1773. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ "".
பாடம் : 1 உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்2 (வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமை யாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில், “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகின்றான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகார மாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத் தைத் தவிர வேறு கூலியில்லை

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 26
1774. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ عِكْرِمَةَ بْنَ خَالِدٍ، سَأَلَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ الْعُمْرَةِ، قَبْلَ الْحَجِّ فَقَالَ لاَ بَأْسَ. قَالَ عِكْرِمَةُ قَالَ ابْنُ عُمَرَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ مِثْلَهُ. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عِكْرِمَةُ بْنُ خَالِدٍ سَأَلْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنه ـ مِثْلَهُ.
பாடம் : 2 ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்தல்
1774. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்குமுன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார் கள். அதற்கு ‘தவறில்லை’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.3

மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்குமுன் உம்ரா செய்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 26
1775. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ الْمَسْجِدَ،، فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ جَالِسٌ إِلَى حُجْرَةِ عَائِشَةَ، وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي الْمَسْجِدِ صَلاَةَ الضُّحَى. قَالَ فَسَأَلْنَاهُ عَنْ صَلاَتِهِمْ. فَقَالَ بِدْعَةٌ. ثُمَّ قَالَ لَهُ كَمِ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعً إِحْدَاهُنَّ فِي رَجَبٍ، فَكَرِهْنَا أَنْ نَرُدَّ عَلَيْهِ. قَالَ وَسَمِعْنَا اسْتِنَانَ، عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فِي الْحُجْرَةِ، فَقَالَ عُرْوَةُ يَا أُمَّاهُ، يَا أُمَّ الْمُؤْمِنِينَ. أَلاَ تَسْمَعِينَ مَا يَقُولُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ. قَالَتْ مَا يَقُولُ قَالَ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَمَرَ أَرْبَعَ عُمَرَاتٍ إِحْدَاهُنَّ فِي رَجَبٍ. قَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا اعْتَمَرَ عُمْرَةً إِلاَّ وَهُوَ شَاهِدُهُ، وَمَا اعْتَمَرَ فِي رَجَبٍ قَطُّ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1775. 1776 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக் கருகே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் (ளுஹா) தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் “இது, மார்க்க அடிப்படையற்ற புதிய நடைமுறை (பித்அத்)” என்றார்கள்.5

பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்?” என உர்வா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்” என்றார்கள்.

நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை.

இதற்கிடையே, அறையில் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், “அன்னையே! இறை நம்பிக்கையாளர்களின் தாயே! அபூஅப்திர் ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா?’ எனக் கேட்டார். “அவர் என்ன கூறுகிறார்?” என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு ‘உம்ரா’க்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று, ரஜப் மாதத்தில் நடந்தது என்று கூறுகிறார்” என்றார்.

ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (இப்போது மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை” எனக் கூறினார்கள்.6


அத்தியாயம் : 26
1777. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَجَبٍ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1777. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் (நபி (ஸல்) அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை” என்றார்கள்.


அத்தியாயம் : 26
1778. حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ عُمْرَةُ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَدَّهُ الْمُشْرِكُونَ، وَعُمْرَةٌ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، حَيْثُ صَالَحَهُمْ، وَعُمْرَةُ الْجِعْرَانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ أُرَاهُ حُنَيْنٍ. قُلْتُ كَمْ حَجَّ قَالَ وَاحِدَةً.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1778. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை ‘உம்ரா’க்கள் செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நான்கு (உம்ராக் கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதை பியா எனுமிடத்தில் இருந்து துல்கஅதா மாதத்தில் செய்(ய முனைந்)த உம்ரா. ஆனால், இணைவைப்பாளர்கள் நபியவர் களைத் தடுத்துவிட்டனர். இணைவைப் பாளர்களுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா; அடுத்து ‘ஜிஇர்ரானா’ என்ற இடத்திலிருந்து ஒரு போரில் -அது ஹுனைன் போர் என்றே கருதுகிறேன்- கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டபோது செய்த உம்ரா (ஹஜ்ஜுடன் சேர்த்து செய்த உம்ரா).

பிறகு “எத்தனை ஹஜ் செய்திருக் கிறார்கள்?” என்று நான் கேட்டதற்கு, “ஒரு ஹஜ்தான்” என்றார்கள்.


அத்தியாயம் : 26
1779. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَيْثُ رَدُّوهُ، وَمِنَ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ، وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1779. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (முதலில்), இணைவைப்பாளர்கள் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காகச் சென்றிருந்தார்கள்; அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து ஹஜ்ஜுடன் ஒரு உம்ரா செய்தார்கள்.


