1395. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا ـ رضى الله عنه ـ إِلَى الْيَمَنِ فَقَالَ "" ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ "".
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் (எனும் கட்டாயக் கொடை) வழங்குங்கள். (2:43, 2:83, 2:110). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவைப் பேணல், சுயமரியாதை ஆகியவற்றை (கடைப் பிடிக்குமாறு) கட்டளையிட்டார்கள்” என்று அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், (கிழக்கு ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
1395. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளு நராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழி அளிக்குமாறு அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக!

இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 24
1396. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ ابْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، رضى الله عنه أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ. قَالَ مَا لَهُ مَا لَهُ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَرَبٌ مَالَهُ، تَعْبُدُ اللَّهَ، وَلاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ "". وَقَالَ بَهْزٌ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، وَأَبُوهُ، عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنَ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، بِهَذَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ أَخْشَى أَنْ يَكُونَ، مُحَمَّدٌ غَيْرَ مَحْفُوظٍ إِنَّمَا هُوَ عَمْرٌو.
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் (எனும் கட்டாயக் கொடை) வழங்குங்கள். (2:43, 2:83, 2:110). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவைப் பேணல், சுயமரியாதை ஆகியவற்றை (கடைப் பிடிக்குமாறு) கட்டளையிட்டார்கள்” என்று அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், (கிழக்கு ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
1396. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங் கள்” எனக் கேட்டார். அப்போது (நபித்தோழர்கள் வியப்புற்று), “இவருக் கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?” என்றார்(கள்). நபி (ஸல்) அவர்கள் “இவருக்கு ஏதோ தேவை யிருக்கிறது (போலும்)!‘“ (என்று கூறிவிட்டு அவரிடம்), “நீர் அல்லாஹ்வை வழிபட வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவைப் பேணி நடக்க வேண்டும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. முதலாவது தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரின் பெயர் முஹம்மத் பின் உஸ்மான் என்பது சரியல்ல; அவரது பெயர் அம்ர் பின் உஸ்மான்தான்.


அத்தியாயம் : 24
1397. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ أَعْرَابِيًّا، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ. قَالَ "" تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ "". قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا. فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا "". حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي حَيَّانَ، قَالَ أَخْبَرَنِي أَبُو زُرْعَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் (எனும் கட்டாயக் கொடை) வழங்குங்கள். (2:43, 2:83, 2:110). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவைப் பேணல், சுயமரியாதை ஆகியவற்றை (கடைப் பிடிக்குமாறு) கட்டளையிட்டார்கள்” என்று அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், (கிழக்கு ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
1397. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செய்தால் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹ்வையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும்” என்றார்கள்.

அதற்கு அவர், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக வேறெதையும் செய்யமாட்டேன்” என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ) இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்!” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 24
1398. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا الْحَىَّ مِنْ رَبِيعَةَ قَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، وَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِشَىْءٍ نَأْخُذُهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ وَشَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ـ وَعَقَدَ بِيَدِهِ هَكَذَا ـ وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ "". وَقَالَ سُلَيْمَانُ وَأَبُو النُّعْمَانِ عَنْ حَمَّادٍ "" الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ "".
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் (எனும் கட்டாயக் கொடை) வழங்குங்கள். (2:43, 2:83, 2:110). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவைப் பேணல், சுயமரியாதை ஆகியவற்றை (கடைப் பிடிக்குமாறு) கட்டளையிட்டார்கள்” என்று அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், (கிழக்கு ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
1398. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அப்துல் கைஸ்’ தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! நாங்கள் ரபீஆ கோத்திரத் தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே இஸ்லாத்தை ஏற்காத ‘முளர்’ கூட்டத்தார் வசிக்கிறார்கள். எனவே, போர் தடை செய்யப்பட்ட மாதங் களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுக்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி, எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர் களுக்கும் அறிவிப்போம்” என்றனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைத் தடை செய்கிறேன். அவை: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதியாக நம்புதல், -(இதைச் சொல்லும்போது ‘ஒன்று’ என) இவ்வாறு தமது கைவிரலை மடித்தார்கள்- தொழுகையைக் கடைப்பிடித்தல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல் என்று சொன்னார்கள்.

