7418. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ إِنِّي عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَبِلْنَا. جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ وَلِنَسْأَلَكَ عَنْ أَوَّلِ هَذَا الأَمْرِ مَا كَانَ. قَالَ "" كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَىْءٌ قَبْلَهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، ثُمَّ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَىْءٍ "". ثُمَّ أَتَانِي رَجُلٌ فَقَالَ يَا عِمْرَانُ أَدْرِكْ نَاقَتَكَ فَقَدْ ذَهَبَتْ فَانْطَلَقْتُ أَطْلُبُهَا، فَإِذَا السَّرَابُ يَنْقَطِعُ دُونَهَا، وَايْمُ اللَّهِ لَوَدِدْتُ أَنَّهَا قَدْ ذَهَبَتْ وَلَمْ أَقُمْ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7418. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூ தமீம் குலத் தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று சொன்னார் கள். அதற்கு அவர்கள், “எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட் டும்! தர்மம்) கொடுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டான தன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான்; அவனுக்கு முன் (அவனைத் தவிர வேறு) எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பேரண்டத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்” என்று சொன்னார்கள்.

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, “இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது” என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்குமுன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57

அத்தியாயம் : 97
7419. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ يَمِينَ اللَّهِ مَلأَى لاَ يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ، أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُنْذُ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فَإِنَّهُ لَمْ يَنْقُصْ مَا فِي يَمِينِهِ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ وَبِيَدِهِ الأُخْرَى الْفَيْضُ ـ أَوِ الْقَبْضُ ـ يَرْفَعُ وَيَخْفِضُ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பி யுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிவிடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. அவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த (நேரத்)திலிருந்து (இப்போதுவரை) அவன் வாரி வழங்கியது எவ்வளவு இருக்கும் சொல் லுங்கள். அதுவும்கூட அவனது வலக் கரத்தில் இருப்பதைக் குறைத்துவிடவில்லை.

(வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தபோது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மீதிருந்தது. அவனது மற்றொரு கரத்தில் ‘கொடைப் பொழிவு’ அல்லது ‘கொடைக் குறைவு’ உள்ளது. (அதன் வாயிலாக) அவன் (சிலரை) உயர்த்துகின்றான்; (சிலரைத்) தாழ்த்துகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.58

அத்தியாயம் : 97
7420. حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ زَيْدُ بْنُ حَارِثَةَ يَشْكُو فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" اتَّقِ اللَّهَ، وَأَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ "". قَالَتْ عَائِشَةُ لَوْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَاتِمًا شَيْئًا لَكَتَمَ هَذِهِ. قَالَ فَكَانَتْ زَيْنَبُ تَفْخَرُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ زَوَّجَكُنَّ أَهَالِيكُنَّ، وَزَوَّجَنِي اللَّهُ تَعَالَى مِنْ فَوْقِ سَبْعِ سَمَوَاتٍ. وَعَنْ ثَابِتٍ {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ} نَزَلَتْ فِي شَأْنِ زَيْنَبَ وَزَيْدِ بْنِ حَارِثَةَ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7420. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தம் மனைவியின் (ஸைனப்) போக்கு குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) மணபந்தத்தில் நீடிக்கச்செய்” என்று கூறலானார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் குர்ஆன் வசனங்களில்) எதையேனும் மறைப்பவர்களாக இருந்திருந்தால் (பின்வரும் 33:37ஆவது வசனமான) இதைத்தான் மறைத்திருப்பார்கள்.

இதன் காரணத்தால் ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் முன்பாக (தமக்குத் தனிச் சிறப்பு இருப்பதாகப்) பெருமை பாராட்டிக்கொள்வார்கள். “உங்களை (நபி (ஸல்) அவர்களுக்கு) உங்கள் வீட்டார் மணமுடித்துத் தந்தார்கள். என்னையோ உயர்ந்தவனான அல்லாஹ்வே ஏழு வானங்களுக்கு மேலிருந்து (நபி (ஸல்) அவர்களுக்கு) மணமுடித்துக்கொடுத்தான்” என்று சொல்வார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டீர்” எனும் (33:37ஆவது) இறைவசனம், (தம்பதியராயிருந்த) ஸைனப் (ரலி) அவர்களுக்கும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த பிரச்சினையில் (நபி (ஸல்) அவர்கள் கருத்து தெரிவித்தபோது)தான் அருளப்பெற்றது” என்று அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.59

அத்தியாயம் : 97
7421. حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ آيَةُ الْحِجَابِ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَأَطْعَمَ عَلَيْهَا يَوْمَئِذٍ خُبْزًا وَلَحْمًا وَكَانَتْ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ تَقُولُ إِنَّ اللَّهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7421. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பர்தா தொடர்பான வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் விஷயத்தில்தான் அருளப்பெற்றது. அன்று நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்ததற்காக (‘வலீமா’ விருந்தாக) ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள்.

ஸைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியர் முன்பாகப் பெருமை பாராட்டிவந்தார்கள்: “அல்லாஹ் எனக்கு வானத்தில் மணமுடித்து வைத்தான்” என்று சொல்வார்கள்.

அத்தியாயம் : 97
7422. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ لَمَّا قَضَى الْخَلْقَ كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7422. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (படைப்புகளைப்) படைக் கும் பணியை நிறைவு செய்தபோது தன்னிடமுள்ள அரியணைக்கு மேலே, “என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது” என்று எழுதினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60

அத்தியாயம் : 97
7423. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ، فِي سَبِيلِ اللَّهِ، أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ. قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ، كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ، وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்)செய்தியை அறிவிக்கலாமா?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தனது பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்குமேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியணை (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன என்று கூறினார்கள்.61

அத்தியாயம் : 97
7424. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ ـ هُوَ التَّيْمِيُّ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ "" يَا أَبَا ذَرٍّ هَلْ تَدْرِي أَيْنَ تَذْهَبُ هَذِهِ "". قَالَ قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّهَا تَذْهَبُ تَسْتَأْذِنُ فِي السُّجُودِ فَيُؤْذَنُ لَهَا، وَكَأَنَّهَا قَدْ قِيلَ لَهَا ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ. فَتَطْلُعُ مِنْ مَغْرِبِهَا "". ثُمَّ قَرَأَ {ذَلِكَ مُسْتَقَرٌّ لَهَا} فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7424. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். அவர்கள், “இது இறைவனுக்கு (அவனது அரியணைக்குக் கீழே) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காகச் செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம், “நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல்” என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்று இருக்கும்.

உடனே அது மறைந்த இடத்திலிருந்து (இறுதிநாளில்) உதயமாகும்” என்று சொல்லிவிட்டு, “அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்” (தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது ஓதல் முறைப்படி (36:38ஆவது வசனத்தை) ஓதினார்கள்.62

அத்தியாயம் : 97
7425. حَدَّثَنَا مُوسَى، عَنْ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ،. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ فَتَتَبَّعْتُ الْقُرْآنَ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرِهِ {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} حَتَّى خَاتِمَةِ بَرَاءَةٌ. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، بِهَذَا وَقَالَ مَعَ أَبِي خُزَيْمَةَ الأَنْصَارِيِّ.
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7425. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டும்படி கேட்டு) என்னிடம் ஆளனுப்பினார்கள். ஆகவே, நான் குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அப்போது ‘அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை அன்சாரியான அபூகுஸைமா (ரலி) அவர்களிடம் கிடைக்கப்பெற்றேன். அவரல்லாத வேறொருவரிடமும் அதை நான் காணவில்லை.

அந்த இறுதிப் பகுதி, “உங்களிலிருந்தே ஓர் இறைத்தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்” என்பதிலிருந்து அல்பராஅத் அத்தியாயத்தின் இறுதி(யான ‘அவனே மகத்தான அரியணையின் அதிபதி ஆவான்’ என்பது)வரை உள்ளதாகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.63

அத்தியாயம் : 97
7426. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ عِنْدَ الْكَرْبِ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيمُ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ "".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7426. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது, “லா இலாஹ இல்லல்லாஹுல் அலீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி, வ ரப்புல் அர்ளி, வ ரப்புல் அர்ஷில் கரீம்” (நன்கறிந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை; மகத்தான அரியணையின் அதிபதி யான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும், சிறப்புக்குரிய அரியணையின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று பிரார்த்தித்து வந்தார்கள்.64

அத்தியாயம் : 97
7427. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ ".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7427. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மக்கள் மயக்க மடைந்துவிடுவார்கள். அப்போது (நான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழும் போது) மூசாவின் அருகில் இருப்பேன். அவர் (இறை) அரியணையின் கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.65

