6104. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَيُّمَا رَجُلٍ قَالَ لأَخِيهِ يَا كَافِرُ. فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا "".
பாடம்: 73 தகுந்த காரணமின்றி தம் சகோதரரை ‘இறைமறுப்பாளர்’ (காஃபிர்) என்று கூறுகிறவர், அவர்தான் அப்படி ஆவார்.117
6104. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதர ரைப் பார்த்து ‘காஃபிரே!’ (இறைமறுப் பாளனே!) என்று அழைக்கிறாரோ நிச்சயம் அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6105. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهْوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَىْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهْوَ كَقَتْلِهِ "".
பாடம்: 73 தகுந்த காரணமின்றி தம் சகோதரரை ‘இறைமறுப்பாளர்’ (காஃபிர்) என்று கூறுகிறவர், அவர்தான் அப்படி ஆவார்.117
6105. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். இறை நம்பிக்கையாளரைச் சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை யார் இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.119

அத்தியாயம் : 78
6106. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا سَلِيمٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ ـ رضى الله عنه ـ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمُ الصَّلاَةَ، فَقَرَأَ بِهِمُ الْبَقَرَةَ ـ قَالَ ـ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلاَةً خَفِيفَةً، فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ. فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا، وَنَسْقِي بِنَوَاضِحِنَا، وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ، فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ، فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ـ ثَلاَثًا ـ اقْرَأْ {وَالشَّمْسِ وَضُحَاهَا} وَ{سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} وَنَحْوَهَا "".
பாடம்: 74 தகுந்த காரணத்தாலோ அறியாமை யாலோ அவ்வாறு (முஸ்óமை ‘இறைமறுப்பாளர்’ என்று) கூறியவர், இறைமறுப்பாளராகி விடுவதில்லை எனக் கருது வோரின் கூற்று உமர் (ரலி) அவர்கள், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களைப் பார்த்து, (அவர் முஸ்லிம்களின் இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதியபோது) “இவர் நயவஞ்கர்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஹாத்திப் பத்ர் போரில் கலந்துகொண்டவர். ஆகவே, உமரே!) உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களைப் பார்த்து, ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று கூறினார்கள்.120
6106. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி (ஸல்) அவர்களுடன் தொழுத) அதே தொழு கையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒருமுறை அவர் இஷா தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தமது பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)” என்று சொன்னார்கள்.

அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்தபோது (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் (ரலி) அவர்களிடம்), “முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?” என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், “(நீர் இமாமாக நிற்கும்போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!” என்றும் சொன்னார்கள்.121


அத்தியாயம் : 78
6107. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ "".
பாடம்: 74 தகுந்த காரணத்தாலோ அறியாமை யாலோ அவ்வாறு (முஸ்óமை ‘இறைமறுப்பாளர்’ என்று) கூறியவர், இறைமறுப்பாளராகி விடுவதில்லை எனக் கருது வோரின் கூற்று உமர் (ரலி) அவர்கள், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களைப் பார்த்து, (அவர் முஸ்லிம்களின் இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதியபோது) “இவர் நயவஞ்கர்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஹாத்திப் பத்ர் போரில் கலந்துகொண்டவர். ஆகவே, உமரே!) உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களைப் பார்த்து, ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று கூறினார்கள்.120
6107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் சத்தியம் செய்யும் போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின்மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார் தம் நண்பரிடம், ‘வா! சூது விளையாடுவோம்’ என்று கூறுகிறாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122


அத்தியாயம் : 78
6108. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّهُ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي رَكْبٍ وَهْوَ يَحْلِفُ بِأَبِيهِ، فَنَادَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ، وَإِلاَّ فَلْيَصْمُتْ "".
பாடம்: 74 தகுந்த காரணத்தாலோ அறியாமை யாலோ அவ்வாறு (முஸ்óமை ‘இறைமறுப்பாளர்’ என்று) கூறியவர், இறைமறுப்பாளராகி விடுவதில்லை எனக் கருது வோரின் கூற்று உமர் (ரலி) அவர்கள், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களைப் பார்த்து, (அவர் முஸ்லிம்களின் இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதியபோது) “இவர் நயவஞ்கர்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஹாத்திப் பத்ர் போரில் கலந்துகொண்டவர். ஆகவே, உமரே!) உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ், பத்ர் போரில் பங்கேற்றவர்களைப் பார்த்து, ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று கூறினார்கள்.120
6108. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்துகொண்டிருந்தபோது அவர்களை நான் அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, “அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் தந்தையர்மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். யார் சத்தியம் செய்ய விழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருந்துவிடட்டும்” என்று கூறினார்கள்.123