மேலும், “மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு (தாற்காலிகமாக) நான் தடை செய்கிறேன்” என்றும் கூறி னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 24
1399. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ ". فَقَالَ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا. قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ.
பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத் (எனும் கட்டாயக் கொடை) வழங்குங்கள். (2:43, 2:83, 2:110). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவைப் பேணல், சுயமரியாதை ஆகியவற்றை (கடைப் பிடிக்குமாறு) கட்டளையிட்டார்கள்” என்று அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், (கிழக்கு ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
1399. 1400 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும், அரபியரில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாயினர். (அவர்கள்மீது போர் தொடுக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்.)

உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ் விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகை யையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப் போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், பொருளாதாரக் கடமையாகும்; அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஆட்டுக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள்.

இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ரின் இதயத்தை (உறுதியான முடிவெடுக்கும் வகையில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானதாகும் என நான் விளங்கிக்கொண்டேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 24
1401. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، قَالَ قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 2 ஸகாத் கொடுப்பதாக உறுதி மொழி (பைஅத்) அளித்தல் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் பாவமீட்சி பெற்று, தொழு கையைக் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ வழங்கிவந்தால், அவர்களும் மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள்தான். (9:11)
1401. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், தொழு கையைக் கடைப்பிடிப்பதாகவும் ஸகாத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக் கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) எடுத்துக் கொண்டேன்.

அத்தியாயம் : 24
1402. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ هُرْمُزَ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تَأْتِي الإِبِلُ عَلَى صَاحِبِهَا، عَلَى خَيْرِ مَا كَانَتْ، إِذَا هُوَ لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا، تَطَؤُهُ بِأَخْفَافِهَا، وَتَأْتِي الْغَنَمُ عَلَى صَاحِبِهَا عَلَى خَيْرِ مَا كَانَتْ، إِذَا لَمْ يُعْطِ فِيهَا حَقَّهَا، تَطَؤُهُ بِأَظْلاَفِهَا، وَتَنْطَحُهُ بِقُرُونِهَا "". وَقَالَ "" وَمِنْ حَقِّهَا أَنْ تُحْلَبَ عَلَى الْمَاءِ "". قَالَ "" وَلاَ يَأْتِي أَحَدُكُمْ يَوْمَ الْقِيَامَةِ بِشَاةٍ يَحْمِلُهَا عَلَى رَقَبَتِهِ لَهَا يُعَارٌ، فَيَقُولُ يَا مُحَمَّدُ. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ. وَلاَ يَأْتِي بِبَعِيرٍ، يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ لَهُ رُغَاءٌ، فَيَقُولُ يَا مُحَمَّدُ. فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ بَلَّغْتُ "".
பாடம் : 3 ஸகாத்தை மறுப்பதன் குற்றம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! அந்நாளில் அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். “இவைதான் உங்களுக்காக நீங்கள் திரட்டிவைத்திருந்தவை. எனவே, நீங்கள் திரட்டி வைத்திருந்தவற்றை (நன்கு) சுவையுங்கள்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்.) (9:34, 35)
1402. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற் கான (ஸகாத்) கடமையை நிறைவேற்ற வில்லையாயின். அது மறுமை நாளில் முன்பிருந்ததைவிட நல்ல நிலையில் வந்து தன் கால்களால் அவனை மிதிக்கும். உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான (ஸகாத்) கடமையை நிறைவேற்றவில்லை யாயின், அது மறுமை நாளில் முன்பிருந் ததைவிட நல்ல நிலையில் வந்து தன் குளம்புகளால் அவனை மிதித்துத் தன் கொம்புகளால் அவனை முட்டும்.

உங்களில் யாரும் மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்துகொண்டு வந்து (அபயம் தேடிய வண்ணம்), ‘முஹம்மதே’ எனக் கூற, நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகார மில்லை. (இறைச் சட்டம் என்ன என்பதை முன்பே உனக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன்” என்று கூறும்படியான நிலை ஏற்பட வேண்டாம்.

யாரும் (மறுமை நாளில்) கத்திக்கொண் டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்துகொண்டு வந்து ‘முஹம்மதே’ எனக் கூற, அதற்கு நான் “அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை. (முன்பே உனக்கு) நான் எடுத்துரைத்துவிட்டேன்” என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட வேண்டாம்.

