6772. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ وَهْوَ مُؤْمِنٌ "". وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ، إِلاَّ النُّهْبَةَ.
பாடம் தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2 பாடம்: 1 விபசாரமும் குடியும் (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் விபசாரம் புரியும்போது, இறைநம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3
6772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான்.

(மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளை யடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்க மாட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில் ‘கொள்ளையடிப்பது’ பற்றிக் கூறப்படவில்லை.

அத்தியாயம் : 86
6773. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ح حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
பாடம்: 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை5
6773. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்சமட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 86
6774. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوْ بِابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ بِالْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ. قَالَ فَضَرَبُوهُ، فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ.
பாடம்: 3 வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது
6774. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குடி போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6

அத்தியாயம் : 86
6775. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِنُعَيْمَانَ أَوْ بِابْنِ نُعَيْمَانَ وَهْوَ سَكْرَانُ فَشَقَّ عَلَيْهِ، وَأَمَرَ مَنْ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ، فَضَرَبُوهُ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَكُنْتُ فِيمَنْ ضَرَبَهُ.
பாடம்: 4 பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6775. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள் (மிகவும்) வேதனைப் பட்டார்கள். மேலும், அவரை அடிக்குமாறு வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட் டார்கள். ஆகவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.


அத்தியாயம் : 86
6776. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
பாடம்: 4 பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6776. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.


அத்தியாயம் : 86
6777. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَدْ شَرِبَ قَالَ "" اضْرِبُوهُ "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ أَخْزَاكَ اللَّهُ. قَالَ "" لاَ تَقُولُوا هَكَذَا لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ "".
பாடம்: 4 பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள், “இவரை அடியுங்கள்” என்று சொன்னார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப் பட்ட) தமது துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!” என்று கூறி (சாபமிட்ட)னர். நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்குத் துணைபோகாதீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 86
6778. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، سَمِعْتُ عُمَيْرَ بْنَ سَعِيدٍ النَّخَعِيَّ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا كُنْتُ لأُقِيمَ حَدًّا عَلَى أَحَدٍ فَيَمُوتَ، فَأَجِدَ فِي نَفْسِي، إِلاَّ صَاحِبَ الْخَمْرِ، فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسُنَّهُ.
பாடம்: 4 பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6778. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண் டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்துபோனால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக் குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.


அத்தியாயம் : 86
6779. حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُعَيْدِ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنَّا نُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلاَفَةِ عُمَرَ، فَنَقُومُ إِلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا، حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ، فَجَلَدَ أَرْبَعِينَ، حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ.
பாடம்: 4 பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6779. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சியிலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம்.

உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந் தும் விஷயத்தில்) மக்கள் எல்லைமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது, (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.

அத்தியாயம் : 86
6780. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ جَلَدَهُ فِي الشَّرَابِ، فَأُتِيَ بِهِ يَوْمًا فَأَمَرَ بِهِ فَجُلِدَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُمَّ الْعَنْهُ مَا أَكْثَرَ مَا يُؤْتَى بِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ "".
பாடம்: 5 குடிகாரனைச் சபிப்பது வெறுக் கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி யவன் அல்லன்.
6780. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப் பெயரில் அழைக் கப்பட்டுவந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரை அடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார்.

அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், “இறைவா! இவர்மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டுவரப்பட்டுள்ளார்!” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 86
6781. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا ابْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَكْرَانَ، فَأَمَرَ بِضَرْبِهِ، فَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِيَدِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِنَعْلِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ رَجُلٌ مَالَهُ أَخْزَاهُ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَكُونُوا عَوْنَ الشَّيْطَانِ عَلَى أَخِيكُمْ "".
பாடம்: 5 குடிகாரனைச் சபிப்பது வெறுக் கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறி யவன் அல்லன்.
6781. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

போதையிலிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்கு மாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப் பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒரு மனிதர் (அவரைப் பார்த்து), “அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவியாளர்களாக ஆகி விடாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 86
6782. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ "".
பாடம்: 6 திருடன் திருடுகின்றபோது...
6782. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரிகின்றபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கை யாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான்.7

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 86
6783. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ "". قَالَ الأَعْمَشُ كَانُوا يَرَوْنَ أَنَّهُ بَيْضُ الْحَدِيدِ، وَالْحَبْلُ كَانُوا يَرَوْنَ أَنَّهُ مِنْهَا مَا يَسْوَى دَرَاهِمَ.
பாடம்: 7 திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்8
6783. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் சாபம் திருடன்மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனது கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடு கிறான்; அதனாலும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்:

‘தலைக்கவசம்’ என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும், ‘கயிறு’ என்பது ஒரு சில திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

அத்தியாயம் : 86
6784. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ فَقَالَ "" بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا "". وَقَرَأَ هَذِهِ الآيَةَ كُلَّهَا "" فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ بِهِ، فَهْوَ كَفَّارَتُهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَسَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ "".
பாடம்: 8 தண்டனைகள் (குற்றங்களுக்கான) பரிகாரமாகும்.
6784. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், “அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிப்பதில்லை; திருடுவ தில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்” என்று கூறி, இது தொடர்பான (60:12ஆவது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள்.

