6541. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ،. وَحَدَّثَنِي أَسِيدُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، قَالَ كُنْتُ عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، فَأَخَذَ النَّبِيُّ يَمُرُّ مَعَهُ الأُمَّةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ النَّفَرُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْعَشَرَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ مَعَهُ الْخَمْسَةُ، وَالنَّبِيُّ يَمُرُّ وَحْدَهُ، فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ قُلْتُ يَا جِبْرِيلُ هَؤُلاَءِ أُمَّتِي قَالَ لاَ وَلَكِنِ انْظُرْ إِلَى الأُفُقِ. فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ كَثِيرٌ. قَالَ هَؤُلاَءِ أُمَّتُكَ، وَهَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا قُدَّامَهُمْ، لاَ حِسَابَ عَلَيْهِمْ وَلاَ عَذَابَ. قُلْتُ وَلِمَ قَالَ كَانُوا لاَ يَكْتَوُونَ، وَلاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ "". فَقَامَ إِلَيْهِ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ "". ثُمَّ قَامَ إِلَيْهِ رَجُلٌ آخَرُ قَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ "".
பாடம்: 50
விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6541. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்துசென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சிலபேர் கடந்துசென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்துசென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் “(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தாரா?” என்று கேட்டேன். ஜிப்ரீல், “இல்லை. மாறாக, அடிவானத்தைப் பாருங்கள்” என்றார். உடனே நான் பார்த்தேன்.
அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல், “இவர்கள்தான் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னணியில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை. வேதனையுமில்லை” என்று கூறினார். நான் ‘ஏன்?’ என்று கேட்டேன்.
அதற்கு ஜிப்ரீல், “இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்” என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.123
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 83

6542. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" يَدْخُلُ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا، تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "". وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ "" اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ "". ثُمَّ قَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَقَالَ "" سَبَقَكَ عُكَّاشَةُ "".
பாடம்: 50
விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6542. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்” என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ (ரலி) அவர்கள் தம்மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

6543. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ شَكَّ فِي أَحَدِهِمَا ـ مُتَمَاسِكِينَ، آخِذٌ بَعْضُهُمْ بِبَعْضٍ، حَتَّى يَدْخُلَ أَوَّلُهُمْ وَآخِرُهُمُ الْجَنَّةَ، وَوُجُوهُهُمْ عَلَى ضَوْءِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம்: 50
விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6543. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரேசீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (ஒரே நேரத்தில்) சொர்க்கத்தில் நுழையும் அளவுக்கு (ஓரணியில்) செல்வார்கள். மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று பிரகாசிக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.124

6544. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُومُ مُؤَذِّنٌ بَيْنَهُمْ يَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ، وَيَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ، خُلُودٌ "".
பாடம்: 50
விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து, “நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. சொர்க்கவாசிகளே! மரணம் இல்லை; இது நிரந்தரம்” என்று அறிவிப்பார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6545. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يُقَالُ لأَهْلِ الْجَنَّةِ خُلُودٌ لاَ مَوْتَ. وَلأَهْلِ النَّارِ يَا أَهْلَ النَّارِ خُلُودٌ لاَ مَوْتَ "".
பாடம்: 50
விசாரணையில்லாமல் எழுபதாயிரம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.122
6545. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகளிடம், “(இது) நிரந்த ரம்; (இனி) மரணம் இல்லை” என்றும், நரகவாசிகளிடம் “(இது) நிரந்தரம்; (இனி) மரணம் இல்லை” என்றும் சொல்லப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6546. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6546. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.126

6547. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُسَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قُمْتُ عَلَى باب الْجَنَّةِ فَكَانَ عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينَ، وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ، غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَقُمْتُ عَلَى باب النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6547. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (விசாரணைக்காக சொர்க்கத்தில் நுழைந்து விடாமல்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்; ஆனால், நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஆணையிடப்பட்டி ருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6548. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ، وَأَهْلُ النَّارِ إِلَى النَّارِ، جِيءَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، ثُمَّ يُذْبَحُ، ثُمَّ يُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ لاَ مَوْتَ، يَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ، فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ. وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்தபிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்குமேல் கவலை அதிகமாகும்.127

6549. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ يَقُولُ لأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ. يَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ. فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ. فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ. قَالُوا يَا رَبِّ وَأَىُّ شَىْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்” என்று பதிலளிப்பார் கள். அப்போது அல்லாஹ் “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் “அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்” என்பான். அவர்கள் “அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் “உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்” என்று கூறுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.128

