7373. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَصِينٍ، وَالأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، سَمِعَا الأَسْوَدَ بْنَ هِلاَلٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ "". قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" أَنْ لاَ يُعَذِّبَهُمْ "".
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7373. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆதே! அடியார்கள்மீது அல்லாஹ்வுக் குள்ள உரிமை என்ன என்று உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் அவனையே வழிபடுவதும் அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பதுதான்” என்று பதிலளித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 97
7374. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلاً، سَمِعَ رَجُلاً، يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "". زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي، قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7374. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசிய விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது” என்று சொன்னார்கள்.5

இதே ஹதீஸ் கத்தாதா பின் நுஅமான் (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.6


அத்தியாயம் : 97
7375. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرٌو، عَنِ ابْنِ أَبِي هِلاَلٍ، أَنَّ أَبَا الرِّجَالِ، مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أُمِّهِ، عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ فِي حَجْرِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلاً عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لأَصْحَابِهِ فِي صَلاَتِهِ فَيَخْتِمُ بِ ـ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" سَلُوهُ لأَىِّ شَىْءٍ يَصْنَعُ ذَلِكَ "". فَسَأَلُوهُ فَقَالَ لأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ "".
பாடம் : 1 ஓரிறைக் கோட்பாட்டை ஏற்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரை அழைத்தது தொடர்பாக வந்துள்ளவை
7375. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தமது தொழுகை யில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும் போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர்.

அவர், “ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஓரிறைப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்” என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 97
7376. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، وَأَبِي، ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ "".
பாடம்: 2 “(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்கள்மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 97
7377. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي الْمَوْتِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ارْجِعْ فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ "". فَأَعَادَتِ الرَّسُولَ أَنَّهَا أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ، فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ "".
பாடம்: 2 “(நபியே!) கூறுவீராக: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழை யுங்கள்; அல்லது அர்ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங் கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும்” எனும் (17:110ஆவது) இறைவசனம்
7377. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுடைய புதல்வியரில் ஒருவருடைய (ஸைனப் (ரலி) அவர்களுடைய) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீ ஸைனபிடம் சென்று, “அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியதுதான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச்சொல்” என்று சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால், அவர்களுடைய புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து சஅத் பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது.

அதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைச் சொரிந்தன. அப்போது சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர்களே!)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங் களில் (இயல்பாகவே) வைத்துள்ள இரக்க உணர்வாகும்; அல்லாஹ் தன் அடியார் களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்” என்று சொன்னார்கள்.8

அத்தியாயம் : 97
7378. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الْوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ "".
பாடம்: 3 “அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியான வன்” எனும் (51:58ஆவது) இறைவசனம்.
7378. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

அத்தியாயம் : 97
7379. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللَّهُ، لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلاَّ اللَّهُ، وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ إِلاَّ اللَّهُ، وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلاَّ اللَّهُ "".
பாடம்: 4 “அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங்களைத் தான் பொருந்திக்கெண்ட தூதரைத் தவிர வேறு யாருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்” எனும் (72:26ஆவது) இறைவசனம் நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34). இ(ந்த வேதத்)தை தனது ஞானத்துட னேயே அல்லாஹ் அருளினான். (4:166) அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11) மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47) யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) ‘அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.
7379. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.

எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது; அல்லாஹ்தான் அதை அறிவான். மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10


அத்தியாயம் : 97
7380. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ} وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ الْغَيْبَ فَقَدْ كَذَبَ، وَهْوَ يَقُولُ لاَ يَعْلَمُ الْغَيْبَ إِلاَّ اللَّهُ.
பாடம்: 4 “அல்லாஹ் மறைவானவற்றை அறிபவன்; (தான் அறிந்துள்ள) மறைவான விஷயங்களைத் தான் பொருந்திக்கெண்ட தூதரைத் தவிர வேறு யாருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்” எனும் (72:26ஆவது) இறைவசனம் நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது (31:34). இ(ந்த வேதத்)தை தனது ஞானத்துட னேயே அல்லாஹ் அருளினான். (4:166) அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (35:11) மறுமை நாள் பற்றிய அறிவு அவனிடமே விடப்பட்டுள்ளது. (41:47) யஹ்யா பின் ஸியாத் அல்ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றான) ‘அழ்ழாஹிர்’ (வெளிப்படையானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் வெளிப்படையாக அறிபவன்’ என்று பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பாத்தின்’ (அந்தரங்கமானவன்) என்பதற்கு ‘தனது அறிவால் ஒவ்வொரு பொருளையும் அகமியமாக அறிபவன்’ என்று பொருள்.
7380. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று தெரிவிக்கின்றான் (6:103). மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என யார் உங்களிடம் அறிவிக்கிறாரோ அவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ எனக் கூறுகின்றான் (27:65)” என்று சொன்னார்கள்.11

