6127. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الأَزْرَقِ بْنِ قَيْسٍ، قَالَ كُنَّا عَلَى شَاطِئِ نَهْرٍ بِالأَهْوَازِ قَدْ نَضَبَ عَنْهُ الْمَاءُ، فَجَاءَ أَبُو بَرْزَةَ الأَسْلَمِيُّ عَلَى فَرَسٍ، فَصَلَّى وَخَلَّى فَرَسَهُ، فَانْطَلَقَتِ الْفَرَسُ، فَتَرَكَ صَلاَتَهُ وَتَبِعَهَا حَتَّى أَدْرَكَهَا، فَأَخَذَهَا ثُمَّ جَاءَ فَقَضَى صَلاَتَهُ، وَفِينَا رَجُلٌ لَهُ رَأْىٌ، فَأَقْبَلَ يَقُولُ انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ تَرَكَ صَلاَتَهُ مِنْ أَجْلِ فَرَسٍ. فَأَقْبَلَ فَقَالَ مَا عَنَّفَنِي أَحَدٌ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ إِنَّ مَنْزِلِي مُتَرَاخٍ فَلَوْ صَلَّيْتُ وَتَرَكْتُ لَمْ آتِ أَهْلِي إِلَى اللَّيْلِ. وَذَكَرَ أَنَّهُ صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَرَأَى مِنْ تَيْسِيرِهِ.
பாடம்: 80 “(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139 நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6127. அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஈரானிலுள்ள) ‘அஹ்வாஸ்’ எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங்கரை யில் இருந்துகொண்டிருந்தோம்.-அதில் தண்ணீர் வற்றிப்போயிருந்தது.- அப்போது அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் குதிரையொன்றில் வந்து (இறங்கி) அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டுத் தொழுதார்கள். அப்போது அந்தக் குதிரை நடக்கலாயிற்று.

உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் தமது தொழுகையை விட்டுவிட்டு குதிரையைப் பின்தொடர்ந்து சென்று, அதை அடைந்து பிடித்துக்கொண்டார்கள். பிறகு வந்து தமது தொழுகையை நிறைவு செய்தார்கள்.

எங்களிடையே (மாறுபட்ட) சிந்தனைகொண்ட (காரிஜிய்யாக்களில்) ஒரு மனிதர் இருந்தார். அவர், “ஒரு குதிரைக்காகத் தமது தொழுகையையே விட்டுவிட்ட இந்த முதியவரைப் பாருங்கள்” என்று கூறியவாறு (சபித்தவராக) முன்னோக்கி வந்தார். உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்ததிலிருந்து என்னுடன் யாரும் (இவ்வளவு) கடுமையாக நடந்துகொண்டதில்லை. எனது இல்லம் தொலைவில் உள்ளது. நான் (எனது குதிரையை) விட்டுவிட்டு தொழுதுகொண்டிருந்தால் (அது எங்காவது போய்விடும். பிறகு) நான் என் வீட்டாரிடம் இரவுவரை போய்ச் சேர முடியாது” என்று கூறினார்கள்.

மேலும், தாம் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்ததாகவும் அப்போது நபி (ஸல்) அவர்கள் (எதிலும்) எளிதாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட் டார்கள்.144


அத்தியாயம் : 78
6128. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ، فَثَارَ إِلَيْهِ النَّاسُ لِيَقَعُوا بِهِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعُوهُ، وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ ذَنُوبًا مِنْ مَاءٍ ـ أَوْ سَجْلاً مِنْ مَاءٍ ـ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ "".
பாடம்: 80 “(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139 நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6128. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்துகொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்துகொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.145

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 78
6129. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ "" يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ "".
பாடம்: 81 மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்துகொள்வதும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்திவிடாதே.
6129. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவுக்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம், “அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்றுகூடக் கேட்பார்கள்.146


அத்தியாயம் : 78
6130. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَىَّ فَيَلْعَبْنَ مَعِي.
பாடம்: 81 மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்துகொள்வதும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்திவிடாதே.
6130. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (சிறுமியாக இருந்தபோது) நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

அத்தியாயம் : 78
6131. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، حَدَّثَهُ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ. أَنَّهُ، اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ "" ائْذَنُوا لَهُ فَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ "". أَوْ "" بِئْسَ أَخُو الْعَشِيرَةِ "". فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْكَلاَمَ. فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ مَا قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ فِي الْقَوْلِ. فَقَالَ "" أَىْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ مَنْ تَرَكَهُ ـ أَوْ وَدَعَهُ ـ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ "".
பாடம்: 82 மக்களுடன் கனிவாகப் பேசுவது “சிலருக்கு முன்னால் நாங்கள் (மனிதநேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக்கொண்டிருக்கும்” என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.147
6131. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்” என்று சொன்னார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதுபோல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள்.

