4269. حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، أَخْبَرَنَا أَبُو ظَبْيَانَ، قَالَ سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْحُرَقَةِ، فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلاً مِنْهُمْ، فَلَمَّا غَشِينَاهُ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَكَفَّ الأَنْصَارِيُّ، فَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، فَلَمَّا قَدِمْنَا بَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَا أُسَامَةُ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ "" قُلْتُ كَانَ مُتَعَوِّذًا. فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ.
பாடம் : 46 ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரகாத்' கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது309
4269. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுரகா' கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டபோது அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார்.

நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், “உசாமாவே! அவர், “லா இலாஹ இல்லல்லாஹ்' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தம்மைத் தற்காத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார்” என்று சொன்னேன்.

(ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், நான், “(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)' என்றுகூட நினைத்தேன்.


அத்தியாயம் : 64
4270. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ، يَقُولُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ، وَخَرَجْتُ فِيمَا يَبْعَثُ مِنَ الْبُعُوثِ تِسْعَ غَزَوَاتٍ، مَرَّةً عَلَيْنَا أَبُو بَكْرٍ، وَمَرَّةً عَلَيْنَا أُسَامَةُ.
பாடம் : 46 ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரகாத்' கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது309
4270. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன்.310 அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் கலந்துகொண்டு ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள் ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை எங்களுக்கு உசாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.311


அத்தியாயம் : 64
4271. وَقَالَ عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ، يَقُولُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ، وَخَرَجْتُ فِيمَا يَبْعَثُ مِنَ الْبَعْثِ تِسْعَ غَزَوَاتٍ، عَلَيْنَا مَرَّةً أَبُو بَكْرٍ، وَمَرَّةً أُسَامَةُ.
பாடம் : 46 ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரகாத்' கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது309
4271. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் கலந்துகொண்டு ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.


அத்தியாயம் : 64
4272. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ، وَغَزَوْتُ مَعَ ابْنِ حَارِثَةَ اسْتَعْمَلَهُ عَلَيْنَا.
பாடம் : 46 ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரகாத்' கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது309
4272. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது அறப்போர்களில் கலந்துகொண்டேன்.312 நான் (உசாமா) இப்னு (ஸைத் பின்) ஹாரிஸா (ரலி) அவர்களுடன் அறப் போர் புரிந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள்.


அத்தியாயம் : 64
4273. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ. فَذَكَرَ خَيْبَرَ وَالْحُدَيْبِيَةَ وَيَوْمَ حُنَيْنٍ وَيَوْمَ الْقَرَدِ. قَالَ يَزِيدُ وَنَسِيتُ بَقِيَّتَهُمْ.
பாடம் : 46 ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரகாத்' கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது309
4273. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன்” என்று சொல்லிவிட்டு, “கைபர் போர், ஹுதைபியா(வில் நடக்கவிருந்து தவிர்க்கப்பட்ட) போர், ஹுனைன் போர், தூ கரத் போர் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றில் மீதியை நான் மறந்துவிட்டேன்.

அத்தியாயம் : 64
4274. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي رَافِعٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَالزُّبَيْرَ وَالْمِقْدَادَ فَقَالَ "" انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةً مَعَهَا كِتَابٌ، فَخُذُوا مِنْهَا "". قَالَ فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى أَتَيْنَا الرَّوْضَةَ، فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ قُلْنَا لَهَا أَخْرِجِي الْكِتَابَ. قَالَتْ مَا مَعِي كِتَابٌ. فَقُلْنَا لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ، قَالَ فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا، فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا فِيهِ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى نَاسٍ بِمَكَّةَ مِنَ الْمُشْرِكِينَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا حَاطِبُ مَا هَذَا "". قَالَ يَا رَسُولَ اللَّهِ لاَ تَعْجَلْ عَلَىَّ، إِنِّي كُنْتُ امْرَأً مُلْصَقًا فِي قُرَيْشٍ ـ يَقُولُ كُنْتُ حَلِيفًا وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا ـ وَكَانَ مَنْ مَعَكَ مِنَ الْمُهَاجِرِينَ مَنْ لَهُمْ قَرَابَاتٌ، يَحْمُونَ أَهْلِيهِمْ وَأَمْوَالَهُمْ، فَأَحْبَبْتُ إِذْ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ قَرَابَتِي، وَلَمْ أَفْعَلْهُ ارْتِدَادًا عَنْ دِينِي، وَلاَ رِضًا بِالْكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكُمْ "". فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا الْمُنَافِقِ. فَقَالَ "" إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى مَنْ شَهِدَ بَدْرًا قَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ "". فَأَنْزَلَ اللَّهُ السُّورَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ} إِلَى قَوْلِهِ {فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ }.
பாடம் : 47 மக்கா வெற்றியின்போது நடந்த அறப்போரும் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் போர் தொடுக்க விருக்கும் செய்தியை மக்காவாசிகளுக்கு (ஒரு பெண் மூலம் இரகசிய மாக) அனுப்பிவைத்ததும்313
4274. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர் களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்' எனும் இடம்வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண்  இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள்.

(அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்துகொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின.

இறுதியில், நாங்கள் “ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று  கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று சொன்னாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு)விடுவோம்” என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள்.

நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்பாளர்களிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?” என்று கேட்டார் கள்.

ஹாத்திப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப் பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பாளர்களான) மக்கா வாசிகளுக்கு நான்  உபகாரம் எதை யாவது செய்து அதற்குப் பிரதியுப காரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவியபின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகரின்  கழுத்தை வெட்டிவிடுகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு  நபி (ஸல்)  அவர்கள், “இவர் பத்ர் போரில் கலந்துகொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒருவேளை, அல்லாஹ் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள்.314

அப்போது அல்லாஹ் பின்வரும் (60ஆவது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறுத்துவிட்டவர்கள்...(60:1)

அத்தியாயம் : 64
4275. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَزَا غَزْوَةَ الْفَتْحِ فِي رَمَضَانَ. قَالَ وَسَمِعْتُ ابْنَ الْمُسَيَّبِ يَقُولُ مِثْلَ ذَلِكَ. وَعَنْ عُبَيْدِ اللَّهِ أَنَّ ابْنَ عَبَّاسِ ـ رضى الله عنهما ـ قَالَ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا بَلَغَ الْكَدِيدَ ـ الْمَاءَ الَّذِي بَيْنَ قُدَيْدٍ وَعُسْفَانَ ـ أَفْطَرَ، فَلَمْ يَزَلْ مُفْطِرًا حَتَّى انْسَلَخَ الشَّهْرُ.
பாடம் : 48 ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப் போர்315
4275. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்கா வெற்றிப் போருக்காக (மக்கா நோக்கி)ப் புறப்பட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “அப்போது நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். “கதீத்' எனும் இடத்தை -உஸ்ஃபானுக்கும் குதைதுக்கும் இடையே உள்ள நீர் நிலையை- அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். அந்த மாதம் கழியும் வரையிலும்கூட அவர்கள் நோன்பு நோற்கவில்லை” என்று வந்துள்ளது.316


அத்தியாயம் : 64
4276. حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنِي مَعْمَرٌ، قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ فِي رَمَضَانَ مِنَ الْمَدِينَةِ، وَمَعَهُ عَشَرَةُ آلاَفٍ، وَذَلِكَ عَلَى رَأْسِ ثَمَانِ سِنِينَ وَنِصْفٍ مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ، فَسَارَ هُوَ وَمَنْ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ إِلَى مَكَّةَ، يَصُومُ وَيَصُومُونَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ ـ وَهْوَ مَاءٌ بَيْنَ عُسْفَانَ وَقُدَيْدٍ ـ أَفْطَرَ وَأَفْطَرُوا. قَالَ الزُّهْرِيُّ وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الآخِرُ فَالآخِرُ.
பாடம் : 48 ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப் போர்315
4276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக்கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

-இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது-

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் “கதீத்' என்னுமிடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். -இந்த இடம் உஸ்ஃபானுக்கும் “குதைத்' எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்நிலையாகும்- (அங்கு) நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளில் பிந்தியது, அதற்கடுத்துப் பிந்தியதுதான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.317


