5303. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ وَأَشَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ "" الإِيمَانُ هَا هُنَا ـ مَرَّتَيْنِ ـ أَلاَ وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம்: 25
‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும்.
கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9)
எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும்.
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29)
ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள்.
‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர்.
ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும்.
இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம்.
‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:
ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும்.
ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5303. அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து ‘‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்” என்று இரு முறை கூறிவிட்டு, ‘‘அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலைதூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.72
அத்தியாயம் : 68

5304. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا "". وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا.
பாடம்: 25
‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும்.
கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9)
எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும்.
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29)
ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள்.
‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர்.
ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும்.
இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம்.
‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:
ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும்.
ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5304. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

5305. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ أَسْوَدُ. فَقَالَ "" هَلْ لَكَ مِنْ إِبِلٍ "". قَالَ نَعَمْ. قَالَ "" مَا أَلْوَانُهَا "". قَالَ حُمْرٌ. قَالَ "" هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَأَنَّى ذَلِكَ "". قَالَ لَعَلَّهُ نَزَعَهُ عِرْقٌ. قَالَ "" فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ "".
பாடம்: 26
இந்தக் குழந்தை தம்முடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது73
5305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.

5306.
பாடம்: 27
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்பவரை சத்தியம் செய்வித்தல்
5306. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதி யராகிய) அவ்விருவரையும் சத்தியம் செய்ய வைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.74
அத்தியாயம் :

5307. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ، فَجَاءَ فَشَهِدَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ "". ثُمَّ قَامَتْ فَشَهِدَتْ.
பாடம்: 28
சாபஅழைப்புப் பிரமாணத்தை ஆண்தான் ஆரம்பிக்க வேண்டும்.75
5307. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவிமீது (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே, ஹிலால் அவர்கள் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார்.76

5308. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ. فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا، حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ، قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا. فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا. فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أُنْزِلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا "". قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا مِنْ تَلاَعُنِهِمَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا. فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ.
பாடம்: 29
சாபஅழைப்புப் பிரமாணமும், சாபஅழைப்புப் பிரமாணத்திற்குப் பிறகு மணவிலக்கு அளிப்பதும்
5308. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். ஆஸிமே! எனக்காக இது குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்கள்.
ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று.
ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிர் (ரலி) அவர்களிடம், ‘‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்கவைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்று சொன்னார்கள்.
அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்!” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் (வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்றார்கள். (பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருக்கும்போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள்மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு இதுவே சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.77