அத்தியாயம் : 26
1780. حَدَّثَنَا هُدْبَةُ، حَدَّثَنَا هَمَّامٌ، وَقَالَ، اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلاَّ الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَمِنَ الْعَامِ الْمُقْبِلِ، وَمِنَ الْجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1780. ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியாவிலிருந்து (அவர்கள் தடுக்கப்பட்டபோது) செய்யச் சென்ற உம்ரா; அதற்கடுத்த ஆண்டின் உம்ரா; ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப் பங்கிட்ட இடமான ‘ஜிஇர்ரானா’ விலிருந்து செய்த உம்ரா; ஹஜ்ஜுடன் செய்த உம்ரா ஆகியவை ஆகும்.7


அத்தியாயம் : 26
1781. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَأَلْتُ مَسْرُوقًا وَعَطَاءً وَمُجَاهِدًا. فَقَالُوا اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ قَبْلَ أَنْ يَحُجَّ. وَقَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذِي الْقَعْدَةِ، قَبْلَ أَنْ يَحُجَّ مَرَّتَيْنِ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த ‘உம்ரா’க்கள் எத்தனை?4
1781. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஸ்ரூக், அதாஉ, முஜாஹித் (ரஹ்) ஆகியோரிடம் (நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்” என்று கூறினர்.

மேலும், “நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்” என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.8

அத்தியாயம் : 26
1782. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُخْبِرُنَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاِمْرَأَةٍ مِنَ الأَنْصَارِ سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ، فَنَسِيتُ اسْمَهَا "" مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا "". قَالَتْ كَانَ لَنَا نَاضِحٌ فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ ـ لِزَوْجِهَا وَابْنِهَا ـ وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ قَالَ "" فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ "". أَوْ نَحْوًا مِمَّا قَالَ.
பாடம் : 4 ரமளானில் உம்ரா செய்தல்
1782. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரிடம், -“இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்” என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்- “நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?” எனக் கேட்டார்கள்.

அதற்கு அப்பெண்மணி, “எங்களிடம் இருந்த நீர் இறைப்பதற்கான (இரு ஒட்டகங்களில்) ஓர் ஒட்டகத்தில் இன்னா ரின் தந்தையும் அவருடைய மகனும் (என் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றோர் ஒட்டகத்தை அவர் விட்டுச்சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கி றோம்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்” என்றோ, அல்லது அதைப் போன்றோ கூறினார்கள்.

அத்தியாயம் : 26
1783. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحَجَّةِ فَقَالَ لَنَا "" مَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يُهِلَّ بِالْحَجِّ فَلْيُهِلَّ وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ، فَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ "". قَالَتْ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَظَلَّنِي يَوْمُ عَرَفَةَ، وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ارْفُضِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ "". فَلَمَّا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي.
பாடம் : 5 ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்கும் இரவிலும் மற்ற நேரங்களிலும் உம்ரா செய்தல்9
1783. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். நான் குர்பானிப் பிராணியைக் கொண்டுவர வில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” எனக் கூறினார்கள்.

எனவே, எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர்; நான் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருத்தி யாவேன். இந்நிலையில், அரஃபா நாள் நெருங்கியதும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உனது உம்ராவை விட்டுவிட்டு உனது தலைமுடியை அவிழ்த்து வாரிக் கொள்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள்.

அல்முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்தபோது (துல்ஹஜ் பத்தாம் நாள் நான் தூய்மையடைந்தபின்) என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் எனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக (அங்கு) இஹ்ராம் கட்டினேன்.

