5867. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ فَنَبَذَهُ فَقَالَ "" لاَ أَلْبَسُهُ أَبَدًا "". فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
பாடம்: 47
5867. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றை அணிந்து கொண்டிருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டு, ‘‘நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்” என்று சொன்னார்கள். மக்களும் தங்களின் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டார்கள்.
அத்தியாயம் : 77

5868. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ رَأَى فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ يَوْمًا وَاحِدًا، ثُمَّ إِنَّ النَّاسَ اصْطَنَعُوا الْخَوَاتِيمَ مِنْ وَرِقٍ وَلَبِسُوهَا، فَطَرَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمَهُ، فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ وَزِيَادٌ وَشُعَيْبٌ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ ابْنُ مُسَافِرٍ عَنِ الزُّهْرِيِّ أَرَى خَاتَمًا مِنْ وَرِقٍ.
பாடம்: 47
5868. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று) வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (பொன்) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்து விட்டனர்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5869. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا حُمَيْدٌ، قَالَ سُئِلَ أَنَسٌ هَلِ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا قَالَ أَخَّرَ لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ. قَالَ "" إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَنَامُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا "".
பாடம்: 48
மோதிர(க்கல் பதிக்கும்) குமிழ்
5869. ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷா தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக்கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள்.82

5870. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ حُمَيْدًا، يُحَدِّثُ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ خَاتَمُهُ مِنْ فِضَّةٍ وَكَانَ فَصُّهُ مِنْهُ. وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 48
மோதிர(க்கல் பதிக்கும்) குமிழ்
5870. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5871. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلاً، يَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ جِئْتُ أَهَبُ نَفْسِي. فَقَامَتْ طَوِيلاً فَنَظَرَ وَصَوَّبَ، فَلَمَّا طَالَ مُقَامُهَا فَقَالَ رَجُلٌ زَوِّجْنِيهَا، إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ. قَالَ "" عِنْدَكَ شَىْءٌ تُصْدِقُهَا "". قَالَ لاَ. قَالَ "" انْظُرْ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ فَقَالَ وَاللَّهِ إِنْ وَجَدْتُ شَيْئًا. قَالَ "" اذْهَبْ فَالْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ "". فَذَهَبَ ثُمَّ رَجَعَ قَالَ لاَ وَاللَّهِ وَلاَ خَاتَمًا مِنْ حَدِيدٍ. وَعَلَيْهِ إِزَارٌ مَا عَلَيْهِ رِدَاءٌ. فَقَالَ أُصْدِقُهَا إِزَارِي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِزَارُكَ إِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَىْءٌ، وَإِنْ لَبِسْتَهُ لَمَ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ "". فَتَنَحَّى الرَّجُلُ فَجَلَسَ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مُوَلِّيًا فَأَمَرَ بِهِ فَدُعِيَ فَقَالَ "" مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "". قَالَ سُورَةُ كَذَا وَكَذَا لِسُوَرٍ عَدَّدَهَا. قَالَ "" قَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ "".
பாடம்: 49
இரும்பு மோதிரம்
5871. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களி டம் வந்து, ‘‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள)வே வந்துள்ளேன்” என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள்.
அவர் நீண்ட நேரமாக நின்றுகொண்டி ருப்பதைக் கண்ட ஒரு மனிதர் ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துத்தாருங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இவருக்கு மணக்கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘‘ஏதுமில்லை” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்” என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே” என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, ‘‘இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை” என்றார்.
அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டுகூட இருக்கவில்லை. அந்த மனிதர், ‘‘எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக்கொடையாக வழங்குகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது கீழங்கியா? அதை இவள் அணிந்துகொண்டால், உனக்கு அதில் ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால், இவளுக்கு அதில் ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார்.
பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல, அவரும் அழைத்துவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனனமாக) உள்ளது?” என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்துவைத்தேன்” என்று சொன்னார்கள்.83

5872. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم أَرَادَ أَنْ يَكْتُبَ إِلَى رَهْطٍ أَوْ أُنَاسٍ مِنَ الأَعَاجِمِ، فَقِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْبَلُونَ كِتَابًا إِلاَّ عَلَيْهِ خَاتَمٌ، فَاتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَكَأَنِّي بِوَبِيصِ أَوْ بِبَصِيصِ الْخَاتَمِ فِي إِصْبَعِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ فِي كَفِّهِ.
பாடம்: 50
மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்
5872. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர்களான (கிழக்கு ரோம் நாட்டைச் சேர்ந்த) ‘ஒரு குழுவினருக்கு’ அல்லது ‘மக்களில் சிலருக்கு’க் கடிதம் எழுத விரும்பினார் கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லப்பட்டது.
உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்று இலச் சினை பொறித்தார்கள். இப்போதும் நான் ‘நபி (ஸல்) அவர்களின் விரலில்’ அல்லது ‘அவர்களின் கையில்’ அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