அத்தியாயம் : 97
7381. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُغِيرَةُ، حَدَّثَنَا شَقِيقُ بْنُ سَلَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَقُولُ السَّلاَمُ عَلَى اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ وَلَكِنْ قُولُوا التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "".
பாடம்: 5 “அமைதியளிப்பவன்(அஸ் ஸலாம்); அபயம் தருபவன் (அல் முஃமின்)” எனும் (59:23ஆவது) இறைவசனம்
7381. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது, ‘அஸ்ஸலாமு அலல்லாஹ்’ (அல்லாஹ்வின் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (அத்தஹிய்யாத் அமர்வில்) சொல்லிவந்தோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே சாந்தி அளிப்பவன் (அஸ்ஸலாம்). (ஆகவே, இப்படிச் சொல்லாதீர்கள்.) மாறாக, “(சொல், செயல், பொருள் சார்ந்த) எல்லாக் காணிக்கைகளும் வழிபாடுகளும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. உடல் மற்றும் பொருள் சார்ந்த வழிபாடுகளும் அவனுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய வளமும் ஏற்படட்டும். எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் (அனைவர்)மீதும் சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” எனக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.12

அத்தியாயம் : 97
7382. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقْبِضُ اللَّهُ الأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ، وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الأَرْضِ "". وَقَالَ شُعَيْبٌ وَالزُّبَيْدِيُّ وَابْنُ مُسَافِرٍ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ.
பாடம்: 6 ‘(அவனே) மனிதர்களின் அரசன் (மலிக்கிந் நாஸ்)’ எனும் (114:2ஆவது) இறைவசனம் இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.13
7382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள் வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.14

அத்தியாயம் : 97
7383. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ "" أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ "".
பாடம்: 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன். (29:42) கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளைவிட்டு மிகவும் தூயவன் (37:180). கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8). அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகளின் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்). நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும்” எனக் கூறினார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திóருந்து இறைநம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு) சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளி லேயே இறுதியாக சொர்க்கம் செல்பவ ராவார். அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பி விடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” என்று சொல்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: வல்லமையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “உனக்கு இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் கிடைக்கும்” என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.17 (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உனது அருள்வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்” என்று சொன்னார்கள்.18
7383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப் புக் கோருகிறேன். மரணமே இல்லாத உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்.


அத்தியாயம் : 97
7384. حَدَّثَنَا ابْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَرَمِيٌّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُلْقَى فِي النَّارِ "". وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ. وَعَنْ مُعْتَمِرٍ سَمِعْتُ أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزَالُ يُلْقَى فِيهَا وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ. حَتَّى يَضَعَ فِيهَا رَبُّ الْعَالَمِينَ قَدَمَهُ فَيَنْزَوِي بَعْضُهَا إِلَى بَعْضٍ، ثُمَّ تَقُولُ قَدْ قَدْ بِعِزَّتِكَ وَكَرَمِكَ. وَلاَ تَزَالُ الْجَنَّةُ تَفْضُلُ حَتَّى يُنْشِئَ اللَّهُ لَهَا خَلْقًا فَيُسْكِنَهُمْ فَضْلَ الْجَنَّةِ "".
பாடம்: 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவன் கண்ணியமிக்கவன்; ஞானமிக்கவன். (29:42) கண்ணியத்தின் அதிபதியான உங்கள் இறைவன் அவர்கள் கூறும் (தரக் குறைவான) பண்புகளைவிட்டு மிகவும் தூயவன் (37:180). கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்குமே உரியது (63:8). அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் அவனுடைய பண்புகளின் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்). நபி (ஸல்) அவர்கள், “(மறுமை நாளில்) நரகம், போதும்! போதும்! உன் கண்ணியத் தின் மீதாணையாக! என்று சொல்லும்” எனக் கூறினார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திóருந்து இறைநம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு) சொர்க்கத் திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர்தான் நரகவாசிகளி லேயே இறுதியாக சொர்க்கம் செல்பவ ராவார். அவர், “என் இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டு வேறு பக்கம் திருப்பி விடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! நான் உன்னிடம் வேறெதையும் கேட்கமாட்டேன்” என்று சொல்வார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: வல்லமையும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “உனக்கு இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் கிடைக்கும்” என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.17 (இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள், “(இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! உனது அருள்வளத்தைவிட்டு நான் தேவையற்றவன் அல்லன்” என்று சொன்னார்கள்.18
7384. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அப்போது நரகம், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் அகிலங்களின் அதிபதி(யான அல்லாஹ்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று கூறும்.

சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர் களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்து வான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.19

அத்தியாயம் : 97
7385. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْعُو مِنَ اللَّيْلِ "" اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ، قَوْلُكَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ، أَنْتَ إِلَهِي لاَ إِلَهَ لِي غَيْرُكَ "". حَدَّثَنَا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا وَقَالَ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ.
பாடம்: 8 “அவனே வானங்களையும் பூமி யையும் நியாய(மான காரண)த் தோடு படைத்தான்” எனும் (6:73 ஆவது) இறைவசனம்
7385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (தொழுவதற்காக எழும்போது பின் வருமாறு) பிரார்த்திப்பார்கள்: இறைவா! உனக்கே புகழனைத்தும். நீயே வானங் கள், பூமி மற்றும் அவற்றில் உள்ளவர் களின் இறைவன் ஆவாய். உனக்கே புகழனைத்தும். நீ வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவாய். உன் சொல் உண்மை; உன் வாக்குறுதி உண்மை; (மறுமையில்) உன் தரிசனம் உண்மை; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை; மறுமை நாள் உண்மையானது.

இறைவா! உனக்கே நான் அடிபணிந் தேன்; உன்மீதே நம்பிக்கை கொண்டேன்; உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன்; உன் சான்றுகளைக் கொண்டே வழக்காடுவேன்; உன்னிடமே நீதி கேட்பேன். ஆகவே, நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே என் இறைவன். உன்னைத் தவிர எனக்கு வேறெவரும் இறைவன் இல்லை.

-ஸாபித் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இதை நமக்கு அறிவித்துவிட்டு, “நீ உண்மை; உன் சொல் உண்மை” என்று சொன்னார்கள்.20

அத்தியாயம் : 97
7386. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَكُنَّا إِذَا عَلَوْنَا كَبَّرْنَا فَقَالَ "" ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، تَدْعُونَ سَمِيعًا بَصِيرًا قَرِيبًا "". ثُمَّ أَتَى عَلَىَّ وَأَنَا أَقُولُ فِي نَفْسِي لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. فَقَالَ لِي "" يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ "". أَوْ قَالَ أَلاَ أَدُلُّكَ بِهِ.
பாடம்: 9 அல்லாஹ் செவியுறுபவனாக வும் பார்ப்பவனாகவும் இருக் கின்றான் (எனும் 4:134ஆவது இறைவசனம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒலிகள் அனைத்தையும் (துல்லியமாகக்) கேட்கின்ற அளவுக்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறையிட்டுக்கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவியுற்றுவிட்டான்” எனும் (58:1ஆவது) வசனத்தை அருளினான்.21
7386. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று (உரக்கச்) சொல்லிவந்தோம். நபி (ஸல்) அவர்கள், “உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிóருந்து செவியுறுபவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு நான் என் மனத்திற்குள் “லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிóருந்து விலகிடவும் முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவும் முடியாது) என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். “அப்துல்லாஹ் பின் கைஸே! ‘லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்’ என்று சொல்லுங்கள். ஏனெனில் அது, ‘சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்’ என்றோ, ‘அதைப் பற்றி நான் அறிவிக்கட்டுமா?’ என்றோ சொன்னார்கள்.22


