2665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அறிவிப்பவரான) அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு (என் தந்தை) அபூசயீத் (ரலி) அவர்கள் எவரது கையிலாவது (மதீனாவின்) பறவை இருக்கக் கண்டால், உடனே அவரது கரத்திலிருந்து அதை விடுவித்துப் பறக்க விட்டுவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15

2666. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் மதீனாவைச் சுட்டிக்காட்டி, "இது பாதுகாப்பான புனித நகரம்" என்று கூறினார்கள்.

2667. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவிற்கு (நாடு துறந்து) வந்த போது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது, "இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை "ஜுஹ்ஃபா" எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2668. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2669. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான யுஹன்னஸ் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்ட) குழப்பமான காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து சலாம் சொல்லிவிட்டு, "அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமைநாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.

2670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதன் (அதாவது மதீனாவின்) இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் எவர் மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ அவருக்காக மறுமைநாளில் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக நான் இருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 87 கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப் பெற்றுள்ளது.
2672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதி நாள் நெருங்கும்போது) மஸீஹுத் தஜ்ஜால் கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக்குறிவைத்து வந்து, "உஹுத்"மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர் வானவர்கள் அவனது முகத்தை ஷாம் திசை (வடக்கு) நோக்கித் திருப்பிவிடுவார்கள். அங்குதான் அவன் மடிவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
(இறுதி நாள் நெருங்கும்போது) மஸீஹுத் தஜ்ஜால் கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக்குறிவைத்து வந்து, "உஹுத்"மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர் வானவர்கள் அவனது முகத்தை ஷாம் திசை (வடக்கு) நோக்கித் திருப்பிவிடுவார்கள். அங்குதான் அவன் மடிவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 88 மதீனா தன்னிலுள்ள தீயவர்களை அகற்றிவிடும்.
2674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். அன்று ஒருவர் தம் தந்தையின் சகோதரர் மகனையும் தம் உறவினரையும் "செழிப்பான இடத்திற்கு வா! செழிப்பான இடத்திற்கு வா!" என அழைப்பார். ஆனால், அவர்கள் (உண்மையை) அறிந்திருப்போராயின் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் எவரேனும் மதீனாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்தவரை அங்கு அல்லாஹ் அமர்த்தாமல் இருப்பதில்லை. கவனியுங்கள்: மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்று அசுத்தங்களை அகற்றிவிடும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று, மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றாமல் இறுதி நாள் நிகழாது.

2675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய, "யஸ்ரிப்" என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உலை, துருவை நீக்கிவிடுவதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது."இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

2676. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக) விசுவாசப் பிரமாணம் செய்தார். (பின்னர்) அந்தக் கிராமவாசிக்கு மதீனாவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பின்னர் (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிடவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனா, (கொல்லனின்) உலை போன்றதே ஆகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மையாவார்கள்" என்று சொன்னார்கள்.

2677. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது (அதாவது மதீனா) தூயது (தைபா) ஆகும். நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போன்று மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றும்.
இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2678. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்தோன் அல்லாஹ்வே மதீனாவுக்கு "தாபா" (தூயது) எனப் பெயரிட்டான்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
உயர்ந்தோன் அல்லாஹ்வே மதீனாவுக்கு "தாபா" (தூயது) எனப் பெயரிட்டான்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 89 மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்து விடுவான்.
2679. அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஊர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2679. அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஊர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2680. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவ்வூர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("கேடு" என்பதைக் குறிக்க) "சூஉ" என்பதற்குப் பகரமாக "ஷர்ரு" (தீங்கு) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2681. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவனை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் மாலிக் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அசம்பாவிதம்" அல்லது "கேடு" என (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

2682. அபூஹுரைரா (ரலி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகளுக்கு (அவர்களது அளவையான) "முத்"துவில் வளம் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மேலும், "இவ்வூர்வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்" (என்று கூறினார்கள்).

பாடம் : 90 (செழிப்பான) நகரங்கள் வெற்றிகொள்ளப்படும் போதும் மதீனாவிலேயே தங்கியிருக்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டல்.
2683. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குத் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
பின்னர் யமன் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறிவிடுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்! பின்னர் "ஷாம்" (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்! பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!