அத்தியாயம் : 26
1784. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ عَمْرَو بْنَ أَوْسٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يُرْدِفَ عَائِشَةَ، وَيُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ. قَالَ سُفْيَانُ مَرَّةً سَمِعْتُ عَمْرًا، كَمْ سَمِعْتُهُ مِنْ عَمْرٍو.
பாடம் : 6 உம்ராவுக்காக ‘தன்ஈமி’ல் இஹ்ராம் கட்டுதல்10
1784. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று ‘தன்யீம்’ எனுமிடத்தில் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒரு முறை, “அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் இதைக் கேட்டுள் ளேன்; எத்தனையோ முறை கேட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1785. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَطَاءٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ وَأَصْحَابُهُ بِالْحَجِّ وَلَيْسَ مَعَ أَحَدٍ مِنْهُمْ هَدْىٌ، غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَكَانَ عَلِيٌّ قَدِمَ مِنَ الْيَمَنِ، وَمَعَهُ الْهَدْىُ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَذِنَ لأَصْحَابِهِ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً، يَطُوفُوا بِالْبَيْتِ، ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا، إِلاَّ مَنْ مَعَهُ الْهَدْىُ، فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لأَحْلَلْتُ "". وَأَنَّ عَائِشَةَ حَاضَتْ فَنَسَكَتِ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لَمْ تَطُفْ بِالْبَيْتِ قَالَ فَلَمَّا طَهُرَتْ وَطَافَتْ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتَنْطَلِقُونَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، وَأَنْطَلِقُ بِالْحَجِّ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ أَنْ يَخْرُجَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ بَعْدَ الْحَجِّ فِي ذِي الْحَجَّةِ، وَأَنَّ سُرَاقَةَ بْنَ مَالِكِ بْنِ جُعْشُمٍ لَقِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْعَقَبَةِ، وَهُوَ يَرْمِيهَا، فَقَالَ أَلَكُمْ هَذِهِ خَاصَّةً، يَا رَسُولَ اللَّهِ قَالَ "" لاَ، بَلْ لِلأَبَدِ "".
பாடம் : 6 உம்ராவுக்காக ‘தன்ஈமி’ல் இஹ்ராம் கட்டுதல்10
1785. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர் களும் ஹஜ்ஜுக்ôக இஹ்ராம் கட்டினார் கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்கவில்லை. யமனி லிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் வந்தார்கள். “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டியுள் ளார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என அவர்கள் கூறி னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தங்களின் இஹ்ராமை உம்ராவுக்காக மாற்றிக்கொள்ளுமாறும் தவாஃப் செய்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள்.

அப்போது மக்கள் (சிலர்), “(இஹ்ராமிலிருந்து விடுபட்டபின்) தாம்பத்திய உறவை முடித்த கையோடு நாங்கள் மினாவுக்குச் செல்வதா?” என்று பேசிக்கொண்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் “(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் குர்பானி பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் குர்பானி பிராணியை மட்டும் கொண்டுவந்திருக்க வில்லையாயின், இஹ்ராமிலிருந்து விடு பட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா கிரியைகளையும் நிறைவேற்றினார்கள்; மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல, நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ரா வையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர் களே?” என (ஏக்கத்துடன்) கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா வின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை, ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் கட்டுவதற்காக) ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அதன்படி, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்தபின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்துகொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது), உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை. இது எப்போதைக்கும் உரியதே” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 26
1786. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، أَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحَجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ، وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِحَجَّةِ فَلْيُهِلَّ، وَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ "". فَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنْهُمْ مِنْ أَهَلَّ بِحَجَّةٍ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَحِضْتُ قَبْلَ أَنْ أَدْخُلَ مَكَّةَ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ، وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ "". فَفَعَلْتُ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَرْدَفَهَا، فَأَهَلَّتْ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِهَا، فَقَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا، وَلَمْ يَكُنْ فِي شَىْءٍ مِنْ ذَلِكَ هَدْىٌ، وَلاَ صَدَقَةٌ، وَلاَ صَوْمٌ.
பாடம் : 7 ஹஜ்ஜுக்குப்பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல்11
1786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர் களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளட் டும்! நான் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்றார்கள்.

சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி னர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிய வர்களில் ஒருத்தியாக இருந்தேன். ஆனால், மக்காவில் நுழைவதற்குமுன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடா யுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது பற்றி) நான் முறையிட்டபோது, “உனது உம்ராவை விட்டுவிட்டு; தலையை அவிழ்த்து, வாரிக் கொள்! மேலும், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள்.

நான் அவ்வாறே செய்தேன். அல்முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை ‘தன்யீம்’வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர் ரஹ்மான் தமது ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றிக்கொண்டார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக, மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் கட்டினேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான். இதற்காக, ஆயிஷா (ரலி) அவர்கள் குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை.

அத்தியாயம் : 26
1787. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالاَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ يَا رَسُولَ اللَّهِ يَصْدُرُ النَّاسُ بِنُسُكَيْنِ وَأَصْدُرُ بِنُسُكٍ فَقِيلَ لَهَا "" انْتَظِرِي، فَإِذَا طَهُرْتِ فَاخْرُجِي إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي ثُمَّ ائْتِينَا بِمَكَانِ كَذَا، وَلَكِنَّهَا عَلَى قَدْرِ نَفَقَتِكِ، أَوْ نَصَبِكِ "".
பாடம் : 8 உம்ரா செய்யும்போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற் பலன் கிடைக்கும்.
1787. காசிம் பின் முஹம்மத் (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! “மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்பு கின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?” என்று கேட்டார்கள்.

