மருத்துவம்
5678. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلاَّ أَنْزَلَ لَهُ شِفَاءً "".
பாடம் : 1
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
5678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற் குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவ தில்லை.2
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 76

5679. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدِ بْنِ ذَكْوَانَ، عَنْ رُبَيِّعَ بِنْتِ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ، قَالَتْ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَسْقِي الْقَوْمَ، وَنَخْدُمُهُمْ، وَنَرُدُّ الْقَتْلَى وَالْجَرْحَى إِلَى الْمَدِينَةِ.
பாடம்: 2
பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் சிகிச்சையளிக்க லாமா?
5679. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புனிதப்போரில் கலந்துகொண்டோம். (போரின்போது) மக்களுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர் க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.3

5680. حَدَّثَنِي الْحُسَيْنُ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا سَالِمٌ الأَفْطَسُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ "" الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْبَةِ عَسَلٍ، وَشَرْطَةِ مِحْجَمٍ، وَكَيَّةِ نَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ "". رَفَعَ الْحَدِيثَ وَرَوَاهُ الْقُمِّيُّ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْعَسَلِ وَالْحَجْمِ.
பாடம்: 3
மூன்றில் நிவாரணம் உண்டு.
5680. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தீயால் சூடிட்டுக்கொள்வது ஆகியவையே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறினார்கள்.4
மற்றோர் அறிவிப்பில், ‘‘தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது” என வந்துள்ளது.

5681. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ أَبُو الْحَارِثِ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ شُجَاعٍ، عَنْ سَالِمٍ الأَفْطَسِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ كَيَّةٍ بِنَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَىِّ "".
பாடம்: 3
மூன்றில் நிவாரணம் உண்டு.
5681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவி யால் (உடலில்) கீறுவது, தேன் அருந்து வது, நெருப்பால் சூடிட்டுக்கொள்வது ஆகியவையே அந்த மூன்றும். (இருப்பி னும்,) நான் என் சமுதாயத்தாருக்கு நெருப்பால் சூடிட்டுக்கொள்ள வேண்டா மெனத் தடை விதிக்கிறேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5682. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الْحَلْوَاءُ وَالْعَسَلُ.
பாடம் : 4
தேனால் சிகிச்சையளிப்பதும், ‘‘தேனில் மக்களுக்கு நிவாரணம் உள்ளது” எனும் (16:69ஆவது) இறைவசனமும்5
5682. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.6

5683. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْغَسِيلِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنْ كَانَ فِي شَىْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ ـ أَوْ يَكُونُ فِي شَىْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ ـ خَيْرٌ فَفِي شَرْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ بِنَارٍ تُوَافِقُ الدَّاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ "".
பாடம் : 4
தேனால் சிகிச்சையளிப்பதும், ‘‘தேனில் மக்களுக்கு நிவாரணம் உள்ளது” எனும் (16:69ஆவது) இறைவசனமும்5
5683. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில்தான் அது உள்ளது. (ஆயி னும்,) சூடிடுவதை நான் விரும்ப வில்லை.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

5684. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَخِي يَشْتَكِي بَطْنَهُ. فَقَالَ "" اسْقِهِ عَسَلاً "". ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ "" اسْقِهِ عَسَلاً "". ثُمَّ أَتَاهُ فَقَالَ فَعَلْتُ. فَقَالَ "" صَدَقَ اللَّهُ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، اسْقِهِ عَسَلاً "". فَسَقَاهُ فَبَرَأَ.
பாடம் : 4
தேனால் சிகிச்சையளிப்பதும், ‘‘தேனில் மக்களுக்கு நிவாரணம் உள்ளது” எனும் (16:69ஆவது) இறைவசனமும்5
5684. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், ‘‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள்.
பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘(தேனில் நிவாரணம் இருப்பதாக குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது; அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று சொன்னார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

