6027. وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَالِسًا إِذْ جَاءَ رَجُلٌ يَسْأَلُ أَوْ طَالِبُ حَاجَةٍ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ " اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ ".
பாடம்: 36
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப் பது
6027. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘யாசித்தபடி’ அல்லது ‘ஒரு தேவைநிமித்தமாக’ வந்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி “(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவால் நிறைவேற்றுவானாக” என்றார்கள்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.43
அத்தியாயம் : 78

6028. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا أَتَاهُ السَّائِلُ أَوْ صَاحِبُ الْحَاجَةِ قَالَ "" اشْفَعُوا فَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ "".
பாடம்: 37
“யாரேனும் ஒரு நன்மையான செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் நன்மையில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. (அவ்வாறே) யாரேனும் ஒரு தீய செயலுக்குப் பரிந்துரைத்தால், அதன் குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்குண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப் பவனாக இருக்கின்றான்” எனும் (4:85ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிஃப்ல்’ எனும் சொல்லுக்கு ‘பங்கு’ என்பது பொருள்.
“ ‘கிஃப்லைனி’ என்பதற்கு அபிசீனிய மொழியில் ‘இரு பலன்கள்’ என்பது பொருள்” என அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
6028. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘யாசகர்’ அல்லது ‘தேவையுடையவர்’ எவரேனும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தால் நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி, “இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்; அல்லாஹ் தன் தூதருடைய நாவால் தான் நாடியதை நிறைவேற்றுவானாக” என்று கூறுவார்கள்.44

6029. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا وَائِلٍ، سَمِعْتُ مَسْرُوقًا، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حِينَ قَدِمَ مَعَ مُعَاوِيَةَ إِلَى الْكُوفَةِ فَذَكَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا "".
பாடம்: 38
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.
6029. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம்.
அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, “அவர்கள் இயற்கையாகவும் அருவருப் பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் கூறினார்கள்.45
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

6030. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ يَهُودَ، أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ. فَقَالَتْ عَائِشَةُ عَلَيْكُمْ، وَلَعَنَكُمُ اللَّهُ، وَغَضِبَ اللَّهُ عَلَيْكُمْ. قَالَ "" مَهْلاً يَا عَائِشَةُ، عَلَيْكِ بِالرِّفْقِ، وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ "". قَالَتْ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ "" أَوَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ رَدَدْتُ عَلَيْهِمْ، فَيُسْتَجَابُ لِي فِيهِمْ، وَلاَ يُسْتَجَابُ لَهُمْ فِيَّ "".
பாடம்: 38
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.
6030. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், “(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள்மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்” என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன். (அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
அப்போது நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (அவர்களுக்கு) அளித்த பதிலை நீ கேட்கவில்லையா? (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து ‘வ அலைக்கும்’- அவ்வாறே உங்கள்மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்து விட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது” என்று சொன்னார் கள்.46

6031. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا أَبُو يَحْيَى، هُوَ فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِلاَلِ بْنِ أُسَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبَّابًا وَلاَ فَحَّاشًا وَلاَ لَعَّانًا، كَانَ يَقُولُ لأَحَدِنَا عِنْدَ الْمَعْتَبَةِ "" مَا لَهُ، تَرِبَ جَبِينُهُ "".
பாடம்: 38
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.
6031. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள்.

6032. حَدَّثَنَا عَمْرُو بْنُ عِيسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلاً، اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهُ قَالَ "" بِئْسَ أَخُو الْعَشِيرَةِ، وَبِئْسَ ابْنُ الْعَشِيرَةِ "". فَلَمَّا جَلَسَ تَطَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي وَجْهِهِ وَانْبَسَطَ إِلَيْهِ، فَلَمَّا انْطَلَقَ الرَّجُلُ قَالَتْ لَهُ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ حِينَ رَأَيْتَ الرَّجُلَ قُلْتَ لَهُ كَذَا وَكَذَا، ثُمَّ تَطَلَّقْتَ فِي وَجْهِهِ وَانْبَسَطْتَ إِلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَائِشَةُ مَتَى عَهِدْتِنِي فَحَّاشًا، إِنَّ شَرَّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ شَرِّهِ "".
பாடம்: 38
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.
6032. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்” என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள்.
அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டீர்களே” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “ஆயிஷா! நான் கடுமையாக நடந்துகொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல் பாகப் பழகாமல்) விட்டுவிடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் தகுதியில் மிகவும் மோசமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.47