(அவர் சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் தகுதியில் மிகவும் மோசமானவர்” என்று கூறினார்கள்.148


அத்தியாயம் : 78
6132. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ، فَلَمَّا جَاءَ قَالَ "" خَبَأْتُ هَذَا لَكَ "". قَالَ أَيُّوبُ بِثَوْبِهِ أَنَّهُ يُرِيهِ إِيَّاهُ، وَكَانَ فِي خُلُقِهِ شَىْءٌ. رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ، قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقْبِيَةٌ.
பாடம்: 82 மக்களுடன் கனிவாகப் பேசுவது “சிலருக்கு முன்னால் நாங்கள் (மனிதநேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக்கொண்டிருக்கும்” என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.147
6132. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பொன் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றி லிருந்து ஒன்றை மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (அந்த அங்கியுடன் வந்து) “உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்” என்று சொன்னார்கள்.

அய்யூப் (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “அந்த ஆடையை எடுத்துவந்து அவரிடம் காட்டியவாறு” என்றும், “மக்ரமா (ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது” என்றும் கூறப்பெற்றுள்ளது.149

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாத்திம் பின் வர்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன” என்று மிஸ்வர் (ரலி) அவர்களிடமிருந்தே (அறிவிப்பாளர்தொடர் முறிவுறாமல்- முத்தஸிலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 78
6133. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ "".
பாடம்: 83 இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார். முஆவியா (ரலி) அவர்கள், “அனுபவசாலியே அறிவாளியாவார்” என்று சொன்னார்கள்.
6133. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.150

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6134. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ "". قُلْتُ بَلَى. قَالَ "" فَلاَ تَفْعَلْ، قُمْ وَنَمْ، وَصُمْ وَأَفْطِرْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّكَ عَسَى أَنْ يَطُولَ بِكَ عُمُرٌ، وَإِنَّ مِنْ حَسْبِكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ "". قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَىَّ فَقُلْتُ فَإِنِّي أُطِيقُ غَيْرَ ذَلِكَ. قَالَ "" فَصُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلاَثَةَ أَيَّامٍ "". قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَىَّ قُلْتُ أُطِيقُ غَيْرَ ذَلِكَ. قَالَ "" فَصُمْ صَوْمَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ "". قُلْتُ وَمَا صَوْمُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ قَالَ "" نِصْفُ الدَّهْرِ "".
பாடம்: 84 விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை
6134. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மை தானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று பதிலளித்தேன்.

(அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சிலநாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உமது வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர்நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப்படாமல்போகலாம். ஆகவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்.

ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்” என்று கூறினார்கள்.

ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் “(அல்லாஹ்வின் தூதரே!) இதற்கு மேலும் என்னால் முடியும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக்கொள்க” என்றார்கள். நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. “இதற்கு மேலும் என்னால் முடியும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக்கொள்வீராக” என்றார்கள். “இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று கேட்டேன். “(ஒருநாள் விட்டு ஒருநாள் நோற்பதால்) வருடத்தில் பாதி நாட்கள் நோற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.151

அத்தியாயம் : 78
6135. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهْوَ صَدَقَةٌ، وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ "". حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، مِثْلَهُ وَزَادَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ "".
பாடம்: 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்தோம்பல் மூன்று தினங்களாகும். அதற்குமேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும். (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று.