“நீர் நிலைகளில் பால் கற(ந்து அங்கு வரும் ஏழைகளுக்குக் கொடு)க்கப்படுவதும் அவற்றுக்கான (தார்மீகக்) கடமைகளில் ஒன்றாகும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1403. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ آتَاهُ اللَّهُ مَالاً، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ، يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ـ يَعْنِي شِدْقَيْهِ ـ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ، أَنَا كَنْزُكَ "" ثُمَّ تَلاَ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ} الآيَةَ.
பாடம் : 3 ஸகாத்தை மறுப்பதன் குற்றம் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! அந்நாளில் அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். “இவைதான் உங்களுக்காக நீங்கள் திரட்டிவைத்திருந்தவை. எனவே, நீங்கள் திரட்டி வைத்திருந்தவற்றை (நன்கு) சுவையுங்கள்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்.) (9:34, 35)
1403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின், (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடை களைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்” என்று சொல்லும்.

இவ்வாறு கூறிவிட்டு, பின்வரும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்:

தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்(து சேமித்)தார்களோ அது மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் சுற்றப்படும். (3:180)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1404. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ أَعْرَابِيٌّ أَخْبِرْنِي قَوْلَ اللَّهِ، {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ.
பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது. ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1404. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (வெளியில்) புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழி யில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு, அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ‘ஸகாத்’ கடமை யாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங் களுக்கான தூய்மையாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றார்கள்.


அத்தியாயம் : 24
1405. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، قَالَ الأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ "".
பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது. ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

(வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைந்ததில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ‘வஸ்க்’ குக் குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை.2

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1406. حَدَّثَنَا عَلِيٌّ، سَمِعَ هُشَيْمًا، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ مَرَرْتُ بِالرَّبَذَةِ فَإِذَا أَنَا بِأَبِي، ذَرٍّ ـ رضى الله عنه ـ فَقُلْتُ لَهُ مَا أَنْزَلَكَ مَنْزِلَكَ هَذَا قَالَ كُنْتُ بِالشَّأْمِ، فَاخْتَلَفْتُ أَنَا وَمُعَاوِيَةُ فِي الَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ. قَالَ مُعَاوِيَةُ نَزَلَتْ فِي أَهْلِ الْكِتَابِ. فَقُلْتُ نَزَلَتْ فِينَا وَفِيهِمْ. فَكَانَ بَيْنِي وَبَيْنَهُ فِي ذَاكَ، وَكَتَبَ إِلَى عُثْمَانَ ـ رضى الله عنه ـ يَشْكُونِي، فَكَتَبَ إِلَىَّ عُثْمَانُ أَنِ اقْدَمِ الْمَدِينَةَ. فَقَدِمْتُهَا فَكَثُرَ عَلَىَّ النَّاسُ حَتَّى كَأَنَّهُمْ لَمْ يَرَوْنِي قَبْلَ ذَلِكَ، فَذَكَرْتُ ذَاكَ لِعُثْمَانَ فَقَالَ لِي إِنْ شِئْتَ تَنَحَّيْتَ فَكُنْتَ قَرِيبًا. فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا الْمَنْزِلَ، وَلَوْ أَمَّرُوا عَلَىَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ.
பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது. ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1406. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ரபதா’ எனுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூதர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தபோது, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யா மல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனம் (அருளப்பெற்ற காரணம்) தொடர்பாக, நானும் முஆவியா (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டோம்.

முஆவியா (ரலி) அவர்கள், “இது வேதக்காரர்கள் தொடர்பாக அருளப் பெற்றது” என்றார்கள். நானோ “நம்மையும் அவர்களையும் குறித்தே அருளப்பெற்றது” என்றேன். எனவே, எனக்கும் முஆவியா வுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும், உஸ்மான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்குமுன் என்னைப் பார்க்காதவர்கள் போல என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவுக்கு அழைக்கப் பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.

நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் தனியாக (மதீனாவுக்கு) அருகில் எங்கேனும் இருந்துகொள்ளும்!” என்று கூறினார்கள். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு அபிசீனியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவிதாழ்த்திக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்கள்.3


அத்தியாயம் : 24
1407. حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ جَلَسْتُ. وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ بْنُ الشِّخِّيرِ، أَنَّ الأَحْنَفَ بْنَ قَيْسٍ، حَدَّثَهُمْ قَالَ جَلَسْتُ إِلَى مَلإٍ مِنْ قُرَيْشٍ، فَجَاءَ رَجُلٌ خَشِنُ الشَّعَرِ وَالثِّيَابِ وَالْهَيْئَةِ حَتَّى قَامَ عَلَيْهِمْ فَسَلَّمَ ثُمَّ قَالَ بَشِّرِ الْكَانِزِينَ بِرَضْفٍ يُحْمَى عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ، ثُمَّ يُوضَعُ عَلَى حَلَمَةِ ثَدْىِ أَحَدِهِمْ حَتَّى يَخْرُجَ مِنْ نُغْضِ كَتِفِهِ، وَيُوضَعُ عَلَى نُغْضِ كَتِفِهِ حَتَّى يَخْرُجَ مِنْ حَلَمَةِ ثَدْيِهِ يَتَزَلْزَلُ، ثُمَّ وَلَّى فَجَلَسَ إِلَى سَارِيَةٍ، وَتَبِعْتُهُ وَجَلَسْتُ إِلَيْهِ، وَأَنَا لاَ أَدْرِي مَنْ هُوَ فَقُلْتُ لَهُ لاَ أُرَى الْقَوْمَ إِلاَّ قَدْ كَرِهُوا الَّذِي قُلْتَ. قَالَ إِنَّهُمْ لاَ يَعْقِلُونَ شَيْئًا. قَالَ لِي خَلِيلِي ـ قَالَ قُلْتُ مَنْ خَلِيلُكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ " يَا أَبَا ذَرٍّ أَتُبْصِرُ أُحُدًا ". قَالَ فَنَظَرْتُ إِلَى الشَّمْسِ مَا بَقِيَ مِنَ النَّهَارِ وَأَنَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرْسِلُنِي فِي حَاجَةٍ لَهُ، قُلْتُ نَعَمْ. قَالَ " مَا أُحِبُّ أَنَّ لِي مِثْلَ أُحُدٍ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ إِلاَّ ثَلاَثَةَ دَنَانِيرَ ". وَإِنَّ هَؤُلاَءِ لاَ يَعْقِلُونَ، إِنَّمَا يَجْمَعُونَ الدُّنْيَا. لاَ وَاللَّهِ لاَ أَسْأَلُهُمْ دُنْيَا، وَلاَ أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ حَتَّى أَلْقَى اللَّهَ.
பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது. ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1407. 1408 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் குரைஷிப் பிரமுகர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொர சொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒரு மனிதர் அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) கூறிவிட்டு, “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைச் சேமிப்பவர் களுக்காக, நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அது தோளின் மேற்பகுதி எலும்பில் வைக்கப் படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியேறி உருண்டோடும்” என்று கூறினார்.

பிறகு திரும்பிச் சென்ற அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் “தாங்கள் கூறியதை மக்கள் வெறுப்பதாகவே நான் கண்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “அவர்கள் விவரமற்றவர்கள்” எனக் கூறினார்.

“என் தோழர் என்னிடம் சொன்னார்...” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும்போதே நான் (குறுக்கிட்டு) “உங்கள் தோழர் யார்?” எனக் கேட்டேன். “நபி (ஸல்) அவர்கள்தான்” எனக் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! உஹுத் மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்துகொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு, ‘ஆம்’ என்றேன்.

‘உஹுத் மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார் களைத் தவிர மற்ற அனைத்தையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்ப வில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இவர்களோ இதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங் களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் நான் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்கமாட்டேன்” என்று அந்தப் பெரியவர் (அபூதர் (ரலி) அவர்கள்) கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1409. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ حِكْمَةً فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "".
பாடம் : 5 பொருளை அதற்குரிய அறவழியில் செலவிடல்
1409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்.

இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1410. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ ـ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "". تَابَعَهُ سُلَيْمَانُ عَنِ ابْنِ دِينَارٍ. وَقَالَ وَرْقَاءُ عَنِ ابْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ وَزَيْدُ بْنُ أَسْلَمَ وَسُهَيْلٌ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 6 தர்மம் செய்வதில் முகஸ்துதி உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற் காகத் தனது செல்வத்தைச் செலவு செய்பவனைப் போன்று (தர்மம் செய்த தைச்) சொல்லிக் காட்டியும் (மனதைப்) புண்படுத்தியும் உங்களின் தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள். (2:264) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மேற்கண்ட வசனத்தின் தொடர்ச்சியில் மூலத்தில் ‘பாறை’ என்ப தைக் குறிக்க) ‘ஸல்த்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு, ‘ஒன்றும் இல்லாத வெறும் பாறை’ என்பது பொருளாகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘பெருமழை’ என்பதைக் குறிக்க) ‘வாபில்’ எனும் சொல் இடம்பெறுகிறது. இதற்கு ‘கடுமையான மழை’ என்பது பொருள். (அடுத்த வசனத்தில் ‘தூறல்’ என்பதைக் குறிக்க) ‘அத்தல்’ எனும் சொல் இடம்பெறுகிறது. இதற்கு ‘சிறு துளி’ என்பது பொருள். பாடம் : 7 மோசடிப் பொருளிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்பதில்லை. முறையான சம்பாத்தியத்தில் கிடைத்த பொருளிலிருந்தே தவிர (வேறு வழியில் செய்யப்படும் தான தர்மத்தை) அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. அல்லாஹ் கூறுகின்றான்: கனிவான சொல்லும் மன்னிப்பும் தர்மம் செய்துவிட்டுப் பின்னர் புண்படுத்துவதைவிடச் சிறந்ததாகும். (2:263) பாடம் : 8 தூய்மையான வருவாயிலிருந்து தர்மம் செய்தல் அல்லாஹ் கூறுகின்றான்: தர்மங்களை (அல்லாஹ்) வளர்க்கின் றான். (தனக்கு) மாறு செய்யும் எந்தப் பாவியையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகின்றவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் கவலைப்படவு மாட்டார்கள். (2:276, 277)
1410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வ தில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடை யச்செய்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1411. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" تَصَدَّقُوا فَإِنَّهُ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا يَقُولُ الرَّجُلُ لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا، فَأَمَّا الْيَوْمَ فَلاَ حَاجَةَ لِي بِهَا "".
பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1411. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இப்போதே) தர்மம் செய்துகொள்ளுங் கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுபவர் யாரையும் அவர் காண மாட்டார். அப்போது ஒருவன், “நேற்றே இதை நீர் கொண்டுவந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக் குத் தேவையில்லை” என்று கூறுவான்.

இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1412. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لاَ أَرَبَ لِي "".
பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவுக்கெனில், அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தான் வாங்கப்போகிறார் என்று கவலை கொள்வார். யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால், அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1413. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ الطَّائِيُّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلاَنِ أَحَدُهُمَا يَشْكُو الْعَيْلَةَ، وَالآخَرُ يَشْكُو قَطْعَ السَّبِيلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا قَطْعُ السَّبِيلِ فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكَ إِلاَّ قَلِيلٌ حَتَّى تَخْرُجَ الْعِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ، وَأَمَّا الْعَيْلَةُ فَإِنَّ السَّاعَةَ لاَ تَقُومُ حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ لاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا مِنْهُ، ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَىِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلاَ تُرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ لَيَقُولَنَّ لَهُ أَلَمْ أُوتِكَ مَالاً فَلَيَقُولَنَّ بَلَى. ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أُرْسِلْ إِلَيْكَ رَسُولاً فَلَيَقُولَنَّ بَلَى. فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ، فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "".
பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1413. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வழிப்பறியை நீர் குறைவாகவே காண்பீர். இறுதியில், காவலரின்றி வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை செல்லும் நிலை உருவாகும். வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். அந்நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

பிறகு உங்களில் ஒருவர் அல்லாஹ் வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக் காது; மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார்.

பிறகு தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தையே காண்பார். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகத்தையே காண்பார். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது, அதுவும் கிடைக்கவில்லை யெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 24
1414. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ ثُمَّ لاَ يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ، وَيُرَى الرَّجُلُ الْوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً، يَلُذْنَ بِهِ مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ "".
பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1414. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது) ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.4

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24