2565. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ حَدَّثَنِي أَبِي أَيْمَنُ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقُلْتُ كُنْتُ غُلاَمًا لِعُتْبَةَ بْنِ أَبِي لَهَبٍ، وَمَاتَ وَوَرِثَنِي بَنُوهُ، وَإِنَّهُمْ بَاعُونِي مِنَ ابْنِ أَبِي عَمْرٍو، فَأَعْتَقَنِي ابْنُ أَبِي عَمْرٍو، وَاشْتَرَطَ بَنُو عُتْبَةَ الْوَلاَءَ. فَقَالَتْ دَخَلَتْ بَرِيرَةُ وَهْىَ مُكَاتَبَةٌ فَقَالَتِ اشْتَرِينِي وَأَعْتِقِينِي. قَالَتْ نَعَمْ. قَالَتْ لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي. فَقَالَتْ لاَ حَاجَةَ لِي بِذَلِكَ. فَسَمِعَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْ بَلَغَهُ، فَذَكَرَ لِعَائِشَةَ، فَذَكَرَتْ عَائِشَةُ مَا قَالَتْ لَهَا، فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، وَدَعِيهِمْ يَشْتَرِطُونَ مَا شَاءُوا "". فَاشْتَرَتْهَا عَائِشَةُ فَأَعْتَقَتْهَا وَاشْتَرَطَ أَهْلُهَا الْوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ "".
பாடம்: 5 விடுதலை ஆவணம் பெற்ற அடிமை, ‘‘என்னை விலைக்கு வாங்கி விடுதலை செய்வீராக!” என்று (ஒருவரிடம்) சொல்ல, அவரும் அதற்காக விலைக்கு வாங்கினால்...
2565. அய்மன் பின் உம்மி அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்துவிட்டார். பிறகு அவருடைய மக்கள் எனக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். அவர்கள் என்னை அபூஅம்ருடைய மகனுக்கு விற்றார்கள். ஆனால், உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள்” என்று கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட பரீரா என்னிடம் வந்திருந்தார். ‘‘என்னை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நான், ‘‘சரி” என்று சொன்னேன். அதற்கு அவர், ‘‘என் உரிமையாளர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்கமாட்டார்கள்” என்று கூறினார்.

அதற்கு நான், ‘‘அப்படியென்றால் எனக்கு அது தேவையற்றது” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைச் செவியுற்றார்கள்; அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய உரிமையாளர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக்கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை)” என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிட்டேன்.

(அப்போதும்) அவருடைய உரிமையாளர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் (அடிமையின் உரிமையாளர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2566. حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، {عَنْ أَبِيهِ،} عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا، وَلَوْ فِرْسِنَ شَاةٍ "".
பாடம் : 1
2566. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக் காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 50
2567. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي، إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ. فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ، إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا.
பாடம் : 1
2567. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் உறுதியாகப் பிறை பார்ப்போம்; மீண்டும் (அடுத்த) பிறை பார்ப்போம்; பிறகும் (அடுத்த) பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்திருப்போம்.2 அப்படி யிருந்தும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப் பட்டிராது” என்று கூறினார்கள்.