இதை அபூஷுரைஹ் குவைலித் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.152


அத்தியாயம் : 78
6136. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ "".
பாடம்: 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6136. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளை யும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153


அத்தியாயம் : 78
6137. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلاَ يَقْرُونَنَا فَمَا تَرَى، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا، فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ "".
பாடம்: 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6137. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள். நாங்களும் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றார்கள். அவ்வாறெனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்துதர ஏற்பாடு செய்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தினர்க(ளான உங்க)ளுக்குத் தேவையான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.154


அத்தியாயம் : 78
6138. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَصِلْ رَحِمَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ "".
பாடம்: 85 விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: ‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும். வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6138. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த உறவுகளைப் பேணிவாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்ல தைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6139. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ. فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا. فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ فَإِنِّي صَائِمٌ. قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ. فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ فَقَالَ نَمْ. فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ. فَلَمَّا كَانَ آخِرُ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمِ الآنَ. قَالَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ. فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَ سَلْمَانُ "". أَبُو جُحَيْفَةَ وَهْبٌ السُّوَائِيُّ، يُقَالُ وَهْبُ الْخَيْرِ.
பாடம்: 86 விருந்தினருக்காக உணவு தயாரிப்பதும் அவர்களுக்காகச் சிரமமெடுத்துக்கொள்வதும்
6139. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்களை யும் அபுத்தர்தா (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். ஆகவே, சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களை (அவரது இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத்தர்தா (ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு உம்முத்தர்தா, “உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லைபோலும்” என்றார். பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்கள் வந்து சல்மான் (ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு “(சல்மானே!) நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்” என்றார்கள் அபுத்தர்தா.

அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்” என்று சொன்னார்கள். ஆகவே, (சல்மானுடன்) அபுத்தர்தா சாப்பிட்டார்கள். இரவு நேரம் வந்ததும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப்போனார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள், “தூங்குங்கள்” என்றார்கள். ஆகவே, அபுத்தர்தா (ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான் (ரலி) அவர்கள், “தூங்குங்கள்” என்றார்கள்.

இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான் (ரலி) அவர்கள், “இப்போது எழுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள்.

அப்போது சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம், “உங்கள் இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. ஆகவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேரவேண்டிய உரிமைகளை வழங்குங்கள்” என்று கூறினார்கள்.

பின்னர் அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “சல்மான் சொன்னது உண்மைதான்” என்றார்கள்.155

அபூஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ (ரலி) அவர்களுக்கு ‘வஹ்புல் கைர்’ என்றும் (பெயர்) சொல்லப்படுகிறது.

அத்தியாயம் : 78
6140. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما أَنَّ أَبَا بَكْرٍ، تَضَيَّفَ رَهْطًا فَقَالَ لِعَبْدِ الرَّحْمَنِ دُونَكَ أَضْيَافَكَ فَإِنِّي مُنْطَلِقٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَافْرُغْ مِنْ قِرَاهُمْ قَبْلَ أَنْ أَجِيءَ. فَانْطَلَقَ عَبْدُ الرَّحْمَنِ فَأَتَاهُمْ بِمَا عِنْدَهُ فَقَالَ اطْعَمُوا. فَقَالُوا أَيْنَ رَبُّ مَنْزِلِنَا قَالَ اطْعَمُوا. قَالُوا مَا نَحْنُ بِآكِلِينَ حَتَّى يَجِيءَ رَبُّ مَنْزِلِنَا. قَالَ اقْبَلُوا عَنَّا قِرَاكُمْ، فَإِنَّهُ إِنْ جَاءَ وَلَمْ تَطْعَمُوا لَنَلْقَيَنَّ مِنْهُ. فَأَبَوْا فَعَرَفْتُ أَنَّهُ يَجِدُ عَلَىَّ، فَلَمَّا جَاءَ تَنَحَّيْتُ عَنْهُ فَقَالَ مَا صَنَعْتُمْ فَأَخْبَرُوهُ فَقَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ. فَسَكَتُّ ثُمَّ قَالَ يَا عَبْدَ الرَّحْمَنِ. فَسَكَتُّ فَقَالَ يَا غُنْثَرُ أَقْسَمْتُ عَلَيْكَ إِنْ كُنْتَ تَسْمَعُ صَوْتِي لَمَّا جِئْتَ. فَخَرَجْتُ فَقُلْتُ سَلْ أَضْيَافَكَ. فَقَالُوا صَدَقَ أَتَانَا بِهِ. قَالَ فَإِنَّمَا انْتَظَرْتُمُونِي، وَاللَّهِ لاَ أَطْعَمُهُ اللَّيْلَةَ. فَقَالَ الآخَرُونَ وَاللَّهِ لاَ نَطْعَمُهُ حَتَّى تَطْعَمَهُ. قَالَ لَمْ أَرَ فِي الشَّرِّ كَاللَّيْلَةِ، وَيْلَكُمْ مَا أَنْتُمْ لِمَ لاَ تَقْبَلُونَ عَنَّا قِرَاكُمْ هَاتِ طَعَامَكَ. فَجَاءَهُ فَوَضَعَ يَدَهُ فَقَالَ بِاسْمِ اللَّهِ، الأُولَى لِلشَّيْطَانِ. فَأَكَلَ وَأَكَلُوا.
பாடம்: 87 விருந்தினரிடம் கோபத்தையோ பதற்றத்தையோ வெளிப்படுத்து வது வெறுக்கப்பட்டதாகும்.
6140. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (மூன்றுபேர் கொண்ட) ஒரு குழுவினர் விருந்தினராக வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம், “உன் விருந்தினரைக் கவனித்துக்கொள். நான் நபி (ஸல்) அவர்களிடம் செல்கிறேன். நான் வருவதற்கு முன் அவர்களை விருந்துண்ணச் செய்து விடு” என்று கூறினார்கள். நான் சென்று, எங்களிடமிருந்த உணவை அவர்களிடம் கொண்டுவந்து, “உண்ணுங்கள்!” என்றேன். அதற்கு அவர்கள், “வீட்டுக்காரர் எங்கே?” என்று கேட்டனர். நான் அவர்களிடம், “நீங்கள் உண்ணுங்கள்” என்றேன். அவர்கள் “வீட்டுக்காரர் வராத வரை நாங்கள் சாப்பிடமாட்டோம்” என்று கூறினர்.

