88. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ بِهَا. فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلاَ أَخْبَرْتِنِي. فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَيْفَ وَقَدْ قِيلَ "". فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ.
பாடம் : 26 எதிர்பாராத ஒரு சட்டப் பிரச்சினை(யின் தீர்வு)க்காகப் பயணம் மேற்கொண்டு செல்வதும் அதைத் தம் குடும்பத்தாருக்குக் கற்றுக்கொடுப்பதும்
88. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண் டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து “உக்பாவே! உங்களுக்கும் நீங்கள் மணந்துகொண்டுள்ள பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர் கள் ஆவீர்கள்)” என்று கூறினார்.

நான், “நீங்கள் எனக்குப் பாலூட்டியது எனக்குத் தெரியாது; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவுமில்லை” என்று கூறினேன்.

ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவி லிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இவ்வாறு) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைவிட்டுப் பிரிந்து விட்டேன். அவளும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள்.

அத்தியாயம் : 3
89. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ عُمَرَ، قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ، لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهْىَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِخَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا. فَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ قَدْ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ. قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ طَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي. ثُمَّ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ وَأَنَا قَائِمٌ أَطَلَّقْتَ نِسَاءَكَ قَالَ "" لاَ "". فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ.
பாடம் : 27 முறைவைத்துக் கற்றல்
89. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்துவந்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம்.

அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (வஹீ) உள்ளிட்ட அன்றைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டுவந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன்.

அவ்வாறே, அவர் சென்று வரும் போதும் அதைப் போன்றே செய்வார். (ஒரு நாள்) தம்முடைய முறை வந்தபோது, என் அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி னார். “அவர் (உமர்) அங்கே இருக்கி றாரா?” என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி வெளியே வந்தேன். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) “ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டிருக்கிறது” என்றார்.

உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுதுகொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “எனக்குத் தெரியவில்லை” என்றார்.

பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “நீங்கள் உங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று நின்றுகொண்டே கேட்டேன். நபியவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உடனே நான் ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
90. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ، لاَ أَكَادُ أُدْرِكُ الصَّلاَةَ مِمَّا يُطَوِّلُ بِنَا فُلاَنٌ، فَمَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْ يَوْمِئِذٍ فَقَالَ "" أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ مُنَفِّرُونَ، فَمَنْ صَلَّى بِالنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمُ الْمَرِيضَ وَالضَّعِيفَ وَذَا الْحَاجَةِ "".
பாடம் : 28 அறிவுரை கூறும்போதும் கல்வி கற்பிக்கும்போதும் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் கோபப்படுதல்
90. அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக்கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையை அடைந்துகொள்ள முடிவதில்லை” என்று கூறினார்.

(இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) முன் எப்போதும் நான் கண்டிராத அளவுக்குக் கடும் கோபத்தை அன்றைய உரையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் கண்டேன்.

(அவ்வுரையில்) “மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாகவே உள்ளீர்கள். யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினா லும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க் கட்டும். ஏனெனில், (தொழவந்த) மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 3
91. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ الْمَدِينِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ فَقَالَ "" اعْرِفْ وِكَاءَهَا ـ أَوْ قَالَ وِعَاءَهَا ـ وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ "". قَالَ فَضَالَّةُ الإِبِلِ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ ـ فَقَالَ "" وَمَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ، وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "". قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "".
பாடம் : 28 அறிவுரை கூறும்போதும் கல்வி கற்பிக்கும்போதும் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் கோபப்படுதல்
91. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் முடிச்சை’ அல்லது ‘அதன் பையையும் அதன் உறையையும்’ (அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி (மக்களுக்கு) அறிவிப்புச் செய். அதற்குப் பிறகு அதை நீ பயன் படுத்திக்கொள். அதன் உரிமையாளர் வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு” என்றார்கள்.

“அப்படியானால் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)?” என்று அம்மனிதர் கேட்டார்.

இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக் கென்றால், ‘அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு, “அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர் பையும் அதன் கால் குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்குச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்துகொள்கிறது. எனவே, அதை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும்வரை (அதன் போக்கில்) விட்டுவிடு” என்று கூறினார்கள்.

“அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது உனக்கு உரியது; அல்லது (உரிமை யாளரோ மற்றவரோ அதைப் பிடித்தால் அது) உம்முடைய அந்தச் சகோதரருக் குரியது. (அவ்வாறு யாருமே அதைப் பிடித்துச் செல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 3
92. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ، ثُمَّ قَالَ لِلنَّاسِ "" سَلُونِي عَمَّا شِئْتُمْ "". قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ "" أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ "". فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ.
பாடம் : 28 அறிவுரை கூறும்போதும் கல்வி கற்பிக்கும்போதும் பிடிக்காத ஒன்றைக் காணும் நேரத்தில் கோபப்படுதல்
92. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. இவ்வாறு அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர்கள் கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் “நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உன் தந்தை” என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து “என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்க, “உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த ‘சாலிம்’ தான்” என்றார்கள்.