5309. حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْمُلاَعَنَةِ، وَعَنِ السُّنَّةِ، فِيهَا عَنْ حَدِيثِ، سَهْلِ بْنِ سَعْدٍ أَخِي بَنِي سَاعِدَةَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَأَنْزَلَ اللَّهُ فِي شَأْنِهِ مَا ذَكَرَ فِي الْقُرْآنِ مِنْ أَمْرِ الْمُتَلاَعِنَيْنِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَدْ قَضَى اللَّهُ فِيكَ وَفِي امْرَأَتِكَ "". قَالَ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ، فَلَمَّا فَرَغَا قَالَ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا. فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ فَرَغَا مِنَ التَّلاَعُنِ، فَفَارَقَهَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ذَاكَ تَفْرِيقٌ بَيْنَ كُلِّ مُتَلاَعِنَيْنِ "". قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتِ السُّنَّةُ بَعْدَهُمَا أَنْ يُفَرَّقَ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ، وَكَانَتْ حَامِلاً، وَكَانَ ابْنُهَا يُدْعَى لأُمِّهِ، قَالَ ثُمَّ جَرَتِ السُّنَّةُ فِي مِيرَاثِهَا أَنَّهَا تَرِثُهُ وَيَرِثُ مِنْهَا مَا فَرَضَ اللَّهُ لَهُ. قَالَ ابْنُ جُرَيْجٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ فِي هَذَا الْحَدِيثِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنْ جَاءَتْ بِهِ أَحْمَرَ قَصِيرًا كَأَنَّهُ وَحَرَةٌ، فَلاَ أُرَاهَا إِلاَّ قَدْ صَدَقَتْ وَكَذَبَ عَلَيْهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أَسْوَدَ أَعْيَنَ ذَا أَلْيَتَيْنِ، فَلاَ أُرَاهُ إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا "". فَجَاءَتْ بِهِ عَلَى الْمَكْرُوهِ مِنْ ذَلِكَ.
பாடம்: 30
பள்ளிவாசலில் (வைத்து) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தல்
5309. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக் கப்பட்ட) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்று விட்டால், பழிவாங்கும் சட்டப்படி அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா?) அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
அப்போது அல்லாஹ், சாபஅழைப்புப் பிரமாணம் செய்துகொள்ளும் தம்பதியர் தொடர்பாக குர்ஆனில் குறிப்பிட்டுள்ள விதியை அருளினான். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் தீர்ப்பளித்துவிட்டான்” என்று சொன்னார்கள். எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன்.
இருவரும் சாபஅழைப்புப் பிரமாணம் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அவளை நான் (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே) வைத்திருந்தால், அவள்மீது நான் பொய்(க் குற்றச்சாட்டு) சொன்னவனாகிவிடுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லிவிட்டு, ‘லிஆன்’ பிரமாணம் முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பாகவே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளைவிட்டுப் பிரிந்துகொண்டார். இதுவே ‘லிஆன்’ பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்கும் வழியாயிற்று.
-தம்பதியர் பரஸ்பரம் செய்துகொள்ளும் சாபஅழைப்புப் பிரமாணம் குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித் துள்ள இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இருவருக்கும் பின்னால் சாபஅழைப்புப் பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்க இதுவே முன்மாதிரி ஆனது.
அந்த லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்னவளின் மகன் என்று) அழைக்கப்பட லானது. பின்னர் மகனிடமிருந்து அந்தப் பெண்ணும், அப்பெண்ணிடமிருந்து மகனும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது.
தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(லிஆன் நடந்து முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவள் அரணையைப் போன்ற குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் இவள் உண்மை சொல்லிவிட்டாள். கணவர் இவள்மீது பொய் சொல்லிவிட்டார் (என்று பொருள்); கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய புட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள்மீது அவளுடைய கணவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் என்று கருதுகிறேன்” என்றார்கள்.
பிறகு விரும்பத் தகாத அந்தத் தோற்றத்திலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். (கணவரின் குற்றச்சாட்டு நியாயமானதாகப்பட்டது.)78

5310. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ ذُكِرَ التَّلاَعُنُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلاً، ثُمَّ انْصَرَفَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ يَشْكُو إِلَيْهِ أَنَّهُ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، فَقَالَ عَاصِمٌ مَا ابْتُلِيتُ بِهَذَا إِلاَّ لِقَوْلِي، فَذَهَبَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا قَلِيلَ اللَّحْمِ سَبْطَ الشَّعَرِ، وَكَانَ الَّذِي ادَّعَى عَلَيْهِ أَنَّهُ وَجَدَهُ عِنْدَ أَهْلِهِ خَدْلاً آدَمَ كَثِيرَ اللَّحْمِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ بَيِّنْ "". فَجَاءَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَهُ، فَلاَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا. قَالَ رَجُلٌ لاِبْنِ عَبَّاسٍ فِي الْمَجْلِسِ هِيَ الَّتِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ رَجَمْتُ هَذِهِ "". فَقَالَ لاَ تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ فِي الإِسْلاَمِ السُّوءَ قَالَ أَبُو صَالِحٍ وَعَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ خَدِلاً.
பாடம்: 31
‘‘நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்கு) கல்லெறி தண்டனை அளிப்பவனா யிருந்தால் (இதோ இந்தப் பெண் ணுக்கு அளித்திருப்பேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
5310. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாபஅழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்குமுன் ஒருமுறை மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவி யுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார்.
அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், ‘‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.
-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் கணைக்கால் புடைத்தவராகவும் அதிக சதைப் பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.-
(இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.
(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.
(இந்த ஹதீஸில் ‘கணைக்கால் புடைத்தவர்’ என்பதைக் குறிக்க ‘கத்ல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதை) ‘கதில்’ என அபூஸாலிஹ் மற்றும் அப்துல்லாஹ் பின் யூசுஃப் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டனர்.