அதற்கு, “நான் அளிக்கும் விருந்தை ஏற்று உண்ணுங்கள். ஏனெனில், நீங்கள் உண்ணாத நிலையில் என் தந்தை வந்துவிட்டால் அவர்கள் நம்மைக் கண்டிப்பார்கள்” என்றேன். ஆனால், அவர்கள் (சாப்பிட) மறுத்துவிட்டார்கள். மேலும், அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்தால் என்மீது கோபப்படுவார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். என் தந்தை வந்தபோது நான் அவர்களிடமிருந்து விலகி (ஒளிந்து)கொண்டேன். அவர்கள் “(விருந்தாளிகளுக்கு) என்ன செய்தீர்கள்?” என (வீட்டாரிடம்) கேட்டார்கள். அவர்கள் நடந்ததைத் தெரிவித்தார்கள்.

அப்போது என் தந்தை, “அப்துர் ரஹ்மானே!” என்று கூப்பிட்டார்கள். நான் (பயத்தால் பதிலளிக்காமல்) மௌனமாயிருந்தேன். பிறகு “அப்துர் ரஹ்மானே!” என்று (மீண்டும்) கூப்பிட்டார்கள். நான் (அப்போதும்) மௌனமாயிருந்தேன். பிறகு (மூன்றாம் முறை) “அறிவில்லாதவனே! உன் (இறைவன்)மீது சத்தியம் செய்கிறேன். என் குரல் உனக்குக் கேட்குமானால் நீ வந்தாக வேண்டும்” என்றார்கள். உடனே நான் வெளியே வந்தேன். “தங்கள் விருந்தினரிடமே கேளுங்கள்” என்றேன்.

அப்போது விருந்தினர், “அவர் எங்க ளிடம் உணவைக் கொண்டுவந்தார். (நாங்கள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை)” என்றனர். என் தந்தை, “என்னைத்தானே எதிர்பார்த்தீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவு தாமதத்திற்குக் காரணமாகிவிட்ட) நான் இன்றிரவு சாப்பிடப்போவதில்லை” என்றார்கள். மற்றவர்களோ “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சாப்பிடாத வரை நாங்களும் சாப்பிடமாட்டோம்” என்று கூறினர்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் “இன்றிரவைப் போன்று ஒரு தர்மசங்கடமான இரவை நான் கண்டதில்லை” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு என்ன கேடு! எங்கள் விருந்தை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்? (அப்துர் ரஹ்மானே!) உன் உணவைக் கொண்டுவா!” என்றார்கள். நான் கொண்டுவந்தேன். அதில் என் தந்தை தமது கையை வைத்து “அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம்). (நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) முதல் நிலை ஷைத்தானால் விளைந்தது” என்றார்கள். பிறகு அவர்களும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.156