5685. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ نَاسًا، كَانَ بِهِمْ سَقَمٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ آوِنَا وَأَطْعِمْنَا فَلَمَّا صَحُّوا قَالُوا إِنَّ الْمَدِينَةَ وَخِمَةٌ. فَأَنْزَلَهُمُ الْحَرَّةَ فِي ذَوْدٍ لَهُ فَقَالَ "" اشْرَبُوا أَلْبَانَهَا "". فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَاسْتَاقُوا ذَوْدَهُ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، فَرَأَيْتُ الرَّجُلَ مِنْهُمْ يَكْدُمُ الأَرْضَ بِلِسَانِهِ حَتَّى يَمُوتَ. قَالَ سَلاَّمٌ فَبَلَغَنِي أَنَّ الْحَجَّاجَ قَالَ لأَنَسٍ حَدِّثْنِي بِأَشَدِّ عُقُوبَةٍ عَاقَبَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ بِهَذَا. فَبَلَغَ الْحَسَنَ فَقَالَ وَدِدْتُ أَنَّهُ لَمْ يُحَدِّثْهُ بِهَذَا
பாடம்: 5
ஒட்டகப் பாலால் சிகிச்சையளிப் பது
5685. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனா வந்த ‘உக்ல்’ மற்றும் ‘உரைனா’ குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்” என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப்பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது ‘‘மதீனா(வின் தட்பவெப்ப நிலை) எங்களுக்கு ஒத்துவரவில்லை” என்று கூறினர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த ‘அல்ஹர்ரா’ எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து, ‘‘இவற்றின் பாலை அருந்துங்கள்” என்று கூறினார்கள்.
அவர்கள் குணமடைந்தபோது நபி (ஸல்) அவர்களுடைய (ஒட்டக) மேய்ப்பாள ரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய ஒட்டகங்களை இழுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின்தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப்பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்துவரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களுடைய கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களின் கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவன் இறக்கும்வரை தனது நாவால் தரையை நக்கியபடி இருந்ததை நான் பார்த்தேன்.7
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சல்லாம் பின் மிஸ்கீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ‘‘நபி (ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்ததாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்தபோது, ‘‘(ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்வார் என்ப தால்) அவருக்கு இதை அனஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென நான் விரும்பினேன்” என்று சொன்னார்கள்.

5686. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ نَاسًا، اجْتَوَوْا فِي الْمَدِينَةِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَلْحَقُوا بِرَاعِيهِ ـ يَعْنِي الإِبِلَ ـ فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَلَحِقُوا بِرَاعِيهِ فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، حَتَّى صَلَحَتْ أَبْدَانُهُمْ فَقَتَلُوا الرَّاعِيَ وَسَاقُوا الإِبِلَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ فِي طَلَبِهِمْ، فَجِيءَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ. قَالَ قَتَادَةُ فَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ أَنَّ ذَلِكَ كَانَ قَبْلَ أَنْ تَنْزِلَ الْحُدُودُ.
பாடம் : 6
ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சையளிப்பது
5686. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(‘உரைனா’ குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்பவெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறுநீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து)வர (ஆட்களை) அனுப்பிவைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபி (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர் களுடைய கண்களில் சூடிட்டார்கள்.8
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், ‘‘இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம்” என்று கூறினார்கள்.

5687. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ، فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهْوَ مَرِيضٌ، فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ، فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا، ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ، فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ مِنَ السَّامِ "". قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ.
பாடம்: 7
கருஞ்சீரகம்9
5687. காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீஅ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல்நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ் சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்தாறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரு டைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள்.
ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரண மாகும்; ‘சாமை’த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்கள். நான், ‘‘சாம் என்றால் என்ன?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மரணம்’ என்று பதிலளித் தார்கள்.

5688. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلاَّ السَّامَ "". قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ، وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ.
பாடம்: 7
கருஞ்சீரகம்9
5688. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘கருஞ்சீரக விதையில் ‘சாமை’த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்பது பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.

5689. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينِ لِلْمَرِيضِ وَلِلْمَحْزُونِ عَلَى الْهَالِكِ، وَكَانَتْ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ التَّلْبِينَةَ تُجِمُّ فُؤَادَ الْمَرِيضِ، وَتَذْهَبُ بِبَعْضِ الْحُزْنِ "".
பாடம்: 8
நோயாளிக்கு ‘தல்பீனா’ (பால் பாய சம்) தயாரித்துக்கொடுப்பது10
5689. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் நோயாளிக்கும், இறந்து போனவரை எண்ணி வருந்துபவருக்கும் ‘தல்பீனா’ (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள்.
மேலும், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலை களில் சிலவற்றைப் போக்கும்’ என்று கூறக் கேட்டுள்ளேன்” என்பார்கள்.11

5690. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَأْمُرُ بِالتَّلْبِينَةِ وَتَقُولُ هُوَ الْبَغِيضُ النَّافِعُ.
பாடம்: 8
நோயாளிக்கு ‘தல்பீனா’ (பால் பாய சம்) தயாரித்துக்கொடுப்பது10
5690. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், ‘‘அது (நோயாளிக்கு) வெறுப் பூட்டக்கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக்கூடியது” என்று சொல்வார் கள்.

