541. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ ثُمَّ يَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ. ثُمَّ قَالَ إِلَى شَطْرِ اللَّيْلِ. وَقَالَ مُعَاذٌ قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُهُ مَرَّةً فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ.
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
541. அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவர் தம் பக்கத்தி-ருப்ப வரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹு தொழுவிப்ப வராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை சுப்ஹு தொழுகையில் ஓதுவார்கள்.

சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல் நேரத்தின்)போது லுஹ்ரை தொழுவிப்பார்கள்.

அடுத்து எங்களில் ஒருவர் (தொழுது விட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்துக்குத்) திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். (அந்த அளவுக்கு நேரம் இருக்கும்போது) அஸ்ர் தொழுவிப்பார்கள்.

-இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். “இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி)வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறையாகக் கருதமாட்டார்கள்” என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். பின்னர் (ஒரு முறை) ‘பாதி இரவுவரை’ என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார் கள்: “பின்னர் ஒரு முறை அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் ‘அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை’ என்று (ஐயப்பாட்டுடன்) அறிவித்தார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 9
542. حَدَّثَنَا مُحَمَّدٌ ـ يَعْنِي ابْنَ مُقَاتِلٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالظَّهَائِرِ فَسَجَدْنَا عَلَى ثِيَابِنَا اتِّقَاءَ الْحَرِّ.
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
542. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நண்பகல் நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குப்பின் (லுஹ்ர்) தொழும்போது, வெப்பத் தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடையின் (ஒரு பகுதியின்) மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்பவர்களாக இருந்தோம்.

அத்தியாயம் : 9
543. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ. فَقَالَ أَيُّوبُ لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ. قَالَ عَسَى.
பாடம் : 12 லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது7
543. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷா வையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ் ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், “இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக் காலத்தில் நடந்திருக்கலாமோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் ‘இருக் கலாம்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 9
544. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
544. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது அறையி-ருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘எனது அறையின் மத்தியிலிருந்து விலகாத நிலையில்’ என்று காணப்படுகிறது.


அத்தியாயம் : 9
545. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
545. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.


அத்தியாயம் : 9
546. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَةَ الْعَصْرِ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ يَظْهَرِ الْفَىْءُ بَعْدُ. وَقَالَ مَالِكٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَشُعَيْبٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَالشَّمْسُ قَبْلَ أَنْ تَظْهَرَ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
546. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்துகொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப் பக்கச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மா-க் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில்’ என்று இடம்பெற்றுள்ளது.8


அத்தியாயம் : 9
547. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، فَقَالَ لَهُ أَبِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ فَقَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ ـ وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
547. சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், “-நீங்கள் முதல் தொழுகை என்று அழைக்கும்- நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக்கோடி யிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பி சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.

-அறிவிப்பாளர் சய்யார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.

தொடர்ந்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘அல்அ(த்)தமா’ என்று நீங்கள் அழைக்கும் இஷா தொழுகையைத் தாமதப்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷா தொழு கைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப் பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப் பார்கள்.

(எங்களில்) ஒருவர் தமக்குப் பக்கத்தி-ருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறை (சுப்ஹு) தொழுகையை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள்.


அத்தியாயம் : 9
548. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَخْرُجُ الإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فَنَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
548. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு (மதீனாவுக்கு அருகிலுள்ள ‘குபா’ பகுதியில் வசிக்கும்) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் எங்களில் சிலர் சென்றால், அக்குலத்தார் அஸ்ர் தொழுதுகொண்டிருப்பதைக் காண்போம்.


அத்தியாயம் : 9
549. حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ، مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرُ، وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
549. அபூஉமாமா (அஸ்அத் பின் சஹ்ல் பின் ஹுனைஃப்-ர-) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு (மதீனாவின் துணை ஆட்சியராக இருந்த) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவர்கள் அஸ்ர் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம்.