நான், ‘‘என் சிற்றன்னையே! நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இரு கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும்தான் (எங்கள் உணவு). தவிரவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹா) இருந்தன. அவர்கள் (அவற்றி லிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்குவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 50
2568. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ "".
பாடம் : 2 சிறிய அன்பளிப்பு
2568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஆட்டில் (எனக்குப் பிடித்த) கணைக்கால் பகுதி, அல்லது (விலையற்ற) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதி(யைச் சமைத்து விருந்து)க்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் (அதை) நான் ஏற்றுக் கொள்வேன்; ஆட்டின் கணைக்கால் பகுதி, அல்லது கணுக்காலுக்குக் கீழே உள்ள பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் பெற்றுக் கொள்வேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 50
2569. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْسَلَ إِلَى امْرَأَةٍ مِنَ الْمُهَاجِرِينَ، وَكَانَ لَهَا غُلاَمٌ نَجَّارٌ قَالَ لَهَا "" مُرِي عَبْدَكِ فَلْيَعْمَلْ لَنَا أَعْوَادَ الْمِنْبَرِ "". فَأَمَرَتْ عَبْدَهَا، فَذَهَبَ فَقَطَعَ مِنَ الطَّرْفَاءِ، فَصَنَعَ لَهُ مِنْبَرًا، فَلَمَّا قَضَاهُ أَرْسَلَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَدْ قَضَاهُ، قَالَ صلى الله عليه وسلم "" أَرْسِلِي بِهِ إِلَىَّ "". فَجَاءُوا بِهِ فَاحْتَمَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَضَعَهُ حَيْثُ تَرَوْنَ.
பாடம் : 3 நண்பர்களிடம் ஒன்றை அன்பளிப்பு கேட்பது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.3
2569. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர் (மக்கா) பெண்மணி ஒருவரி டம் தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவர் இருந்தார். அப்பெண்மணியிடம் நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி, ‘‘சொற்பொழிவு மேடைக்கு வேண்டிய மரச் சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு” என்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே, அப் பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, சவுக்கு மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்தார்.

அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு, அவர் அதைச் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைத் தமக்குக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்.


அத்தியாயம் : 50
2570. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ يَوْمًا جَالِسًا مَعَ رِجَالٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَنْزِلٍ فِي طَرِيقِ مَكَّةَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَازِلٌ أَمَامَنَا وَالْقَوْمُ مُحْرِمُونَ، وَأَنَا غَيْرُ مُحْرِمٍ، فَأَبْصَرُوا حِمَارًا وَحْشِيًّا، وَأَنَا مَشْغُولٌ أَخْصِفُ نَعْلِي، فَلَمْ يُؤْذِنُونِي بِهِ، وَأَحَبُّوا لَوْ أَنِّي أَبْصَرْتُهُ، وَالْتَفَتُّ فَأَبْصَرْتُهُ، فَقُمْتُ إِلَى الْفَرَسِ فَأَسْرَجْتُهُ ثُمَّ رَكِبْتُ وَنَسِيتُ السَّوْطَ وَالرُّمْحَ فَقُلْتُ لَهُمْ نَاوِلُونِي السَّوْطَ وَالرُّمْحَ. فَقَالُوا لاَ وَاللَّهِ، لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ. فَغَضِبْتُ فَنَزَلْتُ فَأَخَذْتُهُمَا، ثُمَّ رَكِبْتُ، فَشَدَدْتُ عَلَى الْحِمَارِ فَعَقَرْتُهُ، ثُمَّ جِئْتُ بِهِ وَقَدْ مَاتَ، فَوَقَعُوا فِيهِ يَأْكُلُونَهُ، ثُمَّ إِنَّهُمْ شَكُّوا فِي أَكْلِهِمْ إِيَّاهُ، وَهُمْ حُرُمٌ، فَرُحْنَا وَخَبَأْتُ الْعَضُدَ مَعِي، فَأَدْرَكْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ "" مَعَكُمْ مِنْهُ شَىْءٌ "". فَقُلْتُ نَعَمْ. فَنَاوَلْتُهُ الْعَضُدَ فَأَكَلَهَا، حَتَّى نَفَّدَهَا وَهْوَ مُحْرِمٌ. فَحَدَّثَنِي بِهِ زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
பாடம் : 3 நண்பர்களிடம் ஒன்றை அன்பளிப்பு கேட்பது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.3
2570. அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஹுதைபியா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் (உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டியிருந்தார் கள். நான் (மட்டும்) யிஇஹ்ராம்’ கட்டாமலி ருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் காலணியைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை.

எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக்கொள்ள) நான் மறந்துவிட்டேன். ஆகவே, அவர்களிடம், ‘‘எனக்குச் சாட்டை யையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங் கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்), ‘‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உமக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவமாட்டோம்” என்று கூறிவிட்டனர்.

