7480. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ حَاصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَفْتَحْهَا فَقَالَ "" إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ "". فَقَالَ الْمُسْلِمُونَ نَقْفُلُ وَلَمْ نَفْتَحْ. قَالَ "" فَاغْدُوا عَلَى الْقِتَالِ "". فَغَدَوْا فَأَصَابَتْهُمْ جِرَاحَاتٌ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّا قَافِلُونَ غَدًا إِنْ شَاءَ اللَّهُ ""، فَكَأَنَّ ذَلِكَ أَعْجَبَهُمْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்த வொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்... (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி “நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று கூறாதீர். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நல்வழியில் செலுத்தி விட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான் (28:56). “இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது” என முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு எளிதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)
7480. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால், அதை அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்” என்று சொன்னார்கள். முஸ்லிம்கள், “நாம் (கோட்டையை) வெற்றி கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?” என்று கேட்டார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங் கள்” என்று சொன்னார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அச்சமயம்) “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று சொன்னார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.122

அத்தியாயம் : 97
7481. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ ضَرَبَتِ الْمَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ ـ قَالَ عَلِيٌّ وَقَالَ غَيْرُهُ صَفَوَانٍ ـ يَنْفُذُهُمْ ذَلِكَ، فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقَّ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ "". قَالَ عَلِيٌّ وَحَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، بِهَذَا. قَالَ سُفْيَانُ قَالَ عَمْرٌو سَمِعْتُ عِكْرِمَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ،. قَالَ عَلِيٌّ قُلْتُ لِسُفْيَانَ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ نَعَمْ. قُلْتُ لِسُفْيَانَ إِنَّ إِنْسَانًا رَوَى عَنْ عَمْرٍو عَنْ عِكْرِمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ أَنَّهُ قَرَأَ فُزِّعَ. قَالَ سُفْيَانُ هَكَذَا قَرَأَ عَمْرٌو فَلاَ أَدْرِي سَمِعَهُ هَكَذَا أَمْ لاَ، قَالَ سُفْيَانُ وَهْىَ قِرَاءَتُنَا.
பாடம்: 32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும்போது (பரிந்துரைப்பவர்களிடம்), ‘உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு ‘சரியான பதிலுரைத்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுவார்கள் (34:23). “உங்கள் இறைவன் என்ன படைத்தான்” என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை.123 மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அவனுடைய அனுமதி யின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிட மிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்து கொள்வார்கள். மேலும், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று கேட்பார்கள். “உண்மை சொன்னான்” என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்றுதிரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து “நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன்” என்று சொல்வான்.
7481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால் வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறைமேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போன்று (வானவர்கள் கேட்பார்கள்).

மற்றோர் அறிவிப்பில் காணப்படுவ தாவது: அந்த ஓசை அவர்களைப் போய்ச் சேரும். (அப்போது வானவர்கள் பீதியடை கிறார்கள்.) பின்னர் அவர்களின் இதயங் களிலிருந்து பீதி அகற்றப்படும்போது “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகிறார்கள். “உண்மையே சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்” என்று கூறுவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.124

இக்ரிமா (ரஹ்) அவர்களது ஓர் அறி விப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: மேற்கண்ட (34:23ஆவது) வசனத்தின் மூலத்தில் ‘ஃபுஸ்ஸிஅ’ (அச்சம் அகற்றப் படும்போது) என்பதை ‘ஃபுர்ரிஃக’ (அகற்றப்படும்போது) என ஓதினார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

இதுவே எங்களது ஓதல் முறையாகும்.

அத்தியாயம் : 97
7482. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا أَذِنَ اللَّهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَتَغَنَّى بِالْقُرْآنِ "". وَقَالَ صَاحِبٌ لَهُ يُرِيدُ أَنْ يَجْهَرَ بِهِ.
பாடம்: 32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும்போது (பரிந்துரைப்பவர்களிடம்), ‘உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு ‘சரியான பதிலுரைத்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுவார்கள் (34:23). “உங்கள் இறைவன் என்ன படைத்தான்” என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை.123 மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அவனுடைய அனுமதி யின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிட மிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்து கொள்வார்கள். மேலும், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று கேட்பார்கள். “உண்மை சொன்னான்” என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்றுதிரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து “நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன்” என்று சொல்வான்.
7482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், தன் தூதர் இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறு எதையும் அவன் செவிமடுத்துக் கேட்டதில்லை.

