5958. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي طَلْحَةَ، صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ "". قَالَ بُسْرٌ ثُمَّ اشْتَكَى زَيْدٌ فَعُدْنَاهُ، فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ رَبِيبِ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّوَرِ يَوْمَ الأَوَّلِ. فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَلَمْ تَسْمَعْهُ حِينَ قَالَ إِلاَّ رَقْمًا فِي ثَوْبٍ. وَقَالَ ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو ـ هُوَ ابْنُ الْحَارِثِ ـ حَدَّثَهُ بُكَيْرٌ، حَدَّثَهُ بُسْرٌ، حَدَّثَهُ زَيْدٌ، حَدَّثَهُ أَبُو طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 92
உருவப்படங்கள்மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள்
5958. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.
நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர் களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘‘உருவப்படங்களைப் பற்றி முன்பு ஒருநாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், ‘துணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.135
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 77

5959. حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ قِرَاَمٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَمِيطِي عَنِّي، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ لِي فِي صَلاَتِي "".
பாடம்: 93
உருவப்படங்கள் உள்ள இடத்தில் தொழுவது வெறுக்கப்பட்ட தாகும்.
5959. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச்சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக்கொண்டேயிருக் கின்றன” என்று சொன்னார்கள்.136

5960. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ ـ هُوَ ابْنُ مُحَمَّدٍ ـ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ وَعَدَ النَّبِيَّ صلى الله عليه وسلم جِبْرِيلُ فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَقِيَهُ، فَشَكَا إِلَيْهِ مَا وَجَدَ، فَقَالَ لَهُ "" إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ "".
பாடம்: 94
உருவப்படம் உள்ள வீட்டில் வான வர்கள் நுழையமாட்டார்கள்.
5960. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரது வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (ஸல்) அவர்களுக்குக் கவலை உண்டானது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘(வானவர்களாகிய) நாங்கள் உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்” என்று சொன்னார்கள்.137

5961. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ قَالَ "" مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ "". فَقَالَتِ اشْتَرَيْتُهَا لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ ـ وَقَالَ ـ إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ الْمَلاَئِكَةُ "".
பாடம்: 95
உருவப்படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது
5961. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர் களின் முகத்தில் வெறுப்பு தெரிந்தது.
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்ன திண்டு இது?” என்று கேட்டார்கள். நான், ‘‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வ தற்காகவும்தான் இதை வாங்கினேன்” என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர்கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்” எனச் சொன்னார்கள்.
மேலும், உருவப்படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.138

5962. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الْكَلْبِ، وَكَسْبِ الْبَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ وَالْمُصَوِّرَ.
பாடம் : 96
உருவப்படம் வரைவோரைச் சபித்தல்
5962. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கி னேன். (அவருடைய குருதிஉறிஞ்சு கருவிகளை உடைத்துவிட்டேன். ஏனெ னில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள்.
மேலும், வட்டி (வாங்கி) உண்பவனை யும் வட்டி உண்ணக்கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகின்றவனையும் சபித் தார்கள்.139

5963. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ سَمِعْتُ النَّضْرَ بْنَ أَنَسِ بْنِ مَالِكٍ، يُحَدِّثُ قَتَادَةَ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ وَهُمْ يَسْأَلُونَهُ وَلاَ يَذْكُرُ النَّبِيَّ صلى الله عليه وسلم حَتَّى سُئِلَ فَقَالَ سَمِعْتُ مُحَمَّدًا صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا كُلِّفَ يَوْمَ الْقِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ "".
பாடம் : 97
உருவப்படம் வரைகின்றவன் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது.
5963. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்கம்) கேட்கப் படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூறமாட்டார்கள்.
அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக் குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘உலகில் ஓர் உருவப்படத்தை வரைகின்றவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” எனக் கூறினார்கள்.

5964. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو صَفْوَانَ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ.
பாடம் : 98
ஊர்திப் பிராணியில் ஒருவர் தமக் குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது
5964. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டார்கள்.140

5965. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ اسْتَقْبَلَهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ وَالآخَرَ خَلْفَهُ.
பாடம் : 99
ஒரே ஊர்திப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது
5965. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம், அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தமது ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்.

