840.
பாடம் : 154
இமாமுக்கு பதில் சலாம் கூறா மல் தொழுகைக்காக மட்டும் சலாம் கொடுப்பது74
840. தொடர்ந்து மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பனூ சா-ம் குலத்தைச் சேர்ந்தவரும் அன்சாரியுமான இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சமுதாயத்தாரான பனூ சா-ம் குலத்தாருக்கு (இமாமாக இருந்து) தொழுகை நடத்திவந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் என் கண் பார்வையை இழந்துவருகிறேன். (மழைக் காலங்களில்) என(து இல்லத்து)க்கும் என் சமுதாய மக்களின் பள்ளிவாசலுக்கும் குறுக்கே (உள்ள பள்ளத்தாக்கில்) தண்ணீர் ஓடுகிறது. (ஆகவே, என்னால் அவர்களின் பள்ளி வாசலுக்குச் செல்ல முடியவில்லை.) எனவே, நீங்கள் வந்து, என் இல்லத்தில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அ(ந்த இடத்)தை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என ஆசைப் படுகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அவ்வாறே) செய்கிறேன்” என்று கூறினார்கள்.
மறுநாள் நண்பக-ல் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன் அவர்கள் உட்காரக்கூட இல்லை. (அதற்குள்) “(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழ வேண்டும் என நான் விரும்பி னேனோ அந்த இடத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினேன். (அந்த இடத்தில்) நபி (ஸல்) அவர்கள் (தொழ) நின்றார்கள். உடனே நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுகை முடியும்போது) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்தபோது நாங்களும் சலாம் கொடுத்தோம்.
அத்தியாயம் :

841. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ.
பாடம் : 155
தொழுகைக்குப்பின் இறைவனைப் போற்றித் துதிப்பது (திக்ர் செய்வது)
841. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும்போது சப்தமாக (இறைவனைப் போற்றி) ‘திக்ர்’ செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு மக்கள் கூறக் கேட்டால், அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.
அத்தியாயம் : 10

842. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، {عَنْ عَمْرٍو،} قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ.
பாடம் : 155
தொழுகைக்குப்பின் இறைவனைப் போற்றித் துதிப்பது (திக்ர் செய்வது)
842. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை (மக்கள் உரக்கக் கூறும்) தக்பீரை வைத்து நான் அறிந்துகொள்வேன்.
(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ள இரண்டாவது அறிவிப்பாள ரான) அபூமஅபத் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமைகளில் வாய்மையாளர் ஆவார். அவரது இயற்பெயர் நாஃபித் என்பதாகும்.

843. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلاَ وَالنَّعِيمِ الْمُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ، وَيَتَصَدَّقُونَ قَالَ "" أَلاَ أُحَدِّثُكُمْ بِأَمْرٍ إِنْ أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ، إِلاَّ مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ، وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ "". فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ. فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ "" تَقُولُ سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ "".
பாடம் : 155
தொழுகைக்குப்பின் இறைவனைப் போற்றித் துதிப்பது (திக்ர் செய்வது)
843. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களி டம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்ந்த பதவிகளையும் நிலையான இன்பங்களை யும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும், தங்களின் அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவழிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே!)” என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களை நீங்கள் தொட்டு விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைத் தொட இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர் களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர் கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களால் அச்சிறப்பை அடைய முடியாது).
(அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; தஹ்மீத் (அல்ஹம்து-ல் லாஹ்) கூறுங்கள்; தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.
நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர், நாம் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்து-ல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.
நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து-ல்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றையும் 33 தடவைக் கூறியதாக ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

844. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَمْلَى عَلَىَّ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ "". وَقَالَ شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ بِهَذَا، وَعَنِ الْحَكَمِ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ عَنْ وَرَّادٍ بِهَذَا. وَقَالَ الْحَسَنُ الْجَدُّ غِنًى.
பாடம் : 155
தொழுகைக்குப்பின் இறைவனைப் போற்றித் துதிப்பது (திக்ர் செய்வது)
844. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு எழுதுமாறு என்னிடம் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்- ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ -மா அஉதைத்த, வலா முஉத்திய -மா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் யாருமில்லை (எது மில்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ள வன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்ப வன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. செல்வம் உடைய எவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனும் அளிக்க முடியாது.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஜத்’ எனும் சொல்லுக்கு ‘செல்வம்’ என்பது பொருள்.

845. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ.
பாடம் : 156
சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது
845. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுவித்து முடித்ததும் எங்களை நோக்கித் தமது முகத்தை நேராகத் திருப்பி (அமர்ந்து)விடுவார்கள்.

846. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ "" هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ "".
பாடம் : 156
சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது
846. ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள். -அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர் களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர்.
அப்போது “என்னை நம்பக்கூடியவர் களும் (என்னை) மறுக்கக்கூடியவர் களுமாக என் அடியார்கள் (இரு பிரிவின ராக) உள்ளனர். ‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்’ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தாôர்கள்.

847. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، سَمِعَ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ أَخَّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى شَطْرِ اللَّيْلِ ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَلَمَّا صَلَّى أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ "" إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ "".
பாடம் : 156
சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது
847. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரை தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார் கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தமது முகத்தை எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்வரை அத்தொழுகை யிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.75

848. وَقَالَ لَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الْفَرِيضَةَ. وَفَعَلَهُ الْقَاسِمُ. وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَفَعَهُ لاَ يَتَطَوَّعُ الإِمَامُ فِي مَكَانِهِ. وَلَمْ يَصِحَّ.
பாடம் : 157
சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
848. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமை யான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (கூடுதலான தொழுகை களைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.
“இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) தமது இடத்திலேயே கூடுதலான தொழுகைகளைத் தொழக் கூடாது” என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.76

849. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَلَّمَ يَمْكُثُ فِي مَكَانِهِ يَسِيرًا. قَالَ ابْنُ شِهَابٍ فَنُرَى ـ وَاللَّهُ أَعْلَمُ ـ لِكَىْ يَنْفُذَ مَنْ يَنْصَرِفُ مِنَ النِّسَاءِ.
பாடம் : 157
சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
849. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“தொழுகையை முடித்த பெண்கள் (முத-ல்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே (நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்துகொண்டிருந்தார்கள்) என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.

850. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، أَنَّ ابْنَ شِهَابٍ، كَتَبَ إِلَيْهِ قَالَ حَدَّثَتْنِي هِنْدُ بِنْتُ الْحَارِثِ الْفِرَاسِيَّةُ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ مِنْ صَوَاحِبَاتِهَا قَالَتْ كَانَ يُسَلِّمُ فَيَنْصَرِفُ النِّسَاءُ، فَيَدْخُلْنَ بُيُوتَهُنَّ مِنْ قَبْلِ أَنْ يَنْصَرِفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. وَقَالَ ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَتْنِي هِنْدُ الْفِرَاسِيَّةُ. وَقَالَ عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِيِّ حَدَّثَتْنِي هِنْدُ الْفِرَاسِيَّةُ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ أَنَّ هِنْدَ بِنْتَ الْحَارِثِ الْقُرَشِيَّةَ أَخْبَرَتْهُ، وَكَانَتْ تَحْتَ مَعْبَدِ بْنِ الْمِقْدَادِ ـ وَهْوَ حَلِيفُ بَنِي زُهْرَةَ ـ وَكَانَتْ تَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ حَدَّثَتْنِي هِنْدُ الْقُرَشِيَّةُ. وَقَالَ ابْنُ أَبِي عَتِيقٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ هِنْدٍ الْفِرَاسِيَّةِ. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ حَدَّثَتْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 157
சலாம் கொடுத்தபின் இமாம் தொழுத இடத்திலேயே இருப் பது
850. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பார்கள். அவர்கள் (தம் இல்லத்திற்கு) திரும்புவதற்குமுன் பெண்கள் திரும்பிச் சென்று தம் இல்லங் களுக்குள் நுழைந்துவிடுவார்கள். (குறைந்த பட்சம் அவ்வளவு நேரம் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே வீற்றிருப்பார்கள்.)
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சில அறிவிப்புகளில், இந்த ஹதீஸை உம்மு சலமா (ரலி) அவர்களிட மிருந்து அறிவிப்பவர் ‘ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் ஃபிராஸிய்யா’ என்றும், வேறுசில அறிவிப்புகளில் ‘ஹின்த் பின்த் அல்ஹாரிஸ் குரஷிய்யா’ என்றும், இன் னோர் அறிவிப்பில் ‘குறைஷிப் பெண்மணி ஒருவர்’ என்றும் வந்துள்ளது.

851. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ، قَالَ صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ الْعَصْرَ فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ فَقَالَ "" ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ "".
பாடம் : 158
மக்களுக்குத் தொழவைத்து விட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் (அமரா மல்) இமாம் மக்களைக் கடந்து செல்வது
851. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் ‘சலாம்’ கொடுத்ததும் மக்களைத் தாண்டிக்கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்ப தைக் கண்டார்கள்.
எனவே, “எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகை யில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே, நான் (சென்று) அதைப் பங்கிட்டு விடுமாறு பணித்(துவிட்டு வந்)தேன்” என்று கூறினார்கள்.

852. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لاَ يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لاَ يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ.
பாடம் : 159
(தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும் திரும்பிச் செல்வதும்
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்தபின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கமே திரும்ப வேண்டும் என்று கருதுவோரை அவர்கள் கண்டிப்பார்கள்.
852. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வலப் பக்கம் திரும்புவதே கடமையாகும் என்று எண்ணுவதன் மூலம் உங்களில் யாரும் தமது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்துவிட வேண்டாம். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் அவர்கள் தமது இடப் பக்கமும் திரும்புவார்கள்.

853. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ـ يَعْنِي الثُّومَ ـ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا "".
பாடம் : 160
பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை
“பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
853. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து -அதாவது வெள்ளைப் பூண்டைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள்.

854. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ـ يُرِيدُ الثُّومَ ـ فَلاَ يَغْشَانَا فِي مَسَاجِدِنَا "". قُلْتُ مَا يَعْنِي بِهِ قَالَ مَا أُرَاهُ يَعْنِي إِلاَّ نِيئَهُ. وَقَالَ مَخْلَدُ بْنُ يَزِيدَ عَنِ ابْنِ جُرَيْجٍ إِلاَّ نَتْنَهُ.
பாடம் : 160
பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை
“பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
854. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு “இந்தச் செடியிலிருந்து சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்குள் வர வேண்டாம்” என்று கூறினார்கள் என்றார்கள்.
அவர்களிடம் நான்,“எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பச்சை வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

855. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، زَعَمَ عَطَاءٌ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، زَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا ـ أَوْ قَالَ ـ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا، وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ "". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ فَقَالَ "" قَرِّبُوهَا "" إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ "" كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي "".
وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ عَنِ ابْنِ وَهْبٍ أُتِيَ بِبَدْرٍ. قَالَ ابْنُ وَهْبٍ يَعْنِي طَبَقًا فِيهِ خُضَرَاتٌ. وَلَمْ يَذْكُرِ اللَّيْثُ وَأَبُو صَفْوَانَ عَنْ يُونُسَ قِصَّةَ الْقِدْرِ، فَلاَ أَدْرِي هُوَ مِنْ قَوْلِ الزُّهْرِيِّ أَوْ فِي الْحَدِيثِ.
பாடம் : 160
பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை
“பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
855. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து’ அல்லது ‘நமது பள்ளி வாசலிலிருந்து விலகியிருக்கட்டும்’; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள்.
அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஸா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் “வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது” என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் ‘பத்ர்’ என்பது ‘காய்கறிகள் உள்ள தட்டையே’ குறிக்கும் என்று அதற்கு அவர் விளக்கம் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
லைஸ், அபூஸஃப்வான் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், பாத்திரம் சம்பந்தமான குறிப்பு இடம்பெறவில்லை. ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா, அல்லது நபிமொழியின் மூலத்திலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை.

856. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ سَأَلَ رَجُلٌ أَنَسًا مَا سَمِعْتَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فِي الثُّومِ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا، أَوْ لاَ يُصَلِّيَنَّ مَعَنَا "".
பாடம் : 160
பச்சை வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டு உள்ளி (போன்ற வாடையுள்ளவற் றைச்) சாப்பிடுவது தொடர்பாக வந்துள்ளவை
“பசி காரணமாகவோ வேறு காரணங் களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
856. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், “வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “இந்தச் செடியி-ருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் ‘நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.77

857. حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ الشَّيْبَانِيَّ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، مَرَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. فَقُلْتُ يَا أَبَا عَمْرٍو مَنْ حَدَّثَكَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ.
பாடம் : 161
சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
857. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் (மையவாடியில்) தனியாக இருந்த ஒரு மண்ணறை (கப்று) அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த மண்ணறை அருகில் அணிவகுத்து நின்றார்கள்” என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நான் “அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.78

858. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ "".
பாடம் : 161
சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
858. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத் தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொரு வர் மீதும் கடமையாகும்.79
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

859. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا ـ يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ جِدًّا ـ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ فَنَامَ حَتَّى نَفَخَ، فَأَتَاهُ الْمُنَادِي يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ. قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ إِنَّ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْىٌ ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}.
பாடம் : 161
சிறுவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பரு வத்தில் கடமையாகும் என்ப தும், கூட்டுத் தொழுகை (ஜமா அத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸா தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்துகொள்வதும், அவர்கள் தொழுகை வரிசையில் (மற்றவர்களுடன்) நிற்பதும்
859. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா
(ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று), தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையி-ருந்து (தண்ணீர் எடுத்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், “(உறுப்புகளை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத் தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்தது” என்று சுட்டிக்காட்டினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். அப்போது நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து, அவர்களின் இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே (தொழுதுகொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்த்தில் நிறுத்திக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால், அவர்கள் (உறங்கியதற்காகப் புதிதாக) உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் கண்கள் (மட்டுமே) உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று மக்கள் கூறுகின்ற னரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும் என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
பிறகு, “(மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து)விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்” (37:102) எனும் இறை வசனத்தை (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்80