அத்தியாயம் : 78
6109. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَفِي الْبَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ، فَتَلَوَّنَ وَجْهُهُ، ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، وَقَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُصَوِّرُونَ هَذِهِ الصُّوَرَ "".
பாடம்: 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமை யாக நடந்துகொள்வதும் அனு மதிக்கப்பட்டதே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124
6109. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப்படங்கள் உள்ள திரைச்சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். மேலும் அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப்படங்களை வரைகின்றவர்களும் அடங்குவர்” என்று சொன்னார்கள்.125


அத்தியாயம் : 78
6110. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا قَالَ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ قَالَ فَقَالَ "" يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الْمَرِيضَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ "".
பாடம்: 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமை யாக நடந்துகொள்வதும் அனு மதிக்கப்பட்டதே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124
6110. அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த்தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத் திற்கு)ச் செல்வதில்லை” என்று கூறினார். இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன்எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாகக் கோபம் கொண்டதை நான் கண்டேன்.

அப்போது அவர்கள், “மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகின்றவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்று)த் தொழுவித்தால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்” என்று கூறினார்கள்.126


அத்தியாயம் : 78
6111. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً، فَحَكَّهَا بِيَدِهِ، فَتَغَيَّظَ ثُمَّ قَالَ "" إِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّ اللَّهَ حِيَالَ وَجْهِهِ، فَلاَ يَتَنَخَّمَنَّ حِيَالَ وَجْهِهِ فِي الصَّلاَةِ "".
பாடம்: 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமை யாக நடந்துகொள்வதும் அனு மதிக்கப்பட்டதே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124
6111. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) தொழுதுகொண்டிருக்கையில் பள்ளிவாசலின் கிப்லா திசையில் (சுவரில் உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். அதனால் கோபமடைந்த அவர்கள் அதை (மட்டை ஒன்றினால்) தமது கரத்தாலேயே சுரண்டிவிட்டார்கள். பிறகு, “நீங்கள் தொழுகையில் இருக்கும்போது இறைவன் உங்கள் எதிரே இருக்கின்றான். எனவே, எவரும் தொழுகையில் இருக்கும்போது தமது முகத்துக்கு எதிரே உமிழ வேண்டாம்” என்று சொன்னார்கள்.127


அத்தியாயம் : 78
6112. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ فَقَالَ "" عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ "" خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ، أَوْ لأَخِيكَ، أَوْ لِلذِّئْبِ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الإِبِلِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوِ احْمَرَّ وَجْهُهُ ـ ثُمَّ قَالَ "" مَالَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "".
பாடம்: 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமை யாக நடந்துகொள்வதும் அனு மதிக்கப்பட்டதே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124
6112. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சாலையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஓராண்டு காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச்செய்! பிறகு, அதன் முடிச்சையும் அதன் பை(உறை) யையும் பாதுகாத்து வைத்திரு! பிறகு (யாரும் உரிமை கோராவிட்டால்) நீயே அதனைச் செலவழித்துக்கொள்! பின்னர் அதன் உரிமையாளர் உன்னிடம் (அதன் அடையாளத்தைக் கூறியபடி) வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்துவிடு!” என்று சொன்னார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்கு உரியது; அல்லது உன் சகோதரருக்கு உரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று சொன்னார்கள்.

அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். (இதை அவர் கேட்ட) உடன் கோபத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவர்களுடைய இரு கன்னங்களும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு, “உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதை அதன் எசமான் சந்திக்கும்வரை (நடப்பதற்கு) அதன் குளம்பும் (குடிப்பதற்கு) அதன் தண்ணீர் பையும் அதனிடம் உள்ளதே!” என்று கேட்டார்கள்.128


அத்தியாயம் : 78
6113. وَقَالَ الْمَكِّيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ،. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ احْتَجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حُجَيْرَةً مُخَصَّفَةً أَوْ حَصِيرًا، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِيهَا، فَتَتَبَّعَ إِلَيْهِ رِجَالٌ وَجَاءُوا يُصَلُّونَ بِصَلاَتِهِ، ثُمَّ جَاءُوا لَيْلَةً فَحَضَرُوا وَأَبْطَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْهُمْ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ فَرَفَعُوا أَصْوَاتَهُمْ وَحَصَبُوا الْبَابَ، فَخَرَجَ إِلَيْهِمْ مُغْضَبًا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا زَالَ بِكُمْ صَنِيعُكُمْ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُكْتَبُ عَلَيْكُمْ، فَعَلَيْكُمْ بِالصَّلاَةِ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ خَيْرَ صَلاَةِ الْمَرْءِ فِي بَيْتِهِ، إِلاَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ "".
பாடம்: 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமை யாக நடந்துகொள்வதும் அனு மதிக்கப்பட்டதே. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124
6113. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளி வாசலில்) அமைத்துக்கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித்தோழர்களில்) சிலரும் வந்து நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தி னார்கள். எனவே, தோழர்கள் தங்களது குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர். (நபிய வர்களுக்கு நினைவூட்ட அவர்களது வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, “(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செயல் தொடர்ந்துகொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (அதனால்தான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான) தொழுகையைத் தொழுது வாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்றத் தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.129

அத்தியாயம் : 78
6114. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ "".
பாடம்: 76 கோபத்தைத் தவிர்த்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனையே முற்றிலும் நம்பி யிருப்போர் எத்தகையோர் எனில்,) அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற் குள்ளாகும்போது மன்னித்துவிடுவார்கள். (42:37) மேலும், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில்,) அவர்கள் இன்பத்திலும் துன்பத் திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக்கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். (இத்தகைய) நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
6114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னை ஆள்பவனே ஆவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 78
6115. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ عِنْدَهُ جُلُوسٌ، وَأَحَدُهُمَا يَسُبُّ صَاحِبَهُ مُغْضَبًا قَدِ احْمَرَّ وَجْهُهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ لَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ "". فَقَالُوا لِلرَّجُلِ أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ إِنِّي لَسْتُ بِمَجْنُونٍ.
பாடம்: 76 கோபத்தைத் தவிர்த்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனையே முற்றிலும் நம்பி யிருப்போர் எத்தகையோர் எனில்,) அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற் குள்ளாகும்போது மன்னித்துவிடுவார்கள். (42:37) மேலும், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில்,) அவர்கள் இன்பத்திலும் துன்பத் திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக்கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். (இத்தகைய) நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
6115. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரது முகம் சிவந்துவிட்டிருக்க கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்” என்று கூறினார்கள்.

ஆகவே, மக்கள் அம்மனிதரிடம், “நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா?” என்று கூறினர். அந்த மனிதர், “நான் பைத்தியக்காரன் அல்லன்” என்று சொன்னார்.130


அத்தியாயம் : 78
6116. حَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ ـ هُوَ ابْنُ عَيَّاشٍ ـ عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي. قَالَ "" لاَ تَغْضَبْ "". فَرَدَّدَ مِرَارًا، قَالَ "" لاَ تَغْضَبْ "".
பாடம்: 76 கோபத்தைத் தவிர்த்தல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (இறைவனையே முற்றிலும் நம்பி யிருப்போர் எத்தகையோர் எனில்,) அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற் குள்ளாகும்போது மன்னித்துவிடுவார்கள். (42:37) மேலும், வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில்,) அவர்கள் இன்பத்திலும் துன்பத் திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக்கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். (இத்தகைய) நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
6116. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு அறிவுரை கூறுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “கோபத்தைக் கைவிடு” என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (“அறிவுரை கூறுங்கள்” எனப்) பலமுறை கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் “கோபத்தைக் கைவிடு” என்றே சொன்னார்கள்.131