5873. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ، وَكَانَ فِي يَدِهِ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ بَعْدُ فِي يَدِ عُثْمَانَ، حَتَّى وَقَعَ بَعْدُ فِي بِئْرِ أَرِيسَ، نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ.
பாடம்: 50
மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்
5873. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர் களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களது கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது.
இறுதியில் அது ‘அரீஸ்’ எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.84

5874. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا قَالَ "" إِنَّا اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا فِيهِ نَقْشًا، فَلاَ يَنْقُشْ عَلَيْهِ أَحَدٌ "". قَالَ فَإِنِّي لأَرَى بَرِيقَهُ فِي خِنْصَرِهِ.
பாடம்: 51
சுண்டுவிரலில் மோதிரம் அணிதல்
5874. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, ‘‘நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களின் சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத்திரையில்) பார்க்கின்றேன்.85

5875. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ قِيلَ لَهُ إِنَّهُمْ لَنْ يَقْرَءُوا كِتَابَكَ إِذَا لَمْ يَكُنْ مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ.
பாடம்: 52
முத்திரை பதிப்பதற்காக, அல்லது வேதக்காரர்கள் உள்ளிட்டோருக்கு மடல் வரைவதற்காக மோதிரம் தயாரித்(து அணி)தல்86
5875. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) கிழக்கு ரோமானியருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது அவர்களிடம், ‘‘தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமானியர் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்” என்று கூறப்பட்டது.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களது கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது.87

5876. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ، جَعَلَ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ، فَاصْطَنَعَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَرَقِيَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ "" إِنِّي كُنْتُ اصْطَنَعْتُهُ، وَإِنِّي لاَ أَلْبَسُهُ "". فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ. قَالَ جُوَيْرِيَةُ وَلاَ أَحْسِبُهُ إِلاَّ قَالَ فِي يَدِهِ الْيُمْنَى.
பாடம்: 53
மோதிரக் குமிழை உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்து கொள்வது
5876. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பொன் மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) பொன் மோதிரங்களைச் செய்தனர்.
(இதற்கிடையில் ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘‘நான் அதைச் செய்திருந்தேன். ஆனால், அதை நான் இனி அணியமாட்டேன்” என்று கூறிவிட்டு, அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்துவிட்டனர்.88
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘‘(நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்) தமது வலக் கையில் அணிந்துகொண்டார்கள்” என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன்.

5877. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، وَنَقَشَ فِيهِ، مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. وَقَالَ "" إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ وَرِقٍ، وَنَقَشْتُ فِيهِ، مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. فَلاَ يَنْقُشَنَّ أَحَدٌ عَلَى نَقْشِهِ "".
பாடம்: 54
‘‘எனது மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
5877. அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று இலச்சினை பொறித்தார்கள்.
மேலும், ‘‘நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என இலச்சினை பொறித் துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.89

5878. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ لَمَّا اسْتُخْلِفَ كَتَبَ لَهُ، وَكَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ. مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ.
பாடம்: 55
மோதிரத்தில் மூன்று வரிகளில் இலச்சினை பொறிக்கலாமா?
5878. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது, அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயிருந்தது. ‘முஹம்மத்’ என்பது ஒரு வரியிலும், ‘ரசூல்’ என்பது ஒரு வரியிலும், ‘அல்லாஹ்’ என்பது ஒரு வரியிலும் இருந்தது.

