6740. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ. ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قَضَى عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا "".
பாடம்: 11
(இறந்தவருக்குக்) குழந்தை உள்ளிட்ட வாரிசுகள் இருக்கும்போது மனைவி, (அல்லது) கணவனுக்குக் கிடைக்கும் சொத்துரிமை
6740. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் (வயிற்றிóருந்த) சிசு, (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்கிட வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டார்.
ஆகவே, (அவர் சார்பாக) அவருடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபாக்கள்) இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும், அவரது சொத்து அவருடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.24
அத்தியாயம் : 86

6741. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَضَى فِينَا مُعَاذُ بْنُ جَبَلٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النِّصْفُ لِلاِبْنَةِ وَالنِّصْفُ لِلأُخْتِ. ثُمَّ قَالَ سُلَيْمَانُ قَضَى فِينَا. وَلَمْ يَذْكُرْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம்: 12
(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும்போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை25
6741. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் (யமன் நாட்டுக்கு வந்த) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “(சொத்தில்) பாதி (இறந்தவரின்) மகளுக் கும் (மீதிப்) பாதி சகோதரிக்கும் உரியது” என்று தீர்ப்பளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எங்களிடையே (மேற்கண்டவாறு) தீர்ப்பளித்தார்கள்” என்று காணப்படுகிறது. ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில்’ என்ற குறிப்பு இடம்பெறவில்லை.26

6742. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ لأَقْضِيَنَّ فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِلاِبْنَةِ النِّصْفُ، وَلاِبْنَةِ الاِبْنِ السُّدُسُ، وَمَا بَقِيَ فَلِلأُخْتِ.
பாடம்: 12
(இறந்தவருக்குப்) புதல்வியர் இருக்கும்போது மீதியைப் பெறும் சகோதரிகளின் சொத்துரிமை25
6742. ஹுஸைல் பின் ஷுரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(மகனின் மகளுக்குக் கிடைக்க வேண்டிய) இந்தச் சொத்து விஷயத்தில் ‘நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே அளிக்கிறேன்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘‘ என்று சொல்லிவிட்டு, “(இறந்தவரின் சொத்தில்) மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும்; எஞ்சியது சகோதரிக்கு உரியதாகும்” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.27

6743. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا مَرِيضٌ، فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ نَضَحَ عَلَىَّ مِنْ وَضُوئِهِ فَأَفَقْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا لِي أَخَوَاتٌ. فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ.
பாடம்: 13
சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை28
6743. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (என்னை நலம் விசாரிப்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தாம் அங்கத் தூய்மை செய்த தண்ணீரை என் மீது தெளித்தார்கள். உடனே எனக்கு மயக்கம் தெளிந்துவிட்டது.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருக்கின்றனர். (என் சொத்துகள் யாருக்குச் சேர வேண்டும்?)” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினை தொடர்பான வசனம் அருளப்பெற்றது.29

6744. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ آيَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
பாடம்: 14
(நபியே!) உம்மிடம் (‘கலாலா’ குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். “அல்லாஹ் ‘கலாலா’ குறித்து உங்களுக்கு (இப்படி)த்தீர்ப்பளிக்கின்றான்” என்று கூறுவீராக! தமக்குக் குழந்தையே இல்லாத ஒருவர் இறக்கும்போது, அவருக்கு ஒரு சகோதரி இருந்தால், அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். (அவள் இறக்கும்போது) அவளுக்குக் குழந்தை இல்லையெனில் அவ(ளுடைய அந்தச் சகோதர)ன் அவளுக்கு வாரிசாக வருவான். அந்தச் சகோதரிகள் இருவராக இருந்தால், அவ்விருவருக்கும் அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டு பாகங்கள் கிடைக்கும். ஆண்களும் பெண்களுமாகப் பல உடன்பிறப்புகள் இருந்தால், (அவர்களில்) ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும். நீங்கள் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்கு அல்லாஹ் தெளிவுபடுத்துகின் றான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன் ஆவான். (4:176)
6744. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (பாகப் பிரிவினை தொடர்பான) வசனம், ‘அந்நிசா’ அத்தியாயத்தின் இறுதி வசனமான “(நபியே!) ‘கலாலா’ குறித்து உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்” என்று தொடங்கும் வசனமாகும்.30

