6758. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَيْتُ بَرِيرَةَ فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْطَى الْوَرِقَ "". قَالَتْ فَأَعْتَقْتُهَا ـ قَالَتْ ـ فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا فَقَالَتْ لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا بِتُّ عِنْدَهُ. فَاخْتَارَتْ نَفْسَهَا.
பாடம்: 22
ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?)
(இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு” என்றுதான் கூறினார்கள்.45
நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்.
(புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
6758. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது” என்று சொன்னார்கள். ஆகவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, “அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46
அத்தியாயம் : 86

6759. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَرَادَتْ عَائِشَةُ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَقَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُمْ يَشْتَرِطُونَ الْوَلاَءَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம்: 23
(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6759. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவளை வாங்கி (விடுதலை செய்து)விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது” என்று சொன்னார்கள்.

6760. حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْطَى الْوَرِقَ، وَوَلِيَ النِّعْمَةَ "".
பாடம்: 23
(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6760. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6761. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ، وَقَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ "". أَوْ كَمَا قَالَ.
பாடம்: 24
ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர் களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!
6761. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே’ என்றோ, அல்லது ‘இதைப் போன்றோ’ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.47

6762.
பாடம்: 24
ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர் களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!
6762. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன், ‘அவர்களில் உள்ளவன்’ அல்லது ‘அவர் களிலேயே உள்ளவன்’ ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.48
அத்தியாயம் :

6763. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلاًّ فَإِلَيْنَا "".
பாடம்: 25
(எதிரிகளால்) சிறைபிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை49
(பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்துவந்தார்கள். மேலும், “(மற்றவர்களைவிட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை” என்று கூறுவார்கள்.
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத் தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடவடிக்கைகள் ஆகிய வற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும் வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில், தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.
6763. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அது அவருடைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களை விட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எமது பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50

6764. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ، وَلاَ الْكَافِرُ الْمُسْلِمَ "".
பாடம்: 26
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்óமுக்கோ வாரிசாகமாட்டார்.51
(முஸ்லிமான தந்தை இறந்தபோது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்ó மானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52
6764. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53

6765. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتِ اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلاَمٍ فَقَالَ سَعْدٌ هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ، انْظُرْ إِلَى شَبَهِهِ. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ فَقَالَ "" هُوَ لَكَ يَا عَبْدُ، الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ "". قَالَتْ فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ.
பாடம்: 27
கிறித்தவ அடிமை மற்றும் விடுதலை ஆவணம் அளிக்கப் பட்ட (முகாதப்) கிறித்தவ அடிமை ஆகியோருக்கு வாரிசாகும் உரிமை யாருக்கு உண்டு என்பது பற்றியும், (தமக்குப் பிறந்த குழந்தையை) தம்முடையதல்ல என்று மறுப்பவருக்குரிய பாவம் பற்றியும்54
பாடம்: 28
(ஒருவர் மற்றொருவரை) சகோதரன் என்றோ சகோதரன் மகன் என்றோ வாதிடுவது
6765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) தொடர்பாகச் சர்ச்சையிட்டுக்கொண்டனர். சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரர் உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் மகன். இவன் தம்முடைய மகன் (ஆகவே, இவனைப் பிடித்துவர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்!” என்று கூறினார்கள்.
அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். என் தந்தையின் படுக்கையில் அவருடைய அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்” என்று சொன்னார்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவனின் சாயலைப் பார்த்தார்கள். உத்பாவின் சாயல் வெளிப்படையாக அமைந்திருக்கக் கண்டார்கள்.
இருப்பினும், “அப்த் பின் ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது” என்று கூறிவிட்டு(த் தம் துணைவியாரிடம்), “சவ்தா பின்த் ஸம்ஆவே! இவனிடமிருந்து உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள்.
அதற்குப் பிறகு அந்த மனிதர் சவ்தா (ரலி) அவர்களை (நேரடியாகப்) பார்க்க வில்லை.55

6766. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ـ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهْوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ ".
பாடம்: 29
வேறொருவரை தன் தந்தை என வாதிடுகின்றவன்56
6766. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“யார் தம் தந்தை அல்லாத ஒருவரை -அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்துகொண்டே- தந்தை என்று வாதிடுகிறாரோ அவர்மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.

6767. فَذَكَرْتُهُ لأَبِي بَكْرَةَ فَقَالَ وَأَنَا سَمِعَتْهُ أُذُنَاىَ، وَوَعَاهُ، قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 29
வேறொருவரை தன் தந்தை என வாதிடுகின்றவன்56
6767. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப் போது அவர்கள், “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியுற்றன; என் இதயம் மனனமிட்டுக்கொண்டது” என்று சொன்னார்கள்.