5879. وَزَادَنِي أَحْمَدُ حَدَّثَنَا الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ خَاتَمُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي يَدِهِ، وَفِي يَدِ أَبِي بَكْرٍ بَعْدَهُ، وَفِي يَدِ عُمَرَ بَعْدَ أَبِي بَكْرٍ، فَلَمَّا كَانَ عُثْمَانُ جَلَسَ عَلَى بِئْرِ أَرِيسَ ـ قَالَ ـ فَأَخْرَجَ الْخَاتَمَ، فَجَعَلَ يَعْبَثُ بِهِ فَسَقَطَ قَالَ فَاخْتَلَفْنَا ثَلاَثَةَ أَيَّامٍ مَعَ عُثْمَانَ فَنَنْزَحُ الْبِئْرَ فَلَمْ نَجِدْهُ.
பாடம்: 55
மோதிரத்தில் மூன்று வரிகளில் இலச்சினை பொறிக்கலாமா?
5879. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மோதிரம் (அவர்களது வாழ்நாளில்) அவர்களின் கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்பின் உமர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது, அவர்கள் (ஒருமுறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்த சமயத்தில் (ஏதோ சிந்தனையில் தம்மையறியாமல்) மோதிரத் தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது.
(அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான் (ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாட்கள் (அங்கு) போய்வந்து கொண்டிருந்தோம். பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்க வில்லை.90

5880. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ شَهِدْتُ الْعِيدَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَصَلَّى قَبْلَ الْخُطْبَةِ. وَزَادَ ابْنُ وَهْبٍ عَنِ ابْنِ جُرَيْجٍ فَأَتَى النِّسَاءَ فَجَعَلْنَ يُلْقِينَ الْفَتَخَ وَالْخَوَاتِيمَ فِي ثَوْبِ بِلاَلٍ.
பாடம்: 56
பெண்கள் மோதிரம் அணிவது
ஆயிஷா (ரலி) அவர்கள் பொன் மோதிரங்களை அணிந்திருந்தார்கள்.
5880. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாளி(ன் தொழுகையி)ல் கலந்து கொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு வஹ்ப் (ரலி) அவர்களது அறிவிப் பில், ‘‘பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.91

5881. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَصَلَّى رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ أَتَى النِّسَاءَ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تَصَدَّقُ بِخُرْصِهَا وَسِخَابِهَا.
பாடம்: 57
பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல்
இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.
5881. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்களிடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தரலானார்கள்.

5882. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ هَلَكَتْ قِلاَدَةٌ لأَسْمَاءَ، فَبَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَلَبِهَا رِجَالاً، فَحَضَرَتِ الصَّلاَةُ وَلَيْسُوا عَلَى وُضُوءٍ وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ. زَادَ ابْنُ نُمَيْرٍ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ.
பாடம் : 58
கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்
5882. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர்களின் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்து விட்டது. அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கத் தூய்மை (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பிவந்து) நபி (ஸல்) அவர்களிடம் சென்னார்கள். அப்போது அல்லாஹ் ‘தயம்மும்’ (செய்துகொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியிருந்தேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.92

5883. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيٌّ، قَالَ سَمِعْتُ سَعِيدًا، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ الْعِيدِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي قُرْطَهَا.
பாடம்: 59
பெண்கள் கம்மல் அணிவது
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் காதுகளையும் கழுத்துகளையும் நோக்கி (அவற்றிலுள்ள நகைகளைக் கழற்றித் தர கைகளைக் கொண்டு) சென்றதை நான் கண்டேன்.93
5883. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நோன்புப்) பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அதற்கு முன்பும் சரி; அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழவில்லை.
பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்களிடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே ஒரு பெண் தனது கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.

5884. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا وَرْقَاءُ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ الْمَدِينَةِ فَانْصَرَفَ فَانْصَرَفْتُ فَقَالَ "" أَيْنَ لُكَعُ ـ ثَلاَثًا ـ ادْعُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ "". فَقَامَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ هَكَذَا، فَقَالَ الْحَسَنُ بِيَدِهِ، هَكَذَا فَالْتَزَمَهُ فَقَالَ "" اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ، فَأَحِبَّهُ، وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ "". قَالَ أَبُو هُرَيْرَةَ فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَىَّ مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا قَالَ.
பாடம் : 60
குழந்தைகளுக்கான நறுமண மாலைகள்
5884. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘‘பொடியன் எங்கே?” என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தவாறு நடந்து வந்தார்கள். அவர் களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்தபடி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர் களையும் நேசிப்பாயாக” என்று பிரார்த் தனை செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்தபிறகு அலீயின் புதல்வர் ஹசன் (ரலி) அவர் களைவிட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமானவராக இருக்கவில்லை.94

5885. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ. تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ.
பாடம் : 61
பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களும்
5885. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும் சபித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 77
5885. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும் சபித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 77
5886. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ "" أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ "". قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
பாடம் : 62
பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அரவானி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்
5886. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண் களையும் சபித்தார்கள். மேலும், ‘‘அவர் க(ளில் அரவானிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றி னார்கள்.95