5311. حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ رَجُلٌ قَذَفَ امْرَأَتَهُ فَقَالَ فَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَخَوَىْ بَنِي الْعَجْلاَنِ، وَقَالَ "" اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ "". فَأَبَيَا. وَقَالَ "" اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبُ "". فَأَبَيَا. فَقَالَ "" اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ "" فَأَبَيَا فَفَرَّقَ بَيْنَهُمَا. قَالَ أَيُّوبُ فَقَالَ لِي عَمْرُو بْنُ دِينَارٍ إِنَّ فِي الْحَدِيثِ شَيْئًا لاَ أَرَاكَ تُحَدِّثُهُ قَالَ قَالَ الرَّجُلُ مَالِي قَالَ قِيلَ لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَادِقًا فَقَدْ دَخَلْتَ بِهَا، وَإِنْ كُنْتَ كَاذِبًا فَهْوَ أَبْعَدُ مِنْكَ.
பாடம்: 32
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணின் மஹ்ர் (மணக்கொடை குறித்த சட்டம்)79
5311. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘ஒருவர் தம் மனைவிமீது விபசாரக் குற்றம்சாட்டினால் (சட்டம் என்ன)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு ‘‘உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர்.
பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர்.
பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே), ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸில் (சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட) ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
(சாபஅழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், ‘(மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)?’ என்று கேட்டார். அதற்கு அவரிடம், ‘(உம்முடைய மனைவிமீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்ó யிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது’ என்று கூறப் பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

5312. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنِ الْمُتَلاَعِنَيْنِ،، فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْمُتَلاَعِنَيْنِ "" حِسَابُكُمَا عَلَى اللَّهِ أَحَدُكُمَا كَاذِبٌ، لاَ سَبِيلَ لَكَ عَلَيْهَا "". قَالَ مَالِي قَالَ "" لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا، فَهْوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا، وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا، فَذَاكَ أَبْعَدُ لَكَ "". قَالَ سُفْيَانُ حَفِظْتُهُ مِنْ عَمْرٍو. وَقَالَ أَيُّوبُ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ رَجُلٌ لاَعَنَ امْرَأَتَهُ فَقَالَ بِإِصْبَعَيْهِ ـ وَفَرَّقَ سُفْيَانُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى ـ فَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَخَوَىْ بَنِي الْعَجْلاَنِ، وَقَالَ "" اللَّهُ يَعْلَمُ إِنَّ أَحَدَكُمَا كَاذِبٌ فَهَلْ مِنْكُمَا تَائِبٌ "". ثَلاَثَ مَرَّاتٍ. قَالَ سُفْيَانُ حَفِظْتُهُ مِنْ عَمْرٍو وَأَيُّوبَ كَمَا أَخْبَرْتُكَ.
பாடம்: 33
சாபஅழைப்புப் பிரமாணம் செய் யும் தம்பதியரிடம், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் யார்?” என்று தலைவர் கேட்பது
5312. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று சொன்னார்கள்.
உடனே அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீர் பொய் சொல்லியிருந்தால், (அவளை அனுபவித் துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது” என்று சொன் னார்கள்.
தொடர்ந்து சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், தம் மனைவி யுடன் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த மனிதர் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள், (தம்பதியர் இருவரையும் பிரித்துவைக்க வேண்டும் என்பதைக் காட்ட) தம் இரு விரல்களால் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அப்போது தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த தம்பதியரை (லிஆனுக்குப்பின்) பிரித்துவைத்தார்கள். பிறகு, ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா?” என மூன்று முறை கேட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.
சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போது) உங்களுக்கு நான் தெரிவித்ததைப் போன்றே அம்ர் பின் தீனார், அய்யூப் (ரஹ்) ஆகியோரிடமிருந்து இந்த ஹதீஸை நான் மனனமிட்டுள்ளேன்.

5313. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَّقَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَةٍ قَذَفَهَا، وَأَحْلَفَهُمَا.
பாடம்: 34
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரைப் பிரித்துவைத்தல்
5313. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணையும் அவள்மீது விபசாரக் குற்றம்சாட்டிய கணவரையும் சத்தியப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள்.

