648. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" تَفْضُلُ صَلاَةُ الْجَمِيعِ صَلاَةَ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وَتَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ "". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا}
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனியாகத் தொழு வதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் ‘அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்’ (17:78) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10

649. قَالَ شُعَيْبٌ وَحَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ تَفْضُلُهَا بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً.
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
649. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(வ்வாறு தனியாகத் தொழுவ)தை விட (கூட்டாகத் தொழுவது,) இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

650. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ سَالِمًا، قَالَ سَمِعْتُ أُمَّ الدَّرْدَاءِ، تَقُولُ دَخَلَ عَلَىَّ أَبُو الدَّرْدَاءِ وَهْوَ مُغْضَبٌ فَقُلْتُ مَا أَغْضَبَكَ فَقَالَ وَاللَّهِ مَا أَعْرِفُ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم شَيْئًا إِلاَّ أَنَّهُمْ يُصَلُّونَ جَمِيعًا.
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
650. உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுத்தர்தா (ரலி) அவர்கள் என்னிடம் கோபமாக வந்தார்கள். அப்போது நான், “உங்களது கோபத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தார் (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர, வேறு எதையுமே அவர்களிடம் (முன்புபோல்) என்னால் காண முடியவில்லை” என்று கூறினார்கள்

651. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ فَأَبْعَدُهُمْ مَمْشًى، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّي ثُمَّ يَنَامُ "".
பாடம் : 31
ஃபஜ்ர் தொழுகையை (ஜமா அத்துடன்) கூட்டாகத் தொழு வதன் சிறப்பு
651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), வெகு தொலைவி-ருந்து (பள்ளிவாசலை நோக்கி) நடந்து வருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்தி-ருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் (ஜமாஅத்தாகத்) தொழுவதற்காகக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

652. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ ".
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு, அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, (அவர் செய்த பாவங்களிலிருந்து) அவருக்கு மன்னிப்பு வழங்கினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

653. ثُمَّ قَالَ " الشُّهَدَاءُ خَمْسَةٌ الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِيقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ ". وَقَالَ " لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا لاَسْتَهَمُوا عَلَيْهِ ". "
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:
1. கொள்ளை நோயால் இறந்தவர்
2. வயிற்றுப்போக்கால் இறந்தவர்
3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்
4. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
5. அல்லாஹ்வின் பாதையில் (அறப் போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள (நன்மை)தனை மக்கள் அறிந்தால், அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப்போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால், நிச்சயம் சீட்டுக்குலுக்கிப்போடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

654. وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ".
பாடம் : 32
லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே நிறை வேற்றுதன் சிறப்பு
654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு அதன்) ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள (நன்மை) தனை மக்கள் அறிந்தால், அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிந்தால், அவற்றுக்காக (தரையில்) தவழ்ந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு அதன்) ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள (நன்மை) தனை மக்கள் அறிந்தால், அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் சுப்ஹு தொழுகையிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிந்தால், அவற்றுக்காக (தரையில்) தவழ்ந்தேனும் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
655. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا بَنِي سَلِمَةَ أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ ". وَقَالَ مُجَاهِدٌ فِي قَوْلِهِ {وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ} قَالَ خُطَاهُمْ.
பாடம் : 33
(தொழுகைக்காக எடுத்து வைக்கும்) எட்டுகளுக்கு நன் மையை எதிர்பார்த்தல்
655. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பனூ ச-மா குலத்தார் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேறத் திட்டமிட்டபோது) நபி (ஸல்) அவர்கள், “பனூ ச-மா குலத்தாரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன் மையை எதிர்பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“முன்பு அவர்கள் செய்ததையும் அவர் களின் அடிச்சுவடுகளையும் (‘ஆஸா ரஹும்’) நாம் பதிவு செய்வோம்” (36:12) எனும் வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஆஸாரஹும்’ என்பதற்கு ‘அவர்களின் கால் எட்டுகள்’ என்பது பொருளாகும்.

656. وَقَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي حُمَيْدٌ، حَدَّثَنِي أَنَسٌ، أَنَّ بَنِي سَلِمَةَ، أَرَادُوا أَنْ يَتَحَوَّلُوا، عَنْ مَنَازِلِهِمْ، فَيَنْزِلُوا قَرِيبًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعْرُوا {الْمَدِينَةَ} فَقَالَ " أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ ". قَالَ مُجَاهِدٌ خُطَاهُمْ آثَارُهُمْ أَنْ يُمْشَى فِي الأَرْضِ بِأَرْجُلِهِمْ.
பாடம் : 33
(தொழுகைக்காக எடுத்து வைக்கும்) எட்டுகளுக்கு நன் மையை எதிர்பார்த்தல்
656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ச-மா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவி-ருந்த) தம் குடியிருப்புகளை இடம் மாற்றி, நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா(வின் இதர பகுதிகள்) கா-யாவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “(பனூ ச-மா குலத்தாரே!) உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்கமாட்டீர்களா” என்று கேட்டார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(36:12 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அடிச்சுவடுகள்’ என்பது, அவர்கள் காலால் நடந்துவருவதால் ஏற்படும் காலடிச்சுவடுகளைக் குறிக்கும்.

657. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْرِ وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ الْمُؤَذِّنَ فَيُقِيمَ، ثُمَّ آمُرَ رَجُلاً يَؤُمُّ النَّاسَ، ثُمَّ آخُذَ شُعَلاً مِنْ نَارٍ فَأُحَرِّقَ عَلَى مَنْ لاَ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ بَعْدُ "".
பாடம் : 34
இஷா தொழுகையைக் கூட் டாக (ஜமாஅத்துடன்) தொழு வதன் சிறப்பு
657. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகை களைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலும் உள்ள (நன்மை)தனை அவர்கள் அறிவார் களானால், (தரையில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள்.
தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு நான் கட்டளையிட்டுவிட்டுப் பின்னர் ஒருவரி டம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, தொழு கைக்கு இதுவரை புறப்பட்டுவராம-ருப்ப வரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட நான் எண்ணியதுண்டு.

658. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا "".
பாடம் : 35
இருவரும் அதற்கு மேற்பட்டோரும் ‘ஜமாஅத்’ ஆவர்.16
658. மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணம் புறப்படவிருந்த இருவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள்; இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார்கள்.

659. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ مَا لَمْ يُحْدِثْ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ. لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، لاَ يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلاَّ الصَّلاَةُ "".
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாச-ல் அமர்ந்திருப்பதும் பள்ளிவாசல்களின் சிறப்பும்
659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழும் இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர் பார்த்து) சிறுதுடக்கு ஏற்படாமல் காத்திருக் கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்கு மன்னிப்பு வழங்கு வாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று (அவர்கள் கூறு கின்றனர்).
தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால், அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்ப தாகவே கருதப்படுவார்.

660. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ. وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "".
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாச-ல் அமர்ந்திருப்பதும் பள்ளிவாசல்களின் சிறப்பும்
660. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்த போதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகி றேன்” என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.

661. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ هَلِ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا فَقَالَ نَعَمْ، أَخَّرَ لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ بَعْدَ مَا صَلَّى فَقَالَ "" صَلَّى النَّاسُ وَرَقَدُوا وَلَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مُنْذُ انْتَظَرْتُمُوهَا "". قَالَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ.
பாடம் : 36
தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாச-ல் அமர்ந்திருப்பதும் பள்ளிவாசல்களின் சிறப்பும்
661. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம்; நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவுவரைத் தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டுப் பின்னர் எங்களை நோக்கி, “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.
இப்போதும் நான் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

662. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ "".
பாடம் : 37
பள்ளிவாசலுக்குச் சென்று வருபவர் அடையும் சிறப்பு
662. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்கு (வழிபாட்டுக் காக)ச் சென்றுவந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவரது மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

663. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ. قَالَ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ رَجُلاً، مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ مَالِكٌ ابْنُ بُحَيْنَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا "". تَابَعَهُ غُنْدَرٌ وَمُعَاذٌ عَنْ شُعْبَةَ فِي مَالِكٍ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ سَعْدٍ عَنْ حَفْصٍ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ. وَقَالَ حَمَّادٌ أَخْبَرَنَا سَعْدٌ عَنْ حَفْصٍ عَنْ مَالِكٍ.
பாடம் : 38
தொழுகைக்கு ‘இகாமத்’ சொல் லப்பட்டுவிட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை.
663. அப்துல்லாஹ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சுப்ஹு) தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துவிட்டனர்.
அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹு (என்ன) நான்கு ரக் அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத் களா?” என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

664. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ الأَسْوَدُ قَالَ كُنَّا عِنْدَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ فَذَكَرْنَا الْمُوَاظَبَةَ عَلَى الصَّلاَةِ وَالتَّعْظِيمَ لَهَا، قَالَتْ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ، فَحَضَرَتِ الصَّلاَةُ فَأُذِّنَ، فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَقِيلَ لَهُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، وَأَعَادَ فَأَعَادُوا لَهُ، فَأَعَادَ الثَّالِثَةَ فَقَالَ "" إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى، فَوَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنَ الْوَجَعِ، فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ مَكَانَكَ، ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ. قِيلَ لِلأَعْمَشِ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ فَقَالَ بِرَأْسِهِ نَعَمْ. رَوَاهُ أَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ بَعْضَهُ. وَزَادَ أَبُو مُعَاوِيَةَ جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا.
பாடம் : 39
நோயாளி கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வதற்கான (நோயின் உயர்ந்தபட்ச) அளவு17
664. அஸ்வத் பின் யஸீத (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தபோது, தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து, தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டது.
அப்போது அவர்கள், “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதர்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள்.) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்று சொல்லப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். மக்களும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னார்கள். மூன்றாவது முறை “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் புறப்பட்டு வந்து (மக்களுக்குத்) தொழுவிக்கலானார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதை (அப்போது) கண்டார்கள். உடனே இரண்டு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி புறப்பட்டு வந்தார்கள். நோயினால் (கால்களை ஊன்ற முடியாமல்) தம் கால்கள் (பூமியில்) இழுபட அவர்கள் புறப்பட்டு வந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. (நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை அறிந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க முனைந்தார்கள்.
அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு உள்ளே) கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்துக்கொண்டிருந்தபோது அவர்களிடம், “(அப்போது) நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்த, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதார்களா? அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதனரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அஃமஷ் (ரஹ்) அவர்கள் தமது தலையால் ‘ஆம்’ என (சைகையால்) பதிலளித்தார்கள்.
அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஒரு பகுதியை அபூதாவூத்
அத்தயா-சீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூமுஆவியா (முஹம்மத் பின் காஸிம் -ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்(து தொழு)தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றவாறு தொழுதுகொண்டிருந்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

665. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ الْعَبَّاسِ وَرَجُلٍ آخَرَ. قَالَ عُبَيْدُ اللَّهِ فَذَكَرْتُ ذَلِكَ لاِبْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ فَقَالَ لِي وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ.
பாடம் : 39
நோயாளி கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வதற்கான (நோயின் உயர்ந்தபட்ச) அளவு17
665. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற் காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள்; அவர்களும் நபியவர்களுக்கு அனுமதியளித்தனர்.
நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி (தொழுகைக் குப்) புறப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறொரு மனிதருக்கும் இடையில்தான் (தொங்கியபடி) சென்றார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
இ(வ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய)தை நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், “ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (தெரியாது)” என்று பதிலளித்தேன். அவர்கள், “அந்த மனிதர் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள்தான்” என்று கூறினார்கள்.

666. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ. ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ.
பாடம் : 40
மழை போன்ற (இயற்கைத்) தடைகள் உள்ளபோது, ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு.
666. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்.. பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங் களிலேயே நீங்கள் தொழுதுகொள் ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர்ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள்.
பின்னர், “(கடுங்) குளிரும் மழையு முள்ள இரவுகளில், “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளருக்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடு வார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.18

667. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهْوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ، فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ "". فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ، فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 40
மழை போன்ற (இயற்கைத்) தடைகள் உள்ளபோது, ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு.
667. மஹ்மூத் பின் அர்ரபீஉ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
கண் பார்வையிழந்த இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்து பவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (சில நாட்களில்) இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்வேன்” என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, “(உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்