இதை அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களின் தோழர் ஒருவர், “இது குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆன் ஓதுவதைக் குறிக்கின்றது” என்கிறார்.125

அத்தியாயம் : 97
7483. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَقُولُ اللَّهُ يَا آدَمُ. فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ. فَيُنَادَى بِصَوْتٍ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُخْرِجَ مِنْ ذُرِّيَّتِكَ بَعْثًا إِلَى النَّارِ "".
பாடம்: 32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும்போது (பரிந்துரைப்பவர்களிடம்), ‘உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு ‘சரியான பதிலுரைத்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுவார்கள் (34:23). “உங்கள் இறைவன் என்ன படைத்தான்” என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை.123 மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அவனுடைய அனுமதி யின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிட மிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்து கொள்வார்கள். மேலும், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று கேட்பார்கள். “உண்மை சொன்னான்” என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்றுதிரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து “நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன்” என்று சொல்வான்.
7483. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், (மறுமை நாளில் ஆதி மனிதரை நோக்கி), ‘ஆதமே!’ என்று அழைப்பான். ஆதம் (அலை) அவர்கள், “இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடு! காத்திருக்கிறேன்” என்று சொல்வார்கள். அப்போது உரத்த குரலில், “உங்கள் சந்ததியினரிலிருந்து நரகத்திற்கு அனுப்பப்பட இருப்பவர்களை (மற்றவர்களிóருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” என அறிவிக்கப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.126

அத்தியாயம் : 97
7484. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ.
பாடம்: 32 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் அனுமதியளித்தவர்களுக்குத் தவிர வேறெவருக்காகவும் அவனிடம் பரிந்துரை செய்வது பயனளிக்காது. (தீர்ப்பு நாளன்று) மக்களுடைய உள்ளங்களில் இருந்து அச்சம் அகற்றப்பட்டுவிடும்போது (பரிந்துரைப்பவர்களிடம்), ‘உங்கள் இறைவன் என்ன பதிலுரைத்தான்?’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு ‘சரியான பதிலுரைத்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் பெரியவனாகவும் இருக்கின்றான்’ என்று கூறுவார்கள் (34:23). “உங்கள் இறைவன் என்ன படைத்தான்” என்று (அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் சொல்லவில்லை.123 மேலும், புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்: அவனுடைய அனுமதி யின்றி அவனிடம் பரிந்துரைப்பவர் யார்? (2:255) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிட மிருந்து மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் வஹீயின் மூலம் பேசும் போது வானவர்கள் (அதில்) சிறிது கேட்டு (அதிர்ச்சியாகி)விடுகிறார்கள். பின்னர் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் நீக்கப்பட்டு குரல் ஓய்ந்துவிடும் போது, இது (தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள) சத்திய வாக்கு என்று புரிந்து கொள்வார்கள். மேலும், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று கேட்பார்கள். “உண்மை சொன்னான்” என்று மற்றவர்கள் பதிலளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் தன் அடியார்களை ஒன்றுதிரட்டுவான்; அப்போது அவன், அருகில் இருப்பவர் கேட்பதைப் போன்று தொலைவில் இருப்பவரும் கேட்கின்ற வகையில் உரத்த குரலில் அவர்களை அழைத்து “நானே அரசன்; நானே கூலி கொடுப்பவன்” என்று சொல்வான்.
7484. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

கதீஜா (ரலி) அவர்கள்மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண்மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய இறைவன் கதீஜா அவர்களுக்கு சொர்க்கத்தில் (முத்து) மாளிகை ஒன்று இருப்பதாக நற்செய்தி அறிவிக்கச் சொன்னான்.

இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.127

அத்தியாயம் : 97
7485. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبَّهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي جِبْرِيلُ فِي السَّمَاءِ إِنَّ اللَّهَ قَدْ أَحَبَّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ وَيُوضَعُ لَهُ الْقَبُولُ فِي أَهْلِ الأَرْضِ "".
பாடம்: 33 இறைவன் (வானவர்) ஜிப்ரீல் அவர்களுடன் பேசுவதும் அவன் வானவர்களை அழைப்பதும் மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(நபியே!) விவேகமும் ஞானமும் மிக்க (இறை)வனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்கு அருளப்பெறுகிறது” எனும் (27:6ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘துலக்கா’ எனும் சொல்லுக்கு ‘போடப்படுகிறது’ என்பது பொருள். இதைப் போன்றே, “ஆதம் தம்முடைய இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார்” எனும் (2:37ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘தலக்கா’ எனும் சொல்லுக்கு ‘அடைந்தார்’ என்பது பொருள்.
7485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.128

அத்தியாயம் : 97
7486. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْعَصْرِ وَصَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ "".
பாடம்: 33 இறைவன் (வானவர்) ஜிப்ரீல் அவர்களுடன் பேசுவதும் அவன் வானவர்களை அழைப்பதும் மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(நபியே!) விவேகமும் ஞானமும் மிக்க (இறை)வனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்கு அருளப்பெறுகிறது” எனும் (27:6ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘துலக்கா’ எனும் சொல்லுக்கு ‘போடப்படுகிறது’ என்பது பொருள். இதைப் போன்றே, “ஆதம் தம்முடைய இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார்” எனும் (2:37ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘தலக்கா’ எனும் சொல்லுக்கு ‘அடைந்தார்’ என்பது பொருள்.
7486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே- கேட்பான்.

அதற்கு வானவர்கள், “அவர்கள் தொழுதுகொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுதுகொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.129

அத்தியாயம் : 97
7487. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ، عَنِ الْمَعْرُورِ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَتَانِي جِبْرِيلُ فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ "". قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ "" وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى "".
பாடம்: 33 இறைவன் (வானவர்) ஜிப்ரீல் அவர்களுடன் பேசுவதும் அவன் வானவர்களை அழைப்பதும் மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(நபியே!) விவேகமும் ஞானமும் மிக்க (இறை)வனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்கு அருளப்பெறுகிறது” எனும் (27:6ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘துலக்கா’ எனும் சொல்லுக்கு ‘போடப்படுகிறது’ என்பது பொருள். இதைப் போன்றே, “ஆதம் தம்முடைய இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார்” எனும் (2:37ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘தலக்கா’ எனும் சொல்லுக்கு ‘அடைந்தார்’ என்பது பொருள்.
7487. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் வந்து, “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இறந்துவிட்டவர் சொர்க்கம் செல்வார் எனும் நற்செய்தியைத் தெரிவித்தார். “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று நான் கேட்க, ஜிப்ரீல் “ஆம். அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே” என்று பதிலளித்தார்கள்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.130

அத்தியாயம் : 97
7488. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا فُلاَنُ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَقُلِ اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ. فَإِنَّكَ إِنْ مُتَّ فِي لَيْلَتِكَ مُتَّ عَلَى الْفِطْرَةِ، وَإِنْ أَصْبَحْتَ أَصَبْتَ أَجْرًا "".
பாடம்: 34 “ஆனால், (நபியே!) அல்லாஹ் உமக்கு அருளியவற்றைத் தன் பேரறிவைக் கொண்டே அருளினான் என்பதற்குத் தானே சான்று வழங்குகின்றான். வானவர்களும் சாட்சி வழங்குபவர் களாக இருக்கிறார்கள்” எனும் (4:166 ஆவது) இறைவசனம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: “அவற்றுக்கிடையே (இறைவனின்) கட்டளை இறங்கிக்கொண்டிருக்கின்றது” (65:12). அதாவது ஏழாவது வானத்திற்கும் ஏழாவது பூமிக்கும் இடையே.
7488. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, “இன்னாரே! நீங்கள் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘இறைவா! நான் என்னை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். என் முகத்தை உன்னிடமே திருப்பினேன். என் காரியத்தை உன்னிடமே ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கின்றேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன் வேதத்தையும் நீ அனுப்பிவைத்த உன் தூதரையும் நான் நம்பினேன்’ என்று பிரார்த்தியுங்கள்.

