٌّ أَسْلَمَ ثُمَّ ارْتَدَّ. فَقَالَ مُعَاذٌ لأَضْرِبَنَّ عُنُقَهُ. تَابَعَهُ الْعَقَدِيُّ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ. وَقَالَ وَكِيعٌ وَالنَّضْرُ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. رَوَاهُ جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ أَبِي بُرْدَةَ.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4344. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பூட்டிவிடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் தொலி நீக்கப்படாத கோதுமையில் தயாராகும் ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாராகும் ஒருவகை பானமான “பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

பின்பு நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒருமுறை சந்தித்தபோது) முஆத் (ரலி) அவர்கள் என்னிடம், “நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார். நான், “நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வழிபடு)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கி றேன்” என்று சொன்னார். பிறகு கம்பளியாலான கூடாரமொன்றை அமைத்துக்கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். நான், “இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்” என்று பதிலளித்தேன். முஆத் (ரலி) அவர்கள், “இவனது கழுத்தை நான் துண்டிப்பேன்” என்றார்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4346. حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، يَقُولُ حَدَّثَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَرْضِ قَوْمِي، فَجِئْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنِيخٌ بِالأَبْطَحِ فَقَالَ "" أَحَجَجْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ "". قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" كَيْفَ قُلْتَ "". قَالَ قُلْتُ لَبَّيْكَ إِهْلاَلاً كَإِهْلاَلِكَ. قَالَ "" فَهَلْ سُقْتَ مَعَكَ هَدْيًا "". قُلْتُ لَمْ أَسُقْ. قَالَ "" فَطُفْ بِالْبَيْتِ وَاسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ حِلَّ "". فَفَعَلْتُ حَتَّى مَشَطَتْ لِي امْرَأَةٌ مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، وَمَكُثْنَا بِذَلِكَ حَتَّى اسْتُخْلِفَ عُمَرُ.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4346. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்தஹ்' பள்ளத்தாக்கில் தங்கியிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “நீங்கள் (இஹ்ராமின்போது) என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ தாங்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என்று சொன்னேன்” எனப் பதிலளித்தேன். அவர்கள், “உங்களுடன் பலிப் பிராணியை நீங்கள் கொண்டுவந்தீர்களா?” என்று கேட்டார்கள். நான், “கொண்டுவரவில்லை” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலை வாரினாள். இவ்வாறே, உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்வரை நாங்கள் செயல்பட்டுவந்தோம்.379


அத்தியாயம் : 64
4347. حَدَّثَنِي حِبَّانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ "" إِنَّكَ سَتَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْكُمْ صَدَقَةً، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ طَاعُوا لَكَ بِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {طَوَّعَتْ} طَاعَتْ وَأَطَاعَتْ لُغَةٌ، طِعْتُ وَطُعْتُ وَأَطَعْتُ.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4347. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது சொன்னார்கள்:

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்லப்போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றும் உறுதிமொழி கூற அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகை களை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள்.

இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அவர்கள்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, அவர்களின் செல்வங் களில் உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கின்றேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.380

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(இங்கு “கீழ்ப்படிதல்' என்பதைக் குறித்து) “அ(த்)தாஊ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. தவ்வஅ, தாஅ, அ(த்)தாஅ எல்லாம் (பொருளில்) ஒன்றே! “நான் கீழ்ப்படிந்தேன்' என்பதை திஅ(த்)து, துஅ(த்)து, அ(த்)தஅத்து என (மூன்று முறையில்) கூறலாம்.


அத்தியாயம் : 64
4348. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، أَنَّ مُعَاذًا ـ رضى الله عنه ـ لَمَّا قَدِمَ الْيَمَنَ صَلَّى بِهِمِ الصُّبْحَ فَقَرَأَ {وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً} فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لَقَدْ قَرَّتْ عَيْنُ أُمِّ إِبْرَاهِيمَ. زَادَ مُعَاذٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبٍ عَنْ سَعِيدٍ عَنْ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَرَأَ مُعَاذٌ فِي صَلاَةِ الصُّبْحِ سُورَةَ النِّسَاءِ فَلَمَّا قَالَ {وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً} قَالَ رَجُلٌ خَلْفَهُ قَرَّتْ عَيْنُ أُمِّ إِبْرَاهِيمَ.
பாடம் : 61 அபூமூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்376
4348. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) வந்தபோது மக்களுக்கு சுப்ஹ் தொழுகை தொழுவித் தார்கள். அப்போது, “அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” எனும் (4:125ஆம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.381

மற்றோர் அறிவிப்பில் கூடுதாக உள்ள தாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு(ப் பொறுப்பாளராக) அனுப்பினார்கள். (அங்கு சென்றபின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் (இமாமாக நின்று குர்ஆனின் நான்காவது அத்தியாயமான) “அந்நிசா' அத்தியாயத்தை ஓதினார்கள். “அல்லாஹ் இப்ராஹீமை உற்றநண்பராக ஆக்கிக்கொண்டான்” (4:125) எனும் வசனத்தை முஆத் (ரலி) அவர்கள் ஓதியபோது அவர்களுக்குப் பின்னாóருந்த ஒரு மனிதர், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது” என்று சொன்னார்.

அத்தியாயம் : 64