5691. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَاسْتَعَطَ.
பாடம் : 9
மூக்கில் (சொட்டு) மருந்திடல்
5691. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவருடைய ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தமது மூக்கில் (சொட்டு)மருந்து விட்டுக்கொண்டார்கள்.12

5692. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ، فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنَ الْعُذْرَةِ، وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ ".
பாடம் : 10
இந்திய கோஷ்டம், கடல் கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது13
(கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘குஸ்த்’ எனும் சொல் الكُسْتُ، القُسْطُ (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப்படுகிறது; ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் القَافُوْرُ الكَافُوْرُ (காஃபூர், ஃகாஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று.
(வானம் அகற்றப்படும்போது எனும் 81:11ஆவது குர்ஆன் வசனத்தின் மூலத்தில் ‘குஷிதத்’ எனும் சொல்லை) قُشِطَتْ ، كُسِطَتْ (குசிதத், ஃகுஷிதத்) என இரு முறைகளிலும் ஓதப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் قُشِطَتْ (ஃகுஷிதத்) என ஓதினார்கள்.
5692. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும்.
(மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
இதை உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.

5693. وَدَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِابْنٍ لِي لَمْ يَأْكُلِ الطَّعَامَ فَبَالَ عَلَيْهِ، فَدَعَا بِمَاءٍ فَرَشَّ عَلَيْهِ.
பாடம் : 10
இந்திய கோஷ்டம், கடல் கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது13
(கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘குஸ்த்’ எனும் சொல் الكُسْتُ، القُسْطُ (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப்படுகிறது; ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் القَافُوْرُ الكَافُوْرُ (காஃபூர், ஃகாஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று.
(வானம் அகற்றப்படும்போது எனும் 81:11ஆவது குர்ஆன் வசனத்தின் மூலத்தில் ‘குஷிதத்’ எனும் சொல்லை) قُشِطَتْ ، كُسِطَتْ (குசிதத், ஃகுஷிதத்) என இரு முறைகளிலும் ஓதப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் قُشِطَتْ (ஃகுஷிதத்) என ஓதினார்கள்.
5693. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள்.14

5694. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ صَائِمٌ.
பாடம் : 11
(குருதிஉறிஞ்சு கருவி மூலம்) எந்த நேரத்தில் குருதி உறிஞ்சி எடுக்கலாம்?15
அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்.
5694. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.16

5695. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، وَعَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهْوَ مُحْرِمٌ.
பாடம் : 12
பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் குருதி உறிஞ்சி எடுப்பது
இதை(ப் பற்றி) நபி (ஸல்) அவர்களி டமிருந்து அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.17
5695. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.18

5696. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سُئِلَ عَنْ أَجْرِ الْحَجَّامِ، فَقَالَ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَجَمَهُ أَبُو طَيْبَةَ، وَأَعْطَاهُ صَاعَيْنِ مِنْ طَعَامٍ، وَكَلَّمَ مَوَالِيَهُ فَخَفَّفُوا عَنْهُ، وَقَالَ "" إِنَّ أَمْثَلَ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ وَالْقُسْطُ الْبَحْرِيُّ "". وَقَالَ "" لاَ تُعَذِّبُوا صِبْيَانَكُمْ بِالْغَمْزِ مِنَ الْعُذْرَةِ، وَعَلَيْكُمْ بِالْقُسْطِ "".
பாடம்: 13
நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது
5696. அபூஉபைதா ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூதய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார்.
நபி (ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூதய்பாவின் எசமானர்களுடன் நபி (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றிலெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், கடல் கோஷ்டமும்தான்.19
மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களுடைய) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள்” என்று சொன்னார்கள்.20

5697. حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، وَغَيْرُهُ، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ عَادَ الْمُقَنَّعَ ثُمَّ قَالَ لاَ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ فِيهِ شِفَاءً "".
பாடம்: 13
நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது
5697. ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, ‘‘நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் நிவாரணம் உள்ளது’ என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.