5314. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لاَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ رَجُلٍ وَامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، وَفَرَّقَ بَيْنَهُمَا.
பாடம்: 34
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரைப் பிரித்துவைத்தல்
5314. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள்.

5315. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لاَعَنَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَتِهِ، فَانْتَفَى مِنْ وَلَدِهَا فَفَرَّقَ بَيْنَهُمَا، وَأَلْحَقَ الْوَلَدَ بِالْمَرْأَةِ.
பாடம்: 35
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணி டமே (அவளுடைய) குழந்தை சேர்க்கப்படும்.
5315. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தம்முடைய தல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.

5316. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ ذُكِرَ الْمُتَلاَعِنَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلاً، ثُمَّ انْصَرَفَ فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ، فَذَكَرَ لَهُ أَنَّهُ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، فَقَالَ عَاصِمٌ مَا ابْتُلِيتُ بِهَذَا الأَمْرِ إِلاَّ لِقَوْلِي. فَذَهَبَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ، وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا قَلِيلَ اللَّحْمِ سَبْطَ الشَّعَرِ، وَكَانَ الَّذِي وَجَدَ عِنْدَ أَهْلِهِ آدَمَ خَدْلاً كَثِيرَ اللَّحْمِ جَعْدًا قَطَطًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ بَيِّنْ "". فَوَضَعَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَ عِنْدَهَا، فَلاَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَهُمَا، فَقَالَ رَجُلٌ لاِبْنِ عَبَّاسٍ فِي الْمَجْلِسِ هِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُ هَذِهِ "". فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ السُّوءَ فِي الإِسْلاَمِ.
பாடம்: 36
(சாபஅழைப்புப் பிரமாணத்தின்போது) ‘இறைவா! (உண்மையை) வெளிப்படுத்துவாயாக’ என்று தலைவர் கூறுவது
5316. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்குமுன், மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம்சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகச்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார்.
அப்போது ‘‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே (என் குலத்தாரில் நடந்த) இந்த நிகழ்ச்சியால் நானே சோதிக்கப்பட் டுள்ளேன்” என்று ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரு டைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.
-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைந்தவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும் கணைக்கால் புடைத்தவராகவும் அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும், சுருட்டை முடி உள்ளவராகவும் இருந்தார்.-
இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் தாம் கண்டதாகக் கணவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தையைப் பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள்.
(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால், இவளுக்கு அளித்திருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் தொடர்பாகவா? என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இல்லை. (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவு கொண்டாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள் ஆவாள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட் டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.80

5317. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رِفَاعَةَ، الْقُرَظِيَّ تَزَوَّجَ امْرَأَةً، ثُمَّ طَلَّقَهَا فَتَزَوَّجَتْ آخَرَ فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ لَهُ أَنَّهُ لاَ يَأْتِيهَا، وَإِنَّهُ لَيْسَ مَعَهُ إِلاَّ مِثْلُ هُدْبَةٍ فَقَالَ "" لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ "".
பாடம்: 37
மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் ‘இத்தா’க் காலத்திற்குப்பின் வேறொரு கணவனை மணமுடித்து, அவர் அவளைத் தாம்பத்திய உறவு கொள்ளாத நிலையில் (அவரும் அவளை தலாக் சொல்லிவிட்டால், முதல் கணவன் அவளை மணந்துகொள்ளலாமா?)
5317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். பிறகு அப்பெண்ணை அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். ஆகவே, அந்தப் பெண் வேறொருவரை மணந்துகொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தம் கணவர் தம்மிடம் (உறவு கொள்ள) வருவதில்லை என்றும், அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத் திரையின்) குஞ்சம் போன்றதுதான் என்றும் கூறினார். (பிறகு தாம் தம் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் சொன்னார். அப்போது அங்கிருந்த அவருடைய இரண்டாவது கணவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தமக்கு முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளையும் அவர் காட்டினார்.)
உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை; நீ (உன்னுடைய இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக் கும்வரையிலும், அவர் உன்னிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும்வரையிலும் (முதல் கணவரை நீ மணந்து கொள்ள முடியாது)” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.81