6745. حَدَّثَنَا مَحْمُودٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ، فَمَنْ مَاتَ وَتَرَكَ مَالاً فَمَالُهُ لِمَوَالِي الْعَصَبَةِ، وَمَنْ تَرَكَ كَلاًّ أَوْ ضَيَاعًا، فَأَنَا وَلِيُّهُ فَلأُدْعَى لَهُ "". لكل: العيال
பாடம்: 15
(இறந்துபோன ஒரு பெண்ணுக்குத்) தந்தையின் சகோதரர் புதல்வர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் (அவளுடைய) தாய்வழிச் சகோதரர் ஆவார்; மற்றொருவர் (அவளுடைய) கணவர் ஆவார். (இவர்களிடையே அவள் விட்டுச்சென்ற சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும்?)31
“கணவருக்கு (அவளுடைய சொத்தில்) பாதியும், தாய்வழிச் சகோதரருக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும். எஞ்சியிருப்பது அவர்கள் இருவரிடையே சரி பாதியாகப் பங்கிடப்படும்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.32
6745. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, எவர் செல்வத்தை விட்டுவிட்டு இறந்தாரோ அவரது செல்வம் (அவருடைய) தந்தைவழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குரியதாகும். எவர் (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள், சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றை விட்டுச்செல்கிறாரோ அவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6746. حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ رَوْحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا تَرَكَتِ الْفَرَائِضُ فَلأَوْلَى رَجُلٍ ذَكَرٍ "".
பாடம்: 15
(இறந்துபோன ஒரு பெண்ணுக்குத்) தந்தையின் சகோதரர் புதல்வர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் ஒருவர் (அவளுடைய) தாய்வழிச் சகோதரர் ஆவார்; மற்றொருவர் (அவளுடைய) கணவர் ஆவார். (இவர்களிடையே அவள் விட்டுச்சென்ற சொத்தை எவ்வாறு பங்கிட வேண்டும்?)31
“கணவருக்கு (அவளுடைய சொத்தில்) பாதியும், தாய்வழிச் சகோதரருக்கு ஆறில் ஒரு பாகமும் கிடைக்கும். எஞ்சியிருப்பது அவர்கள் இருவரிடையே சரி பாதியாகப் பங்கிடப்படும்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.32
6746. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
(பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆன் நிர்ணயித்துள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பாகம் நிர்ணயிக்கப் பட்டவர்கள் எடுத்ததுபோக எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

6747. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ حَدَّثَكُمْ إِدْرِيسُ، حَدَّثَنَا طَلْحَةُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ} {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ} قَالَ كَانَ الْمُهَاجِرُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَرِثُ الأَنْصَارِيُّ الْمُهَاجِرِيَّ دُونَ ذَوِي رَحِمِهِ لِلأُخُوَّةِ الَّتِي آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمْ فَلَمَّا نَزَلَتْ {جَعَلْنَا مَوَالِيَ} قَالَ نَسَخَتْهَا {وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ}
பாடம்: 16
இரத்த பந்துக்கள்34
6747. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள் ளோம். நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்துவிடுங்கள்” எனும் (4:33ஆவது) வசனத்தின் விளக்கமாவது:
முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்த போது, அன்சாரி (ஒருவர் இறந்துவிட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் (தவுல் அர்ஹாம்) அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பரே) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம்.
(பின்னர்) இந்த வசனத்தின் முதல் தொடர் இறங்கியபோது, அது இரண்டாவது தொடரை மாற்றிவிட்டது.35

6748. حَدَّثَنِي يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَجُلاً، لاَعَنَ امْرَأَتَهُ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَانْتَفَى مِنْ وَلَدِهَا فَفَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا، وَأَلْحَقَ الْوَلَدَ بِالْمَرْأَةِ.
பாடம்: 17
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த பெண் (தன் பிள்ளைகளிடமிருந்து) வாரிசுரிமை பெறுவது36
6748. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தம் மனைவிக்கு எதிராக சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார். மேலும், அவர் அவளுடைய குழந்தையைத் தம்முடையதல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; குழந்தையை மனைவியிடம் சேர்த்தார் கள்.37