ஏனெனில், (இவ்விதம் பிரார்த்தித்து) அன்றைய இரவில் நீங்கள் இறந்து விட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவீர்கள். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் இந்தப் பிரார்த்தனைக்கான நற்பலனைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்று சொன்னார்கள்.131

அத்தியாயம் : 97
7489. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ "" اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ وَزَلْزِلْ بِهِمْ "". زَادَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம்: 34 “ஆனால், (நபியே!) அல்லாஹ் உமக்கு அருளியவற்றைத் தன் பேரறிவைக் கொண்டே அருளினான் என்பதற்குத் தானே சான்று வழங்குகின்றான். வானவர்களும் சாட்சி வழங்குபவர் களாக இருக்கிறார்கள்” எனும் (4:166 ஆவது) இறைவசனம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: “அவற்றுக்கிடையே (இறைவனின்) கட்டளை இறங்கிக்கொண்டிருக்கின்றது” (65:12). அதாவது ஏழாவது வானத்திற்கும் ஏழாவது பூமிக்கும் இடையே.
7489. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டுவந்த அகழ்ப் போரான) ‘அஹ்ஸாப்’ போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் கூட்டுப்படைகளைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற் குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.132

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7490. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ هُشَيْمٍ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} قَالَ أُنْزِلَتْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَوَارٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا رَفَعَ صَوْتَهُ سَمِعَ الْمُشْرِكُونَ فَسَبُّوا الْقُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ. وَقَالَ اللَّهُ تَعَالَى {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} لاَ تَجْهَرْ بِصَلاَتِكَ حَتَّى يَسْمَعَ الْمُشْرِكُونَ، وَلاَ تُخَافِتْ بِهَا عَنْ أَصْحَابِكَ فَلاَ تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلاً} أَسْمِعْهُمْ وَلاَ تَجْهَرْ حَتَّى يَأْخُذُوا عَنْكَ الْقُرْآنَ.
பாடம்: 34 “ஆனால், (நபியே!) அல்லாஹ் உமக்கு அருளியவற்றைத் தன் பேரறிவைக் கொண்டே அருளினான் என்பதற்குத் தானே சான்று வழங்குகின்றான். வானவர்களும் சாட்சி வழங்குபவர் களாக இருக்கிறார்கள்” எனும் (4:166 ஆவது) இறைவசனம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: “அவற்றுக்கிடையே (இறைவனின்) கட்டளை இறங்கிக்கொண்டிருக்கின்றது” (65:12). அதாவது ஏழாவது வானத்திற்கும் ஏழாவது பூமிக்கும் இடையே.
7490. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(தி குர்ஆனை ஓ)துவார் கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டு விடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை)வனையும் அதை (மக்கள்முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.

ஆகவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் “(நபியே!) நீர் உமது தொழுகையில் இணைவைப்பாளர்களின் காதில் விழும் அளவுக்குக் குரலை உயர்த்தாதீர். (அதற்காக உடன் தொழுகின்ற) உம் முடைய தோழர்களுக்கே கேட்காதவாறு (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தியும் விடாதீர். அவர்களுக்குக் கேட்டால்தான் உம்மிடமிருந்து அவர்கள் குர்ஆனைக் கற்பார்கள். ஆகவே, இவ்விரண்டிற்கும் இடையே மிதமான போக்கைக் கையாள் வீராக!” எனக் கட்டளையிட்டான்.133

அத்தியாயம் : 97
7491. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَالَ اللَّهُ تَعَالَى يُؤْذِينِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7491. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளன. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்” என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134

அத்தியாயம் : 97
7492. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَأَكْلَهُ وَشُرْبَهُ مِنْ أَجْلِي، وَالصَّوْمُ جُنَّةٌ، وَلِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7492. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.