(இம்மாதிரியான கேள்விகளால்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய் யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகி றோம்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
93. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ، فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ فَقَالَ مَنْ أَبِي فَقَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا، فَسَكَتَ.
பாடம் : 29 தலைவர் அல்லது நபிமொழி அறிஞர் அருகில் மண்டியிட்டு அமர்தல்
93. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது, (மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்படும் விதத்தில் கேள்விக்குமேல் கேள்வி கேட்டனர். அப்போது) அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார். “ஹுதாஃபாதான் உன் தந்தை” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு “என்னிடம் கேளுங்கள்” என்று அடிக்கடி கூறினார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) முழங்கால்களில் மண்டியிட்டு அமர்ந்து, “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள்.

அத்தியாயம் : 3
94. حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا.
பாடம் : 30 தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்வது (ஒரு முறை பெரும் பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் “எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) “நான் (சொல்ல வேண்டியதை) சொல்லி விட் டேனா?” என்று மூன்று முறை கேட் டார்கள்.
94. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினால், மூன்று முறை கூறுவார்கள்; ஒரு விஷயத்தைச் சொன்னால், அதை மூன்று முறை (திரும்பச்) சொல்வார்கள்.


அத்தியாயம் : 3
95. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا.
பாடம் : 30 தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்வது (ஒரு முறை பெரும் பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் “எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) “நான் (சொல்ல வேண்டியதை) சொல்லி விட் டேனா?” என்று மூன்று முறை கேட் டார்கள்.
95. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத் தைச் சொன்னால், தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற் காக மும்முறை அதைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை முகமன் (சலாம்) சொல்வார்கள்.


அத்தியாயம் : 3
96. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ سَافَرْنَاهُ فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الصَّلاَةَ صَلاَةَ الْعَصْرِ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ "" وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ "". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
பாடம் : 30 தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்வது (ஒரு முறை பெரும் பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் “எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான்” எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறு கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) “நான் (சொல்ல வேண்டியதை) சொல்லி விட் டேனா?” என்று மூன்று முறை கேட் டார்கள்.
96. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள்.

அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து)கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “குதிகால்க(ளைச் சரியாகக் கழுவாதவர்க)ளுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.

அத்தியாயம் : 3
97. أَخْبَرَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا صَالِحُ بْنُ حَيَّانَ، قَالَ قَالَ عَامِرٌ الشَّعْبِيُّ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ، وَآمَنَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ {يَطَؤُهَا} فَأَدَّبَهَا، فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ "". ثُمَّ قَالَ عَامِرٌ أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَىْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 31 ஒருவர் தம் அடிமைப் பெண் ணுக்கும் குடும்பத்தாருக்கும் கல்வி கற்பித்தல்
97. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத் தில்) இரட்டை நன்மைகள் கிடைக்கும்.

1. வேதக்காரர்களில் ஒருவர், தம் (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதர்மீதும் (இறுதித் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார்.

2. ஓர் அடிமை, அல்லாஹ்வின் கடமைகளையும் தம் உரிமையாளரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து, அவளை அவரே மணந்தும்கொண்டார். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த ‘குராசான்’வாசி ஒருவரிடம்), “(சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நாம் உங்களுக்கு வழங்கியிருக் கிறோம். இதைவிடச் சிறிய பிரச்சினை களுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டது உண்டு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 3
98. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ. وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 32 தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும்
98. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றி விட்டு) பெண்கள் செவியுறும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்கள் இருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.

அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார் கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘நான் உறுதியளிக்கிறேன்’ என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா, அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘நான் உறுதியளிக்கி றேன்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்தியாயம் : 3
99. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ "".
பாடம் : 33 நபிமொழியை (ஹதீஸ்) அறிவ தில் ஆர்வம்காட்டல்
99. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. (அதாவது நான் கேட்டேன்.)

அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் (ஹதீஸ்)மீது உமக் கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என நான் எண்ணி யிருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார் எனில், உளப்பூர்வமாக தூய எண்ணத்துடன் யார் ‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தான்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
100. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا "". قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ.
பாடம் : 34 கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்? உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக் குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அவற்றை எழுதி(த் தொகுத்து) வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், (மார்க்கக்) கல்வி அழிந்துபோய்விடு மென்றும் (மார்க்க) அறிஞர்கள் (இவ்வு லகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுக்கு) ஏற்கக் கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்துகொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படும்போதுதான் அழிகிறது. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள்” என்பதுவரைதான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.
100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது, மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச்செய்வார்கள்.23

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
101. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،. قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ. فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ "" مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ "". فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ فَقَالَ "" وَاثْنَيْنِ "".
பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்க லாமா?
101. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு சமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், “(நாங்கள் தங்களை அணுகி விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்க ளிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக் காக (தனியாக) ஒரு நாளை நீங்களே ஒதுக்குங்கள்” எனக் கேட்டுக் கொண் டார்கள்.

அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக்) கட்டளைகளை வலியுறுத்தினார்கள்.

பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னவற்றில் இதுவும் அடங்கும்: “உங்களில் எந்தப் பெண் (தனது மரணத்திற்கு) முன்பாகத் தன் குழந்தைகளில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

உடனே ஒரு பெண்மணி, ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) இரண்டு, குழந்தைகளை இழந்து விட்டாலும்தான்’ என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 3
102. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ "" ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ "".
பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்க லாமா?
102. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்து விட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்)” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 3
103. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ إِلاَّ رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حُوسِبَ عُذِّبَ "". قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَ لَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} قَالَتْ فَقَالَ "" إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ، وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ "".
பாடம் : 36 ஒரு விஷயத்தைக் கேட்ட ஒருவர் அதை விளங்கிக்கொள் ளாதபோது, அதை (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும் பத் திரும்பக் கேட்பது
103. இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால், அதை அவர்கள் (நன்கு) புரிந்துகொள்ளும்வரைத் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “யார் (மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் (குர்ஆனில்) “வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச்சீட்டு வழங்கப் பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:7,8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன்) சமர்ப்பிக் கப்படுவதுதான். ஆனால், துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்துபோவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 3
104. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهْوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ، سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ، حِينَ تَكَلَّمَ بِهِ، حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ، وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، فَلاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرَةً، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ، وَلَمْ يَأْذَنْ لَكُمْ. وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ "". فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ، لاَ يُعِيذُ عَاصِيًا، وَلاَ فَارًّا بِدَمٍ، وَلاَ فَارًّا بِخَرْبَةٍ.
பாடம் : 37 இந்தக் கல்வியை இங்கே வந்தி ருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்! இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
104. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன.

அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரங்களை வெட்டுவதோ அனுமதிக்கப் படவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒரு பகல் பொழுது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை” என்று சொல்லி விடுங்கள்.

“எனக்குக்கூட (நேற்றைய) பகல் பொழுது மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதியளித்தான். நேற்று இருந்ததைப் போன்றே, இன்று அதன் புனிதம் திரும்ப வந்து விட்டது. (நாம் சொன்ன விஷயங் கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர் கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடிவந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது” என்று அம்ர் கூறினார் என்றார்கள்.


அத்தியாயம் : 3
105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، ذُكِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ ـ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الْغَائِبَ "". وَكَانَ مُحَمَّدٌ يَقُولُ صَدَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ ذَلِكَ "" أَلاَ هَلْ بَلَّغْتُ "" مَرَّتَيْنِ.
பாடம் : 37 இந்தக் கல்வியை இங்கே வந்தி ருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்! இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
105. அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) “...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனித மிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனித மிக்கவை ஆகும். அறிந்துகொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர் களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லி விடட்டும்!” என்று கூறினார்கள்.

மேலும், “(மக்களுக்குத் தெரிவிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்துவிட்டேனா?” என்று இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அபூபக்ரா (ரலி) அவர்களிடம் இந்த ஹதீஸை செவியுற்ற அவர்களின் புதல்வர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள், “(‘உங்கள் உடைமைகளும்’ என்பதற்கு அடுத்து) ‘உங்கள் மானங் களும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறி னார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே (வந்தவர்கள் வராதவர் களுக்குச் சொல்லும் பணி) நடந்தது” என்று (இந்த நபிமொழியை அறிவித்தபின்) கூறுவது வழக்கம்.

அத்தியாயம் : 3
106. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என்மீது பொய் உரைக்காதீர்கள். ஏனெனில், என்மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.24

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 3
107. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِلزُّبَيْرِ إِنِّي لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا يُحَدِّثُ فُلاَنٌ وَفُلاَنٌ. قَالَ أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ "" مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ "".
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள்மீது பொய் உரைப்போருக்குக் கிடைக்கும் பாவம்
107. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(தந்தையே!) உங்களைப் போன்று (நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னவர் இன்னவரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக ஹதீஸ்) அறிவிப்பதைப் போன்று, தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்?” என்று கேட்டேன்.

அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், “(மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும் பாலும்) நபி (ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், ‘என்மீது யார் பொய் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (அதனால்தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை)” என்றார்கள்.


அத்தியாயம் : 3