அத்தியாயம் : 78
6141. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما جَاءَ أَبُو بَكْرٍ بِضَيْفٍ لَهُ أَوْ بِأَضْيَافٍ لَهُ، فَأَمْسَى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا جَاءَ قَالَتْ أُمِّي احْتَبَسْتَ عَنْ ضَيْفِكَ ـ أَوْ أَضْيَافِكَ ـ اللَّيْلَةَ. قَالَ مَا عَشَّيْتِهِمْ فَقَالَتْ عَرَضْنَا عَلَيْهِ ـ أَوْ عَلَيْهِمْ فَأَبَوْا أَوْ ـ فَأَبَى، فَغَضِبَ أَبُو بَكْرٍ فَسَبَّ وَجَدَّعَ وَحَلَفَ لاَ يَطْعَمُهُ، فَاخْتَبَأْتُ أَنَا فَقَالَ يَا غُنْثَرُ. فَحَلَفَتِ الْمَرْأَةُ لاَ تَطْعَمُهُ حَتَّى يَطْعَمَهُ، فَحَلَفَ الضَّيْفُ ـ أَوِ الأَضْيَافُ ـ أَنْ لاَ يَطْعَمَهُ أَوْ يَطْعَمُوهُ حَتَّى يَطْعَمَهُ، فَقَالَ أَبُو بَكْرٍ كَأَنَّ هَذِهِ مِنَ الشَّيْطَانِ فَدَعَا بِالطَّعَامِ فَأَكَلَ وَأَكَلُوا فَجَعَلُوا لاَ يَرْفَعُونَ لُقْمَةً إِلاَّ رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا، فَقَالَ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا فَقَالَتْ وَقُرَّةِ عَيْنِي إِنَّهَا الآنَ لأَكْثَرُ قَبْلَ أَنْ نَأْكُلَ فَأَكَلُوا وَبَعَثَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ أَنَّهُ أَكَلَ مِنْهَا.
பாடம்: 88 விருந்தாளி தம் தோழரிடம், “நீங்கள் சாப்பிடாத வரை நானும் சாப்பிடமாட்டேன்” என்று கூறுவது இது தொடர்பாக நபி (ஸல்) அவர் களிடமிருந்து அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் வந்துள்ளது.157
6141. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘தம் விருந்தாளியுடன்’ அல்லது ‘தம் விருந்தினருடன்’ (எங்கள் வீட்டிற்கு) வந்தார்கள்.

பிறகு மாலையில் (இஷா தொழும் வரை) நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார் கள். பிறகு அவர்கள் (திரும்பி) வந்த போது என் தாயார் (உம்மு ரூமான்), “இன்றிரவு தங்கள் ‘விருந்தாளியை’ அல்லது ‘விருந்தினரை’ இங்கேயே (காத்து) இருக்கும்படி செய்துவிட்டீர்களே!” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களுக்கு நீ இரவு சாப்பாடு கொடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தாயார், “நான் ‘இவரிடம்’ அல்லது ‘இவர்களிடம்’ சாப்பிடச் சொன்னேன். ஆனால் ‘இவர்’ அல்லது ‘இவர்கள்’ (சாப்பிட) மறுத்துவிட்டனர்” என்று கூறினார்கள். இதனால் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள்; ஏசினார்கள்; “உன் மூக்கறுந்துபோக” என (என்னை)த் திட்டினார்கள். மேலும், தாம் சாப்பிடப் போவதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். நான் ஒளிந்துகொண்டேன்.

அப்போது அவர்கள், “அறிவில்லாதவனே!” என்று (என்னை) அழைத்தார்கள். “என் தந்தை சாப்பிடாமல் தாமும் சாப்பிடப்போவதில்லை என்று என் தாயாரும் சத்தியம் செய்தார்கள். என் தந்தை சாப்பிடாத வரை தாங்களும் சாப்பிடப்போவதில்லை என ‘விருந்தாளி’ அல்லது ‘விருந்தாளிகளும்’ சத்தியம் செய்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த நிலை ஷைத்தானால் ஏற்பட்டுவிட்டது போலும்” என்று கூறிவிட்டு, உணவு கொண்டு வரச்சொல்லி தாமும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.

அவர்கள் ஒவ்வொரு கவளம் உணவு எடுக்கும்போதும் அதன் கீழ் பகுதியிலிருந்து (உணவு) அதிகமாகிக்கொண்டே இருந்தது. அப்போது என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), “பனூ ஃபிராஸ் குலத்தவளே! இது என்ன (பெருக்கம்)?”என்று கேட்டார்கள். அதற்கு “என் கண்குளிர்ச்சியின் மீது சத்தியமாக! நாம் சாப்பிடுவதற்கு முன்னால் இருந்ததைவிட இப்போது (மும்மடங்கு) கூடுதலாக உள்ளதே!” என்று என் தாயார் கூறினார்கள்.