எனக்குக் கோபம் வந்தது. உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தி னேன். பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன்மீது பாய்ந்து உண்ணலானார்கள்.

பிறகு தாங்கள் இஹ்ராம் கட்டியுள்ள நிலையில் அதை உண்டது தொடர்பாகச் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) சென்றோம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து(எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்ததும், அவர்களிடம் அது பற்றிக் கேட்டோம்.

அவர்கள், ‘‘அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொல்லி, அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங்காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டு முடித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 50
2571. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي أَبُو طَوَالَةَ ـ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دَارِنَا هَذِهِ، فَاسْتَسْقَى، فَحَلَبْنَا لَهُ شَاةً لَنَا، ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِنَا هَذِهِ، فَأَعْطَيْتُهُ وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ، وَعُمَرُ تُجَاهَهُ وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ قَالَ عُمَرُ هَذَا أَبُو بَكْرٍ. فَأَعْطَى الأَعْرَابِيَّ، ثُمَّ قَالَ "" الأَيْمَنُونَ، الأَيْمَنُونَ، أَلاَ فَيَمِّنُوا "". قَالَ أَنَسٌ فَهْىَ سُنَّةٌ فَهْىَ سُنَّةٌ. ثَلاَثَ مَرَّاتٍ.
பாடம் : 4 நீர் (அல்லது பால்) வழங்கும்படி கோருவது சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்குத் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டார்கள்.
2571. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களின் இந்த வீட்டிற்கு வந்தார்கள். (எங்களிடம்) அருந்துவதற்கு ஏதேனும் கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களின் ஓர் ஆட்டிலிருந்து அவர்களுக்காகப் பால் கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந் தனர்.

நபி (ஸல்) அவர்கள் (பாலைக் குடித்து) முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள், ‘‘இதோ, அபூபக்ர்” என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தாம் அருந்தியதன் மீதியைக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘‘வலப் பக்கத்தி லிருப்பவர்களே முன்னுரிமையுடைவர்கள். ஆகவே, வலப் பக்கத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள்” என்று கூறி னார்கள்.

இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், ‘அது நபிவழியாகும், அது நபிவழியாகும்’ என்று மும்முறை கூறினார்கள் என இதை அவர்களிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அத்தியாயம் : 50
2572. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِوَرِكِهَا ـ أَوْ فَخِذَيْهَا قَالَ فَخِذَيْهَا لاَ شَكَّ فِيهِ ـ فَقَبِلَهُ. قُلْتُ وَأَكَلَ مِنْهُ قَالَ وَأَكَلَ مِنْهُ. ثُمَّ قَالَ بَعْدُ قَبِلَهُ.
பாடம் : 5 வேட்டைப் பிராணி அன்பளிப்புச் செய்யப்பட்டால் ஏற்றுக் கொள்ளல் நபி (ஸல்) அவர்கள், அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து வேட்டைப் பிராணியின் புஜத்தை (அன்பளிப்பாக) ஏற்றுக்கொண்டார்கள்.
2572. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார் கள். நான் அதைப் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை லிஅல்லது தொடைகளைலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

‘‘அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா?” என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்க, ‘‘(ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள்” என்று ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, அதன் பிறகு, ‘‘அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று கூறினார்.

அத்தியாயம் : 50
2573. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ ـ رضى الله عنهم ـ أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حِمَارًا وَحْشِيًّا وَهْوَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَرَدَّ عَلَيْهِ، فَلَمَّا رَأَى مَا فِي وَجْهِهِ قَالَ "" أَمَا إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ "".
பாடம் : 6 (குறிப்பிட்ட) அன்பளிப்பை ஏற்றல்
2573. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையைப் பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் ‘அப்வா’ என்னும் இடத்தில் லிஅல்லது யிவத்தான்’5 எனும் இடத்தில்லி இருந்தார் கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னி டமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

என் முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை கண்டபோது, ‘‘நாம் இஹ்ராம் கட்டியிருப்ப தால்தான் உம்மிடம் அதைத் திருப்பித் தந்தோம்” என்று கூறினார்கள்.6

அத்தியாயம் : 50
2574. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2574. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, அவர்களுக்கு தம் அன்பளிப்புகளை வழங்க மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள். இதன்மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பைப் பெறுவதையே அவர்கள் விரும்பினார்கள்.