அத்தியாயம் : 97
7387. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي. قَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مِنْ عِنْدِكَ مَغْفِرَةً، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ ".
பாடம்: 9 அல்லாஹ் செவியுறுபவனாக வும் பார்ப்பவனாகவும் இருக் கின்றான் (எனும் 4:134ஆவது இறைவசனம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒலிகள் அனைத்தையும் (துல்லியமாகக்) கேட்கின்ற அளவுக்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறையிட்டுக்கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவியுற்றுவிட்டான்” எனும் (58:1ஆவது) வசனத்தை அருளினான்.21
7387. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓத வேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதியிழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்கமாட்டார். ஆகவே, எனக்கு உன்னிடமிருந்து (பாவ) மன்னிப்பை வழங்குவாயாக. நீயே அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றாய்!” என்று கூறுங்கள் என்றார்கள்.23


அத்தியாயம் : 97
7389. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ نَادَانِي قَالَ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ وَمَا رَدُّوا عَلَيْكَ "".
பாடம்: 9 அல்லாஹ் செவியுறுபவனாக வும் பார்ப்பவனாகவும் இருக் கின்றான் (எனும் 4:134ஆவது இறைவசனம்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒலிகள் அனைத்தையும் (துல்லியமாகக்) கேட்கின்ற அளவுக்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், “(நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறையிட்டுக்கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவியுற்றுவிட்டான்” எனும் (58:1ஆவது) வசனத்தை அருளினான்.21
7389. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்து, “(நபியே!) உங்கள் சமுதாயத்தாரின் சொல்லையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியுற்றான்” என்று சொன்னார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24

அத்தியாயம் : 97
7390. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، يُحَدِّثُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَسَنِ يَقُولُ أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ السَّلَمِيُّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُ أَصْحَابَهُ الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا، كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ "" إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الأَمْرَ ـ ثُمَّ تُسَمِّيهِ بِعَيْنِهِ ـ خَيْرًا لِي فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ قَالَ أَوْ فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ فَاقْدُرْهُ لِي، وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ "".
பாடம்: 10 “(நபியே!) ‘அவனே ஆற்றல் மிக்க வன்’ என்று சொல்வீராக!” எனும் (6:65ஆவது) இறைவசனம்
7390. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக்கொடுப்பதைப் போன்று கற்றுக்கொடுத்துவந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்.

பின்னர் “இறைவா! நீ அறிந்துள்ளபடி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை உன்னிடம் நான் கோருகிறேன். உனது ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன் அருளைக் கோருகிறேன். ஏனெனில், நீயே ஆற்றல்மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் -(தாம் தொடங்கப்போகும்) அந்தக் காரியம் இன்னதெனக் குறிப்பிட்டு- எனக்கு ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ அல்லது ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ நன்மை பயக்கும் என நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதை எளிதாக்கித் தருவாயாக! பிறகு அதில் எனக்கு வளம் வழங்கிடுவாயாக!

இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ தீமை பயக்கும் என நீ அறிந்திருந்தால் இந்தக் காரியத்தைவிட்டு என்னைத் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்கி, அதில் எனக்குத் திருப்தி அளித்திடுவாயாக!” என்று பிரார்த்திக்கட்டும்.25

அத்தியாயம் : 97
7391. حَدَّثَنِي سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ أَكْثَرُ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَحْلِفُ "" لاَ وَمُقَلِّبِ الْقُلُوبِ "".
பாடம்: 11 உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அவர்களின் உள்ளங்களையும் அவர்களின் பார்வைகளையும் புரட்டுகின்றோம். (6:110)
7391. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்திய வாக்கியம், “இல்லை; உள்ளங்களைப் புரட்டுபவன்மீதாணையாக!” என்ப தாகவே இருந்தது.26

அத்தியாயம் : 97
7392. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ "". {أَحْصَيْنَاهُ} حَفِظْنَاهُ.
பாடம்: 12 அல்லாஹ்வுக்கு தொண்ணூற் றொன்பது பெயர்கள் உள்ளன. (அவற்றில் ஒன்றான) ‘துல் ஜலால்’ என்பதற்கு ‘மகத்துவ மிக்கவன்’ என்பது பொருள். (மற்றொரு பெயரான) ‘அல்பர்ரு’ (உபகாரி) என்பதற்கு ‘மென்மையானவன்’ (அல்லது ‘அருளாளன்’) என்பது பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
7392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண் ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான- பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.27

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸா’ எனும் சொல்லுக்கு ‘மனனமிடல்’ என்பது பொருள்.

அத்தியாயம் : 97