6574. قَالَ عَطَاءٌ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ جَالِسٌ مَعَ أَبِي هُرَيْرَةَ، لاَ يُغَيِّرُ عَلَيْهِ شَيْئًا مِنْ حَدِيثِهِ حَتَّى انْتَهَى إِلَى قَوْلِهِ "" هَذَا لَكَ وَمِثْلُهُ مَعَهُ "". قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ "". قَالَ أَبُو هُرَيْرَةَ حَفِظْتُ "" مِثْلُهُ مَعَهُ "".
பாடம்: 52 ‘அஸ்ஸிராத்’ என்பது நரகத்தின் பாலமாகும்.146
6574. அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்ட ஹதீஸை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அறிவித்தபோது, அவர்கள்) உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறியபோதுதான், அபூசயீத் (ரலி) அவர்கள் “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதைப் போன்று இன்னொரு மடங்கு” என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 81
6575. حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6575. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 81
6576. وَحَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ، وَلَيُرْفَعَنَّ رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيُخْتَلَجُنَّ دُونِي فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ"". تَابَعَهُ عَاصِمٌ عَنْ أَبِي وَائِلٍ. وَقَالَ حُصَيْنٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 81
6577. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6577. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.151

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6578. حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، وَعَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ الْكَوْثَرُ الْخَيْرُ الْكَثِيرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ. قَالَ أَبُو بِشْرٍ قُلْتُ لِسَعِيدٍ إِنَّ أُنَاسًا يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الْجَنَّةِ. فَقَالَ سَعِيدٌ النَّهَرُ الَّذِي فِي الْجَنَّةِ مِنَ الْخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6578. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(108:1ஆவது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்” என்று தெரிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அவற்றில் ஒன்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூபிஷ்ர் ஜஅஃபர் பின் அபீவஹ்ஷிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!” என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத் திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று சொன்னார்கள்.152

அத்தியாயம் : 81
6579. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ، مَاؤُهُ أَبْيَضُ مِنَ اللَّبَنِ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ، وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ، مَنْ شَرِبَ مِنْهَا فَلاَ يَظْمَأُ أَبَدًا "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6579. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.153

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6580. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ (إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ الْيَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ).
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6581. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهَرٍ حَافَتَاهُ قِبَابُ الدُّرِّ الْمُجَوَّفِ قُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ. فَإِذَا طِينُهُ ـ أَوْ طِيبُهُ ـ مِسْكٌ أَذْفَرُ "". شَكَّ هُدْبَةُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6581. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘வாசனை’யா (தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6582. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَرِدَنَّ عَلَىَّ نَاسٌ مِنْ أَصْحَابِي الْحَوْضَ، حَتَّى عَرَفْتُهُمُ اخْتُلِجُوا دُونِي، فَأَقُولُ أَصْحَابِي. فَيَقُولُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப் படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன், “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்” என்பான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6583. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، مَنْ مَرَّ عَلَىَّ شَرِبَ، وَمَنْ شَرِبَ لَمْ يَظْمَأْ أَبَدًا، لَيَرِدَنَّ عَلَىَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6583. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள் வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6584. قَالَ أَبُو حَازِمٍ فَسَمِعَنِي النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ، فَقَالَ هَكَذَا سَمِعْتَ مِنْ، سَهْلٍ فَقُلْتُ نَعَمْ. فَقَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ لَسَمِعْتُهُ وَهْوَ يَزِيدُ فِيهَا "" فَأَقُولُ إِنَّهُمْ مِنِّي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي "". وَقَالَ ابْنُ عَبَّاسٍ سُحْقًا بُعْدًا، يُقَالُ سَحِيقٌ بَعِيدٌ، وَأَسْحَقَهُ أَبْعَدَهُ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6584. (அறிவிப்பாளர்) அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியுற்றுக் கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் “இவ்வாறுதான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக அறிவிப்பதை உறுதியாக நான் கேட்டுள்ளேன்:

“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள்.

