5265. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ فَتَزَوَّجَتْ زَوْجًا غَيْرَهُ فَطَلَّقَهَا، وَكَانَتْ مَعَهُ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ تَصِلْ مِنْهُ إِلَى شَىْءٍ تُرِيدُهُ، فَلَمْ يَلْبَثْ أَنْ طَلَّقَهَا فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ زَوْجِي طَلَّقَنِي، وَإِنِّي تَزَوَّجْتُ زَوْجًا غَيْرَهُ فَدَخَلَ بِي، وَلَمْ يَكُنْ مَعَهُ إِلاَّ مِثْلُ الْهُدْبَةِ فَلَمْ يَقْرَبْنِي إِلاَّ هَنَةً وَاحِدَةً، لَمْ يَصِلْ مِنِّي إِلَى شَىْءٍ، فَأَحِلُّ لِزَوْجِي الأَوَّلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَحِلِّينَ لِزَوْجِكِ الأَوَّلِ حَتَّى يَذُوقَ الآخَرُ عُسَيْلَتَكِ، وَتَذُوقِي عُسَيْلَتَهُ "".
பாடம்: 6
ஒருவர் தம் மனைவியிடம் ‘உன்னை நான் பிரிந்துவிட்டேன்’ என்றோ ‘உன்னை நான் விடுவித்துவிட்டேன்’ என்றோ அல்லது ‘நீங்கிவிட்டேன்’ என்றோ அல்லது தலாக்கின் கருத்தில் அமைந்த ஒரு சொல்லையோ கூறினால், அது அவரது எண்ணப்படியே அமையும்.16
வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
நல்ல முறையில் அவர்களை விடுவித்துவிடுங்கள். (33:49)
உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். (33:28)
பின்னர் முறைப்படி (அவர்களை மனைவியராகத் தம்முடன்) வைத்துக் கொள்ளலாம். அல்லது நன்முறையில் அவர்களை விடுவித்துவிடலாம். (2:229)
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தா வின்) தவணையை அடைந்தால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளுங் கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு)விடுங்கள். (65:2)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(அவதூறு சம்பவத்தின்போது) நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்துவிடுமாறு என் தாய் தந்தையர் எனக்குக் கட்டளை யிடப்போவதில்லை என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள்.
பாடம்: 7
ஒருவர் தம் மனைவியிடம் ‘நீ எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால்...
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(இவ்வாறு ஒருவர் சொன்னால்) அவரது எண்ணப்படி முடிவு அமையும்.17
ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்று அறிஞர்கள் கூறுவதுடன், அதனை ‘ஹராமுன் பித்தலாக்’ என்றும் ‘ஹராமுன் பில்ஃபிராக்’ என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.
ஆனால், இது உணவை ஒருவர் தம்மீது ஹராமாக்கிக்கொள்வதைப் போன்றதன்று. ஏனெனில், அனுமதிக்கப் பட்ட உணவை (ஒருவர் தமக்கு விலக்கிக் கொள்வதால்) ‘ஹராமான உணவு’ என்று சொல்லப்படாது. ஆனால், மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை ‘விலக்கப்பட்ட வள்’ என்று சொல்வதுண்டு. மூன்று (கட்ட) தலாக் விஷயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
பின்னர் அவன் (மூன்றாவது தவணையில்) அவளை தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனல்லாத வேறொரு கணவனை அவள் மணக்கின்ற வரை, அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவளாகமாட்டாள். (2:230)18
5265. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே அவள் வேறொருவரை மணந்து கொண்டாள். பிறகு அவரும் மணவிலக்குச் செய்துவிட்டார். (இரண்டாவதாக மணந்த) கணவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இனஉறுப்பு) இருந்தது. அந்தக் கணவரிடமிருந்து தான் விரும்பிய எ(ந்தச் சுகத்)தையும் அவள் அனுபவிக்கவில்லை. வெகு விரைவில் அவளை அவர் மணவிலக்குச் செய்தும் விட்டார்.
ஆகவே, அவள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். பிறகு நான் இன்னொருவரை மணந்துகொண்டேன். அவர் என்னருகில் வந்தார். ஆனால், அவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இன உறுப்பு) இருந்தது. அவர் என்னை ஒரு முறைதான் நெருங்கினார். என்னிடமிருந்து அவர் எ(ந்தச் சுகத்)தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே, நான் என் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவேனா?” என்று கேட்டாள். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணவர் மறுத்தார்.)
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன் இரண்டாவது கணவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரையிலும் நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் நீ உன் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆகமாட்டாய்” என்று கூறினார்கள்.20
அத்தியாயம் : 68