அத்தியாயம் : 50
2575. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ إِيَاسٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَهْدَتْ أُمُّ حُفَيْدٍ خَالَةُ ابْنِ عَبَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقِطًا وَسَمْنًا وَأَضُبًّا، فَأَكَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الأَقِطِ وَالسَّمْنِ، وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا. قَالَ ابْنُ عَبَّاسٍ فَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2575. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டி யையும் வெண்ணெயையும் உடும்புகளை யும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலி ருந்தும் வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், பிடிக்காத தால் உடும்புகளை அவர்கள் உண்ணாமல் விட்டுவிட்டார்கள்.

(எனினும்) அது (உடும்பு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது தடை செய்யப்பட்டதாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டி ருக்காது.


அத்தியாயம் : 50
2576. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنٌ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ""إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ أَهَدِيَّةٌ أَمْ صَدَقَةٌ فَإِنْ قِيلَ صَدَقَةٌ. قَالَ لأَصْحَابِهِ كُلُوا. وَلَمْ يَأْكُلْ، وَإِنْ قِيلَ هَدِيَّةٌ. ضَرَبَ بِيَدِهِ صلى الله عليه وسلم فَأَكَلَ مَعَهُمْ "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2576. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப் படும்போது, ‘‘இது அன்பளிப்பா? தர்மமா?” என்று அவர்கள் கேட்பார்கள். ‘‘தர்மம்தான்” என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், ‘‘நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறிவிடுவார்கள்; தாம் உண்ணமாட்டார்கள்.7 ‘அன்பளிப்பு’ என்று கூறப்பட்டால், தமது கையைத் தட்டிக்கொண்டு (உற்சாகமாகத்) தோழர் களுடன் சேர்ந்து உண்பார்கள்.


அத்தியாயம் : 50
2577. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ قَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2577. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டுவரப்பட்டது. ‘‘இது பரீரா (ரலி) அவர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.8


அத்தியாயம் : 50
2578. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُهُ مِنْهُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، وَأَنَّهُمُ اشْتَرَطُوا وَلاَءَهَا، فَذُكِرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَأُهْدِيَ لَهَا لَحْمٌ، فَقِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ "". وَخُيِّرَتْ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ زَوْجُهَا حُرٌّ أَوْ عَبْدٌ قَالَ شُعْبَةُ سَأَلْتُ عَبْدَ الرَّحْمَنِ عَنْ زَوْجِهَا. قَالَ لاَ أَدْرِي أَحُرٌّ أَمْ عَبْدٌ
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2578. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவ(ருடைய உரிமையாள)ர்கள் அவரது வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிட் டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்த வருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி நன்கொடையாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘இது பரீரா அவர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்டது” என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இது அவருக்குத் தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரைப் பிரிந்துவிடுவது, அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது ஆகிய இரண்டில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கப் பட்டார்கள்.

அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள், ‘‘(அப்போது) பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திர மானவராகவோ அடிமையாகவோ இருந்தார்” என்று குறிப்பிட்டார்கள்.

