6118. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ وَهْوَ يُعَاتَبُ فِي الْحَيَاءِ يَقُولُ إِنَّكَ لَتَسْتَحْيِي. حَتَّى كَأَنَّهُ يَقُولُ قَدْ أَضَرَّ بِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ "".
பாடம்: 77
நாணம்132
6118. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக்கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு இழப்புதான்” என்பதுபோல் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடு! நாணம் இறைநம்பிக்கையில் ஓரம்சமாகும்” என்று சொன்னார்கள்.133
அத்தியாயம் : 78

6119. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مَوْلَى، أَنَسٍ ـ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي عُتْبَةَ ـ سَمِعْتُ أَبَا سَعِيدٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا.
பாடம்: 77
நாணம்132
6119. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.134
இதை அப்துல்லாஹ் பின் அபீஉத்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6120. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ "".
பாடம்: 78
நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்.
6120. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.
இதை அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.135

6121. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ فَقَالَ "" نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ "".
பாடம்: 79
மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6121. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தி யத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப் படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்.136

6122. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ، لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَلاَ يَتَحَاتُّ "". فَقَالَ الْقَوْمُ هِيَ شَجَرَةُ كَذَا. هِيَ شَجَرَةُ كَذَا، فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ. وَأَنَا غُلاَمٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ، فَقَالَ "" هِيَ النَّخْلَةُ "". وَعَنْ شُعْبَةَ حَدَّثَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنِ ابْنِ عُمَرَ مِثْلَهُ وَزَادَ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ فَقَالَ لَوْ كُنْتَ قُلْتَهَا لَكَانَ أَحَبَّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا.
பாடம்: 79
மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6122. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியாதாவது:
“இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்ற தாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், “அது இன்ன மரம்; அது இன்ன மரம்” என்று கூறினர்.
அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக்கொண்டு சொல்லாமல் இருந்துவிட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அது எனக்கு இன்ன இன்னவற்றைவிட உவப்பானதாய் இருந்திருக்கும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.137

6123. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مَرْحُومٌ، سَمِعْتُ ثَابِتًا، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَتْ هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ فَقَالَتِ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا. فَقَالَ هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهَا.
பாடம்: 79
மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6123. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணமுடித்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் ‘(மணமுடித்துக்கொள்ள) தங்களுக்கு நான் தேவையா?’ என்று கேட்டார்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வியார் “என்ன வெட்கங்கெட்டதனம்!” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார்.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளும்படி கோரிய அந்தப் பெண் உன்னைவிடச் சிறந்தவர் ஆவார்” என்று சொன்னார்கள்.138

6124. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا "" يَسِّرَا وَلاَ تُعَسِّرَا، وَبَشِّرَا وَلاَ تُنَفِّرَا، وَتَطَاوَعَا "". قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنَ الْعَسَلِ، يُقَالُ لَهُ الْبِتْعُ، وَشَرَابٌ مِنَ الشَّعِيرِ، يُقَالُ لَهُ الْمِزْرُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كُلُّ مُسْكِرٍ حَرَامٌ "".
பாடம்: 80
“(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6124. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு) அனுப்பியபோது எங்கள் இருவரிடமும், “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போதுகூட) வெறுப்பேற்றி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள் (பிளவு பட்டுவிடாதீர்கள்)” என்று சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒருவகை பானமும் தொலி நீக்கப்படாத கோதுமையில் ‘மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒருவகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.141

6125. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَسَكِّنُوا وَلاَ تُنَفِّرُوا "".
பாடம்: 80
“(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6125. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். ஆறுதலாக நடந்துகொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.142

6126. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَمْرَيْنِ قَطُّ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إِثْمًا، فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ، وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ فِي شَىْءٍ قَطُّ، إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ، فَيَنْتَقِمَ بِهَا لِلَّهِ.
பாடம்: 80
“(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6126. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும்பட்சத்தில்- எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிóருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒருபோதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தால் தவிர! (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்).143