5266. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ صَبَّاحٍ، سَمِعَ الرَّبِيعَ بْنَ نَافِعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ إِذَا حَرَّمَ امْرَأَتَهُ لَيْسَ بِشَىْءٍ. وَقَالَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
பாடம்: 8
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5266. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர் (தம் மனைவியை நோக்கி) ‘அவள் எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால் அது (மணவிலக்காகக் கருதப்படும்) ஒரு விஷயமே அல்ல” என்று கூறிவிட்டு, ‘‘உறுதியாக அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்றும் கூறினார்கள்.21

5267. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ زَعَمَ عَطَاءٌ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلاً، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَلْتَقُلْ إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ "" لاَ بَلْ شَرِبْتُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ "". فَنَزَلَتْ {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} إِلَى {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} لِعَائِشَةَ وَحَفْصَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ} لِقَوْلِهِ "" بَلْ شَرِبْتُ عَسَلاً "".
பாடம்: 8
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5267. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்” எனக் கூடிப்பேசி முடிவு செய்துகொண் டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசி வைத்திருந்தபடி கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள்.
ஆகவே, ‘‘நபியே! உம்முடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உமக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கி ‘‘நீங்கள் இருவரும், இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)” என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22
(இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) ‘‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்பது ‘‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கின்றது.

5268. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ الْعَسَلَ وَالْحَلْوَاءَ، وَكَانَ إِذَا انْصَرَفَ مِنَ الْعَصْرِ دَخَلَ عَلَى نِسَائِهِ، فَيَدْنُو مِنْ إِحْدَاهُنَّ، فَدَخَلَ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ، فَاحْتَبَسَ أَكْثَرَ مَا كَانَ يَحْتَبِسُ، فَغِرْتُ فَسَأَلْتُ عَنْ ذَلِكَ فَقِيلَ لِي أَهْدَتْ لَهَا امْرَأَةٌ مِنْ قَوْمِهَا عُكَّةً مِنْ عَسَلٍ، فَسَقَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم مِنْهُ شَرْبَةً، فَقُلْتُ أَمَا وَاللَّهِ لَنَحْتَالَنَّ لَهُ. فَقُلْتُ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ إِنَّهُ سَيَدْنُو مِنْكِ، فَإِذَا دَنَا مِنْكِ فَقُولِي أَكَلْتَ مَغَافِيرَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ لاَ. فَقُولِي لَهُ مَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ فَإِنَّهُ سَيَقُولُ لَكِ سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ فَقُولِي لَهُ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ. وَسَأَقُولُ ذَلِكَ، وَقُولِي أَنْتِ يَا صَفِيَّةُ ذَاكِ. قَالَتْ تَقُولُ سَوْدَةُ فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَامَ عَلَى الْبَابِ، فَأَرَدْتُ أَنْ أُبَادِيَهُ بِمَا أَمَرْتِنِي بِهِ فَرَقًا مِنْكِ، فَلَمَّا دَنَا مِنْهَا قَالَتْ لَهُ سَوْدَةُ يَا رَسُولَ اللَّهِ أَكَلْتَ مَغَافِيرَ قَالَ "" لاَ "". قَالَتْ فَمَا هَذِهِ الرِّيحُ الَّتِي أَجِدُ مِنْكَ. قَالَ "" سَقَتْنِي حَفْصَةُ شَرْبَةَ عَسَلٍ "". فَقَالَتْ جَرَسَتْ نَحْلُهُ الْعُرْفُطَ فَلَمَّا دَارَ إِلَىَّ قُلْتُ لَهُ نَحْوَ ذَلِكَ، فَلَمَّا دَارَ إِلَى صَفِيَّةَ قَالَتْ لَهُ مِثْلَ ذَلِكَ فَلَمَّا دَارَ إِلَى حَفْصَةَ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَسْقِيكَ مِنْهُ. قَالَ "" لاَ حَاجَةَ لِي فِيهِ "". قَالَتْ تَقُولُ سَوْدَةُ وَاللَّهِ لَقَدْ حَرَمْنَاهُ. قُلْتُ لَهَا اسْكُتِي.
பாடம்: 8
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர்? (எனும் 66:1ஆவது இறைவசனம்)
5268. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒருமுறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். ஆகவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன்.
அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத் தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த்தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.
உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு உபாயம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி (ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்!
அதற்கு நபி அவர்கள் ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக்கொண்டு) வந்திருக்கலாம். (ஆகவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் சொன்ன பிரகாரம் செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் நெருங்கியதும், ‘அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். ‘தங்களிட மிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன?’ என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். உடனே நான் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டது போலும்)’ என்று சொன்னேன்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே சொன்னார். பிறகு (மறுநாள்) ஹஃப்ஸாவிடம் சென்றபோது ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது எனக்குத் தேவையில்லை” என்று சொன்னார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை அதைப் பருகவிடாமல் தடுத்துவிட்டோமே’ என்று சொன்னார்கள்.
உடனே அவரிடம் நான், ‘‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)” என்று சொன்னேன்.23

5269. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ "". قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَىْءٍ.
பாடம்: 9
மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)
‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24
பாடம்: 10
ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25
பாடம்: 11
நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27
(‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்).
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28
‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள்.
‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29
1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை.
2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை.
3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை.
மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5269. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருவர் மனத்துக்குள்ளேயே தலாக் சொல்லிக்கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை.