‘‘நான் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். ‘அவர் சுதந்திரமானவரா, அல்லது அடிமையா என்பது எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறினார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 50
2579. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَ "" عِنْدَكُمْ شَىْءٌ "". قَالَتْ لاَ، إِلاَّ شَىْءٌ بَعَثَتْ بِهِ أُمُّ عَطِيَّةَ مِنَ الشَّاةِ الَّتِي بُعِثَ إِلَيْهَا مِنَ الصَّدَقَةِ. قَالَ "" إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا "".
பாடம் : 7 (பொதுவான) அன்பளிப்பை ஏற்றல்
2579. உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, ‘‘உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் உம்மு அ(த்)திய்யாவுக்குத் தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பிவைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அது தனது இடத்தை அடைந்துவிட்டது” என்று கூறினார்கள்.9

அத்தியாயம் : 50
2580. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمُ يَوْمِي. وَقَالَتْ أُمُّ سَلَمَةَ إِنَّ صَوَاحِبِي اجْتَمَعْنَ. فَذَكَرَتْ لَهُ، فَأَعْرَضَ عَنْهَا.
பாடம் : 8 நண்பருக்கு ஒருவர் அன்பளிப்பு வழங்க, நண்பரோ தம் துணைவியரில் மற்றவரை விட்டுவிட்டு குறிப்பிட்ட ஒருவரிடம் இருக்கும்போது அன்பளிப்பைப் பெற விரும்புவது
2580. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்துவந்தார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: என் தோழியர் (நபி (ஸல்) அவர்களின் மற்ற துணைவியர் எனது வீட்டில்) ஒன்றுகூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக் கையைச்) சொன்னேன்; அவர்கள் அதை (கண்டுகொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.10