மேலும், “இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையே னும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்” என்று சொன்னார்கள்.9

அத்தியாயம் : 86
6785. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، سَمِعْتُ أَبِي قَالَ عَبْدُ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ "" أَلاَ أَىُّ شَهْرٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً "". قَالُوا أَلاَ شَهْرُنَا هَذَا. قَالَ "" أَلاَ أَىُّ بَلَدٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً "". قَالُوا أَلاَ بَلَدُنَا هَذَا. قَالَ "" أَلاَ أَىُّ يَوْمٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً "". قَالُوا أَلاَ يَوْمُنَا هَذَا. قَالَ "" فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ حَرَّمَ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، إِلاَّ بِحَقِّهَا، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ "". ـ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يُجِيبُونَهُ أَلاَ نَعَمْ ـ قَالَ "" وَيْحَكُمْ ـ أَوْ وَيْلَكُمْ ـ لاَ تَرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ "".
பாடம்: 9 ஓர் இறைநம்பிக்கையாளர் குற்றவியல் தண்டனைக்காகவோ (மனித) உரிமை (மீறலு)க்காவோ தவிர, (வேறு எந்தக் காரணங்களுக்காவும் வேதனை செய்யப்படுவதிலிருந்து) காக்கப்பட வேண்டும்.
6785. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹிஜ்ஜா) மாதம்தான்” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (‘மக்கா’)தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாள்தான்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றை அல்லாஹ் புனித மாக்கியுள்ளான்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் மக்கள், “ஆம்” என்று நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்தனர். பிறகு, “‘உங்களுக்கு அழிவுதான்’ அல்லது ‘உங்களுக்குக் கேடுதான்’! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக நீங்கள் மாறிவிட வேண்டாம்” என்று சொன்னார்கள்.10

அத்தியாயம் : 86
6786. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا خُيِّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ اخْتَارَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَأْثَمْ، فَإِذَا كَانَ الإِثْمُ كَانَ أَبْعَدَهُمَا مِنْهُ، وَاللَّهِ مَا انْتَقَمَ لِنَفْسِهِ فِي شَىْءٍ يُؤْتَى إِلَيْهِ قَطُّ، حَتَّى تُنْتَهَكَ حُرُمَاتُ اللَّهِ، فَيَنْتَقِمُ لِلَّهِ.
பாடம்: 10 குற்றவியல் தண்டனைகளை நிலைநாட்டுவதும், இறைவனின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது நடவடிக்கை எடுப்பதும்
6786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும்பட்சத்தில்- எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகுதொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!11

அத்தியாயம் : 86
6787. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُسَامَةَ، كَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي امْرَأَةٍ فَقَالَ "" إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا يُقِيمُونَ الْحَدَّ عَلَى الْوَضِيعِ، وَيَتْرُكُونَ الشَّرِيفَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ فَاطِمَةُ فَعَلَتْ ذَلِكَ لَقَطَعْتُ يَدَهَا "".
பாடம்: 11 உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனை வர்மீதும் தண்டனையை நடை முறைப்படுத்துவது
6787. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்கள்மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். அதனால்தான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று சொன்னார்கள்.12

அத்தியாயம் : 86
6788. حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ قُرَيْشًا، أَهَمَّتْهُمُ الْمَرْأَةُ الْمَخْزُومِيَّةُ الَّتِي سَرَقَتْ فَقَالُوا مَنْ يُكَلِّمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ حِبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "". ثُمَّ قَامَ فَخَطَبَ قَالَ "" يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا ضَلَّ مَنْ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَهَا "".
பாடம்: 12 ஆட்சியாளரிடம் வழக்கு சென்றுவிட்டால் தண்டனை (யைக் கைவிடுவது) தொடர் பாகப் பரிந்துரைப்பது வெறுக்கப் பட்டதாகும்.
6788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?” என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப்போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர் களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறைப் படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரது கையைத் துண்டித்தே இருப்பார்.

அத்தியாயம் : 86
6789. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تُقْطَعُ الْيَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا "". تَابَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ.
பாடம்: 13 “திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்” எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்14 அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற்காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15 திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண் டிக்கப்பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள், “அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது)” என்று கூறினார்கள்.
6789. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

கால் தீனார் (பொற்காசு), அல்லது அதற்குமேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 86
6790. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ "".
பாடம்: 13 “திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்” எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்14 அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற்காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15 திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண் டிக்கப்பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள், “அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது)” என்று கூறினார்கள்.
6790. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால் தீனாரை (பொற்காசு) திருடிய வரின் கை வெட்டப்படும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 86
6791. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يُقْطَعُ فِي رُبُعِ دِينَارٍ "".
பாடம்: 13 “திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்” எனும் (5:38ஆவது) வசனத்தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்14 அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற்காக) முன்கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15 திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தை விட்டுவிட்டு) இடக் கரம் துண் டிக்கப்பட்டது. இது குறித்து கத்தாதா (ரஹ்) அவர்கள், “அவ்வளவுதான். (இனி வலக் கரம் துண்டிக்கப்படாது)” என்று கூறினார்கள்.
6791. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால் தீனாருக்காக (பொற்காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப் படும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 86