5270. حَدَّثَنَا أَصْبَغُ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَقَالَ إِنَّهُ قَدْ زَنَى. فَأَعْرَضَ عَنْهُ، فَتَنَحَّى لِشِقِّهِ الَّذِي أَعْرَضَ فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَدَعَاهُ فَقَالَ "" هَلْ بِكَ جُنُونٌ هَلْ أُحْصِنْتَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَ بِهِ أَنْ يُرْجَمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أُدْرِكَ بِالْحَرَّةِ فَقُتِلَ.
பாடம்: 9
மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)
‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24
பாடம்: 10
ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25
பாடம்: 11
நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27
(‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்).
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28
‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள்.
‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29
1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை.
2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை.
3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை.
மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களி டம் வந்து, ‘‘நான் விபசாரம் செய்து விட்டேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, ‘‘உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டுவிட்டு, ‘உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்” என்றார்.
எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டுசென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர்மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (‘அல்ஹர்ரா’ எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

5271. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَتَى رَجُلٌ مِنْ أَسْلَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الأَخِرَ قَدْ زَنَى ـ يَعْنِي نَفْسَهُ ـ فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الأَخِرَ قَدْ زَنَى فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ لَهُ ذَلِكَ فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لَهُ الرَّابِعَةَ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ فَقَالَ "" هَلْ بِكَ جُنُونٌ "". قَالَ لاَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ "". وَكَانَ قَدْ أُحْصِنَ.
பாடம்: 9
மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)
‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24
பாடம்: 10
ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25
பாடம்: 11
நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27
(‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்).
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28
‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள்.
‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29
1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை.
2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை.
3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை.
மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5271. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த போது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே!” என்று அழைத்து, ‘‘பிற்போக்கானவன் விபசாரம் செய்து விட்டான்” என்று தம்மைப் பற்றிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை அவரை விட்டுத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்றுகொண்டு முன்போலவே சொன்னார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள் முகத்தை (வேறு திசையில்) திருப்பிக் கொண்டார்கள். அவர் மறுபடியும் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு முன்போலவே சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்கள். (இவ்வாறு) நான்காம் முறையாக நபி (ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக நின்றுகொண்டு, தாம் விபசாரம் செய்துவிட்டதாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை நபி (ஸல்) அவர்கள் (அருகில்) அழைத்து ‘‘உனக்கு என்ன பைத்தியமா? (சுய நினைவோடுதான் கூறுகின்றாயா?)” என்று கேட்டார்கள்.
அவர், ‘‘(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் இருக்கிறேன்)” என்று சொன்னார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவரை அழைத்துச் சென்று கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அந்த மனிதர் திருமணம் ஆனவராக இருந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

5272. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ كُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى بِالْمَدِينَةِ، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ، فَرَجَمْنَاهُ حَتَّى مَاتَ.
பாடம்: 9
மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)
‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24
பாடம்: 10
ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25
பாடம்: 11
நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27
(‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்).
(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28
‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள்.
முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள்.
‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29
1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை.
2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை.
3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை.
மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5272. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அப்போது அவரை மதீனாவின் (பெரு நாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவர்மீது கல்லடி விழத் தொடங்கியதும் (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோடலானார். இறுதியில் அவரை நாங்கள் பாறைகள் நிறைந்த (‘அல்ஹர்ரா’ எனும்) இடத்தில் பிடித்து அவர் மரணிக்கும்வரை அவரைக் கல்லால் அடித்தோம்.

5273. حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،. أَنَّ امْرَأَةَ، ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتُبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً "".
قَالَ أَبُو عَبْد اللَّهِ لَا يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5273. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார்.32
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (தந்துவிடுகிறேன்)” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘‘தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!” என்று கூறினார்கள்.33
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிட மிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை.34

5274. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أُخْتَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ، بِهَذَا، وَقَالَ "" تَرُدِّينَ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ. فَرَدَّتْهَا وَأَمَرَهُ يُطَلِّقْهَا. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلِّقْهَا.
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5274. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் சகோதரி (ஜமீலா) இடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் கணவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ஆகவே, அதை அவர் திருப்பித் தந்துவிட்டார். பின்னர், தலாக் சொல்லிவிடும்படி நபி (ஸல்) அவர்கள் அவரு டைய கணவருக்கு உத்தரவிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘‘அவரை தலாக் சொல்லிவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று காணப் படுகிறது.

