7266. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ،. وَحَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يُقْعِدُنِي عَلَى سَرِيرِهِ فَقَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ الْوَفْدُ "". قَالُوا رَبِيعَةُ. قَالَ "" مَرْحَبًا بِالْوَفْدِ وَالْقَوْمِ، غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارَ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ نَدْخُلُ بِهِ الْجَنَّةَ، وَنُخْبِرُ بِهِ مَنْ وَرَاءَنَا فَسَأَلُوا عَنِ الأَشْرِبَةِ، فَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ وَأَمَرَهُمْ بِأَرْبَعٍ أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ قَالَ "" هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ ـ وَأَظُنُّ فِيهِ ـ صِيَامُ رَمَضَانَ، وَتُؤْتُوا مِنَ الْمَغَانِمِ الْخُمُسَ "". وَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ، وَالنَّقِيرِ، وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ. قَالَ "" احْفَظُوهُنَّ، وَأَبْلِغُوهُنَّ مَنْ وَرَاءَكُمْ "".
பாடம்: 5 நபி (ஸல்) அவர்கள் அரபு தூதுக்குழுக்களிடம், “உங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்கு எடுத்துரையுங்கள்” என்று உபதேசம் செய்தது இது தொடர்பாக மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.24
7266. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைக் கட்டிலின் மீது (தம்முடன்) அமரச்செய்து (தாம் கூறும் ஹதீஸ்களை மக்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுமாறு சொல்லி) வந்தார்கள். (ஒருமுறை பின்வருமாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, “தூதுக்குழுவினர் யார்?” என்று நபியவர்கள் கேட்க, “(நாங்கள்) ‘ரபீஆ’ குலத்தார்” என்று தூதுக்குழுவினர் பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற் குள்ளாகாமலும் வருகைபுரிந்த ‘தூதுக் குழுவினரே!’ அல்லது ‘சமூகத்தாரே!’ வருக” என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.

அப்போது அக்குழுவினர் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்க ளுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். ஆகவே, எந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் போன)வர்களுக்குத் தெரிவிக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் குடிபானங்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.

ஆகவே, அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “இறைநம்பிக்கை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அத்தூதுக் குழுவினர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறுவதுதான் (இறைநம்பிக்கை என்பது)” என்று கூறினார்கள்.2. தொழுகையை நிலை நிறுத்துவது.3. ஸகாத் வழங்குவது. -ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது என்றும் அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்-4. போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் (அரசு கருவூலத்திற்குச்) செலுத்துவது.

(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், “இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போரிடம் இதைத் தெரிவித்துவிடுங்கள்” என்றும் கூறினார்கள்.25

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 95
7267. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا قَالَ كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِمْ سَعْدٌ فَذَهَبُوا يَأْكُلُونَ مِنْ لَحْمٍ، فَنَادَتْهُمُ امْرَأَةٌ مِنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُ لَحْمُ ضَبٍّ فَأَمْسَكُوا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُوا ـ أَوِ اطْعَمُوا ـ فَإِنَّهُ حَلاَلٌ ـ أَوْ قَالَ لاَ بَأْسَ بِهِ. شَكَّ فِيهِ ـ وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي "".
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7267. தவ்பா பின் கைசான் அல்அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பிறர் சொல்லக் கேட்டு நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து (ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை:

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’ -அறிவிப்பாளர் தவ்பா (ரஹ்) அவர்கள் இந்த இடத்தில் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்- ஆயினும், அது என் (பரிச்சயமான) உணவு அல்ல” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 95