6033. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ وَهْوَ يَقُولُ "" لَنْ تُرَاعُوا، لَنْ تُرَاعُوا "". وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ مَا عَلَيْهِ سَرْجٌ، فِي عُنُقِهِ سَيْفٌ فَقَالَ "" لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا "". أَوْ "" إِنَّهُ لَبَحْرٌ "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர் களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
(ஒருமுறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந் தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர்கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்றுவிட்டிருந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், “பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, “ ‘(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்’ அல்லது ‘இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல்’ என்று கூறினார்கள்.50

6034. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ قَطُّ فَقَالَ لاَ.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6034. முஹம்மத் பின் முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் ‘இல்லை’ என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்.

6035. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ كُنَّا جُلُوسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يُحَدِّثُنَا إِذْ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا، وَإِنَّهُ كَانَ يَقُولُ "" إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6035. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்க வில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறுவார்கள்” என்று சொன்னார்கள்.51

6036. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِبُرْدَةٍ. فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ فَقَالَ الْقَوْمُ هِيَ شَمْلَةٌ. فَقَالَ سَهْلٌ هِيَ شَمْلَةٌ مَنْسُوجَةٌ فِيهَا حَاشِيَتُهَا ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَكْسُوكَ هَذِهِ. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم مُحْتَاجًا إِلَيْهَا، فَلَبِسَهَا، فَرَآهَا عَلَيْهِ رَجُلٌ مِنَ الصَّحَابَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَحْسَنَ هَذِهِ فَاكْسُنِيهَا. فَقَالَ "" نَعَمْ "". فَلَمَّا قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَمَهُ أَصْحَابُهُ قَالُوا مَا أَحْسَنْتَ حِينَ رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَذَهَا مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ إِيَّاهَا، وَقَدْ عَرَفْتَ أَنَّهُ لاَ يُسْأَلُ شَيْئًا فَيَمْنَعَهُ. فَقَالَ رَجَوْتُ بَرَكَتَهَا حِينَ لَبِسَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم لَعَلِّي أُكَفَّنُ فِيهَا.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6036. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ‘புர்தா’ (சால்வை) ஒன்றைக் கொண்டுவந்தார்” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என மக்களிடம் கேட்டார் கள். அப்போது மக்கள், “அது சால்வை” என்றனர். அப்போது சஹ்ல் (ரலி) அவர்கள், “அது கரைவைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்” என்று கூறினார்கள்.
(தொடர்ந்து கூறினார்கள்:) அப்போது அந்தப் பெண்மணி, “இதை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்(துகொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை அணிந்துகொள்ள எனக்கு கொடுங்களேன்” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சரி” என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்று விட்டபோது, அந்தத் தோழரிடம் அவருடைய நண்பர்கள், “நீர் செய்தது அழகல்ல; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால்தான் அதைப் பெற்றுக்கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டு விட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டுவிட்டீரே” என்று கூறி அவரைக் கண்டித்தனர்.
அதற்கு அவர், “நபி (ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட வளத்தை (பரக்கத்தை) நான் அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும்போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை நான் கேட்டேன்)” என்று சொன்னார்.52

6037. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعَمَلُ، وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ "". قَالُوا وَمَا الْهَرْجُ قَالَ "" الْقَتْلُ، الْقَتْلُ "".
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6037. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறுகிவிடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று சொன்னார்கள்.
மக்கள், “ஹர்ஜ் என்றால் என்ன?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “கொலை, கொலை” என்று (இருமுறை) கூறினார்கள்.