பிறகு அனைவரும் சாப்பிட்டோம். அந்த உணவை நபி (ஸல்) அவர்களுக் கும் கொடுத்தனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களும் அதைச் சாப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 78
6142. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، مَوْلَى الأَنْصَارِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ وَمُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ أَتَيَا خَيْبَرَ فَتَفَرَّقَا فِي النَّخْلِ، فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَهْلٍ وَحُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ ابْنَا مَسْعُودٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَكَلَّمُوا فِي أَمْرِ صَاحِبِهِمْ فَبَدَأَ عَبْدُ الرَّحْمَنِ، وَكَانَ أَصْغَرَ الْقَوْمِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كَبِّرِ الْكُبْرَ "". ـ قَالَ يَحْيَى لِيَلِيَ الْكَلاَمَ الأَكْبَرُ ـ فَتَكَلَّمُوا فِي أَمْرِ صَاحِبِهِمْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَتَسْتَحِقُّونَ قَتِيلَكُمْ ـ أَوْ قَالَ صَاحِبَكُمْ ـ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْكُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَمْرٌ لَمْ نَرَهُ. قَالَ "" فَتُبْرِئُكُمْ يَهُودُ فِي أَيْمَانِ خَمْسِينَ مِنْهُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَوْمٌ كُفَّارٌ. فَوَدَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ قِبَلِهِ. قَالَ سَهْلٌ فَأَدْرَكْتُ نَاقَةً مِنْ تِلْكَ الإِبِلِ، فَدَخَلَتْ مِرْبَدًا لَهُمْ فَرَكَضَتْنِي بِرِجْلِهَا. قَالَ اللَّيْثُ حَدَّثَنِي يَحْيَى، عَنْ بُشَيْرٍ، عَنْ سَهْلٍ، قَالَ يَحْيَى حَسِبْتُ أَنَّهُ قَالَ مَعَ رَافِعِ بْنِ خَدِيجٍ، وَقَالَ ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا يَحْيَى عَنْ بُشَيْرٍ عَنْ سَهْلٍ وَحْدَهُ.
பாடம்: 89 வயதில் மூத்தவருக்கு மரியாதை செய்வதும், வயதில் மூத்தவரே முதலில் பேசவும் கேள்வி கேட்கவும் தொடங்குவதும்158
6142. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களும் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம்பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரீச்சந்தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.159

ஆகவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி), முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (கொல்லப்பட்ட) தங்கள் நண்பரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மானே (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள், “(வயதில்) மூத்தவரை முதலில் பேசவிடு” என்றார்கள்.

-யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “வயதில் பெரியவர், பேசும் பொறுப்பை ஏற்கட்டும்” என்று இடம்பெற்றுள்ளது.

ஆகவே, (வயதில் மூத்தவர்களான) ஹுவய்யிஸாவும் முஹய்யிஸாவும் (கொல்லப்பட்ட) தம் நண்பர் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(யூதர்களே கொலை செய்தார்கள் என்று) உங்களில் ஐம்பது பேர் சத்தியம் (கஸாமத்) செய்வதன் மூலம் ‘உங்களில் கொல்லப்பட்டவர்’ அல்லது ‘உங்கள் நண்பரின்’ உயிரீட்டுத் தொகையை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கண்ணால் காணாத விஷயமாயிற்றே! (எவ்வாறு நாங்கள் சத்தியம் செய்வது?)” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், (பிரதிவாதிகளான) யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் கொலை செய்யவில்லை என்று) சத்தியம் செய்து உங்களை(ச் சத்தியம் செய்வதிலிருந்து) விடுவிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (யூதர்கள்) இறை மறுப்பாளர்களான கூட்டமாயிற்றே! (அவர்களின் சத்தியத்தை எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே (கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையைக்) கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்குத் தம் சார்பாக வழங்கினார்கள்.160

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத்தொகை யாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்றை நான் கண்டேன். அது அந்த உறவினர்களின் ஒட்டகத் தொழுவத்திற்குள் நுழைந்தது. அது தனது காலால் என்னை உதைத்துவிட்டது.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களுடன் (தாமும் அந்த ஒட்டகத்தைக் கண்டதாக) சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாகவே நான் எண்ணுகிறேன்” என்று இடம்பெற்றுள்ளது.