அத்தியாயம் : 97
7428. وَقَالَ الْمَاجِشُونُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ ".
பாடம்: 22 அவனுடைய அரியணை (அர்ஷ்) நீரின் மீதிருந்தது (எனும் 11:7ஆவது இறைவசனம்); அவனே மகத்தான அரியணையின் (அர்ஷ்) அதிபதி ஆவான் (எனும் 9:129ஆவது இறைவசனம்)56 அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “பின்னர் வானத்தை(ப் படைக்க)க் கருதி, அவற்றை ஏழு வானங் களாக ஒழுங்குபடுத்தினான்” எனும் (2:29ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள ‘இஸ்தவா’ எனும் சொல்லுக்கு ‘உயர்ந்தான்’ என்பது பொருளாகும். ‘சவ்வா’ என்பதற்கு ‘படைத்தான்’ என்பது பொருளாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் அர்ஷின் மீது நிலை கொண்டான் எனும் (7:54ஆவது) வசனத்திற்கு “அர்ஷின் மேலே ஆனான்” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவனே அரியணைக்கு உரியவன்; மகத்துவமிக்கவன் எனும் 85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘கண்ணியமிக்கவன்’ என்பது பொருள். (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு, ‘அன்புமிக்கவன்’ என்பது பொருள். (11:73ஆவது வசனத்திலுள்ள) ‘ஹமீதும் மஜீத்’ (புகழுக்குரியோனும் மகத்துவமிக்கோனும் ஆவான்) என்பதில், ‘ஹமீத்’ எனும் சொல்லுக்கு ‘புகழப்படுபவன்’ (மஹ்மூத்) என்றும், ‘மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புமிக்கவன்’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
7428. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்போது நான்தான் முதலாவதாக (மயக்கம் தெளிவித்து) எழுப்பப்பட்ட வனாக இருப்பேன். அப்போது மூசா (இறை) அரியணையைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66

அத்தியாயம் : 97
7429. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْعَصْرِ وَصَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ بِكُمْ فَيَقُولُ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து (இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்த வர்கள் (வானத்திற்கு) ஏறிச்செல்கின் றார்கள்.

அவர்களிடம் அல்லாஹ் “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே- கேட்கின்றான். “அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69

அத்தியாயம் : 97
7430. وَقَالَ خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلاَّ الطَّيِّبُ، فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "". وَرَوَاهُ وَرْقَاءُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" وَلاَ يَصْعَدُ إِلَى اللَّهِ إِلاَّ الطَّيِّبُ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம்பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறாரோ அ(வரது தர்மத்)தை அல்லாஹ் தன் வலக் கரத்தால் ஏற்றுக்கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும்- பிறகு அதை, உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவுக்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச்செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.70

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7431. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو بِهِنَّ عِنْدَ الْكَرْبِ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7431. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது இந்தச் சொற்களைக் கூறிப் பிரார்த்தித்துவந்தார்கள்: லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்; லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம்.

(மகத்துவமிக்கோனும் பொறுமை மிகுந்தோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; மகத்தான அரியணையின் அதிபதி யான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; வானங்களின் அதிபதியும் சிறப்புமிக்க அரியணையின் அதிபதியுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.)71

அத்தியாயம் : 97
7432. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ ـ أَوْ أَبِي نُعْمٍ شَكَّ قَبِيصَةُ ـ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ بُعِثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةٍ. وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَعَثَ عَلِيٌّ وَهْوَ بِالْيَمَنِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِذُهَيْبَةٍ فِي تُرْبَتِهَا، فَقَسَمَهَا بَيْنَ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ أَحَدِ بَنِي مُجَاشِعٍ، وَبَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ، وَبَيْنَ عَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، وَبَيْنَ زَيْدِ الْخَيْلِ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، فَتَغَضَّبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ فَقَالُوا يُعْطِيهِ صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا قَالَ "" إِنَّمَا أَتَأَلَّفُهُمْ "". فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، نَاتِئُ الْجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، مَحْلُوقُ الرَّأْسِ فَقَالَ يَا مُحَمَّدُ اتَّقِ اللَّهَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَمَنْ يُطِيعُ اللَّهَ إِذَا عَصَيْتُهُ فَيَأْمَنِّي عَلَى أَهْلِ الأَرْضِ، وَلاَ تَأْمَنُونِي "". فَسَأَلَ رَجُلٌ مِنَ الْقَوْمِ ـ قَتْلَهُ أُرَاهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ ـ فَمَنَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7432. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ அல்கிலாபீ (ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரி களும் கோபமடைந்து, “நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மை விட்டுவிடுகிறார்களே” என்று கூறினார்கள்.

(இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்” என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதர் முன்வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ் வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?” என்று கேட்டார்கள்.