6127. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الأَزْرَقِ بْنِ قَيْسٍ، قَالَ كُنَّا عَلَى شَاطِئِ نَهْرٍ بِالأَهْوَازِ قَدْ نَضَبَ عَنْهُ الْمَاءُ، فَجَاءَ أَبُو بَرْزَةَ الأَسْلَمِيُّ عَلَى فَرَسٍ، فَصَلَّى وَخَلَّى فَرَسَهُ، فَانْطَلَقَتِ الْفَرَسُ، فَتَرَكَ صَلاَتَهُ وَتَبِعَهَا حَتَّى أَدْرَكَهَا، فَأَخَذَهَا ثُمَّ جَاءَ فَقَضَى صَلاَتَهُ، وَفِينَا رَجُلٌ لَهُ رَأْىٌ، فَأَقْبَلَ يَقُولُ انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ تَرَكَ صَلاَتَهُ مِنْ أَجْلِ فَرَسٍ. فَأَقْبَلَ فَقَالَ مَا عَنَّفَنِي أَحَدٌ مُنْذُ فَارَقْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ إِنَّ مَنْزِلِي مُتَرَاخٍ فَلَوْ صَلَّيْتُ وَتَرَكْتُ لَمْ آتِ أَهْلِي إِلَى اللَّيْلِ. وَذَكَرَ أَنَّهُ صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَرَأَى مِنْ تَيْسِيرِهِ.
பாடம்: 80
“(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6127. அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஈரானிலுள்ள) ‘அஹ்வாஸ்’ எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங்கரை யில் இருந்துகொண்டிருந்தோம்.-அதில் தண்ணீர் வற்றிப்போயிருந்தது.- அப்போது அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் குதிரையொன்றில் வந்து (இறங்கி) அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டுத் தொழுதார்கள். அப்போது அந்தக் குதிரை நடக்கலாயிற்று.
உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் தமது தொழுகையை விட்டுவிட்டு குதிரையைப் பின்தொடர்ந்து சென்று, அதை அடைந்து பிடித்துக்கொண்டார்கள். பிறகு வந்து தமது தொழுகையை நிறைவு செய்தார்கள்.
எங்களிடையே (மாறுபட்ட) சிந்தனைகொண்ட (காரிஜிய்யாக்களில்) ஒரு மனிதர் இருந்தார். அவர், “ஒரு குதிரைக்காகத் தமது தொழுகையையே விட்டுவிட்ட இந்த முதியவரைப் பாருங்கள்” என்று கூறியவாறு (சபித்தவராக) முன்னோக்கி வந்தார். உடனே அபூபர்ஸா (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்ததிலிருந்து என்னுடன் யாரும் (இவ்வளவு) கடுமையாக நடந்துகொண்டதில்லை. எனது இல்லம் தொலைவில் உள்ளது. நான் (எனது குதிரையை) விட்டுவிட்டு தொழுதுகொண்டிருந்தால் (அது எங்காவது போய்விடும். பிறகு) நான் என் வீட்டாரிடம் இரவுவரை போய்ச் சேர முடியாது” என்று கூறினார்கள்.
மேலும், தாம் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்ததாகவும் அப்போது நபி (ஸல்) அவர்கள் (எதிலும்) எளிதாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட் டார்கள்.144

6128. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ، فَثَارَ إِلَيْهِ النَّاسُ لِيَقَعُوا بِهِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعُوهُ، وَأَهْرِيقُوا عَلَى بَوْلِهِ ذَنُوبًا مِنْ مَاءٍ ـ أَوْ سَجْلاً مِنْ مَاءٍ ـ فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ، وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ "".
பாடம்: 80
“(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர் கள்” எனும் நபிமொழி139
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையுமே விரும்பி வந்தார்கள்.140
6128. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்துகொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்துகொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.145
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

6129. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ "" يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ "".
பாடம்: 81
மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்துகொள்வதும்
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்திவிடாதே.
6129. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவுக்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம், “அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?” என்றுகூடக் கேட்பார்கள்.146

6130. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَىَّ فَيَلْعَبْنَ مَعِي.
பாடம்: 81
மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்துகொள்வதும்
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்திவிடாதே.
6130. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (சிறுமியாக இருந்தபோது) நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

6131. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، حَدَّثَهُ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ. أَنَّهُ، اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقَالَ "" ائْذَنُوا لَهُ فَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ "". أَوْ "" بِئْسَ أَخُو الْعَشِيرَةِ "". فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْكَلاَمَ. فَقُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ مَا قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ فِي الْقَوْلِ. فَقَالَ "" أَىْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ مَنْ تَرَكَهُ ـ أَوْ وَدَعَهُ ـ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ "".
பாடம்: 82
மக்களுடன் கனிவாகப் பேசுவது
“சிலருக்கு முன்னால் நாங்கள் (மனிதநேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக்கொண்டிருக்கும்” என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.147
6131. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்” என்று சொன்னார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதுபோல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள்.
(அவர் சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் தகுதியில் மிகவும் மோசமானவர்” என்று கூறினார்கள்.148