5966. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، ذُكِرَ الأَشَرُّ الثَّلاَثَةُ عِنْدَ عِكْرِمَةَ فَقَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ أَتَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ حَمَلَ قُثَمَ بَيْنَ يَدَيْهِ، وَالْفَضْلَ خَلْفَهُ، أَوْ قُثَمَ خَلْفَهُ، وَالْفَضْلَ بَيْنَ يَدَيْهِ، فَأَيُّهُمْ شَرٌّ أَوْ أَيُّهُمْ خَيْرٌ.
பாடம் : 100
ஊர்திப் பிராணியின் உரிமை யாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது
(அறிஞர்களில்) சிலர் கூறினர்: ஊர்தி யின் உரிமையாளரே அதன் முற்பகுதி யில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் தம்முடன் அமர்பவருக்கு முற்பகுதியில் உட்கார அனுமதியளித்தால் அவர் உட்காரலாம்.
5966. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இக்ரிமா (ரஹ்) அவர்கள் முன்னிலையில், ‘‘(ஊர்திப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக் கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?” என்பது குறித்துப் பேசப்பட்டது.
அப்போது இக்ரிமா (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள். (அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி (ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) ‘யார் தீயவர்?’ அல்லது ‘யார் நல்லவர்?’ என்று கூறமுடியுமா?” என்று கேட்டார்கள்.

5967. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ، صلى الله عليه وسلم لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ أَخِرَةُ الرَّحْلِ فَقَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ "" هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا "". ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ "" يَا مُعَاذُ بْنَ جَبَلٍ "". قُلْتُ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. فَقَالَ "" هَلْ تَدْرِي مَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ "". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ "" حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ "".
பாடம் : 101
(ஊர்தியில்) ஒருவருக்குப் பின்னால் ஒருவர் அமர்வது
5967. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஊர்தியில்) இருந்து கொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்து டன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், ‘முஆதே’ என்று (மீண்டும்) அழைத்தார் கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) ‘முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கி றேன். (கூறுங்கள்)” என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும்” என்றார்கள்.
இன்னும் சிறிது தூரம் சென்றபின் ‘முஆத் பின் ஜபலே’ என்று அழைத்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்)” என்று பதில் கூறினேன். அவர்கள், ‘‘அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள்.
நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(இத்தகைய) மக்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்” என்று சென்னார்கள்.141

5968. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ خَيْبَرَ، وَإِنِّي لَرَدِيفُ أَبِي طَلْحَةَ وَهْوَ يَسِيرُ وَبَعْضُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَدِيفُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ عَثَرَتِ النَّاقَةُ فَقُلْتُ الْمَرْأَةَ. فَنَزَلْتُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّهَا أُمُّكُمْ "". فَشَدَدْتُ الرَّحْلَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا دَنَا أَوْ رَأَى الْمَدِينَةَ قَالَ "" آيِبُونَ تَائِبُونَ، عَابِدُونَ لِرَبِّنَا، حَامِدُونَ "".
பாடம் : 102
(ஊர்தியில்) நெருங்கிய உறவுக் கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்துகொள்வது
5968. அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (ஊர்தியில்) அமர்ந்துகொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஊர்தியில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான், ‘‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!” என்று சொன்னேன். பிறகு நான் (என் ஊர்தியிலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் உங்கள் அன்னை” என்று சொன்னார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக்கொண்டு) பயணம் செய்யலானார்கள்.
மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி (ஸல்) அவர்கள் ‘‘பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள்.142

5969. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَضْطَجِعُ فِي الْمَسْجِدِ، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى.
பாடம் : 103
மல்லாந்து படுப்பதும், ஒரு காலை மற்றொரு கால்மீது வைத்துக் கொள்வதும்
5969. அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின்மீது தூக்கிவைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை நான் பார்த்தேன்.143

நற்பண்புகள்
5970. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الْوَلِيدُ بْنُ عَيْزَارٍ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ أَخْبَرَنَا صَاحِبُ، هَذِهِ الدَّارِ ـ وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ "" الصَّلاَةُ عَلَى وَقْتِهَا "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "". قَالَ ثُمَّ أَىّ قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
பாடம்: 1
(பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணிவாழ்வதும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். (29:8)
5970. வலீத் பின் அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள், “(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்” என்று கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை செய்வது” என்றார்கள். (நான் தொடர்ந்து) “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள்.
இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.2
அத்தியாயம் : 78

5971. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي قَالَ "" أُمُّكَ "". قَالَ ثُمَّ مَنْ قَالَ "" أُمُّكَ "". قَالَ ثُمَّ مَنْ قَالَ "" أُمُّكَ "". قَالَ ثُمَّ مَنْ قَالَ "" ثُمَّ أَبُوكَ "". وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَيَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ مِثْلَهُ.
பாடம்: 2
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?
5971. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்” என்றார்கள்.
அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 78
5971. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்” என்றார்கள்.
அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 78
5972. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، وَشُعْبَةَ، قَالاَ حَدَّثَنَا حَبِيبٌ، ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أُجَاهِدُ. قَالَ "" لَكَ أَبَوَانِ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَفِيهِمَا فَجَاهِدْ "".
பாடம்: 3
பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரிய வேண்டும்.
5972. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறா யின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடுவீராக!” என்றார் கள்.3
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5973. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ "". قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ "" يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أَمَّهُ "".
பாடம்: 4
எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.
5973. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.4