அப்போது மக்களில் ஒருவர் அம்மனிதரைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் -அவர் காலித் பின் அல்வலீத் (ரலி) என்றே நான் கருதுகிறேன்- ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன்மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வழிபாட்டாளர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்” என்று சொன்னார்கள்.72

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7433. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ قَوْلِهِ {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} قَالَ "" مُسْتَقَرُّهَا تَحْتَ الْعَرْشِ "".
பாடம்: 23 “வானவர்களும் (ஜிப்ரீல் என்ற) அந்த ஆன்மாவும் அவனிடம் (வானத்திற்கு) ஏறிச்செல்கின்றார் கள்” எனும் (70:4ஆவது) இறை வசனம் புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: நற்சொற்கள் அவனை நோக்கியே ஏறிச்செல்கின்றன (35:10). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டி ருக்கும் செய்தி எட்டியது. உடனே அவர்கள் தம் சகோதரரிடம், “தமக்கு வானத்திலிருந்து (இறைச்)செய்தி வருவதாகக் கருதும் இந்த மனிதரைப் பற்றிய விவரத்தை நீ எனக்காக அறிந்து வா!” என்று சொன்னார்கள்.67 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நற்செயலானது நற்சொல்லை (வானத்திற்கு) உயர்த்துகின்றது. ‘துல்மஆரிஜ்’ (ஏணிப்படிகளை உடையவர்கள்) என்பது வானவர்களைக் குறிக்கும். அவர்கள் அல்லாஹ்வை நோக்கி (வானத்தில்) ஏறிச்செல்கின்றனர்.68
7433. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் “சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது” எனும் (36:38 ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அது நிலைகொள்ளும் இடம் இறை அரியணைக்குக் கீழே உள்ளது” என்று சொன்னார்கள்.73

அத்தியாயம் : 97
7434. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدٌ، وَهُشَيْمٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَصَلاَةٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ، فَافْعَلُوا "".
பாடம்: 24 “அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்” எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்74
7434. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (அந்த) பௌர்ணமி இரவில் அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்துபார்த்தார்கள். “இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்கள் இறை வனையும் (மறுமையில்) காண்பீர்கள். ஆகவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் (உங்கள் இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று சொன்னார்கள்.75

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 97
7435. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ الْيَرْبُوعِيُّ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا "".
பாடம்: 24 “அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்” எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்74
7435. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் இறைவனை (மறுமை யில்) கண்கூடாகக் காண்பீர்கள்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 97
7436. حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، حَدَّثَنَا جَرِيرٌ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ كَمَا تَرَوْنَ هَذَا، لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ "".
பாடம்: 24 “அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்” எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்74
7436. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் புறப்பட்டு எங்களிடம் வந்து, “நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்கள் இறைவனை மறுமை நாளில் காண்பீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 97
7437. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّاسَ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " فَهَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ ". قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ، يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ. فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ الْقَمَرَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا شَافِعُوهَا ـ أَوْ مُنَافِقُوهَا شَكَّ إِبْرَاهِيمُ ـ فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا جَاءَنَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ فِي صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ. فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا. فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَىْ جَهَنَّمَ، فَأَكُونُ أَنَا وَأُمَّتِي أَوَّلَ مَنْ يُجِيزُهَا، وَلاَ يَتَكَلَّمُ يَوْمَئِذٍ إِلاَّ الرُّسُلُ، وَدَعْوَى الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ. وَفِي جَهَنَّمَ كَلاَلِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هَلْ رَأَيْتُمُ السَّعْدَانَ ". قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، غَيْرَ أَنَّهُ لاَ يَعْلَمُ مَا قَدْرُ عِظَمِهَا إِلاَّ اللَّهُ، تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، فَمِنْهُمُ الْمُوبَقُ بَقِيَ بِعَمَلِهِ، أَوِ الْمُوثَقُ بِعَمَلِهِ، وَمِنْهُمُ الْمُخَرْدَلُ أَوِ الْمُجَازَى أَوْ نَحْوُهُ، ثُمَّ يَتَجَلَّى حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَأَرَادَ أَنْ يُخْرِجَ بِرَحْمَتِهِ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، مِمَّنْ أَرَادَ اللَّهُ أَنْ يَرْحَمَهُ مِمَّنْ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، فَيَعْرِفُونَهُمْ فِي النَّارِ بِأَثَرِ السُّجُودِ، تَأْكُلُ النَّارُ ابْنَ آدَمَ إِلاَّ أَثَرَ السُّجُودِ، حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ قَدِ امْتُحِشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ تَحْتَهُ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ، وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ هُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ فَيَقُولُ أَىْ رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ، فَإِنَّهُ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا. فَيَدْعُو اللَّهَ بِمَا شَاءَ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَنِي غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ، وَيُعْطِي رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ، فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ قَدِّمْنِي إِلَى باب الْجَنَّةِ. فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَنِي غَيْرَ الَّذِي أُعْطِيتَ أَبَدًا، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ. فَيَقُولُ أَىْ رَبِّ. وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ. فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ، وَيُعْطِي مَا شَاءَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ، فَيُقَدِّمُهُ إِلَى باب الْجَنَّةِ، فَإِذَا قَامَ إِلَى باب الْجَنَّةِ انْفَهَقَتْ لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنَ الْحَبْرَةِ وَالسُّرُورِ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ. فَيَقُولُ اللَّهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ ـ فَيَقُولُ ـ وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ. فَيَقُولُ أَىْ رَبِّ لاَ أَكُونَنَّ أَشْقَى خَلْقِكَ فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ اللَّهُ مِنْهُ فَإِذَا ضَحِكَ مِنْهُ قَالَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ. فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ تَمَنَّهْ. فَسَأَلَ رَبَّهُ وَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ يَقُولُ كَذَا وَكَذَا، حَتَّى انْقَطَعَتْ بِهِ الأَمَانِيُّ قَالَ اللَّهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ "
பாடம்: 24 “அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்” எனும் (75:22, 23 ஆகிய) வசனங்கள்74
7437. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள். “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