5318. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ زَيْنَبَ ابْنَةَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ امْرَأَةً مِنْ أَسْلَمَ يُقَالُ لَهَا سُبَيْعَةُ كَانَتْ تَحْتَ زَوْجِهَا، تُوُفِّيَ عَنْهَا وَهْىَ حُبْلَى، فَخَطَبَهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ، فَأَبَتْ أَنْ تَنْكِحَهُ، فَقَالَ وَاللَّهِ مَا يَصْلُحُ أَنْ تَنْكِحِيهِ حَتَّى تَعْتَدِّي آخِرَ الأَجَلَيْنِ. فَمَكُثَتْ قَرِيبًا مِنْ عَشْرِ لَيَالٍ ثُمَّ جَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" انْكِحِي "".
பாடம் : 38
மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய ‘இத்தா’வைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்படவில்லையோ அவர்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா; அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும்.82
பாடம்: 39
கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (‘இத்தா’வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4 ஆவது வசனத்தொடர்)
5318. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ‘சுபைஆ’ என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாட்களுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை பிறந்தது.) இந்நிலையில் அவரை ‘அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் (ரலி)’ என்பார் பெண் கேட்டார். அவரை மணக்க அப்பெண் மறுத்துவிட்டார். பிறகு (வேறொருவரை மணக்கவிருக்கும் செய்தி கேட்டு) அவரைப் பார்த்து அபுஸ் ஸனாபில் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டு தவணைகளில் பிந்தியது எதுவோ அதுவரையில் நீ ‘இத்தா’ இருக்காமல் அவரை நீ மணந்துகொள்ள முடியாது” என்று சொன்னார்கள்.
(பிரசவத்திற்குப்பின்) சுமார் பத்து நாட்கள் அப்பெண் இருந்துவிட்டு பிறகு நபி ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(பிரசவத் துடன் உன் ‘இத்தா’ முடிந்துவிட்டது.) நீ மணமுடித்துக்கொள்” என்று சொன்னார்கள்.83

5319. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ، أَنَّ ابْنَ شِهَابٍ، كَتَبَ إِلَيْهِ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِ الأَرْقَمِ أَنْ يَسْأَلَ، سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ كَيْفَ أَفْتَاهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَتْ أَفْتَانِي إِذَا وَضَعْتُ أَنْ أَنْكِحَ.
பாடம் : 38
மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய ‘இத்தா’வைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்படவில்லையோ அவர்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா; அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும்.82
பாடம்: 39
கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (‘இத்தா’வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4 ஆவது வசனத்தொடர்)
5319. அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் (ரஹ்) அவர்களை, அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று, அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘இத்தா’ தொடர்பாக) என்ன தீர்ப்பளித்தார்கள் என்று கேட்கும்படி கடிதம் எழுதினேன். (அவ்வாறே அவரும் கேட்டார்.)
அப்போது சுபைஆ (ரலி) அவர்கள், ‘‘நீ பிரசவித்தவுடன் மணமுடித்துக்கொள்” என நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களுக்கு இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தமது கடிதத்தில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

5320. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ، نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا، بِلَيَالٍ فَجَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَتْهُ أَنْ تَنْكِحَ، فَأَذِنَ لَهَا، فَنَكَحَتْ.
பாடம் : 38
மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய ‘இத்தா’வைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்படவில்லையோ அவர்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4ஆவது வசனத்தொடர்)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா; அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் ‘இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும்.82
பாடம்: 39
கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (‘இத்தா’வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4 ஆவது வசனத்தொடர்)
5320. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் கணவர் இறந்த சில நாட்களுக்குப்பின் சுபைஆ அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று (மறு)மணம் புரிந்துகொள்ள அனுமதி கோரினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து அவர் (ஒருவரை) மணந்துகொண்டார்.