அவர்களிடம், “நீ சற்றுக் காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிக்கொள்! பிறகு (நீயும் உன் சகோதரரும்) எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தியுங்கள்! ஆனால், உம்ராவுக்கான நற்பலன் உனது சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறுதான் கிடைக்கும்!” என (நபி (ஸல்) அவர்களால்) சொல்லப்பட்டது.

அத்தியாயம் : 26
1788. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مُهِلِّينَ بِالْحَجِّ فِي أَشْهُرِ الْحَجِّ، وَحُرُمِ الْحَجِّ، فَنَزَلْنَا سَرِفَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ "" مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ، فَأَحَبَّ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً، فَلْيَفْعَلْ وَمَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلاَ "". وَكَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرِجَالٍ مِنْ أَصْحَابِهِ ذَوِي قُوَّةٍ الْهَدْىُ، فَلَمْ تَكُنْ لَهُمْ عُمْرَةً، فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ "" مَا يُبْكِيكِ "". قُلْتُ سَمِعْتُكَ تَقُولُ لأَصْحَابِكَ مَا قُلْتَ فَمُنِعْتُ الْعُمْرَةَ. قَالَ "" وَمَا شَأْنُكِ "". قُلْتُ لاَ أُصَلِّي. قَالَ "" فَلاَ يَضُرَّكِ أَنْتِ مِنْ بَنَاتِ آدَمَ، كُتِبَ عَلَيْكِ مَا كُتِبَ عَلَيْهِنَّ، فَكُونِي فِي حَجَّتِكِ عَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِهَا "". قَالَتْ فَكُنْتُ حَتَّى نَفَرْنَا مِنْ مِنًى، فَنَزَلْنَا الْمُحَصَّبَ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ، فَقَالَ "" اخْرُجْ بِأُخْتِكَ الْحَرَمَ، فَلْتُهِلَّ بِعُمْرَةٍ، ثُمَّ افْرُغَا مِنْ طَوَافِكُمَا، أَنْتَظِرْكُمَا هَا هُنَا "". فَأَتَيْنَا فِي جَوْفِ اللَّيْلِ. فَقَالَ "" فَرَغْتُمَا "". قُلْتُ نَعَمْ. فَنَادَى بِالرَّحِيلِ فِي أَصْحَابِهِ، فَارْتَحَلَ النَّاسُ، وَمَنْ طَافَ بِالْبَيْتِ، قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ خَرَجَ مُوَجِّهًا إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 9 (ஹஜ்ஜுக்குப் பிறகு) உம்ரா செய்பவர், உம்ராவுக்கான தவாஃபை செய்துவிட்டு (மக்காவிலிருந்து) வெளியேறினால், அதுவே இறுதி தவாஃபுக்கு (தவாஃபுல் வதா) ஈடாகி விடுமா?
1788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹஜ் மாதங்களில், ஹஜ் கிரியைகளில் (பங்கேற்க) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (மதீனாவிலிருந்து) புறப் பட்டோம். ‘சரிஃப்’ எனும் இடத்திற்கு வந்து தங்கினோம்.12 அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “யார் குர்பானி பிராணி கொண்டுவராமல் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்! யாரிடம் குர்பானி பிராணி உள்ளதோ அவர் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களு டைய தோழர்களில் வசதி படைத்தவர் களிடமும் குர்பானி பிராணிகள் இருந்தன. எனவே, அவர்களுக்கு (தனியான) உம்ரா இல்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் “ஏன் அழுகி றாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை நான் செவியுற் றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுவிட்டேன்” என்றேன்.

அதற்கு அவர்கள், “என்ன காரணம்?” எனக் கேட்டதும், “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். அவர்கள், “அதனால் உனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அவர்களுக்கு விதிக்கப்பட்டது தான் உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீ ஹஜ் செய்துகொண்டிரு. அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக்கூடும்!” என்றார்கள்.

நாங்கள் மினாவிலிருந்து புறப்படும் வரை நான் அப்படியே (ஹஜ்ஜில்) இருந்தேன். பிறகு (நான் தூய்மையானபின்) அல்முஹஸ்ஸப் வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் இந்த இடத்தில் காத்திருப்பேன்” என்றார்கள்.