அத்தியாயம் : 64
4277. حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ إِلَى حُنَيْنٍ، وَالنَّاسُ مُخْتَلِفُونَ فَصَائِمٌ وَمُفْطِرٌ، فَلَمَّا اسْتَوَى عَلَى رَاحِلَتِهِ دَعَا بِإِنَاءٍ مِنْ لَبَنٍ أَوْ مَاءٍ، فَوَضَعَهُ عَلَى رَاحَتِهِ أَوْ عَلَى رَاحِلَتِهِ، ثُمَّ نَظَرَ إِلَى النَّاسِ فَقَالَ الْمُفْطِرُونَ لِلصُّوَّامِ أَفْطِرُوا.
பாடம் : 48 ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப் போர்315
4277. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத் தில் (மக்கா வெற்றிக்குப்பின்) ஹுனைன் நோக்கி (அறப் போருக்காக)ப் புறப்ப(டத் திட்டமி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத் தில் நன்கு அமர்ந்துகொண்டபோது ஒரு “பால் பாத்திரத்தை' அல்லது “தண்ணீர்ப் பாத்திரத்தை' கொண்டுவரும்படி கூறி, அதைத் “தமது உள்ளங்கையில்' அல்லது “தமது வாகனத்தில்' வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். அப்போது நோன்பை விட்டுவிட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், “நீங்களும் நோன்பை விடுங்கள்” என்று சொன்னார் கள்.


அத்தியாயம் : 64
4278. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ. وَقَالَ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 48 ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப் போர்315
4278. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (ரமளான் மாதம்) புறப்பட் டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4279. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَافَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَشَرِبَ نَهَارًا، لِيُرِيَهُ النَّاسَ، فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ. قَالَ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي السَّفَرِ وَأَفْطَرَ، فَمَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ.
பாடம் : 48 ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப் போர்315
4279. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். “உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டுவரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காண வேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக்கொண்டார்கள். மக்காவை அடையும்வரை நோன்பு நோற்கவில்லை.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். ஆகவே, (பயணத்தில் நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டுவிடவும் செய்யலாம்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.318

அத்தியாயம் : 64
4280. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا سَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا، خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ وَحَكِيمُ بْنُ حِزَامٍ وَبُدَيْلُ بْنُ وَرْقَاءَ يَلْتَمِسُونَ الْخَبَرَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ، فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ، فَقَالَ أَبُو سُفْيَانَ مَا هَذِهِ لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ. فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ نِيرَانُ بَنِي عَمْرٍو. فَقَالَ أَبُو سُفْيَانَ عَمْرٌو أَقَلُّ مِنْ ذَلِكَ. فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ، فَأَتَوْا بِهِمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ، فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ "" احْبِسْ أَبَا سُفْيَانَ عِنْدَ حَطْمِ الْخَيْلِ حَتَّى يَنْظُرَ إِلَى الْمُسْلِمِينَ "". فَحَبَسَهُ الْعَبَّاسُ، فَجَعَلَتِ الْقَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَمُرُّ كَتِيبَةً كَتِيبَةً عَلَى أَبِي سُفْيَانَ، فَمَرَّتْ كَتِيبَةٌ قَالَ يَا عَبَّاسُ مَنْ هَذِهِ قَالَ هَذِهِ غِفَارُ. قَالَ مَا لِي وَلِغِفَارَ ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ، قَالَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُذَيْمٍ، فَقَالَ مِثْلَ ذَلِكَ، وَمَرَّتْ سُلَيْمُ، فَقَالَ مِثْلَ ذَلِكَ، حَتَّى أَقْبَلَتْ كَتِيبَةٌ لَمْ يَرَ مِثْلَهَا، قَالَ مَنْ هَذِهِ قَالَ هَؤُلاَءِ الأَنْصَارُ عَلَيْهِمْ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَهُ الرَّايَةُ. فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَا أَبَا سُفْيَانَ الْيَوْمُ يَوْمُ الْمَلْحَمَةِ، الْيَوْمَ تُسْتَحَلُّ الْكَعْبَةُ. فَقَالَ أَبُو سُفْيَانَ يَا عَبَّاسُ حَبَّذَا يَوْمُ الذِّمَارِ. ثُمَّ جَاءَتْ كَتِيبَةٌ، وَهْىَ أَقَلُّ الْكَتَائِبِ، فِيهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ، وَرَايَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، فَلَمَّا مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِأَبِي سُفْيَانَ قَالَ أَلَمْ تَعْلَمْ مَا قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ قَالَ "" مَا قَالَ "". قَالَ كَذَا وَكَذَا. فَقَالَ "" كَذَبَ سَعْدٌ، وَلَكِنْ هَذَا يَوْمٌ يُعَظِّمُ اللَّهُ فِيهِ الْكَعْبَةَ، وَيَوْمٌ تُكْسَى فِيهِ الْكَعْبَةُ "". قَالَ وَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُرْكَزَ رَايَتُهُ بِالْحَجُونِ. قَالَ عُرْوَةُ وَأَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ سَمِعْتُ الْعَبَّاسَ يَقُولُ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ يَا أَبَا عَبْدِ اللَّهِ، هَا هُنَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تَرْكُزَ الرَّايَةَ، قَالَ وَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَنْ يَدْخُلَ مِنْ أَعْلَى مَكَّةَ مِنْ كَدَاءٍ، وَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ كُدَا، فَقُتِلَ مِنْ خَيْلِ خَالِدٍ يَوْمَئِذٍ رَجُلاَنِ حُبَيْشُ بْنُ الأَشْعَرِ وَكُرْزُ بْنُ جَابِرٍ الْفِهْرِيُّ.
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4280. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷியருக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர்.319 அவர்கள் பயணம் மேற்கொண்டு “மர்ருழ் ழஹ்ரான்' எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன.