6749. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ عُتْبَةُ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ. فَلَمَّا كَانَ عَامَ الْفَتْحِ أَخَذَهُ سَعْدٌ فَقَالَ ابْنُ أَخِي عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَتَسَاوَقَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَىَّ فِيهِ. فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ "" احْتَجِبِي مِنْهُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ.
பாடம்: 18
பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். அவள் அடிமைப் பெண்ணாயிருப்பினும், சுதந்திரம் பெற்றவளாய் இருப்பினும் சரியே!38
6749. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண் ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். ஆகவே, அவனை நீ பிடித்துவைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந் தார். மக்கா வெற்றி ஆண்டின்போது சஅத் (ரலி) அவர்கள் அவனைப் பிடித்துக்கொண்டார்கள். மேலும், அவர்கள், “இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் இவனைக் கைப்பற்றும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று சொன்னார்கள்.
அப்போது ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள் எழுந்து, “இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரது படுக்கையில் (அதாவது அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார்கள். ஆகவே, இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரருடைய மகன். இவனைக் கைப்பற்றிக்கொள்ளும்படி என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருந்தார்” என்று கூற, ஸம்ஆவின் புதல்வர் அப்து (ரலி) அவர்கள், “(இவன்) என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன். அவரது படுக்கையில் (அவரது அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “அப்து பின் ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தில் இருக்கின்றாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியும்) ஸம்ஆவின் புதல்வி (யுமான) சவ்தா (ரலி) அவர்களிடம், “இவனிடமிருந்து நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!” என்று சொன்னார்கள். சாயலில் அவன் உத்பாவைப் போன்று இருந்ததை நபியவர்கள் பார்த்ததே இதற்குக் காரணம். அதன் பிறகு அந்த மனிதர் இறக்கும்வரை அவரை சவ்தா (ரலி) அவர்கள் பார்க்கவில்லை.39

6750. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْوَلَدُ لِصَاحِبِ الْفِرَاشِ "".
பாடம்: 18
பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். அவள் அடிமைப் பெண்ணாயிருப்பினும், சுதந்திரம் பெற்றவளாய் இருப்பினும் சரியே!38
6750. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 86
6750. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாய் (பெண்) யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 86
6751. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اشْتَرَيْتُ بَرِيرَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ "". وَأُهْدِيَ لَهَا شَاةٌ فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "". قَالَ الْحَكَمُ وَكَانَ زَوْجُهَا حُرًّا، وَقَوْلُ الْحَكَمِ مُرْسَلٌ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَأَيْتُهُ عَبْدًا.
பாடம்: 19
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி அவரை விடுதலை செய்தவருக்கே உண்டு என்பது பற்றியும், கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு வாரிசு யார் என்பது பற்றியும்40
“கண்டெடுக்கப்பட்ட குழந்தை அடிமையாகாது” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
6751. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவளை விலைக்கு வாங்கிக்கொள். ஏனெனில், (அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அந்த அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு” என்றார்கள். மேலும், பரீராவுக்கு ஓர் ஆடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த ஆடு பரீராவுக்குத் தர்மமாகும். (பரீராவிடமிருந்து) நமக்கு அது அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.41
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திரம் பெற்றவராக இருந்தார்.
ஹகம் அவர்களின் இந்த அறிவிப்பு ‘முர்சல்’ (அறிவிப்பாளர்தொடரில் நபித் தோழர் விடுபட்டது) ஆகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்” என்று சொன்னார்கள்.

6752. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம்: 19
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி அவரை விடுதலை செய்தவருக்கே உண்டு என்பது பற்றியும், கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு வாரிசு யார் என்பது பற்றியும்40
“கண்டெடுக்கப்பட்ட குழந்தை அடிமையாகாது” என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
6752. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6753. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ إِنَّ أَهْلَ الإِسْلاَمِ لا يُسَيِّبُونَ، وَإِنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يُسَيِّبُونَ.
பாடம்: 20
‘உன்மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (சாயிபா) வாரிசு யார்?42
6753. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘உன்மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின்பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை; அறியாமைக் காலத்தவர் தான் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.