7268. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ، وَغَيْرِهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الْيَهُودِ لِعُمَرَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَوْ أَنَّ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ { الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا} لاَتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ أَىَّ يَوْمٍ نَزَلَتْ هَذِهِ الآيَةُ، نَزَلَتْ يَوْمَ عَرَفَةَ فِي يَوْمِ جُمُعَةٍ. سَمِعَ سُفْيَانُ مِنْ مِسْعَرٍ وَمِسْعَرٌ قَيْسًا وَقَيْسٌ طَارِقًا.
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7268. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களது மார்க் கத்தை உங்களுக்காக நான் முழுமை யாக்கிவிட்டேன். எனது அருட்கொடை யையும் உங்கள்மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக் காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்’ எனும் இந்த (5:3ஆவது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று சொன்னார்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை நான் நன்கறிவேன். இது அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாள் வெள்ளிக் கிழமையன்று அருளப்பெற்றது” என்று சொன்னார்கள்.2

அத்தியாயம் : 96
7269. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ الْغَدَ، حِينَ بَايَعَ الْمُسْلِمُونَ أَبَا بَكْرٍ، وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ أَمَّا بَعْدُ فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صلى الله عليه وسلم الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ، وَهَذَا الْكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ.
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7269. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்பாக ஓரிறை உறுதி மொழியைக் கூறினார்கள்.

பிறகு “இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின் (கூறுகின்றேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக் கொண்டு உங்கள் தூதரை வழிநடத்தினானோ அதை நீங்கள் பற்றிக்கொள்ளுங்கள்; நல்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நல்வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்” என்று சொன்னார்கள்.3

அத்தியாயம் : 96
7270. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ "" اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ "".
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7270. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக்கொண்டு, “இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக் கொடுப்பாயாக” என்று சொன்னார்கள்.4

அத்தியாயம் : 96
7271. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ عَوْفًا، أَنَّ أَبَا الْمِنْهَالِ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا بَرْزَةَ، قَالَ إِنَّ اللَّهَ يُغْنِيكُمْ أَوْ نَغَشَكُمْ بِالإِسْلاَمِ وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم. قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَعَ هَاهُنَا يُغْنِيكُمْ وَإِنَّمَا هُوَ نَعَشَكُمْ يُنْظَرُ فِي أَصْلِ كِتَابِ الِاعْتِصَامِ.
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7271. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் வாயிலாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாயிலாகவும் ‘தன்னிறைவு கொள்ளச்செய்தான்’ அல்லது ‘உயர் வாக்கினான்’.5

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்: இவ்விடத்தில் ‘தன்னிறைவு கொள்ளச்செய்தான்’ என்றே இடம்பெற் றுள்ளது. ஆனால், ‘உயர்வாக்கினான்’ என்றே இருக்க வேண்டும். இதே தலைப்பி லுள்ள எனது தனி நூலின் மூலத்தில் காண்க.

அத்தியாயம் : 96
7272. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ، وَأُقِرُّ لَكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ، فِيمَا اسْتَطَعْتُ.
பாடம்: 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)
7272. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து (பின்வருமாறு) எழுதினார்கள்: நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறைப்படியும் என்னால் இயன்ற வரை உங்கள் கட்டளைகளைச் செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.6

அத்தியாயம் : 96
7273. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ تَلْغَثُونَهَا أَوْ تَرْغَثُونَهَا، أَوْ كَلِمَةً تُشْبِهُهَا.
பாடம்: 1 “நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பட்டு அனுப்பப்பெற்றுள் ளேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது7
7273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பெற்று அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. (நேற்றிரவு) நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்), பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல் கள் கொண்டுவரப்பட்டு எனது கையில் வைக்கப்பெற்றதை நான் கண்டேன்.

இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள்; நீங்கள் அவற்றை இயன்றவாறெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்” அல்லது “நீங்கள் அவற்றைப் பருகிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று, அல்லது அதைப் போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்.8

அத்தியாயம் : 96
7274. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلاَّ أُعْطِيَ مِنَ الآيَاتِ مَا مِثْلُهُ أُومِنَ ـ أَوْ آمَنَ ـ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَىَّ، فَأَرْجُو أَنِّي أَكْثَرُهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம்: 1 “நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பட்டு அனுப்பப்பெற்றுள் ளேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது7
7274. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் ‘நம்பியே ஆகவேண்டிய’ அல்லது ‘பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய’ நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