அத்தியாயம் : 78
6117. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي السَّوَّارِ الْعَدَوِيِّ، قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْحَيَاءُ لاَ يَأْتِي إِلاَّ بِخَيْرٍ "". فَقَالَ بُشَيْرُ بْنُ كَعْبٍ مَكْتُوبٌ فِي الْحِكْمَةِ إِنَّ مِنَ الْحَيَاءِ وَقَارًا، وَإِنَّ مِنَ الْحَيَاءِ سَكِينَةً. فَقَالَ لَهُ عِمْرَانُ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَتُحَدِّثُنِي عَنْ صَحِيفَتِكَ.
பாடம்: 77 நாணம்132
6117. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “நாணம் நன்மையே தரும்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், “சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு. சில (வகை) நாணத்தில் மனஅமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அப்போது அவரிடம் இம்ரான் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கி றேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர் களே!” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 78
6118. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ وَهْوَ يُعَاتَبُ فِي الْحَيَاءِ يَقُولُ إِنَّكَ لَتَسْتَحْيِي. حَتَّى كَأَنَّهُ يَقُولُ قَدْ أَضَرَّ بِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ "".
பாடம்: 77 நாணம்132
6118. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக்கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு இழப்புதான்” என்பதுபோல் சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடு! நாணம் இறைநம்பிக்கையில் ஓரம்சமாகும்” என்று சொன்னார்கள்.133


அத்தியாயம் : 78
6119. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مَوْلَى، أَنَسٍ ـ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي عُتْبَةَ ـ سَمِعْتُ أَبَا سَعِيدٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَشَدَّ حَيَاءً مِنَ الْعَذْرَاءِ فِي خِدْرِهَا.
பாடம்: 77 நாணம்132
6119. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள்.134

இதை அப்துல்லாஹ் பின் அபீஉத்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 78
6120. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ "".
பாடம்: 78 நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்.
6120. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான், “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.135

அத்தியாயம் : 78
6121. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ فَقَالَ "" نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ "".
பாடம்: 79 மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6121. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சத்தி யத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப் படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம். அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள்மீது கடமைதான்)” என்று பதிலளித்தார்கள்.136


அத்தியாயம் : 78
6122. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ، لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَلاَ يَتَحَاتُّ "". فَقَالَ الْقَوْمُ هِيَ شَجَرَةُ كَذَا. هِيَ شَجَرَةُ كَذَا، فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ. وَأَنَا غُلاَمٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ، فَقَالَ "" هِيَ النَّخْلَةُ "". وَعَنْ شُعْبَةَ حَدَّثَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنِ ابْنِ عُمَرَ مِثْلَهُ وَزَادَ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ فَقَالَ لَوْ كُنْتَ قُلْتَهَا لَكَانَ أَحَبَّ إِلَىَّ مِنْ كَذَا وَكَذَا.
பாடம்: 79 மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6122. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியாதாவது:

“இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்ற தாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், “அது இன்ன மரம்; அது இன்ன மரம்” என்று கூறினர்.

அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக்கொண்டு சொல்லாமல் இருந்துவிட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அது எனக்கு இன்ன இன்னவற்றைவிட உவப்பானதாய் இருந்திருக்கும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.137


அத்தியாயம் : 78
6123. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مَرْحُومٌ، سَمِعْتُ ثَابِتًا، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَتْ هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ فَقَالَتِ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا. فَقَالَ هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَفْسَهَا.
பாடம்: 79 மார்க்க உண்மைகளைக் கேட்டறி வதற்கு வெட்கப்படலாகாது.
6123. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணமுடித்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் ‘(மணமுடித்துக்கொள்ள) தங்களுக்கு நான் தேவையா?’ என்று கேட்டார்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வியார் “என்ன வெட்கங்கெட்டதனம்!” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளும்படி கோரிய அந்தப் பெண் உன்னைவிடச் சிறந்தவர் ஆவார்” என்று சொன்னார்கள்.138

அத்தியாயம் : 78