5031. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ "".
பாடம் : 23 குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர் பைப் புதுப்பித்துக்கொள்வதும்
5031. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாட மாகவோ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஓர் ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதை அவர் கண்காணித்துவந்தால் தம்மிடமே அதை அவர் தக்கவைத்துக்கொள்ளலாம். அதை அவிழ்த்துவிட்டுவிட்டாலோ அது ஓடிப்போய்விடும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 66
5032. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِئْسَ مَا لأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ، وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ "". حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، مِثْلَهُ. تَابَعَهُ بِشْرٌ عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ شُعْبَةَ،. وَتَابَعَهُ ابْنُ جُرَيْجٍ عَنْ عَبْدَةَ، عَنْ شَقِيقٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 23 குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர் பைப் புதுப்பித்துக்கொள்வதும்
5032. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்” என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், ‘மறக்க வைக்கப்பட்டுவிட்டது’ என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்திவாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களைவிடவும் வேகமாக மனிதர் களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5033. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" تَعَاهَدُوا الْقُرْآنَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنَ الإِبِلِ فِي عُقُلِهَا "".
பாடம் : 23 குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர் பைப் புதுப்பித்துக்கொள்வதும்
5033. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 66
5034. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِيَاسٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهْوَ يَقْرَأُ عَلَى رَاحِلَتِهِ سُورَةَ الْفَتْحِ.
பாடம்: 24 வாகனத்தில் இருந்தபடி குர்ஆன் ஓதுதல்
5034. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஊர்தி ஒட்டகத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.48

அத்தியாயம் : 66
5035. حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ إِنَّ الَّذِي تَدْعُونَهُ الْمُفَصَّلَ هُوَ الْمُحْكَمُ، قَالَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ وَقَدْ قَرَأْتُ الْمُحْكَمَ.
பாடம்: 25 சிறுவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல்
5035. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் ‘அல்முஃபஸ்ஸல்’ என்று கூறிவரும் அத்தியாயங்களே ‘அல்முஹ்கம்’ ஆகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது நான் பத்து வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். அப்போது நான் ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை ஓதிமுடித்திருந்தேன்.49


அத்தியாயம் : 66
5036. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ جَمَعْتُ الْمُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ وَمَا الْمُحْكَمُ قَالَ الْمُفَصَّلُ.
பாடம்: 25 சிறுவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல்
5036. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் அவர்களிடம், ‘‘ ‘அல்முஹ்கம்’ என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள், ‘அல்முஃபஸ்ஸல்’தான் (‘அல்முஹ்கம்’) என்று (பதில்) சொன்னார்கள்.

அத்தியாயம் : 66
5037. حَدَّثَنَا رَبِيعُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَقْرَأُ فِي الْمَسْجِدِ فَقَالَ "" يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً مِنْ سُورَةِ كَذَا "". حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، وَقَالَ، أَسْقَطْتُهُنَّ مِنْ سُورَةِ كَذَا. تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ وَعَبْدَةُ عَنْ هِشَامٍ.
பாடம்: 26 குர்ஆனை மறப்பதும், ‘‘இன்ன இன்ன வசனங்களை நான் மறந்து விட்டேன்” என்று சொல்லலாமா? என்பதும், ‘‘(நபியே!) நாம் உம்மை ஓதச்செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடிய தைத் தவிர” எனும் (87:6ஆவது) இறைவசனமும்
5037. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டி விட்டார்” என்று கூறினார்கள்

‘‘இன்ன அத்தியாயத்தில் நான் மறந் திருந்த இன்ன இன்ன வசனங்களை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் ஹிஷாம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.50

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5038. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يَقْرَأُ فِي سُورَةٍ بِاللَّيْلِ فَقَالَ "" يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً كُنْتُ أُنْسِيتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا "".
பாடம்: 26 குர்ஆனை மறப்பதும், ‘‘இன்ன இன்ன வசனங்களை நான் மறந்து விட்டேன்” என்று சொல்லலாமா? என்பதும், ‘‘(நபியே!) நாம் உம்மை ஓதச்செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடிய தைத் தவிர” எனும் (87:6ஆவது) இறைவசனமும்
5038. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்கவைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்” என்று சொன்னார்கள்


அத்தியாயம் : 66
5039. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَا لأَحَدِهِمْ يَقُولُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ. بَلْ هُوَ نُسِّيَ "".
பாடம்: 26 குர்ஆனை மறப்பதும், ‘‘இன்ன இன்ன வசனங்களை நான் மறந்து விட்டேன்” என்று சொல்லலாமா? என்பதும், ‘‘(நபியே!) நாம் உம்மை ஓதச்செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடிய தைத் தவிர” எனும் (87:6ஆவது) இறைவசனமும்
5039. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்ன இன்ன குர்ஆன் வசனங் களை நான் மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51

அத்தியாயம் : 66
5040. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَلْقَمَةَ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَ بِهِمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ "".
பாடம் : 27 ‘அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52
5040. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களை (285, 286) யார் இரவில் ஓதுகிறாரோ அவருக்கு அந்த இரண்டுமே போதும்!

இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5041. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ حَدِيثِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُمَا سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ فَلَبَبْتُهُ فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ قَالَ أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. فَقُلْتُ لَهُ كَذَبْتَ فَوَاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَهُوَ أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ، فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَقُودُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا وَإِنَّكَ أَقْرَأْتَنِي سُورَةَ الْفُرْقَانِ. فَقَالَ "" يَا هِشَامُ اقْرَأْهَا "". فَقَرَأَهَا الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَكَذَا أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ "" اقْرَأْ يَا عُمَرُ "". فَقَرَأْتُهَا الَّتِي أَقْرَأَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هَكَذَا أُنْزِلَتْ "". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ "".
பாடம் : 27 ‘அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52
5041. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்கான்’ எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்குஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக் கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

(அவர் தொழுகையை முடித்ததும் அவரது மேல்துண்டை) அவரது கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘‘இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியுற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?” என்று கேட்டேன். அவர், ‘‘இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் ஓதிக்கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார்.

உடனே நான், ‘‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மிடம் நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக்கொடுத்தார்கள்” என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் ‘அல்ஃபுர்கான்’ அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். இந்த அத்தியாயத்தை நீங்கள் எனக்கு (வேறு முறையில்) ஓதிக்கொடுத்துள்ளீர்கள்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘ஹிஷாமே, அதை ஓதுங்கள்!” என்றார்கள். உடனே அவர், நான் அவரிடமிருந்து செவியுற்றபடியே (நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும்) ஓதிக்காட்டினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), ‘‘நீங்கள் ஓதுங்கள், உமரே!” என்று சொன்னார்கள். எனக்கு நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொடுத்தபடி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, ‘‘இந்த குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டுள்ளது. ஆகவே, உங்களுக்கு அவற்றில் எளிதானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.54

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 66
5042. حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَارِئًا يَقْرَأُ مِنَ اللَّيْلِ فِي الْمَسْجِدِ فَقَالَ "" يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً، أَسْقَطْتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا "".
பாடம் : 27 ‘அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52
5042. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டி விட்டார்” என்று சொன்னார்கள்.55

அத்தியாயம் : 66
5043. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ غَدَوْنَا عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ رَجُلٌ قَرَأْتُ الْمُفَصَّلَ الْبَارِحَةَ. فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ، إِنَّا قَدْ سَمِعْنَا الْقِرَاءَةَ وَإِنِّي لأَحْفَظُ الْقُرَنَاءَ الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَمَانِيَ عَشْرَةَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ وَسُورَتَيْنِ مِنْ آلِ حم.
பாடம்: 28 திருத்தமாகவும் நிதானமாகவும் (குர்ஆனை) ஓதுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!” (73:4). ‘‘மனிதர்களுக்கு நீர் இதைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்த குர்ஆனைப் படிப்படியாக நாம் அருளினோம்.” (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு ‘அந்த இரவில் பிரிக்கப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரக்னாஹு’ எனும் சொல்லுக்கு, ‘நாம் பிரித்து அருளினோம்’ என்பது பொருள்.
5043. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) காலையில் சென்றோம். அப்போது ஒருவர், ‘‘நேற்றிரவு நான் ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை (முழுமையாக) ஓதி முடித்தேன்” என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், ‘‘பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? யாம் (சரியான) ஓதல்முறையைச் செவியுற்றுள்ளோம். மேலும், நபி (ஸல்) அவர்கள் தாம் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவில் அமைந்த ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தி யாயங்களில் பதினெட்டையும் ‘ஹா மீம்’ (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனன மிட்டுள்ளேன்” என்றார்கள்.56