5275. وَعَنِ ابْنِ أَبِي تَمِيمَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَعْتُبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، وَلَكِنِّي لاَ أُطِيقُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ.
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5275. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ அவருடைய குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆனால், அவருடன் வாழ என்னால் முடியவில்லை” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவரும் ‘ஆம்’ (திருப்பித் தந்துவிடுகிறேன்) என்று கூறினார்.

5276. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، حَدَّثَنَا قُرَادٌ أَبُو نُوحٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا أَنْقِمُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، إِلاَّ أَنِّي أَخَافُ الْكُفْرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". فَقَالَتْ نَعَمْ. فَرَدَّتْ عَلَيْهِ، وَأَمَرَهُ فَفَارَقَهَا.
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும், நான் இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சரி! அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார்.
பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிட மிருந்து பிரிந்துவிட்டார்.

5277. حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ جَمِيلَةَ، فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5277. இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 68
5277. இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 68
5278. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ بَنِي الْمُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يَنْكِحَ عَلِيٌّ ابْنَتَهُمْ، فَلاَ آذَنُ "".
பாடம்: 13
(கணவன்- மனைவிக்கிடையே) பிரிவினை ஏற்படு(மோ என அஞ்சு)வதும், அவசியம் நேரும்போது ‘குலா’ செய்யும்படி (நடுவர்) யோசனை கூறலாமா என்பதும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விரு வரிடையே (பிணக்கு உண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் மனைவியின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பி னால், அல்லாஹ் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகின்ற வனாகவும் நன்குணர்ந்தவனாகவும் இருக்கின்றான். (4:35)35
5278. மிஸ்வர் பின் மக்ரமா அஸ்ஸுஹ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘பனூ முஃகீரா குலத்தார், தங்கள் புதல்வியை அலீ (ரலி) அவர்கள் மணமு டித்துக்கொள்ள அனுமதி கோரினர்.
(ஆனால், அதை) நான் அனுமதிக்கமாட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.36

5279. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ، إِحْدَى السُّنَنِ أَنَّهَا أُعْتِقَتْ، فَخُيِّرَتْ فِي زَوْجِهَا. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ فَقَالَ "" أَلَمْ أَرَ الْبُرْمَةَ فِيهَا لَحْمٌ "". قَالُوا بَلَى، وَلَكِنْ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ. قَالَ "" عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம்: 14
(திருமணமான) அடிமைப் பெண்ணை விற்பது மணவிலக்கு ஆகாது.37
5279. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத் தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப் பெற்றன:
1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார்.
2. ‘‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா’), விடுதலை செய்தவருக்கே உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்குமுன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘‘பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் ‘‘ஆம்! (இருக்கிறது.) ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள்தான் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?” என்று கூறினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு” என்றார் கள்.38

5280. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، وَهَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُهُ عَبْدًا يَعْنِي زَوْجَ بَرِيرَةَ.
பாடம்: 15
ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன்.

5281. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ذَاكَ مُغِيثٌ عَبْدُ بَنِي فُلاَنٍ ـ يَعْنِي زَوْجَ بَرِيرَةَ ـ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَتْبَعُهَا فِي سِكَكِ الْمَدِينَةِ، يَبْكِي عَلَيْهَا.
பாடம்: 15
ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபோது) மதீனாவின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் அவருக்காக அழுதவண்ணம் பின்தொடர்ந்து சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது.

5282. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا أَسْوَدَ يُقَالُ لَهُ مُغِيثٌ، عَبْدًا لِبَنِي فُلاَنٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ وَرَاءَهَا فِي سِكَكِ الْمَدِينَةِ.
பாடம்: 15
ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5282. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்தபோது) மதீனா வின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் சுற்றிச்சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

5283. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ، بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي، وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبَّاسٍ "" يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ رَاجَعْتِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي قَالَ "" إِنَّمَا أَنَا أَشْفَعُ "". قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيهِ.
பாடம்: 16
பரீராவின் கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது
5283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.
(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் ‘‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, ‘‘(அப்படி யானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

5284. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، بَرِيرَةَ، فَأَبَى مَوَالِيهَا إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ، فَذَكَرَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ إِنَّ هَذَا مَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ وَزَادَ فَخُيِّرَتْ مِنْ زَوْجِهَا.
பாடம்: 17
5284. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் (‘வலா’ எனும்) வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டு, (இல்லையேல் விற்க முடியாது என) மறுத்தனர். ஆகவே, இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று சொன்னார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பரீராவுக்குத்தான் தர்மம்: நமக்கு (இது) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.40
மற்றோர் அறிவிப்பில், ‘‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.