6768. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ "".
பாடம்: 29
வேறொருவரை தன் தந்தை என வாதிடுகின்றவன்56
6768. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி)விடுகிறாரோ அவர் நன்றி கொன்றவராவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.57

6769. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا فَقَالَتْ لِصَاحِبَتِهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. وَقَالَتِ الأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ. فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ فَأَخْبَرَتَاهُ فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا. فَقَالَتِ الصُّغْرَى لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ. هُوَ ابْنُهَا. فَقَضَى بِهِ لِلصُّغْرَى "". قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلاَّ يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلاَّ الْمُدْيَةَ.
பாடம்: 30
ஒரு பெண் தன் மகன் என (ஒருவனை) வாதிட்டால்...
6769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் (அலை) அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய புதல்வர் களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டுசென்று விட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று கூற, அதற்கு மற்றவள், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டுசென்றுவிட்டது” என்று சொன்னாள். ஆகவே, இருவரும் தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள்.
தாவூத் (அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள்.
அப்போது சுலைமான் (அலை) அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டுவாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு)விடுகின்றேன்” என்று கூறினார்கள். உடனே இளையவள், “அவ்வாறு செய்துவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் அவளுடைய மகன்தான்” என்று (பதறிப்போய்) கூறினாள். ஆகவே, சுலைமான் (அலை) அவர்கள், ‘அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) ‘சிக்கீன்’ எனும் சொல்லை (நபியவர்களின் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா’ என்னும் சொல்லைத்தான் நாங்கள் பயன்படுத்திவந்தோம்” என்று கூறினார்கள்.58

6770. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَىَّ مَسْرُورًا تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ فَقَالَ "" أَلَمْ تَرَىْ أَنَّ مُجَزِّزًا نَظَرَ آنِفًا إِلَى زَيْدِ بْنِ حَارِثَةَ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، فَقَالَ إِنَّ هَذِهِ الأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ "".
பாடம்: 31
அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்
6770. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நெற்றிக்கோடுகள் மின்னும்வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, “உனக்குத் தெரியுமா? சற்றுமுன் (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை- பிள்ளையைக் கண்டறி யும்) முஜஸ்ஸிஸ், (என் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸாவையும் (அவருடைய புதல்வர்) உசாமா பின் ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பாதங்களைப்) பார்த்துவிட்டு, ‘இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது’ என்று சொன்னார்” என்றார்கள்.59

6771. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ وَهْوَ مَسْرُورٌ فَقَالَ "" يَا عَائِشَةُ أَلَمْ تَرَىْ أَنَّ مُجَزِّزًا الْمُدْلِجِيَّ دَخَلَ فَرَأَى أُسَامَةَ وَزَيْدًا وَعَلَيْهِمَا قَطِيفَةٌ، قَدْ غَطَّيَا رُءُوسَهُمَا وَبَدَتْ أَقْدَامُهُمَا، فَقَالَ إِنَّ هَذِهِ الأَقْدَامَ بَعْضُهَا مِنْ بَعْضٍ "".
பாடம்: 31
அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்
6771. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, “ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவருடைய தந்தை) ஸைதும் ஒரு துணியைப் போர்த்தி(க்கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தமது தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதங்கள் வெளியே தெரிந்தன.
அப்போது முஜஸ்ஸிஸ் ‘இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை’ என்று சொன்னார்” என்றார்கள்.60

குற்றவியல் தண்டனைகள்
6772. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ وَهْوَ مُؤْمِنٌ "". وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ، إِلاَّ النُّهْبَةَ.
பாடம்
தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2
பாடம்: 1
விபசாரமும் குடியும்
(நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் விபசாரம் புரியும்போது, இறைநம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3
6772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான்.
(மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளை யடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொள்ளையடிக்க மாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு தொடர்களில் ‘கொள்ளையடிப்பது’ பற்றிக் கூறப்படவில்லை.

6773. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ح حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
பாடம்: 2
மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை5
6773. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்சமட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6774. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوْ بِابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ بِالْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ. قَالَ فَضَرَبُوهُ، فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ.
பாடம்: 3
வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது
6774. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குடி போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6

6775. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِنُعَيْمَانَ أَوْ بِابْنِ نُعَيْمَانَ وَهْوَ سَكْرَانُ فَشَقَّ عَلَيْهِ، وَأَمَرَ مَنْ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ، فَضَرَبُوهُ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَكُنْتُ فِيمَنْ ضَرَبَهُ.
பாடம்: 4
பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6775. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள் (மிகவும்) வேதனைப் பட்டார்கள். மேலும், அவரை அடிக்குமாறு வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட் டார்கள். ஆகவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.

6776. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ.
பாடம்: 4
பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6776. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.

6777. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَدْ شَرِبَ قَالَ "" اضْرِبُوهُ "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ أَخْزَاكَ اللَّهُ. قَالَ "" لاَ تَقُولُوا هَكَذَا لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ "".
பாடம்: 4
பேரீச்சமட்டையாலும் காலணி யாலும் (குடிகாரரை) அடித்தல்
6777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்கள், “இவரை அடியுங்கள்” என்று சொன்னார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப் பட்ட) தமது துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!” என்று கூறி (சாபமிட்ட)னர். நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்குத் துணைபோகாதீர்கள்” என்று சொன்னார்கள்.