நோன்பு ஒரு கேடயமாகும். நோன் பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கும் வேளையில் கிடைக் கின்ற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.135

அத்தியாயம் : 97
7493. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَى رَبُّهُ يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى قَالَ بَلَى يَا رَبِّ وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7493. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் திறந்தமேனியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது தங்கத்தாலான வெட்டுக்கிளியின் கால் அவர்கள்மீது வந்து விழுந்தது. உடனே அவர்கள் தமது ஆடையில் அள்ளத்தொடங்கினார்கள். அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களை அழைத்து, “அய்யூப்! நீர் பார்க்கின்ற இந்தத் தங்கக் கால் உமக்குத் தேவைப்படாத அளவுக்கு உம்மை நான் செல்வராக ஆக்கியிருக்கவில்லையா?” என்று கேட்க, அவர்கள் “ஆம். என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகிறதே!” என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136

அத்தியாயம் : 97
7494. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَتَنَزَّلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7494. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்வும் வளமும் மிக்கவனான நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும் இரவின் இறுதி மூன்றிலொரு பங்கு இருக்கும்போது கீழ்வானிற்கு இறங்கி வந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.137

அத்தியாயம் : 97
7495. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ ".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7495. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர் களும் ஆவோம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.138

அத்தியாயம் : 97
7496. وَبِهَذَا الإِسْنَادِ " قَالَ اللَّهُ أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ ".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7496. இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:

“(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவு செய்வேன்” என அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தியாயம் : 97
7497. حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ "" هَذِهِ خَدِيجَةُ أَتَتْكَ بِإِنَاءٍ فِيهِ طَعَامٌ أَوْ إِنَاءٍ فِيهِ شَرَابٌ فَأَقْرِئْهَا مِنْ رَبِّهَا السَّلاَمَ وَبَشِّرْهَا بِبَيْتٍ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7497. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள்) “இதோ கதீஜா உங்களி டம் ‘உணவுப் பாத்திரத்தை’ அல்லது ‘பானமுள்ள பாத்திரத்தை’ கொண்டுவந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அவரு டைய இறைவனிடமிருந்து சலாம் எடுத்துரையுங்கள். கூச்சலோ களைப்போ இல்லாத முத்து மாளிகையொன்று அவருக்கு (சொர்க்கத்தில்) கிடைக்கும் என்று நற்செய்தி அளியுங்கள்” என்று சொன்னார்கள்.139

அத்தியாயம் : 97
7498. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ اللَّهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7498. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களைச் சொர்க்கத்தில் நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.140

அத்தியாயம் : 97
7499. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا تَهَجَّدَ مِنَ اللَّيْلِ قَالَ "" اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ الْحَقُّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ "".
பாடம்: 35 “அவர்கள் அல்லாஹ்வின் வாக்கை மாற்றிவிட எண்ணுகிறார்கள்” எனும் (48:15ஆவது) இறைவசனம். நிச்சயமாக, இது (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டும் (இறை) வாக்காகும். -அதாவது உண்மை வாக்காகும்- இது வீண் விளையாட்டு அன்று. (86:13, 14)
7499. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ்ஜுத்’ தொழும்போது (பின்வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள் மற்றும் பூமியின் நிர்வாகி ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர்களின் இறைவன் ஆவாய்! நீயே உண்மை. உன் வாக்குறுதியே உண்மை. உன் சொல்லே சத்தியம். உன் சந்திப்பே உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் (அனுப்பப்பட்டதும்) உண்மை. மறுமை நாள் (நிகழப்போவது) உண்மை.

இறைவா! உனக்கே கீழ்ப்படிந்தேன். உன்னையே நம்பினேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன் பக்கமே திரும்பு கிறேன். உன்னிடமே என் வழக்குகளைக் கொண்டுவந்தேன். உன்னிடமே நீதி கேட்டேன். ஆகவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.141

அத்தியாயம் : 97