புஷைர் பின் யஸார் (ரஹ்) அவர்களிடமிருந்து யஹ்யா (ரஹ்) அவர்கள் வழியாக வந்துள்ள மற்றோர் அறிவிப்பில் சஹ்ல் (ரலி) அவர்கள் மட்டும் இதை அறிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை.)


அத்தியாயம் : 78
6144. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَخْبِرُونِي بِشَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُسْلِمِ، تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا، وَلاَ تَحُتُّ وَرَقَهَا "". فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَكَرِهْتُ أَنْ أَتَكَلَّمَ وَثَمَّ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَلَمَّا لَمْ يَتَكَلَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هِيَ النَّخْلَةُ "". فَلَمَّا خَرَجْتُ مَعَ أَبِي قُلْتُ يَا أَبَتَاهْ وَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ. قَالَ مَا مَنَعَكَ أَنْ تَقُولَهَا لَوْ كُنْتَ قُلْتَهَا كَانَ أَحَبَّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا. قَالَ مَا مَنَعَنِي إِلاَّ أَنِّي لَمْ أَرَكَ وَلاَ أَبَا بَكْرٍ تَكَلَّمْتُمَا، فَكَرِهْتُ.
பாடம்: 89 வயதில் மூத்தவருக்கு மரியாதை செய்வதும், வயதில் மூத்தவரே முதலில் பேசவும் கேள்வி கேட்கவும் தொடங்குவதும்158
6144. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மரத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதன் நிலை ஒரு முஸ்லிமின் நிலைக்குச் சமமாகும். அந்த மரம் தன் அதிபதியின் ஆணைக்கேற்ப எல்லா நேரங்களிலும் கனி தருகிறது. அதன் இலை உதிர்வதில்லை. (அது எந்த மரம்?)” என்று கேட்டார்கள். என் மனத்தில் அது பேரீச்சமரம்தான் என்று தோன்றியது. ஆயினும், (அதைப் பற்றிப்) பேச நான் விரும்பவில்லை. அங்கு (மூத்தவர்களான) அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (ஏதும் பேசாமல்) இருந்தார்கள். அவர்கள் பேசாமலிருக்கவே, நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்தான்” என்றார்கள்.

நான் என் தந்தை (உமர் -ரலி) அவர்களுடன் வெளியில் வந்தபோது, “தந்தையே! அது பேரீச்சமரம்தான் என்று என் மனத்தில் தோன்றியது” என்றேன். அவர்கள், “ஏன் அதை நபி (ஸல்) அவர்களிடம் நீ சொல்லவில்லை? நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்னதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாய் இருந்திருக்குமே!” என்று சொன்னார்கள். தாங்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பேசாமல் இருந்ததைக் கண்டதாலேயே நான் (அது குறித்துப் பேச) விரும்பவில்லை” என்றேன்.161

அத்தியாயம் : 78
6145. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ أَخْبَرَهُ أَنَّ أُبَىَّ بْنَ كَعْبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً "".
பாடம்: 90 கவிதை, ஈரசைச்சீர் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்162 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்” என்பதற்கு “எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163
6145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.164

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6146. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْشِي إِذْ أَصَابَهُ حَجَرٌ فَعَثَرَ فَدَمِيَتْ إِصْبَعُهُ فَقَالَ "" هَلْ أَنْتِ إِلاَّ إِصْبَعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ "".
பாடம்: 90 கவிதை, ஈரசைச்சீர் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்162 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிதவறியவர்கள்தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர. அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்துகொள்வார்கள். (26:224-227) (26:225ஆவது வசனத்திலுள்ள) “அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்” என்பதற்கு “எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விவரித்தார்கள்.163
6146. ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு போரின் போது) நடந்துகொண்டிருக்கையில் அவர்களுக்குக் (காலில்) கல் பட்டுவிட்டது. இதனால் அவர்களின் (கால்) விரலில் (காயமேற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள்,

“நீ இரத்தம் சொட்டுகின்றஒரு விரல்தானே!நீ பட்டதெல்லாம்இறைவழியில்தானே!”

என்று (ஈரசைச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.165


அத்தியாயம் : 78