அத்தியாயம் : 66
5044. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فِي قَوْلِهِ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالْوَحْىِ وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي {لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ} {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ * فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} قَالَ إِنَّ عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ. قَالَ وَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ.
பாடம்: 28 திருத்தமாகவும் நிதானமாகவும் (குர்ஆனை) ஓதுதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!” (73:4). ‘‘மனிதர்களுக்கு நீர் இதைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்த குர்ஆனைப் படிப்படியாக நாம் அருளினோம்.” (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு ‘அந்த இரவில் பிரிக்கப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபரக்னாஹு’ எனும் சொல்லுக்கு, ‘நாம் பிரித்து அருளினோம்’ என்பது பொருள்.
5044. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘(நபியே!) இந்த ‘வஹீ’யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கே வேத வசனங்களை மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தால் அதை மனனமிடுவதற்காக ஓதியபடி) தமது நாவையும் தம் இதழ்களையும் அசைத்துக்கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே, அல்லாஹ், ‘லா உக்சிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75ஆவது) அத்தியாயத்திலுள்ள, ‘‘இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்களது நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.

(அதாவது) ‘உமது நெஞ்சில் பதியச்செய்வதும் அதை நீர் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும்’ (என்று சொன்னான்). ‘‘மேலும், நாம் இதை ஓதிவிட்டோமாயின் நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” (75:18). (அதாவது,) ‘நாம் இதை அருளும்போது செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பீராக!’ (என்றும் சொன்னான்). ‘‘பின்னர், இதன் கருத்தை விவரிப்பதும் எமது பொறுப்பேயாகும்” (75:19). (அதாவது) ‘உமது நாவால் அதனை (மக்களுக்கு) விளக்கித் தரச்செய்வதும் எமது பொறுப்பாகும்’ என இறைவன் கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்பு) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீயுடன்) வருகையில் நபி (ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (மௌனமாகக் கேட்டு)க்கொண்டிருப்பார்கள். அவர் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்று விடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக்கொண்டார்கள்.57

அத்தியாயம் : 66
5045. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يَمُدُّ مَدًّا.
பாடம்: 29 நீட்டி ஓதுதல்58
5045. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், ‘‘(நீட்டி ஓத வேண்டிய இடங்களில்) நன்றாக நீட்டி ஓதுவது நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 66
5046. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم. فَقَالَ كَانَتْ مَدًّا. ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ.
பாடம்: 29 நீட்டி ஓதுதல்58
5046. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘நபி (ஸல்) அவர்களின் ஓதுதல்முறை எப்படியிருந்தது?” என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், ‘‘நீட்டி ஓதுவதே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் ‘பிஸ்மில்லா...ஹ்’ என நீட்டுவார்கள்; ‘அர்ரஹ்மா...ன்’ என்றும் நீட்டுவார்கள்; ‘அர்ரஹீ...ம்’ என்றும் நீட்டுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 66
5047. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو إِيَاسٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ وَهْوَ عَلَى نَاقَتِهِ ـ أَوْ جَمَلِهِ ـ وَهْىَ تَسِيرُ بِهِ وَهْوَ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ قِرَاءَةً لَيِّنَةً يَقْرَأُ وَهْوَ يُرَجِّعُ.
பாடம்: 30 தர்ஜீஉ (முறையில் ஓதுதல்)59
5047. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளன்று) பயணித்துக்கொண்டிருந்த தமது ஒட்டகத்தின் மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை’ அல்லது ‘அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை’ மெல்லிய குரலில் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.60

அத்தியாயம் : 66
5048. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَهُ "" يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ "".
பாடம்: 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்
5048. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), ‘‘அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என என்னிடம் கூறினார்கள்.

அத்தியாயம் : 66
5049. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ الْقُرْآنَ "". قُلْتُ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي "".
பாடம்: 32 அடுத்தவரிடமிருந்து குர்ஆனைச் செவியேற்க விரும்புவது
5049. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதை நான் செவியுற விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.61

அத்தியாயம் : 66
5050. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" اقْرَأْ عَلَىَّ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ آقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ "" نَعَمْ "". فَقَرَأْتُ سُورَةَ النِّسَاءِ حَتَّى أَتَيْتُ إِلَى هَذِهِ الآيَةِ {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلاَءِ شَهِيدًا} قَالَ "" حَسْبُكَ الآنَ "". فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا عَيْنَاهُ تَذْرِفَانِ.
பாடம்: 33 ஓதச்சொன்னவர் ஓதிக்கொண்டி ருப்பவரிடம், ‘‘(ஓதியது) போதும்” எனக் கூறுவது
5050. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!” என்று சொன்னார்கள். நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள். ஆகவே, நான் ‘அந்நிசா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினேன்.

‘‘ஒவ்வொரு சமுதாயத்திóருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உம்மை இவர் களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களது நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இத்துடன் போதும்!” என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.62

அத்தியாயம் : 66