அப்போது அபூசுஃப்யான், “இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப் பைப் போன்றே இருக்கிறதே” என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, “இது (“குபா'வில் குடியிருக்கும் “குஸாஆ' எனப்படும்) பனூ அம்ர் குலத்தாரின் நெருப்புகள்” என்று கூறினார். உடனே அபூசுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தாரின் எண்ணிக்கை இதைவிட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்பு களாக இருக்க வாய்ப்பில்லை)” என்று கூறினார்.

அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். பின்பு அபூசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக்கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படைபலத்தைப் புரிந்துகொள்ளட்டும்)” என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாகஅபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின.

அவரை ஒரு படை கடந்து சென்ற வுடன், “அப்பாஸே! இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவர்கள் ஃகிஃபாரீ குலத்தார்” என்று பதிலளித்தார்கள். அப்போது, “எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)” என்று அபூசுஃப்யான் கூறினார்.

பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன்பு போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தார் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தார் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் (ரலி) அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.)

இறுதியாக ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. “இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்க, “இவர்கள்தான் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன்தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது” என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளேகூட யுத்தம் அனுமதிக்கப்படும்” என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள்.

அதற்கு அபூசுஃப்யான் “அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷியருக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)” என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார் கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். “இப்படி இப்படி எல்லாம் கூறினார்” என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார்” என்று சொல்லிவிட்டு, “மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள்; கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்” என்று கூறினார்கள்.320

அறிவிப்பாளர் உர்வா (பின் அஸ்ஸுபைர்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) “ஹ—þன்' எனும் இடத்தில் நட்டுவைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப்பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “அபூஅப்தில்லாஹ்வே! இங்குதான் அந்தக் கொடியை நட்டுவைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்” என்றார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான “கதா' எனும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குதா' வழியாக நுழைந்தார்கள்.321 அன்றைய தினம் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவர் வீரமரணம் அடைந்தனர். ஒருவர் ஹ‚பைஷ் பின் அல்அஷ்அர் (ரலி) அவர்களும் மற்றொருவர் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் ஆவார்கள்.322


அத்தியாயம் : 64
4281. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ عَلَى نَاقَتِهِ، وَهْوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ يُرَجِّعُ، وَقَالَ لَوْلاَ أَنْ يَجْتَمِعَ النَّاسُ حَوْلِي لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ.
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4281. முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி “அல்ஃபத்ஹ்' எனும் (48ஆவது) அத்தியாயத்தை “தர்ஜீஉ' எனும்323 ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டுவிடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் “தர்ஜீஉ' செய்து ஓதிக்காட்டியதைப்போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன்.