அத்தியாயம் : 96
7275. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَلَسْتُ إِلَى شَيْبَةَ فِي هَذَا الْمَسْجِدِ قَالَ جَلَسَ إِلَىَّ عُمَرُ فِي مَجْلِسِكَ هَذَا فَقَالَ هَمَمْتُ أَنْ لاَ أَدَعَ فِيهَا صَفْرَاءَ وَلاَ بَيْضَاءَ إِلاَّ قَسَمْتُهَا بَيْنَ الْمُسْلِمِينَ. قُلْتُ مَا أَنْتَ بِفَاعِلٍ. قَالَ لِمَ. قُلْتُ لَمْ يَفْعَلْهُ صَاحِبَاكَ قَالَ هُمَا الْمَرْآنِ يُقْتَدَى بِهِمَا.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7275. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த (புனித கஅபா) பள்ளிவாசலில் நான் ஷைபா பின் உஸ்மான் (ரஹ்) அவர்களின் அருகில் அமர்ந்தேன். அவர்கள் சொன்னார்கள்: உமர் (ரலி) அவர்கள் என்னுடன் நீங்கள் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது அவர்கள், “நான் தங்கம் மற்றும் வெள்ளி எதையும் மக்களிடையே பங்கிடாமல் கஅபாவில் விட்டுவைக்கலாகாது என விரும்பினேன்” என்று கூறினார்கள். நான், “உங்களால் அப்படிச் செய்ய முடியாது” என்று கூறினேன். அவர்கள், “ஏன் முடியாது?” என்று கேட்டார்கள்.

நான், “உங்கள் தோழர்கள் (நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகிய) இருவரும் அப்படிச் செய்யவில்லையே” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “அவ்விருவரும் பின்பற்றப்பட வேண்டியவர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 96
7276. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَأَلْتُ الأَعْمَشَ فَقَالَ عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، سَمِعْتُ حُذَيْفَةَ، يَقُولُ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَّ الأَمَانَةَ نَزَلَتْ مِنَ السَّمَاءِ فِي جَذْرِ قُلُوبِ الرِّجَالِ، وَنَزَلَ الْقُرْآنُ فَقَرَءُوا الْقُرْآنَ وَعَلِمُوا مِنَ السُّنَّةِ "".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (‘அமானத்’ எனும்) நம்பகத் தன்மை வானிலிருந்து வந்து இடம்பிடித்தது. (அதற்கேற்ப) குர்ஆனும் அருளப்பெற்றது. குர்ஆனை மக்கள் படித்தார்கள். (அதிலிருந்தும் அதை அறிந்துகொண்டார்கள்.) மேலும், எனது வழிமுறையிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

அத்தியாயம் : 96
7277. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعْتُ مُرَّةَ الْهَمْدَانِيَّ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا، وَإِنَّ مَا تُوعَدُونَ لآتٍ، وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7277. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.11

இதை முர்ரா அல்ஹம்தானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 96
7278. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، قَالاَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ ".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7278. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகி யோர் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக் கைக் கொண்டுவந்த இருவரிடம்) “உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.12

அத்தியாயம் : 96
7280. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ "" مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى "".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7280. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 96
7281. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ، أَخْبَرَنَا يَزِيدُ، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ ـ وَأَثْنَى عَلَيْهِ ـ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، حَدَّثَنَا أَوْ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ جَاءَتْ مَلاَئِكَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ. فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلاً فَاضْرِبُوا لَهُ مَثَلاً. فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ. فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا، وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا، فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ، وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ. فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ. فَقَالُوا فَالدَّارُ الْجَنَّةُ، وَالدَّاعِي مُحَمَّدٌ صلى الله عليه وسلم فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَى مُحَمَّدًا صلى الله عليه وسلم فَقَدْ عَصَى اللَّهَ، وَمُحَمَّدٌ صلى الله عليه وسلم فَرْقٌ بَيْنَ النَّاسِ. تَابَعَهُ قُتَيْبَةُ عَنْ لَيْثٍ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ جَابِرٍ، خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7281. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் “இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்றார். அதற்கு மற்றொருவர் “கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்று கூறினார். பின்னர் அவர்கள் “உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்றார். மற்றொருவர் “கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது” என்றார்.

