5910. وَقَالَ هِشَامٌ عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَثْنَ الْقَدَمَيْنِ وَالْكَفَّيْنِ.
பாடம் : 68 சுருள் முடி
5910. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள்.


அத்தியாயம் : 77
5911. وَقَالَ أَبُو هِلاَلٍ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ،. أَوْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَخْمَ الْكَفَّيْنِ وَالْقَدَمَيْنِ، لَمْ أَرَ بَعْدَهُ شَبَهًا لَهُ.
பாடம் : 68 சுருள் முடி
5911. அனஸ் (ரலி), அல்லது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பருத்த உள்ளங்கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை.


அத்தியாயம் : 77
5913. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فَذَكَرُوا الدَّجَّالَ فَقَالَ إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمْ أَسْمَعْهُ قَالَ ذَاكَ وَلَكِنَّهُ قَالَ "" أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَرَجُلٌ آدَمُ جَعْدٌ، عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ إِذِ انْحَدَرَ فِي الْوَادِي يُلَبِّي "".
பாடம் : 68 சுருள் முடி
5913. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், ‘‘அவனுடைய இரு கண்களுக்குமிடையே ‘காஃபிர்’ (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்” என்று சொன்னார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய) உருவ அமைப்பில் இருந்தார் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை-அவர்கள் எத்தகையவர் என்றால்) அவர்கள் பழுப்பு நிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச மர நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தவாறு இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) ‘தல்பியா’ கூறியவாறு (‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று சொன்னார்கள் எனத் தெரிவித்தார்கள்.106

அத்தியாயம் : 77
5914. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ مَنْ ضَفَّرَ فَلْيَحْلِقْ، وَلاَ تَشَبَّهُوا بِالتَّلْبِيدِ. وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُلَبِّدًا.
பாடம்: 69 தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தல் (தல்பீத்)107
5914. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘‘(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலைமுடியை) மழித்துக்கொள்ளட்டும். (சடை வளர்ப்ப தன் மூலம்) களிம்பு தடவித் தலை முடியைப் படியவைப்பவர்களுக்கு ஒப்பாகிவிட வேண்டாம்” என்று சொல்ல நான் கேட்டேன்.

(இதை அறிவிப்பவரான சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:)

(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்துக்கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறுவார்கள்.108


அத்தியாயம் : 77
5915. حَدَّثَنِي حِبَّانُ بْنُ مُوسَى، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُهِلُّ مُلَبِّدًا يَقُولُ "" لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ "". لاَ يَزِيدُ عَلَى هَؤُلاَءِ الْكَلِمَاتِ.
பாடம்: 69 தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தல் (தல்பீத்)107
5915. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தவர்களாக, ‘‘லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க” என்று கூற நான் கேட்டேன். இந்த வார்த்தைகளைவிட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை.

(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். இணையில்லா தோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமில்லை).109

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 77
5916. حَدَّثَنِي إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ، وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ "" إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ "".
பாடம்: 69 தலைமுடியைக் களிம்பு தடவிப் படியவைத்தல் (தல்பீத்)107
5916. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே!” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்து விட்டேன். மேலும், என் தியாக (குர்பானி)ப் பிராணிக்கு (அடையாள) மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.110

அத்தியாயம் : 77
5917. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ، وَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ أَشْعَارَهُمْ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ، فَسَدَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَاصِيَتَهُ، ثُمَّ فَرَقَ بَعْدُ.
பாடம் : 70 தலைமுடியில் வகிடு எடுத்தல்
5917. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த விஷயங் களில் தமக்கு (இறைக்)கட்டளை ஏதும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பிவந்தார்கள். வேதக்காரர்கள் தங்களது தலைமுடியை (வகிடெடுத்து வாரி விடாமல் நெற்றி யில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை (முடி)களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். பிறகு அதை (வகிடெடுத்து)ப் பிரித்தார்கள்.111


அத்தியாயம் : 77
5918. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَعَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفَارِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ. قَالَ عَبْدُ اللَّهِ فِي مَفْرِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 70 தலைமுடியில் வகிடு எடுத்தல்
5918. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டி யிருந்தபோது அவர்களின் தலை வகிடு களில் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் ரஜாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘நபி (ஸல்) அவர்களின் வகிட்டில்’ என்று (ஒருமையாக) வந்துள்ளது.