நாங்கள் (தவாஃபை முடித்து) நடுநிசியில் வந்தபோது, “(தவாஃபை) முடித்துவிட்டீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார் கள். மக்களும், சுப்ஹுக்கு முன்பே கஅபா ஆலயத்தை தவாஃப் (வதா) செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.13

அத்தியாயம் : 26
1789. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ يَعْنِي، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ جُبَّةٌ وَعَلَيْهِ أَثَرُ الْخَلُوقِ أَوْ قَالَ صُفْرَةٍ فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي فَأَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسُتِرَ بِثَوْبٍ وَوَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ. فَقَالَ عُمَرُ تَعَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَنْزَلَ اللَّهُ الْوَحْىَ قُلْتُ نَعَمْ. فَرَفَعَ طَرَفَ الثَّوْبِ، فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ وَأَحْسِبُهُ قَالَ كَغَطِيطِ الْبَكْرِ. فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ "" أَيْنَ السَّائِلُ عَنِ الْعُمْرَةِ اخْلَعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ عَنْكَ، وَأَنْقِ الصُّفْرَةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكِ "".
பாடம் : 10 ஹஜ்ஜில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையே உம்ராவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.14
1789. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது, நறுமணப் பொருளின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ உள்ள மேலங்கி அணிந் திருந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர், “நான் என் உம்ராவில் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடு கிறீர்கள்?” எனக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “இங்கு வாரும்! நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா?” எனக் கேட்டார் கள். நான் ‘ஆம்’ என்றேன்.

உடனே (நபி (ஸல்) அவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை உமர் (ரலி) அவர்கள் விலக்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது குறட்டை சப்தம் -ஒட்டகத்தின் குறட்டை சப்தம் என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்- அவர் களிடமிருந்து வந்தது. பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களைவிட்டு விலகியபோது அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?” எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), “உமது மேலங்கியைக் கழற்றி நறுமணப் பொருளின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடுவீராக! மேலும், நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1790. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} فَلاَ أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. فَقَالَتْ عَائِشَةُ كَلاَّ، لَوْ كَانَتْ كَمَا تَقُولُ كَانَتْ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا}. زَادَ سُفْيَانُ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ وَلاَ عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 10 ஹஜ்ஜில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையே உம்ராவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.14
1790. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சிறு வயதுடையவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் துணைவியார் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று” (2:158) என உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்; எனவே, “அவ் விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்ற மாகாது என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவ்வாறில்லை; நீ கருதுவதைப் போன்றி ருந்தால் ‘அவ்விரண்டையும் தவாஃப் செய்யாமலிருப்பதில் குற்றமில்லை’ என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்சாரிகள் தொடர்பாக அருளப்பட்டதாகும். (அறியா மைக் காலத்தில்) அவர்கள் ‘குதைத்’ என்ற இடத்தின் அருகில் ‘மனாத்’ என்ற சிலைக் காக இஹ்ராம் கட்டிவந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா-மர்வாவுக் கிடையே சுற்றிவருவதைக் குற்றமாக அவர்கள் கருதினர்.

எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டனர்; அப்போதுதான் இந்த வசனத்தை (2:158) உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில், “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வராதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை” என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 26
1791. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ جَرِيرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاعْتَمَرْنَا مَعَهُ فَلَمَّا دَخَلَ مَكَّةَ طَافَ وَطُفْنَا مَعَهُ، وَأَتَى الصَّفَا وَالْمَرْوَةَ وَأَتَيْنَاهَا مَعَهُ، وَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ أَنْ يَرْمِيَهُ أَحَدٌ. فَقَالَ لَهُ صَاحِبٌ لِي أَكَانَ دَخَلَ الْكَعْبَةَ قَالَ لاَ. قَالَ فَحَدِّثْنَا مَا، قَالَ لِخَدِيجَةَ. قَالَ " بَشِّرُوا خَدِيجَةَ بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ ".
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1791. 1792 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறிய தவாது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கு வந்தார்கள்; நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம்.

மேலும், மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் நபியவர்களை மறைத்துக்கொண்டிருந்தோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் நண்பர் ஒருவர் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (அப்போது) கஅபாவின் உள்ளே சென்றார்களா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை!” என்றார்கள். பிறகு, அவர், “நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்!” எனக் கேட்டார்.

அவர்கள், “கதீஜாவுக்கான நற்செய்தி பெறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று உள்ளது. அதில் கூச்சல் குழப்பமோ களைப்போ இருக்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.


அத்தியாயம் : 26