57. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
பாடம் : 42 “அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம் தலைவர் களுக்கும் முஸ்லிம் பொதுமக்க ளுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும்” எனும் நபிமொழி46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூத ருக்கும் நலன் நாடுபவர்களாயின் (பலவீனர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருப்ப தில் குற்றமில்லை). (9:91)
57. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுகையைக் கடைப் பிடிப்பேன்; ஸகாத் வழங்குவேன்; ஒவ் வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவேன் என்று உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.


அத்தியாயம் : 3
58. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ يَوْمَ مَاتَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَامَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ عَلَيْكُمْ بِاتِّقَاءِ اللَّهِ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَالْوَقَارِ وَالسَّكِينَةِ حَتَّى يَأْتِيَكُمْ أَمِيرٌ، فَإِنَّمَا يَأْتِيكُمُ الآنَ، ثُمَّ قَالَ اسْتَعْفُوا لأَمِيرِكُمْ، فَإِنَّهُ كَانَ يُحِبُّ الْعَفْوَ. ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ، فَإِنِّي أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ أُبَايِعُكَ عَلَى الإِسْلاَمِ. فَشَرَطَ عَلَىَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. فَبَايَعْتُهُ عَلَى هَذَا، وَرَبِّ هَذَا الْمَسْجِدِ إِنِّي لَنَاصِحٌ لَكُمْ. ثُمَّ اسْتَغْفَرَ وَنَزَلَ.
பாடம் : 42 “அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம் தலைவர் களுக்கும் முஸ்லிம் பொதுமக்க ளுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும்” எனும் நபிமொழி46 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூத ருக்கும் நலன் நாடுபவர்களாயின் (பலவீனர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருப்ப தில் குற்றமில்லை). (9:91)
58. ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் கூஃபாவின் ஆளுநராக இருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த நாளில் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (எழுந்து மேடையில்) நின்று இறைவனைப் போற் றிப் புகழ்ந்துவிட்டுக் கூறலானார்கள்:

(அடுத்த) தலைவர் வரும்வரையில் இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சு வதையும் கண்ணியத்தையும் அமைதி யையும் கடைப்பிடியுங்கள். கூடிய விரை வில் உங்கள் (புதிய) தலைவர் வந்து விடுவார்.

பின்னர் தொடர்ந்து கூறினார்கள்: (இறந்து விட்ட) உங்கள் தலைவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், அவர் மன்னிப்பை விரும்பக்கூடியவராக இருந்தார்.

இறைவாழ்த்துக்குப்பின்! (விஷயம் என்னவென்றால்,) நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இஸ்லாத்தைத் ஏற்று நடப்பதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன்” என்றேன்.

அப்போது நபியவர்கள், “முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி அளித்தேன். (கூஃபா நகர மக்களே!) இந்த இறையில்லத்தின் அதிபதிமீது ஆணையாக! நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்.

பிறகு பாவமன்னிப்புக் கோரிவிட்டு (மேடையிலிருந்து) இறங்கினார்கள்.

அத்தியாயம் : 3
59. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، ح وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، حَدَّثَنِي هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ، فَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ "" أَيْنَ ـ أُرَاهُ ـ السَّائِلُ عَنِ السَّاعَةِ "". قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" فَإِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ "". قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ "" إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ "".
பாடம் : 1 கல்வியின் சிறப்பு உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: உங்களில் இறைநம்பிக்கை கொண்ட வர்களுக்கும் கல்வி வழங்கப்பட்ட வர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: “என் இறைவா! கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக!” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114) பாடம் : 2 ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட் டால், அவர் தமது பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்டவருக்குப் பதில ளிக்கலாம்.
59. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில ளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும், அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினர். வேறுசிலர், “நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மை பாழ்படுத்தப் பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்க்கலாம்” என்று சொன்னார்கள். அவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
60. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ "" وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ "". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
பாடம் : 3 உரத்த குரலில் கல்வி போதித்தல்
60. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களை விடப் பிந்தி வந்துகொண்டிருந்தார்கள். (அஸ்ர்) தொழுகையின் நேரம் எங்களை அடைந்துவிட்ட நிலையில், நாங்கள் அங்கத்தூய்மை (உளூ) செய்துகொண்டி ருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களை(ச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி) தட(வுவதைப் போன்று கழு)வலானோம்.

(அதைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்கள், “குதிகால்(களைச் சரியாகக் கழுவாதவர்)களுக்கு நாசம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைத் தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.

அத்தியாயம் : 3
61. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، فَحَدِّثُونِي مَا هِيَ "". فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" هِيَ النَّخْلَةُ "".
பாடம் : 4 ஹதீஸ் துறை வல்லுநர் ‘ஹத்தஸனா’, ‘அக்பரனா’, ‘அன்பஅனா’ (எமக்கு அறிவித்தார்) என்று கூறுவது2 அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்கள் எங்களிடம் சொன்னார்கள்: ‘ஹத்தஸனா’, ‘அக்பரனா’, ‘அன்ப அனா’, ‘சமிஉத்து’ (நான் செவியுற்றேன்) என்ற நான்கு வார்த்தைகளையும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் ஒரே பொருளுடைய வார்த்தைகளாகவே கருதினார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஒரு நபிமொழியை அறிவிக் கும்போது), ‘உண்மையாளரும் உண்மை உரைக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு அறிவித் தார்கள்’ (ஹத்தஸனா) என்று சொல் வார்கள். ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் ஒரு வார்த்தையைச் செவியுற்றேன்” (சமிஉத்து) என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னார்கள். ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள் (ஹத்தஸனா). அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தரப்பிலிருந்து அறிவித்த சில செய்திகளை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நபியவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித் தார்கள்” (யர்வீ அன் ரப்பிஹி) என்று சொன்னார்கள். அனஸ் (ரலி), அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” (யர்வீ அன் ரப்பிஹி அஸ்ஸ வ ஜல்ல) என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க உங்கள் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” (யர்வீ அன் ரப்பிக்கும் அஸ்ஸ வ ஜல்ல) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
61. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங்கள் (ஹத்திஸூனீ)?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங் களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால், (மூத்தவர் கள் அமைதியாய் இருக்கும் அந்த அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்டுக்கொண்டு (மௌனமாக) இருந்துவிட்டேன்.

பின்னர் மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் (ஹத் திஸ்னா), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பேரீச்ச மரம்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 3
62. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ "". قَالَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللَّهِ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" هِيَ النَّخْلَةُ "".
பாடம் : 5 மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காகத் தலைவர் மக்களிடமே வினா தொடுப்பது
62. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று எனக்குச் சொல்லுங் கள்? (ஹத்திஸூனீ)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. ஆனால், அது பேரீச்ச மரம்தான் என்று என் மனதில் பட்டது.