அப்போது நான் (மரியாதை நிமித்தம்) ‘என் தந்தையின் சகோதரரே!’ (என்று அழைத்து) “இப்போது நீங்கள் தொழுதது எந்தத் தொழுகை (லுஹ்ரா? அல்லது அஸ்ரா?)” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(இது) அஸ்ர் தொழுகை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 9
550. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ، وَبَعْضُ الْعَوَالِي مِنَ الْمَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ أَوْ نَحْوِهِ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
550. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் நிகழாமல்) தெளிவாகவே இருக்கும். (நஜ்த் திசையி-ருந்த) மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும்போது, சூரியன் உயர்ந்தே இருக்கும்.

அந்த மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவி-ருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் அமைந்திருந்தன.


அத்தியாயம் : 9
551. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ مِنَّا إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
551. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப் பாங்கான பகுதிகளில் ஒன்றான) ‘குபா’விற்குச் செல்பவர் அங்கே சென்றடைவார். அப்போதும் சூரியன் உயரத்திலேயே இருக்கும்.9

அத்தியாயம் : 9
552. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ "".
பாடம் : 14 அஸ்ர் தொழுகையை (உரிய நேரத்தில் தொழாமல்) தவற விட்டவர் அடையும் பாவம்
552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.

அத்தியாயம் : 9
553. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي غَزْوَةٍ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِصَلاَةِ الْعَصْرِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ "".
பாடம் : 15 அஸ்ர் தொழுகையைக் கைவிட்டவர்
553. அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேகமூட்டம் இருந்த ஒரு நாளில் புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்களு டன் ஒரு போரில் நாங்கள் இருந்தோம்.

அப்போது அவர்கள், “அஸ்ர் தொழு கையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்தில்) நிறைவேற்றுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், ‘யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்து விட்டன’ என்று கூறியுள்ளார்கள்” என்றார்கள்.

அத்தியாயம் : 9
554. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً ـ يَعْنِي الْبَدْرَ ـ فَقَالَ "" إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا "". ثُمَّ قَرَأَ {وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ}. قَالَ إِسْمَاعِيلُ افْعَلُوا لاَ تَفُوتَنَّكُمْ.
பாடம் : 16 அஸ்ர் தொழுகையின் சிறப்பு
554. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பௌர்ணமி இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்துகொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலாவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்று உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழு கையிலும், சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால், அவ்வாறே செய்யுங்கள் (இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” (50:39) எனும் இறைவசனத்தை ஓதினார்கள்.

(இதற்கு விளக்கமளிக்கையில்) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மா யீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள், “(இந்தத் தொழுகைகளை) நீங்கள் தவறா மல் தொழுங்கள்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 9
555. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ "".
பாடம் : 16 அஸ்ர் தொழுகையின் சிறப்பு
555. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) உங்களிடையே வருகின்றனர்; ஃபஜ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுகூடுகின்றனர். பிறகு, உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்துக்கு) ஏறிச் செல்கின்றனர்.

அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ் வான)வர் களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.

அத்தியாயம் : 9
556. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ سَجْدَةً مِنْ صَلاَةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ، وَإِذَا أَدْرَكَ سَجْدَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ "".
பாடம் : 17 சூரியன் மறைவதற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்ட வர் (தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள்ளட் டும்).10
556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் சூரியன் மறைவ தற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்துகொண்டால், அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்துகொண்டால் அவரும் தமது தொழுகையை முழுமைப் படுத்தட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
557. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ أَىْ رَبَّنَا أَعْطَيْتَ هَؤُلاَءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثَرَ عَمَلاً، قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَىْءٍ قَالُوا لاَ، قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம் : 17 சூரியன் மறைவதற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்ட வர் (தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள்ளட் டும்).10
557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயத்தாரோடு நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது, அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவே ஆகும்.

‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. (அதன்படி) அவர்கள் நண்பகல்வரை செயல்பட்டார் கள். பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலி யாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பட்டது.

பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகைவரை செயல்பட்டு விட்டுப் பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பட்டது.