6754. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ اشْتَرَتْ بَرِيرَةَ، لِتُعْتِقَهَا، وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي اشْتَرَيْتُ بَرِيرَةَ لأُعْتِقَهَا، وَإِنَّ أَهْلَهَا يَشْتَرِطُونَ وَلاَءَهَا. فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". أَوْ قَالَ "" أَعْطَى الثَّمَنَ "". قَالَ فَاشْتَرَتْهَا فَأَعْتَقَتْهَا. قَالَ وَخُيِّرَتْ فَاخْتَارَتْ نَفْسَهَا وَقَالَتْ لَوْ أُعْطِيتُ كَذَا وَكَذَا مَا كُنْتُ مَعَهُ. قَالَ الأَسْوَدُ وَكَانَ زَوْجُهَا حُرًّا. قَوْلُ الأَسْوَدِ مُنْقَطِعٌ، وَقَوْلُ ابْنِ عَبَّاسٍ رَأَيْتُهُ عَبْدًا. أَصَحُّ.
பாடம்: 20
‘உன்மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது’ என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (சாயிபா) வாரிசு யார்?42
6754. அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானர்கள் ‘பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும்’ என நிபந்தனையிட்டார்கள். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரீராவை விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு” அல்லது “விலையைக் கொடுத்துவிடு” என்று சொன்னார்கள். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். (தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தனது விருப்பத்திற்கேற்ப (தனித்து) வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டதுடன், “இவ்வளவு இவ்வளவு (செல்வம்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் நான் அவருடன் வாழமாட்டேன்” என்று சொல்லிவிட்டார்.
அறிவிப்பாளர் அஸ்வத் (ரஹ்) அவர்கள், “பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திர மனிதராக இருந்தார்” என்று சொன்னார்கள்.
(அபூஅப்தில்லாஹ் புகாரீ கூறுகிறேன்:) அஸ்வத் (ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பு ‘முன்கதிஉ’ (அறிவிப்பாளர்தொடரில் தொடர்பு அறுந்தது) ஆகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்” என்று கூறியதே சரியானதாகும்.

6755. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلاَّ كِتَابُ اللَّهِ، غَيْرَ هَذِهِ الصَّحِيفَةِ. قَالَ فَأَخْرَجَهَا فَإِذَا فِيهَا أَشْيَاءُ مِنَ الْجِرَاحَاتِ وَأَسْنَانِ الإِبِلِ. قَالَ وَفِيهَا الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ، يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلاَ عَدْلٌ.
பாடம்: 21
விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித் துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.
6755. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், “நாங்கள் ஓதிவருகின்ற அல்லாஹ்வின் வேதத் தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை” என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது:
மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலை யிóருந்து ‘ஸவ்ர்’ மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றானோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது.
தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக்கொள்ளும் அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்óம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ் நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் தர முன்வரலாம்.
ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு கூடுதலான வழிபாடு எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக்கொள்ளப்படாது.43

6756. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ.
பாடம்: 21
விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித் துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.
6756. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44

6757. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً تُعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا. فَذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ يَمْنَعُكِ ذَلِكِ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம்: 22
ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?)
(இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு” என்றுதான் கூறினார்கள்.45
நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்.
(புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
6757. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ, “பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவளை நாங்கள் உங்களுக்கு விற்கிறோம்” என்று கூறினர். ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அதற்காக) நீ விடுதலை செய்யாமல் இருந்துவிடாதே! விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது” என்று சொன்னார்கள்.

6758. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَيْتُ بَرِيرَةَ فَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْطَى الْوَرِقَ "". قَالَتْ فَأَعْتَقْتُهَا ـ قَالَتْ ـ فَدَعَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَخَيَّرَهَا مِنْ زَوْجِهَا فَقَالَتْ لَوْ أَعْطَانِي كَذَا وَكَذَا مَا بِتُّ عِنْدَهُ. فَاخْتَارَتْ نَفْسَهَا.
பாடம்: 22
ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?)
(இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு” என்றுதான் கூறினார்கள்.45
நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்.
(புகாரீயாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
6758. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது” என்று சொன்னார்கள். ஆகவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, “அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46

6759. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَرَادَتْ عَائِشَةُ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَقَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُمْ يَشْتَرِطُونَ الْوَلاَءَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம்: 23
(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6759. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவளை வாங்கி (விடுதலை செய்து)விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது” என்று சொன்னார்கள்.