பின்னர் மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் (ஹத்திஸ்னா), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 3
63. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ ـ هُوَ الْمَقْبُرِيُّ ـ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ. فَقُلْنَا هَذَا الرَّجُلُ الأَبْيَضُ الْمُتَّكِئُ. فَقَالَ لَهُ الرَّجُلُ ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَدْ أَجَبْتُكَ "". فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ فَلاَ تَجِدْ عَلَىَّ فِي نَفْسِكَ. فَقَالَ "" سَلْ عَمَّا بَدَا لَكَ "". فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ، آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ "" اللَّهُمَّ نَعَمْ "". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ "" اللَّهُمَّ نَعَمْ "". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ قَالَ "" اللَّهُمَّ نَعَمْ "". قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ نَعَمْ "". فَقَالَ الرَّجُلُ آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. رَوَاهُ مُوسَى وَعَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنْ سُلَيْمَانَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம் : 6 கல்வி (கற்பித்தல்) குறித்து வந் துள்ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: “என் இறைவா! கல்வியை எனக்கு அதிகமாக்குவாயாக!” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114) ஹதீஸ்துறை வல்லுநர் ஒருவரிடம் (பயிலும் மாணவர்கள் ஹதீஸ்களை) வாசித்துக்காட்டுவது; எடுத்துச்சொல்வது.3 ஹசன் அல்பஸ்ரீ, சுஃப்யான் அஸ் ஸவ்ரீ, மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகி யோர் இவ்வாறு வாசித்துக்காட்டுவதன் மூலம் ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறுவதை அனுமதிக்கப்பட்ட முறையாகவே கருதினார்கள். “ஆசிரியரிடம் வாசித்துக்காட்டுவதையும் (கிராஅத்), ஆசிரியரிடமிருந்து கேட்பதையும் (சமாஉ) அனுமதிக்கப்பட்டவையாகவே சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் கருதிவந்தனர்” என்று அபூஆஸிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹதீஸ் வல்லுநரிடம் வாசித்துக்காட்டப்பட்டு (அவர் அனுமதித்து)விட்டால், (பின்னர் அறிவிக்கும் ஒருவர்) இதை அந்த ஆசிரியர் எனக்கு அறிவித்தார் (ஹத்தஸனீ) என்றும், இதை அவரிடமிருந்து நான் கேட்டேன் (சமிஃத்து) என்றும் கூறுவது தவறாகாது. ஹதீஸ் துறை அறிஞரிடம் வாசித்துக் காட்டுவ(தும் அதை அறிவிப்புச் செய்ய அவர் அங்கீகாரமளித்ததாகக் கருதுவதும் செல்லும் என்ப)தற்குப் பின்வரும் நபிமொழியை அவர்களில் சிலர் ஆதாரமாக எடுத்துக்கொள்கின்றனர்: ளிமாம் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “(ஐவேளைத்) தொழுகைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என அல்லாஹ்வா தங்களுக்குக் கட்டளையிட்டான்?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்!’ என்றார்கள். -இங்கே நபி (ஸல்) அவர்களிடம் சொல்லிக்காட்டப்பட்டுள் ளது. (இது ஆசிரியரிடம் மாணவர் வாசித்துக்காட்டும் முறையாகும்.)- பின்னர் ளிமாம் (ரலி) அவர்கள் இதைத் தம் கூட்டத்தாருக்கு அறிவித்தார்கள்; அவர்கள் அனைவரும் அவ(ர் கூறியவ)ற்றை ஏற்றுக்கெண்டனர். மாலிக் (ரஹ்) அவர்கள் காட்டும் ஆதாரமாவது: (கடன் வாங்கிய) சிலர் எழுதச் சொன்ன (கடன்) பத்திரம் அவர்கள்முன் படித்துக்காட்டப்பட்டது. (அதை அவர்கள் சரி என்று ஏற்றனர். பின்னர் அவர்களுக்கெதிராகச் சாட்சியம் சொல்பவர்கள்) “இன்ன மனிதர்கள் (தாம் கடனை வாங்கியதாக) எங்களிடம் வாக்குமூலம் அளித்தனர்” என்றே கூறுவார்கள். (உண்மையில்) அவர்களுக்கு அந்தப் பத்திரம் வாசித்துத்தான் காட்டப் பட்டது. (நேரடியாக அவர்கள் வாக்குமூலம் அளிக்கவில்லை. அப்படியிருந்தும் அது வாக்குமூலமாகவே கருதப்படுகிறது.) இன்னும் சிலசமயம் ஒருவர் குர்ஆன் அறிஞரிடம் ஓதிக்காட்டிவிட்டு ஓதிய அவரே, “இன்ன அறிஞர் எனக்கு ஒதிக்காட்டினார்” என்று (மக்களிடம்) கூறுவதுண்டு. (நடைமுறையில் இவையெல்லாம் ஒருவர் மற்றவரிடம் கற்றார் என்பதையே குறிக்கும்.) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபிமொழி அறிஞரிடம் வாசித்துக்காட்(டிவிட்டு, “அவரே தமக்கு அறிவித்தார்” என்று குறிப்பி)டுவதால் தவறில்லை. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹதீஸ் வல்லுநரிடம் வாசித்துக்காட்டிவிட்டு, ‘அவர் எனக்கு அறிவித்தார்’ என்று கூறுவதால் தவ றில்லை. “ஆசிரியரிடம் மாணவர் வாசித்துக் காட்டு(ம்போது அதை அவர் சரி என்று கூறு)வதும், ஆசிரியரே வாசிப்பதும் சரிசமமாகும்” என்று மாலிக், சுஃப்யான் (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளனர்..
63. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந் திருந்தபோது, ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளிவாச(லின் வாயி)லில் ஒட்டகத் தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங் காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் “உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?” என்று கேட்டார். -அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.- “இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர்தான்” என்று நாங்கள் சொன்னோம்.

உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ‘அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்று அழைத்தார். அதற்கு நபியவர்கள் “உமது அழைப்பை ஏற்றேன்” என்று சொன்னார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்; கேள்வியில் கடுமை காட்டப்போகிறேன். அதற்கு நீங்கள் என்மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உமது மனதில் பட்டதைக் கேளும்” என்றார்கள்.

அப்போது அம்மனிதர், “உம்முடைய, உமக்குமுன் இருந்தவர்களுடைய இறைவன்மீது ஆணையாகக் கேட்கி றேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பி னானா?” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள்.

அடுத்து அவர் “அல்லாஹ்வை முன் வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகை களை நாம் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டி ருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள்.

அவர் “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த (ரமளான்) மாதத்தில் நாம் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.

அவர், “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்களில் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள்.

(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர், “நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டுவந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு, “நான், என் கூட்டத்தாரில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவன் ஆவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரில் ஒருவரான ளிமாம் பின் ஸஅலபா” என்றும் கூறினார்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 3
64. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ بِكِتَابِهِ رَجُلاً، وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ. فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيَّبِ قَالَ فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ.
பாடம் : 7 ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபி மொழிச் சுவடியை ஒப்படைப் பது (முனாவலா), கல்விக் குறிப்பு களை மார்க்க அறிஞர்கள் பல ஊர்களுக்கு எழுதி அனுப்புவது (முகாத்தபா) ஆகியவை தொடர் பாக வந்துள்ளவை4 அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பல பிரதிகளில் படியெடுத்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும் அனுப்பிவைத்தார்கள். “இது அனுமதிக்கப்பட்ட முறையே” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), யஹ்யா பின் சயீத் (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் கருதினர். நபிமொழிச் சுவடியை ஒப்படைக்கலாம் (முனாவலா) என்பதற்கு ஹிஜாஸ்வாசிகள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்: ஒரு படைப் பிரிவிற்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து “இன்ன இடத்தை நீர் அடையும் முன்பு இதைப் படிக்கக் கூடாது” என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்படி அவர் அந்த இடத்தை அடைந்த பின்பே அதை(த் தம்முடன் வந்த மற்ற) மக்களுக்குப் படித்துக்காட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டளையை அவர்களுக்கு அறிவித்தார்.
64. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் கிஸ்ராவுக்கு) தாம் எழுதிய கடிதத்தை ஒரு மனிதர் மூலம் அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனின் ஆளுநரிடம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அம் மனிதர் பஹ்ரைன் ஆளுநரிடம் ஒப்படைத்தார்.) அவர் அதை கிஸ்ரா (குஸ்ரூ) இடம் ஒப்படைத்தார். அதைக் கிஸ்ரா படித்ததும் (கோபப்பட்டு) (துண்டு துண்டாகக்) கிழித்துப் போட்டுவிட்டான்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“(இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக் கெதிராகப் பிரார்தித்தார்கள்” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.