அத்தியாயம் : 81
6585. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ الْحَبَطِيُّ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَرِدُ عَلَىَّ يَوْمَ الْقِيَامَةِ رَهْطٌ مِنْ أَصْحَابِي فَيُحَلَّئُونَ عَنِ الْحَوْضِ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6586. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ عَنْ أَصْحَابِ النَّبِيِّ، صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَرِدُ عَلَى الْحَوْضِ رِجَالٌ مِنْ أَصْحَابِي فَيُحَلَّئُونَ عَنْهُ فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي. فَيَقُولُ إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى "". وَقَالَ شُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيُجْلَوْنَ. وَقَالَ عُقَيْلٌ فَيُحَلَّئُونَ. وَقَالَ الزُّبَيْدِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத் திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான்.

இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் ஷுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்” என்றும், அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 81
6587. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ، حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ. فَقُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ. قُلْتُ وَمَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى. ثُمَّ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ. قُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ. قُلْتُ مَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمُ الْقَهْقَرَى. فَلاَ أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلاَّ مِثْلُ هَمَلِ النَّعَمِ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6587. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தின் அருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி) ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம்) “எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்றேன். அவர் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார்.

பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் “(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன்.

அவர், “இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல்போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக்கொள்வார்கள் என நான் கருதவில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6588. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6588. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது மிம்பர் (சொற்பொழிவு மேடை) எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.155

அத்தியாயம் : 81
6589. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْمَلِكَ، قَالَ سَمِعْتُ جُنْدَبًا، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" أَنَا فَرَطُكُمْ، عَلَى الْحَوْضِ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6589. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு முன்பே (‘அல் கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்.156

இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 81
6590. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ، ثُمَّ انْصَرَفَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ "" إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ ـ أَوْ مَفَاتِيحَ الأَرْضِ ـ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6590. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர் களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டி யிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்று தான் அஞ்சுகின்றேன்” என்று சொன் னார்கள்.157

அத்தியாயம் : 81
6591. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، أَنَّهُ سَمِعَ حَارِثَةَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَكَرَ الْحَوْضَ فَقَالَ "" كَمَا بَيْنَ الْمَدِينَةِ وَصَنْعَاءَ "".
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6591. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது “(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 81
6592. وَزَادَ ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ حَارِثَةَ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَوْلَهُ حَوْضُهُ مَا بَيْنَ صَنْعَاءَ وَالْمَدِينَةِ. فَقَالَ لَهُ الْمُسْتَوْرِدُ أَلَمْ تَسْمَعْهُ قَالَ الأَوَانِي. قَالَ لاَ. قَالَ الْمُسْتَوْرِدُ تُرَى فِيهِ الآنِيَةُ مِثْلَ الْكَوَاكِبِ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6592. ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) கூறியதாவது:

“ (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று வினவினார்கள்.

நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என (நபி-ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள்.

அத்தியாயம் : 81
6593. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي عَلَى الْحَوْضِ حَتَّى أَنْظُرُ مَنْ يَرِدُ عَلَىَّ مِنْكُمْ، وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي فَأَقُولُ يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي. فَيُقَالُ هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ "". فَكَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ يَقُولُ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ أَنْ نَرْجِعَ عَلَى أَعْقَابِنَا أَوْ نُفْتَنَ عَنْ دِينِنَا. {أَعْقَابِكُمْ تَنْكِصُونَ} تَرْجِعُونَ عَلَى الْعَقِبِ.
பாடம்: 53 (‘அல்கவ்ஸர்’ எனும்) நீர்த் தொட்டி148 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘அல்கவ்ஸர்’ (எனும் அற்புத நீர்த் தடாகத்தை) வழங்கியுள்ளோம். (108:1)149 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையுடனிருங்கள்” என்று (அன்சாரிகளிடம்) சொன்னார்கள்.150
6593. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள்.

“நீங்கள் உங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் சென்றுகொண்டிருந்தீர்கள்” (23:66) எனும் வசனத்திற்கு, ‘வந்த வழியே திரும்பிச் செல்லல்’ என்பது பொருளாகும்.

அத்தியாயம் : 81