5321. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّهُ سَمِعَهُ يَذْكُرُ، أَنَّ يَحْيَى بْنَ سَعِيدِ بْنِ الْعَاصِ، طَلَّقَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَكَمِ، فَانْتَقَلَهَا عَبْدُ الرَّحْمَنِ، فَأَرْسَلَتْ عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ إِلَى مَرْوَانَ وَهْوَ أَمِيرُ الْمَدِينَةِ اتَّقِ اللَّهَ وَارْدُدْهَا إِلَى بَيْتِهَا. قَالَ مَرْوَانُ فِي حَدِيثِ سُلَيْمَانَ إِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَكَمِ غَلَبَنِي. وَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ أَوَمَا بَلَغَكِ شَأْنُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ قَالَتْ لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَذْكُرَ حَدِيثَ فَاطِمَةَ. فَقَالَ مَرْوَانُ بْنُ الْحَكَمِ إِنْ كَانَ بِكِ شَرٌّ فَحَسْبُكِ مَا بَيْنَ هَذَيْنِ مِنَ الشَّرِّ.
பாடம்: 40
‘‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் வரை தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்” எனும் (2:228ஆவது) வசனத்தொடர்
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘இத்தா’வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து, அவரிடம் வந்தபின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால், முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்தவள் ஆவாள். (ஆனால்,) இந்த மாதவிடாய்க் காலத்தை இரண்டாம் கணவனுக்கான ‘இத்தா’வாக அவள் கணக்கிட முடியாது.
அவ்வாறு கணக்கிடலாம் என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பான தாகும்.84
மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(2:228ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘குரூஉ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘அக்ரஅத்’ எனும் சொல்லுக்கு ‘ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது’ என்ற பொருளும், ‘ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மை யடையும் காலம் நெருங்கிவிட்டது’ என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண், தனது வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் ‘கரஅத்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
பாடம் : 41
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் நிகழ்ச்சி85
வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (மணவிலக்கு அளிக்கப்பட்டு ‘இத்தா’வில் இருக்கும் பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற் றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறு கிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். (ஏனெனில், சேர்ந்து வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறிய மாட்டீர். (65:1ஆவது வசனத்தொடர்.)
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்திலேயே (‘இத்தா’விலிருக்கும்) பெண்களைக் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும்வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்...” (65:6, 7).
5321. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களும் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் (தம் துணைவியாரான) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் அவர்களின் புதல்வியை (ஒட்டுமொத்த) தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவரை (அவருடைய தந்தை) அப்துர் ரஹ்மான் (தலாக் சொல்லப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்) குடிமாற்றினார். (இச்செய்தி அறிந்த) ஆயிஷா (ரலி) அவர்கள் மதீனாவின் (அப்போதைய) ஆட்சித் தலைவராக இருந்த (அப்துர் ரஹ்மானின் சகோதரர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களிடம் ஆளனுப்பி, ‘‘மர்வானே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (உங்கள் சகோதரர் புதல்வியான) அவளை (மணவிலக்கு அளிக்கப்பட்ட) அவளுடைய வீட்டிற்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று சொன்னார்கள்.
மர்வான், ‘‘(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் என்னை மிகைத்துவிட்டார். (என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை)” என்று பதிலளித்தார். -இவ்வாறு சுலைமான் பின் யசார் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.-
காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மேலும், மர்வான் ‘‘ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான தகவல் தங்களை வந்தடையவில்லையா? (அவர் இடம் மாறித்தானே ‘இத்தா’ இருந்தார்!)” என்று (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) கேட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஃபாத்திமா பின்த் கைஸின் செய்தியை நீங்கள் (ஆதாரமாகக்) குறிப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடாது. (அவர் இடம் மாறியதற்குத் தக்க காரணம் இருந்தது)” என்று கூறினார்கள்.
அதற்கு மர்வான் பின் அல்ஹகம் அவர்கள், ‘‘(ஃபாத்திமா இடம் மாறியதற்குக் காரணமாக அமைந்த) இடர்ப்பாடு ஏதேனும் தங்களுக்கு (ஏற்புடையதாக) இருக்குமென்றால், இந்தத் தம்பதியரிடையே உள்ள (அதே விதமான) இடர்ப்பாடு (என் சகோதரர் மகள் இடம் மாறுவதில்) தங்களுக்குப் போதும்தானே!” என்று கூறினார்.