6550. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ أُصِيبَ حَارِثَةُ يَوْمَ بَدْرٍ وَهْوَ غُلاَمٌ، فَجَاءَتْ أُمُّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْتَ مَنْزِلَةَ حَارِثَةَ مِنِّي، فَإِنْ يَكُ فِي الْجَنَّةِ أَصْبِرْ وَأَحْتَسِبْ، وَإِنْ تَكُنِ الأُخْرَى تَرَى مَا أَصْنَعُ. فَقَالَ "" وَيْحَكِ ـ أَوَهَبِلْتِ ـ أَوَجَنَّةٌ وَاحِدَةٌ هِيَ جِنَانٌ كَثِيرَةٌ، وَإِنَّهُ لَفِي جَنَّةِ الْفِرْدَوْسِ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6550. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல்அன்சாரி (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள இடத்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழப்பால் துடிக்கிறாயோ! அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ‘ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.129
அத்தியாயம் : 81

6551. حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الْفُضَيْلُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""مَا بَيْنَ مَنْكِبَىِ الْكَافِرِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ"".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6551. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகத்தில்) இறைமறுப்பாளரின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.130
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 81
6551. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகத்தில்) இறைமறுப்பாளரின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.130
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 81
6552. وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لاَ يَقْطَعُهَا "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்துசெல்ல முடியாது.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6553. قَالَ أَبُو حَازِمٍ فَحَدَّثْتُ بِهِ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، فَقَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ، مَا يَقْطَعُهَا "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6553. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.131
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6554. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ لاَ يَدْرِي أَبُو حَازِمٍ أَيُّهُمَا قَالَ ـ مُتَمَاسِكُونَ، آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا، لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள்.
-அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை-
அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழுநிலவின் வடிவத்தில் இருக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.132

6555. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ""إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرَفَ فِي الْجَنَّةِ كَمَا تَتَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ"".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6555. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 81
6555. நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 81
6556. قَالَ أَبِي فَحَدَّثْتُ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، فَقَالَ أَشْهَدُ لَسَمِعْتُ أَبَا سَعِيدٍ يُحَدِّثُ وَيَزِيدُ فِيهِ "" كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ الْغَارِبَ فِي الأُفُقِ الشَّرْقِيِّ وَالْغَرْبِيِّ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6556. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் “கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் விண்மீனைப் பார்ப்பதைப் போன்று” எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.133

6557. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عِمْرَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَقُولُ اللَّهُ تَعَالَى لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَىْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ. فَيَقُولُ أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي شَيْئًا فَأَبَيْتَ إِلاَّ أَنْ تُشْرِكَ بِي "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6557. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன்மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார்.
அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதை-த்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணைகற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!” என்று கூறுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134

6558. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ مِنَ النَّارِ بِالشَّفَاعَةِ كَأَنَّهُمُ الثَّعَارِيرُ "". قُلْتُ مَا الثَّعَارِيرُ قَالَ الضَّغَابِيسُ. وَكَانَ قَدْ سَقَطَ فَمُهُ فَقُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ أَبَا مُحَمَّدٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" يَخْرُجُ بِالشَّفَاعَةِ مِنَ النَّارِ "". قَالَ نَعَمْ.
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6558. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “பரிந்துரையால் (நரகவாசிகளில் சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் ‘ஸஆரீர்’ போன்று இருப்பார்கள்” என்று கூறினார்கள்.135
அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ‘ஸஆரீர்’ என்றால் என்ன? என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அன்னார் ‘வெள்ளரிப் பிஞ்சுகள்’ என்று பதிலளித்தார்கள். அன்னாருக்குப் பல் விழுந்துவிட்டிருந்தது. (இதனால் ‘ஷஆரீர்’ என்பதை ‘ஸஆரீர்’ என்று உச்சரித்தார்கள்.) மேலும், “பரிந்துரையால் (சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களிடம் கூறினார்களா? என அம்ர் பின் தீனார் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

6559. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بَعْدَ مَا مَسَّهُمْ مِنْهَا سَفْعٌ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ، فَيُسَمِّيهِمْ أَهْلُ الْجَنَّةِ الْجَهَنَّمِيِّينَ "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தமது சருமத்தின் நிறம் மாறியபின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களைச் சொர்க்க வாசிகள், ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6560. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ. فَيُخْرَجُونَ قَدِ امْتُحِشُوا وَعَادُوا حُمَمًا، فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ـ أَوْ قَالَ ـ حَمِيَّةِ السَّيْلِ "". وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلَمْ تَرَوْا أَنَّهَا تَنْبُتُ صَفْرَاءَ مُلْتَوِيَةً "".
பாடம்: 51
சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125
(9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) ‘அத்ன்’ எனும் சொல்லுக்கு ‘நிலையானது’ என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) ‘அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன்” என்பது பொருள். இதிலிருந்தே ‘மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், ‘மஅதினி ஸித்க்’ என்றால் ‘உண்மையின் பிறப்பிடம்’ என்பது பொருள்.
6560. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டபின் அல்லாஹ், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெறியேற்றி விடுங்கள்” என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெறியேறு வார்கள். அப்போது அவர்கள் கரிக்கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்.
உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா?
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136