பின்னர் அவர்கள், “இவரது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பி னார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண் டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவு மில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள், “இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்” என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் “இவர் உறங்குகிறாரே!” என்று சொல்ல, மற்றொருவர் “கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து “அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர்- கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்” என்று விளக்கமளித் தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள், “(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறிவந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)” என்று கூறியுள்ளார்கள்.

அத்தியாயம் : 96
7282. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ يَا مَعْشَرَ الْقُرَّاءِ اسْتَقِيمُوا فَقَدْ سُبِقْتُمْ سَبْقًا بَعِيدًا فَإِنْ أَخَذْتُمْ يَمِينًا وَشِمَالاً، لَقَدْ ضَلَلْتُمْ ضَلاَلاً بَعِيدًا.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7282. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இறைவேதத்தை(யும் நபிவழியையும்) கற்றறிந்த மக்களே! நீங்கள் (அதில்) உறுதியோடு இருங்கள். அவ்வாறு இருந் தால் நீங்கள் (எல்லா வகையிலும்) அதிக மாக முன்னுக்குக் கொண்டுசெல்லப்படு வீர்கள். (அந்த நேர்பாதையை விடுத்து) வலப் பக்கமோ இடப் பக்கமோ (திசை மாறிச்) சென்றீர்களானால், வெகுதூரம் வழிதவறிச் சென்றுவிடுவீர்கள்.

இதை ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 96
7283. حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا مَثَلِي وَمَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمًا فَقَالَ يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَىَّ، وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ فَالنَّجَاءَ. فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَأَدْلَجُوا، فَانْطَلَقُوا عَلَى مَهَلِهِمْ فَنَجَوْا، وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ، فَصَبَّحَهُمُ الْجَيْشُ، فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ، فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي، فَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ، وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ بِمَا جِئْتُ بِهِ مِنَ الْحَقِّ "".
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7283. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று, “நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடிவந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர்; தமது இடத்திலேயே தங்கிவிட்டனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.

இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13

அத்தியாயம் : 96
7284. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ قَالَ عُمَرُ لأَبِي بَكْرٍ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. فَمَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ، إِلاَّ بِحَقِّهِ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ ". فَقَالَ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالاً كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ. فَقَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ رَأَيْتُ اللَّهَ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ. قَالَ ابْنُ بُكَيْرٍ وَعَبْدُ اللَّهِ عَنِ اللَّيْثِ عَنَاقًا. وَهْوَ أَصَحُّ.
பாடம்: 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (வாழ்வும் வாக்குமான) நடைமுறைகளை ஏற்று நடப்பது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவா!) எங்களை இறையச்ச முடையோருக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக! (என்று அந்த நல்லடியார்கள் கூறுவார்கள்) (25:74) அதாவது நாங்கள் எங்களுக்குமுன் இருந்த (நல்ல)வர்களைப் பின்பற்றியும், எங்களுக்குப் பின்வருவோர் எங்களைப் பின்பற்றியும் நடக்கின்ற சான்றோர்களாக எங்களை ஆக்கிடுவாயாக! இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகின்றேன்: 1. இந்த நபிவழியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். 2. இந்த குர்ஆனை அவர்கள் விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்களிடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும். 3. மக்கள் விஷயத்தில் நன்மை அல்லாததைக் கைவிட்டுவிட வேண்டும்.
7284. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப்பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபியரில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்கள்மீது போர் தொடுக்கப்போவதாக அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.)

அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சொல்லும்வரை மக்களுடன் போர் புரியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தனது செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறியுள்ளார்களே!” எனக் கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகை யையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர்புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர்புரிவேன்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்கள்மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், (கயிறு என்பதற்குப் பதிலாக) ‘ஒட்டகக் குட்டி’ என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14

அத்தியாயம் : 96