அத்தியாயம் : 77
5919. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ عَنْبَسَةَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ خَالَتِي، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَهَا فِي لَيْلَتِهَا ـ قَالَ ـ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ ـ قَالَ ـ فَأَخَذَ بِذُؤَابَتِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ. حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، بِهَذَا، وَقَالَ بِذُؤَابَتِي أَوْ بِرَأْسِي.
பாடம் : 71 தொங்கும் முடிகள்
5919. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். இரவில் (‘தஹஜ்ஜுத்’ தொழுகை) தொழுவதற்காக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக்கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘என் தொங்கும் முடியைப் பிடித்து’ அல்லது ‘என் தலையைப் பிடித்து’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.112

அத்தியாயம் : 77
5920. حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنِي مَخْلَدٌ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ حَفْصٍ، أَنَّ عُمَرَ بْنَ نَافِعٍ، أَخْبَرَهُ عَنْ نَافِعٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الْقَزَعِ. قَالَ عُبَيْدُ اللَّهِ قُلْتُ وَمَا الْقَزَعُ فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ قَالَ إِذَا حَلَقَ الصَّبِيَّ وَتَرَكَ هَا هُنَا شَعَرَةً وَهَا هُنَا وَهَا هُنَا. فَأَشَارَ لَنَا عُبَيْدُ اللَّهِ إِلَى نَاصِيَتِهِ وَجَانِبَىْ رَأْسِهِ. قِيلَ لِعُبَيْدِ اللَّهِ فَالْجَارِيَةُ وَالْغُلاَمُ قَالَ لاَ أَدْرِي هَكَذَا قَالَ الصَّبِيِّ. قَالَ عُبَيْدُ اللَّهِ وَعَاوَدْتُهُ فَقَالَ أَمَّا الْقُصَّةُ وَالْقَفَا لِلْغُلاَمِ فَلاَ بَأْسَ بِهِمَا وَلَكِنَّ الْقَزَعَ أَنْ يُتْرَكَ بِنَاصِيَتِهِ شَعَرٌ، وَلَيْسَ فِي رَأْسِهِ غَيْرُهُ، وَكَذَلِكَ شَقُّ رَأْسِهِ هَذَا وَهَذَا.
பாடம் : 72 தலைமுடியில் சிறிதளவு மழித்து விட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது)
5920. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:

நான், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஒருவர் சிறுவனின் தலைமுடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கும் அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்” என்று கூறி, தமது நெற்றிமுடி மற்றும் தலையின் இரு பக்கங்களையும் எங்களிடம் சுட்டிக் காட்டினார்கள்.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம்தானா?” என்று கேட்கப்பட்டது. அவர்கள் ‘‘எனக்குத் தெரியாது. ஆனால், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் ‘சிறுவன்’ என்று (மட்டும்)தான் சொன்னார்கள்” எனப் பதிலளித்துவிட்டு, ‘‘இது தொடர்பாக உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் திரும்பத் திரும்ப நான் கேட்டதற்கு அவர்கள், ‘‘சிறுவனுக்கு நெற்றியின் இரு பக்க முடிகளையும் பிடறி முடிகளையும் அப்படியே விட்டுவிடுவதால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ‘கஸஉ’ என்பது அவனது தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியே விட்டுவிடுவதாகும் (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியே விட்டுவிடுவதும் கூடாது” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.


அத்தியாயம் : 77
5921. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ.
பாடம் : 72 தலைமுடியில் சிறிதளவு மழித்து விட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது)
5921. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்து விட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டுவிடுவதைத் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 77
5922. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِيَدِي لِحُرْمِهِ، وَطَيَّبْتُهُ بِمِنًى قَبْلَ أَنْ يُفِيضَ.
பாடம் : 73 மனைவி தன் கரங்களால் கண வனுக்கு நறுமணம் பூசுவது
5922. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியபோது நான் அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்ட போதும்) ‘மினா’வில் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.

அத்தியாயம் : 77
5923. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ.
பாடம் : 74 தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது
5923. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றி லேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவுக்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காண முடிந்தது.

அத்தியாயம் : 77
5924. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى فَقَالَ "" لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ، إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ "".
பாடம் : 75 சீப்பால் தலைவாருதல்
5924. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள்.

(அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்புமீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 77
5925. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ.
பாடம்: 76 மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன் கணவருக்குத் தலை வாரி விடுவது
5925. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன்.

... இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.113

அத்தியாயம் : 77
5926. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعْجِبُهُ التَّيَمُّنُ مَا اسْتَطَاعَ فِي تَرَجُّلِهِ وَوُضُوئِهِ.
பாடம்: 77 தலைவாருவதும் அதை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதும்
5926. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்ப மானதாக இருந்தது.114

அத்தியாயம் : 77
5927. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي، وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "".
பாடம்: 78 கஸ்தூரி பற்றிய குறிப்பு
5927. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அல்லாஹ் கூறுகின்றான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பும் அளவுக்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்.

(மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையைவிட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115

அத்தியாயம் : 77
5928. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ بِأَطْيَبِ مَا أَجِدُ.
பாடம் : 79 விரும்பத் தகுந்த நறுமணப் பொருள்
5928. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியபோது நான் அவர்களுக்கு என்னிட மிருந்ததிலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116

அத்தியாயம் : 77
5929. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
பாடம் : 80 நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது
5929. ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள் வார்கள்.

மேலும், அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை” என்று கூறினார்கள்.117

அத்தியாயம் : 77