அத்தியாயம் : 3
65. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَتَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم كِتَابًا ـ أَوْ أَرَادَ أَنْ يَكْتُبَ ـ فَقِيلَ لَهُ إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا. فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ. فَقُلْتُ لِقَتَادَةَ مَنْ قَالَ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ قَالَ أَنَسٌ.
பாடம் : 7 ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபி மொழிச் சுவடியை ஒப்படைப் பது (முனாவலா), கல்விக் குறிப்பு களை மார்க்க அறிஞர்கள் பல ஊர்களுக்கு எழுதி அனுப்புவது (முகாத்தபா) ஆகியவை தொடர் பாக வந்துள்ளவை4 அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பல பிரதிகளில் படியெடுத்து அவற்றை நாட்டின் பல்வேறு பகுதி களுக்கும் அனுப்பிவைத்தார்கள். “இது அனுமதிக்கப்பட்ட முறையே” என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), யஹ்யா பின் சயீத் (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்) ஆகியோர் கருதினர். நபிமொழிச் சுவடியை ஒப்படைக்கலாம் (முனாவலா) என்பதற்கு ஹிஜாஸ்வாசிகள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்: ஒரு படைப் பிரிவிற்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து “இன்ன இடத்தை நீர் அடையும் முன்பு இதைப் படிக்கக் கூடாது” என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்படி அவர் அந்த இடத்தை அடைந்த பின்பே அதை(த் தம்முடன் வந்த மற்ற) மக்களுக்குப் படித்துக்காட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டளையை அவர்களுக்கு அறிவித்தார்.
65. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானிய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து) கடிதம் ஒன்றை ‘எழுதச் சொன்னார்கள்’ அல்லது ‘எழுத விரும்பினார்கள்’. அப்போது “அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள்” என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித் துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களது கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

(இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

(எனக்கு இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடம், “அ(ந்த மோதிரத்)தில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று பொறிக்கப்பட்டிருந்ததாக (தங்க ளிடம்) யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அனஸ் (ரலி) அவர்கள் தான்’ என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 3
66. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ "".
பாடம் : 8 (கல்விக்கான) ஓர் அவையில் இறுதியில் அமர்வதும், வட்ட மாக அமர்ந்திருப்பவர்களுக்கு மத்தியில் இடைவெளியைக் கண்டால் அதில் அமர்வதும்
66. அபூவாக்கித் (ஹாரிஸ் பின் மாலிக் அல்லைஸீ - ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் அமர்ந்திருந்தபோது, மூன்று பேர் வந்துகொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிவாசலுக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னால் வந்து நின்றார்கள்.

அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது, அதில் அமர்ந்துகொண்டார். மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:

இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே, அல்லாஹ் வும் அவரிடம் வெட்கப்பட்டுக்கொண் டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

அத்தியாயம் : 3
67. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ـ أَوْ بِزِمَامِهِ ـ قَالَ "" أَىُّ يَوْمٍ هَذَا "". فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ. قَالَ "" أَلَيْسَ يَوْمَ النَّحْرِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَأَىُّ شَهْرٍ هَذَا "". فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. فَقَالَ "" أَلَيْسَ بِذِي الْحِجَّةِ "". قُلْنَا بَلَى. قَالَ "" فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا. لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ "".
பாடம் : 9 “நேரில் கேட்டவரைவிடக் கேட்டவரிடம் கேட்கும் எத்த னையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
67. அபூபக்ரா (நுஃபைஉ பின் அல் ஹாரிஸ்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களைப் பற்றிக் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது ‘மினா’வில் துல்ஹஜ் பத்தாம் நாள்) ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம்.

அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் ‘ஆம்’ என்றோம்.