இவ்வாறுதான் உங்கள் இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்” என்று கூறுவான். எனவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுவந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள்.

அவர்களிடையே ‘பரிந்துரைப்போர்’ அல்லது ‘நயவஞ்சகர்கள்’ இருப்பார்கள். அப்போது அல்லாஹ், அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம் (நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவர்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் வந்து, “நான்தான் உங்கள் இறைவன்” என்று சொல்வான். அப்போது அவர்கள், “நீதான் எங்கள் இறைவன்” என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். அங்கு நரகத்திற்குமேலே பாலம் அமைக்கப்படும். அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதன்முதலாகக் கடப்போம். அன்றைய தினம் இறைத்தூதர்கள் மட்டுமே பேசுவார் கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை “(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!” என்பதாகவே இருக்கும்.

கருவேல மரத்தின் முட்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். “கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். அந்தக் கொக்கிகள் கருவேலமர முள்ளைப் போன்றுதானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தமது செயலால் அழிந்துவிடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்துவிடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள்.

பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். ஆகவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகின்றானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற் றிடுமாறு ஆணையிடுவான்). நரகத்திலிருக் கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தா வின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங்கண்டு கொள்வார்கள். ஆதமின் மகனின் (மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தை தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள் ளான்.

ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெறியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது ஜீவ நீர் (மாஉல் ஹயாத்) ஊற்றப் படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத் தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் எஞ்சியிருப்பார். அவர்தான் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார். அவர், “என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் சுவாலை என்னைக் கரித்துவிட்டது” என்று கூறுவார். பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் (அவரிடம்), “நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?” என்பான். அதற்கு அவர், “இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்கமாட்டேன்” என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவருடைய முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை அவர் அமைதியாக இருப்பார்.

பிறகு, “என் இறைவா! சொர்க்கத் தின் வாயில்வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் அவரிடம், “உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் கேட்கமாட்டாய் என உறுதிமொழி களையும் வாக்குறுதிகளையும் நீ வழங்க வில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கூறுவான். அதற்கு அவர், “இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார்.

ஆகவே, அல்லாஹ் அவரை சொர்க்கத் தின் வாயில்வரை கொண்டுசெல்வான். சொர்க்க வாயிலில் அவர் நிற்கும்போது சொர்க்க வாயில் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கூறுவார். அப்போது அல்லாஹ், “உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா?” என்று கேட்டுவிட்டு, “மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன?” என்று கூறுவான்.

அதற்கு அவர், “என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆகிவிடக் கூடாது” என்று பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், “சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) அதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் சொல்வான்.

அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) “இன்னதை இன்னதை நீ ஆசைப்படு” என்று நினைவுபடுத்துவான். கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். (அப்போது) அல்லாஹ், “(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று சொல்வான்.76

அத்தியாயம் : 97