5974. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَمَالُوا إِلَى غَارٍ فِي الْجَبَلِ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يَفْرُجُهَا. فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ وَلَدِي، وَإِنَّهُ نَاءَ بِيَ الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا، وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، فَفَرَجَ اللَّهُ لَهُمْ فُرْجَةً حَتَّى يَرَوْنَ مِنْهَا السَّمَاءَ. وَقَالَ الثَّانِي اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِي ابْنَةُ عَمٍّ، أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا، فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَسَعَيْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ، فَلَقِيتُهَا بِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ. فَقُمْتُ عَنْهَا، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي قَدْ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ فُرْجَةً. وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي. فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ، فَتَرَكَهُ وَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي، وَأَعْطِنِي حَقِّي. فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرَاعِيهَا. فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَهْزَأْ بِي. فَقُلْتُ إِنِّي لاَ أَهْزَأُ بِكَ، فَخُذْ ذَلِكَ الْبَقَرَ وَرَاعِيَهَا. فَأَخَذَهُ فَانْطَلَقَ بِهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ عَنْهُمْ "".
பாடம்: 5
பெற்றோருக்கு நன்மை செய்த வரின் பிரார்த்தனை (துஆ) ஏற்கப் படுவது
5974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில்) மூன்றுபேர் நடந்து சென்றுகொண்டி ருந்தபோது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்கள் (ஒதுங்கு வதற்காக) ஒரு மலைக்குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களது குகைவாயிலை அடைத்துக்கொண்டது.
(வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், “நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப்பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ(ப்பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக்கூடும்” என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்துகொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒருநாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய், தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும்போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன்.
பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்று கொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பசியால்) கதறிக்கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உனது அன்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் (பின்வருமாறு) வேண்டினார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒருநாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறத்துவிட்டாள்.
நான் முயற்சி செய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சு! முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே” என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் அன்பைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!
அவ்வாறே (அல்லாஹ்), அவர்களுக்கு (அப்பாறையை இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:
இறைவா! நான் ஒரு ‘ஃபரக்’ அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தமது வேலை முடிந்தவு டன், “என்னுடைய உரிமையை (கூலியை)க் கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரது உரிமையை (கூலியை) அவர்முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே) விட்டுவிட்(டுச் சென்றுவிட்)டார்.
பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வை அஞ்சுவீராக! எனக்கு அநீதி இழைக்காதீர்! எனது உரிமையை என்னிடம் கொடுத்துவிடுவீராக!” என்று கூறினார்.
அதற்கு நான், “அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! என்னைப் பரிகாசம் செய்யாதீர்!” என்று சொன்னார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்” என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார்.
(இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் அன்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!
அவ்வாறே அல்லாஹ் (அப்பாறையை) அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.5

5975. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْمُسَيَّبِ، عَنْ وَرَّادٍ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ، وَمَنْعَ وَهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ "".
பாடம்: 6
பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6
5975. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
மேலும், (இவ்வாறு) சொல்லப்பட்டது; அவர் சொன்னார் என (ஊர்ஜிதமாகா ததை)ப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை உங்களுக்கு அல்லாஹ் வெறுத்துள்ளான்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

5976. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ الْوَاسِطِيُّ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ "". قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ "". وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ "" أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ "". فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى قُلْتُ لاَ يَسْكُتُ.
பாடம்: 6
பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6
5976. அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்)” என்று கூறினோம்.
நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்” என்று சொல்லிவிட்டு சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)” என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்óக்கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் “அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?” என்றேன்.8

5977. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَبَائِرَ، أَوْ سُئِلَ عَنِ الْكَبَائِرِ فَقَالَ "" الشِّرْكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ "". فَقَالَ "" أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ـ قَالَ ـ قَوْلُ الزُّورِ ـ أَوْ قَالَ ـ شَهَادَةُ الزُّورِ "". قَالَ شُعْبَةُ وَأَكْثَرُ ظَنِّي أَنَّهُ قَالَ "" شَهَادَةُ الزُّورِ "".
பாடம்: 6
பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6
5977. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்’ அல்லது ‘அவர்களி டம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப் பட்டது’.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங் களாகும்)” என்று கூறிவிட்டு, “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். “ ‘பொய் பேசுவது’ அல்லது ‘பொய் சாட்சியம்’ (மிகப் பெரும் பாவமாகும்)” என்று சொன்னார்கள்.9
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘பொய் சாட்சியம்’ என்றுதான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.