நபி (ஸல்) அவர்கள், “உங்களது புனித மிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ, அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் பொருட்களும் உங்கள் மானங்களும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்” என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிட வேண்டும்; ஏனெனில், இங்கு வந்திருப்பவர் தம்மை விட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக்கூடும்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
68. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِالْمَوْعِظَةِ فِي الأَيَّامِ، كَرَاهَةَ السَّآمَةِ عَلَيْنَا.
பாடம் : 10 சொல்வதற்கும் செயல்படுவதற் கும் முன்பு அறிந்துகொள்ளல்5 ஏனெனில், உயர்ந்தோனாகிய அல்லாஹ், “(நபியே!) நீர் அறிந்து கொள்வீ ராக: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (47:19) என்று கூறுகின் றான். இந்த வசனத்தில் அறிதலை இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான். அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். அவர்கள் அறிவைத்தான் வாரிசுச் சொத்தாக விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பேற்றைப் பெற்றவர் ஆவார்.6 கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால், அவருக்குச் சொர்க்கத்திற்கான வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.7 புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான். (35:28) அல்லாஹ் கூறுகின்றான்: (உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெ வரும்) புரிந்துகொள்ளமாட்டர். (29:43) அல்லாஹ் கூறுகின்றான்: “நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்துகொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்று (இறைமறுப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10) அல்லாஹ் (மற்றொரு வசனத்தில்), “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (39:9) என்று வினவுகின்றான். “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (மார்க்க விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.8 நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: அறிவு (வளர்ச்சி) என்பது கற்பதன் மூலமே கிடைக்கும்.9 அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி, “இதன்மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும், நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால், என்னை நீங்கள் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்” என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மக்களே!) ரப்பானிகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்” என்று கூறினார்கள். ‘ரப்பானீ’ என்பவர், மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப் படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது. பாடம் : 11 மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (நிலைமை அறிந்து) பக்குவமாகப் போதனை செய்த தும் கல்வி புகட்டியதும்
68. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களுக்குச் சலிப்பேற்பட்டுவிடக் கூடும் என்று அஞ்சி (தொடர்ச்சியாக இல்லாமல்) பல்வேறு நாட்களில் (விட்டு விட்டு) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந் தார்கள்.


அத்தியாயம் : 3
69. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا "".
பாடம் : 10 சொல்வதற்கும் செயல்படுவதற் கும் முன்பு அறிந்துகொள்ளல்5 ஏனெனில், உயர்ந்தோனாகிய அல்லாஹ், “(நபியே!) நீர் அறிந்து கொள்வீ ராக: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” (47:19) என்று கூறுகின் றான். இந்த வசனத்தில் அறிதலை இறைவன் முதலில் குறிப்பிட்டுள்ளான். அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். அவர்கள் அறிவைத்தான் வாரிசுச் சொத்தாக விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைவான பேற்றைப் பெற்றவர் ஆவார்.6 கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால், அவருக்குச் சொர்க்கத்திற்கான வழியை அல்லாஹ் எளிதாக்குகிறான்.7 புகழோங்கிய அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான். (35:28) அல்லாஹ் கூறுகின்றான்: (உதாரணங்களாக நாம் குறிப்பிட்ட) இவற்றை அறிஞர்களைத் தவிர (வேறெ வரும்) புரிந்துகொள்ளமாட்டர். (29:43) அல்லாஹ் கூறுகின்றான்: “நாங்கள் (அவரது போதனையை செவிதாழ்த்திக்) கேட்டிருந்தாலோ அல்லது அவற்றைப் புரிந்துகொண்டிருந்தாலோ (இன்று) நரகவாசிகளாய் நாங்கள் ஆகியிருக்கமாட்டோம்” என்று (இறைமறுப்பாளர்கள் மறுமையில்) கூறுவார்கள். (67:10) அல்லாஹ் (மற்றொரு வசனத்தில்), “அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (39:9) என்று வினவுகின்றான். “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை (மார்க்க விளக்கமுடைய) அறிஞராக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.8 நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: அறிவு (வளர்ச்சி) என்பது கற்பதன் மூலமே கிடைக்கும்.9 அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக்காட்டி, “இதன்மீது நீங்கள் உருவிய வாளை வைத்திருந்தாலும், நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்ல நினைத்துவிட்டால், என்னை நீங்கள் கொல்வதற்குள் நான் அதைச் சொல்லி முடித்துவிடுவேன்” என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மக்களே!) ரப்பானிகளாய் (அதாவது) விவேகம் மிக்கவர்களாய் மார்க்கத்தின் சட்டதிட்டங்களைத் தெரிந்தவர்களாய் இருங்கள்” என்று கூறினார்கள். ‘ரப்பானீ’ என்பவர், மக்களுக்குப் பெரிய விஷயங்களைச் சொல்வதற்கு முன்னால் சிறிய விஷயங்களைப் படிப் படியாகப் பயிற்றுவிப்பவர் ஆவார் என்றும் கூறப்படுகிறது. பாடம் : 11 மக்கள் சலிப்படைந்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (நிலைமை அறிந்து) பக்குவமாகப் போதனை செய்த தும் கல்வி புகட்டியதும்
69. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்க ளைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப் பேற்றிடாதீர்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 3
70. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ، فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ. قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا.
பாடம் : 12 கல்வியாளர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக் குவது
70. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறிவந் தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அபூஅப்திர் ரஹ்மான்! தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “உங்களைச் சலிப்படை யச் செய்துவிடுவேனோ என்று நான் அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது. நாங்கள் சலிப்படை வதை அஞ்சி (நிலைமை அறிந்து) பக்குவ மாக நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறிவந்ததைப் போன்றே, உங்களுக்கும் பக்குமாக நான் அறிவுரை கூறுகிறேன்” என்றார்கள்.