6038. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، سَمِعَ سَلاَّمَ بْنَ مِسْكِينٍ، قَالَ سَمِعْتُ ثَابِتًا، يَقُولُ حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ. وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ.
பாடம்: 39
நற்பண்பும் தயாளகுணமும் வெறுக்கப்பட்ட கருமித்தனமும்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மனிதர்களி லேயே அதிகம் வாரிவழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரிவழங்குவார்கள்.48
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டிய போது நான் என் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவருடைய சொல்லை செவியேற்பாயாக” என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பி வந்து, “அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்” என்றார்.49
6038. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை “ச்சீ ‘‘ என்றோ, “(இதை) ஏன் செய்தாய்” என்றோ, “நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் சொன்ன தில்லை.

6039. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي أَهْلِهِ قَالَتْ كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ.
பாடம்: 40
ஒருவர் தம் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
6039. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?” என்று நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால், தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.53

6040. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا، فَأَحِبَّهُ. فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا، فَأَحِبُّوهُ. فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي أَهْلِ الأَرْضِ "".
பாடம்: 41
அன்பு அல்லாஹ்விடமிருந்தே ஆரம்பமாகிறது.
6040. நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும்பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அவன் அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவான். ஆகவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து, “அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று ஜிப்ரீல் அறிவிப்பார்.
உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

6041. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ، لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ، بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا "".
பாடம்: 42
அல்லாஹ்வுக்காக அன்பு கொள்வது
6041. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:)
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியபின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும்விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராவது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55

6042. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَضْحَكَ الرَّجُلُ مِمَّا يَخْرُجُ مِنَ الأَنْفُسِ وَقَالَ "" بِمَ يَضْرِبُ أَحَدُكُمُ امْرَأَتَهُ ضَرْبَ الْفَحْلِ، ثُمَّ لَعَلَّهُ يُعَانِقُهَا "". وَقَالَ الثَّوْرِيُّ وَوُهَيْبٌ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ "" جَلْدَ الْعَبْدِ "".
பாடம்: 43
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத் தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலா னவர்களாக இருக்கலாம்” என்று தொடங்கும் (49:11ஆவது) இறைவசனம்
6042. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், (பெண்கள் தொடர்பாக) “நீங்கள் உங்கள் மனைவியை ஏன் காளையை அடிப்பதுபோல் அடிக்கிறீர்கள்? பிறகு நீங்களே அவளை (இரவில்) அணைத்துக்கொள்ள வேண்டிவருமே!” என்றும் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அடிமையை அடிப்பது போல் (ஏன் அடிக்கிறீர்கள்?)” என்று காணப்படுகிறது.56

6043. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى "" أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَىُّ بَلَدٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" بَلَدٌ حَرَامٌ، أَتَدْرُونَ أَىُّ شَهْرٍ هَذَا "". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" شَهْرٌ حَرَامٌ "". قَالَ "" فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا "".
பாடம்: 43
“இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத் தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலா னவர்களாக இருக்கலாம்” என்று தொடங்கும் (49:11ஆவது) இறைவசனம்
6043. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில் (தங்கி யிருந்தபோது ‘துல்ஹிஜ்ஜா’ பத்தாம் நாள் உரையாற்றுகையில்) “மக்களே! இது என்ன நாள் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “இது புனித நாள்” என்று கூறினார்கள்.
(பிறகு) “இது எந்த நகரம் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர். நபி (ஸல்) அவர்கள், “இது புனித நகரம்” என்று கூறினார்கள். (பிறகு) “இது என்ன மாதம் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர்.
நபி (ஸல்) அவர்கள், “இது புனித மாதம்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறினார்கள்.57

6044. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ "". تَابَعَهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ.
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6044. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச்செயல்) ஆகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.58

6045. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمَرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ، حَدَّثَهُ عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6045. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் மற்றவரை ‘பாவி’ (ஃபாஸிக்) என்றோ ‘இறைமறுப்பாளன்’ (காஃபிர்) என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளராக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகின்றது.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6046. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسٍ، قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ لَعَّانًا وَلاَ سَبَّابًا، كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ "" مَا لَهُ، تَرِبَ جَبِينُهُ "".
பாடம்: 44
ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை
6046. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போதுகூட “அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்” என்றே கூறுவார்கள்.59