610. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَارَ عَلَيْهِمْ، قَالَ فَخَرَجْنَا إِلَى خَيْبَرَ فَانْتَهَيْنَا إِلَيْهِمْ لَيْلاً، فَلَمَّا أَصْبَحَ وَلَمْ يَسْمَعْ أَذَانًا رَكِبَ وَرَكِبْتُ خَلْفَ أَبِي طَلْحَةَ، وَإِنَّ قَدَمِي لَتَمَسُّ قَدَمَ النَّبِيِّ صلى الله عليه وسلم. قَالَ فَخَرَجُوا إِلَيْنَا بِمَكَاتِلِهِمْ وَمَسَاحِيهِمْ فَلَمَّا رَأَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالُوا مُحَمَّدٌ وَاللَّهِ، مُحَمَّدٌ وَالْخَمِيسُ. قَالَ فَلَمَّا رَآهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ "".
பாடம் : 6
தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பகுதிமீது போர் தொடுக்க லாகாது.4
610. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும்வரை எங்களைப் போரில் ஈடுபடுத்தமாட்டார்கள். (சுப்ஹு நேரம் வரை) காத்திருப்பார்கள். (அப்பகுதியில்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அவர்களை விட்டுவிடுவார்கள். தொழுகை அறிவிப்பைச் செவியுறாவிட்டால் அவர்கள்மீது தாக்குதல் தொடுப்பார்கள்.
இந்நிலையில், நாங்கள் கைபரை நோக்கி (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையின்போது தொழுகை அறிவிப்பைச் செவியுறாததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன்.
அப்போது எனது கால், (அருகில் சென்ற) நபி (ஸல்) அவர்களது கா-ல் உராயும். அப்போது கைபர்வாசி(களான யூதர்)கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், “முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்)” என்று கூறினர்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும், “அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்” என்று கூறினார்கள்
அத்தியாயம் : 10

611. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ ما يَقُولُ الْمُؤَذِّنُ "".
பாடம் : 7
தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

612. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ، يَوْمًا فَقَالَ مِثْلَهُ إِلَى قَوْلِهِ "" وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ "".
பாடம் : 7
தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
612. ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (தொழுகை அறிவிப்பைச் செவியுற்ற போது) ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்பதுவரை அறிவிப்பாளர் கூறியதைப் போன்றே சொன்னதை நான் கேட்டேன்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது.

613. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، نَحْوَهُ. قَالَ يَحْيَى وَحَدَّثَنِي بَعْضُ، إِخْوَانِنَا أَنَّهُ قَالَ لَمَّا قَالَ حَىَّ عَلَى الصَّلاَةِ. قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. وَقَالَ هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صلى الله عليه وسلم يَقُولُ.
பாடம் : 7
தொழுகை அறிவிப்பைக் கேட்டால் கூற வேண்டியவை5
613. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:
தொழுகை அறிவிப்பாளர் ‘ஹய்ய அலஸ் ஸலா’ என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள் ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்று கூறினார்கள். மேலும், “இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்” என்றும் முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

614. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ "".
பாடம் : 8
தொழுகை அறிவிப்பு முடிந்த பின் ஓத வேண்டிய பிரார்த் தனை
614. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தொழுகை அறிவிப்பைக் கேட்(டு முடிக்)கும்போது, “அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸ லாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) உயர் பதவியையும் தனிச் சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உன்னத இடத்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)” என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.6
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

615. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا "".
பாடம் : 9
தொழுகை அறிவிப்புச் செய்வதற்காக (போட்டி நிலவும்போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது
தொழுகை அறிவிப்புச் செய்வதில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்துகொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க லா)னார்கள் என்று கூறப்படுகிறது.
615. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசை யி(ல் நிற்பதி)லும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால், நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.
தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷா தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின், அதற்கு (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

616. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، وَعَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ وَعَاصِمٍ الأَحْوَلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ رَدْغٍ، فَلَمَّا بَلَغَ الْمُؤَذِّنُ حَىَّ عَلَى الصَّلاَةِ. فَأَمَرَهُ أَنْ يُنَادِيَ الصَّلاَةُ فِي الرِّحَالِ. فَنَظَرَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ فَعَلَ هَذَا مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ وَإِنَّهَا عَزْمَةٌ.
பாடம் : 10
(தொழுகை அறிவிப்புச் செய்பவர்) தொழுகை அறிவிப்புக்கு இடையில் பேசுவது
சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யும்போதே (வேறு பேச்சுகள்) பேசியுள்ளார்கள்.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், “பாங்கு சொல்-க்கொண்டிருக்கும்போதோ ‘இகாமத்’ சொல்-க்கொண்டிருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமாகாது” என்று கூறினார்கள்.
616. அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மழை பெய்து) சேறும் சகதியும் நிறைந்திருந்த ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். தொழுகை அறிவிப்பாளர், ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்ல முனைந்தபோது, “உங்கள் இருப் பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்) என்று அறிவிக்குமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவரைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்துள்ளார்; ஜுமுஆ (தொழுகை) கட்டாயமானதாகும்” என்று கூறினார்கள்.7

617. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "". ثُمَّ قَالَ وَكَانَ رَجُلاً أَعْمَى لاَ يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ.
பாடம் : 11
தொழுகையின் நேரத்தைத் தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால், பார்வையற்றவரும் தொழுகை அறிவிப்புச் செய்யலாம்.
617. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ரமளானில்) பிலால், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று கூறினார்கள்.
இப்னு உம்மி மக்(த்)தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் “சுப்ஹு நேரமாகிவிட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது” என்று சொல்லப் படும்வரை அவர் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லமாட்டார்.

618. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ.
பாடம் : 12
ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
618. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹு(த் தொழுகை)க்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இகாமத்’ சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத் கள் (சுன்னத்) தொழுவார்கள்.

619. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ.
பாடம் : 12
ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
619. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழு கையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடை யில் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

620. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ بِلاَلاً يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "".
பாடம் : 12
ஃபஜ்ர் நேரம் வந்தபின் பாங்கு சொல்வது8
620. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(ரமளானில்) பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ் ருக்கு) பாங்கு சொல்லும்வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

621. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ ـ أَوْ أَحَدًا مِنْكُمْ ـ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ ـ أَوْ يُنَادِي ـ بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الْفَجْرُ أَوِ الصُّبْحُ "". وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا. وَقَالَ زُهَيْرٌ بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ.
பாடம் : 13
ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் ‘பாங்கு’ சொல்வது
621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) உங்களில் ஒருவர் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு அவரைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், உங்களில் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பவர் திரும்புவதற் காகவும் உங்களில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவுமே பிலால் (பின்) இரவில் ‘அறிவிப்புச் செய்கிறார்’ அல்லது ‘அழைக்கிறார்’.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள், தம் விரல்களை மேல்நோக்கி
உயர்த்திக்காட்டி, பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு, “இவ்வாறு (மேல் கீழாகச் செங்குத்தாய் தெரியும் வெளிச்சம்) ‘ஃபஜ்ர்’ அல்லது ‘சுப்ஹ்’ அல்ல” என்று கூறி னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள், ‘இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கை யில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றின்மீது வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (‘பரவலாகத் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; செங்குத்தாய் தோன்றுவதன்று’ என்பது போன்று) சைகை செய்தார்கள்.

622. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ،. وَعَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ. ح
وَحَدَّثَنِي يُوسُفُ بْنُ عِيسَى الْمَرْوَزِيُّ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ "".
பாடம் : 13
ஃபஜ்ர் நேரம் வருவதற்குமுன் ‘பாங்கு’ சொல்வது
622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமளானில்) பிலால் (பின்)இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்(த்)தூம் (ஃபஜ்ருக்காக) தொழுகை அறிவிப்பு செய்யும்வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக வும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

624. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثَلاَثًا ـ لِمَنْ شَاءَ "".
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்படுவதை யார் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
624. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடை யில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பிய வருக்கு (அதைத் தொழுதுகொள்ள உரிமை உண்டு)” என்று கூறினார்கள்.

625. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الأَنْصَارِيَّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَىْءٌ. قَالَ عُثْمَانُ بْنُ جَبَلَةَ وَأَبُو دَاوُدَ عَنْ شُعْبَةَ لَمْ يَكُنْ بَيْنَهُمَا إِلاَّ قَلِيلٌ.
பாடம் : 14
பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்படுவதை யார் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.
625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்புச் செய்யத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித்தோழர்களில் (முக்கியமான) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதைத் தடுப்பாக ஆக்கி ‘சுன்னத்’ தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள்.
அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது அவற்றில் சில அறிவிப்புகளில் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில்” என்று கூறியுள்ளதாக இடம்பெற்றுள்ளது.

626. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الْفَجْرِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ بَعْدَ أَنْ يَسْتَبِينَ الْفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلإِقَامَةِ.
பாடம் : 15
‘இகாமத்’ சொல்வதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது
626. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ரு டைய சுன்னத்) தொழுவார்கள்.
பின்னர் (இரண்டாவது தொழுகை அறிவிப்பான) ‘இகாமத்’ சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் முஅத்தின் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள்.

627. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ـ ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ ـ لِمَنْ شَاءَ "".
பாடம் : 16
ஒவ்வொரு பாங்கிற்கும் இகாமத் திற்கும் இடையில் ஒரு (கூடு தல்) தொழுகை உண்டு. விரும்பியவருக்கு (அதைத் தொழ உரிமை உண்டு).
627. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை ‘விரும்பியவருக்கு’ என்றார்கள்.

628. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنْ قَوْمِي فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا قَالَ "" ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ "".
பாடம் 17
பயணத்தில் ஒருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும் என்ற கருத்து9
628. மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்துகொண்டிருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவ ராகவும் மென்மையானவராகவும் இருந் தார்கள்.-
(பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச்) செல்ல ஆசைப்படு வதைக் கண்டபோது நபியவர்கள், “நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங் கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்; தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

629. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ. فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". حَتَّى سَاوَى الظِّلُّ التُّلُولَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ}
பாடம் : 18
பயணிகள் குழுவாகச் செல்லும்போதும், (ஹஜ்ஜில்) அரஃபா மற்றும் முஸ்த-ஃபாவில் இருக்கும்போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான அல்லது மழைபெய்யும் இரவுகளில், “உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்” (‘அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்
629. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பாங்கு சொல்ல முற்பட்டார். அப்போதும் அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள்.
பிறகு (மூன்றாவது முறையாக) அவர் பாங்கு சொல்ல முற்பட்டபோதும் அவரிடம் “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும்வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்.) எந்த அளவுக்கென்றால் மணல்மேடு களு(டைய உயரத்து)க்குச் சமமாக அவற்றின் நிழல் படிந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகி றது” என்று சொன்னார்கள்