அத்தியாயம் : 3
71. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ "".
பாடம் : 13 அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத் தில் (விளக்கமுடைய) அறிஞ ராக்குகிறான்.
71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். நான் விநியோகிப்பவன்தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தார் (இடையே ஒரு குழுவினர்) இறைக் கட்டளைமீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு மாறு செய்வோர் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. (அவர்கள் இதே நிலையில் இருக்க) அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.10

இதை முஆவியா (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 3
72. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ لِي ابْنُ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ، قَالَ صَحِبْتُ ابْنَ عُمَرَ إِلَى الْمَدِينَةِ فَلَمْ أَسْمَعْهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ حَدِيثًا وَاحِدًا، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأُتِيَ بِجُمَّارٍ فَقَالَ "" إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً مَثَلُهَا كَمَثَلِ الْمُسْلِمِ "". فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَصْغَرُ الْقَوْمِ فَسَكَتُّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" هِيَ النَّخْلَةُ "".
பாடம் : 14 சமயோஜித அறிவு
72. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் மதீனாவரை சென்றேன். (அப்பய ணத்தில்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது எந்த ஹதீஸையும் அறிவித்ததை நான் கேட்கவில்லை; ஒரேயொரு ஹதீஸைத் தவிர! (அந்த ஹதீஸ் வருமாறு:)

(ஒரு சமயம்) நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்களிடம் பேரீச்ச மரக் குருத்தொன்று கொண்டுவரப்பட்டது. அதைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “மரங்களில் ஒரு வகை மரம் உள்ளது; அது முஸ்லிமுக்கு உதாரணமாகும் (அது என்ன மரம்?)” என்று கேட்டார்கள்.

“அது பேரீச்ச மரம்தான்” என்று நான் சொல்ல நினைத்தேன். ஆனால், அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் சிறியவனாயிருந்தேன். (மூத்தவர்கள் மௌனமாயிருக்க நான் கூறுவதா என்று எண்ணி) மௌனமாயிருந்துவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று கூறினார்கள்.11

அத்தியாயம் : 3
73. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَلَى غَيْرِ مَا حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ، فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "".
பாடம் : 15 கல்வியிலும் ஞானத்திலும் பொறாமை கொள்வது உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் தலைவர்களாவதற்கு முன்பே சட்டங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று கூறி னார்கள். அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின் றேன்: நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் முதுமைப் பருவத்தில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.12
73. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; இன்னொரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும் (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.13