அத்தியாயம் : 64
4282. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعْدَانُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ قَالَ زَمَنَ الْفَتْحِ يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ غَدًا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مِنْ مَنْزِلٍ ".
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4282. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது, “அல்லாஹ் வின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா?” என்று கேட்டார்கள்.324


அத்தியாயம் : 64
4283. ثُمَّ قَالَ " لاَ يَرِثُ الْمُؤْمِنُ الْكَافِرَ، وَلاَ يَرِثُ الْكَافِرُ الْمُؤْمِنَ ". قِيلَ لِلزُّهْرِيِّ وَمَنْ وَرِثَ أَبَا طَالِبٍ قَالَ وَرِثَهُ عَقِيلٌ وَطَالِبٌ. قَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ أَيْنَ تَنْزِلُ غَدًا. فِي حَجَّتِهِ، وَلَمْ يَقُلْ يُونُسُ حَجَّتِهِ وَلاَ زَمَنَ الْفَتْحِ.
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4283. பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்; அவ்வாறே இறைமறுப்பாளரும் இறைநம்பிக்கையாளருக்கு வாரிசாகமாட்டார்” என்று சொன்னார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், “அபூதாலிபுக்கு யார் வாரிசானார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவருக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள்” என்று பதிலளித்தார்கள்.325

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மஅமர் (ரஹ்) அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜின்போது நாளை நாம் எங்கு தங்குவோம்?” என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள், ஹஜ்ஜின்போது என்றோ, மக்கா வெற்றியின்போது என்றோ (எதையும்) குறிப்பிடவில்லை.


அத்தியாயம் : 64
4284. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْزِلُنَا ـ إِنْ شَاءَ اللَّهُ، إِذَا فَتَحَ اللَّهُ ـ الْخَيْفُ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ "".
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மக்காமீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் “முஹஸ்ஸப்' எனும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில்தான் (குறைஷியர்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப்போவதாகச் சூளுரைத்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4285. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَادَ حُنَيْنًا "" مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ "".
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4285. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி முடிந்து) ஹுனைன் (போருக்குச்) செல்லத் திட்டமிட்டபோது, “அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப்போகும் இடம் “பனூ கினானா' குலத்தாரின் (முஹஸ்ஸப் எனும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில்தான் (மக்கா குறைஷியர்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப்போவதாகச் சபதம் செய்தார்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4286. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ "" اقْتُلْهُ "" قَالَ مَالِكٌ وَلَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيمَا نُرَى وَاللَّهُ أَعْلَمُ يَوْمَئِذٍ مُحْرِمًا.
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4286. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றான்” எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.326

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், “நாம் அறிந்தவரை நபி (ஸல்) அவர்கள் அன்று இஹ்ராம் கட்டி இருக்கவில்லை. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 64
4287. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَحَوْلَ الْبَيْتِ سِتُّونَ وَثَلاَثُمِائَةِ نُصُبٍ، فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ فِي يَدِهِ وَيَقُولُ "" جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ، جَاءَ الْحَقُّ، وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ "".
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4287. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார் கள். அப்போது அவர்கள், “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. சத்தியம் வந்துவிட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிறக்காது” என்று கூறிக்கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.327


அத்தியாயம் : 64
4288. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ مَكَّةَ أَبَى أَنْ يَدْخُلَ الْبَيْتَ وَفِيهِ الآلِهَةُ، فَأَمَرَ بِهَا فَأُخْرِجَتْ، فَأُخْرِجَ صُورَةُ إِبْرَاهِيمَ، وَإِسْمَاعِيلَ فِي أَيْدِيهِمَا مِنَ الأَزْلاَمِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَاتَلَهُمُ اللَّهُ لَقَدْ عَلِمُوا مَا اسْتَقْسَمَا بِهَا قَطُّ "". ثُمَّ دَخَلَ الْبَيْتَ، فَكَبَّرَ فِي نَوَاحِي الْبَيْتِ، وَخَرَجَ وَلَمْ يُصَلِّ فِيهِ. تَابَعَهُ مَعْمَرٌ عَنْ أَيُّوبَ. وَقَالَ وُهَيْبٌ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டுவைத்தார் கள்?
4288. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களைத் தன் கருணையைவிட்டு அப்புறப்படுத்து வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்த தில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தேவைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) “தக்பீர்'கள் கூறினார்கள்; ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள். 328

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மூன்றாவது தொடர் (நபித்தோழர் விடுபட்ட) “முன்கத்திஉ' ஆகும்.

அத்தியாயம் : 64