பிறகு நமக்கு குர்ஆன் வழங்கப் பெற்றது. நாம் (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும்வரை (அதன்படி) செயல்பட் டோம். நமக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கப்பட்டன.

எனவே, வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், “எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே? நாங்கள் (இவர்களைவிட) அதிக நேரம் வேலை செய்திருந்தோமே?” என்று வினவினர். அதற்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “உங்களுக் குரிய கூ-யில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள் “இல்லை” என்று கூறினர்.

அதற்கு அல்லாஹ், “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து, எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன்” என்று கூறினான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
558. حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْمُسْلِمِينَ وَالْيَهُودِ وَالنَّصَارَى كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ قَوْمًا يَعْمَلُونَ لَهُ عَمَلاً إِلَى اللَّيْلِ، فَعَمِلُوا إِلَى نِصْفِ النَّهَارِ، فَقَالُوا لاَ حَاجَةَ لَنَا إِلَى أَجْرِكَ، فَاسْتَأْجَرَ آخَرِينَ فَقَالَ أَكْمِلُوا بَقِيَّةَ يَوْمِكُمْ، وَلَكُمُ الَّذِي شَرَطْتُ، فَعَمِلُوا حَتَّى إِذَا كَانَ حِينَ صَلاَةِ الْعَصْرِ قَالُوا لَكَ مَا عَمِلْنَا. فَاسْتَأْجَرَ قَوْمًا فَعَمِلُوا بَقِيَّةَ يَوْمِهِمْ حَتَّى غَابَتِ الشَّمْسُ، وَاسْتَكْمَلُوا أَجْرَ الْفَرِيقَيْنِ "".
பாடம் : 17 சூரியன் மறைவதற்குமுன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்ட வர் (தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள்ளட் டும்).10
558. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்-ம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட கூ-க் குக் காலையி-ருந்து) இரவுவரை தமக்கு வேலை செய்வதற்காக ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது.

(அவர் முத-ல் ஒரு குழுவினரை கூ-க்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, “எங்களுக்கு உமது கூ- தேவையில்லை” என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு குழுவினரைக் கூ-க்கு அமர்த்தி, “இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள். (முதலாவது குழுவின ருக்கு) நான் தருவதாகப் பேசிய கூ-யை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.

அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது, “உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்)” என்றனர். எனவே, அந்த மனிதர் மற்றொரு குழுவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரி-ருந்து) சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முத-ரண்டு குழுவினரின் கூ-யையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக்கொண்டனர்.11

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 9
559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، صُهَيْبٌ مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ.
பாடம் : 18 மஃக்ரிப் தொழுகையின் நேரம் “நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதுகொள்ளலாம்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.12
559. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும் போது, அவர் தமது அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அந்த அளவுக்கு வெளிச்சமிருக்க, ஆரம்ப நேரத்திலேயே மஃக்ரிப் தொழுவோம்.)


அத்தியாயம் : 9
560. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ قَدِمَ الْحَجَّاجُ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَوْا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا ـ أَوْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهَا بِغَلَسٍ.
பாடம் : 18 மஃக்ரிப் தொழுகையின் நேரம் “நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதுகொள்ளலாம்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.12
560. முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மதீனாவின் ஆட்சியராக) வந்தார் (அவர் தொழுகை களைத் தாமதப்படுத்தி தொழுவித்தார்).13 அப்போது நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் பற்றிக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நண்பக-ல் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் (வெளிச் சமோ வெப்பமோ குறையாமல்) தெளிவாக இருக்கும்போது அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் (பின்னேரத்திலும்) சில நேரம் (முன்னேரத்திலுமாகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள்.

மக்கள் (முன்னேரத்திலேயே) குழுமியிருக்கக் கண்டால், ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். மக்கள் தாமதமாக வரக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். சுப்ஹு தொழுகையை ‘மக்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்கள்’ இருள் இருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழு பவர்களாய் இருந்தார்கள்.


அத்தியாயம் : 9