அத்தியாயம் : 50
2581. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ نِسَاءَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُنَّ حِزْبَيْنِ فَحِزْبٌ فِيهِ عَائِشَةُ وَحَفْصَةُ وَصَفِيَّةُ وَسَوْدَةُ، وَالْحِزْبُ الآخَرُ أُمُّ سَلَمَةَ وَسَائِرُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ الْمُسْلِمُونَ قَدْ عَلِمُوا حُبَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَائِشَةَ، فَإِذَا كَانَتْ عِنْدَ أَحَدِهِمْ هَدِيَّةٌ يُرِيدُ أَنْ يُهْدِيَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخَّرَهَا، حَتَّى إِذَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ عَائِشَةَ بَعَثَ صَاحِبُ الْهَدِيَّةِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِ عَائِشَةَ، فَكَلَّمَ حِزْبُ أُمِّ سَلَمَةَ، فَقُلْنَ لَهَا كَلِّمِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُكَلِّمُ النَّاسَ، فَيَقُولُ مَنْ أَرَادَ أَنْ يُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَدِيَّةً فَلْيُهْدِهِ إِلَيْهِ حَيْثُ كَانَ مِنْ بُيُوتِ نِسَائِهِ، فَكَلَّمَتْهُ أُمُّ سَلَمَةَ بِمَا قُلْنَ، فَلَمْ يَقُلْ لَهَا شَيْئًا، فَسَأَلْنَهَا. فَقَالَتْ مَا قَالَ لِي شَيْئًا. فَقُلْنَ لَهَا فَكَلِّمِيهِ. قَالَتْ فَكَلَّمَتْهُ حِينَ دَارَ إِلَيْهَا أَيْضًا، فَلَمْ يَقُلْ لَهَا شَيْئًا، فَسَأَلْنَهَا. فَقَالَتْ مَا قَالَ لِي شَيْئًا. فَقُلْنَ لَهَا كَلِّمِيهِ حَتَّى يُكَلِّمَكِ. فَدَارَ إِلَيْهَا فَكَلَّمَتْهُ. فَقَالَ لَهَا "" لاَ تُؤْذِينِي فِي عَائِشَةَ، فَإِنَّ الْوَحْىَ لَمْ يَأْتِنِي، وَأَنَا فِي ثَوْبِ امْرَأَةٍ إِلاَّ عَائِشَةَ "". قَالَتْ فَقَالَتْ أَتُوبُ إِلَى اللَّهِ مِنْ أَذَاكَ يَا رَسُولَ اللَّهِ. ثُمَّ إِنَّهُنَّ دَعَوْنَ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرْسَلْنَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَقُولُ إِنَّ نِسَاءَكَ يَنْشُدْنَكَ اللَّهَ الْعَدْلَ فِي بِنْتِ أَبِي بَكْرٍ. فَكَلَّمَتْهُ. فَقَالَ "" يَا بُنَيَّةُ، أَلاَ تُحِبِّينَ مَا أُحِبُّ "". قَالَتْ بَلَى. فَرَجَعَتْ إِلَيْهِنَّ، فَأَخْبَرَتْهُنَّ. فَقُلْنَ ارْجِعِي إِلَيْهِ. فَأَبَتْ أَنْ تَرْجِعَ، فَأَرْسَلْنَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ، فَأَتَتْهُ فَأَغْلَظَتْ، وَقَالَتْ إِنَّ نِسَاءَكَ يَنْشُدْنَكَ اللَّهَ الْعَدْلَ فِي بِنْتِ ابْنِ أَبِي قُحَافَةَ. فَرَفَعَتْ صَوْتَهَا، حَتَّى تَنَاوَلَتْ عَائِشَةَ. وَهْىَ قَاعِدَةٌ، فَسَبَّتْهَا حَتَّى إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَيَنْظُرُ إِلَى عَائِشَةَ هَلْ تَكَلَّمُ قَالَ فَتَكَلَّمَتْ عَائِشَةُ تَرُدُّ عَلَى زَيْنَبَ، حَتَّى أَسْكَتَتْهَا. قَالَتْ فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى عَائِشَةَ، وَقَالَ "" إِنَّهَا بِنْتُ أَبِي بَكْرٍ "". قَالَ الْبُخَارِيُّ الْكَلاَمُ الأَخِيرُ قِصَّةُ فَاطِمَةَ يُذْكَرُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ رَجُلٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ. وَقَالَ أَبُو مَرْوَانَ عَنْ هِشَامٍ عَنْ عُرْوَةَ كَانَ النَّاسُ يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ. وَعَنْ هِشَامٍ عَنْ رَجُلٍ مِنْ قُرَيْشٍ، وَرَجُلٍ مِنَ الْمَوَالِي، عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ قَالَتْ عَائِشَةُ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَتْ فَاطِمَةُ.
பாடம் : 8 நண்பருக்கு ஒருவர் அன்பளிப்பு வழங்க, நண்பரோ தம் துணைவியரில் மற்றவரை விட்டுவிட்டு குறிப்பிட்ட ஒருவரிடம் இருக்கும்போது அன்பளிப்பைப் பெற விரும்புவது
2581. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, சவ்தா (ரலி) ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலமா (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்ற துணைவியரும் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்துவந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அவர்களில் ஒருவரிடம் அன்பளிப்புப் பொருள் இருந்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதைத் தள்ளிப்போட்டுவிடுவார். என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது, என் வீட்டிற்கு அன்பளிப்பைக் கொடுத்தனுப்புவார்.

ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா (ரலி) குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசி, உம்மு சலமாவிடம் பின் வருமாறு கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு யார் எந்த அன்பளிப்பை வழங்க விரும்பினாலும், அவர்கள் தம் துணைவியர் இல்லங்களில் எங்கு இருந்தாலும் அங்கே அன்பளிப்பை வழங்க வேண்டும் என மக்களிடம் பேசி அறிவிக்க வேண்டும் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசுங் கள்.

அவ்வாறே, உம்மு சலமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார் கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர் உம்மு சலமா அவர்களிடம், (யிநமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?› என்று) கேட்டனர். உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘எனக்கு நபி (ஸல்) அவர்கள் எந்தப் பதிலும் கூறவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவருடைய குழுவினர், ‘‘மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசுங்கள்” என்றனர்.

உம்மு சலமா (ரலி) அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று) உம்மு சலமாவிடம் கேட்டனர். ‘‘நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பதில் எதுவும் கூறவில்லை” என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவருடைய குழுவினர், ‘‘நபியவர்கள் உமக்குப் பதில் தரும்வரை நீங்கள் அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக்கொண்டேயிருங்கள்” என்று கூறினார்கள்.

மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை அளிக்காதே! ஏனெனில், ஆயிஷாவைத் தவிர வேறு யாருடைய (போர்வைத்) துணிக்குள் நான் இருக்கும்போதும் எனக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருவதில்லை” என்று கூறினார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு அந்தத் துணைவியர் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியார் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (தம் தந்தையிடம்), ‘‘நீங்கள் அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி (ஆயிஷா) இடம் நடந்துகொள்வதைப் போன்றே (தங்களிட மும்) நீதியோடு நடந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் துணைவியர் அல்லாஹ்வின் பெயரால் வேண்டுகின்றனர்” என்று சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று நபியவர்களின் துணைவியரிடம் தகவல் தெரிவித்தார்கள். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்)” என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

ஆகவே, நபியவர்களின் துணைவியர், (தம் சார்பாக) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, ‘‘உங்கள் துணைவியர், அபூகுஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷாவின்) விஷயத்தில் (நடந்துகொள்வதைப் போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்துகொள்ளும்படி அல்லாஹ் வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றனர்” என்று கூறினார்.

(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்:)

அப்போது அவரது குரல் உயர்ந்தது. நான் (அங்குதான்) அமர்ந்திருந்தேன். என்னையும் (ஒரு பிடி) பிடித்தார்; என்னை ஏசினார். நான் ஏதும் (பதிலுக்குப்) பேசு கிறேனா என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் ஸைனபுக்குப் பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘இவள் அபூபக்ருடைய மகள்” என்று கூறினார்கள்.

புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்: ஃபாத்திமா (ரலி) அவர்கள் தொடர்பான தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

மற்றோர் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அத்தியாயம் : 50
2582. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ كَانَ أَنَسٌ ـ رضى الله عنه ـ لاَ يَرُدُّ الطِّيبَ. قَالَ وَزَعَمَ أَنَسٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
பாடம் : 9 மறுக்கக் கூடாத அன்பளிப்பு
2582. அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன்; அவர்கள் எனக்கு வாசனைப் பொருளைக் கொடுத்து, ‘‘அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக வழங்கப்படும்) வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்றும் கூறினார்.

மேலும், ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் வாசனைப் பொருளை மறுப்பதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம் : 50
2583. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ذَكَرَ عُرْوَةُ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما وَمَرْوَانَ أَخْبَرَاهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ جَاءَهُ وَفْدُ هَوَازِنَ قَامَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّ إِخْوَانَكُمْ جَاءُونَا تَائِبِينَ، وَإِنِّي رَأَيْتُ أَنْ أَرُدَّ إِلَيْهِمْ سَبْيَهُمْ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُطَيِّبَ ذَلِكَ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَكُونَ عَلَى حَظِّهِ حَتَّى نُعْطِيَهُ إِيَّاهُ مِنْ أَوَّلِ مَا يُفِيءُ اللَّهُ عَلَيْنَا "". فَقَالَ النَّاسُ طَيَّبْنَا لَكَ.
பாடம் : 10 தற்போது கைவசம் இல்லாதஒன்றை அன்பளிப்(பதாக வாக்க ளிப்)பது செல்லும் என்ற கருத்து
2583. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகி யோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக் கேற்றவாறு போற்றிப் புகழ்ந்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

இறைவாழ்த்துக்குப்பின்! (மக்களே!)உங்கள் சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப் பித் தந்துவிடலாமெனக் கருதுகிறேன்.

ஆகவே, உங்களில் யார் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்! யார், (இனி) அல்லாஹ் நமக்கு அளிக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கும்வரை தமது பங்கைத் தாமே வைத்துக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நாங்கள் உங்களுக்காக (போர்க் ûதிகளைத் திருப்பித் தந்துவிட) மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறோம்” என்று கூறினார்கள்.11

அத்தியாயம் : 50