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 3
74. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غُرَيْرٍ الزُّهْرِيُّ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ خَضِرٌ. فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي، هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ مُوسَى لاَ. فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الْحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ، وَكَانَ يَتَّبِعُ أَثَرَ الْحُوتِ فِي الْبَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ. قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا. فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ ـ عَزَّ وَجَلَّ ـ فِي كِتَابِهِ "".
பாடம் : 16 களிர் (அலை) அவர்களைத் தேடி மூசா (அலை) அவர்கள் கடலுக்குச் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை14 “உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தர நான் உங்களைப் பின் தொடர்ந்து வரலாமா?” (18:66) என்று (களிர் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் கேட்டதாக) உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்.
74. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மூசா (அலை) அவர்கள் (சந்தித்த அந்த) நண்பர் யார் என்பது தொடர்பாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல் ஃபஸாரீ (ரலி) அவர்களும் விவாதித்துக் கொண்டனர். “அவர் ‘களிர்’ (அலை) அவர்கள்தான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்கள் வேறொரு மனிதர் என்றார்கள்.)

அப்போது அவர்கள் இருவரையும் கடந்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எந்த நண்பரைச் சந்திக்க (அல்லாஹ்விடம்) வழி கேட்டார்களோ அந்த நண்பர் (யார் என்பது) தொடர்பாக) விவாதித்துக் கொண்டோம். அவர் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் எதுவும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரின் (பிரமுகர் கள்) கூட்டம் ஒன்றில் ஒரு மனிதர் வந்து மூசா (அலை) அவர்களிடம், “உங்களை விட அதிகமாக அறிந்தவர் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “(அப்படி யாரும் இருப்பதாக) எனக்குத் தெரிய வில்லை” என்றார்கள். அப்போது அல்லாஹ், “அப்படியல்ல; நம் அடியார் ‘களிர்’ (உங்களைவிட அறிந்தவராக) இருக்கிறார்” என்று கூறினான். உடனே மூசா (அலை) அவர்கள் அவரைச் சந்திக் கும் வழி என்னவென்று (அல்லாஹ்விடம்) கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், மூசா (அலை) அவர்களுக்கு மீனை அடையாளமாக்கி னான். “இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட வேண்டும். அங்கு அவரை நீர் சந்திப்பீர்” என்று சொல்லப்பட்டது. அவ்வாறே, மூசா (அலை) அவர்கள் கடலில் மீன் (தொலைந்து போனபின் அதன்) சுவட்டைப் பின்பற்றிச் சென்றார்கள். அதாவது மூசா (அலை) அவர்களுடன் வந்த உதவியாளர், “நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கி ஓய்வெடுத்தோம் பார்த்தீர்களா? அந்த இடத்தில் மீனை நான் மறந்து (தவற விட்டு) விட்டேன். அதைக் கூறவிடாமல் என்னை ஷைத்தான்தான் மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று சொன்னார்கள்.

பிறகு இருவரும் தம் (பாதச்) சுவடுகளைத் தேடித் திரும்பிச் சென்றார்கள்; அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். பிறகு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது வேதத்தில் (18:60-82) எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அத்தியாயம் : 3
75. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَمَّنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ "" اللَّهُمَّ عَلِّمْهُ الْكِتَابَ "".
பாடம் : 17 “இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத்தருவாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
75. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து, “இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 3
76. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، فَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكَرْ ذَلِكَ عَلَىَّ.
பாடம் : 18 சிறுவர்கள் எந்த வயதில் செவியுற்ற செய்தி ஏற்கப் படும்?15
76. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) ‘மினா’வில் சுவர் (போன்ற தடுப்பு) எதை யும் முன்னோக்காதவர்களாக (திறந்த வெளியில் மக்களுக்கு)த் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி அவர்களை நோக்கிச் சென்றேன். -அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- (தொழுது கொண்டிருந்தவர்களின்) வரிசையில் ஒரு பகுதிக்கு முன்னால் நான் கடந்து சென்று, கழுதையை மேய விட்டுவிட்டு, (தொழுவோரின்) வரிசையில் நானும் நின்றுகொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை வரிசையைக் கடந்துசென்ற)தற்காக என்மீது ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை.


அத்தியாயம் : 3