6132. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ، فَلَمَّا جَاءَ قَالَ "" خَبَأْتُ هَذَا لَكَ "". قَالَ أَيُّوبُ بِثَوْبِهِ أَنَّهُ يُرِيهِ إِيَّاهُ، وَكَانَ فِي خُلُقِهِ شَىْءٌ. رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ، قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقْبِيَةٌ.
பாடம்: 82
மக்களுடன் கனிவாகப் பேசுவது
“சிலருக்கு முன்னால் நாங்கள் (மனிதநேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக்கொண்டிருக்கும்” என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது.147
6132. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பொன் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றி லிருந்து ஒன்றை மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (அந்த அங்கியுடன் வந்து) “உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்” என்று சொன்னார்கள்.
அய்யூப் (ரஹ்) அவர்களின் அறிவிப் பில், “அந்த ஆடையை எடுத்துவந்து அவரிடம் காட்டியவாறு” என்றும், “மக்ரமா (ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது” என்றும் கூறப்பெற்றுள்ளது.149
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹாத்திம் பின் வர்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன” என்று மிஸ்வர் (ரலி) அவர்களிடமிருந்தே (அறிவிப்பாளர்தொடர் முறிவுறாமல்- முத்தஸிலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

6133. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ "".
பாடம்: 83
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.
முஆவியா (ரலி) அவர்கள், “அனுபவசாலியே அறிவாளியாவார்” என்று சொன்னார்கள்.
6133. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.150
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6134. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ "". قُلْتُ بَلَى. قَالَ "" فَلاَ تَفْعَلْ، قُمْ وَنَمْ، وَصُمْ وَأَفْطِرْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّكَ عَسَى أَنْ يَطُولَ بِكَ عُمُرٌ، وَإِنَّ مِنْ حَسْبِكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ "". قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَىَّ فَقُلْتُ فَإِنِّي أُطِيقُ غَيْرَ ذَلِكَ. قَالَ "" فَصُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلاَثَةَ أَيَّامٍ "". قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَىَّ قُلْتُ أُطِيقُ غَيْرَ ذَلِكَ. قَالَ "" فَصُمْ صَوْمَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ "". قُلْتُ وَمَا صَوْمُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ قَالَ "" نِصْفُ الدَّهْرِ "".
பாடம்: 84
விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை
6134. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மை தானா?)” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று பதிலளித்தேன்.
(அதற்கு) நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சிலநாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! ஏனெனில், உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உமது கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உமது வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர்நோன்பும் தொடர் வழிபாடும் சாத்தியப்படாமல்போகலாம். ஆகவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்.
ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்” என்று கூறினார்கள்.
ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் “(அல்லாஹ்வின் தூதரே!) இதற்கு மேலும் என்னால் முடியும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக்கொள்க” என்றார்கள். நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. “இதற்கு மேலும் என்னால் முடியும் (அல்லாஹ்வின் தூதரே!)” என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக்கொள்வீராக” என்றார்கள். “இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பு எது?” என்று கேட்டேன். “(ஒருநாள் விட்டு ஒருநாள் நோற்பதால்) வருடத்தில் பாதி நாட்கள் நோற்பதாகும்” என்று பதிலளித்தார்கள்.151

6135. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا بَعْدَ ذَلِكَ فَهْوَ صَدَقَةٌ، وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ "". حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، مِثْلَهُ وَزَادَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ "".
பாடம்: 85
விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும்
அல்லாஹ் கூறுகின்றான்:
இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24)
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.
வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்தோம்பல் மூன்று தினங்களாகும். அதற்குமேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும். (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று.
இதை அபூஷுரைஹ் குவைலித் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.152

6136. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ "".
பாடம்: 85
விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும்
அல்லாஹ் கூறுகின்றான்:
இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24)
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.
வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6136. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளை யும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153

6137. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلاَ يَقْرُونَنَا فَمَا تَرَى، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا، فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ "".
பாடம்: 85
விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும்
அல்லாஹ் கூறுகின்றான்:
இப்றாஹீமின் கண்ணியமிக்க விருந்தி னர்களின் செய்தி உமக்கு வந்ததா? (51:24)
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
‘விருந்தினர்’ என்பதை (அரபியில்) ‘ஸவ்ர்’ என்றும், ‘ளைஃப்’ என்றும் கூறுவர். வேர்ச்சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும். ‘ரிழா’ (திருப்தி), ‘அத்ல்’ (நீதி) ஆகிய சொற்களைப்போல. ‘ஃகவ்ர்’ (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால் (மாஉ -தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு), ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.
வாளிக்கு எட்டாத அளவுக்கு நீர் வற்றிப்போனால், அதை ‘ஃகவ்ர்’ என்பர். நீ ஒளிந்துகொள்ளும் பொருளுக்கு ‘மஃகாரத்’ (குகை) எனப்படும். (18:17ஆவது வசனத்தில் இடம்பெறும்) ‘தஸாவரு’ எனும் சொல்லுக்கு ‘சாயும்’ என்பது பொருள். மிகவும் சாய்ந்த பொருளை ‘அஸ்வர்’ என்பர்.
6137. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறீர்கள். நாங்களும் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றார்கள். அவ்வாறெனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் செய்துதர ஏற்பாடு செய்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தினர்க(ளான உங்க)ளுக்குத் தேவையான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார்கள்.154